(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒருநாள் ஒளவையார் ஓர் ஊர்வழியாகச் சென்று கொண்டிருந்தார். வழியிலே ஒரு கல்விச்சாலை இருந் தது. அதற்குள்ளே புகுந்தார். சிறிது நேரம் அமர்ந்து கணக்காயர் பாடம் போதித்தலைப் பார்த்தார். கணக் காயர் ஒரு பாட்டைச்சொல்லி அதற்குப் பொருள் சொன்னார். பொருள் விளக்கமாக விளங்கவில்லை. கணக்காயர் கூறியதில் இரண்டு வகையான பொருள் தொனித்தது. ஆனால், இருவகையாகப் பொருள் படும் என்பதையுஞ் சொல்லாமல் மழுப்பலாகக் கூறு வதைப் பார்த்தார். மேலும் ஒளவையாரைக் கண்ட அளவில் அக் கணக்காயர் இக் கிழவி நம்முடைய சொல்லில் எத்தகைய தவறு கண்டு பிடிப்பாளோ என்னும் அச்சத்தால் நடுநடுங்கிக்கொண்டிருந்தார்.
ஒளவையார் அந்தக் கணக்காயரைப் பார்த்து, ”நீர் சொல்வதை விளக்கமாகச் சொல்லும். ஐயத் திற்கு இடம் வைத்து எதையும் சொல்லிக் கொடுக்கா தீர். நீர் இப்பொழுது கூறிய பாட்டின் பொருள் எனக்கே ஐயமாக விருக்கிறதே; இது சிறுவர்களுக்கு எவ்வாறு விளங்கும்? கூறுவதை ஐயத்திற்கிடம் வைத் துக் கூறலாமா? சிறுவர்களுக்கு விளங்குமா?” என்று கூறிக் கண்டித்தார். அதுமுதல் தாம் கூறும் எதை யும் ஐயத்திற்கிடமில்லாமல் கூறலானார்.
நாம் பேசத்தொடங்குவதிலும் ஒரு செய்தியை ஐயத்திற்கிடமாகுமாறு பேசாமல் உறுதி விளங்கு மாறு பேசுவதுதான் சிறந்ததாகும். ஐயத்திற்கிட மான பேச்சைக் கேட்போர் உண்மையை உணர்ந்து கொள்ள முடியாமல் விழிப்பர். ஆகையால், சொல்வ தில் உறுதிப்பொருள் நன்கு விளங்கவேண்டும்.
“மொழிவ தறமொழி” (இ – ள்.) மொழிவது – சொல்லப்படும் பொருளை , அற – ஐயத்திற்கிடமில்லாமல், மொழி – செல்லு,
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955