கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2023
பார்வையிட்டோர்: 725 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடற்கரையில் அமைந்திருந்த அந்தப் பாறை வெப்பமாய் இருந்தது. காற்று வேகமாக வீசிற்று. சமுத்திரத்தில் இருந்து கடும் குளிர் எழுந்தது.

பாறை வெப்பமும், ஊதற்காற்றும், அப்பால் இருந்த சமுத்திரக் குளிரும் அந்தப் பெரிய கடல் அனிமனிக்குப் பழக்கமானவைதான்.

அது பாறைக்கு மேல் அசையாமல் இருந்தது. முன்னிரவின் மோன மயக்கத்தில் அது ஆழ்ந்திருப்பது போலத் தெரிந்தது.

சிறிய மீன் ஒன்று அதன் வாயில் இருந்து வெளியே நீருக்குள் குதித்து நீந்தத் தொடங்கியது.

சுற்றிச் சுற்றிக் கடல் அனிமனிக்கு அருகிலேயே அது காணப்பட்டது.

அதை விட்டு வெகுதூரம் விலகிச் செல்வதாக இல்லை. திடீரெனப் பெரிய மீன் ஒன்று இந்தச் சின்ன மீனைக் கண்டுவிட்டு அதைப் பிடிப்பதற்காக துரத்தத் தொடங்கியது.

பயத்தால் பரிதவிக்கும் நிலை சிறிய மீனுக்கு ஏற்பட்டதா?

அதுதான் இல்லை.

மனதில் பொருத்தமற்ற பொருமல்கள் எதுவும் இன்றி, அது நேராக ஓடி வந்து கடல் அனிமனியின் வாய்க்குள் புகுந்தது.

ஒற்றை ஒளிவட்டமான நிலவு. வானத்தில் பெரிய மீன்சிறிய மீனைத் தவறவிட முடியாது,

வெகு வேகமாக சிறிய மீனைத் துரத்தி வந்த பெரிய மீன், தன்னுடைய வேகத்திற்கு திடீரென பிரேக் போட முடியாமல் தானும் கடல் அனிமனியின் வாயுள் புகுந்தது.

பெரிய மீனைக் கடல் அனிமனி கொன்று தின்பதற்கு முன் சிறுமீன் மீண்டும் வெளியே வந்து வீட்டது.

முன் சிறுமீன் மீண்டும் வந்து

வெளியே வந்து கடல் நீரில் நீந்திக் கொண்டே,

“நல்லாச் சமைச்சு வை. நானும் சாப்பிட வாறன்” என்றது சிறுமீன்.

“நீ பிடிச்சுத் தந்த இரை. உனக்கும் பங்கு தரத்தானே வேணும்” என்றது கடல் அனிமனி.

“நீ சில வேளை முழுவதையும் சாப்பிட்டு முடிச்சிட் டால்?” என்று கேட்டது சிறுமீன்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்பது வள்ளுவர் வாக்கு தெரியாதே உனக்கு,” என்றது கடல் அனிமனி.

“உந்தப் பாட்டு மனிசரிலை கனபேருக்குத் தெரியாது’

“தெரிந்தாலும் அவை கடைப்பிடிக்கிறேல்லை”

“நீ கட்டாயம் கடைப்பிடிப்பாயோ?”

“இந்தா.. வேலை முடிஞ்சுது. நானும் உறிஞ்சி முடிந்தது. நீ வந்து மிச்சத்தை சாப்பிடு” என்று அழைத்தது அனிமனி. சிறு மீன் அதன் வாய்க்குள் இறங்கி, வயிறு முட்டும் வரை ஒரு பிடி பிடித்தது.

“நீ எந்த நாளும் எனக்கு இப்பிடி உதவி செய்ய வேணும்” “நீயும் செய்ய வேணும்” கடல் அனிமனியும் சிறிய மீனும் அருகில் நின்று, “கூட்டுறவு நாட்டுயர்வு” எனப் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டன.

– விஞ்ஞானக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 2000, கலை இலக்கியக் களம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *