கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 24, 2022
பார்வையிட்டோர்: 13,964 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவர்கள் விலகிச்சென்றார்கள். திரும்ப முடியவில்லை. நெருங்கி அழைத்து நேர் நின்று பார்க்க முடியாமல் போகும். சந்திக்க நேர்ந்தால் ஒவ்வொரு கணமும் கழுமரம்.

கடந்த மலைகளுக்கு அப்பால் மறைந்து போனார்கள். திரும் பவும் பயணமான நிலப்பரப்பில் வெளியில் நிலைகுத்திய பார்வை. அசையும்வானத்தில் துழாவி களைப்புற்ற பயணம். மெலிந்துபோன சுவாதீனத்துடன் நடந்து போகிறான். முள் மரங்கள் உலர்ந்த பாதை. வண்டித்தடம் மனதை இழுத்து நகரும் தொலைவில் மேட்டுப் பரப்பில் ‘ஓட்டு வீடுகள். தனி மையில் உயரமான கருப்பு பனை. கூந்தல் அறுந்த பனை யில் பருந்து மேல் எழுந்து விரிந்து மிதக்கிறது. அண்ணாந்த அலகில் விழும் வெக்கையைப் பருகி அலையும். தனிமை குடித்த பருந்தின் மூச்சு. ஓடுகளுக்கு மேல் அதிக வெக்கை யான அலை. சன்னமாக கரைந்து நெளியும் உருவங்கள். வேணாத வெயிலில் குனிந்து கருப்பு நிலத்தை பிசைகிற வலி. எங்கும் சிறு நிழல் கூட இல்லை . குத்துச் செடியின் நிழலில் கட்டெறும்புக் கூட்டம் இறந்து மடிகிறது.

ஆதாரமில்லாத சமவெளியில் மயங்கும் உருவங்கள். நில விருவில் எதையோ தேடி அலையும் மெலிந்த மாடுகள். பாலையில் கதறும். காலத்தில் உருவான ஓடைகளும் சிற்றாறுகளும் மணலைச் சுமந்து கிடக்கிறது.

புலர்காலையில் மர நிழலில் ததும்பிவழியும் சொந்த கிராமத் தின் ஆகிருதி மங்கி மங்கி கரைகிறது. வீடுகளை விட்டு வெளி யேறிப் போன கருப்பு நிலவாசிகள் புகையும் நகரில் மடிந்து முடங்கிய தெரு.

ஊரில் எல்லையை நெருங்க முடியாமல் திரும்பி வருகிறான் தொலைவான கிராம வீடுகள் க்ஷணதசையடைந்துள்ளன. வீடுகளுக்குள் பாதுகாக்கப்பட்ட உழவுச் சின்னங்களின் பெரு மூச்சு இரவில் எழும். ஒரு இரவு ஊரில் தங்க முடியாது.. பாவத் தில் திளைத்துப் புரண்ட சீவு நாற்று வேய்ந்தகூரைவீடு. கை தேர்ந்த கொத்தன் தட்டுத் தட்டாய் வேய்ந்த கூரையும் பளுப்படைந்து உதிர்ந்த வீட்டின் ஆத்மாவைப் போல் கருகி உலர்கிறது.

கிராமத்தின் உடல் ஒவ்வொரு உயிருக்கும் இரையாகி அரிக்கப்பட்ட மீதத்தில் சிறு துடிப்பு. ஆதாரம் எங்கிருக்கிற தென்று தெரியவில்லை.

சூனியத்தில் அதிர்ந்து காயும் கருப்பு நிலம் – பளுத்ததோடு மூடிக்கிடக்கும். யாரோடும் சேர்ந்து சாயல் காட்டாமல் தனிமைப் பெரு நிலையில் ஆழ்ந்த கிராம மனிதர்கள். கடைசிமரம். கடைசி எறும்பு. கடைசிப்பருந்து இந்தக் கிராமத் தின் கடைசி மனிதனாய் நடந்து போகிறான். உயிரின் ஈரத்தில் நகர்ந்து செல்ல கணங்கள் தான் உள்ளது. அங்கங் கே உறைந்து மடிந்த கணங்கள் . மாறிக்கொண்டே இருக்கும். சூரியனோடு நேரடியாக எரியும் அழிவு. இறுதி மூச்சு வரை அழிவு. சரித்திரத்தின் வெறுமை கிராமத்தைச் செதுக்கும்.

உயிர்ப்பின் கணங்கள் சிறு அளவானாலும் சுவர்களில் அதிர்ந்து கொண்டே இருக்கும். பின் தொடரும். நிச்சய மின்மை என்ற ஒளியில் தெரியும் வீடு. நீர் ஓவியம் போல் காலத்தில் வெட்டப்பட்ட தெரு. எங்கெல்லாம் இருக்கிறார் கள். அவனால் சொல்ல முடியாது. அவர்கள் மறைந்த மணல் மேட்டில் உரசும் காற்றின் புலம்பல்.

அவன் ஜன்னலை எட்டாத கம்மங்கதிர் தொலைவில் எங்கோ அதன் இருப்பில் அசையும். பழமையான கிராமத்தெருவில் யாருக்கோ. கல்யாணமாகிப் போன சித்துப்பெண் உடையம்மா. பாட்டியின் வேர்களின் – ஆழத்தில் தோன்றிய பெண்ணுரு. முப்பது வருஷங்களுக்குப் பின்னால் பிள்ளை குட்டிகளோடு பஸ்டாண்டில் வைத்து சந்தித்து ஒரு துளி மௌனத்தால் அவனைக் கொன்ற உடையம்மா. வாடி உலர்ந்த கதிரில் கண் தொட மறுக்கிறது. ஒப்பனைத் தெருவில் அவளை விலை கூறிச் சென்ற புகை யடைந்த பாதை வெயிலோடு சேர்ந்து வருகிறார்கள். டவுன் பக்கம் ‘அவருக்கு’ எதிலோ வேலை என்றாள்.

உடையம்மாவைப் பார்த்து, அவள் மௌனம் ஒரு கணம் கருப்பாய் விழுந்தது. இடிவிழுந்து இன்னொரு கல்லானான். இதுவரையான நிச்சயங்கள் சருகாகி உதிர்ந்தன. உடையம்மா கிளம்பிப்போன விளாத்திகுளம் பஸ். பிள்ளை களோடு ஜன்னலில், அவனது வார்த்தைகள் உணர்வு செத்து விழுந்தன.

கண்களில் நகராமல் நின்ற உடையம்மாளின் பிராயகாலம். பாட்டியின் உடம்பில் ஒட்டிக் கிடந்த உயிர்கள். அந்தரங்க மான இருளில் அவள் இன்னும். மாறாத சிரிப்பில். கண்களில் விழுந்த கருவளையம் நீண்ட கால பிரிவை உணர்த்தியது. இற்று நரம்பான உடையம்மா. கையில் போட்டிருந்த பளுப்பு ரப்பர் வளையல். நரம்பு துருத்திய உலர்ந்தகைகள். எல்லாம் பிரமைகளா. கூட்டமாக பஸ்டாண்டில் குரல்களும் சப்தங் களும் பின்னணியாகக் கேட்கிறது.

கல்யாணம் விதி காலம் என்ற நியதிகளைக் கடந்து அழுத துளிகளில் அவன் பாட்டியின் மரணம். பாட்டியை நினைந்து அழுதார்கள்.

பெரிய முலைகளுடன் பாட்டியின் கருமையான உடல். பாட்டி யின் அந்தரங்கம் சொன்ன சேதிகளை உடையம்மா முணு முணுத்தாள். மொலிங்கை மூட்டில் நெத்துக் கூடான ஸ்திதியில் இருந்தாள்.

உடையம்மா வேண்டாமென்று அவளை கட்டிக் கொள்ள மறுத்து எழுதியது. நிச்சயதார்த்தம் நடந்த அன்று ஏனோ அழுதான். எல்லாரும் கட்டாயப் படுத்திய தாலா. அவள் மேல் உருத்து இல்லையா. ஏன் விலகினான் என்று அவனுக்கே தெரியவில்லை.

அவளோடு சேர்ந்த அனாதையென்று உணர நேர்ந்தது. நகரின் பஸ்டாண்டில் சம்பந்தமில்லாதவர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்வு.

நூற்றி மூணாவது வயதில் செத்துப்போன பாட்டிக்காக அழுதார்கள். பிறந்த ஈரம் மாறாத கண்களுடன் அவன் உடையம்மா. எங்கோ இருளில் அசையும் கம்மங்கதிர்கள். மங்கலான கிராமம். களிமண்ணைப் பிசைந்தெடுத்த உருவங்கள் பாட்டியின் முலைகளில் பொங்கிக் குலைத்த ஈரத்தில் உலர்ந்து கொண்டிருக்கும். பதமிழந்து காயும் நூற்றுக்கணக் கான நத்தைக் கூடுகள் . நிலங்களின் மீது விசில் . அவளும் அவனும் நத்தைக் கூடுகளை சேகரித்து வந்தார்கள். அதை ஊதி உயிர் உண்டாக்க முயன்றபோது நத்தைகள் கொம்பு முளைத்து வெளிப்பட்டன. தீங்கருதுப் பருவத்தில் கம்மங் கதிர் மீது கொம்புகளை ஆட்டி ஆட்டி ஏறும் நத்தை கதிரின் உச்சி வரை ஸ்பரிசித்து கொம்புகளில் நடனமிடும்.

இன்று நத்தையாய் கூடுசுமந்து அலைகிறான். தீங்கதிரில் நாட்டியம். அந்தக் கதிரை நெருங்க, கானல் வெயிலெனினும் கருங்கோடையெனினும் கடும்பயணம் தொடருமோ.

– கொல்லனின் ஆறு பெண்மக்கள், 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *