(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பூங்குன்றன் தன் வீட்டின் பின்புறமாய் இருந்த மரங்களை கத்தியல் வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தான். அவனுடன் அவனது நண்பர்கள் நால்வர் துணையாக வேலை செய்து கொண்டிருந்தனர் வெட்டிய மரங்களை தோட்டத்தின் ஒரு மூலையில் ஒன்று சேர்த்தபோது மரக்கி ளைகளில் கூடுகட்டியிருந்த காக்கையின் முட்டைகள் சில தரையில் விழுந்து உடைந்து போயின.
உடைந்து போன முட்டையிலிருந்து சிறு குஞ்சுகள் வெளியே வர முயற்சித்து வர முடியாமல் அதிலேயே செத்துப் போயின. பூங்குன்றனும் நண்பர்களும் அவற்றைக் குச்சியால் குத்தி வேடிக்கைப் பார்த்து விளையாடிக் கொண்டி ருப்பதைப் பார்த்த காக்கை கா… காவென்று ஓலமிட்டுக் கரையத் தொடங்கியது. அதன் அவலக்குரலைக் கேட்டு இன்னும் சில காக்கைகள் ஓடி வந்தன. கீழே கிடக்கும் குஞ்சுகள் தங்களுடையவை என்று உறுதிப்படுத்திக் கொண்ட கோபத்தில் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவர்க ளைத் தாக்கத் தொடங்கின.
அவர்கள் கற்களை வீசினார்கள். கம்புகளால் துரத்தி னார்கள் அவைகள் பின் வாங்கவில்லை மாறாக அவர்க ளைக் கொடூரமாகத் தாக்க முயன்று மேலும் கீழுமாய் பாய்ந்து பாய்ந்து கொத்தின. எதிர்பாராத விதமாய் பூங்குன்ற னின் கண்ணில் ஒரு காக்கையின் கால் நகங்கள் கடுமையாய் கீறிவிட குபீரென்று குருதி பீறிட்டது. துடித்துப்போய் மயங்கி விழுந்தான் அவன்;
அவனைப் பார்த்த நண்பர்கள் பயந்து போய் அவசர அவசரமாக வீட்டுக்குள் தூக்கிப்போய்ப் படுக்கவைத்து அவ சர முதலுதவி செய்தார்கள். காயத்தைத் துடைத்து பஞ்சில் மருந்து நனைத்துக் கட்டினார்கள். சூடாக குடிப்பதற்குத் தேநீர் தயாரித்துக் கொடுத்து அவனைப் படுக்க வைத்தார் கள். சற்றுநேரம் அவன் உறங்கினான். பூங்குன்றன் அமைதி யாக உறங்கினாலும் அவனது நண்பர்கள் பயத்தால் அமைதி இழந்திருந்தார்கள்.
பூப்பந்து விளையாட வசதியாய் ஒரு திடலை தனது வீட்டின் பின்புறத்திலேயே சொந்தமாய் உருவாக்கும் எண் ணத்தோடுதான் பூங்குன்றன் தன் நண்பர்கள வீட்டுக்கு அழைத்திருந்தான்.
அன்று உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வெளியில் பெற்றோர்கள் சென்றிருந்ததாலும், அன்று விடுமுறையாக இருந்ததாலும், அவர்கள் தங்கள் வேலையைச் செய்வதற்கு அந்த நாளைத் தேர்வு செய்தனர்
வீட்டின் பின்புறம் இடத்தை அடைத்துக் கொண்டிருந்த ரம்புத்தான் மரங்கள் இரண்டும் முருங்கைமரம் ஒன்றும் அவர்கள் விளையாட்டுத் திடல் அமைய இடைஞ்சலாய் இருந்ததைக் கண்டனர். உடனடியாக அவர்கன் பார்வை அவற்றின் மேல் விழ, தங்களது வீர தீரச் செயல்களை அங்கே அரங்கேற்றினர்.
வெட்டப்பட்ட ரம்புத்தான் மரத்தில் இருந்த காக்கை யின் கூடு அவர்களின் கண்களில் படாத காரணத்தால் வெட்டும்போது அவர்கள் அதைக் கவனிக்கவில்லை. அப்ப டியே கவனித்திருந்தாலும் அவர்கள் அதற்காகக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால் காக்கைகள் என்றாலே அவர்களுக்கப் பிடிக்காது. சுற்றுப் புறத்தை அசிங்கப்படுத் தும் முதல் எதிரியே இந்தக் காக்கை கூட்டம் தான் என்பது அவர்கள் கணிப்பு. சாதாரண நாட்களில்கூட எங்கேனும் காக்கைகளைக் கண்டு விட்டால் அவற்றை அவர்கள் கற்க லால் அடித்துவிரட்டுவார்கள் சுற்றுப்புறத்தூய்மையை விரும் பும் அவர்களுக்கு இந்தக் காக்கைகன் ஏதோ பெரிய எதிரிக ளாகவே தெரிந்தன
அதனால்தானோ என்னவோ குஞ்சுகளாக அவைக ளைக் கண்டபோது கூட அவர்களுக்கு அவைகளின் மேல் இரக்கம் பிறக்கவில்லை. அவைகள் வளர்ந்து தொல்லை கொடுப்பதற்குப் பதிலாக குஞ்சுகளாகவே செத்துமடியட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்த குமரனுக்குப் பயம் அதிகமானது. பூங்குன் றன் இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தான். உள்ளே வந்த அம்மா மகனைப் பார்த்துப் பதறிப் போனாள். அப்பா விபரம் கேட்டார். அவர்கள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் அவர் முகம் வாடிப்போனது. உடனடியாகத் தோட்டத்திற்குப் போனார். சிலநிமிடங்களில் கோபமாய் உள்ளே வந்தார். உறங்கிக் கொண்டிருந்த மகனை அதட்டி எழுப்பினார்.
வலிதாங்காமல் முனுகிக் கொண்டே எழுந்த பூங்குன் றன் அப்பாவைப் பார்த்ததும் அரண்டு போனான், துடித்து எழுந்து நின்றான். அப்பாவின் சிவந்த கண்கள் அவனது வலியைக் கூட மறக்க வைத்தன.
“அப்பா” என்றான் தீனமாய். அவனது கையைப் பிடித்துத் தர தர வென்று தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற அப்பா, வெட்டப்பட்டு குவிந்து கிடக்கும் மரங்களைக் காட்டி.
“என்னடா இது…பெத்த பிள்ளையாட்டம் வளர்த்த மரங்களை, இப்படிக் கொத்திக் கொதறி போட்டிருக்கிய … நீ மனுஷனா, மிருகமா?”
கோபமாய்க் கேட்டார்.அவர் பின்னால் தொடர்ந்து வந்த அம்மா மரங்களைப் பார்த்துப் பதறினாள் “அய்யோ … யார் வெட்டினது இதை பூங்குன்றா… யார் செய்தது, இந்தக் கொடுமையை நீ வீட்ல இருந்தியே யாருப்பா நம்ம வீட்டு மரங்களை இப்படி ஆணிவேரோட வெட்டிப் போட்டது ”
பூங்குன்றனும் அவன் நண்பர்களும் பயத்தால் வாய டைத்து நின்றார்கள். அப்பா அவன் காதைப் பிடித்துத் திருகி மறுபடியும் அதட்டினார். அவன் வாய் திறந்தான்.
“பேட்மிண்டன் திடல் வேணுமின்னு நாங்கதான் வெட் டினோம்பா…அவன் குரல் நடுங்கியது.
“உன்னோட கண்ணில் இந்தக் காயம் எப்படி வந் துச்சு … யாரு உனக்குக் கட்டுப்போட்டது ..?”
அப்பா கடுங்கோபமாய் இருந்தார் .வார்த்தையும் கடு மையாகவே வெளியே வந்தது.அவன் அம்மாவைக் கட்டிக் கொண்டான்.
“காக்கா காலால் கீறிடுச்சு அங்கில். நாங்கதான் மருந்து போட்டோம் குமரன் சொன்னான்”
“காக்கா கீறிடுச்சா… காக்கா எங்கேயிருந்து வந்துச்சு இங்கே…”
“மரத்தில இருந்து காக்கா கூடு கீழே விழுந்து நொறுங் கிப் போச்சு… அங்கிள். அதில் இருந்து குஞ்செல்லாம் செத்துப்போச்சு… அதனால் காக்காவெல்லாம் சண்டைபோ டற மாதிரி வந்து விழுந்து பிராண்டிடுச்சு அங்கிள்…”
அவன் முடிப்பதற்குள் அவரது வலது கை அவன் கன்னத்தில் பதிந்தது. துடித்துப் போனான் அவன்.
படிக்கிற பிள்ளைகளா நீங்க… உங்களோட உடற்பயிற் சிக்கு … விளையாட்டுப் பயிற்சிக்குன்னுதான் அரசாங்கம் பல இடங்கல்ல இடத்தை ஒதுக்கி வெச்சிருக்கே. அங்கே போய் விளையாடாம இங்கே ஏண்டா இந்தக் கொடுமையைச் செஞ்சீங்க.
ஒரு மரத்தை வளர்க்கிறவனுக்கு, இப்ப எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு. அதுவும் இந்த ரெண்டு மரத்தை யும் நான் என் பிள்ளை மாதிரி பாதுகாத்து வந்தேன்னு உனக்குத் தெரியாதா… நீ சின்னப்பிள்ளையா இருந்தப்ப எத்தனை நாள் இதில் ஊஞ்சல் கட்டி ஆடியிருக்கே. இது உனக்கு உன் பிறந்த சகோதரன் மாதிரி தானே இருந்துச்சி… வெயில் காலத்தில இயற்கை காத்துக்காக அந்த மரத்துக்குக் கீழே எத்தனை நாள் நீ படுத்திருப்பே… அதுக்கு உன்னை நல்லாவே ஞாபகமிருக்கு பூங்குன்றன். நீயே உன்னோட சகோதரனை வெட்டிப் போட்டுட்டியே…”
அப்பா சொன்ன வார்த்தைகள் அவன் மனதை வெகு வாய் பாதித்திருக்க வேண்டும். அவன் மிகவும் வாடிபோனான்.
ஆமாம் பூங்குன்று… மரஞ்செடி கொடிகளும் உயி ருள்ள ஜீவன்தான் அவைகளும் சுவாசிக்கும் அழும். பசிக்கு உணவு தேடும். அதுகள நாம் நேசிக்கிறதை நல்லா உணரும் சக்தி மரஞ்செடி கொடிகளுக்கு நெறையவே இருக்கு. அது மட்டுமில்லே அந்த மரம் நம்ம வீட்டு மரம். எங்கிருந்தோ வந்த காகம் அதுல கூடுகட்டி குஞ்சு பொறிச்சிருக்குன்னா, அதுவும் நமக்கு சொந்தம் தானே… அடைக்கலம் தேடிவந்த அந்த ஜீவனை இப்படி அலங்கோலப்படுத்தி இருக்கியே!
உன்னோட சந்தோஷத்துக்காக, இரண்டு ஜீவன்களை அழிச்சிருக்றாயே! இது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா! ஆண்டவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் நம் மோட சொந்தங்கள்னு நெனைச்சி நேசிக்கணும் அப்படி நேசிக்கிற மனமில்லேன்னாலும் அவைகள நாம தொந்தரவு பண்ணக்கூடாது உனக்கு வாயிருக்கு…வலி தாங்காம அழமுடியும். நண்பர்கள் இருக்காங்க உனக்கு உதவமுடியும்…ஆனா அந்த வாயில்லா ஜீவன்களை யாரப்பா நேசிக்கிறது. அவைகளோட வேதனைகளையும் துன்பங்க ளையும் யார் தீர்த்து வைக்கிறது.
பூங்குன்றனும் நண்பர்களும் தங்களின் தவறை உணர்ந்து மிகவும் வருந்தினார்கள். அவரிடம் மன்னிப்பு கேட்டார்கள். இனி மன்னுயிர் எல்லாம் தன்னுயிராய் நேசிப் போம் என்று சங்கல்பம் செய்து கொண்டார்கள். அதுமட்டு மல்ல. வெட்டப்பட்ட இடத்தில் நாளைக்கே புதிய மரக்கன்று களைக் கொண்டு வந்து நட்டுவிடவும் முடிவு செய்தார்கள்
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி (குறன்:324)
விளக்கம்: http://www.thirukkural.com/2009/01/blog-post_4715.html#324
– குறள் விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1996, மாஸ்கோ பதிப்பகம், சென்னை