கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 1,068 
 
 

(1956ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வியாசர் விருந்து என்ற பெயரில் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியால் கல்கி இதழில் எழுதப்பட்டது. பின்னர் பாரதி பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டு அதன்பின் மகாபாரதம் என்று வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது!

பாகம்-6 | பாகம்-7

குந்திக்குக் கொடுத்த வாக்கு 

திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் புலம்பினான்; “நெருப்பில் விழுந்து சாகும் பூச்சிகளைப் போல் துர்முகனையும் துர்ஜயனையும் யுத்தத்தில் பிரவேசிக்கச் செய்து மூர்க்கன் துரியோதனன் தன் அருமைத் தம்பிகளைக் கொன்றானே! ‘கர்ணனுக்குச் சமானமான வேறொரு வீரனை நா ன் உலகில் கண்டதில்லை. கர்ணனைச் சகாயமாகக் கொண்ட என்னை யுத்தத்தில் தேவர்கள் கூட ஜெயிக்கமுடி யாது. இந்தப் பாண்டவர்களா ஜெயிக்கப் போகிறார்கள்? என்று மூர்க்கன் சொன்னானே! இப்போது பீமசேனனுக்கெதிரில் கர்ணன் முதுகு காட்டி ஓடியதைப் பார்த்துத் துரியோதனன் என்ன செய் தான்? சஞ்சய! காலனைப்போன்ற மகாபலத்தைப் படைத்த வாயு புத்திரனுடைய விரோதத்தைத் துரியோதனன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். ஐயோ நாம் கெட்டோம்!” 

சஞ்சயன், “புத்தியில்லாத குமாரனுடைய சொல்லைக் கேட் டுப் பாண்டவர்களுடைய ஆறாத பகையைச் சம்பாதித்தது நீரே யல்லவா? நீரே யல்லவோ இந்த அனர்த்தத்துக்கு முக்கிய காரணம்! பீஷ்மர் முதலிய பெரியோர்கள் சொன்னதையும் கேட்காமல் ஆரம்பித்த காரியத்தின் பயனை இப்போது அனுபவிக்கிறீர். உம் மையே நொந்து கொள்ளாமல் யுத்தம் செய்கிற வீரர்களை ஏன் நிந்திக்கிறீர்? ‘ என்று கிழவனுடைய வீண் புலம்பலை நிறுத்தச் சொன்னான். 


பீமசேனனால் கர்ணன் தோல்வியடைந்ததைக் கண்டு திருத ராஷ்டிர புத்திரர்களான துர்மர்ஷன், துஸ்ஸஹன், துர்மதன் துர்த்தரன்,ஜயன் ஆகிய ஐவரும் பீமனை எதிர்த்தார்கள். இவர் கள் வருவதைக் கண்டு தைரியம் அடைந்து கர்ணன் மறுபடியும் பீமனை நோக்கிப் பாணங்களை விட்டான். பீமசேனன் திருதராஷ் டிரபுத்திரர்களை முதலில் அலட்சியம் செய்து கர்ணனையே எதிர்த் துக்கொண்டிருந்தான். ஆனால் அவர்களோ கர்ணனைச் சுற்றிக் கொண்டு அம்புகள் எய்து பீமனைப் பலமாக எதிர்த்தார்கள். அதன் மேல் பீமன் கோபங் கொண்டு இந்த ஐந்து தார்த்தராஷ்டிரர்களைத் தன் பாணங்களுக்கு இரையாக்கினான். சாரதிகளோடும் குதிரை களோடும் அந்த ஐந்து வாலிபர்களும் உயிர் இழந்து யுத்த பூமி யில் கிடந்தது காட்டில் புயல் காற்றடித்த பிறகு புஷ்பங்களோடு கீழே விழுந்த அழகிய மரங்களைப் போல் காட்சி யளித்தது. 

இவ்வாறு மறுபடியும் – ஐந்து ராஜகுமாரர்கள் யமாலயம் சென்றதைக் கண்ட கர்ணன் முன்னை விடக் கோரமான யுத்தம் செய்ய ஆரம்பித்தான். பீமனும் கர்ணன் செய்த தீங்கை யெல் லாம் நினைத்துக் கூர்மையான பாணங்களைத் தொடுத்துக் கர்ணன் மேல் விட்டான். கர்ணனுடைய வில்லை உடைத்துத் தள்ளி அவனு டைய குதிரைகளையும் சாரதிகளையும் கொன்றான். அதன் மேல் கர்ணன் தேரினின்று இறங்கிக் கதாயுதத்தை எடுத்து வீசினான். பீமசேனன் வில்லை வளைத்து அம்புகளால் அந்தக் கதையைத் தடு த்து விட்டுக் கர்ணன் மேல் அம்புமாரி பொழிந்தான். மறுபடியும் கர்ணன் முதுகு காட்டிக் காலால் நடந்து சென்றான். 

இதைக் கண்ட துரியோதனன் மிகவும் துயரப்பட்டுத் தன் நம்பிமார்கள் சித்திரன், உபசித்திரன், சித்திராக்ஷன், சாருசித்திரன், சராஸனன், சித்திராயுதன், சித்திரவர்மன் ஆகிய எழுவர்களை யும் ராதேயனுக்கு உதவியாக அனுப்பினான். அவர்களும் விசித்திர மான சாமர்த்தியத்தைக் காட்டிப் பீமனை எதிர்த்தார்கள். ஆனால் அவர்களும் ஒருவர் பின் ஒருவராகப் பீமசேனனுடைய கோபத்து க்கு இரையாகி யுத்த களத்தில் உயிரற்று விழுந்தார்கள். கர்ணன் கண்ணீர் நனைந்த முகத்தோடு வேறு ஒரு தேரின் மேல் ஏறிக் காலா ந்தகனைப்போல் கோபம் மேலிட்டுப் பீமனைத் தாக்கினான். இடியும் மின்னலும் கூடிய மேகங்களைப் போல் இருவரும் விளங்கினார்கள். கேசவனும் சாத்யகியும் அருச்சுனனும் பீமனுடைய பராக்கிர மத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். கெளரவ பட்சத்திலி ருந்த பூரிசிரவசும் கிருபரும் அசுவத்தாமாவும் சல்லியனும் ஜயத் ரதனும் இன்னும் எல்லா வீரர்களும் ” ஹா! ஹா!’ என்று பீம் னைப் பார்த்து வியந்து புகழ்ந்தார்கள். 

இதையெல்லாம் கண்டு பொறாதவனான துரியோதனன் கர் ணனுடைய நிலைமையைப் பற்றிக் கவலை கொண்டு பீமனுடைய நீங்கள் அம்புகள் ராதேயனைக் கொல்லப் போகின்றன. உடனே சென்று பீமனை எதிர்த்து அவனைச் சூழ்ந்து கொள்ளுங்கள்’ என்று தன் சகோதரர்கள் வேறு ஏழுபேர்களையும் அனுப்பினான். சதருஞ் சயன், சத்ருஸஹன், சித்திரன், சித்திராயுதன், திடன், சித்திரசேனன், விகர்ணன் இவ்வேழு பேர்களும் பீமனைச் சூழ்ந்து கொண்டு ஒரே சமயத்தில் பீமனை மிகவும் பீடித்தார்கள். 

துரியோதனன் அனுப்பிய இந்த ஏழு தம்பிமார்களும் பீமனு டைய அம்புகளுக்கு இரையாகி உயிரற்று யுத்த பூமியில் விழுந்தார்கள்.. 

எல்லோருக்கும் பிரியனான விகர்ணனும் பின் வாங்காமல் எதிர்த்துக் கொல்லப்பட்டு விழுந்ததும் பீமன் “தருமமும் நியாய மும் அறிந்த விகர்ணனே! க்ஷத்திரியக் கடமைகளைச் செய்ய நீ யுத் தத்தில் சேர்ந்து கொல்லப்பட்டாய்! உன்னையும் நான் கொல்ல வேண்டியவனாக ஆனேன்! நீயும் பிதாமகர் பீஷ்மரும் கொல்லப் பட வேண்டியதாகிய இந்த யுத்தம் கொடிய யுத்தம்” என்று துக்கித்தான். 

துரியோதனனுடைய சகோதரர்கள் தன்னைக் காப்பாற்று தற்காக ஒருவர் பின் ஒருவராக இவ்வாறு வந்து இறப்பதைக் கண்டு துயரம் மேலிட்ட கர்ணன் ரதத்தின்மேல் சாய்ந்து இரண்டு கண்களையும் மூடி க்கொண்டு மயக்க மடைந்தான். மறுபடியும் மனத்தை உறுதிப்படுத்திக்கொண்டு போர் துவக்கினான். 

பீமன் விடுத்த அம்புகள் கர்ணனுடைய வில்லை உடைத்தன. அவனும் ஒன்றன் பின் ஒன்றாக வேறு விற்களை எடுத்து யுத்தம் செய்தான்.பதினெட்டுத் தடவை இம்மாதிரிக் கர்ணனுடை உடைந்தது. சர்ணனும் தன் சாவதானத்தை இழந்து பீமனைப் போலவே கோபாவேசமானா இருவரும் ஒருவரை யொருவர் கோரமான பார்வைகளுடன் பார்த்துக்கொண்டு யுத்தம் செய் தார்கள். பீமன் அப்போது செய்த சிம்மநாதம் யுதிஷ்டிரனுக்கு மறுபடியும் கேட்டது. தருமபுத்திரனும் உற்சாகமடைந்து போர் வாத்தியங்களை ஒலிக்கச் செய்து துரோணரைப் பலமாக எதிர்த்தான். 

கர்ணனு ம் பீமனும் மறுபடி யுத்தம் துவக்கினார்கள். பீமன் குதிரைகளும் சாரதியும் இழந்து தேரும் உடைபட்டு வில்லுமிழந்தவனானான். அதன் மேல் பீமன் சக்தியாயுதத்தை எடுத்துக் கர்ணனுடைய ரதத்தின் மேல் பிரயோகித்தான். கர்ணன் அதை அம்புகளால் தடுத்துப் பயனற்றதாகச் செய்யவே கத்தியையும் கேடயத்தையும் ஏந்திப் பீமன் கர்ணனை எதிர்த்தான். ஒரு வினாடி யில் கடயம் கர்ணனுடைய அம்பினால், நாசம் செய்யப்பட்டது. கேடயத்தை இழந்ததும் பீமசேனன் கத்தியைச் சுழற்றிக் கர்ணன் மேல் றிந்தான். அது ராதேயனுடைய வில்லை அறுத்துத் தள்ளி விட்டுக் கீழே விழுந்தது. உடனே அவன் வேறொரு வில்லையெடுத்து அது வரையில் நடைபெறாத முறையில் அம்புகள் பிரயோகித்துப் பீமனை மிகவும் பீடித்தான். பீமன் உக்கிரமான கோபம் கொண்டு உயரக் கிளம்பிக் கர்ணன் தேரில் குதித்துப்பாய் ந்தான். ராதேயன் உடனே கொடி மரத்தடியில் பதுங்கிப் பீமனு டைய பாய்ச்சலுக்குச் சிக்காமல் தப்பித்துக்கொண்டான். பிறகு பீமன் மறுபடியும் கீழே இறந்து கிடந்த யானைக் குவியல்களில் நுழைந்து கர்ணனுடைய அம்புகள் தன்மேல் பாயாமல் தடுத்து கொண்டு விசித்திரமான போர் புரிந்தான். யுத்த களத்தில் வீழ் ந்து கிடந்த தேர்ச் சக்கரங்கள் குதிரை யானை முதலியவற்றின் வெட்டுப்பட்டுக் கிடந்த அங்கங்கள் இவற்றையெல்லாம் எடுத்து வீசி யுத்தத்தை நிறுத்தாமல் கர்ணனை எதிர்த்துக்கொண்டே நின்றான். 

இவ்வாறு பீம்சேனன் ஆயுதமற்றுத் தன்னை எதிர்த்துக் கொண்டு கஷ்ட நிலையிலிருக்கும்போது கர்ணனுக்கு அருச்சுன னைத் தவிர உன் மக்களில் மற்ற நால்வரை நான் கொல்ல மாட் டேன்” என்று தாயார் குந்திக்குத் தான் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது. 

மூடனே! பெருந் தீனிக்காரனே! யுத்தம் செய்யத் தெரியா தவனே! நீ காட்டில் பழங்களையும் கிழங்குகளையும் வயிறு நிறையத் தின்பதற்கே தகுந்தவன். க்ஷத்திரியர்கள் செய்யும் யுத்தத்திற்கும் உனக்கும் வெகு தூரம். யுத்த களத்தை விட்டுப் போ!” என்று பலவாறாக ஏசிப் பீமனைக் கோபம் பொங்கச் செய்தான். 

“கர்ணனால் பீடிக்கப்படும் பீமசேனனைப் பார்” என்று கிருஷ்ணன் அருச்சுனனுக்குச் சொன்னான்.கோபாக்னியால் கர்ணனை எரித்து விடுவது போல் தனஞ்சயன் கண்கள் சிவந்தன. காணடீ விட்டான். கர்ணன் வத்தை வளைத்துக் கர்ணன் மேல் அம்புகள் பீமனை விட்டு விலக வேண்டியதாயிற்று. குந்திக்குக் கொடுத்த வாக்கை எண்ணிச் சந்தோஷமாகவே விலகினான். 

சௌமதத்தன் வதம் 

“அதோ, உன்னுடைய சிஷ்யனும் நண்பனும், சத்திய பராக்கிரமனுமான சாத்யகி சத்துருப் படைகளைக் குலைத்துவிட்டு வெற்றியோடு வருகிறான் பார்!” 

தேர் நடத்திக் கொண்டிருந்த கிருஷ்ணன் தனஞ்சயனுக்கு இவ்வாறு சொன்னான். 

“மாதவா! தருமபுத்திரரை விட்டுவிட்டுச் சாத்யகி இங்கு வந்தது எனக்குப் பிடிக்கவில்லை. துரோணர் அவ்விடம் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார். தருமபுத்திரரைக் காப்பாற்ற வேண்டிய இவன் இங்கே இப்படி வந்துவிடலாமா? ஜயந்திரனும் கொல்லப்படவில்லை. அதோபார்! பூரிசிரவசு, சாத்யகியை எதிர்க் கிறான். இந்தச் சந்தர்ப்பத்தில் சாத்யகியை யுதிஷ்டிரர் இவ்விடம் அனுப்பிவிட்டது பெரும் தவறு’ என்றான் அருச்சுனன். 


கண்ணனைப் பெறுவதற்காக அவதரித்தாள் தேவகி. அவளுடைய சுயம்வரத்தில் சௌமதத்தனுக்கும் சினிக்கும் பெரிய யுத்தம் நடந்தது. வாசுதேவனுக்காக சினியானவன் சௌமதத் தனை ஜெயித்து தேவகியைத் தன் தேரில் ஏற்றி வைத்துக்கொண்டு சென்றான். அன்றுமுதல் அந்த இரண்டு குலங்களுக்கும் ஜன்ம விரோதம் ஏற்பட்டுவிட்டது சினியின் பேரன் சாத்யகி. செளம் தத்தன் மகன் பூசிரவசு. சாத்யகியைக் கண்டதும் பரம்பரைப் பகையை யொட்டி அவனைப் பூரிசிரவசு யுத்தத்திற்கு அழைத்தான். 

“சூரன் என்று எப்போதும் கர்வம் கொண்டிருக்கும் சாத்ய கியே! இதோ உன்னைத் தொலைத்துவிடப் போகிறேன். நெடு நாளாக நான் விரும்பிய யுத்தம் இப்போது எனக்குக் கிடைத்தது. தசரத குமாரனாகிய லக்ஷ்மணனால் வதம் செய்யப்பட்டு இந்திரஜித்து மாண்டதைப்போல் என்னால் வதம் செய்யப்பட்டு நீ ன்று யமலோகத்துக்குப் போவாய். உன்னால் கொல்லப்பட்ட வீரர்களுடைய ஸ்திரீகள் ன்று திருப்தி அடைவார்கள். 

இவ்வாறு சொல்லிப் பூரிசிரவசு சாத்யகியை யுத்தத்திற்கு அழைத்தான். 

“வீண் வார்த்தைகளை அடுக்கிக்கொண்டு போவதில் என்ன பயன்? யுத்தத்தில் பயம் இல்லாதவனிடத்தில் இந்தப் பேச்சுக் கள் என்னத்திற்காக? பேச்சை விட்டுவிட்டுச் செய்கையினால் உன் சூரத்தனத்தைக் காட்டு. சரத் காலத்தில் மேகங்கள் வீண் இடி முழக்கம் செய்வதை ப்போல் வெறும் கர்ச்சனை செய்ய வேண் டாம்” என்று சிரித்துக்கொண்டு சொன்னான் சாத்யகி. 

போர் துவக்கினார்கள். இருவரும் இரண்டு சிங்கங்கள்போல் யுத்தம் செய்தார்கள். 


குதிரைகள் கொல்லப்பட்டு விற்கள் அறுபட்டு ரீதங்கள் இழந்து இருவரும் தரையில் கத்தியும் கேடயமுமாக நின்றார்கள். இருவரும் ஆச்சர்யமான சஞ்சாரங்கள் செய்தார்கள். ஒரு முகூர்த்தகாலம் கத்திச்சண்டை நடந்த பிறகு கேடயங்கள் அறுபட்டுக் கைச்சண்டை ஆரம்பித்தது. 

ஒருவரையொருவர் இறுகக் கட்டிக்கொண்டு பூமியில் சுழன் றும் துள்ளி எழுந்தும் மறுபடி ஒருவரையொருவர் தள்ளியும் இவ்வாறு யுத்தம் நெடுநேரம் செய்தார்கள். பார்த்தன் அச்சம யம் சிந்து ராஜனோடு போர் ‘செய்துகொண்டு அவன் வதத்தில் மனத்தைச் செலுத்தினவனாக இருந்தான். 

“தனஞ்சய! சாத்யகி களைத்துப் போனதைப்பார்! சாத்ய கியை இந்தப் பூசிரவசு கொல்லப் போகிறான்” என்றான் கிருஷ்ணன்.தனஞ்சயன் ஜயத்ரதன் பேரிலேயே கவனமாக இருந்தான்,

மறுபடி கி ருஷ்ணன் “கெளரவப்படையுடன் போர் புரிந்து களைத்துப் போயிருக்கும் சாத்யகியைப் பூரிசிரவசு யுத்தத்துக்கு அழைத்தான். இது சமமான யுத்தமல்ல. இவனுக்கு உடனே துணை போகவேண்டும். இல்லாவிடில் நம்முடைய அருமை யுயுதானன் பூரிசிரவசால் கொல்லப்படுவான்” என்றான். 

இவ்வாறு கிருஷ்ணன் சொல்லி முடிப்பதற்குள், பூரிசிரவக சாத்யகியைத் தூக்கிக் கீழே போட்டு அடித்தான். “செத்தான் யுயுதானன்!” என்று கௌரவ சேனை ஆரவாரித்தது. 

“விருஷ்ணி குலத்திலேயே சிறந்தோங்கி விளங்கிய வீர னான சாத்யகி பூமியில் கிடப்பதைப் பார். உனக்குத் துணை செய்ய வந்தவன் உன் எதிரில் வதம் செய்யப்படுகிறான். நீ பார்த்துக் கொண்டிருக்கையிலேயே  உன் நண்பன் உயிர் இழக்கப் போகிறான்” என்று கிருஷ்ணன் மறுபடியும் அருச்சுன னுக்குச் சொன்னான். சிங்கம் யானையை இழுப்பது போல் யுத்த களத்தில் விழுந்த சாத்யகியைப் பூரிசிரவசு தரதரவென்று இழுத்தான். 

அருச்சுனன் தரும சங்கடத்தில் சிக்கிக் கலக்கமடைந்தான்.

“பூரிசிரவசு என்னால் எதிர்க்கப்படவில்லை. வேறொருவனோடு எதிர்த்துப் போர் செய்து கொண்டிருக்கிற பூரிசிரவசின் மேல் அம்பு விட்டுக் கொல்ல என் மனம் துணியவில்லை. என் நிமித்த மாசு சாத்யகி உயிர் இழப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக் கவும் முடியவில்லை.” 

இவ்வாறு அருச்சுனன் கண்ண்னுக்குச் சொல்லி முடிக்கும் தறுவாயில், அவன்மேல் ஸைந்தவன் தொடுத்து வீசிய அம்புத் திரள் வந்து வானை மூடிற்று. அவனும் ஜயத்ரதன் மேல் அம்பு மாரி பெய்துகொண்டிருந்தான். அதேசமயம் சாத்யகியின் சங்கட நிலையை அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்து மனவேதனைப் பட்டுக்கொண்டு இருந்தான். 

”பார்த்தனே! அநேக வீரர்களுடன் போர் புரிந்துவிட்டுச் சாத்யகி மிகவும் களைப்படைந்து ஆயுதங்களை இழந்து பூரிசிரவ சின் கையில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறான்” என்றான், மறுபடியும் கண்ணன். 

அருச்சுனன் இந்தச் சமயம் திரும்பிப் பார்த்த போது பூரிசிரவசு கீழே கிடந்த சாத்யகியைக் காலால் மிதித்துக் கொண்டு கத்தியுடன் கூடிய கையை உயரத் தூக்கி நின்றான். அதைக் கண்ட து ம் பார்த்தன் ஒரு அம்பு விடுத்தான். அது பூரிசிரவ சின் கையை நோக்கிப் பாய்ந்தது. உயரத் தூக்கின வலக்கை அறுபட்டுப் பிடித்திருந்த கத்தியுடன் கீழே விழுந்தது. 

கை வெட்டப்பட்ட பூரிசிரவசு திரும்பிப் பார்த்தான். ‘கௌந்தேயனே! வீரனுக்குத் தகாத காரியத்தை நீ செய்வாய் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. உன்னைப் பாராமல் வேறொ ருவருடன் போர் புரிந்து கொண்டிருக்கிற என்னுடைய கையை மறைவாக இருந்து வெட்டினாய்.ஹா! மனிதன் யாரிடம் கூடிப் பழ குகிறானோ அவனுடைய குணத்தை சீக்கிரத்தில் அடைகிறான் என் கிற உண்மையை உன்னுடைய செய்கையில் கண்டேன். தனஞ்சய! உன் அண்ணன் தருமபுத்திரனிட ம் சென் று ரிசிரவசு என்ன செய்து கொண்டிருக்கும்போது கையை வெட்டினதாகச் சொல் லப் போகிறாய்? இந்தத் தகாத யுத்த முறையை உனக்கு யார் உப தேசித்தது? தகப்பன் இந்திரனா, ஆசார்யர்கள் துரோணரா, கிருபரா? உன்னுட ன் யுத்தம் செய்யாதவனும் உன்னைப் ஒருவனை எந்தத் தருமத்தை அனுசரித்து அடித்தாய்? இழிவானவர்கள் செய்யக்கூடிய காரியத்தை ரீ செய்தாய். உன் புகழுக்குப் பெரும் குறை உண்டாக்கிக் ண்டாய்! நீயாக இந்த அதருமத்தில் இறங்கியிருக்க மாட் டாய். கிருஷ்ணனுடைய பிரேரணையின் மேல்தான் நீ இவ் வாறு செய்திருக்கவேண்டும். இது உன் இயல்புக்குப் பொருந்தாத செய்கை. வேறொரு விஷயத்தைக் கவனித்துக்கொண்டு அஜாக்கிரதையாக இருப்பவனை அரச குலத்தில் பிறந்த ஒருவன் தாக்க மாட்டான். இகழத் தக்கவனான கிருஷ்ணனுடைய உபதே சத்தைக் கேட்டு இந்த அதருமத்தைச் செய்து விட்டாய்!” 

இவ்வாறு வலக்கை யிழந்த பூரிசிரவசு யுத்த களத்தில் கண்ணனையும் அருச்சுனனையும் நிந்தித்தான். 

பார்த்தன், ‘பூரிசிரவசே! முதுமையால் புத்தியை இழந்தாய் போலும்.யுத்த முறைகளை முற்றிலும் அறிந்தவனாகிய நீ ஏன் வீணாக என்னையும் ரிஷிகேசனையும் நிந்திக்கிறாய்? எனக்காகப் பிராணனை விடத் துணிந்து வந்து யுத்தம் செய்கிற நண்பனை எனக்கு வலக் கை போன்ற யுயுதானனை அவன் செய்கையற்றுக் கீழே கிடக்கும்போது நீ வதம் செய்வதை நான் எப்படிச் சும்மா பார்த்துக்கொண் டிரு க்கமுடியும்? இருந்தேனானால் நான் நரகத்தை அடைவேன். மாதவ னுடன் சேர்ந்து நான் கெட்டுப் போனேனா? அப்படிக்கெட்டுப்போக உலகத்தில் எவன்தான் விரும்ப மாட்டான்? புத்தி மயக்கத்தினால் இப்படிப் பேசுகிறாய். அநேக மகாரதர்களுடன் போர் செய்துகளை ப்புற்று ஆயுதங்கள் குறைந்து வந்திருந்த சாத்யகியை நீ யுத்தத் துக்கு அழைத்து ஜெயம் பெற்றாய். அவ்வாறு ஜெயிக்கப்பட்டுக் கீழே கிடந்தவனை நீ எந்தத் தருமத்தின்படி கொல்லப்போனாய்? ஆயுதத்தை இழந்தவனும் கவசம் உடைந்தவனும் களைப்புற்றுத் தடுமாறிநின்றவனுமான பாலன் அபிமன்யுவின் வதத்தை நீங்கள் எவ்வாறு கொண்டாடினீர்கள்?’ என்றான். 

இவ்வாறு அருச்சுனன் மறுமொழி சொன்ன பின் பூரிசிரவசு சாத்யகியை விட்டு விலகி யுத்த களத்தில் இடக்கையினால் அம்பு களைக் கீழே பரப்பி யோகாசனத்தில் அமர்ந்து பிரம்மத்தைத் தியா னித்துப் பிராயோபவேச நிலையில் அமர்ந்தான். கெளரவ சேனை முழுவதும் பூரிசிரவசைப் புகழ்ந்து ஆரவாரித்தது.அருச்சுனனையும் கிருஷ்ணனையும் இகழ்ந்தது. 

“வீரர்களே! என்னுடைய பாணங்கள் செல்லும் தூரத்தில் என்னைச் சேர்ந்த வீரனை எந்தப் பகைவனும் கொல்ல விட மாட் டேன் என்பது என்னுடைய விரதம். ஏன் என்னை நிந்திக்கிறீர்கள? தருமத்தை அறியாமல் நிந்தித்தல் தகாது. சாத்யகியைக் காப்பாற்ற வேண்டியது என்னுடைய தருமம்” என்று சொல்லி அருச்சுனன் பூரிசிரவசைப் பார்த்து “அடுத்தவர்களுக்கு அபயம் கொடுத்தவனும் வீரனே! புருஷ சிரேஷ்டனுமான தவறான செய்கையினால் இந்த நிலைமையை நீ அடைந்தாய்.  என்னை நிந்திப்பதில் பயன் இல்லை. இதற்கெல்லாம் காரணமான க்ஷத்திரிய தர்மத்தை நாம் அனைவரும் நிந்திக்க வேண்டும்’ என்றான். 

அருச்சுனன் சொன்னதைக் கேட்ட பூரிசிரவசு ஒன்றும் பேசா மெளனமாய் வணங்கித் தலையால் பூமியைத் தொட்டான்.

ஒரு முகூர்த்த காலம் இளைப்பாறிய சாத்யகி எழுந்து கோபத்துக்கு வசப்பட்டவனாகக் கத்தியை எடுத்துக்கொண்டு யோகத்தில் அமர்ந்திருந்த பூரிசிரவசை அடுத்தான். சேனை முழுவதும் ஹா ஹா! என்று கூக்குரலிட்டுக் கொண்டும் கிருஷ்ணனும் அருச்சுனனும் வேண்டாம்’ என்று தடுத்துக் கொண்டும் இருக்க சாத்யகி கத்தியை வீசிப் பூரிசிரவசின் தலையை அறுத்துக் கீழே தள்ளினான். 

சேனையிலுள்ளவர்கள் அனைவரும் சாத்யகி செய்தது இகழத் தக்க காரியம் என்று சொல்லி வெறுப்பும் துக்கமும் கொண்டு நிந்தித்தார்கள். 

“யுத்தரங்கத்தில் உயிரோடு விழுந்திருக்கும் என்னைக்காலால் மிதித்துக்கொல்ல யத்தனித்த குல சத்துருவை அவன் எந்த விரத த்திலிருந்தாலு ம் நா ன் கொல்லத் தகுந்தவன். என்று சாத்யகி சொன்னான். ஆயினும் யாருமே யுத்தகளத்தில் பூரிசிரவசின் வதத் தைச் சரியென்று ஒப்புக்கொள்ளவில்லை. சித்தர்களும் தேவர்களும் பூரிசிரவசைக் கொண்டாடினார்கள். 

பாரதத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தரும சங்கடச் சிக்கல் கதைகளில் ரிசிரவசின் வதமும் ஒன்று. துவேஷமும் கோபமும் வளர்ந்து விட்டபின் ஒழுங்கேது தரும்மேது? 

ஜயத்ரதன் வதம் 

“கர்ணா! இரண்டில் ஒன்று முடிவாகும் சமயம் இப்போது நேர்ந்திருக்கிறது” என்றான் துரியோதனன். இன்று மாலைக்குள் ஜயத்ரத வதப் பிரதிக்ஞை நிறைவேறாமற் போனால் அருச்சுனன் வெட்கத்தால் உயிரை மாய்த்துக்கொள்வான். அருச்சுனன் இறந் தால் பாண்டவர்களின் நாசம் நிச்சயம். அதன் பின் இந்தப் பூமி முழுதும் சத்ருக்களுடைய தொந்தரவு இன்றி நம் வசத்தில் இருக்கும்.புத்தி மயக்கத்தினால் தன்னுடைய விநாசத்துக்காகவே தனஞ்சயன் இந்த வீண் பிரதிக்ஞையை எடுத்துக்கொண்டான். இது என்னுடைய நல்ல காலம் என்றே நினைக்கிறேன். இதைக் கை டலாகாது.எப்படியாவது அவனுடைய சபதம் நிறை வே வறாம் செய்யவேண்டும். இன்று நீ உன் சாமர்த்தியத்தைக் காண்பிக்க வேண்டும். அதோ சூரியன் சாய்ந்து விட்டான். மிஞ்சியிருக்கும் காலத்துக்குள் பார்த்தன் ஜயத்ரதனை அடைய முடியாது.நானு ம் அசுவத்தாமரும் சல்லியனும் கிருபரும் நீயும் அஸ்தமனம் வரையில் எவ்விதத்திலாவது ஜயத்ரதனைக் காப்பாற்றித் தனஞ்சயனுடைய பிரதிக்ஞை நிறைவேறாமல் செய்து விட வேண்டும்” என்றான். 

இதைக் கேட்டுக் கர்ணன் அரசனே! பீமசேனனால் பலமாக அடிக்கப்பட்டு உடம்பு முழுவதும் காயமடைந்திருக்கிறேன். என் உடலின் லாகவம் மிகவும் குறைந்து போயிருக்கிறது. ஆயினும் என்னால் இயன்ற வரையில் உன்னுடைய காரியத்தை நிறைவேற்று வேன். நான் பிழைத்திருப்பது உனக்காகவே” என்றான். 


இவ்வாறு யுத்த களத்தில் துரியோதனனும் கர்ணனும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அருச்சுனன் கெளரவ சேனை யைப் பலமாகத் தாக்கிக் கொண்டிருந்தான். எப்படியாவது கௌ ரவ சேனையை உடைத்து அஸ்தமனத்துக்குள் ஜயத்ரதனை அடைய வேண்டும் என்று தனஞ்சயன் கடும் போர் புரிந்தான். 

கிருஷ்ணன் பாஞ்சஜன்யத்தை எடுத்து ரிஷப சுவரத்தில் பேரொலி செய்தான். அதைக் கேட்டதும் திட்டம் செய்திருந்த படி கிருஷ்ணனுடைய சாரதி தாருகன் தயாரித்து வைத்திருந் தேரை மாய வேகமாக ஓட்டிக்கொண்டுவந்து சேர்ந்தான். அதில் சாத்யகி ஏறிக் கர்ணனை எதிர்த்து மிகவும் சாமர்த்தியமான போர் நடத்தினான். 

தாருகனுடைய சாரத்யமும் சாத்யகியினுடைய வில்வன்மை யும் சேர்ந்து தேவர்கள் நின்று பார்க்கும்படியான யுத்தம் துவங் கிற்று. கர்ணனுடைய நான்கு குதிரைகளும் வீழ்த்தப்பட்டன. சாரதியும் தேர்த்தட்டினின்று தள்ளப்பட்டான். பிறகு அவனு டைய கொடிமரமும் தேரும் துண்டு துண்டாக்கப்பட்டன. கர்ணன் தேரிழந்தவனாகச் செய்யப்பட்டான். கெளரவ சேனையில், ஆ! ஆ!” என்ற பேரொலி கிளம்பிற்று. தேரிழந்த கர்ணன் ரியோதனனுடைய தேரில் ஏறிக்கொண்டான். 

இதைப்பற்றித் திருதராஷ்டிரனுக்குச் சொல்லும்போது சஞ்சயன், ”உலகத்தில் கிருஷ்ணனும் பார்த்தனும் சாத்யகியுமே சிறந்த வில்லாளிகள். இவர்களுக்குச் சமமான நான்காவது வில்லாளி இல்லை” என்றான். . 

அருச்சுனன் கௌரவசேனையில் பெரும்பான்மையான பாகத் தைத் தோல்வியடையச் செய்து ஜயத்ரதனை அடைந்தான். அபி மன்யுவின் வதத்தையும் தாங்கள் அனுபவித்த பல துன்பங்களை யும் எண்ணி,நெருப்பைப்போல் கோபத்தால் ஜொலித்த அருச்சு னன் அன்று காண்டீவத்தை இரு கைகளாலும் பிரயோகம் செய் தான். இருகையாலும் விற்பிரயோகம் செய்யும் திறமை யினால் சவ்யசாசி என்கிற புகழ்ப்பெயரை அருச்சுனன் பெற்றிருந் தான். கலவரமடைந்த கெளரவ வீரர்களுக்கு வாய்திறந்து நின்ற அந்தகனைப்போல் காணப்பட்டான். 

ஸைந்தவனைக் காப்பதற்காக அவனைச் சூழ்ந்துகொண்டு நின்ற அசுவத்தாமன் முதலிய மகாரதர்களுக்கும் அருச்சுனனுக்கும் அப்போது நடந்த மகத்தான போரை வியாசரைத் தவிர வேறு யாரும் வருணிக்க முடியாது. 

நடுவில் நின்று தடுத்த மகாரதர்களனைவரையும் தோல்வி யடையச் செய்துவிட்டு அருச்சுனன் ஜயத்ரதனைத் தாக்கினான். 

யுத்தம் வெகு நேரம் நடந்தது. இரு திறத்திலும் சூரியனை அடிக்கடி பார்க்கலாயினர். ஸைந்தவனும் மகாசூரன். எளிதில் அருச்சுனனுக்குத் தோற்பவன் அல்ல. அஸ்தமனம் நெருங்கிச் சூ ரியன் செந்நிறம் கொண்டான். அப்போதும் யுத்தம் முடியவில்லை. 

இன்னும் சிறிய நேரமே இருக்கிறது. ஜயத்ரதன் பிழைத்தான்.  அருச்சுனனுடைய பிரதிக்ஞை வீ ணாயிற்று என்று துரி யோதனன் தனக்குள் எண்ணி மகிழ்ந்தான். அப்போது திடீர் என்று இருள் மூடிற்று. 

பாண்டவர்களுடைய சேனையில் “பகல் முடிந்து விட்டது. ஜயத்ரதனுடைய வதம் நடைபெறவில்லை. அருச்சுனனுடைய பிரதிக்ஞை வீணாயிற்று” என்று அனைவரும் பேசத் தொடங்கினர்; கௌரவ சேனையில் மகத்தான சந்தோஷ ஆரவாரம் உண்டாயிற்று. 

ஜயத்ரதனும் சூரியன் இருந்த பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டு, “பிழைத்தேன்!” என்று எண்ணினான். 

கிருஷ்ணன் ‘தனஞ்சய, சிந்துராஜன் சூரிய மண்டலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். இருள் என்னால் உண்டாக்கப்பட் டது. சூரியன் இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை. உன் பிரதிக்ஞை யைப் பூர்த்தி செய். இதுவே சமயம் என்றான். 

உடனே காண்டீவத்தினின்று ஒரு அம்பு விடுபட்டது; பருந்து கோழிக் குஞ்சைக் கவ்வுவதுபோல சைந்தவனுடைய தலையை அது கவர்ந்தது. 

அதே சமயம் கிருஷ்ணன் ஜயத்ரதனுடைய தலை கீழே விழலாகாது. அதை அந்தரத்திலேயே’ அம்புகளால் தூக்கிச் செலுத்தித்தந்தை விருத்தக்ஷத்திரனுடைய மடியில் விழச் செய்” என்று ஞாபகம் மூட்டினான். அருச்சுனன் விடுத்த அம்பு ஜயத்ரதனுடைய தலையை அப்படியே ஆகாயத்தில் தூக்கிச் சென்றது. அது விசித்திரக் காட்சியாயிருந்தது. 

விருத்தக்ஷத்திர ராஜன் தன் ஆசிரமத்தில் மாலை உபாசனை யில் இருந்தான். கறுத்த தலை மயிரும் காதில் தங்கக் குண்டலங்களும் கொண்ட ஜயரத்ரதனுடைய தலை தியானத்தில் ஆழ்ந்திருந்த தந்தையின் மடியில் விழுந்தது. ஜபத்தை முடித்து அவன் கண திறந்து எழுந்ததும் அந்தத் தலையானது உருண்டு தரையில் விழுந்தது. உடனே விருத்தக்ஷத்திரனுடைய தலை நூறு துண்டாக வெடித்தது. ஜயத்ரதனும் அவன் தந்தையாகிய சிந்து ராஜனும் வீர சுவர்க்கத்தை ஒரே சமயத்தில் அடைந்தார்கள். 


கேசவனும் தனஞ்சயனும் பீமனும் சாத்யகியும் யுதாமன்யு வும் உத்தமௌஜஸும் சங்கங்களை ஊதி வெற்றி முழக்கம் செய் தார்கள்.தருமராஜன் அதைக் கேட்டு, ‘அருச்சுனன் ஸைந்தவனை வதம் செய்தாயிற்று” என்று அறிந்துகொண்டு மகிழ்ந்தான். 

அதன் பிறகு எல்லாப் பாண்டவ சேனையுடன் யுதிஷ்டிரன் துரோணரைப் பலமாக எதிர்த்தான். பதினாலாவது நாள் யுத்தம் பகலுடன் நிற்கவில்லை. இரவிலும் நடந்தது. யுத்தத்தின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க முதலில் காப்பாற்றி வந்த வரம்புகள் ஒவ் வொன்றாக அழிந்து போயின. 

அதருமம் 

பீமனுடைய அசுரமனைவியின் குமாரன் கடோத்கசன் என்று பாரதம் கேட்டயாவரும் அறிவார்கள். மகாபாரதக் கதா பாத்தி ரங்களுக்குள் வீரமும் தீரமும் பலமும் குணமும் புகழும் எல்லாம் சேர்ந்து சொலிக்கும் வாலிபர்கள் இரணடுபேர்கள்; அருச்சுனன் மகன் அபிமன்யுவும் பீமன் மகன் கடோத்கசனும். இருவரும் யுத்தத்தில் பாண்டவர்களுக்காகப் பெருமபோர் செய்து உயிரைக் கொடுத்து மறைந்தார்கள். 

இரண்டு பக்கத்திலும் கிளர்த்தப்பட்ட துவேஷ வேகத் திற்குப் பகலில்மட்டும் நடத்தப்பட்ட யுத்தம் திருப்தி தராமல் போயிற்று. பதினாலாம் நாளில் சூரியன் மறைந்தபின்னும் போர் செய்யவேண்டும் என்று தீவட்டிகள் ஏற்றினார்கள். இருட்டே சௌகரியமாகக்கொண்டு கடோத்கசனும் அவன் மாயக் கூட்டமும் து ரியோ தனன் படையை இரவில் பலமாகத் தாக்கினார்கள். அந்த இராத்திரி யுத்தம் மகா அற்புதமாக இருந்தது. அதுவரையில் பாரத தேசத்தில் நடைபெறாத நிகழ்ச்சியாக இருந்தது. ஆயிரக் கணக்கான தீவட்டிகளை ஏற்றி வைத்துக்கொண்டு பலவித சமிக் ஞைகளை நியமித்துக்கொண்டு இரண்டு பக்கத்திலும் வீரர்கள் யுத்தம் செய்தார்கள். 

கர்ணனுக்கும் கடோத்கசனுக்கும் அன்றிரவு போர் நடந்தது. கடோத்கசனும் அவன் பூதகணங்களும் பொழிந்த அம்புமாரியில் திரள் திரளாகத் தன் வீரர்கள் மாய்ந்து வீழ்ந்ததைக் கண்டு துரி யோதனனுடைய உள்ளம் பதைத்தது. கர்ணனே! இவனை உடனே கொல்வாயாக. இல்லாவிடில் நம்முடைய சேனை முழு தும் அழிந்து போகும். இவனைச் சீக்கிரம் ஒழிப்பாயாக” என்று கௌரவர்கள் எல்லாரும் கர்ணனை வேண்டினார்கள். 

கர்ணனுக்கும் அந்தத் தருணத்தில் கடோத்கசன் மேல் ஆத் திரமாகத்தான் இருந்தது. அவனால் அடிபட்டுக் கோபம் பொங்கி யிருந்த சமயம். இந்திரன் தனக்குத் தந்திருந்த சக்தியாயுதத்தை வீசி அவனைத் தொலைக்கவே தீர்மானித்து விட்டான். 

அருச்சுனனுக்காகவே என்று அதுவரையில் மந்திர பூர்வமாகக் காப்பாற்றி வந்திருந்த அந்தச் சக்தியைக் கர்ணன் எடுத்து கடோத்கசன் மேல் எ றிந்து விட்டான். இத தனால் ல் அருச் சுனன் பிழைத்தான். ஆனால் அதற்குப் பதிலாக பீமனுடைய அருமைப் புத்திரன் மாய்ந்தான். அந்த ரதத்திலிருந்து கடோத் கசனுடைய பிரேதம் நிலத்தில் வீழ்ந்தது. பாண்டவர்கள் துக்கத்தில் மூழ்கினார்கள். 


யுத்தம் அப்போதும் நிற்கவில்லை. துரோணருடைய வில் டைவிடாமல் பாண்டவ சேனையாட்களை வீழ்த்திப் பாண்டவப் படையில் பயத்தைப் பரப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்த கிருஷ்ணன்” அருச்சுனா! இந்தத் துரோணரை யுத்தத்தில் வெல்லக் கூடியவர் யாரும இல்லை. இவர் ஆயுதத்தைப் பிடித்து நிற்கும் வரையில் யாரும் அவரை யுத்த முறையில் தாக்கி வெற்றிபெற முடியாது தருமத்தைப் புறக்கணித்துவிட்டு ஏதேனும் செய்து தான தீரவேண்டும். வேறு வழியில்லை. அசுவத்தாமன் இறந்ததாகக் கேள்விப்பட்டால் துரோணர் போர் புரியமாட்டார்: துயரத்தினால் ஆயுதத்தைக் கீழே போட்டு விடுவார். யாராகிலும் துரோணரிடம் சென்று அசுவத்தாமன் இறந்தான் என்று சொல்ல வேண்டும்” என்று சொன்னான். 

இதைக்கேட்ட அருச்சுனன் திகைத்தான். அசத்திய வழியை ஒப்புக்கொள்ள அவன் விரும்பவில்லை. கூட இருந்த மற்றவர்களு ம் மாட்டோம் என்றார்கள். அதருமச் செயலைச் செய்ய மனம் ஒவ் வாதவர்களாக இருந்தார்கள். 

யுதிஷ்டிரன் யோசித்தான். முடிவில் “இந்தப் பாவத்தை நான் சுமக்கிறேன்” என்று சொல்லி நெருக்கடியைத் தீர்த்தான்.

கடலைக் கடைந்தபோது தேவர்களுக்காகப் பரமேசுவரன் விஷத்தைக் குடிக்க முன் வந்தான். நம்பிய சினேகிதனைக் காப் பாற்ற வேறு வழி யில்லாமல் ஸ்ரீராமனும் பாபத்தைச் சுமந்து வாலியை அதரும் முறையில் கொல்லத் தீர்மானித்தான். அவ்வாறே யுதிஷ்டிரனும் தன் புகழைத் தியாகம் செய்ய உறுதி கொண்டான். 

பீமன் தன் இரும்புக் கதையைத் தூக்கி அசுவத்தாமன் என்ற ஒரு பெரிய போர் யானையைக் கொன்றான். கொன்றுவிட்டுத் துரோணருடைய படைப் பகுதியண்டை சென்று அவர் காதில் விழும்படி உரத்த குரலில் ‘அசுவத்தாமனைக் கொன்றேன் என் றான். சொல்லிவிட்டு, வெட்கத்தில் மூழ்கினான். இழிவான செய லைக் கனவிலும் எண்ணாத வீரனாகிய பீமசேனன் இவ்வாறு சொல் லும்பொழுது வெட்கப்பட்டான் என்று வியாசர் அழகாகச் சொல்லுகிறார். 

துரோணர் அச்சமயம். பிரம்மாஸ்திரத்தை எடுத்துப் பிர யோகிக்கும் தறுவாயில் இருந்தார். குமாரன் இறந்து விட்டான் என்கிற பேச்சைக் கேட்டதும் தயங்கினார். இது உண்மையாயிருக் காது என்று சந்தேகமும் பட்டார். அதன்மேல் துரோணர் யுதிஷ் டிரனை நோக்கி, என் மகன் இறந்தானா? உண்மையா?” என்று கேட்டார். மூன்று உலகங்களின் ஆதிபத்தியத்திற்காகவும் கூட யுதிஷ்டிரன் பொய் சொல்ல மாட்டான் என்று நம்பியே யுதிஷ்டிரனைக் கேட்டார். 

அச்சமயம் கிருஷ்ணன் பெருத்த மன வேதனையடைந்தான். “யுதிஷ்டிரர் தருமத்தைப் புறக்கணிக்கப் பயப்பட்டாரானால், பாண்டவர்களுடைய நாசம் நிச்சயம். துரோணருடைய பிரம்மாஸ் ரம் வீணாகாது என்று எண்ணினான். யுதிஷ்டிரனோ அசத்தியத் தைக் கண்டு அச்சத்தில் மூழ்கி நின்றான். ஆனால் வெற்றி பெற வேண்டும் என்கிற ஆசையும் உள்ளவனாக இருந்தான். 

என்னுடைய பாபமாக இருக்கட்டும் என்று மனத்தை ஸ்திரப் படுத்திக் கொண்டு அசுவத்தாமன் இறந்தது உண்மை” என்று உரக்கச் சொன்னான். 

சொல்லும்போது மறுபடியும் அதருமத் திற்குப் பயந்து “அசுவத்தாமன் என்கிற யானை” என்று தாழ்ந்த குரலில் சேர்த்துச்சொன்னான். இதுவெல்லாம் ஒரு வினாடியில் நடந்து விட்டது. 

சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் நிகழ்ச்சிகளைச் சொல்லும் போது ‘அரசனே! இவ்வாறு அதருமம் நடந்துவிட்டது” என்றான். 

புதிஷ்டிரன் வாயில் இவ்வாறு பொய்ச் சொற்கள் வெளியான உடனே தருமபுத்திரனுடைய ரதம்; அதுவரையில் பூமியைத் தீண்டாமல் எப்போதும் நான்கு அங்குலம் உயரம் சென் கொண் டிருந்ததானது, திடீரென்று கீழே இறங்கி மண்ணைத் தொட்டதாம். 

அதருமமே வழக்கமாகிப் போன பூமியை தருமபுத்திரனு டைய சத்தியமானது அதுவரையில் தொடாமலிருந்தது. வெற் றிக்கு ஆசைப்பட்டு அசத்தியத்தில் இறங்கி விட்டபடியால் தரும புத்திரனுடைய தேரும் பாபம் நிறைந்த பூமியின் மட்டத்திற்கு வந்து விட்டது என்கிறார் வியாசர். 


அசுவத்தாமன் இறந்தான் என்கிற மொழியைக் கேட்டதும் துரோணருக்கு உயிரிலுள்ள பற்று திடீர் என்று அறவே நீங்கி விட் டது. அந்த நிலையில் அவர் இருக்கையில் பீமசேனன் அவரை மிக வும் கடுமையான மொழிகளால் நிந்திக்கலானான். 

“கெட்டுப்போன பிராமணர்கள் தமக்குரிய தொழிலை விட்டு விட்டு க்ஷத்திரியர்களுடைய தொழிலில் புகுந்தபடியாலல்லவோ அரசர்களுக்கு ஆபத்து வந்தது? அதரும வழியில் பிராமண குலத் தவர்கள் பிரவேசிக்காவிடில், அரசர்கள் மாண்டு போகாமல் தப்பி யிருப்பார்கள். கொல்லா விரதமே மேலான அறம் என்றும், அந்த அறத்திற்குப் பிராமண குலமே வேர் என்றும அறிந்த நீர் அந்த ணர் குலத்தில் பிறந்திருந்தும் வெட்கமில்லாமல் கொலைத் தொழில் செய்து வருகிறீர். ஏன் இவ்வாறு பாபத்தில் இறங்கினீர்?” என்றான். 

மகன் இறந்து விட்டான் என்று ஏற்கனவே உயிரில் வெறுப் புக் கொண்ட துரோணரை இந்த நிந்தனை மிகவும் துன்புறுத் திற்று. உடனே அஸ்திரங்களை எறிந்து விட்டுத் தேர்த்தட்டின் மத்தியில் உட்கார்ந்து யோக நிஷ்டையில் அமர்ந்து விட்டார். 

இந்தச் சமயத்தில் திருஷ்டத்யும்னன் கத்தி யெடுத்து வந்து துரோணருடைய ரதத்தில் ஏறி ஆ! ஆ! என்று சேனையில் நான்கு பக்கமும் சப்தம் எழுந்து கொண்டிருந்த போதே ஒரே வெட்டாக வெட்டி ஆசார்யருடைய தலையை வேறுபடுத்தி டான். பரத்வாஜ புத்திரருடைய ஆத்மா மக்கள் கண்ணுக்குத் தெரியும்படியாக ஜோதி மயமாய் மேலுலகம் சென்றது. 

மனித வாழ்க்கையிலுள்ள துயரங்களையெல்லாம் பிழிந்தெடு த்துக் காட்டும் அற்புதமான கற்பனையாகும் மகாபாரதக் கதை. துயரங்களைக் காட்டிப் பேருண்மையான பரம் பொருளை நாடச் செய்யும் தரும் நூல். சாதாரணக் கட்டுக் கதைகளின் போக்கே வேறு மகாபாரதத்தின் துறையே வேறு. படிப்போருக்கு மயிர்க் கூச்சலுண்டாக்கும் ஆபத்துக்களும் கஷ்டங்களும் பலவற்றைத் தாண்டிக் கதாநாயகன் முடிவில் வெற்றிகரமாக ஒரு பெண்ணை விவாகம் செய்து முடித்துக் கொண்டு வாசகர்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்குவது, அல்லது இதற்கு மாறாக எல்லாம் சுகமாகவே நிகழ் வதுபோல் காட்டிப் பெரிய ஏமாற்றம் தரும்படியான கோர சம்பவத் தோடு திரை மூடுவது, இது – சாதாரணக் கதைகளில் காணப்படும் துறை. ராமாயணம் பாரதம் முதலிய தரும நூல்களின் போக்கு படிப்பவனுடைய உள்ளத்தைக் கரைத்து மகிழ்ச்சியிலும் துயரத் திலும் உணர்ச்சிகளை அலசி ஆட்டி முடிவில் மெய்ப் பொருளில் கொண்டு போய்ச் சேர்க்கும். 

கர்ணனும் மாண்டான் 

துரோணர் இறந்த பின் கெளரவப் பட்டத்து அரசர்கள் கர் ணனைச் சேனாதிபதியாக அமைத்து அபிஷேகம் செய்தார்கள். சல் லியன் நடத்திய திவ்வியமான தேரின் மீது கர்ணன் ஏறி நின் அவனுடைய தேஜசு மிகவும் பிரகாசித்தது. அவன் தலைமையில் மறுபடி யுத்தம் வெகு உக்கிரமாக நடந்தது. 

கோர யுத்தத்துக்குத் தகுந்ததாக ஜோதிஷ நிபுணர்கள் பார் த்துச் சொன்ன முகூர்த்தத்தை நிச்சயித்து அருச்சுனனும், அவ னுக்குக் காப்பாக பீமசேனன் தன் தேரின்மேல் அடுத்தாற்போல் பின்புறம் தொடர, இருவரும் சேர்ந்து கர்ணனைத் தாக்கினார்கள். 

துச்சாதனன் இதைக் கண்டதும் பீமனை எதிர்த்து அமபுமாரி பொழிந்தான். ”சிக்கினாய் துச்சாதனா!” என்றான் பீமன். ”செலு த்த வேண்டிய கடனை முதலும் வட்டியுமாக இப்போது தீர்க்கப் போகிறேன். திரௌபதியை நீ தீண்டியபோது நான் எடுத்த சப தம் இப்போது நிறைவேறப் போகிறது” என்று பீமன் அவன் மேல் பாய்ந்தான். 

திரௌபதியை அவமதித்த பாபிஷ்டனைப் பூமியில் தள்ளி அவன் அங்கங்களைப் படபடவென்று ஒடித்தான். துன்மார்க்க னே! இந்தக் கையல்லவோ திரௌபதியின் தலைக் கூந்தலைப்பிடி த்தது. அத்தக் கையை உடலிலிருந்து பிய்த்து எறியப்போகிறேன். உனக்கு உதவியாக யாரேனும் இப்போது வரட்டும்! உன்னைக் காப்பாற்றும் திறமை வாய்ந்தவர் யாரேனும் இருந்தால் வரலாம்’ என்று துரியோதனனுக்குக் கேட்குமாறு சொல்லிக் கோப பரவச மாய்த் துச்சாதனனுடைய கையைப் பிடித்துப் பிய்த்து இழுத்து எறிந்தான். பிறகு அவனுடைய ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துப் பீமசேனன் காட்டு மிருகத்தைப் போல் மிகக் கோரமாகக் காட்சி தந்தான். 

“முடித்தேன்! இந்தப் பாபியைக் குறித்துச் செய்யப்பட்ட சப தம் நிறைவேறிற்று. இனி இந்தத் துரியோதனனைப் பற்றியது எஞ்சி நிற்கிறது. அந்த யாகப்பசுவும் தயாராகட்டும்’ என்று சொல்லி பீமசேனன் யுத்தகளத்தில் யம சொரூபமாகத் தாண்டவம் ஆடினான்.  இந்தக் கோரக் காட்சியைப் பார்த்து, அனைவரும் நடுங்கினார்கள். கர்ணனுடைய உடலும் நடுங்கிற்று. 

சல்லியன் கர்ணனைத் தேற்றினான். இது தீரனான உனக்குத் தகாது. துரியோதனன் மனமுடைந்து நிற்கும்போது நீயும் தைரி யத்தை இழக்கலாகாது. துச்சாதனன் இறந்த பின் உன்னைத்தான் அனைவரும் நம்பியிருக்கிறார்கள். முழுப் பொறுப்பும் பாரமும் இப்போது நீ தாங்க வேண்டும். க்ஷத்திரிய தருமத்தை நடத்து. அருச்சுனனைத் தாக்கி வெற்றியோ சுவர்க்கமோ பெறுவாயாக என்றான். 

தேரை ஓட்டிய சல்லியன் சொன்னதைக் கேட்ட கர்ணன் கண்கள் சிவக்கக் கோபாவேசமாய் அருச்சுனனைத் தாக்கச் சென்றான். 


“இந்த யுத்தம் போதும். இனி விரோதத்தை நிறுத்துங்கள். துரியோதனா! என் அப்பனே! பாண்டவர்களிடம் சமாதானம் செய்து கொள். யுத்தத்தை நிறுத்து” என்றான் அசுவத்தாமன். 

“அந்த மூர்க்கனான பீமன் காட்டு மிருகம் போல் தம்பியின் ரத்தம் குடித்துக்கொண்டு பேசியது உன் காதில் விழவில்லையா? பக்கத்திலே இருந்தாயே? சமாதானம் ஏது? வீண பேச்சு ஏன் பேசு கிறாய்” என்று துரியோதனன் அசுவத்தாமனுக்குச் சொல்லிவிட் டுச் சேனையை மறுபடி வியூகப்படுத்திப் பாண்டவர்களைத் தாககக் கட்டளையிட்டான். 

அருச்சுனனுக்கும் கர்ணனுக்கும் பெரும்போர் நடந்தது. விஷப்பாம்பின் வாயைப் போல் நெருப்பைக் கக்கும் ஒரு அம் பைக் கர்ணன் அருச்சுனன மேல் ச லுத்தினான் கிருஷ்ணன் அந் தச் சமயம் தேரைத் தன காலால் அழுத்தி ஐந்து அங்குலம் தரை யில் பதியச் செய்து அருச்சுனனைக் காப்பாற்றினான். சர்ப்ப மூகாஸ்திரம் அருச்சுனனுடைய கிரீட் த்தைத் தூக்கிச் சென்றது. ரோஷாவேசம் கொண்டு அருச்சுனன வில்லில் அம்பு தொடுத் தான். அச்சமயம் கர்ணனுடைய தேரின் இடப்பக்கத்துச் சக்கரம் யுத்தகளத்தில் மணணில் பதிந்து சிக்கிக் கொண்ட து. 

“நில்! நில்! ரதத்தின் சக்கரம் இறங்கி விட்டிருக்கிறது. அதைத் தூக்கி நிறுத்தப் போகிறேன். பாண்டவனே, அதுவரை யில் தாமதிப்பாயாக. நீ க்ஷத்திரிய தர்மப்படி போர் நடத்துபவன் என்று பெயர் பெற்றிருக்கிறாய். இந்தப் புகழை இழந்து விடாதே. நீ ரதத்தின் மேல் இருந்துகொண்டு ரதமில்லாமல் தரையில் நிற் பவனாகிய என் மேல் பாணம் செலுத்துதல் தகாது.இதோ சக் கரத்தைத் தூக்கித் திருப்புகிறேன். அது வரையில் போரை நிறுத்து” என்றான். 

கர்ணன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன். “கர்ணனே, தருமம் என்பது உனக்கும் நினைவுக்கு வருகிறதா? கஷ்டம் நேரிட்ட போதல்லவா தருமத்தைச் சிந்திக்கிறாய்? நீயும் துரியோதன்னும் துச்சாதனனும் சகுனியும் திரௌபதி யைச் சபைக்கு இழுத்தீர்களே, அப்போது ஏன் தருமம் எனபது நினைவிருக்கவில்லை? சூதாட்ட சாமர்த்தியம் தெரியாத தருமபுத் திரனை ஏமாற்றினீர்களே! அப்போது உன்னுடைய தருமம எங்கே போய் மறைந்தது? பிரதிக்ஞைப்படி பன்னிரண்டு வருஷம் வனவாசமும் பதின்மூன்றாம் ஆண்டு அஞ்ஞாத வாசமும் முடிந்த போது யுதிஷ்டரனுக்குச் சேர்ந்த ராஜ்யத்தைக் கொடுக்க மறுத் தது தர்மமா? அப்போது உன் தர்மம் எங்கே ஒளிந்திருந்தது? பீமனை விஷமிட்டுக் கொல்லப் பார்த்த பாபிகளுடன் சதி செய்தாயே? அரக்கு மாளிகையில் தூங்கியிருந்தபோது குந்தி புத்தி ரர்களைச் சுட்டுக் கொல்லப் பார்த்தா யே? அப்போது தருமம் எங்கே போயிற்று? திரௌபதியை அநியாயமாய் அவமதித்து அக் கிரமம் செய்த காலத்தில் பார்ததுக் கொண்டிருந்து சிரித்து சந்தோஷித்தாயே அப்போது தருமம் உனக்கு என்ன சொல்லி ற்று? உன் புருஷர்கள் உனக்கு உதவவில்லை. வேறு புருஷனைத் தேடிக் கொள்’ என்று பதிவிரதைக்கு உன் நாக்கால் சொன்னாயே, அப்போது தருமம் எங்கே போயிற்று? பாலனான அபிமன்யுவை வெட்கமில்லாமல் சூழ்ந்து கொண்டு பலரும் சேர்ந்து கொன்றீர் களே. அப்போது உன் தரும நினைவு எங்கே போயிற்று?கர்ணனே! பாவியே! தருமத்தை ஏன் இழுக்கிறாய்?’ 

கிருஷ்ணன் இவ்வாறு சொல்லக் கர்ணன் தன் தலையைக் குனி ந்து பதில் சொல்லாமல் மௌனமாக பூமியில் அழுந்தி நின்ற தேரின்மேல் நின்றே போரைத் தொடர்ந்தான். ஒரு அம்பு அருச்சுனனைத் தாக்க, அவன் சிறிதளவு அசைந்தான். அந்தச் சம யத்தை உபயோகித்துக் கர்ணன் தேரினின்று கீழே குதித்துச் சக் கரத்தைத் தூக்க பார்த்தான். தெய்வத்தால் கைவிடப்பட்ட கர் ணன் எவ்வளவு முயன்றும் சக்கரம் மேலே எழும்பவில்லை. 

அப்போது கர்ணன் தான் பரசுராமரிடம் கற்றிருந்த அஸ்தி ரங்களை நினைவுக்குத் தந்து கொள்ளப் பார்த்தான். சாபத்தால் எல்லாம் மறந்துபோய் விட்டது! 

அருச்சுனனே! தாமதிக்கவேண்டாம். பாபியாகிய இந்தப் பகைவனுடைய தலையை வெட்டும்படியான அம்பைச் செலுத்து என்று அருச்சுனனை மாதவன் தூண்டினான். 

“பிரபுவின் அந்த வார்த்தையை மதித்து அருச்சுனன் சூத புத்திரனுடைய தலையை அம்பால் சேதித்தான்’ என்றார் வியா சர். தரும விரோதமாக நடந்த இந்தக் காரியத்தை அருச்சுன னுடைய பொறுப்பாகவே விட்டுவிடக் கவிக்கு மனம் வரவில்லை. பகவான் கண்ணனுடைய செயலாகவே வைத்து எழுதுகிறார். மண் ணில் பதிந்து விட்டிருந்த தன்னுடைய தேர்ச்சக்கரத்தைத் தூக் கிக் கொண்டிருந்த சமயத்தில் கர்ணனைக் கொல்லச் செய்தது அக்காலத்து யுத்தத ருமத்திற்கு முற்றிலும் விரோதம். அந்தப் பாரத்தைச் சுமக்கப் பகவானைத் தவிர வேறு யாரால் முடியும்? 

தருமத்துக்காகச் செய்யும் போரிலும் அதர்மங்கள் நடந்தே தான் தீரும். தேகபலத்தைச் செலுத்தி நடத்தும் போரின் மூலம் அதர்மங்களையும் அக்கிரமங்களையும் அடக்கலாம் என்று ஆசைப் பட்டுச் செய்யும் எத்தனங்கள் எல்லாம் வீண். 

துரியோதனன் முடிவு 

கர்ணன் யுத்தத்தில் கொல்லப்பட்டதை அறிந்ததும் துரி யோதனன் தீராத சோகத்தில் மூழ்கினான். துரியோதனுடைய நிலைமையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட கிருபர் சொல்லலானார். 

“ராஜ்யத்தில் ஆசை வைத்து அதற்காகச் செய்ய வேண்டிய காரியங்களின் பெரும் பாரத்தை யார்மேல் வைத்தோமோ அவர் கள் அதைச் சந்தோஷமாகவே வகித்து யுத்தத்தில் தங்கள் உயிர் களைத் தியாகம் செய்து மேலுலகம் ஏகியும் விட்டார்கள். இப் போது நீ செய்ய வேண்டியது ஒன்றே. பாண்டவர்களோடு சமா தானம் செய்துகொள்வதே உன்னுடைய கடமை. அரசனே இனிப் போராட்டம் வேண்டாம்” என்றார். 

நிராசையான நிலையிலிருந்தாலும் துரியோதனனுக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. 

“பேடித்தனத்துக்கு இது சமயமன்று. போர் செய்வதே என் கடமை. நண்பர்களு ம் பந்துக்களும் இறந்து விட்ட என் உயிரை நான் காப்பாற்றிக்கொண்டு தப்பித்துக்கொள்ளவா? அப்படிச் செய்தேனானால் உலகம் என்னை நிச்சயமாக இகழும். இகழப்பட்டும் பிழைப்பது எந்தச் சுகத்தை அனுபவிக்க? சகோ தரர்களும் பந்துக்களும் மாண்டுவிட்டபின் ராஜ்யத்தைச் சமா தானத்தின் பேரில் காப்பாற்றிக் கொண்டு நான் என்ன அனுப் விக்கப் போகிறேன்?” 

இவ்வாறு துரியோதனன் சொன்னதைப் படை வீரர்களனை வரும் பாராட்டினார்கள். துரியோதனன் சொல்லுவது சரியான வார்த்தை என்று ஆமோதித்தார்கள். அதன்மேல் எல்லாரும் யோசித்துச் சல்லியனைச் சேனாபதியாக அமைத்தார்கள். சல்லி யன் மகாபலசாலி. அவன் பராக்கிரமம் உயிரிழந்த தலைவர்களு க் குக் குறைந்ததல்ல. அவன் தலைமையின் கீழ் பலத்த யுத்தம் மறுபடியும் துவங்கிற்று. 

பாண்டவர்கள் பட்சத்தில் இப்போது யுதிஷ்டிரன் முழு பாரமும் வகித்தான். அவனே நேரில் சல்லியனைத் தாக்கினான். அது வரையில் சாந்தமே உருக் கொண்டவனாக விளங்கிய யுதிஷ் டிரன் இப்போது சினங்கொண்டு கோர யுத்தம் நடத்தியது வியப் பாக இருந்தது. வெகு நேரம் சம யுத்தம் நடந்தபின் யுதிஷ்டிரன் சல்லியன்மேல் சக்தி ஆயுதத்தை வீசினான். திருவிழாவில் உயர்த் திய துவஜஸ்தம்பத்தைப் போல் சல்லியன் உயிரிழந்து கீழே வீழ்ந்து கிடந்தான். 

சல்லியனும் இறந்து போனான். இனி ஒருவித பலமும் இல்லை யென்று கௌரவப்படை மனக்கலக்கம் அடைந்தது. ஆயினும் எஞ்சிய திருதராஷ்டிர புத்திரர்கள் ஒன்று சேர்ந்து பீமனை நான்கு பக்கத்திலிருந்தும் தாக்கினார்கள். அவ்வளவு பேரையும் பீமன் கொன்றான். பதின்மூன்று வருஷம் கோபத்தால் உள்ளம் வெந்த வாயுபுத்திரன் இன்று தான் வாழ்க்கைப்பயனை அடைந்தேன் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தான். 


அதன் பின் சகுனி சகாதேவனைத் தாக்கினான். கூரிய எஃகு அம்பு ஒன்றைச் சகாதேவன் குறிவைத்து “மூடனே! நீ செய்த பாபத்தின் பலனை இப்போது அடைவாய்’ என்று சொல்லிச் சகுனி யின் தலை அறுபட்டுக் கீழே விழும்படி எய்தான். கெளரவர் களின் பாபங்களுக்கெல்லாம் மூலமாயிருந்த தலையானது அறு பட்டு வீழ்ந்தது என்கிறார் முனிவர். 

துரியோதனன் ஒருவன் தவிர எல்லாரும் மாண்டு விட்டார்கள்.  சேனையின்றி, ரதமின்றி, பரிதாப நிலையிலிருந்த அந்த வீரன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு பாதசாரியாகத் தன்னந் தனியாக ஒரு தண்ணீர் மடுவை நோக்கிச் சென்றான். ஒரு மடு வைக்கண்டான். குளிர்ந்த தண்ணீரில் இறங்கினால் உடலின் வெப் பம் தணியும் என்று மடுவில் இறங்கி நின்றான். 

“மகா பிராக்ஞரான விதுரர் என்ன நடக்கும் என்பதை முந்தியே கண்டு சென்னார்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அந்த மடுவில்-இறங்கினான். 

காலம் தவறிய பிறகு அறிவு தோன்றினாலும் ஒரு பயனும் இல்லை. செய்த கருமங்களின் விளைவை அனுபவித்தே தீரவேண்டும்.  


துரியோதனனைத் துரத்திக்கொண்டு அங்கே யுதிஷ்டிரனும் அவன் தம்பிகளும் வந்து சேர்ந்தார்கள். 

“துரியோதனா! குலத்தையும் குடும்பத்தையும் நாசம் செய்து விட்டுத் தண்ணீரில் மறைந்து ஒளிந்து கொண்டு உயிர் தப்பப் பார்க்கிறாயா? உன்னுடைய மானமும் தன் மதிப்பும் எங்கே போயிற்று? வெளியே வந்து யுத்தம் செய்.க்ஷத்திரியனாய்ப் பிறந் தாய். யுத்தத்தினின்றும் தப்பிப் பிழைக்கப் பார்க்காதே” என் றான் யுதிஷ்டிரன். 

அப்போது துரியோதனன் மிகவும் வருத்தப்பட்டு “என் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கல்ல நான் இவ்விடம் வந்தது. பயத்தால் நான் இவ்விடம் வந்தேன் என்று எண்ணாதீர்கள். என் உடலின் சிரமத்தைத் தீர்த்துக் கொள்ளத் தான் வந்து இங்கே குளிர்ந்த தண்ணீரில் இறங்கி நிற்கிறேன். ஓ! யுதிஷ்டி னே! எனக்குப் பயமும் இல்லை. உயிரைப்பற்றி ஆசையும் இல்லை. ஆயினும் இப்போது யுத்தத்தில் மனம் செல்ல வில்லை. என்னைச் சார்ந்தவர்கள் அனைவரும் மாண்டார்கள். ராஜ்ய பதவியில் எனக் கிருந்த விருப்பம் தீர்ந்தது. இந்த உலகம் உனதே. கவலையின்றி நீயே அனுபவிப்பாயாக” என்றான். 

”ஊசி முனை நிலமும் இல்லையென்று அந்த நாளில் நீ சொன் னாயல்லவா? சமாதானத்தை விரும்பி நாங்கள் கெஞ்சிக் கேட்ட காலத்தில் இல்லை என்ற நீ இப்போது எல்லாம் எடுத்துக் கொள் என்கிறாய். நீ செய்த பாபங்களை யெல்லாம் எடுத்து ச் சொல்லவேண்டுமா? நீ எங்களுக்கு இழைத்த தீங்குகளும் திரௌ பதிக்கு இழைத்த அவமானமும் உன் உயிரைக் கொண்டுதான் தீரும்” என்றான் தருமபுத்திரன். 

சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சொல்லுகிறான் இந்தக் கொடிய வார்த்தைகளை யுதிஷ்டிரன் வாயால் கேட்டதும் உன் மகன் துரியோதனன் கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு தண்ணீ ரில் எழுந்துநின்றான. 

எழுந்து நின்ற துரியோதனன் “வாருங்கள். ஒருவர் பின் ஒரு வராக வாருங்கள். நா ன் த னியாக ருக்கிறேன். நீங்கள் ஐவரும் ஒன்று கூடி என்னைத் தாக்குவது நியாயமன்று. என் தேகத்துக்குக் கவசமுமில்லை. ஓய்ந்து போயிருக்கிறேன். உடம்பில் பல களில் காயமடைந்திருக்கிறேன்” என்றான். 

இதற்கு யுதிஷ்டிரன் “ஒருவனைப் பலர் சேர்ந்து எதிர்ப்பது தவறானால் அபிமன்யு எவ்வாறு இறந்தான்? உன் சம்மதம் பெற்ற ல்லவோ பலரும் சேர்ந்து அவனை அநியாயமாகக் கொன்றார்கள்? தங்களுக்குக் கஷ்டம் நேரிட்டபோது எல்லாரும் தரும சாஸ்திரம் எடுத்து ஓதுவார்கள். மடுவை விட்டு வெளியே வந்து சவசம் தரித்துக் கொள்.எங்களுக்குள் யாரையேனும் ஒருவனைத் தேர்ந்து அவனுடன் யுத்தம் செய். இறந்து சுவர்க்கம் செல். அல்லது வென்று அரசனாக இருப்பாய்’ என்றார். 


அதன் மேல் பீமனுக்கும் துரியோதனனுக்கும் யுத்தம் நடந் தது. அவர்களுடைய இரு கதாயுதங்களும் ஒன்றை யொன்று தாக்கியபோது நெருப்புப் பொறிகள் பறந்தன. வெகு நேரம் யுத்தம் நடந்தது. 

பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அந்த இருவரில் யார் வெல்வார்கள் என்று பேசிக் கொண்டிருந்தனர். துரியோதனு டைய துடைகளைப் பிளந்து பீமன் தன் பிரதிக்ஞையைப் பூர்த்தி செய்வான் என்று கண்ணன் கூறியது பீமனுக்குக் கேட்டது. சிம்மம் பாய்வது போல் பீமன்து ரியோதனன் மேல் பாய்ந்தான். பாய்ந்து கதையை ஓங்கி துரியோதனுடைய துடையின் மேல் பலமாக அடித்தான். 

துரியோதனன் வீழ்ந்தான். வீழ்ந்து கிடந்த துரியோதன னுடைய தலையைக் காலால் துவைத்துப் பீமன் கூத்தாடினான். 

அப்போது கண்ணன் “பீமனே போதும். உன் கடனைத் தீர்த்தாய். துரியோதனன் அரசனாகப் பிறந்தவன். நம்முடைய குலத்தவன். அவன் தலையைக் காலால் உதைக்கலாகாது. சீக்கிரத்தில் பாபிஷ்டனுடைய உயிர் உடலை விட்டுப் பிரியும். பாண்டு குமாரர்களே! துரியோதனனும் அவன் சகாக்களும் இறந்தார் கள். இனித் தாமதம் ஏன்? தேர் ஏறுங்கள்” என்றான். 

அச்சமயம் கீழே காலுடைந்து கிடந்த துரியோதனன் முகத் தில் கோபமும் வெறுப்பும் கலந்து நெருப்புப் போல் எரிந்தது. கிருஷ்ணனைப் பார்த்து ‘தரும முறையில் போர் புரிந்த அநேக வீரர்களைப் பல மோசங்கள் செய்து கொல்லுவித்தாய். உனக்கு வெட்கம் சிறிதும் இல்லையா? கர்ணனோடாவது, பீஷ்மரோடாவது துரோணரோடாவது நேர்மையான முறையில் நீ போர் புரிந் திருந்தால் ஒரு நாளும் வெற்றி அடைந்திருக்கமாட்டாய்” என்றான். 

உயிர் உடலை விட்டு நீங்கும் சமயத்திலும் இவ்வாறு சொன்ன துரியோதனா! வீண் துரியோதனனைப் பார்த்துக் கிருஷ்ணன் பேச்சுப் பேசுகிறாய். ஆசையினாலும் ராஜ்ய பலம்பெற்ற கர்வத் தினாலும் நீ செய்த பாவங்களுக்குக் கணக்கில்லை. அதன் பலனை அனுபவிக்கிறாய்” என்று சொன்னான். 

துரியோதனன் “க்ஷத்திரியர்கள் எவ்வாறு இறக்க விரும்பு கிறார்களோ அந்த மரணத்தை நான் அடைந்தேன். என்னைவி பாக்கியவான் யார்? என் நண்பர்களுடனும் என்னைத் தொடர்ந் தவர்களுடனும் நான் சுவர்க்கம் போகிறேன். இகழப்பட்டவனாக நீ உயிருடன் இரு. கீழே விழுந்து கிடக்கும் 

என் தலை மேல் பீமன் தன் காலை வைத்து உதைத்ததால் எனக்குத் துயரம் இல்லை. காக்கைகளும் என் தலை மேல் தம் கால்களை இன்னும் சில நிமி ஷங்களுக்குள் வைக்கப்போகின்றன அல்லவா” என்றான். 

இவ்விதம் துரியோதனன் வீரனுக்குத் தகுந்த பேச்சுகள் பேசுகையில் ஆகாயத்திலிருந்து புஷ்ப வருஷம் வருஷித்தது என் கிறார் முனிவர். 

லோபத்தினாலே துரியோதனன் முதலில் அதர்மத்தில் இறங்கினான். அதன் பலனாக விளைந்த கோபத்தினால் இரு பக்கத் திலும் பல அதருமங்கள் தோன்றின. 

பாண்டவர்களின் வெட்கம் 

யுத்தம் முடியும் தறுவாயில் பலராமன் தீர்த்த யாத்திரை முடித்துவிட்டுக் குருக்ஷேத்திரம் வந்து சேர்ந்தான். அப்போது பீமனும் துரியோதனனும் மல்யுத்தம் செய்து கொண்டிருந்தார் கள். பீமன் துரியோதனனுடைய துடைகளை அடித்துப் பிளந்த தைப் பலராமன் பார்த்ததும் யுத்த முறை புறக்கணிக்கப்பட்டு அக்கிரமம் ஓங்கி விட்டது என்று பலராமனுக்குக் கோபம் பொங்கிற்று. 

“சீ! சீ! நாபிக்குக் கீழ் கதாயுதப் போரில் யாராவது அடிப் பார்களா? சாஸ்திர விரோதமாக இந்தப் பீமன் நடந்து கொண்டுடான்.  

இவ்வாறு பீமனுடைய நடவடிக்கையைப் பார்த்துப் பொறுக்காமல் பலராமன் தன் சகோதரன் கிருஷ்ணனை நோக்கி நீ இதை யெல்லாம் பொறுப்பாய். என்னால் பொறுக்க முடியாது” என்று சொல்லிக் கலப்பையை மேலே தூக்கிக் கொண்டு பீமனை நோக்கிச் சென்றான். பலராமனுக்கு முக்கியமான ஆயு தம் கலப்பை. 

பலராமன் கோபாவேசம் கொண்டு பீமன் பேரில் பாயங் சென்றதைக் கண்டு கிருஷ்ணன் பயந்து வழிமறித்தான். 

“பாண்டவர்கள் நம்முடைவ மித்திரர்கள். நெருங்கிய பந்துக்கள். துரியோதனனால் மிகவும் துன்புறுத்தப் பட்டவர்கள். திரௌபதியைச்சபையில் அவமதித்த போது பீமன் சபதம் செய் தான். ‘இந்தக் கதையினால் துரியோதனனுடைய இரு துடைகளை யும் நான் யுத்தத்தில் பிளந்து கொல்வேன்’ என்று பிரதிக்ஞை செய்திருக்கிறான். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். செய்த பிரதிக்ஞையைக் காப்பாற்றுவது க்ஷத்திரியர் தருமம். தோஷமற் றவர்களும் நம்மைச் சேர்ந்தவர்களுமான பாண்டவர்கள் பேரில் அவசரமாகக் கோபிக்க வேண்டாம். கெளரவர்கள் செய்த தீவினைகளை யெல்லாம் வைத்துத் தருமத்தை நிர்ணயிக்கவேண் டும். நிகழ்ச்சியின் மத்தியில் முந்தி நடந்தவைகளை மறந்து விட்டு ஒரு காரியத்தை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு தரும விமரி சனம் செய்வது பிழையில் முடியும். இப்போது கலிகாலம் வந்து விட்டது. வஞ்சனை முறைகளைப் பலதடவை அனுசரித்த துரியோ தன்னைப் பீமன் இவ்வாறு நாபிக்குக் கீழ் தாக்கியதில் குற்றம் இல்லை. இந்தத் துரியோதனனால் தூண்டப்பட்டே, கர்ணன், அபிமன்யு வினுடைய வில்லைப் பின்புறத்தில் நின்று அம்பு எய்து அறுத்தான். தேரும் வில்லும் இழந்து நின்ற நிலையில் அநேகரால் தாக்கப்பட்டு அருச்சுனனுடைய குமாரன் கொல்லப்பட்டான். பிறந்தது முதல் வஞ்சனையில் புத்தி செலுத்தின இந்தத் துரியோதனன் குலத்தைக் கெடுத்த பாவியாவான். இவன் பீமசேனனால் கொல் லப்பட்டது அதருமம் ஆகாது. சபையில் செய்த பிரதிக்ஞையை பதின்மூன்று வருஷகாலமாக பீமன் நினைவில் வைத்துக் காத்தான். துடைகளைப் பிளந்து கொல்வேன் என்று பீமன் செய்த பிரதிக் ஞை துரியோதனனுக்கு நன்றாகத் தெரியும். மிகவும் துன்புறுத் தப்பட்ட பாண்டவர்களோடு யுத்தம் செய்யும் துரியோதனனுக் குப் பீமனால் இது செய்யப்படும் என்பது நன்றாகத் தெரிந்த விஷ யம். இதை அக்கிரமம் என்று எண்ணக்கூடாது. என்று சமா தானம் சொன்னான். 

இவ்வாறு கிருஷ்ணன் வாதித்ததெல்லாம் பலராமனுடைய அபிப்பிராயத்தை மாற்றவில்லை. ஆயினும் அவனுடைய கோபம் தணிந்தது. 

“துரியோதனன் வீரர்களுக்குரிய சுவர்க்கம் அடைவான். பீமனுடைய புகழ் மாசடை ந்துவிட்டது. பாண்டுபுத்திரன் துரி யோதனனை முறை தவறிய வழியில் அடித்தான் என்பது உலகத் தில் பெரும்பழியாக நிற்கும். நான் இவ்விடம் நிற்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் பலராமன் உடனே துவாரகைக்குச் சென்று விட்டான். 


“யுதிஷ்டிரரே! யாது காரணம்பற்றிப் பேசாமலி ரு க்கிறீர்?” என்றான் கிருஷ்ணன். 

“மாதவ! கீழே விழுந்த துரியோதனனுடைய தலையைப் பீமன் காலால் துவைத்தது எனக்குப் பிரியமான செய்கையல்ல. குலம் அழிந்து போவதைப்பற்றிப் பார்க்கிறேன். கெளரவர்களால் நாம் வஞ்சிக்கப்பட்டோம். விருகோதரனுடைய உள்ளத்தில். நிறைந்து நிற்கும் துக்கத்தையும் கோபத்தையும் நான் அறிவேன். மூடனு ம் பேராசைக்காரனுமான துரியோதனனை இவ்வாறு கொன்றது நியாயமோ, அநியாயமோ எப்படியாயினும் மிகவும் பெரிய துக்கங்களை அனுபவித்த பீமசேனன் செய்ததை நான் ஆட்சேபிக்க முடியவில்லை” என்றான். 

தருமம் தவறினால் சமாதானங்களினாலும் அமைதி உண்டா காது. மகா புத்திமானான அர்ச்சுனனு ம் பேசாமலிருந்தான். பீமனைப் புகழவுமில்லை. குற்றமும் கூறவில்லை. ஆனால் பக்கத்தில் நின்ற மற்றவர்கள் துரியோதனனுடைய குற்றங்களை யெல்லாம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

கிருஷ்ணன் அவர்களை நோக்கி க்ஷத்திரிய வீரர்களே! அடித்து வீழ்த்தப்பட்டுச் சாகும் தறுவாயில் கிடக்கும் சத்து ருவை மேலும் மேலும் இகழ்ந்து பேசுவது தகாது. மூடன் கொல்லப்பட்டான். பாவிகளுடைய சகவாசத்தை அடைந்ததால் வன் போனான். நாம் ரதமேறிப் போவோம்” என்றான். 

கால்கள் உடைந்து தரையில் குற்றுயிராகக் கிடந்த துரியோதனன் கிருஷ்ணன் சொன்னதைக் கேட்டுக் கோபாவேசமானான். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிக் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்து கிருஷ்ணனைப் பார்த்து ” நீசனே! உன் தகப்பன் வாசுதேவன் கம்சனுடைய தாசன் அல்லவா? நீ அரசர்களுடைய சகவாசம் பெறத் தகாதவன். வெட்கமில்லாமல் பேசுகிறாய் என் துடைகளைப் பார்த்து அடிக்கச் சொன்னது நீயே யல்லவா? நானு ம் பீமனும் சம யுத்தம் செய்து கொண்டிருந்தபோது அருச்சுனனுடன் பேசுவதுபோல் துடைகளைக் காட்டிப் பீமனுக்குக் குறிப்புத் தெரியும்படி நீ செய்தது எனக்குத் தெரியாது என்று எண்ணுகிறாயா? உனக்கு வெட்கமுமில்லை தயையுமில்லை. பிதா மகர் பீஷ்மர் உன்னுடைய யுக்தியாலே அல்லவா மாண்டார்? சிகண்டியை முன்னால் நிறுத்தி யுத்தம் செய்வித்தது நீயே. தரும புத்திரனைப் பொய் சொல்ல வைத்து அதரும முறையில் துரோண ரையும் மாய்த்தாய். யுதிஷ்டிரன் சொன்ன அசத்யத்தை நம்பித் துரோணர் தம் வில்லைக் கீழே போடச் செய்தது நீயே அல்லவா? 

ஆயுதமின்றி யோக நிலையில் உட்கார்ந்திருந்த ஆசார்யரை அந் தப் பாவியான திருஷ்டத்யுமனன் கொன்றதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டு சந்தோஷப்பட்டாயல்லவா? அருச்சுனனைக் கொல்வதற்காகக் காப்பாற்றி வைத்திருந்த சக்தி ஆயுதத்தைக் கர்ணன் கடோத்கசன் மீது பிரயோகித்துச் பெலபழித்து விடச் செய்தது ம் உன் வஞ்சனையே யல்லவா? பாபியே! கை வெட்டப் பட்டு பிராயோபவேச நிலையிலிருந்த பூரிசிரவசைச் சாத்யகி குரூரமாகக் கொன்றதும் உன் தூண்டுதலால் அல்லவா? உன்னால் அல்லவோ கர்ணன் பூமியில் அழுந்திவிட்ட தன் தேரின் சக்கரத்தைத் தூக்கிக் கொண்டிருந்தபோது இகழத்தக்க முறை யில் அருச்சனனால் கொல்லப்பட்டான்? அயோக்கியனே! எங்க ளுடைய நாசத்திற்கெல்லாம் நீயே காரணம். சிந்து ராஜனான ஜயத்ரதன் உன்னுடைய மாய வித்தையால் ஏமாற்றப்பட்டு அஸ்தமனம் ஆகிவிட்டது என்று எண்ணி அஜாக்கிரதையாக இருந்த சமயத்தில் கொல்லப்பட்டதை உலகம் இகழவில்லையா?’ என்று இவ்வாறு சரமாரியாக நிந்தித்துவிட்டு வலி தாங்க முடியாமல் மறுபடியும் பூமியில் விழுந்தான. 

“காந்தாரி புத்திரனே! கோபத்தால் உயிரை வீணாக எரித் துக்கொள்ளுகிறாய்! உன்னுடைய பாபங்களே உன் நாசத்துக்குக் காரணம். நான் அல்ல. உன்னுடைய தோஷத்தினால் தான் பீஷ் மரும் துரோணரும் உயிரை இழந்து மாண்டார்கள். அவ்வாறே கர்ணனும் மற்றவர்களும் உன்னாலேயே மாணடார்கள் நீ பாண்டு புத்திரர்களுக்குச் செய்த அநியாயங்களை யெல்லாம் எடுத்துச் சொல்லவேண்டுமா? திரௌபதியை அவமானப் படுத்தியதற்கு எந்தத் தண்டனைதான் அதிகமாகும்? நீ செய்த தீமைகளின் கார ணமாக உண்டான பகையும் கோபமும் எவ்வாறு மற்றவர்களின் குற்றமாகும்? நாங்கள் செய்த வஞ்சனைகள் எல்லாம் நீ செய்து வந்த மகாபாபமான காரியங்களினால் அனுஷ்டிக்க வேண்டியதா யின. லோபத்தினால் நீ செய்த பாபங்களின் பயனை யுத்தபூ மியில் அனுபவித்தாய். ஆனால் வீரனைப் போல் மாண்டாய். க்ஷத்திரியர் களுக்குரிய சொர்க்கத்திறகு ஏகுவாய்” என்றான் கிருஷ்ணன். 

“கிருஷ்ணா! நண்பர்களோடும் உறவினர்களோடும் நான் சுவர்க்கம் போகிறேன். நீங்கள் துக்கத்தில் மூழ்கி உயிருடன் இருப்பீர்கள்'” என்றான் துரியோதனன். 

மறுபடியும் ஆகாயத்தில் இருந்து துரியோதனன் மேல் பூமாரி பொழிந்தது. கந்தர்வர்களின் வாத்தியமும் முழங்கிற்று. சைகள் எல்லாம் ஜோதி மயமாக விளங்கிப் பிரகாசித்தன. தைக் கண்டு வாசுதேவனும் பாண்டவர்களு ம் ஓரளவு வெட்கம் கொண்டார்கள். 

துரியோதனன் சொன்னது உண்மை. வஞ்சனையின்றி நீங் கள் அவனை ஜயித்திருக்க முடியாது” என்றான் கிருஷ்ணன். 

பாரதம் எழுதிய வியாசரே துரியோதனன் வாய்வழி கண் ணனை நிந்திக்கிறார். கவிகளுக்குப் பட்சபாதம் கிடையாது. தருமம் அதருமம் ரண்டும் ஆண்டவன் ட்ட வழி செல்வ வேண்டியது, 

அசுவத்தாமன் 

துரியோதனுடைய முடிவைப் பற்றிய விவரங்கள் அசுவத் தாமனுக்குத் தெரிந்ததும் அவனுக்குக் கடல் பொங்குவதுபோல் கோபம் பொங்கிற்று. தந்தையான துரோணரைக் கொல்லுவதற்காகச் செய்யப்பட்ட வஞ்சனையையும் இப்போது துரியோ தனனை யுத்த முறைக்கு முற்றிலும் விரோதமாகக் கொன்ற தையும் எண்ணி அசுவத்தாமன் துரியோதனன் வீழ்ந்து கிடந்த இடத்துக்குச் சென்றான். ”இந்தப் பாண்டவர்களை இன்றிரவே நான் கொல்லப் போகிறேன்’ என்று சபதம் செய்தான். 

குற்றுயிராய்க் கிடந்த துரியோதனன் மகிழ்ச்சி பரவசமடைந்து பக்கத்தில் நின்றவர்களுக்குச் சொல்லிக் கௌரவ சேனைக்கு அசுவத்தாமனைத் தலைவனாக அபிஷேகம் செய்யச் சொல்லி “உம்மை நம்பினேன்” என்றான். 


இருள் சூழ்ந்த ஒரு காட்டில் பெரிய ஆலமரத்தடியில் கிரு பரும் கிருதவர்மனும் அசுவத்தாமனும் தங்கினார்கள். சூரியன் அஸ்தமித்து விட்டான். களைப்பினால் கிருபரும் கிருதவர்மனும் தரையில் கிடந்த படியே தூங்கிப் போனார்கள். அசுவத்தாமனுக் குத் தூக்கம் வரவில்லை. கோபமும் துவேஷமு மேலிட்டு சர்ப்பம் போல் சீறிக் கொண்டிருந்தான். இராக் காலத்துப் பிராணிகள் சத்தமிடுவதைக் கேட்டுக் கொண்டு ஆலோசித்துக் கொண்டிருந்தான். 

அந்த ஆலமரத்துக் கிளைகளில் காக்கைகள் கூட்டமாக இரவில் தங்கிக் தூங்கிக் கொண்டிருந்தன. அப்போது ஒரு பெருத்த கோட்டான் வந்து தூங்கிக் கொண்டிருந்த காக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கொத்திக் கிழித்துக் கொன்று கொண் டிருந்ததை அசுவத்தாமன் பார்த்தான். இரவில் கண் தெரி யாமல் அலறி அலறி உயிர் விட்ட காகங்களைப் பார்த்து அசுவத் தாமனுடைய மனத்தில் ஒரு எண்ணம் உதித்தது. இந்த அதர் மர்களான பாண்டவர்களையும் என் தகப்பனாரைக் கொன்ற பாஞ்சாலனையும் அவர்களைச் சேர்ந்த அனைவர்களையும் இந்தக் கோட்டான் காக்கைகளைக் கொன்றதைப்போலப் பாசறைகளில் தூங்கிக் கிடக்கும்போது உள்ளே புகுந்து எளிதில் கொன்று விடலாம். பாண்டவர்கள் செய்த அதரும யுத்தத்திற்குப் பிரதி செய்து விட்டுப் பழி தீர்த்துக்கொள்வேன். இந்தப் பறவையால் நான் உபதேசம் பெற்றேன். சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு புது முறைகளை உபயோகிப்பதில் அநீதி ஒன்றுமில்லை. சத்துருக்கள் களைத்திருக்கும் நேரத்திலோ சேனாபலம் பிளவுபட்டு நிற்கும் சமயத்திலோ தாக்கலாம் என்று சாஸ்திரமே இருக்கிறது. பலம் இழந்துவிட்ட நாம் அவர்களைத் தூங்கும்போது தாக்குவதில் என்ன தோஷம்? அவ்வாறு செய்தால்தான் அக்கிரமமான முறையில் வெற்றி பெற்ற இந்தப் பாண்டவர்களை நாம் இப்போது தோற்கடிக்க முடியும்” என்று நிச்சயம் செய்து கொண்டான். 

இந்த எண்ணத்தை உறுதி செய்து கொண்ட தும் கிருபரை எழுப்பித் தன் தீர்மானத்தை அவருக்குச் சொன்னான். அசுவுத்தாமனுடைய யோசனையைக் கேட்ட கிருபர் ‘இது முற்றிலும் தகாது. உலகத்தில் இது வரை நடைபெறாத அக்கிரமமாகும். யாருக்காக நாம் யுத்தத்தில் கலந்தோமோ அந்த அரசன் கொல் லப்பட்டான். நம்முடைய கடமையை நாம் முற்றிலும் முறைப்படி செய்து தீர்த்தோம். பேராசைக்காரனும் மூர்க்கனுமான துரியோதன்னுக்காக நாம் போர் செய்தோம். ஆனால் தோற்றோம். னிமேல் இந்தக் காரியம் பயனற்றுப் போய்விட்டது என்று நா விட்டு விட வேண்டும். போய் திருதராஷ்டிரனையும் புகழ்பெற்ற காந்தாரியையும் யோசனை கேட்கலாம். அவர்கள் சொல்லுகிற படி செய்யலாம். மகாபுத்திமானான விதுரரையும் கேட்கலாம். அவர்கள் சரியான யோசனைகள் சொல்லுவார்கள்” என்றார். 

அசுவத்தாமனுக்குக் கோபமும் சோகமும் இன்னும் அதிகரித்தன. “மனிதர்களின் புத்திக்கு அவரவர்களுடைய யோசனை அவரவர்களுக்குச் சரியாகவே தோன்றும்.இந்தப் பாண்டவர்கள் துரிதோதனனைக் கொன்றதும் என் தந்தையைக் கொன்றதும் பெரிய அதருமம். ஆகையால் அதற்குப் பிரதி நான் எண்ணியிருக் கிறபடி செய்வதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது. இதைச் செய்தால்தான் அரசன் விஷயத்திலும் பிதாவின் விஷயத்திலும் நான் கடன் தீர்த்தவனாவேன். இது என் உறுதியானமுடிவு: ன்றிரவு பாண்டவர்களின் பாசறைகளில் புகுந்து கவச மின்றிப் படுத்துத் தூங்கும் திருஷ்டத்யும்னனையும் பாண்டவர்களையும் கொல்லப் போகிறேன்” என்றான். 

இதைக் கேட்ட கிருபர் மிகவும் துக்கமடைந்தார். “உலகத் தில் மிக்க புகழ் பெற்றிருக்கிறாய். இது வரையில் நிஷ்களங்கமாக இருந்த உன் புகழ் வெள்ளைத் துணியில் ரத்தம் தெளித்தாற் போல் இதனால் கெட்டுப் போகும். தூங்கிக் கொண்டிருக்கிறவர் களைக் கொல்வது ஒரு நாளு ம் தருமமாகாது, வேண்டாம்!** என்றார்.. 

“நீர் என்ன சொல்லுகிறீர்? இந்தப் பாண்டவர்கள் எல்லா ஆயுதங்களையும் கீழே எறிந்து விட்டு உட்கார்ந்த என் பிதாவைத் தயையின்றிக் கொன்றார்கள்.தருமம் என்கிற அணையை உடை த்து எறிந்து விட்டார்கள். இனி என்ன தருமம் மிச்சமிருக்கிறது. தேரை விட்டுத் தரையில் இறங்கி மண்ணில் புதைந்து அழுந்திய சக்கரத்தை தூக்கிக் கொண்டிருந்த கர்ணனை இவர்கள் அதரும் மான முறையில் தாக்கிக் கொன்றார்கள். பீமன் துரியோதனனை நாபிக்குக் கீழ் அடித்துக் கொன்றான். இனி ஏது தருமம்? பாண்ட வர்கள் தருமம் என்ற அணையை உடை த்துவிட்டார்கள். வரம்பு கடந்து அதருமத்தில் இறங்கிய நீசர்களைப் பற்றி ஏன் நாம் தரு மத்தை ஆராய வேண்டும்? என் பிதாவைக் கொன்றவர்களான பாஞ்சாலர்களைத் தூங்கும் போது கொன்று அதனால் நான் புழுவாகவோ பக்ஷியாகவோ ஜன்மம் எடுத்தேனானாலும் அதை நான் விரும்புகிறேன்” என்று அசுவத்தாமன் முடிவாகச் சொல்லி விட்டுக் குதிரைகளைத் தேரில் பூட்டி சத்துருக்களிருக்கும் இடம் போகப் புறப்பட்டான். 

உடனே கிருபரும் கிருதவர்மாவும் “அசுவத்தாமா! என்ன காரியம் செய்யப்போகிறாய்? நீ தனியாகப் போகலாமா? நீ சென்ற வழியில் நாங்களும் செல்வோம். எந்தப் பாவமாயினும் சரி. அதில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்வோம்!” என்று அவர்களும் அசுவத்தாமனுடன் சென்றார்கள். 

திருஷ்டத்யும்னனது பாசறையை அவர்கள் அடைந்தார்கள். கவசத்தைக் கழற்றி விட்டுத் திருஷ்டத்யும்னன் நன்றாகத் தூங் கிக் கொண்டிருந்தான். தூங்கிக் கொண்டிருந்த வீரன் மேல் அசு வத்தாமன் குதித்துக் கால்களால் துவைத்துக் கோரமான முறை யில் கொன்றான். அவ்வாறே எல்லாப் பாஞ்சாலர்களையும் திரௌ பதியின் புத்திரர்களையும் ஒருவர்பின் ஒருவராகக் கொன்றான். 

இப்படி அதுவரையில் கேட்டிராத கொடிய செய்கையைக் கிருபரும் கிருதவர்மனும் அசுவத்தாமனும் செய்து விட்டுப் பாசறைகளுக்குத் தீ வைத்து விட்டார்கள். நெருப்புப் பற்றிக் கொண்டதும் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து ஒன்றும் விளங்காமல் இங்குமங்கும் ஓடினார்கள். அவ்வாறு ஒடியவர்கள் அசுவத்தாமனால் இரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். 

“நாம் செய்ய வேண்டிய கடமையைச் செய்து விட்டோம். இனி நாம் சந்தோஷமாக துரியோதனனிடம் போகலாம். அவன் உயிருடன் இருப்பானானால் அவனுக்குத் திருப்தி உண்டாகும். இந்தச் செய்தியைச் சொல்வோம்’ என்றான் அசுவத்தாமன். அப்படியே துரியோதனன் குற்றுயிராகக் கிடந்த இடத்துக்கு மூவரும் சென்றார்கள். 

“துரியோதனா! இன்னும் உயிருடன் இருக்கிறாயா? உன் நெஞ் சம் குளிரும்.நாங்கள் செய்து முடித்ததைச்சொல்லுகிறோம்கேள்! பாஞ்சாலர்கள் அனைவரும் ஒழிந்தார்கள். பாண்டவர்களுடைய குமாரர்களும் மாண்டார்கள். இரவில் தூங்கிக் கொண்டிரு யில் சேனை முழுதும் எங்களால் அழிக்கப்பட்டது. பாண்டவு பட்சத்தில் ஏழு உயிர்களே எஞ்சி நிற்கின்றன. நம்முடைய கட்சியில் கிருபரும் நானும் கிருதவர்மாவும் இருக்கிறோம்” என்றான் அசுவத்தாமன். 

துரியோதனன், “அசுவத்தாமரே! பிதாமகர் பீஷ்மரும் வீரன் கர்ணனும் செய்யாததை எனக்காகச் செய்தீர்” என்று சொல்லிவிட்டுச் சந்தோஷமாக உயிர் நீத்தான். 

புலம்பி என்ன பயன்? 

இரவில் எதிர்பாராத முறையில் தாக்கப்பட்டுச் சேனை அழி ந்து போனதைப் பார்த்து யுதிஷ்டிரன் துயரம் மேலிட்டு ‘வெற்றி பெற்ற சமயத்தில் படுதோல்வி அடைந்து விட்டோம். மகாசூரனான கர்ணனுடைய தாக்குதலிலிருந்து தப்பின திரெளபதியின் புத் திரர்கள் நம்முடைய அஜாக்ரதையினால் இப்போது பூச்சிகளைப் போல் மாண்டார்கள்.பெரிய கடலைத் தாண்டிய வியாபாரக் கப் யல் முடிவில் சிறு வாய்க்காலில் கவிழ்ந்து போவதுபோல் நாசமடைந்தோம்’ என்றான். 

மக்களை யிழந்த திரௌபதி தாங்க முடியாத கே கோகத்தில் மூழ்கிக்கிடந்தாள். தருமபுத்திரனிடம் வந்து “பாபியான அசுவத்தாமனை வீழ்த்த யாரும் இல்லையா” என்று கதறினாள். 

திரௌபதியின் சொல்லைக் கேட்டதும் பாண்டவர்கள் உடனே புறப்பட்டார்கள். இங்கு மங்கும் தேடிக் கங்கை நதிக் சரை யில் வியாசர் பக்கத்தில் மறைவாக இருந்த அசுவத்தாமனைக் கண் டார்கள். பாண்டவர்களையும் ஜனார்த்தனனையும் கண்டதும் அசு வத்தாமன் மெதுவாகக் கீழே கிடந்த ஒரு துரும்பை எடுத்து, இது பாண்டவ வம்சத்தை முற்றிலும் அழிப்பதாக” என்று மந்தி ரம் சொல்லி அஸ்திரத்தை விட்டான். அது சென்று உத்தரையின் கருப்பத்தை அடைந்தது. 

பாண்டவ வம்சம் அத்துடன் அடையாளமில்லாமல் அழிந் திருக்க வேண்டும். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணனுடைய அனுக்கிரகத்தால் அந்தக் கருப்பத்திலிருந்த பிண்டம் காக்கப்பட்டது. அதுவே பரீ க்ஷித்து ராஜனாகப் பிறந்து பாண்டவ வம்சத்துக்கு அடையாளமாக நின்றது. 


தன் தலையிலிருந்த ஜோதி மணியை எடுத்து அசுவத்தாமன் தோற்றதற்கு அடையாளமாகப் பீமனிடம் தந்துவிட்டு வனம் சென்றான். பீமன் அந்த மணியைத் திரௌபதிக்குக் கொடுத்து “கல்யாணி! இந்த மணியை உனக்காகக் கொண்டு வந்தேன். உன்னுடைய புத்திரர்களைக் கொன்றவன் ஜயிக்கப்பட்டான். துரியோதனன் கொல்லப்பட்டான். துச்சாதனன் ரத்தமும் என்னால் குடிக்கப்பட்டது. கடன்களைத் தீர்த்து விட்டேன்” என்று பீமசேனன் சொன்னான். திரௌபதி அந்த மணியை வாங்கி யுதிஷ்டரனிடம் கொடுத்து வணங்கி, “குற்றமற்ற அரசர் இதைத் தம்முடைய முடியில் அணியத் தகுந்தவர்.” என்றாள். 


அஸ்தினாபுரத்தில் ஸ்திரீகளும் குழந்தைகளும் புலம்பும் சப்+ தம் எங்கும் நிறைந்தது. பல்லாயிரக்கணக்கான திக்கற்ற பெண் களைக் கூட்டிக் கொண்டு திருதராஷ்டிரன் யுத்த பூமிக்குச் சென் றான். கோரமான குலநாசம் நடைபெற்ற அந்தக் குருக்ஷேத்திரத் தில் குருடனான அரசன், நடந்து போனதை எல்லாம் எண்ணிப்  புலம்பினான்,புலம்பி என்ன பயன்? 

“துக்கத்தை அடைந்தவனுக்கு மற்றவர்கள் சமாதானம் சொல்லித் துக்கத்தைத் தீர்க்க முடியாது. அநேக அரசர்கள் உம்முடைய புத்திரனுக்காக உயிர் இழந்தார்கள். அவர்களுக்கும் இன்னும் மாண்டுபோன மற்றவர்களுக்கும் கிரமமாகப் பிரேத காரியங்களைச் செய்விப்பீராக” என்று திருதராஷ்டிரனைப் பார்த்து சஞ்சயன் சொன்னான். 

விதுரனும் திருதராஷ்டிரனுடைய சோகத்தைப் போக்க முய ற்சி செய்தான். ‘யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றித் துக்கித்தல் தகாது. உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களுள் அண் ணன்,தம்பி, பந்துக்கள் என்கிற பரஸ்பர சம்பந்தம் ஒன்றுமில்லை. உம்முடைய மக்கள் உமக்கு உண்மையில் சம்பந்தபட்டவர்கள் அல்லர். தேக சம்பந்தம் மரணத்தோடு முடிந்து போகிறது. கண்ணுக்குத் தெரியாத இடத்தினின்று வந்து மறுபடியும் கண்ணுக் குத் தெரியாத நிலையை ஜீவன்கள் அடைகிறார்கள். அதற்கு ஏன் புலம்ப வேண்டும்? யுத்தத்தில் எதிர்த்து நின்று உயிர்துறந்த வீரர் கள் இந்திரனுக்கு அதிதிகளாயிருப்பார்கள். கடந்து போனதைப் பற்றித் துக்கிப்பதினால் தருமமோ, இன்பமோ, பொருளோ ஒன் றும் உமக்கு உண்டாக மாட்டாது’ வ்வாறா வும் ன்னும் பலவாறாகவும் தத்துவங்களை எடுத்துக் காட்டினான். 

வியாசரும் திருதராஷ்டிரனை அன்போடு உபசரித்து “அருமைப் புதல்வா! உனக்குத் தெரியாமலிருந்து நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை. பிராணிகள் அநித்தியம் என்பதை நன்றாக அறிந்திருக்கிறாய். இந்த யுத்தம் பூபாரத்தைக் குறைக்கவே நேரிட்டது. பிரபுவான விஷ்ணு இதைப் பற்றிச் சொல்லியதை நான் நேரில் கேட்டிருக்கிறேன். ஆனபடியினால்தான் இந்த யுத்தத்தைத் தவிர்க்க முடியவில்லை. இனி யுதிஷ்டிரனே உனக்கு மகன். அவன்பால் அன்பை உண்டாக்கிக் கொண்டு நீ உயிர் தரித்திருக்க வேண்டும். சோகத்தை விடு” என்றார். 

பிறகு யுதிஷ்டிரன் வந்தான். புலம்பிக் கொண்டிருந்த ஸ்திரீ களின் கூட்டத்தைக் கடந்து அவன் திருதராஷ்டிரனை அடைந்து எணங்கி நின்றான். சோகத்தினால் பீடிக்கப்பட்ட திருதராஷ்டிரன் யு ஷ்டிரனைக் கட்டித் தழுவிக் கொண்டான். ஆனால் அந்த ஆலிங் கனத்தில் பிரீதி இருக்கவில்லை. 

பிறகு பீமசேனனையும் “வா!” என்று திருதராஷ்டிரன் அழைத்த போது. வாசுதேவன் முன் யோசனையுடன் பீமனை விலக்கி விட்டு இரும்பால் செய்யப்பட்ட பிரதிமை ஒன்றைக் கண்ணில்லாத திருதராஷ்டிரனிடம் நிறுத்தினான். திருதராஷ்டிரனுடைய கோபத்தை அறிந்து கண்ணன் இவ்வாறு செய்தான். கிழவன் இரும்பு மயமான அந்தப் பிரதிமையைப் பீமசேனன் என்று எண்ணி இரு கைகளாலும் தழுவிக் கொண்டான். கட்டி அணைத் துக் கொண்டிருக்கும்போது தன் மகனைக் கொன்றவன் என்று தாங்க முடியாத கோபம் திடீர் என்று மேலிட்டுத் தன்னை யும் அறியாமல் பிரதிமையைப் பலமாகக் கட்டி அணைத்து நொறுக்கி விட்டான். 

உடனே, ‘ஹா! என் கோபம் ஏமாற்றி விட்டது. பீமன் இறந்தானே!” என்று திருதராஷ்டிரன் புலம்பினான், 

அப்போது கிருஷ்ணன் குருடனான அரசனைப் பார்த்து, “பிர புவே! உமது கோபாவேசம் இவ்வாறு செய்யும் என்று அறிந்து நான் அதைத் தவிர்த்தேன்.நீர் நொறுக்கிப் பொடியாக்கியது பீமசேனன் அல்ல. இரும்புப் பிரதிமை; உம்முடைய கோபத்தின் வேகம் பிரதிமையின் பேரில் காட்டியதோடு தீர்ந்து போகட்டும். பீமன் உயிருடன் இருக்கிறான்” என்றான். 

கோபாவேசம் அடங்கி பீமன் முதலான பாண்டவர்களை யெல் லாம் கிழ அரசன் ஆசீர்வகித்தான். அவனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அனைவரும் காந்தாரியிடம் சென்றார்கள். 

எவன் தேற்றப்போகிறான்? 

காந்தாரிக்கு வியாசர் சொன்னார்: ‘அம்மணீ! பாண்டவர்க ளிடத்தில் கோபம் பாராட்ட வேண்டாம். யுத்தத்துக்கு முன் நீயே சொன்னாயல்லவா? ‘எங்கே தருமமோ அங்கே ஜயம்’ என்றாய். அவ்விதமே முடிந்தது. நடந்து போன விஷயத்தை மனத்தில் சலுத்திக் கோபம் கொள்ளலாகாது. உனக்கு இயற்கையான பொறுமையை-இப்போது வயன்படுத்திக்கொள்வாயாக!’ என்றார். 

“பகவானே! நா ன் பாண்டவர்களைக் கண்டு அசூயைப்பட வில்லை. புத்திர சோகத்தினால் என் புத்தியானது நிலை தவறி இருப் பதை ஒப்புக் கொள்கிறேன். இந்தப் பாண்டவர்களும் எனக்கு ம கள் ஆவார்கள். துச்சாதனனும் சகுனியும் இந்தக் குல நாசத்துக் குக் காரணம் என்பதை அறிவேன். அருச்சுனனும் பீமனும் குற்ற மற்றவர்கள். அகங்காரத்தினால் யுத்தம் நேரிட்டது. என் மக்கள் கொல்லப்பட்டது சரியே. அந்த விஷயத்தில் நான் ஒன்றும் குறை கூறமாட்டேன். ஆனால் வாசுதேவன் பார்த்துக் கொண்டிருக்கு போது பீமன் துரியோதனனைச் சண்டைக்கு அழைத்து யுத்தம் நடந்தது. தன்னைவிடத் துரியோதனன் மல் யுத்தத்தில் சாமர்த்தி யம் மிஞ்சியவன் என்று அறிந்து அவனை நாபிக்குக் கீழே அடித்துக் கொன்று விட்டான். அது என்னால் பொறுக்க முடியவில்லை” என்றாள். 

இதைக் கேட்ட பீமன், “அம்மா! யுத்தத்தில் என்னைக் காத் துக் கொள்வதற்காக நான் அவ்விதம் செய்தேன். தருமமோ, அத ருமமோ, அதை நீ பொறுத்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய புத்திரன் யுத்தத்தினால் ஒருவராலும் ஜெயிக்க முடியாதவன். அதனால் அநியாயமான காரியத்தைச் செய்தேன். ஆனால் அவன் யுதிஷ்டிரரைச் சூதாட்டத்துக்கு அழைத்து வஞ்சித்தான். நாங்கள் அனைவரும் பலவாறு வஞ்சிக்கப்பட்டோம். அக்கிரமமாகக் கவர்ந்து கொண்ட ராஜ்யத்தை விடமாட்டேன் என்றான். பதிவிரதையான திரௌபதியை உன்னுடைய மகன் எவ்வாறு நடத்தினான் என்பது உனக்கு முற்றிலும் தெரிந்த விஷயம். கெட்ட நடத்தையை அனு சரித்த உன்னுடைய குமார னை அந்தச் சபையிலேயே நாங்கள் கொன்றிருந்தால் நீ தவறு என்று அப்போது சொல்லியிருக்கமாட் டாய். தருமராஜனுடைய பிரதிக்ஞையால் கட்டுப்பட்டுச் சும்மா நின்றோம். யுத்தத்தில் பகையைத் தீர்த்துக்- கொண்டோம். அம்மா! நீ எங்களை மன்னிக்க வேண்டும். விசனப்படாதே!” என்றான். 

”அப்பனே! நீ என் நூறு மக்களில் ஒருவனையாவது விட்டு மற்றவர்களையெல்லாம் கொன்று கோபம் தீர்த்துக் கொண்டிருந் தாயாகில் முதியவர்களாகிய எங்கள் இருவருக்கும் ஊன்று கோலா வது இருந்திருக்கும். தரும புத்திரன் எங்கே? அவனைக் கூப்பிடுங்கள்” என்றாள். 

இதைக் கேட்டதும் யுதிஷ்டிரன் நடுக்கமுற்றுக் கைகூப்பிக் கொண்டு கண்களை வஸ்திரத்தினால் கட்டிக் கொண்டிருந்த காந்தாரியிடம் வந்து வணங்கி. ‘தேவி! உன் புத்திரர்களைக் கொன்றவனும், கொடியவனுமான யுதிஷ்டிரன் இதோ உன் முன் நிற்கிறான் சாபத்துக்குத் தகுந்தவன். சபிப்பாயாக. நான் துரோகம் செய்த
வன். எனக்கு உயிரிலாவது ராஜ்யத்திலாவது இனிப் பயனில்லை” என்று கூறிக் காந்தாரியின் காலில் விழுந்தான். 

காந்தாரி பெருமூச்சு விட்டு ஒன்றும் சொல்லாமலிருந்தாள் யுதிஷ்டிரன் பேரில் தன் பார்வை விழுந்தால் அவன் எரிந்து போவான் என்று அறிந்து அவனைப் பார்க்காமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆயினும் கண்களை மறைத் துக் கட்டியிருந்த வஸ்திரத்தின் இடைவெளி வழியே யுதிஷ்டிரன் கால் விரல்களை மட்டும் பார்த்துவிட்டாள். அவை உடனே லிகா ரப்பட்டுப் போயின என்கிறார் பௌராணிகர். 

அருச்சுனன் காந்தாரியினுடைய சோகத்தின் வேகத்துக்குப் பயந்து வாசுதேவருக்குப் பின்புறமாக ஒளிந்து கொண்டானாம். 

பிறகு மகா அறிவாளியும் புண்ணியவதியுமான காந்தாரி தன் கோபத்தை அடக்கிக் கொண்டு பாண்டவர்களை ஆசீர்வதித்து விட்டு அவர்களைக் குந்தியிடம் போகச் சொன்னாள். 

தன் புத்திரர்கள் அனைவரையும் இழந்து புலம்பிக் கொண்டி ருந்த திரௌபதியைப் பார்த்துக் காந்தாரி, பெண்ணே! துக் கப்படாதே! உன்னையும் என்னையும் எவன் தேற்றப் போகிறான்? என்னுடைய குற்றத்தினாலேயே இந்தக் குலம் நாசம் ஆயிற்று’ என்றாள். 

“அண்ணனைக் கொன்றேன்” 

யுத்தத்தில் இறந்தவர்களுடைய ஆத்ம சாந்திக்காக எள் ளும் தண்ணீரும் விட்டுவிட்டுக் கங்கைக் கரையில் பாண்டவர்கள் ஒரு மாதம் தங்கினார்கள். 

ஒரு நாள் நாரதர் வந்து *தருமபுத்திரனே! கிருஷ்ணனுடைய அனுக்கிரகத்தினாலும் அருச்சுனனுடைய பலத்தினாலும் உன்னுடைய தருமத்தின் பலத்தாலும் வெற்றி பெற்றாய். பூமி முழுவதும் உனதாயிற்று. சந்தோஷம் அடைந்தாயா?” என்றார். 

“பகவானே! பூமி எதாயிற்று என்பது உண்மை. ஆயினும் சுற்றத்தார்கள் மாண்டார்கள். பிரியமான குமாரர்களைப் பலி கொடுத்தோம். இந்த வெற்றி பெரிய அபஜயமாகவே எனக்குத் தோன்றுகிறது. நாரதரே! மாறுபடாத நியமமும் உலகம் வியக்கும் படியான சாமர்த்தியமும் படைத்திருந்த எங்களுடைய தமையன் கர்ணனைப் பகைவன் என்று கருதிக் கொன்று விட்டோம். ரா யத்தில் ஆசை வைத்து இந்தப் பெரிய பாபத்தைச் செய்து விட் டோம். அவனோ தாயாருக்குத் தான் கொடுத்த வாக்கைக் காப் பாற்றி என்னைக் கொல்லாமலேயே விட்டான். இத்தகைய தமை யனைக் கொலை செய்த நீசனான என்னுடைய மனம் மிகவும் த விக்கி றது. கர்ணனுடைய பாதங்கள் எங்கள் தாயார் குந்தியினுடைய பாதங்களைப் போலவே இருந்தன. சபையில் எங்களை அவன் அவ மதித்தபோது எனக்கு உண்டான கோபம் அவன் கால்களைக் கண் டதும் எப்படியோ தணிந்து விட்டது. இது இப்போது எனக்கு நினைவு வருகிறது.” 

இவ்வாறு சொல்லி யுதிஷ்டிரன் பெருமூச்சு விட்டு மிகவும் துக்கப்பட்டான். இதன் பின் நாரதர் கர்ணனுடைய சரித்திரத்தை யெல்லாம் எடுத்துச் சொல்லி அவனுக்கு ஏற்பட்ட சாபங்களையும் எடுத்துச் சொன்னார். 

அருச்சுனன் தன்னைவிட தனுர் வேதத்தில் சிறந்தவன் என்று கர்ணன் தெரிந்து கொண்டு அதற்காகத் துரோணரை அடைந்து தனக்குப் பிரம்மாஸ்திரத்தை உபதேசித்துத் தரும்படி கேட்டான். அவர் அது தன்னால் முடியாது. ஒழுக்கம் தவறாத பிராமணன் அல்லது பெரும் தவம் புரிந்து சுத்தமடைந்த க்ஷத்திரியன் இருவருமேதான் அதை அடைய முடியும் என்று சொல்லிவிட்டார். பிறகு கர்ணன் மகேந்திர மலைக்குச் சென்று பரசுராமரை ஏமாற்றித் தான் பிராமணன் என்று சொல்லி அவரி டம் சீடனாக அமர்ந்து தனுர்வேதமும் அஸ்திரங்களும் கற்றுக் கொண்டான். 

ஒரு நாள் கர்ணன் தனியாக விற்பயிற்சி செய்து கொண்டி ருந்த சமயம் அந்த ஆசிரமத்துக்குச் சமீபத்தில் ஒரு பிராமண் ருடைய பசு தற்செயலாக அடிபட்டு இறந்து விட்டது. பசுவுக்கு உடையவராகிய பிராமணர் கோபமுற்று “யுத்தத்தில் உன் தேர்ச் சக்கரம் மண்ணில் பதிந்துபோகும். அப்போது இந் ப் பசுவைப் போல் நீயும் கொல்லப்படுவாய்” என்று சொல்லிச் சபித்தார். 

பரசுராமர் கர்ணனிடம் மிகுந்த அன்புகொண்டு எல்லா வித விற் பயிற்சியும் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கும் முறையும் நிவர்த்திக்கும் முறையும் உள்பட உபதேசித்தார் ஒரு நாள் அவர் இந்த மாணவன் பிராமணன் அல்ல என்று கண்டு கொண்டு விட்டார். ஒரு புழு கர்ணனுடைய துடையைக் கடித் துத் துளைத்துக் கொண்டிருந்தும் வெகு நேரம் அதைப் பொறுத்துக் கொண்டு கொஞ்சமும் அசையாமல் தன் துடைமேல் தலை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த பரசுராமரை எழுப்பாமல் இருந்தான் பிறகு ரத்தம் ஓடிப் பெருகி அவரை எழுப்பிற்று.பரசுராமர் எழுந்து கர்ணனைப் பார்த்து ‘மூடனே! இத்தகைய சகிப்புத் றமை க்ஷத்திரயன் தான் படைத்திருப்பான். உண்மையைச் சொல். நீ பிராமணன் அல்ல. என்னை ஏமாற்றி விட்டாய். என் னிடம் நீ கற்றுக் கொண்ட வித்தை மரண காலத்தில் உன் நினை வுக்கு வராது” என்று சபித்து விட்டார். கர்ணனுடைய சகிப்பு வன்மையே அன் க்ஷத்திரியன் என்பதைக் காட்டிவிட்டது. பரசு ராமருக்கு க்ஷத்திரியர்கள் மேல் மிகுந்த க்ஷத்திரம். 

கர்ணன் மகா கொடையாளி. ஒரு நாள் பிராமணவேஷம் பூண்டு வந்த தேவேந்திரனால் யாசிக்கப்பட்டுத் தன் குண்டலங் களையும் கவசத்தையும் கர்ணன் கழற்றிக் கொடுத்துவிட்டான். தெய்வீக சக்தி பொருந்திய குண்டலங்களையும் உடன் பிறந்த கவசத்தையும் கொடுத்துவிட்ட பிறகு கர்ணன் பலவீன மடைந்தான். 

“குந்திக்குக் கர்ணன் தந்த வரத்தினாலு ம் பரசுராமரு டைய சாபத்தாலும், பசுவை யிழந்த பிராமணருடைய கோபத் தாலும் பீஷ்மர் மகாரதர்களில் இவனை ஒருவனாகக் கணக்கிடாமல் அவமானப் படுத்தியதாலும், தேரை ஓட்டிய சல்லியன் செய்த இகழ்ச்சியின் பயனாகவும், வாசுதேவனுடைய யுக்தி முறைகளினா லும் கர்ணன் இறந்தான். இவ்வாறு பல காரணங்கள் ஒன்றுகூடிக் கர்ணன் மரண மடைவதற்கு ஏதுவாகின்றன. நீ தான் அதற்குக் காரணம் என்று நினைத்துத் துக்கிக்க வேண்டாம்” என்றார் நாரதர். 

யுதிஷ்டிரன் நாரதன் சொற்களால் ஆறுதல் அடையவில்லை.

குந்தி தேவி சொல்லலானாள். “கர்ணனைக் குறித்து நீ சோகப் படாதே! கெட்ட புத்தியுள்ள துரியோதனனை விட்டு விட்டு உன் பட்சம் வந்து சேரும்படி அவன் தகப்பனான சூரிய பகவானே முயன்றான். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவன் கேட்கவில்லை. அவன் முடிவுக்கு அவனே காரணம்” என்றாள், 

கர்ணனுடைய பிறப்பின் ரகசியத்தை மூடி வைத்து எங் களை நீ வஞ்சித்து விட்டாய். அதனால் எங்களுடைய பெரும் துக் கத்துக்குக் காரணமானாய். இன்று முதல் பெண்கள் ரகசியத்தைக் காப்பாற்றச் சக்தி யற்றவர்களாகட்டும்’ என்று யுதிஷ்டிரன் அண்ணனைக் கொன்றோமே என்ற வருத்தத்தில் சாபமிட்டதாகப் பௌராணிகர் ஒரு கதையைக் கற்பித்துச் சொல்லுகிறார்.. 

பெண்கள் ரகசியத்தைக் காப்பாற்ற மாட்டார்கள் என்பது உலக அபிப்பிராயம். அதை யொட்டி இந்தக் கதையும் அழகாகக் கற்பனை செய்யப் பட்டிருக்கிறது. லௌகீக லாப நஷ்டம் எவ்வா றாயினும் இரகசியத்தைக் காப்பாற்றுவது ஒரு பெரிய தார்மிக குணம் என்று எண்ண வேண்டியதில்லை. அது இல்லையே என்று ஸ்திரீகள் விசனப்பட வேண்டியதில்லை. ரகசியத்தைக் காப்பாற்றும் சக்தி இல்லாமலிருப்பது அறத் துறையில் ஒரு பெருங்குறை யல்ல. பெண்களுக்கு இயற்கையான அன்பினால் இரகசியங்களைக் காப்பாற்றுவதில் குறை ஏற்படலாம். 

ஆயினும் பெண்கள் சிலர் ரகசியங்களை நன்றாகவே காப் பாற்றி வருகிறார்கள். தவிர ஆண்மக்கள் எல்லாருமே இந்தச் சாமர்த்தியம் பெற்றிருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. பயிற்சி பேதத்தினாலும் தொழில் பேதத்தினாலும் உண்டாகும் வித்தியாசங்களை ஆண்களின் குணம் பெண்களின் குணம் என்று பிரித்துச் சொல்லிவிடுவது உலக இயல்பு, 

பொறாமை 

பீஷ்மருக்காக ஜலக்கிரியை செய்து விட்டுத் துயரத்தில் மூழ் கிக் கிடந்த யுதிஷ்டிரனுக்கு வியாசர் ஒரு கதையைச் சொல்லு கிறார். 

எப்பேர்பட்ட மனிதனையும் எவ்ளவு பெரிய அறிவாளியையும் பொறாமை என்பது கெடுத்துவிடும். பிரஹஸ்பதி தேவர்களுக்கே உபாத்தியாயர். சகல வேதங்க ளு ம் சாஸ்திரங்களும் படித்தவர். அவரும் இந்தப் பொறாமையினால் ஒரு தடவை பீடிக்கப்பட்டு அவமானப்பட்டார். 

பிரஹஸ்பதிக்கு ஒரு தம்பி இருந்தார். அவர் பெயர் சம்வர்த்தர். அவரும் ரொம்பப் படித்தவர். நல்லவருங்கூட; இதனால் அவர்மேல் பிரஹஸ்பதிக்குப் பொறாமை. நல்ல வர்கள் பேரில், ஏன் இவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்றே உலகத்தில் பொறாமை ஏற்படுகிறது. இது விசித்திரமே யாயினும் உண்மை! சம்வர்த்தரைப் பல விதத்தில் உபத்திர வம் செய்தார். தமயனாரின் தொந்தரவு மிதமிஞ்சிப் போனபடியால் அதனின்று தப்பிப் பிழைப்பதற்குச் சம்வர்த்தர் பைத்தி யக்காரனைப்போல் நடித்து ஊர் ஊராகத் திரிந்து கொண்டு காலம் கழித்து வந்தார். 

இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மருத்தன் என்ற அரசன் கைலாசநாதரைக் குறித்துக் கடுந்தவம் செய்து இமய மலை யில் ஓரிடத்தில் குவிந்து கிடந்த பொன் குவியலை வரமாகப்பெற்று அதைக் கொண்டு ஒரு பெரிய யாகம் செய்ய ஆரம்பித்தான்; அந்த யாகத்தை நடத்திக் கொடுக்கும்படி பிரஹஸ்பதியைக் கூப்பிட்டான். மருத்த ராஜா யாகத்தைச் செய்து அதிகப் பெருமை அடைந்துவிடுவான் என்று தேவர்களின் சார்பாக பிரஹஸ்பதி பயப்பட்டு யாகத்தை நடத்திக் கொடுக்கவரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதன் மேல் மருத்தராஜா எப்படியோ விசா ரித்து சம்வர்த்தரைக் கண்டு பிடித்து அவரை யாகம் நடத்தக் கேட்டுக் கொண்டார். அவர் முதலில் மறுத்துப் பிறகு ஒப்புக் கொண்டார். இதன் மேல் அவரிடம் பிரஹஸ்பதிக்குப் பொறாமை இன்னும் அதிகமாயிற்று. 

“எனக்குப் பகைவனான இந்த சம்வர்த்தன் மருத்தனுடைய யாகத்தைச் செய்யப் போகிறான்’ என்று பிரஹஸ்பதி எண்ணி எண்ணி அந்தப் பொறாமையினால் மிக இளைத்துப் போனார். நிறம் மாறி வெளுத்துப்போய்ப் பரிதாப நிலை யடைந்தார். 

தேவர்களுக்கெல்லாம் ராஜாவான இந்திரன் தேவர்களின் புரோகிதரான பிரஹஸ்பதியிடம் வந்து “சுவாமி ஏன் இளைத்து இருக்கிறீர்? சுகமாகத் தூங்குகிறீரா? பணியாளர்கள் உம்மை சரியாக விசாரித்து வருகிறார்களா? ஏவப்படாமல் உங்களுக்கு வேண்டிய தெல்லாம் குறிப்பறிந்து செய்கிறார்களா? தேவர்கள் எல்லாம் உம்மிடம் சரியாக நடந்து வருகிறார்களா? அல்லது ஏதாவது குறை நேர்ந்ததா?” என்று இந்திரன் கவலைப் பட்டு விசாரித்தான். 

இதற்குப் பிரஹஸ்பதி “தேவராஜனே நல்ல படுக்கையில் சரியாகத்தான் படுக்கிறேன். பரிசாரகர்களும் அன்புடன் தான் விசாரிக்கிறார்கள். தேவர்கள் பரிபாலனையில் ஒரு குறைவு மில்லை” என்று சொல்லிய பிறகு மேலே பேச்சுக் கிளம்பாமல் போயிற்று. துக்கம் பேச்சை அடக்கி விட்டது. 

“ஏன் துக்கப்படுகிறீர்கள்? ஏன் நிறம் வெளுத்து உடம்பு இளைத்திருக்கிறீர்கள்?” என்று இந்திரன் அன்புடன் கேட்டான். 

பிரஹஸ்பதி விஷயத்தைச் சொன்னார்: “சம்வர்த்தன் பெரிய யாகம் செய்யப் போகிறான் அதனால்தான் இப்படி இளைத்துப் போனேன்” என்றார். 

இந்திரன் ஆச்சரியப்பட்டான். 

“பிராமணரே, நீர் எல்லா இஷ்டங்களையும் அடைந்திருக் கிறீர். தேவர்களுக்கே புரோகிதராகவும் யோசனை சொல்லும் மகாபுத்திமானாகவும் இருக்கிறீர். சம்வர்த்தரால் உமக்கு என்ன தீமை உண்டாகக்கூடும்? ஒன்றும் இல்லையே! ஏன் பொறாமைப் பட்டு வீணாகக் கஷ்டப்படுகிறீர்?” என்றான். 

இந்திரன் யோக்கியதைக்கு இவ்வாறு பிரஹஸ்பதிக்கு ஞானோபதேசம் செய்யப் போனான்! இந்திரனுடைய பழைய கதை களை யெல்லாம் பிரஹஸ்பதி எடுத்துக் காட்டி “உன்னுடைய பகைவன் விருத்தி அடைகிறான் என்பதைக் கேட்டு நீ சும்மா இருப்பாயா? அப்படித்தானே நானும்? எவ்விதமாவாது இந்தச் சம்வர்த்தனை அடக்கி என்னை நீ காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார். 

இந்திரன் அக்கினியைக் கூப்பிட்டு “நீ போய் அந்த மருத்த ராஜாவின் யாகத்தை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும்” என்று சொல்லி யனுப்பினான். 

அக்கினி தேவன் “சரி! செய்கிறேன்” என்று சொல்லிச் சென்றான். அக்கினியைப்பற்றிச் சொல்ல வேண்டுமா? போகும் வழியில் மரங்களையும் கொடிகளையும் எரித்து உலகம் நடுங்கப் பெரும் கர்ஜனை செய்து கொண்டு சென்றான். அரசனிட ம் தேவ சொரூபத்துடன் போய் நின்றான். அக்கினி தேவன் தன்னிடம் வந்ததைக் கண்டு ராஜாவுக்குப் பேரானந்தம் பொங்கிற்று கொண்டுவா ஆஸனம், அர்க்கியம் பாத்தியம், பசு!” என்று ஆட்களுக்கு உத்தரவிட்டான். 

அக்கினி தேவன் வந்த காரியத்தைத் தெரியப் படுத்தினான். “நீ இந்த சம்வர்த்தரை விட்டுவிடு. வேண்டுமானால் உனக் குப் புரோகிதராக நான் பிரஹஸ்பதியையே கொண்டுவருகிறேன்’ என்றான். கூட இருந்த சம்வர்த்தர் இதைக் கேட்டு கடுஞ்சினம் கொண்டார். அவர் சாஸ்திர நியமனப்படி பிரமசரியத்தை அனுசரித்து அபரிமிதமான சக்தியை அடைந்திருந்தவர். 

“இந்தப் பேச்சை நிறுத்து.நான் கோபம் கொண்டு என்னு டைய கண்களினால் உன்னை எரித்து விடுவேன், ஜாக்கிரதை!” என்றார் சம்வர்த்தர். 

பிரமசரியம் நெருப்பையே எரிக்கும் தன்மையது. 

சம்வர்த்தர் சொன்னதைக் கேட்டு அக்கினி பகவான் பயத்தினால் அரச மரத்து இலையைப் போல் நடுங்கி இந்திரனிடம் திரும்பிப் போய் நடந்ததைச் சொன்னான். 

தேவராஜன் இந்தக் கதையை நம்பவில்லை. 

“அக்கினியே! நீ தான் மற்றவர்களை எரிக்கிறாய். உன்னை வேறொருவன் பஸ்பமாகச் செய்யவாவது? இதென்ன வேடிக்கை!” என்றான். 

அப்படி யில்லை தேவராஜனே! பிரம்ம பலமும் பிரம்மச்சரியத் தின் சக்தியும உனக்குத் தெரியாது!” என்று அக்கினி தேவன் முன்காலத்தில் இந்திரனுக்குப் பிராமணர்களிடம் ஏற்பட்ட அவதி களை யெல்லாம் குத்திக்காட்டி ஞாபகப்படுத்தினான். 

பிறகு, இந்திரன் அக்கினியை விட்டு விட்டு ஒரு கந்தர்வனைக் கூப்பிட் நீ மருத்தனிடம் என் தூதனாகப் போய் சம்வர்த்தரை விட்டு விடச் சொல், இல்லாவிடில் என்னுடைய பகையைப் பெற்று அழிந்து போவான் என்று அந்த அரசனுக்குச் சொல்” என்றான். 

அப்படியே அந்தக் கந்தர்வ தூதனும் மருத்தராஜனிடம் சென்று இந்திரன் சொன்னதைத் தெரியப்படுத்திப் பயமுறுத்தினான். 

இராஜன் கேட்கவில்லை. “மித்திரத் துரோகம் மகா பாவம். நான் சம்வர்த்தரை விட்டு விட முடியாது” என்றான். 

அதைக் கேட்டுக் கந்தர்வன் “அரசனே! இந்திரன் உன்மேல் வஜ்ராயுதம் வீசினால் நீ எவ்வாறு பிழைக்கப் போகிறாய்!” என்றான். 

இவ்வாறு சொல்லும்போதே ஆகாயத்தில் இந்திரனுடைய இடி முழக்கம் கேட்டது. 

இந்திரன் யுத்தத்திற்கு வந்துவிட்டான் என்று அரசன் மிக வும் பயந்து சம்வர்த்தரிடம் சரண் புகுந்தான். 

சம்வர்த்தர் “பயப்படாதே” என்று அரசனுக்கு அபய வார் த்தை சொல்லித் தன் தபோபலத்தைப் பிரயோகித்தார். யுத்தம் செய்ய வந்த இந்திரன் அடங்கி ஒடுங்கிச் சாந்த வடிவமாக யாகத்திலும் கலந்து கொண்டான். அவியும் பெற்றுப் போனான். பிரஹஸ்பதியின் பொறாமைப் பிரயத்தனம் வீணாயிற்று. பிரம்மசரியம் வென்றது. 

பொறாமை என்பது பொல்லாத பாபம். யாரையும் அது தீண்டும். சரஸ்வதியே தோல்வியடையும் படிப்பைப் பெற்ற பிரஹஸ்பதியுங் கூடப் பொறாமைக்கு இரையானான். சாதாரண மனிதர்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா? 

உதங்கர் 

பாண்டவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு கிருஷ்ணன் துவாரகைக்குப் போகும் வழியில் உதங்கர் என்ற பிராமண சிரேஷ்ட ரை சந்தித்தான். அவரைக் கண்டதும் தேரை நிறுத்தி இறங்கி நமஸ்காரம் செய்து பூஜித்தான். அவரும் கண் ணனுக்கு மரியாதை செய்து விட்டு, 

“மாதவ! பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சகோ தரர்களுக்குள் இருக்க வேண்டிய அன்பு சரியாக இருந்து வரு கிறதா! எல்லோரும் சுகமாயிருக்கிறார்களா?” என்று கேட்டார். 

துறவி வாழ்க்கையிலிருந்த பிராமணருக்கு உலக நிகழ்ச்சி கள் ஒன்றுமே எட்டவில்லை. யுத்தம் நடந்ததே அவருக்குத் தெரிய வில்லை. அவருடைய கேள்வியைக் கேட்டுக் கண்ணன் ஒரு நிமிஷம் திகைத்தான். என்ன சொல்லுவது என்று தோன்றாமல் நின் றான். பிறகு ‘ஐயா! கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் கோரமான யுத்தம் நடந்து விட்டது. சமாதானம் செய்ய ன் எவ்வளவோ முயன்றேன். அவர்கள் கேட்கவில்லை. யுத்தத்தில் அனைவரும் மாண்டார்கள். விதியை யாரும் மீற முடியாது’ என்று சொல்லி நடந்த வரலாற்றை யெல்லாம் சொன்னான்.

இதைக் கேட்டதும் உதங்கர் கோபாவேசமானார். கண்கள் சிவந்துபோய் மாதவனைப் பார்த்துச்சொன்னார்: 

“வாசுதேவா! நீ பக்கத்தில் இருந்தும் இவ்வாறு ஆயிற்றா? அவர்களைக் காப்பாற்றாமல் போனாய். நீ கபடமாக வேலை செய்து அவர்கள் அழிந்து போக விட்டு விட்டாய். நான் உனக்குச் சாபம் தரப் போகிறேன்” என்றார். 

வாசுதேவன் புன்னகை புரிந்து “சாந்தம்! சாந்தம்! தபஸ்வி யான நீர் உம்முடைய தவத்தின் பயனைக் கோபத்தில் இழந்து விடாதீர். முதலில் நான் சொல்லுவதைக் கேளும். பிறகு வேண் டுமானால் சாபத்தைக் கொடும்” என்று சமாதானப்படுத்தினான்.

கண்ணன் உதங்கருக்கு ஞானக் கண் கொடுத்துத் தன் விசுவ ரூபத்தைக் காட்டினான். உலகத்தைக் காப்பதற்காகவும் தரும த்தை நிலை நிறுத்துவதற்காகவும் பல பிறவிகள் நான் எடுத்து வரு கிறேன். நான் எந்த அவதாரத்தை எடுக்கிறேனோ அந்த அவதாரத் தின் தருமத்தை அனுசரிக்கிறேன். தேவ ஜாதியில் பிறக்கும் போது தேவனைப் போல் எல்லாவற்றையும் செய்வேன். யக்ஷனா கவோ ராக்ஷஸனாகவோ பிறந்தால் யக்ஷனைப் போலவும் ராக்ஷஸ னைப் போலவும் எல்லாக் காரியங்களையும் செய்வேன். மனிதனாகப் பிறந்தாலும் மிருகமாகப் பிறந்தாலும் அவ்வாறு அந்த அவதார த்துக்கு இசைந்தவாறே காரியத்தை முடிப்பேன். அவிவேகிகளான கௌரவர்களைக் கெஞ்சினேன். அவர்கள் அகங்காரத்தால் மதி மயங்கி என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. பய முறுத்திப்பார்த்தேன். அதற்கும் அவர்கள் இணங்கவில்லை. கோபங் கொண்டு என் விசுவரூபத்தையும் அவர்களுக்குக் காட்டினேன்.) அதுவு ம் வீணாயிற்று. அவர்கள் அதருமத்தைச் செய்வதிலேயே பிடிவாதமாக இருந்தார்கள். யுத்தத்தில் பிரவேசித்து உயிர் நீத் தார்கள். பிராமண சிரேஷ்டரே! என் மேல் உமக்குக் கோபத்துக் குக் காரணம் இல்லை” என்றான், 

உதங்கர் சாந்தம் அடைந்தார். அதைக் கண்டு கண்ணன் மகிழ்ச்சியடைந்து “உமக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன், எதை யேனும் கேளும்” என்றான். 

”அச்சுதா! உன்னை நான் பார்த்ததும் உன் விசுவ ரூபத்தைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றதும் போதாதா! எனக்கு வேறொரு வரமும் வேண்டாம்” என்று உதங்கர் சொன்னார். 

ஆனால் கண்ணன் மறுபடியும் வற்புறுத்தவே பாலைவனத்தில் ரியவரும் ஆசையற்றவருமான உதங்கர் பிரபுவே! அவசியம் எனக்கு தே தனும் கொடுக்க நீ விரும்பினால் நான் எவ்விடத்தில் எப்போதேனும் தாகத்துக்குத் தண்ணீர் வேண்டினால் அது கிடைக்குமாறு வரம் தருவாயாக என்றார். இவ்வளவு தானா? என்று கண்ணன் சிரித்து அப்படியே ஆகட்டும்! என்று சொல்லி விட்டுத் துவாரகை சென்றான். 

பிறகு ஒரு நாள் உதங்கர் தாகம் மிகுந்து தண்ணீருக்காகக் காட்டில் அங்குமங்கும் அலைந்து கிடைக்காமல் அச்சுதனை நினைத் தார். உடனே ஒரு புலையன் தோன்றினான். அவன் உடம்புக்குப் போதிய ஆடையில்லை. உடுத்தியிருந்த கந்தல் துணியும் அழுக்குப் படிந்து அவலக்ஷணமாக இருந்தது.கூட நான்கு ஐந்து வேட்டை நாய்கள். கையில் வில், தோளில் ஒரு பை. அந்தத் தோல் பையில் குடி தண்ணீர். 

புலையன் நகைத்துக்கொண்டு உதங்கரைப் பார்த்து “தாகத்தால் வருந்துகிறீர் போலும்! உம்மைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஜலம் பெற்றுக் கொள்ளும்” என்று தோற் பையின் மூங்கிற் குழாயை நீட்டினான். 

புலையனையும் அவன் குடி தண்ணீர்ப் பையையும் நாய்களை யும் பார்த்து உதங்கர் மிக்க அருவருப்படைந்து “வேண்டாம்!” என்றார். 

“கண்ணனை மனத்தில் எண்ணி இதுவா உன் வரம்?” என்று நொந்து கொண்டார். புலையன் ஜலத்தைப் பெற்றுக்கொள்ளும் படி தோற் பையைக் காட்டி உதங்கரைப் பல முறை வற்புறுத்தி னான். 

அவர் கோபம் வர வர அதிகரித்து மறுத்து விட்டார். அதன் மேல் புலையன் நாய்களுடன் மறைந்தான். . 


புலையன் இவ்வாறு அந்தர்த்தானமானதைக் கண்டு உதங்கர் யோசிக்கிலானார். இது யார்? இதுபுலையனல்ல. பரீட்சையாகவே இருக்க வேண்டும். பிழை செய்தேன். என்னுடைய ஞானம் என்ன பயன் தந்தது? புலையன் கொடுக்க வந்த ஜலத்தை நான் ஏன் மறுத்தேன்?” என்று வருந்தினார். 

கொஞ்ச நேரங் கழித்துச் சங்கும் சக்கரமும் ஏந்திக்கொண்டு பகவான் மாதவன் உதங்கர் முன் நின்றார். 

“புருஷோத்தமா! நீ என்னை இவ்வாறு பரீட்சை செய்ய லாமா? புலையனுடைய தோற் பையிலுள்ள அசுத்த ஜலத்தையா பிராமணராகிய எனக்குக் கொடுக்கச் செய்வது? இது தருமமா? என்று உதங்கர் வருத்தத்துடன் பகவானைக் கேட்டார். 

ஜனார்த்தனன் சிரித்து “ஓய்! உதங்கரே! உமக்காக நான் இந்திரனிடம் சொல்லி அமிர்தத்தை எடுத்துப் போகச் சொன்னேன்.  அவன் மானிடனுக்குச் சாகா மருந்து கொடுக்க இயலாது. வேறு ஏதேனும் செய்யலாமே?’ என்றான். நான் அவனை வற்புறுத் தினதில் அவன் ஒப்புக்கொண்டு “சரி அப்படியே செய்கிறேன். ஜல ரூபமாக அமிர்தபானத்தை எடுத்துச் சென்று உதங்கருக்குத் தருவேன்.ஆனால் நான் சண்டாள வேஷத்தில் போவேன். ஒப்புக் கொண்டால் சரி!'” என்றான். நீர் ஞானியாயிற்றே. புலையனுடைய வேஷத்தைக் கண்டு வெறுக்க மாட்டீர் என்று நான் நம்பி அவ் வாறே செய்யச் சொன்னேன். நீர் இவ்விதம் நடந்து கொண்டதால் நான் தோற்றேன்!” என்றான். 

அமிர்தத்தை இழந்த உதங்கர் வெட்கத்தில் ஆழ்ந்தார். 

படி மாவு 

யுத்தம் முடிந்த பின் முடி சூட்டப்பட்ட யுதிஷ்டிரன் ஒரு அசுவமேத யாகம் செய்தான். பாரத நாட்டு மன்னர்களெல்லாம் வந்து கூடியிருந்தார்கள். யாகம் வெகு சிறப்பாக நடந்தது. எட்டு திசைகளிலும் பறை அறையச் செய்து அழைக்கப்பட்டு வந்திருந்த பிராமணர்களும் ஏழைகளும் திக்கற்றவர்களும் தானங்கள் பெற் றார்கள். சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி எல்லா விதத்திலும் சிறப்பாக யாகம் நடத்தப்பட்டது. 

அந்தச் சமயத்தில் எங்கிருந்தோ ஒரு கீரிப் பிள்ளை திடீர் என் று யாகசாலைக்குள் பிரவேசித்துச் சபை நடுவில் தைரியமாக எல் லோரையும் பார்த்துப் பெரிய சிரிப்புச் சிரித்தது. மனிதனைப் போல் ஒரு பிராணி சிரிப்பதைப் பார்த்து இதென்ன நம்முடைய யாகத்ை தைக் கெடுக்க வந்த பேயோ பிசாசோ என்று யாக காரியங்களை முடித்து விட்டு உட்கார்ந்திருந்த ரித் துவிக்குகள் திடுக்கிட்டார்கள். 

கீரிப்பிள்ளையின் உடம்பு ஒரு பக்கம் முழுதும் பொன் மாகப் பிரகாசித்தது. நானா தேசங்களிலிருந்து வந்து சபையில் கூடியிருந்த அரசர்களையும் படித்த பிராமணர்களையும் நோக்கி அந்த அற்புதக் கீரிப்பிள்ளை பேச ஆரம்பித்தது. 

“மன்னர்களே! உங்களுடைய யாகம் ரொம்பச் சிறப்பாக நடந்ததாக நீங்கள் எண்ணுகிறீர்கள். ஒரு காலத்தில் குருக்ஷேத்தி ரத்தில் வசித்து வந்த ஒரு ஏழைப் பிராமணர் ஒரு படி மாவு தானம் செய்தார். அவர் செய்த அந்தத் தானத்திற்கு உங்கள் அசுவமேதமும் அதில் செய்யப்பட்ட எல்லாத் தானங்களும் சேர்த்துச் சமமாகாது. உங்கள் யாகத்தைப் பற்றி ஏன் வீண் பெருமைப் படுகிறீர்கள் ?'” என்று சொல்லிற்று. 

இவ்வாறு கீரிப்பிள்ளை சொன்னதைக் கேட்டுச் சபையோர்கள் வியப்படைந்தார்கள். யாகம் செய்த பிராமணர்கள் அந்தக் கீரியண்டை போய் சாதுக்கள் கூடியிருக்கும் யாகத்திற்கு நீ எங்கிருந்து வந்தாய்? ‘நீ யார்? ஏன் எங்களுடைய யாகத்தை வாறு நிந்திக்கிறாய்? சாஸ்திரம் தவறாமல் சகல சாமக்கிரியைகளும் சேர்த்துக் கிரமமாக நடத்தப்பட்ட இந்தப் பெரிய அசுவமேத யாகத்தை நீ குறை கூறுவது சரியல்ல. யாகத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் தக்க முறையில் பூஜிக்கப்பட்டார்கள். எல்லாரும் திருப்தியடையுமளவு தானங்கள் கொடுக்கப்பட்டன. மந்திரங்களும் ஓதப்பட்டு அவிகளும் அக்கினியில் விடப்பட்டன. நான்கு வருணத்தார்களும் சந்தோஷமடைந்திருக்கிறார்கள். நீ ஏன் இவ் விதம் சொல்லுகிறாய்? எங்களுக்கு விஷயம் விளக்க வேண்டும். என்று சொன்னார்கள். 

இதைக் கேட்டு அந்தக் கீரி மறுபடியும் சிரித்துச் சொன்னதாவது:- 

“பிராமணர்களே, நான் சொன்ன வார்த்தை பொய்யல்ல. உங்கள் பேரிலாவது யுதிஷ்டிர மகாராஜன் பேரிலாவது எனக்கு அசூயை இல்லை. மிகவும் சிறப்பாகச் செய்யப்பட்ட இந்த யாகம் உண்மையில் நான் பார்த்த ஏழைப் பிராமணரின் தானத்துக்குச் சமமாகாது. குருக்ஷேத்திரத்தில் வசித்த அந்தப் பிராமணர் தான் சிறந்த கொடையாளியாவார். அதன்பயனாக அவர் உடனே பத்தினி மகள் மருமகன் எல்லோருடனும் சுவர்க்கம் ஏறிச் சென்றார். நான் பார்த்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன் கேளுங்கள்.” 

“உங்கள் யுத்தம் நடப்பதற்கு முன் குருக்ஷேத்திரத்தில் ஒரு பிராமணர் உஞ்ச விருத்தி ஜீவனம் நடத்தி வந்தார். அதாவது கீழே உ தீர்ந்து கிடக்கும் தானியத்தைப் பொறுக்கி அவரும் அவர் மனைவி, மகன் மருமகள் ஆகிய நால்வரும் தினசரி ஆகாரத்தை அடைந்து வந்தார்கள். ஒவ்வொரு நாளும் பகலின் ஆறாவது பாசு த்தில் அதாவது பிற்பகல் ஒன்றரை மணிக்கு கு மேல் ஒரு வேளை உணவு எல்லோருமாகக்கூட உட்கார்ந்து சாப்பிடுவார்கள். ஒவ் வொரு நாள் போ திய தானியம் கிடைக்காது. அப்படி நேர்ந்தால் உபவாசமிருந்து அடுத்த நாள் ஆறாவது காலத்தில்தான் சாப்பிடு வார்கள். ஒருநாள் கிடைத்ததை மறு நாள் வைத்துக்கொள்ள மாட்டார்கள். இது அவருடைய விரதமாக இருந்து வந்தது. 

இவ்வாறு விரத வாழ்க்கை இவர்கள் நடத்தி வந்தபோது ஒரு காலத்தில் மழையில்லாமல் நா ட் .டி ல் கடும் பஞ்சம் நேரிட் டது. எங்கும் ஜனங்கள் உணவின்றிக் கஷ்டப்பட்டார்கள். மழையில்லாமல் விவசாயம் விளைவு எதுவுமில்லாமல் சாப்பாட்டிற்கு வேண்டிய தானியம் வயல்களில் சிந்திக் கிடக்கவில்லை. பலநாட்கள் அவர் குடும்பமும் பட்டினியாக இருக்க நேரிட்டது. ஒரு நாள் வெயிலிலும் பசியிலும் அலைந்து கஷ்டப்பட்டு ஒரு படி சோளம் சம்பாதித்து வீடு வந்து சேர்ந்தார் கள். அந்த ஒரு படி சோளத்தை மாவாக அரைத்து ஜபம் முதலி யன் விதிப்படி செய் து மாவை நாலு சமபாகமாகப் பிரித்துக் கொண்டு பகவானை நினைத்து மகிழ்ச்சியுடன் சாப்பிட உட்கார்ந்தார்கள். 

அந்தச் சமயத்தில் ஒரு பிராமணர் பசியோடு அங்கு வந்து சேர்ந்தார். அதிதி ஒருவர் வந்தாரே என்று எழுந்து அவரை நமஸ் கரித்து உபசரித்து உட்காரச் சொன்னார்கள். களங்கமற்ற பரிசுத்த மனப்பான்மை படை த்த அந்தப் பிராமணருக்கும் அவரு டைய மனைவி மகன் மருமகளுக்கும் அதிதியை உபசரிக்கப் பெற் றோமே என்று மகிழ்ச்சி பொங்கிற்று. வந்தவரைப் பார்த்து “பிரா மண சிரேஷ்டரே, நான் ஏழை. இதை நீர் பெற்றுக்கொள்ளவேண் டும். உமக்கு மங்களம் ஆகுக” என்று சொல்லிப் பிராமணர் தன் னுடைய பங்கு காற்படி மாவை அவருக்குக் கொடுக்க அதிதியான வர் அந்த மாவைப் புசித்தார். 

ஆனால் அவருக்குப் பசி தீரவில்லை. கொடுத்த மாவைச் சாப் பிட்டு டுத் திருப்தியடையாத பசிப் பார்வையுடன் பார்த்தார். என்ன செய்வது என்று சிந்தித்துக்கொண்டிருப்பதை மனைவி பார் த்துச் சொன்னாள்: 

“என்னுடைய பாகத்தையும் இவருக்குக் கொடும். இவர் திருப்தியடைந்தால் எனக்குப் போதும்”. 

இவ்வாறு சொல்லித் தன் பங்கு மாவையும் புருஷனிடம் கொடுத்து அதிதிக்குச் கொடுக்கச் சொன்னாள். 

“பதிவிரதையே! விலங்கு புழு பூச்சிகளுங் கூடத் தம் இனத் தில் பெண்களைக் கவனத்துடன் போஷிக்கின்றன. நீ சொல்லு வது சரியல்ல. உன்னால் பணிவிடை செய்யப்பட்டு இல்லறம் நடத்தும் நான் உன்னை ரட்சிக்காமல் பசியால் தவிக்க விட்டால் எனக்கு என்ன நலன் உண்டாகும்? அன்புக்குரியவளே’ எலும்பும் தோலு மாகப் பசியில் நீ வாடிக்கொண்டிருக்க உன்னைப் பட்டினி போட்டு நான் அதிதி பூஜை செய்வதில் என்ன பயன் உண்டாகும்?” என்று பிராமணர் சொன்னதை மனைவி மறுத்தாள். 

“பிராமணரே! தருமமும் பொருளும் எல்லாப் புருஷார்த்த மும் நம்மிருவருக்கும் பொதுவல்லவா? கிருபை செயது என்னு டைய கால் பங்கு மாவையும் பெற்றுக்கொண்டு அதிதிக்குக் கொடுப்பீராக. என்னைப் போலவே நீரும் பசியால் பீடிக்கப்பட்டு வருகிறீர்.நான் சொன்னதை மறுக்க வேண்டாம்” என்று மனைவி வற்புறுத்தினாள். 

பிறகு அவரும் ஒப்புக்கொண்டு அந்த மாவையும் அதிதிக்குக் கொடுத்தார். அவர் அதைப் பெற்றுக்கொண்டு புசித்தார் ஆனால் இன்னும் பசி தீராமலே இருந்தார். உஞ்ச விருத்திப் பிராமணர் மிகுந்த மனக்கவலைப்பட்டார். 

பிராமணருடைய மகன். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ‘தகப்பனாரே! என் பங்கையும் அதிதிக்குக் கொடுத்துத் திருப்தி செய்யும்” என்றான். 

தகப்பன் இதைக் கேட்டு வருத்தமுற்று “குழந்தாய், வயது முதிர்ந்தவர்கள் பசியைப் பொறுத்துக் கொள்ள முடியும். பாலர்க ளுடைய பசி தீவிரமானது. உன்னுடைய பங்கை வாங்கிக்கொள்ள எனக்கு மனம் வரவில்லை. என்றார். 

குமாரன் கேட்கவில்லை. வயது முதிர்ந்த பிதாவைக் காப் பிதா வேறு புத்திரன் வேறு பாற்றுவது புத்திரனுடைய கடமை. அல்ல. பிதாவே புத்திரனாக உண்டாகிறானல்லவா? என் பங்குமாவு உம்முடையதே. நான் கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு பசி தீராத அதிதியைத் திருப்தி செய்யவும்” என்று வேண்டிக்கொண்டான். 

“குழந்தாய், சீலத்திலும் இந்திரிய அடக்கத்திலும் எல்லா விதத்திலும் நான் உன்னைக் கண்டு பெருமைப்படத் தக்க வனாக இருக்கிறாய். உனக்கு எல்லா நலனும் ஆகுக. உன்னுடைய மாவைப் பெற்றுக் கொள்கிறேன்” என்று சந்தோஷத்துடன் பெற்றுக்கொண்டு அதையும் அதிதிக்குக் கொடுத்தார். 

அதிதி மூன்றாவது பாகத்தையும் பெற்றுக்கொண்டு அதையும் சாப்பிட்டார். இன்னும் திருப்தியாகாமலிருந்தார். உஞ்ச விருத்திப் பிராமணர் வெட்கப்பட்டார். இன்னது செய்வது என்று தெரியாமல் ஏங்கி நிற்கும் மாமனாரைப் பார்த்துப் பக்கத்திலிருந்த மருமகள் “சுவாமி, என் பங்கையும் சந்தோஷமாகவே கொடுக் கிறேன். ஒப்புக்கொண்டு அதை அதிதிக்குக் கொடுக்கவேண் டும். உம்முடைய ஆசீர்வாதத்தால் எனக்கு அக்ஷயமான நலன் உண்டாகும்” என்று சொன்னாள். 

இதைக் கேட்டு மாமனார் “ஒழுக்கம் தவறாதவளே! நிறம் பசியால் பீடிக்க மாறி இளைத்துப் போயிருக்கும் உன்னைப் விட்டு விட்டு உன்னுடைய பங்கு மாவையும் நான் வாங்கி அதிதி க்குக் கொடுத்தால் நான் தருமத்தை அழிப்பானாவேன் சிறுமியாகிய நீ பசியால் தவிப்பதை நான் எவ்வாறு பார்த்துச் சகிப்பேன்” என்று மறுதளித்தார். 

அவள் விடவில்லை. சுவாமி! நீர் எனக்குப் பிரபுவின் பிரபு. குருவின் குரு. தெய்வத்தின் தெய்வம். என் மாவைப் பெறறுக் கொள்ள வேண்டும். இந்தச் சரீரம் குருநாதனின் பணிவிடைக்காக த்தானே இருக்கிறது? நீர் என்னை நல்ல கதி அடையச் செய்ய வேண்டும். என்னுடைய மாவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று பலவாறாக வற்புறுத்தினாள். 

பிராமணர் பெண்ணே, பதிவிரதையே! நீ எல்லா பாக்கிய மும் அடைவாயாக!’ என்று ஆசீர்வதித்து அவளுடைய மாவையும் பெற்றுக்கொண்டு அதிதிக்குக் கொடுத்தார். 

அதை வாங்கிச் சாப்பிட்டதும் அதிதியாக வந்த பிராமணர் சந்தோஷமடைந்தார். “பரிசுத்தமானதும் சக்திக்குத் தக்கவாறு கொடுக்கப்பட்டதுமான உம்முடைய தானத்தால் மிகவும் திருப்தி அடைந்தேன். உங்களுடைய தானம் அற்புதமான தானம்,தேவர் கள் பூமாரி பொழிகிறார்கள். அதோ! தேவரிஷிகளும் தேவர்களும் கந்தவர்களும் உம்மைத் தரிசிக்கப் பரிஜனங்களோடு விமானங் களில் வந்து நிற்கிறார்கள். நீரும் உம்முடைய மனைவியும் மகனும் மருமகளும் சுவர்க்கலோகம் போவீர்கள். நீர் செய்த தான தினால் உம்முடைய முன்னோர்களுக்காகவும் நீர் சுவர்க்கம் சம்பா த்தவரானீர்.சாதரணமாகப் பசியானது அறிவை அழிக்கும். தரும சிந்தனையைக் கெடுக்கும். ஞானவான்கூடப் பசியினால் உறுதி யை இழப்பான். மனைவி மகனிடத்திலுள்ள அன்பையும் பாராமல் தருமத்தையே பெரியதாக நீர் எண்ணினீர். அநேக ராஜசூயங்களும் அசுவமேதங்களும் உம்முடைய இந்த ஒரு தானத்துக்குச் சம மாகா! காத்திருக்கும் திவ்ய விமானத்தில் ஏறுங்கள். சுவர்க்கம் செல்லுங்கள்!’ என்று சொல்லி மறைந்தார். 

இவ்வாறு உஞ்ச விருத்திப் பிராமணருடைய கதையைச் சொல்லிக் கீரி மீண்டும் சொன்னதாவது: அந்தப் பிராமண ருடைய சோளமாவின் மணத்தால் கிட்ட இருந்த என்னுடைய தலை சுவர்ணமயமாகி விட்டது. பிறகு மாவு பரிமாறின இடத்தில் போய் நான் புரண்டேன். சிந்திக்கிடந்த மாத் தூள்கள் பட்டு என் உடலில் ஒரு பாதி தங்கமயமாயிற்று. பாதி உடல் சுவர்ணமயமாயிற்றே என்று நான் மற்றொரு பாதியும் அவ்வாறே ஆகவேண்டுமென்று ஆசைப்பட்டுப் பல தபோவனங்களுக்கும் யாகம் செய்யும் இடங்களுக்கும் போய்ப் பார்த்துவருகிறேன். புகழ்பெற்ற தருமபுத்திரர் யாகம் செய்கிறார் என்று கேள்விப்பட்டு இங்கேயும் வந்தேன். ஆயினும் நான் சுவர்ணமயமாகச் செய்யப்படவில்லை. அதனால்தான் இந்த யாகம் ஒரு படிமாவுக் குச் சமமில்லை என்றேன். 

இவ்வாறு சொல்லிவிட்டுக் கீரி மறைந்தது. 

ராஜ்யபாரம் 

மனிதனுக்கு ஒரு பொருள் கிடைககும் வரையில் அதைப்பற்றி மோகம். தேடிய பொருள் கிட்டியதும் அதன்மேல் வைத்தி ஆசை கரைந்து போய்ப் புதுத் துயரங்களும் சங்கடங்களும் மன த னைப் பீடிக்கும். போர் புரிவதும் பகைவனைக் கொல்லுவதும் க்ஷத்தி ரிய தருமமாக இருந்தாலும் சகோதரர்களைக் கொன்று சம்பாதித் பதவியும் செல்வமும் என்ன சுகத்தை தரும்? இதைத்தான் அருச்சுனன் கண்ணனிடம் யுத்தம் ஆரம்பிக்கும் தருவாயில் முறையிட்டது. அதற்குச் சமாதானமாகக் கண்ணன் கருமத்தைப் பற்றியும் கடமையைப் பற்றியும் உபதேசம் செய்தான். 

ஆயி னும் அருச்சுனன் சொன்னதிலும் பெரிய உண்மை இல்லாம்லில்லை. 

பாண்டவர்கள் கௌரவர்களை ஜெயித்துவிட்டு, சம்பூர்ண ராஜ்ய பதவி அடைந்தார்கள். பி பிறகு கடமையை உத்தேசித்து ராஜ்ய பாரம் வகித்து நடத்தினார்கள். ஆனாலும் எதிர்பார்த்த சந்தோஷம் அடையவில்லை. 

“வெற்றி பெற்று ராஜ்யாதிபத்யம் அடைந்த பாண்டவர் கள் திருதராஷ்டிரனை எவ்விதம் நடத்தினார்கள்? என்று ஜனமே ஜயர் கேட்க வைசம்பாயனர் கதையைச் சொல்லுகிறார். 

துக்க சாகரத்தில் மூழ்கிய திருதராஷ்டிரனிடம் எல்லாவிதத் திலும் கவுரவம் காட்டியே பாண்டவர்கள் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்கள். எல்லாக் காரியங்களையும் திருதராஷ்டிரனி டம் தெரிவித்து அவனுடைய அனுமதி பெற்றே பாண்டவர்கள் யுதிஷ்டிரன் தலைமையில் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்கள். பெற்ற நூறுமக்களையும் கனவில் பெற்ற தனத்தைப்போல இழந்த காந்தாரியைக் குந்தி தேவி மிகவும் அன்போடும் பக்தியோடும் பார்த்துவந்தாள். திரௌபதியானவள் அவர்களிருவரையும் சம மாகவே பாவித்துப் பணிவிடை செய்து வினயமாக நடந்து கொண்டாள். 

திருதராஷ்டிரனுடைய மாளிகையில் அவனுக்காகச் சிறந்த சயனாசனங்களையும் ஆடையாபரணங்களையும் யுதிஷ்டிரன் அமைத் அவனு குப் பலவிதமான பட்சணங்களையும் ஆகாரங்களை யும் செய்து அனுப்பி வந்தான். கிருபாச்சாரியர், திருதராஷ்டிர னுடன் வசித்துவந்தார். வியாசர் அவனுக்கு ஆறுதல் கொடுக்கக் கூடிய கதைகளைச் சொல்லிக்கொண்டு வந்தார். அரசியல் விவகா ரங்களை யுதிஷ்டிரன் திருதராஷ்டிரனை அவ்வப்போது கேட்டு அவனு டைய அனுமதியின் மேல் செய்வது போலவே செய்து வந்தான். ராஜாவான தருமபுத்திரன் திருதராஷ்டிரனுக்கு வருத்தம் உண் டாக்கக் கூடியபேச்சு ஏதும் பேசாமல் ஜாக்கிரதையாக இருந்தான். பல தேசங்களிலிருந்து வரும் மன்னர்கள் கௌரவ சிரேஷ்ட திருதராஷ்டிரனை முன்போல மகாராஜனாகவே உபசரித்தனர். ஸ்திரீகள் காந்தாரிக்குப் பணிவிடை செய்வதில் ஒரு குறையும் இல் லாமல் பார்த்து வந்தார்கள். யுதிஷ்டிரன் “புத்திரர்களை இழந்த இவர் ஒரு சிறிதும் துயரப்படாமலிருக்க வேண்டும்” என்று தன் சகோதரர்களுக்கு உத்தரவிட்டிருந்தான். பீமனைத்தவிர மற்றவர் கள் அவ்வாறே செய்துவந்தனர். திருதராஷ்டிரன் பாண்டவர்க ளால் நன்கு பூசிக்கப்பட்டுத் தன்புத்திரர்கள் ஜீவித்திருந்தால் எவ் வளவு சுகம் கிடைக்குமோ அவ்வளவு சுகத்தையும் போகங்களையும் அடைந்தான். திருதராஷ்டிரனும் பாண்டவர்களை அன்போடே பார்த்து வந்தான். அவர்களிடம் அப்பிரியம் காணவில்லை,காட்ட வுமில்லை. 

இவ்வாறு பாண்டவர்கள் திருதராஷ்டிரனை நன்றாகவே நடத்தி வந்தார்கள். ஆனால் பீமன் மட்டும் அப்பிரியமான காரியங் ளைச் சில சமயம் செய்வான். சில நாட்கள் கழிந்த பிறகு ரகசியமாக ஆட்களைக்கொண்டு திருதராஷ்டிரனுடைய கட்டளைகளை நடக்க வொட்டாமல் செய்ய ஆரம்பித்தான் மந்த புத்தியைப் படைத்த துரியோதனாதிகள் கொல்லப்பட்டனர்” என்று திருதராஷ்டிரன் காதில் விழும்படி சொல்வான். துரியோதனன், கர்ணன், துச்சாத னன், இவர்களுடைய செயலை எண்ணி எண்ணித் தன் கோபத்தை மறக்கவோ அடக்கவோ அவனால் முடியவில்லை. சில சமயம் திருத ராஷ்டிரனுக்கும் காந்தாரிக்கும் கேட்கும்படியாகக் கூடக் கடுமை யான வார்த்தைகளைச் சொல்லுவான். 

பீமனுடைய வார்த்தைகளும் சில்லறைக் காரியங்களும் திருதராஷ்டிரன் மனத்தைக் குத்தும். இதைக் கண்டு காந்தாரியும் வருத்தப்பட்டாள். ஆனால் அவள் மகா விவேசுசாலி. தர்மம் அறிந்தவள். பீமன் சொல்லும் அப்பிரிய வசனங்களைக் கேட்கும் போதெல்லாம் தருமமே வடிவம் கொண்டது போல் விளங்கும் குந்தியைப் பார்த்து மனத்தில் சாந்தம் அடைவாள். 

இவ்வாறு பதினைந்து வருடங்கள் கடந்தன, 

திருதராஷ்டிரன் 

விருத்தனான திருதராஷ்டிரன் பீமனுடைய வார்த்தைகளால் பீடிக்கப்பட்டு யுதிஷ்டிரன் உத்திரவுப்படி அமைக்கப்பட்டு வந்த சுகங்களில் மனம் செலுத்த அவனால் முடியாமல் போயிற்று. பாண்டவர்களுக்குத் தெரியாமல் கடும் விரதங்களை அனுஷ்டித்தான்.  சாப்பாட்டைக் குறைத்தும் வேறு விதங்களிலும் உடலை வருத்திக்கொண்டு வந்தான். காந்தாரியும் அவ்விதமே செய் தாள். பிறகு ஒரு நாள் தர்புத்திரரை அழைத்து அவரிடம் திருத ராஷ்டிரன் இவ்வாறு சொன்னான்:- 

“பிள்ளாய்! உனக்கு க்ஷேம முண்டாகுக! நான் உன்னால் நன்கு பாலிக்கப்பட்டு சுகமாகப் பதினைந்து வருஷம் உன் வீட்டில் வசித்தேன். தானங்களைக் கொடுத்தேன். சிராத்தத்தை யும் செய்தேன். புத்திரர்களை இழந்த காந்தாரியும் மனத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டு தன் துக்கத்தை மறந்து என்னைக் கவனி த்து வந்தாள். துரௌபதிக்குப் பெரிய அபகாரம் செய்தவர்களு உன் பிதுரார்ஜிதத்தைக் கவர்ந்தவர்களுமான என்னுடைய கொடிய மக்கள் அவர்களுடைய அதர்மத்தினால் மாண்டார்கள். அவர்கள் யுத்தத்தில் புறங்காட்டாமல் கொல்லப்பட்டு வீர சுவர்க்கம் அடைந்திருக்கிறார்கள். நானும் காந்தாரியும் மறுமை க்கு வேண்டிய கடமைகளை இனிச் செய்து கொள்ள வேண்டும். உனக்கு சாஸ்திரம் தெரியுமே. கிழிந்த துணிகளும் மரப்பட்டை களும் தரித்து நான் வனம் செல்ல வேண்டும். உனக்கு நலன் வேண்டிக்கொண்டு நான் வனத்தில் வசிக்க விரும்புகிறேன். இதற்கு நீ அனுமதி கொடுக்க வேண்டும். நம்முடைய குலத்தின் வழக்கத்தை நான் அனுசரிக்க வேண்டும். அரசனாகிய நீயும் என் தவத்தின் பயனில் ஒரு பகுதியை அடைவாய்” என்றான். 

இதைக்கேட்டு யுதிஷ்டிரன் “நீர் இவ்வாறு உபவாசமிருந்து தரையில் படுத்துத் தேகத்தை வருத்தி வந்ததை நானும் என் சகோதரர்களும் அறியவில்லை. நீர் சுகமாக இருப்பதாகவே நான் வஞ்சிக்கப்பட்டேன். என்னுடைய பிதாவான நீர் ஆறாத துக்க த்தை அடைந்தீர். எனக்கு ராஜ்யத்தாலும் போகங்களாலும் என்ன பயன்? நான் மிகக் கெட்டவன். ஆகையினால் நான் தவறு செய்தேன். உம்முடைய புத்திரன் யுயுத்ஸுராஜவாக இருக்கட் டும். அல்லது வேறு யாரை நீர் விரும்புகிறீரோ அவன் ராஜவாக இருக்கட்டும். அல்லது நீரே ராஜாவாக இருந்து இந்த தேசத்தைப் பரிபாலனம் செய்யும். நான் வனம் செல்லுகிறேன். நான் இது வரையில் அடைந்த அபகீர்த்தி போதும். நீர் மறுபடியும் என்னை அபவாதத்தில் போட்டு எரிக்க வேண்டாம். நான் ராஜா அல்ல. நீர் அல்லவோ ராஜா. நான் உமக்கு எப்படி அனுமதி தர முடியும்? துரியோதனன் விஷயத்தில் இப்போது எனக்கு ஒரு கோபமுமில்லை. விதி வசத்தால் நாம் எல்லோரும் மதி மயக்கமடைந்து சம்பவம் நடைபெற்று விட்டது. துரியோதனாதிகளைப் போலவே நாங்களும் உமக்குப் புத்திரர்கள். காந்தாரியும் குந்தியும் இருவருமே எனக்கு சமமான அன்னைகள். நீர் வனம் சென்றால் நான் கூடவே வருவேன். நீர் காட்டுக்குப் போய் விட்டு உம்மைப் பிரிந்த எனக்கு இந்த அரச பதவி என்ன சுகம் உண்டு பண்ணும்? உம்மைத் தலை வணங் கிப் பிரார்த்திக்கிறேன். உம்முடைய மனத்திலுள்ள வருத்தம் விலக வேண்டும். நான் சந்தோஷமாக உமக்குப் பணிவிடை செய்து உள்ளத்தில் சாந்தி பெறுவேன்” என்றான், 

திருதராஷ்டிரன் “குந்தி நந்தனா! என்னுடைய மனமானது வனம் போய்த் தவம் செய்வதில் பற்றுக் கொண்டு விட்டது. நான் உன் வீட்டில் பல வருஷங்கள் வாசம் செய்தேன். நீயும் உன் னைச்சேர்ந்த எல்லாரும் எனக்கு நன்றாய்ப் பணிவிடை செய்தீர்கள். இப்போது எனக்கு வனம் செல்ல அனுமதி கொடுக்க வேண்டும். என்றான். 

இவ்வாறு திருதராஷ்டிரன் நடுங்கிக் கொண்டும் அஞ்சலி செய்து கொண்டும் நின்ற தர்மராஜனுக்குச் சொல்லி விட்டு, விதுர னையும் கிருபாசாரியரையும் நோக்கி “நீங்கள் அரசனுக்குச் சமா தானம் சொல்லி எனக்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும். எனக்கு வாய் உலருகிறது. வயதாகி விட்டதல்லவா? அதிகமாகப் பேசின சிரமமாக இருக்க வேண்டும்” என்று சொல்லி விட்டுப் பிரக்ஞையற்றுக் காந்தாரியின் மேல் சாய்ந்தான். இதைப்பார்த்து யுதிஷ்டிரன் தாங்க முடியாத துக்கமடைந்தான். யானையின் பலத் தைப் படைத்த இவர் இரும்பினால் செய்யப்பட்ட பிரதிமையைப் பொடியாகச் செய்த இந்த வீரர் இவ்வாறு மனம் நொந்து உடல் வாடித் தோலும் எலும்புமாய் விட்டாரே! பிரக்ஞை இழந்து காந் தாரி பேரில் அநாதை போல் சாய்ந்து விழுந்து கிடக்கிறாரே. இதற் கெல்லாம் காரணம் நான் அல்லவோ! தருமம் தெரியாதவனான என்னையும் என்னுடைய புத்தியையும் நான் கற்ற கல்வியையும் நிந்திக்கவேண்டும்” என்று பரிதாபப்பட்டான். 

ஜலத்தை எடுத்துத் தெளித்துத் தன் குளிர்ந்த கையினால் திருதராஷ்டிரனுடைய முகத்தைத் தடவினான். திருதராஷ்டிரனு க்கு நினைவு வந்ததும் கையினால் தன்னைக் தடவிக்கொண்டிருந்த பாண்டவனைக் கட்டி அணைத்துக்கொண்டு அப்பனே! 

உன்னுடைய ஸ்பரிசம் அமிர்தம் போல் இன்பம் தருகிறது” என்றான். அச் சமயத்தில் வியாசர் வந்தார். விஷயம் தெரிந்ததும் அவர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னார். 

“குரு குல சிரேஷ்டனான திரதராஷ்டிரன் எவ்விதம் சொல் கிறானோ, அவ்விதம் செய். முதுமை அடைந்தவனும் புத்திரர் களை இழந்தவனுமான இவன் நீண்ட காலம் இந்தக் கஷ்டத்தைச் சகிக்க மாட்டான். சிறந்த ஞானம் பெற்றவளான காந்தாரி தன் சோகத்தை மிக்க தைரியமாகப் பொறுத்து வருகிறாள். என்னு டைய வார்த்தையைக் கேள். திருதராஷ்டிரனுக்கு அனுமதி கொடு. இவன் வனத்தில் தேன்மலர்களின் வாசனைகளுக்கிடையில் கவலையற்று இருக்கட்டும். பழைய ராஜரி ஷிகளின் மார்க்கத்தைப் பின் தொடர்ந்து செல்லட்டும். ராஜாக்களுக்கு இதுதான் தர்மம், யுத்தத்தில் உயிரிழக்க வேண்டும். அல்லது வனத்தில் விதிப்படி ஆயுளை முடித்துக்கொள்ள வேண்டும். இவன் யாகங்களைச் செய் தான். பூமியை அனுபவித்தான். நீங்கள் காடு சென்றிருந்த பொழுது புத்திரனுடைய ஆதீனத்திலிருந்த விசாலமான ராஜ்ய த்தைப் பதின்மூன்று வருஷம் அனுபவித்தான். பலவிதமான தானங்கள் செய்தான். நீயும் இந்தப் பதினைந்து வருஷ காலம் இவனை நன்றாகவே ஆராதித்து வந்தாய். ஒரு குறையுமில்லை. இப் போது இவனுக்குத் தவம் புரியும் சமயம். இவன் கோபத்தினால் போகவில்லை. நீ அனுமதித்து அனுப்பு’ என்று யுதிஷ்டிரனைச் சமாதானப்படுத்தினார். 

பிறகு அப்படியே ஆகட்டும் என்று தருமராஜன் சொல்லிய பின வியாசர் தன் ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார். 

மூவர்களின் முடிவு 

வனம் போவதற்கு யுதிஷ்டிரனுடைய அனுமதி பெற்றது திருதராஷ்டிரனு ம் காந்தாரியும் தங்களுடைய மாளிகை கு சென்று உபவாசம் தீர்த்துக் கொண்டார்கள். காந்தாரியும் குந் தியும் சேர்ந்தாற் போல் உட்கார்ந்து போஜனம் செய்தார்கள். வைத்து திருதராஷ்டிரன் தன் பக்கத்தில் யுதிஷ்டிரனை உட்கார ஆசி மொழிகள் கொன்னான். அதன் மேல் காந்தாரியின் தோளின் பேரில் கை வைத்து ஊன்றிக்கொண்டு கிழவன் வனத்துக்குப் புறப்பட்டான். புருஷனுக்குக் கண்ணில்லை என்று தானு முகத்தைத் துணியால் கட்டிக்கொண்டு கண்களை உபயோகப்படுத் தாமல் விரத வாழ்க்கை நடத்திவந்த காந்தாரி குந்தியின் தோளின் மேல் தன் கையை வைத்துக்கொண்டு நடந்தாள். மூவரும் ராஜ தானியை விட் வனம் சென்றார்கள். 

காந்தாரிக்கு சுசுரூஷை செய்து தானும் வனத்திலே இருப்ப தாகக் குந்தி தன் மனத்தில் நிச்சயித்துக்கொண்டு சென்றாள். ‘மகனே! சகதேவன் போகும்போது யுதிஷ்டிரனிடம் சொன்னாள். மீது ஒரு போதும் கோபித்துக் கொள்ளாதே! யுத்தத்தில் வீர மர ணம் அடைந்த கர்ணனை எப்போதும் அன்புடன் நினைப்பாயாக. அவன் என் மகன். உங்கள் சகோதரன் என்பதை நான் உங்களுக் குச் சொல்லாமல் போனது என் குற்றம். துரௌபதியைப் பிரிய பீமனும் அருச்சுனனும் நகுலமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். னும் சகதேவனும் ஒரு போதும் துக்கப்படாமல் பார்த்துக்கொள். குலத்தின் பாரம் இனி உன்னுடையது என்றாள். 

காந்தாரியை வழியனுப்பத்தான்  குந்தி சென்றாள் என்று அது வரையில் எண்ணிக்கொண்டிருந்த தருமபுத்திரன் இதைக் கேட்டதும் ஒரு முகூர்த்த நேரம் ஒன்றும் சொல்லத் தெரியாமல் திகைத்தான். பிறகு “அன்னையே! இது வேண்டாம். எங்களை ஆசீர்வதித்து யுத்தத்துக்கு அனுப்பினாய் இப்போது எங்களை விட்டு நீ வனம்போவது தருமம் அல்ல என்று யுதிஷ்டிரன் தாயை வருந்திக் கேட்டுக் கொண்டான். ஆனால் குந்தி வனம் செல்வதாக நிச்சயித்து விட்டு உறுதியாக நின்றாள். 

“என் பர்த்தா இருக்கும் உலகத்துக்குப் போக நான் விரும்புகிறேன். காந்தாரியுடன் வனத்தில் வசித்துத் தவம் செய்து உங்கள் தகப்பனாரைச் சேருவேன். நீ திரும்பிச் செல் நகர்ரத்துக்குப் போ. உன் மனம் எப்போதும் தருமத்தில் நிலைத்து நிற்கட் டும்” என்று மகனை ஆசீர்வதித்தாள். 

யுதிஷ்டிரன் பேச்சில்லாமல் நின்றான் அவனையும் மற்றப் புத்தி ரர்களையும் திரும்பிப் திரும்பிப் பார்த்துக் கொண்டே குந்திவனம் சென்றாள். 

ஒருவர் தோள் மேல் ஒருவர் கை வைத்து ஊன்றிக் கொண்டு அந்த மூன்று விருத்தர்களும் வனம் போன சித்திரம் நேற்று நம் வீட்டில் நடந்த ஒரு சோக நிகழ்ச்சி போலி ருக்கிறது. 


மூன்று வருஷங்கள் திருதராஷ்டிரனும் காந்தாரியும் குந்தி யும் வனத்தில் கழித்தார்கள். பிறகு ஒரு நாள் திருதராஷ்டிரன் ஸ்நானம் செய்து விட்டு ஆசிரமத்துக்குச் சென்றான். அப்போது காடு தீப்பற்றிக் கொண்டது. காற்றடித்து வனம் முழுவதும் நெருப்பு பரவிற்று.மான்களும் காட்டுப் பன்றிகளும் கூட்டம் கூட்டமாக ஓடித் தடாகத்தை அடைந்தன. 

கூட இருந்த சஞ்சயனை நோக்கி ‘நீ இந்த அக்கினியினின்று ஓடித் தப்புவாயாக! என்று சொல்லி விட்டுக் கண்ணில்லாத கிழ அரசனும் கண்ணை வஸ்திரத்தால் சுட்டி மறைத்துக்கொண் டிருந்த காந்தாரியும் குந்தி தேவியும் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு யோக நிலையில் அமர்ந்து நெருப்புக்கு இரையானார்கள். 

திருதராஷ்டிரன் மறைந்ததும் அவனுக்குக் கண்ணும் உயிரு மாயிருந்த சஞ்சயன் துறவு பூண்டு இமய மலை சென்றான். 

கண்ணன் மறைந்தான் 

பாரத யுத்தம் முடிந்த பின் துவாரகையில் கிருஷ்ணன் முப்ப த்தாறு ஆண்டுகள் அரசாண்டான். கிருஷ்ணனுடைய குலத்தைச் சேர்ந்த விருஷ்ணிகள், அந்தகர்கள், போஜர்கள் என்ற பல பெயர் கொண்ட யாதவ குமாரர்கள் வரம்பு கடந்த சுகத்தில் காலங் கழி த்து வந்தார்கள். அவ்வாறு நடத்திய சுக வாழ்க்கையினால் அடக்க மும் ஒழுக்கமும் இழந்தார்கள். 

ஒரு நாள் சில ரிஷிகள் துவாரகைக்கு வந்தார்கள். அப்போது பெரியவர்களிடம் அலட்சியம் கொண்ட யாதவர்கள் ரிஷிகளைப் பரிகசிப்பதற்காகத் தங்களுக்குள் ஒருவனுக்குப் பெண் வேஷம் போட்டு முனிவர்களிடம் சென்று சாஸ்திரம் படித்தவர்களே! இந்தப் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும் சொல்லுங்கள். என்றார்கள். 

ரிஷிகள் இந்தப் பொய்யையும் பரிகாசத்தையும் கண்டு கோபம் மேலிட்டு இவனுக்கு உலக்கை பிறக்கும். அந்த உலக்கை உங்கள் குலத்துக்கு யமனாகும்’ என்று சபித்து விட்டுத் திரும்பிப் போய் விட்டார்கள். முனிவர்களின் சாபத்தைக் கேட்டு, வேடிக் தையாகச் செய்தது இப்படி ஆயிற்றே என்று யாதவர்கள் பயந் தார்கள். மறு நாள் ரிஷிகள் சொன்னபடியே ஸ்திரீ வேஷம் தரித்த சாம்பன் பிரசவ வேதனை அடைந்து ஒரு உலக்கை உண்டாயிற்று. தைக் கண்டு ரிஷிகள் சாபம் உண்மையாகவே முடியும் என்று யாதவர்கள் மிக்க மன வேதனை யடைந்தார்கள். உலக்கையை யம சொரூபமாகக் கருதினார்கள். எல்லோரும் சேர்ந்து ஆலோ சனை செய்து து உலக்கையை எடுத்துச் சுட்டுச் சாம்பலாக்கி விட்டுக் கடற்கரையில் இறைத்து விட்டார்கள். அடுத்த வருஷம் அந்தச் சாம்பலின் மேல் மழை பெய்து அந்த இடத்தில் கோரைப் புல் ஏராளமாக முளைத்தது. தங்களுடைய பயம் தீர்ந்து விட்டது என்று யாதவர்கள் சாபத்தை மறந்தார்கள். 

பிறகு ஒருநாள் யாதவர்கள் கூட்டமாகக் கடலோரம் சென்று உல்லாசமாகக் கூத்திலும் மதுபானத்திலும் காலம் கழித்தார்கள். கள்ளினுடைய வேகம் வேலை செய்ய ஆரம்பித்தது. 

யாதவ குலத்தில் கிருதவர்மன் கௌரவர்கள் பக்கத்திலும் சாத்யகி பாண்டவர்கள் பக்கத்திலும் சேர்ந்து யுத்தம் செய்தார் கள் அல்லவா? 

“எந்த க்ஷத்திரியனாவது தூங்குகின்றவர்களைக் கொல்வானா? ஓய் கிருதவர்மரே! யாதவ குலத்துக்கே ஒரு பெரிய அவமானத்தைக் கொண்டு வந்து விட்டாய்! ”என்று சாத்யகி கிருதவர்மனைப் பார் த்துப் பரிகாசம் செய்தான். போதையிலிருந்த மற்றும் பலர் இந்தப் பரிகாச வார்த்தையை ஆமோதித்தனர். கிருதவர்மனுக்குக் கடுங் கோபம் வந்து விட்டது. 

“யுத்தத்தில் கை அறுக்கப்பட்டுப் பிராயோபவேசம் செய்து யோக நிலையில் இருந்த மகான் பூரிசிரவசுவைக் கசாப்புக்காரனைப் போல் கொன்ற நீ என்னைப் பற்றி எப்படிப் பேசலாம்?” என்றான் ருதவர்மன். அதன் மேல் வேறு பலர் சாத்யகி செய்த அநாகரி எத்தை எடுத்துப் பேச ஆரம்பித்தார்கள். பிறகு எல்லா யாதவர்களும் கலகத்தில் சேர்ந்து கொண்டார்கள். சண்டை பலமாக  முற்றிக் கொண்டது. 

“தூங்கியிருந்தவர்களைக் கொன்ற பாதகன் இதோ பார்! தன் முடிவை அடை ந்தான்” என்று சொல்லி சாத்யகி கிருதவர் மன் பேரில் பாய்ந்து கத்தியால் அவன் தலையை வெட்டி வீழ்த்தி விட்டான். 

அதைக் கண்டு பலர் சாத்யகியைச் கொண்டு அங்கிருந்த பான பாத்திரங்களை அவன் மேல் எறிந்து தாக்கினார்கள். இவ்வாறு சாத்யகியைச் சூழ்ந்துகொண்டு தாக்கியவர்களைக் கிருஷ் ணன் மகன் பிரத்யும்னன் எதிர்த்துப் போராடினான். அவனைப் பலர் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். பிரத்யும்னனும் சாத்யகி யும் உயிரிழந்தார்கள். அதன் பேரில் கிருஷ்ணனுக்கும் கோபம் மேலிட்டு அவ்விடம் கடலோரத்தில் வளர்ந்து நின்ற கோரைப் புல்லைப் பிடுங்கி எடுத்து அதைக்கொண்டு எல்லாரையும் தாக்கினான். அவ்வாறே யாதவ கூட்டத்தார் எல்லோரும் கோரை புல்லைப் பிடுங்கி ஒருவரை யொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். 

உலக்கைச் சாம்பலிலிருந்து உண்டான அந்தக் கோரைப் புல் எல்லாம் ரிஷிகளுடைய சாபத்தால் பிடுங்கிய உடனே உலக்கைகளாயின. அந்த உலக்கைகளால் ஒருவரை யொருவர் அடித்துக் கொண்டு யாதவ குலம் முழுவதும் கள்வெறியில் நடந்த இந்த இழிவான கலகத்தில் மாண்டார்கள். 

இதை யெல்லாம் கண்ட பலராமன் துயரம் மேலிட்டு யோக த்தில் அமர்ந்து உயிரை நீத்தான். வெள்ளைப் பாம்பு வடிவத்தில் அவன் முகத்திலிருந்து ஜோதி புறப்பட்டுக் கடலில் மறைந்தது. பலராமனுடைய அவதாரம் முடிந்தது. 

பந்துக்கள் அனைவரும் ஒருவரும் மிஞ்சாமல் நாசமடை சகோதரனும் மறைந்ததைப் பார்த்த கிருஷ்ணன் தியானத்தில் மூழ்கினான். பிறகு தன்னந் தனியாகக் கடற்கரை வனத்தில் சஞ்சரி த்துக்கொண்டிருந்தான். நடந்ததையெல்லாம் எண்ணித் தானும் இந்த உலகை விட்டு மறையும் காலம் வந்தது என்று அறிந்து தரையில் படுத்தான். அப்படியே தூங்கிப் போனான், 

அப்போது அந்தக் காட்டில் மிருகங்களைத் தேடித் திரிந்த வேடன் ஒருவன் படுத்திருந்த வாசுதேவனைத் தூரத்திலிருந்தே பார்த்து அது மான் என்று எண்ணி வில்லை வளைத்து அம்பு எய்தான். 

அம்பு கிருஷ்ணன் உள்ளங்காலில் புகுந்து உயிரைத் தூக்கிச் சென்றது. மகோன்னதப் புகழைப் பெற்ற கிருஷ்ணன் மறைந்தான். 

பாண்டுவின் முடிவு 

பாண்டுராஜன் ஒரு நாள் காட்டில் வேட்டையாடும்போது அங்கே மான்கள் உருவம் கொண்டு ஒரு ரிஷியும் அவர் மனைவி யும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மான் என்று எண்ணிப் பாண்டு அந்த ரிஷியை அம்பு எய்து கொன்று விட்டான். அந்த ரிஷி உயிர் நீங்கும் தறுவாயில் பாண்டுவைச் சபித்து விட்டார். பாதகனே! உன் மனைவியுடன் நீ கலந்தால் தட்சணம் உனக்கு மரணம் உண்டாகும்” என்று பாண்டு மகாராஜன் ரிஷியினால் சாபம் விதிக்கப்பட்டான். இந்தத் தண்டனையைப் பெற்ற பாண்டு மனம் உடைந்து போனவனாய் பீஷ்மரிடமும் விதுரனிடமும் ராஜ்ய பரிபாலனத்தை ஒப்படைத்து விட்டுத் தன் மனைவிகளை அழைத்துக் கொண்டு வனத்திற்குப் போய் விட்டான். அங்கே பிரம்மசரிய விரதம் பூண்டு வசித்து வந்தான். 

சந்ததியில்லாமல் உயிர் நீத்துவிடக் கூடாது என்று பாண்டு ராஜனுடைய வேண்டுகோளின் மேல் குந்தியும் மாத்திரியும் துரு வாசரிஷி உபதேசித்த மந்திரத்தின்மூலமாகத் தேவர்களை வேண் டிக்கொண்டு பஞ்சபாண்டவர்களைப் பெற்றார்கள். இவர்கள் வனத்திலேயே பிறந்து வனத்திலேயே தபஸ்விகளுக்கிடையில் வளர்ந்து வந்தார்கள். மனைவிகளுடனும் புத்திரர் களுடனும் பாண்டுராஜன் பல ஆண்டுகள் வனத்தில் வசித்து வந்தான். 

ஒரு நாள் வசந்த காலத்தில் அரசனும் மாத்ரியும் வனத்தில் பூவும் கொடியும் பறவையும் பிராணிகளும் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்ததைப் பார்த்துத் தங்களுக்கு ஏற்பட்டிருந்த துய ரத்தை மறந்தார்கள். இயற்கை வேகத்தால் இழுக்கப்பட்டுப் புத்தி தடுமாறிப்போய் அவர்கள் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் மதிமயங்கிப் போய் அரசன் மாத்ரியுடன் கலந்தான். உடனே ரிஷியின் சாபத்தின்படி உயிர் நீத்தான்; 

அரசன் மரணத்திற்குத் தான் காரணமானதை நினைத்து மாத்ரி துக்கம் பொறுக்கமாட்டாமல் பாண்டுவைத் தகனம் செய்யும். காலத்தில் தானும் எரியும் சிதையில் விழுந்து மாண்டாள். 

வனத்தில் இருந்த ரிஷிகள் தீராத துக்கத்தில் மூழ்கிக் கிடந்த குந்தி தேவியையும் பாண்டவர்களையும் ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்துக் கொண்டு போய் பீஷ்மரிடம் ஒப்பித்தார்கள். அப் போது யுதிஷ்டிரனுக்கு வயது பதினாறு. 

பாண்டுராஜன் வனத்தில் உயிர் நீத்ததை ரிஷிகள் ஹஸ்தி னாபுரம் வந்து சொன்னதும் நாடு முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்தது. விதுரனும், பீஷ்மனும், வியாசரும், திருதராஷ்டிரனும் மற்றப் பந்துக்களும் முறைப்படி சிராத்தம் செய்தார்கள். நகர த்திலும் கிராமங்களிலும் ஜனங்கள் தங்களுடைய சொந்த பந்து இறந்ததைப் போல் விசனப் பட்டார்கள். 

பாட்டியார் சத்தியவதிக்கு வியாசர் சொன்னார்: “நடந்து போன காலம் சுகமாகவே முடிந்தது. வருங்காலம் மிகவும் துக் ககரமாக இருக்கப் போகிறது. பூமிக்கு யௌவனம் தீர்ந்து விட் டது. வஞ்சகமும் பலவகைப் பாபங்களும் நிறைந்த காலம் வரப் 

“ராஜ சிரேஷ்டனே! இவ்விதம் சொல்லலாகாது. சுவர்க்க த்தில் விரோதம் என்பது கிடையாது. துரியோதனனைப் பற்றி இந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம். வீரனான துரியோத னன் க்ஷத்திரிய தருமத்தின் சக்தியால் இந்தப் பதவியை அடைந் திருக்கிறான். மகனே! தீர்ந்து போன நிகழ்ச்சிகளை மனத்தில் பதிய வைத்துக்கொள்ளக் கூடாது. முறைப்படி துரியோதன ராஜாவு டன் இங்கே இரு. இங்கு விரோதங்களுக்கு டமில்லை. மானிட தே தேகத்தோடு நீ வந்திருக்கிறபடியால் இவ்வாறு உனக்குத் தவ றான எண்ணங்கள் உண்டாகின்றன. அவற்றை அகற்று!” என்று சொன்னார். 

இதைக் கேட்ட யுதிஷ்டிரன் ”பிராமணரே! தருமத்தை அறி யாதவனும் பாவியும் நல்லோர்க்குத் தீமையைச்செய்தவனும் பகை யும் கோபமும் வளரச் செய்தவனும் கணக்கிறந்த ஜனங்களை அழியச் செய்தவனுமான துரியோதனனுக்கு இந்த வீர சுவர்க்கம் கிடைத் திருக்கிறது. சூரர்களும் சீலர்களுமான என்னுடைய சகோதரர் களும் திரௌபதியும் என்ன கதி அடைந்திருக்கிறார்கள். அவர் களையும் காணனையும் இன்னும் எனக்காக உயிர் நீத்த என் நண் பர்களான ராஜாக்களையும் இங்கே காணவில்லை. நான் அவர்களைப் பார்க்க விரும்புகிறேன். விராடனையும் துருபதனுனையும் திருஷ்ட கேதுவையும் பாஞ்சால குமாரன் சிகண்டியையும் திரௌ பதியின் புத்திரர்களையும் சூரன் அபிமன் வை யு ம் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் இங்கே என் கண்ணுக்குத் தென்பட வில்லையே. என் நிமித்தம் யுத்தமாகிற பெரிய வேள்வித் தீயில் தங்கள் சரீரங்களை எரித்து மாண்ட அந்த வீரர்களை நான் இங்கே காணவில்லை. அவர்கள் எல்லோரும் எங்கே? அவர்கள் இருக்கு மிடத்தில் வசிக்க விரும்புகிறேன். என் தாய் குந்தி கர்ணனுக்கு ஜல தர்ப்பணம் செய் என்றாள். அதை நினைக்கும்போது இப்போ தும் எனக்குத் துக்கம் மேலிடுகிறது; கர்ணன் யார் என்பதை நான் அறியாமல் என்னால் சாகடிக்கப்பட்டான். அவனைப் பார்க்க வி ரு புகிறேன். எனக்கு உயிரைக் காட்டிலும் பிரியனான பீமனையும் தேவராஜனுக்கு ஒப்பான அருச்சுனனையும் நகுல சகதேவர்களையும் எப்போ போதும் தருமநெறியில் நின்றவளான பிரிய பாஞ்சாலியையும் பார்க்க விரும்புகிறேன். இந்த இடத்தில் இருக்க எனக்கு உண்மையில்  முடியவில்லை. பக்கத்தில் பிராதாக்கள் இல்லாமல் நான் சுவர்க்கத்தில் இருந்து என்ன பயன்? அவர்கள் எங்கே இருக் கிறார்களோ அதுதான் சுவர்க்கம். து. சுவர்க்கமல்ல என்பது என் கருத்து” என்று சொன்னான். 

இதைக் கேட்ட தேவர்கள் “யுதிஷ்டிரரே! உமக்கு அவர்க ளிடம் போக விருப்பமானால் தாமதிக்க வேண்டாம். போசுலாம்* என்று தேவ தூதனைப் பார்த்து யுதிஷ்டிரனை அழைத்துப் போகக் கட்டளையிட்டார்கள். 

முன்னால் தேவதூதனும் பின்னால் யுதிஷ்டிரனுமாகப் போ னார்கள். போன மார்க்கத்தில் இருள் சூழ்ந்துகொண்டது. ஓரளவு கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் பயங்கரமாக இருந்தது. 

வழியெல்லாம் மாமிசமும் உதிரமும் கல்ந்த சேறு. பிணங்க ம் எலும்புகளும் மயிரும் நாற்புறங்களிலும் கிடந்தன. எங்கும் புழுக்கள்: சகிக்க முடியாத துர் நாற்றம் வீசிற்று. கைகளும் கா களும் வெட்டப்பட்டு ஆங்காங்கு மனிதர்கள் விழுந்து கிடந்தார் கள். இதையெல்லாம் பார்த்துத் தர்மாத்வான யுதிஷ்டிரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பலவாறாக ஆலோசனை செய்துகொண்டே போனான். 

“இந்த மார்க்கத்தில் எவ்வளவு தூரம் போக வேண்டும்? என்னுடைய சகோதரர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று தேவ தூதனைப் பார்த்துக் கேட்டான். 

திரும்பிப் போக வேண்டுமானால் போகலாம்!” என்றான் தூதன். 

துர்நாற்றத்தைச் சகிக்க முடியாமல் யுதிஷ்டிரன் திரும்ப மனங் கொண்டான். அந்தச் சமயத்தில் நாற்புறமிருந்தும் தீன ஸ்வரங்கள் கிளம்பின. 

“ஓ, தருமபுத்திரரே! போய் விடவேண்டாம். எங்களை அனுக்கிரகிக்க ஒரு முகூர்த்தமாவது நில்லும். நீர் வந்தபோது நல்ல மணம் நிறைந்த புண்யமான காற்று எங்கள் பேரில் வீசிற்று. அத னால் எங்களுக்கு ஆறுதலும் சுகமுமுண்டாயிற்று. குந்தி குமாரரே! தாங்கள் உம்மைப் பார்த்துக்கொண்டிருந்தாலே கொஞ்சம் சுகம் பெறுவோம். ஒரு முகூர்த்த காலமாவது நில்லும். நீர் இருக்கும் வேளை எங்களைப் பீடிக்கும் வாதனை காஞ்சம் ஓய்கிறது என்று அந்தக் குரல்கள் அழுதன. வ்வாறு தீனவசனங்கள் நான்குபுறமும் எழுந்ததைக் கேட்ட யுதிஷ்டிரன். “ஆ! கஷ்டம்!” என்று சொல்லிக்கொண்டு நின்றான். குரல்கள் ஏதோ தெரிந்த குரல்களாகவே அவனுக்குத் தோன்றிற்று. நீங்கள் யார்? எதற்காக இங்கே இருக்கிறீர்கள்?” என்று சோகம் மேலிட்டுக் கேட்டான். 

“பிரபுவே நான் கர்ணன்!” என்றது ஒரு குரல் “நான் பீமசேனன்” என்றது மற்றொரு குரல் “நான் அருச்சுனன்” என்றது வேறொன்று. “திரௌபதி” என்றது ஒரு தீனமான சுவரம். “நான் நகுலன்” “நான் சகதேவன்” “நாங்கள் திரௌபதி புத்திரர்கள்” என்று இவ்விதம் நான்கு புறங்களிலும் குரல்கள் கிளம்பியதைக் கேட்டான். 

தாங்க முடியாத சோகத்தால் பீடிக்கப்பட்ட யுதிஷ்டிரன் இவர்கள் என்ன பாப கருமம் செய்தார்கள்? திருதராஷ்டிர புத்திரனான துரியோதனன் என்ன புண்ணியம் செய்து மகேந்திர னைப் போல் தேஜஸுடன் சுவர்க்கத்திலிருக்கிறான்? இவர்களோ நரகத்தை அடைந்திருக்கிறார்கள்? நான் தூங்குகிறேனா? விழித்துக்கொண்டிருக்கிறேனா? பிரக்ஞை இழந்தேனா? இது சித்த விகாரமா?” என்று சொல்லிக் கடுஞ் சினங் கொண்டு தேவர்களையும் தருமத்தையும் நிந்தித்தான். தேவதூதனைப் பார்த்து: 

“நீ எவர்களுடைய தூதனோ, அவர்களிடம் செல். நான் வர மாட்டேன். நான் இவ்விடத்திலேயே வசிப்பேன். என்னை அடுத் தல்லவோ என்னுடைய பிரிய சகோதரர்கள் இங்கே நரகத்தில் பீடிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். நானும் இங்கேயே இருப்பேன்” என்றான். 

யுதிஷ்டிரன் இவ்வாறு சொல்லியதும் தூதன் இந்திரனிடம் சென்று யுதிஷ்டிரன் சொன்னதைத் தெரிவித்தான். 

ஒரு முகூர்த்த காலம் கழிந்தபின் இந்திரனும் யமதேவனும் யுதி டிரன் இருந்த இடம் வந்தார்கள். அவர்கள் வந்ததும் இருள் விலகி விட்டது. பயங்கரமான காட்சிகளும் மறைந்தன. புண்ணிய வாசனையுள்ள சுகமான காற்று வீசிற்று. தரும் தேவைதையாகிய யமன் தன்னுடைய புத்திரனான யுதிஷ் டிரனைப் பார்த்து “சிறந்த மதிமானே! என்னால் நீ சோதிக் கப்பட்டது து மூன்றாவது தடவை. பிராதாக்களின் நிமித்தம் நீ நரகத்திலேயே இருக்க விரும்பினாய். அரச பதவி பெற்று உலகம் பரிபாலித்தவர்கள் எல்லோரும் அவசியம் நரகம் பார்க்க வேண்டும். ஆகையால் ஒரு முகூர்த்த காலம் உன்னாலும் இந்தப் பெரிய துக்கம் அனுபவிக்கப்பட்டது. புகழ் பெற்ற வீரன் சவ்ய சாசியாவது உன் அருமைத் தம்பி பீமனாவது சத்தியவான் கர்ணனாவது யாருமே உண்மையில் நரகத்தை அடையவில்லை. இது உன்னைச் சோதிக்கச் செய்த ஒரு மாயம். இது தேவ லோகம். இதோ பார், மூவுலகங்களிலும் செல்லும் தேவ ரிஷி நாரதர்! துக்கப்படாதே!” என்றார். 

பிறகு யுதிஷ்டிரன் மானிட தேகத்தை விட்டுத் திவ்யமான சரீரத்தைப் பெற்றான். 

அதனுடன் மனிதப் பிறப்புக்குரிய பகையும் மன வருத்தங்களும் அற்றவனாகப் பூரண பரிசுத்தம் அடைந்தான். 

தேவர்களாலும் ரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டுக் கர்ணனும் தம்பிகளும் திருதராஷ்டிர குமாரர்களும் கோபம் தீர்ந்து தெய்வ நிலை அடைந்திருப்பதை யுதிஷ்டிரன் கண்டு சாந்தி அடைந்தான. 

வியாசர் விருந்து முற்றிற்று.

ஓம்.

– வியாசர் விருந்து (மகாபாரதம்), முதல் பதிப்பு: ஜனவரி 1956, பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *