தீவுகளாய் வாழ்க்கை..

 

ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்த சந்திரன், கையில் காபியுடன் வாசலில் இருந்த சேரில் அமர்ந்தான். பக்கத்து வீட்டில் ஒரே சிரிப்பும், கலகலப்புமாக இருப்பதைப் பார்த்தான்…
“”ரூபிணி… பக்கத்து வீட்டில் என்ன விசேஷம்?” என்று, அங்கு வந்த மனைவியை கேட்டான்.
“”அதுவா… அந்த வீட்லே இருக்காங்களே சிவகாமி அம்மா, அவங்களுக்கு, 60வது பிறந்தநாள் வருதாம். அதை கொண்டாட மூன்று மகன்கள், மருமகள்கள், பொண்ணு, மாப்பிள்ளையும், குழந்தைகளோடு ஊரிலிருந்து வந்திருக்காங்க; அதான் பாட்டும், சிரிப்புமாக இருக்கு,” என்றாள்.
தீவுகளாய் வாழ்க்கை..“”ஆமாம் ரூபிணி… குடும்ப உறுப்பினர்கள் ஒண்ணு சேர்வது சந்தோஷமான விஷயம்தானே,” என்றான்.
“”அதற்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும். அது சரி… உங்கம்மா எப்ப இங்கே வர்றாங்களாம்?”
“”அடுத்த மாதம் அனுப்பி வைக்கிறதா அண்ணன் சொன்னாரு.”
சந்திரனின் அம்மாவுக்கு நான்கு பிள்ளைகள். ஓரிடம் என்றில்லாமல், எல்லா மகன்களின் வீட்டிலும் சில மாதங்கள் இருப்பாள். ஆனால், ரூபிணிக்கு, மாமியார் வந்தாலே, எப்போது கிளம்புவாள் என்றாகி விடும். அவள் செய்யும் வேலைகளில், ஏதாவது குறை கண்டுபிடித்து, மற்ற மகன்கள் வீட்டில் நடந்ததை விலாவாரியாக விளக்கி, அந்த மருமகள்கள் மீது குற்றப் பத்திரிகை வாசிப்பது, ரூபிணிக்கு எரிச்சலாக வரும்.
ஏதோ இரண்டு மாதம் இருந்துட்டு போறவரிடம், வாய் கொடுக்க வேண்டாம் என்று அமைதியாக இருந்து விடுவாள்.
“பெரிய குடும்பத்தில் மருமகளாக வந்திருக்கே… பிரச்னை இருக்கத்தான் செய்யும்; அனுசரித்து போறது தான் குடும்பம். அம்மா இருக்கிற நாட்களில், அவங்களோடு கொஞ்சம் அனுசரித்து போயிடு ரூபிணி. தேவையில்லாமல், பிரச்னையை உருவாக்கிடாதே!’
— சந்திரன், அவளிடம் அடிக்கடி சொல்லும் விஷயம் இது.
வாசலில் சிவகாமி அம்மாவின் மருமகளும், மகளும் நிற்பதைப் பார்த்து, வரவேற்றாள் ரூபிணி.
“”குங்குமம் எடுத்துக்குங்க… சாயந்திரம் ஏழு மணிக்கு, அம்மா, “பர்த்-டே’ பார்ட்டி; ரொம்ப சிம்பிளா கொண்டாடறோம். வெளி ஆள் யாரையும் அழைக்கலை; ஆனா, உங்களை மட்டும் அவசியம் வரணும்ன்னு சொல்லி, அம்மா, அழைச்சிட்டு வரச் சொன்னாங்க… வந்துடுங்க.”
“”கட்டாயம் வர்றேன்… அம்மா, ரொம்ப அமைதியான சுபாவம் உள்ளவங்க; நல்லா பழகுவாங்க. அவங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்கணும். நீங்க வந்து அழைச்சதிலே ரொம்ப சந்தோஷம்.”
“”ரூபிணி… நான் வரலை; அவங்க அழைச்சதுக்கு நீ மட்டும் போயிட்டு வா. எனக்கு அங்கே யாரையும் தெரியாது. பெரியவரையும், “வாக்கிங்’ போகும் போது பார்த்து, “விஷ்’ பண்றதோட சரி; அதிகம் பழகினதில்லை. நீ போயிட்டு வா.”
அதற்கு மேல் கணவனை வற்புறுத்தாமல், அவள் மட்டும் பக்கத்து வீட்டிற்கு கிளம்பினாள்.
“”வாம்மா ரூபிணி… உன் வீட்டுக்காரரையும் அழைச்சுட்டு வந்திருக்கலாமே…”
- வாசலில் வந்து வரவேற்றாள் சிவகாமி அம்மா.
“”அவருக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா…” என்று சொன்னபடி உள்ளே நுழைந்தாள்.
ஹாலில் பலூன்கள் கட்டி தொங்கவிடப்பட்டு, கலர் ரிப்பன்களால் தோரணங்கள் கட்டப்பட்டு, அந்த இடம் அழகுபடுத்தப்பட்டிருந்தது. நடுவில் சின்ன மேஜையில், பிறந்தநாள் கேக், வெட்டுவதற்கு காத்திருந்தது.
பட்டுப் புடவையில், முகமெல்லாம் புன்னகை மின்ன, பேரன், பேத்திகள் தன்னை சூழ்ந்திருக்க, அங்கு வந்த சிவகாமி கேக்கை வெட்ட, கூடியிருந்த பெரியவர்களும், குழந்தைகளும், கைதட்டி ஆரவாரம் செய்து, வாழ்த்து தெரிவிக்க, அந்த இடமே சந்தோஷத்தில் ஜொலித்தது.
பெரிய மருமகள் தட்டில் கேக் வைத்துக் கொடுக்க, புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள் ரூபிணி.
சிவகாமி அம்மா, கணவருடன் அமர்ந்திருக்க, ஒவ்வொரு குடும்பமாக, குழந்தைகளுடன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, ரூபிணியும் எழுந்து சென்று, அவர்கள் காலில் விழுந்தாள்.
“”தீர்க்க சுமங்கலியா இரும்மா!” என்று வாழ்த்தி, அவளுக்கு குங்குமம் வைத்தாள் சிவகாமி.
“”ரூபிணி… அம்மாவோடு பேசிட்டு இருங்க. பத்து நிமிஷத்தில் சாப்பாடு ரெடியாயிடும்; வந்து கூப்பிடறேன்.”
சிவகாமி அம்மாவின் மகள் அன்புடன் சொல்ல, “”இருக்கட்டும்மா… ஒண்ணும் அவசரமில்லை.” என்றவள், சிவகாமி அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
எல்லாரும் அடுத்த அறைக்கு சென்றுவிட, ரூபிணியும், சிவகாமி அம்மாவும் தனித்து விடப்பட்டனர்.
“”அம்மா… உங்க குடும்பத்தை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கொண்டாடுறத பார்க்கிறதுக்கு நிறைவா இருக்கு.”
“”ஆமாம்மா… என் மகன்கள், மருமகள்கள் எல்லாரும் பிறந்தநாளை கொண்டாடணும்ன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. இரண்டு நாள் முன்னதாகவே வந்துட்டாங்க. எல்லாரும் சேர்ந்து குலதெய்வம் கோவிலுக்குப் போய், பொங்கல் வச்சு, சாமி கும்பிட்டு வந்தோம். இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போவாங்க.”
“”உங்க நல்ல மனசுக்கு, மூன்று மருமகள்களும், நல்ல குணமுள்ளவங்களாக உங்களுக்கு அமைஞ்சுட்டாங்க. உங்ககிட்டே எவ்வளவு அன்பா, பிரியமா நடந்துக்கறாங்க. இதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்.”
அவள் குரலில், தன் குடும்பம் அப்படி இல்லை என்ற தாபம் தெரிந்தது.
“”ரூபிணி… உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா… ஒரு குடும்பத்துக்குள் வர்ற எல்லா பெண்களுமே அடிப்படையில் நல்லவங்கதான்மா. சந்தோஷமாக புகுந்த வீட்டில் வாழணுங்கிற எண்ணத்தோடு தான் அடியெடுத்து வைக்கிறாங்க. அவங்க குணம், பழக்க வழக்கங்கள் எல்லாத்திலும் நிறை, குறை இருக்கத்தான் செய்யும்; அதை, பெரிசு படுத்தாம போறதுதான் குடும்பம்.”
சிவகாமி அம்மாள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் பார்த்தாள் ரூபிணி.
“”இப்பவும், என் மருமகள்கள் மூன்று பேரும், மூன்று விதமாகத்தான் இருக்காங்க. பெரியவளுக்கு நல்லா சமைக்கதத் தெரியும்; கொஞ்சமும் சுத்தம் பத்தாது. சின்னவ கை வேலைப்பாட்டில் திறமைசாலி; குடும்பப் பொறுப்பு குறைச்சல். நடு மருமகளுக்கு சமையலே சரியா வராது; பத்திரிகைகளில் கதை, கவிதை எழுதுவாள்.
“”வீட்டுக்கு வந்த மருமகள்களை, அவங்க நிறை, குறைகளோடு அப்படியே நான் ஏத்துக்கிட்டேன். குறைகளை சொல்லிக் காட்ட மாட்டேன். காலப்போக்கில் அவங்களே திருத்திப்பாங்கங்கற நம்பிக்கை இருக்கு.
“”ஒருத்தரை பத்தி ஒருத்தர்கிட்டே எந்த குறையும் சொல்ல மாட்டேன். அப்படியே சொன்னாலும், என் மருமகள்கிட்ட பார்த்த நல்ல விஷயங்களைப் பத்தி தான் பேசுவேன். அவங்களும் என்னை இன்னொரு தாயாகத்தான் பார்க்கிறாங்க. என் பிள்ளைங்க மேலலேயும், சிறு வயதிலிருந்த அதே பரிவோடும், பாசத்தோடும் இருக்கேன்.
“”நான் இப்படி இருக்கிறதாலே தான் என் குடும்பம், தீவுகளாக மாறாமல் இணைஞ்சிருக்கு. நாள், கிழமைன்னா ஒரு கூரையின் கீழ் ஒண்ணா சேருகிறோம். சந்தோஷமாக ஒருத்தரோடு ஒருத்தர் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்கிறோம். இந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது ரூபிணி…
“”அண்ணன், தம்பின்னு பிறந்துட்டா மட்டும் பத்தாது; கடைசி வரை, அந்த உறவுகளோடு இணக்கமாக சேர்ந்து வாழணும். ஆளுக்கொரு இடத்தில் இருக்காங்க. அது, அப்படியே விலகி போயிடாம, என் அன்பால அவங்களை இணைச்சு வச்சிருக்கேன்.
“”நானும், நாலு பிள்ளைகளைப் பெத்தேன்னு சொல்றதில் நிறைவு இல்லை; கடைசி வரை அந்தப் பிள்ளைகள் ஒத்துமையாக வாழ, நான் உறுதுணையாக இருந்தேன்னு சொல்றேன் பாரு… அதுதான்மா பெத்தவங்களுக்கு பெருமை!
“”இத்தனை சொந்த பந்தங்களோடு பிறந்துட்டு, தன் வீடு, தன் குடும்பம்ன்னு, தனி, தனி தீவாக வாழறதில் என்ன சந்தோஷம் இருக்கப் போகுது. என் காலத்துக்குப் பிறகும், என் பிள்ளைகள் ஒத்துமையாக இருப்பாங்கங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு!”
சிவகாமி சொல்லி முடிக்க, ரூபிணிக்கு எந்தவித தொடர்புமில்லாமல், நான்கு திசைகளில் வாழும் தன் கணவனின் சகோதரர்களும், குறைகளையே பேசிக் கொண்டிருக்கும் தன் மாமியாரும் ஞாபகத்துக்கு வர, எதையோ ஒன்றை இழந்த துக்கம் நெஞ்சில் மரமாய் இறங்கியது.

- மே 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
பிரிவும் பரிவும்!
கதவை திறந்தவள், வாசலில் நிற்கும் அக்காவை பார்த்து மலர்ந்தாள். ""வா அக்கா... வர்றேன்னு போன் கூட பண்ணலை... திடீர்ன்னு வந்து நிக்கறே!'' ""குலதெய்வம் கோவிலுக்கு போகணும்ன்னு நினைச்சிட்டிருந்தேன். அதான், உன்னை பார்த்துட்டு, இரண்டு நாள் உன்னோடு இருந்துட்டு, அப்படியே கிராமத்துக்கு போகலாம்ன்னு புறப்பட்டு வந்தேன்.'' கல்லூரிக்கு ...
மேலும் கதையை படிக்க...
முடிவைத் தேடி
பாத்திரங்கள் கடபுடவென்று உருள, அஞ்சலையை இழுத்துப் போட்டு அடித்து, காட்டு கத்தலில் கத்தினான் சொக்கன். பத்து வயது பெண்ணான ராசாத்தி, தன் இரண்டு தங்கைகளையும் தன்னோடு சேர்த்து அணைத்து, அப்பனுக்கு பயந்து குடிசை திண்ணையில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள். ""பொட்ட புள்ளைகளா பெத்து வச்சுக்கிட்டு, ...
மேலும் கதையை படிக்க...
வடிகால்
மாலை நேரம் — வேலைக்கு சென்றவர்களும், பிள்ளைகளும் வீடு நோக்கி திரும்ப, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து, கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கும் அந்த முதியவர்கள், நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில், தெருவின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கிற திண்டில் அமர்ந்து கொண்டிருந்தனர். பரஸ்பரம், தினமும் அந்த இடத்தில், ...
மேலும் கதையை படிக்க...
நிறைவு
""சுஜி... துபாயிலிருந்து சங்கர் பேமிலியோடு வர்றதாக போன் பண்ணினான். அவன் பெண் நிமாவை டாக்டர்கிட்டே காட்டணுமாம். ஒரு வாரம் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.''கண்களை கசக்கியபடி வரும் மகனை கையில் பிடித்தபடி வந்தாள் சுஜி.""ஏன்... என்ன ஆச்சு. எதுக்கு அழறான்.''""ம்... முதுகில் ரெண்டு வச்சேன். ...
மேலும் கதையை படிக்க...
தன் நண்பனின் மெக்கானிக் ஷாப்பினுள் நுழைந்தான் சங்கர். நிறைய கார்கள் வேலைக்காக நின்று கொண்டிருந்தன. பானெட்டை திறந்தும், காருக்கு அடியில் படுத்தும் வேலையாட்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்க, அவர்களை தாண்டி உள்ளிருந்த அறைக்குள் நுழைந்தான்.""வா சங்கர், என்ன இந்தப் பக்கம் அபூர்வமாக ...
மேலும் கதையை படிக்க...
நியாயம்
கண்கள் சிவக்க, கோபமாக கத்திக் கொண்டிருந்தான் குமார். அவன் கோபமாக இருக்கும் போது, நெருங்கவே பயப்படுவாள் அனு. அடுக்களையில் அவளுக்கு வேலையே ஓடவில்லை. பாவம் சந்தீப்... பத்து வயது சிறுவன்; அவன் முன் அழுதபடி நின்றுக் கொண்டிருந்தான். இதற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்பது ...
மேலும் கதையை படிக்க...
பத்து வயது பேரன் அந்த பேட்டரி காரை அழகாக வளைத்து, வளைத்து ஓட்டுவதை சந்தோஷம் மேலிட ரசித்துக் கொண்டிருந்தார் ராம்பிரசாத். ""என்னப்பா பேரனுக்கு இவ்வளவு விலையில் காஸ்ட்லி கார் வாங்கிக் கொடுத்துட்டு அவன் விளையாடுவதை ரசிச்சுட்டு இருக்கிங்களா?'' பக்கத்தில் வந்து நிற்கும் மகன் சிவாவைப் ...
மேலும் கதையை படிக்க...
நிராசை!
கிராமத்திற்குச் செல்லும் பேருந்து என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில் ஏறி, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டான் செந்தில். அவனருகில் பூக்கூடை, பழக்கூடைகளுடன் ஏறிய பெரியவர்கள் இருவர், தங்கள் காலடியில் அதை பத்திரப்படுத்தி அமர்ந்து கொண்டனர். பஸ் கிளம்பியது கூட தெரியாமல் கண்களை ...
மேலும் கதையை படிக்க...
குறையும், நிறையும்!
தாழ்ப்பாள் போடாமல் கதவு மூடியிருக்க, கதவைத் திறந்து உள்ளே வந்தாள் அனு. சோபாவில் உட்கார்ந்திருந்த தேவகி மகளைப் பார்த்தாள்...""அனு... பஸ்சிலே வர்றதாலே எப்படி வரப் போறீயோன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன்; நல்லவேளை, சீக்கிரமாக வந்துட்டே.''""என்னம்மா, நான் என்ன சின்ன குழந்தையா... ஸ்கூட்டியை சர்வீசுக்கு ...
மேலும் கதையை படிக்க...
அன்று மாணவி; இன்று தாய்!
கடைத் தெருவில் பிரதானமா இருந்த அந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தான் சுந்தரம். சோப், பேஸ்ட் என சில பொருட்கள், அவனுக்கு வாங்க வேண்டியிருந்தது. ஊரிலிருந்தால் இதெல்லாம் பிரபா பார்த்துக் கொள்வாள். சம்பாதிப்பதுடன் தன் கடமை முடிந்தது போல் நிம்மதியாக இருப்பான் சுந்தரம். ...
மேலும் கதையை படிக்க...
பிரிவும் பரிவும்!
முடிவைத் தேடி
வடிகால்
நிறைவு
கோபம் தவிர்
நியாயம்
மனமே கடவுள்
நிராசை!
குறையும், நிறையும்!
அன்று மாணவி; இன்று தாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)