கதை கேளுங்கள்: https://youtu.be/YfBTUAOdslM
பசுமை நிறைந்த அழகிய கிராமம். புழுதி பறக்கும் மண்சாலை வசதி இருந்தது.
புழுதி பறக்கும் மண்சாலையைத் தாண்டினால் சிறிய மலைக்குன்று ஒன்று இருந்தது. அந்தக் குன்றின் மேலே ஏறுவதற்கு சரியான பாதை இல்லை!
பாதையில்லாததால். மலைக்குன்றில் மனித நடமாட்டம் இல்லாமல் அமைதியாய் இருந்தது.
அந்த அமைதிதான், மலைக்குன்றில் உள்ள பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் சந்தோஷத்தை உண்டாக்கின. பெரிய மரங்கள் அவ்வளவாக அக்குன்றில் வளரவில்லை.
எனவே, அக்குன்றில் வாழும் பறவைகள், மலைக்குன்றின் குகைக்குள் சிறிய பொந்துகளில் கூடுகட்டி அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ்ந்து வந்தன.
பறவைகளில் அன்னப்பறவை ஒன்று, ஒரு குகைக்குள் பொந்து ஒன்றில், தன் குஞ்களோடு இருந்த து. குஞ்சுப் பறவைகளின் கீச்கீச் சத்த த்தில் மகிழ்ந்து, அதற்கு இரையை ஊட்டி மகிழ்ந்தன. தாய்ப்பறவையான அன்னம் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான், விடாது மழைப் பெய்த து. மழையால் அன்னப்பறவையும், அதன் குஞ்சுகளும் குளிரால் நடுங்கியபடியே கூட்டைவிட்டு வெளியே வராமல் முடங்கியிருந்தன.
அந்த நேரத்தில்தான் மழையில் நனைந்தபடியே பறந்து வந்த காகமொன்று, அன்னப்பறவையின் கூட்டிற்கு அருகே குளிரால் நடுங்கியபடியே நின்றது.
வெடவெடவன நடுங்கியபடியே அன்னமே! அன்னமே! ரொம்ப குளிரா இருக்குது! கொஞ்ச நேரம் ஒன்னோட கூட்டுல தங்கிக் கொள்கிறேன். மழை நின்றவுடன் பறந்து விடுவேன், உதிவ செய்யேன்” என கெஞ்சியது.
காகத்தின் கெஞ்சல், அன்னப்பறவைக்கு இரக்கம் ஏற்பட்டது. ஆதலால்”காகமே தாராளமாக தங்கி கொள்! மழை விட்டவுடன் செல்ல்லாம்” என அனுமதியளித்த து. காகமும், அன்னப்பறவையின் கூட்டில் குளிரைப் போக்கி கொள்ள தங்கியது.
சிறிது நேரத்தில் மழை நின்றது.
அன்னப்பறவைக்கு நன்றி சொல்லவிட்டு, காகம் பறக்க தயாரானது. பறக்க ஆரம்பிக்கும் பொழுதே, அந்த இடத்தில எச்சமிட்டது.
நாட்கள் பல கடந்து ஆண்டுகள் சில சென்றவுடன் காகம் எச்சத்தில் இருந்து ஆலவிதைகள் முளைத்து செடியாகி, பின் மரமாய் வளர்ந்தது.
மரத்தில் கிளைகளும், விழுதுகளும் தோன்றி பெரிய ஆலமரமாய் காட்சியளித்தன. ஆலமரத்தின் விழுதுகள் குன்றின் அடிவரை சென்றது.
மலைக்குன்றை ஏறமுடியாத வேடன் ஒருவன், ஆலவிழுதினை பிடித்து மேலேறி சென்றான். அங்கே குன்றின் பொந்தில் உள்ள அன்னப்பறையையும், அதன் குஞ்சுப்பறவைகளையும் பிடித்து தன்னுடைய கூடையில் போட்டுக் கொண்டு இறங்கினான்.
சந்தோஷமாக இருந்த அன்னப்பறவையும், அதன் குஞ்சுகளும் கவலையாய் இருந்தன.
நன்றி- பொம்மி- பூவுலகின் பூஞ்சிறகு மாதஇதழ்- மே 2017
அன்னமும் காகமும் சிறுவர்சி றுகதையை தங்கள் தளத்தில் பதிவிட்டு தொடர் ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உரித்தாக்குகிறேன்