(1956ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வியாசர் விருந்து என்ற பெயரில் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியால் கல்கி இதழில் எழுதப்பட்டது. பின்னர் பாரதி பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டு அதன்பின் மகாபாரதம் என்று வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது!
ஊசிமுனை நிலமுமில்லை
சஞ்சயனைப் பாண்டவர்களிடம் அனுப்பிய திருதராஷ்டிரனு க்குக் கவலையால் அன்றிரவு நித்திரையே வரவில்லை. விதுரனை அழைத்து வரச் சொல்லி அவனோடு பேசிக்கொண்டு இரவு முழுவ தும் கழித்தான்.
“பாண்டவர்களுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து விடுவதே உபா யம். அதுவே இரு பக்கத்தாருக்கும் நன்மை பயக்கும். பாண்டவர் களையும் உம் மக்களைப் போலவே நீர் நடத்த வேண்டும். நேர்மை யே உபாயமும் தர்மமும் இரண்டுமாகும்” என்று விதுரன் திருத ராஷ்டிரனுக்குப் பலவாறாக உபதேசித்தான்.
மறு நாட் காலை சஞ்சயன் ஹஸ்தினாபுரம் திரும்பி வந்து சேர்ந்தான். யுதிஷ்டிரனுடைய சபையில் நடந்ததை எல்லாம் வி மாகச் சொன்னான். முக்கியமாக அருச்சுனன் சொன்ன துரியோதனன் கேட்க வேண்டும். கிருஷ்ணனும் நானும் சேர்ந்து துரியோதனனையும் அவனைப் பின்பற்றுபவர்களையும் நிர் மூலம் செய்யப் போகிறோம். சந்தேகமில்லை. காண்டீபம் யுத்தத் தத்துக்காகத் துடிக்கிறது. அந்த வில்லின் நாண் நான் இழுக்காமல் தானாகவே அதிர்கிறது. தூணியிலிருந்து அம்புகள் தலை நீட்டி எப்போ? எப்போ? என்று கேட்கின்றன. சஞ்சயனே! இந்தமூடன் துரியோதனன் இந்திராதி தேவர்களையும் போரில் வீழ்த்தக் கூடிய எங்களை தன் விநாச காலத்தால் தூண்டப்பட்டுச் சண்டைக்கு இழுக்கிறான். இப்படிச் சொன்னான் தனஞ்சயன்” என்றான்.
சஞ்சயன் இதைச் சொன்ன பின் பீஷ்மர் துரியோதனனுக்கு மறுபடியும் சொல்லிப் பார்த்தார்.
“அருச்சுனனும் கேசவனும் நரனும் நாராயணனும் என்று அறிவாயாக. அவர்கள் இருவரும் ஒன்று கூடி யுத்தத்தில் உன்னை எதிர்க்கும் போது அந்த உண்மையை அறிந்து கொள்ளப் போகி றாய்” என்று துரியோதனனுக்கு இவ்வாறு சொல்லி விட்டுத் திருத ராஷ்டிரனை நோக்கி ‘திரும்பத் திரும்ப ‘நான் பாண்டவர்களைக் கொல்லுவேன்’ என்று வீரம் பேசும் கர்ணன் பாண்டவர்களில் பதினாறில் ஒரு அம்சம் ஆகமாட்டான். இவன் பேச்சைக் கேட்டு உன் புத்திரர்கள் தங்களுடைய நாசத்தைத் தேடிக்கொண்டிருக்கி றார்கள். விராடனுடைய நகரத்தைத் தாக்கியபோது அருச்சுனன் நம்முடைய கர்வத்தை அடக்கினானே, அந்தக் காலத்தில் அங்கே இருந்த கர்ணனால் என்ன செய்ய முடிந்தது? கந்தர்வர்கள் உன் மகனைச் சிறைப்படுத்திக்கொண்டு போன காலத்தில், கர்ணன் இப்போது கர்ஜிக்கிறானே, அவன் அப்போது எங்கே மறைந்திருந் தான்? அருச்சுனன் அல்லவோ கந்தர்வர்களை விரட்டியது?” இவ் வாறு பீஷ்மர் குத்திக் காட்டினார்.
“குலத்துக்குத் தலைவரான பீஷ்மர் சொல்லுவதே செய்யத் தக்கது. யுத்தம் வேண்டாம். சமாதானமே உசிதம். ஆனால் நான் என்ன செய்வேன்? இந்த மூர்க்கர்கள் நான் எவ்வளவு கத்தினாலும் தாங்கள் போகும் வழியே செல்கிறார்கள். அறிவும் அனுபவமும் பெற்றவர்கள் அனைவரும் சமாதானமே செய்து முடிக்கத் தக்கது என்கிறார்கள். அப்படிச் செய்வதே என்னுடைய அபிப்ராயமும்) என்று புலம்பினான் திருதராஷ்டிரன்,
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த துரியோதனன் எழுந்தான்.
“அரசனே! எங்களுக்காக நீர் பயந்து சாக வேண்டாம். நமக்கு வேண்டிய பலத்தைத் திரட்டியாகி விட்டது. வெற்றி அடைவோம் என்பதில் சந்தேகமில்லை. யுதிஷ்டிரன் இந்திரப் பிர ஸ்தத்தைப் பற்றிய பேச்சை விட்டு விட்டு இப்போது ஐந்து கிரா மங்கள் கொடுங்கள் என்று கேட்கிறான். நம்முடைய பதினோரு அக்குரோணிச் சேனையைப் பார்த்துப் பயந்து விட்டான் என்பது உங்களுக்கு இதனால் தெரியவில்லையா? பதினோரு அக்குரோணிகளைப் பாண்டவர்கள் எவ்வாறு எதிர்ப்பார்கள்? நம்முடைய வெற்றி யைப் பற்றி உமக்கு ஏன் சந்தேகம்?” என்று தகப்பனுக்குத் தைரி யம் சொன்னான்.
திருதராஷ்டிரன்” மகனே! யுத்தம் வேண்டாம். பாதி ராஜ்ய த்தை வைத்துக்கொண்டு – திருப்தியடைவாய். அதை நன்கு அரசாண்டால் போதும்!” என்றான்.
துரியோதனனுக்குப் பொறுக்க முடியவில்லை. ஒரு ஊ முனையளவு பூமியும் பாண்டவர்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது’ என்று உறுதியாகச் சொல்லி விட்டுச் சபையை விட் வெளியேறினான். சபையும் குழப்பத்தில் கலைந்து விட்டது.
பாண்டவர்கள் பேசிக்கொண்டதைச் சொல்லுவோம்.சஞ்ச யன் உபப்பிலாவியத்தை விட்டு ஹஸ்தினாபுரத்துக்குப் புறப்பட்ட தும் யுதிஷ்டிரன் கிருஷ்ணனைப்பார்த்து “வாசுதேவனே! சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு இரண்டாவது உயிர் போன்றவன். அவன் பேசியதிலிருந்து திருதராஷ்டிரனுடைய உள்ளத்தில் இருப்பதை நன்றாக அறிந்தேன். எங்களுக்கு ராஜ்யம் ஏதும் தராமல் சமா தானம் அடையத்தான் திருதராஷ்டிரன் பார்க்கிறான். முதலில் சஞ்சயன் மிகவும் நயமாகப் பேசினான். அதைக் கேட்டு நான் அடைந்த சந்தோஷம் வீண் என்று பிறகு அவன் பேசியதிலிருந்து தெரிகிறது. இடையில் நடுத்தரமாகச் சமாதான விருப்பத்தோடு பேசினான். முடிவில் அவன் சொன்னது எனக்கு மிகவும் அநியாய மாகத் தோன்றிற்று. எங்கள் விஷயத்தில் திருதராஷ்டிரன் சத் தியமாக நடந்து கொள்ளவில்லை. சோதனைக் காலம் வந்து விட் டது. உன்னைத் தவிர எங்களைக் காப்பாற்றுபவர் வேறு யாரும் இல்லை. ஐந்து கிராமங்களே போதும் என்று சொல்லி அனுப்பி யிருக்கிறேன். துஷ்டர்கள் அதுவும் முடியாது என்கிறார்கள். இதை எப்படிப் பொறுப்பது? நீ தான் யோசனை சொல்லத் தக்க வன். உன்னைத் தவிர தருமமும் நீதியும் உபாயமும் கண்டவர் யாரும் இல்லை.
இவ்வாறு யுதிஷ்டிரன் சொன்னதைக் கேட்ட கிருஷ்ணன் “இரு பக்கத்தாருடைய நலத்தையும் உத்தேசித்து நானே ஹஸ்தி னாபுரம் போவதாகத் தீர்மானித்து விட்டேன். திருதராஷ்டிரனு டைய சபைக்குச் சென்று யுத்தமில்லாமல் உங்களுடைய உரிமை களைக் காப்பாற்ற முயற்சி செய்வேன். இது நிறைவேறினால் உலகத்துக்கு க்ஷேமமுண்டாகும்.”
யுதிஷ்டிரன் “அப்பனே! நீ போகவேண்டாம். இந்தச் சந்தர்ப் யத்தில் பகைவர்களின் கூட்டத்துக்கு நீ போவதில் என்ன பயன்? மூடனான துரியோதனன் தன் பிடிவாதத்தை விடப் போவதில்லை அந்தத் துஷ்டர்களின் மத்தியில் நீ போவது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நமக்கு எந்த நன்மை வருவதாக இருந்தாலும் உனக்கு அபாயம் நேரக்கூடிய காரியம் இப்போது வேண்டாம். அவர்கள் அதருமத்துக்கு அஞ்சுபவர்கள் அல்ல” என்றான்.
கிருஷ்ணன் “தருமபுத்திரனே! துரியோதனனுடைய குணம் எனக்குத் தெரியும்! ஆயினும் உங்கள் பேரிலு ம் என் பேரிலும் உலகத்தார் யாதொரு தோஷமும் சொல்ல இடமில்லாமல் நாம் செய்ய வேண்டிய முயற்சியைச் செய்ய வேண்டும். சமாதானத் திற்காகச் சகல முயற்சிகளும் செய்யப்படவில்லை என்று உலகத் தார் என் மேல் குற்றம் சொல்லலாம் அல்லவா? அதற்கு இ ம் கொடுக்கக் கூடாது. சமாதானம் செய்வதற்காகத் தூதனாகச் செல் லும் எனக்கு அவர்கள் ஏதேனும் தீங்குசெய்யப் பார்த்தார்களா கில் அவர்களை அப்படியே தகித்து விடுவேன். நான் போய்ப் பேசிச் சமாதானம் உண்டாகாமற் போனாலும் நம் பேரில் குற்றமில்லாத படியாவது ஆகும். போவதே நலம்; தைத் தடுக்க வேண்டாம்’ என்றான்.
யுதிஷ்டிரன் நீ சகலமும் தெரிந்தவன்.எங்களையும் அறிவாய் மற்றவர்களையும் அறிவாய். விஷயங்களை எடுத்துச் சொல்லுவதி லும் உன்னை விடச் சமர்த்தன் வேறு யார்?” என்றான்.
கிருஷ்ணன் “அஜாத சத்ருவே! உன் உள்ளத்தை நான் அறிவேன். உன் சித்தம் எப்போதும் தருமத்தைப் பற்றி நிற்கி றது. அவர்களுடைய உள்ளமோ துவேஷத்தில் மூழ்கியிருக்கி றது. சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிப் பார்ப்பேன். யுத்தமின்றி சமாதானத்தின் பேரில் பெறக் கூடியது சிறிதாயினும் நீ அதைப் பெரிதாக மதிப்பாய் என்பது எனக்கு நன்றாகத் தெரி யும். அதை நினைவில் வைத்துக்கொண்டு அவர்களிடம் நான் பேசிப் பார்க்கிறேன். உற்பாதங்களைப் பார்த்தால் போர் நடக்கும் என்றே காண்கிறது. ஆயினும் சமாதானத்திற்காக முயற்சி செய்வது கடமை”.
இவ்வாறு சொல்லி விடைபெற்றுக்கொண்டு ஹஸ்தினாபுரம் போகத் தேர் ஏறினான்
கண்ணன் தூது
சமாதானம் பேசக் கோவிந்தன் தேர் ஏறி ஹஸ்தினாபுரம் புறப்பட்டான். கூட சாத்யகியும் போனான்.
புறப்படுவதற்கு முன் கிருஷ்ணன் வெகு நேரம் பாண்டவர் களுடன் பேசிக்கொண்டிருந்தான். வீரனான பீமன் கூட குல் நாசம் வேண்டாம். சமாதானமாகப் போவதே மேலானது” என் றான். ஆற்றல் படைத்த வீரன் சமாதானத்தையே விரும்புவான். சமாதானத்தை விரும்புவது கோழைத் தனமாகாது என்பதைக் காட்டவே வியாசர் இவ்வாறு பீமனைப் பேசவைக்கிறார்.
ஆனால் திரெளபதிக்குத் தான்பட்ட அவமானத்தை மறக்க முடியவில்லை. தலை மயிரைக் கையால் பிடித்துக்கொண்டு கிருஷ் ணன் முன் நின்றாள்.
“மதுசூதனனே! இந்தக் கூந்தல் கற்றையைப் பார்த்துச் செய்ய வேண்டியதைச் செய்வாய்! அருச்சுனனும் பீமசேன்னு ம் யுத்தம் வேண்டாம் என்றாலும் என்னுடைய தகப்பனார் கிழவராயி னும் எனது ஐந்து மக்களைத் துணையாகக்கொண்டு யுத்தம் நடத் துவார். என் தகப்பனாரும் வேண்டியதில்லை. சுபத்திரையின் குமா அபிமன்யுவை முன்னிட்டுக்கொண்டு என் புத்திரர்களே கௌரவர்களை எதிர்ப்பார்கள். மூள்கின்ற கோபத் தீயை தரும் புத்திரருக்காகப் பதின்மூன்று வருஷம் என் மனத்தினுள் அடக்கி வைத்தேன். இனித் தாங்காது” என்றாள்.
கண்ணீரால் தடைபட்ட குரலில் திரௌபதி சொன்னதைக் கேட்ட வாசுதேவன் “அழ வேண்டாம்! திருதராஷ்டிர புத்திரர் கள் என் சமாதானப் பேச்சைக் கேட்கப் போவதில்லை. நாய்நரி களுக்கு இரையாக அவர்கள் அனைவரும் பூமியில் விழப் போகின்ற னர். பழி தீர்ந்து வெற்றியைப் பார்க்கப் போகிறாய். வெகு சில நாட்களே தாமதம்!” என்றான்.
திரௌபதியின் உள்ளம் திருப்தி அடைந்தது.
குசஸ்தலம் என்கிற நகரத்தண்டை மாதவன் குதிரைகளை அவிழ்த்து விட்டு அங்கே தங்கினான். கோவிந்தன் வருகிறான் என்று செய்தி வந்ததும் ஹஸ்தினாபுரம் பரபரப்பு அடைந்தது. திருதராஷ்டிரன் நகரத்தை அலங்காரம் செய்ய உத்திரவிட்டான். ஜனங்கள் ஜனார்த்தனனை எதிர்கொண்டு வரவேற்பதற்கு அநேக ஏற்பாடுகள் செய்தார்கள்.
துரியோதனனுடைய மாளிகையைக் காட்டிலும் துச்சாதன னுடைய வீடு பெரியதாகவும் அழகாகவும் இருந்தபடியால் கிருஷ்ணனும் பரிவாரமும் தங்குவதற்கு அதைத் தயாரித்து வைக்கத் திருதராஷ்டிரன் உத்திரவிட்டான். பல உபசார மண்ட பங்கள் ஊருக்கு வெளியில் கிருஷ்ணனுடைய தேர் வரும் வழியில் கட்டப்பட்டன.
விதுரனோடு திருதராஷ்டிரன் மந்திராலோசனை செய்தான். கோவிந்தனுக்குத் தேர்களும் யானைகளும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். இன்னும் பலவிதமான சம்மானங்களும் செய்ய வேண்டும்” என்று திருதராஷ்டிரன் சொன்னான்.
விதுரன் ‘கோவிந்தன் இதற்கெல்லாம் வசப்பட மாட்டான்) எதற்காக் குருதேசத்திற்குக் கேசவன் வருகிறானோ அதை உதவக் கடவீர். சமாதானத்தை விரும்பியல்லவா வருகிறான்? அதைச் செய்து கொடுப்பீராக. மாதவனுக்கு வேறு வித சன்மானங்கள் செய்து திருப்தி செய்ய முடியாது” என்றான்.
கோவிந்தன் ஹஸ்தினாபுரம் போய்ச் சேர்ந்தான். நகரத்து ஜனங்கள் அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் கூட்டமாகத் திரண்டி ருந்தபடியால் தேர் வெகு மெள்ளச் சென்றது. முதலில் திருத ராஷ்டிரனுடைய அரண்மனைக்குச் சென்றான். அவ்விடம் அளிக் கப்பட்ட பூஜையைப் பெற்றுக்கொண்டு விதுரனுடைய மாளிகைக் குப் போனான். குந்தி தேவி கிருஷ்ணனைக் கண்டதும் மக்களை நினைத்துத் துக்கம் மேலிட்டு அழுதாள்.
கிருஷ்ணன் அவளைத் தேற்றி விடை பெற்றுக்கொண்டு துரி யோதனனுடைய அண்மனைக்குச் சென்றான். துரியோதனன், கோவிந்தனை உபசரித்துத் தன் கிருகத்தில் சாப்பிட அழைத்தான்1 கண்ணன் சிரித்து “தூதர்கள் காரியம் நிறைவேறிய பிறகே புசிப் பர். நான் வந்த காரியம் நிறைவேறிய பிறகு நீ எனக்கு விருந்து அளிப்பாய்’ என்று சொல்லி விதுரனுடைய மாளிகைக்குத் ம்பிப் போய் அங்கே புசித்து இளைப்பாறினான்.
பிறகு விதுரனும் கண்ணனும் விஷயாலோசனை செய்தார்கள். பீஷ்மரும் துரோணர் முதலியோரும் தன்னை விட்டு விலக மாட் டாதவர்களாய் இருந்து வந்ததால் துரியோதனன் அவர்களுடைய துணையுடன் நிற்கும் தன்னை யாரும் ஜெயிக்க முடியது என்று கர்வம் கொண்டிருப்பதாகவும், அவ்னிடம் LOM பேச்சுப் பேசுவதில் பயனில்லை என்றும், துஷ்டருல் ய சடை கோவிந்தன் பிரவேசிப்பதே தவறு என்றும் விதுரன் சொன்னான. கண்ணனுடைய உயிருக்குத் துரியோதனாதியர்கள் ஏதேனும் வஞ்சனை செய்து அபாயம் தேடுவார்கள் என்று அவர்களுடைய குணத்தை அறிந்த எல்லோரும் சந்தேகப்பட்டார்கள்.
“நீர் சொல்லுவதெல்லாம் உண்மை. சமாதானம் செய்து விட முடியும் என்று எண்ணி நான் வரவில்லை. உலகம் பழி சொல் லாமலிருக்கவே வந்தேன். என் உயிரைப் பற்றிக் கவலை வேண் டாம்” என்றான் கண்ணன்.
மறு நாள் காலையில் துரியோதனனும் சகுனியும் “மன்னர் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்றுவந்து அழை த்ததும் கோவிந்தன் விதுரனுடன் சபைக்குச் சென்றான்.
வாசுதேவன் சபையில் பிரவேசித்ததும் அனைவரும் எழுந்து நின்றார்கள். பெரியவர்களனைவரையும் கண்ணன் நமஸ்கரித்து ஆச னத்தில் அமர்ந்தான். உபசாரங்கள் முடிந்ததும் கோவிந்தன் எழுந்து திருதராஷ்டிரனை நோக்கித் தான் வந்த காரியத்தை எடுத் துச் சொன் னா ன். பாண்டவர்களின் கோரிக்கையை விவரித்து தெரியப்படுத்தினான். “அரசனே! பிரஜைகளை நாசம் பண்ணாதீர் உமக்கு எது நன்மையோ அதைத் தீமையாகவும் எது தீமையோ அதை நன்மையாகவும் நினைக்கிறீர். புத்திரர்களை அடக்கி ஆள் வது உம்முடைய கடமை. பாண்டவர்கள் யுத்தத்திற்குத் தயாரா கவே இருக்கிறார்கள். ஆனால் சமாதானத்தை விரும்புகிறவர்கள். உமக்கு கீழ்பட்டுச் சந்தோஷமாக இருக்க விரும்புகிறார்கள். அவர்களையும் புத்திரர்களாகப் பாவித்து நீர் பாக்கியவானா வதற்கு வழி தேடவும்” என்றான்.
திருதராஷ்டிரன் சபையோர்களே! என்பேரில் குற்றமில்லை. மாதவன் சொல்வதையே நான் விரும்புகிறேன். ஆனால் நான் சக்தி இல்லாதவனாக இருக்கிறேன். துஷ்ட புத்திரர்கள் என் சொல்லைக் கேட்கவில்லை. கிருஷ்ணனே! நீயே இந்தத் துரியோதன் னுக்குச் சொல்ல வேண்டும்'” என்றான்.
கிருஷ்ணன் “துரியோதனா! மகான்களுடைய குலத்தில் பிறந்திருக்கிறாய்! தருமத்தைப் பின்பற்றி நடப்பாயாக! உன் – நிமித்தம் புகழ் பெற்ற இந்தக் குலம் அழியப் போகிறது. பாண்டவர்களே உன்னை இளவரச பதவியிலும், திருதராஷ்டிர மகாராஜ பதவியிலும் ஸ்தாபனம் செய்வார்கள். பாண்டவர்களுக்குப் பாதி ராஜ்யத்தைக் கொடுத்துச் சமாதானம் செய்துகொள்” என்றான்.
பீஷ்மரும். துரோணரும் கோவிந்தன் சொல்லைக் கேட்கும்படி துரியோதனனை மிகவும் வற்புறுத்தினார்கள். துரியோதனன் மனம் கரைந்ததாகக் காணப்படவில்லை.
“துரியோதனனுடைய’ செயல்களினால் துக்கமடைந்து வரும் காந்தாரியைப் பற்றியும் திருதராஷ்டிரனைப் பற்றியும் தான் வருந்துகிறேன்” என்றான் விதுரன்.
திருதராஷ்டிரன் மறுபடியும் மகனைக் கண்டித்து “கோவிந்தன் சொல்லைக் கேளாமற் போனால் குலத்துக்கே நாசம் உண்டாகும்” என்று சொன்னான்.
பீஷ்மரும் துரோணரும் மீண்டும் மீண்டும் துரியோதன னுக்கு நல்லுபதேசம் செய்தார்கள். சமாதானம் செய்துகொள் வதே உபாயம். யுத்தம் வேண்டாம்” என்று பலவாறு அவனுக்குச் சொல்லிப் பார்த்தார்கள்.
இவ்வாறு அனைவராலும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்பட்ட துரியோதனன் எழுந்து பேச ஆரம்பித்தான். மதுசூத னரே பாண்டவர்களிடம் உமக்குள்ள அன்பினால் என்னைப் பல வாறாக தூஷிக்கிறீர். சபையிலுள்ள அனைவரும் என்னைக் குற்றம் சொல்லுகிறார்கள். என்னிடம் இந்த விஷயத்தில் சிறிதும் குற்ற மிருப்பதாக நான் காணவில்லை. பாண்டவர்கள் பிரியத்துடன் ஆட்டத்தை ஏற்றுக்கொண்டு தோல்வியடைந்து ராஜ்யத்தை இழந்தார்கள். அதில் என்னுடைய குற்றம் என்ன? ஆட்டத்தில் தோல்வியடைந்து வனம் சென்றார்கள். எந்தக் குற்றத்தை நான் செய்ததற்காக இப்போது யுத்தம் துவக்கி எங்களைக் கொல்ல விரும்புகிறார்கள்? படைகளைச் சேர்த்துக்கொண்டு என்னைப் பய மூறுத்த முடியாது. நான் சிறுவனாக இருந்த காலத்தில் பாண்ட வர்களுக்கு உரிமையில்லாத ராஜ்யத்தை அவர்களுக்குக் கொடுத் தீர்கள். அறியாமையினாலோ பயத்தினாலேயோ குலத்தின் யோக க்ஷேமங்களைப் பார்த்து வந்த பெரியோர்களால், இவ்வாறு – செய் யப்பட்டது. அப்போது அதற்கு இசைந்தேன். அதை இழந் தார்கள். திரும்பிக் கொடுக்க நான் இசைய மாட்டேன். என்மேல் யாதொரு குற்றமும் இல்லை. பாண்டவர்களுக்கு ஊசி குத்தும் இடமும் நாங்கள் தரமாட்டோம்” என்றான்.
யாதொரு குற்றமும் தான் செய்யவில்லை என்று துரியோத னன் சொன்னதைக் கேட்ட கோவிந்தன் சிரித்து விட்டு “மூடனே! சகுனியுடன் சேர்ந்து வஞ்சனையாகச் சூதாட்டத்தை ஏற்படுத்தி னாய். திரௌபதியைச் சபைக்கு வரவழைத்து அவமானப்படுத்தி னாய். யாதொரு குற்றமும் செய்யவில்லை என்று வாதாடுகிறாய என்று சொல்லி இன்னும் துரியோதனன் பாண்டவர்களுக்கு ச் செய்த அநீதிகளையெல்லாம் விவரமாக நினைவூட்டினான்.
பீஷ்மர் முதலியோர் எல்லோரும் கிருஷ்ணனுடைய குற்றச் சாட்டை ஒப்புக்கொள்வதைப் பார்த்துத் துச்சாதனன் எழுந்து அண்ணா! இவர்கள் – உன்னைக் கட்டிப் பாண்டவர்களிடம் இ போதே கொடுத்து விடுவார்கள் போல் தோன்றுகிறது. எழுந்து வா, வெளியே போவோம். நாம் இங்கே இருக்கத் தகுதியில்லை’ என்றான்.
துச்சாதனன் இதைச் சொன்னதும் தம்பிகளுடன் துரியோ தனன் சபையை விட்டு வெளியே போய்விட்டான்.
கோவிந்தன் சபையோரைப் பார்த்து மறுபடி “மகான்களே கம்ஸனும் சிசுபாலனும் மாண்டதனால் யாதவர்களும் விருஷி ணிகளும் சுகமாக வாழ்கின்றனர் ஒரு குலத்தைக் காப்பாற்று வதற்காகச் சில சமயம் அதைச் சேர்ந்த ஒருவனைத் தியாகம் செய்ய வேண்டியதாகவும் நேரிடும். ஒரு தேசத்தைக் காப்பாற்ற ஒரு கிரா மத்தைச் சில சமயம் விட வேண்டியதாகும் அல்லவா? இந்தத் துரி யோதனனை நீங்கள் தியாகம் செய்ய வேண்டியது அவசியம். அதுவே குலத்தைக் காப்பாற்றும் வழி” என்றான்.
திருதராஷ்டிரன் விதுரனிடம் “அப்பனே! காந்தாரியை அழைத்து வா! அவள் தீர்க்கதரிசினி. அவள் சொல்லையாவது ஒரு வேளை துரியோதனன் கேட்பானா பார்க்கலாம்” என்றான். காந் தாரியை அழைத்து வரச் சேவகர்கள் சென்றார்கள்.
காந்தாரியும் வந்தாள். வந்து அவளும் திருதராஷ்டிரனும் ருவருமாகத் துரியோதனனைச் சபைக்குத் திரும்பி வரச்சொல்லி அனுப்பினார்கள். கண்கள் சிவந்தவனாகச் சபையில் மறுபடியும் துரி யோதனன் பிரவேசித்தான். காந்தாரி அநேக விதமாக உபதேசித் தாள். துரியோதனன் முடியாது’ என்று சொல்லிச் சபையை விட்டு மறுபடியும் வெளியே போய் விட்டான்.
சபையை விட்டு வெளியே போன துரியோதனன் தன் நண் பர்களுடன் சதியாலோசனை செய்து தூதனாக வந்த கோவிந்தனைக் கட்டி அவமானப்படுத்த ஏற்பாடு செய்தான். இந்தச் செய்தி சபைக்கு வந்தது. இதையெல்லாம் முந்தியே எதிர்பார்த்திருந்த கோவிந்தன் சிரித்துத் தன் விசுவரூபத்தைக் காட்டினான். அச்சம யம் குருடனான திருதராஷ்டிரனும் கண்கள் பெற்று விசுவரூபத்தைக் கண்டான் என்கிறார் வியாசர்.
‘ஓ! புண்டரீகாக்ஷா! உம்முடைய விசுவரூபத்தைப் பார்த்த இந்தக் கண்கள் மற்ற எதையும் இனிப் பார்க்க விரும்பவில்லை. என்னுடைய நேத்திரங்கள் மறுபடியும் மறைந்து போகப் பிரார் த்திக்கிறேன்” என்று திருதராஷ்டிரன் வேண்டிக்கொள்ள அப்ப டியே மறுபடியும் அந்தகன் ஆனான்.
“நம்முடைய முயற்சிகள் எல்லாம் வீண். துரியோதனன் கேட்க மாட்டான் ”என்று திருதராஷ்டிரன் கோவிந்தனிடம் சொல்லிய பின் கிருஷ்ணன் எழுந்து, சாத்யகியும் விதுரனும் இரு பக்கமும் கூடச் செல்ல, சபையை விட்டுப் போனான்.
கண்ணன் அருகிலிருந்த குந்தி தேவியிடம் சென்று நடந்தை யெல்லாம் அவளிடம் தெரிவித்தான். அவளும் புத்திரர்களுக்குத் தன் ஆசியைச் சொல்லச் சொன்னாள்.
“க்ஷத்திரிய ஸ்திரீயானவள் எதற்காகப் பிள்ளைகளைப் பெறு கிறாளோ அதற்குரிய காலம் வந்து விட்டது. என் புத்திரர்களைக் காக்கக் கடவாய்” என்றாள்.
க்ஷத்திரியத் தாய் பிள்ளைகளைப் பெறுவது யுத்தத்தில் பலி கொடுக்கவே! புருஷோத்தமன் தன்னுடைய ரதத்தில் ஏறி உபப் பிலாவிய நகரத்தை நோக்கி விரைவாகச் சென்றான். யுத்தம் நிச்ச யமாகி விட்டது.
பாசமும் தருமமும்
கிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்திலிருந்து திரும்பிப் போனதும் யாவருடைய மனத்திலும் சமாதானத்தைப் பற்றியிருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் இல்லை என்று தீர்ந்தது. குலநாசத்திற்குக் கார ணமாகிய யுத்தம் நிச்சயம் என்று ஏற்பட்டு விட்டது. குந்தி துக்கத்தில் ஆழ்ந்தாள்.
“அவமானத்தைச் சகித்துக்கொள்ளுங்கள். ராஜ்யமும் வேண் டாம், யுத்தமும் வேண்டாம் என்று சொல்ல எனக்கு நா எழவில்லை க்ஷத்திரிய குலத்தில் பிறந்த என் மக்கள் எவ்வாறு அதைச் சகிக்க முடியும்? ஆயினும் யுத்தம் நடத்தி ஒருவரை ஒருவர் கொன்று குலம் நசித்துப் போய் அதற்குப் பின் யார் என்ன லாபம் பெற முடியும்? என்ன சுகம் அனுபவிக்கமுடியும்? இந்தச் சங் கடத்துக்கு என்ன செய்வேன்? ‘ என்று இவ்வாறு குலநாசபயம் ஒரு பக்கமும் க்ஷத்திரியப் பண்பாடு ஒரு பக்கமும் குந்தியின் உள் ளத்தை இழுத்து வேதனை உண்டாக்கிக்கொண்டிருந்தன. தனக் குள் ஆலோசித்தாள்:
“பீஷ்மர், துரோணர், கர்ணன் இந்த மூன்று மகாசூரர்களை என் மக்கள் எவ்வா று தோற்கடிப்பார்கள்? இவர்கள் யாராலும் எதிர்க்க முடியாத வீரர்களாயிற்றே. இம் மூவர்களை நினைத்தால் என் உள்ளம் நடுங்குகிறது. மற்றவர்களைப் பற்றி எனக்குச் சிந்தை யில்லை. கௌரவ சேனையில் இம்மூவரே என் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சக்தி வாய்ந்தவர்கள். இவர்களில் ஆசாரி யரான துரோணர் சிஷ்யர்கள் பேரிலுள்ள பிரியத்தினாலோ அல்லது சிஷ்யர்களுடன் யுத்தம் செய்ய மனம் ஒவ்வாமலோ என் மக்களைக் கொல்லாமலிருக்கலாம். பிதாமகர் என் குமாரர்களின் உயிரைத் தீண்ட மாட்டார். கர்ணனே பாண்டவர்களின் முக்கிய சத்துரு. என் புத்திரர்களைக் கொன்று துரியோதனனைத் திருப்தி செய்ய வேண்டுமென்று மிகுந்த ஆவல் கொண்டவனாக இருக்கிறான். கர்ணன் மகாசூரனாகவுமிருக்கிறான். கர்ணனை நினைத்தால் என் உள்ளம் தீப்பற்றியது போல் எரிகிறது. அவனை நான் நேரில் கண்டு பேசி அவன் பிறப்பின் உண்மையைச் சொல்லி விட இதுவே சமயம். தன் பிறப்பைப்பற்றி அறிந்தபின் அவன் உள்ளம் மாறு தல் அடையாமல் இராது.
மக்களைப் பற்றிக் கவலையால் பீடிக்கப்பட்டுக் குந்தி தேவி தனக் குள் பல சிந்தைகள் செய்துகொண்டு கங்கையோரம் கர்ணன் தினமும் ஜபம் செய்யும் இடத்தை நோக்கிச் சென்றாள்.
எதிர்பார்த்தபடி ஜபத்தில் இருந்தான் கர்ணன். கிழக்கு முக மாக நின்றுகொண்டு கைகளை உயரத் தூக்கிச் உயரத் தூக்கிச் சூரிய உபாசனை யில் ஆழ்ந்திருந்தான். அவன் ஜபம் செய்து முடிக்கும் வரையில் அவனுக்குப் பின்புறமாக நின்று கொண்டிருந்தாள். சூரியன் தன் முதுகைச் சுடும் வரையில் கர்ணன் எதையும் கவனியாமல் ஏகாக்ரமாகத் தியானத்திலேயே இருந்தான்.
ஜபம் முடிந்ததும் திரும்பிப் பார்த்துக் குந்தி நிற்பதைக் கண்டான். வெயிலின் தாபத்தால் அவள் கர்ணன் உடலின் மேல் இருந்த உத்தரியத்தைத் தன் தலைமேல் பிடித்துக்கொண்டு நிற்ப தைப் பார்த்து இதென்னவென்று வியப்படைந்தான்.
பாண்டு ராஜாவின் மனைவியும், ராஜகுமாரர்களின் தாயுமாகிய குந்தி ஒரு தேரோட்டி மகனுடைய வஸ்திரத்தைத் தலை மேல் – பிடித்துக்கொண்டு நிற்பது அவனுக்கு அதிசயமாக இருந்தது.
“ராதைக்கும் தேரோட்டி அதிரதனுக்கும் மகனான கர்ணன் நான். தங்களை வணங்குகிறேன். சேவைக்குக் காத்திருப்பவனாகிய என்னால் தங்களுக்கு என்ன ஆக வேண்டியது ?” என்று பெரி யோர்களை வணங்கும் முறைப்படி பெயரையும் குலத்தையும் சொல்லி நமஸ்கரித்துக் கேட்டான்.
“கர்ணனே! நீ ராதையின் புத்திரனல்ல. தேரோட்டியும் உன் தகப்பனல்ல. நீ சூத குலத்தில் பிறந்தவன் என்று எண் ணாதே. அரச குலத்தைச் சேர்ந்த பிருதை என்கிற குந்தியின் வயிற் றில் பிறந்த சூரிய குமாரனாவாய் நீ. உனக்கு மங்களம்!” என்று சொல்லி அவனுக்கு அவன் ஜன்ம கதையை விளக்கிச் சொன்னாள்.
“கவச குண்டலங்களோடு தேவகுமாரனாகப் பிறந்த நீ உன் சகோதரர்களை அறிந்து கொள்ளாமல் துரியோதனனுடன் சேர்ந்து அவர்களைப் பகைக்கிறாய். திருதராஷ்டிரபுத்திரர்களை அண்டிப் பிழைப்பது உனக்கு அவமானமாகும். நீ அருச்சுனனுடன் சேர் ந்து வீரனாக ராஜ்யத்தை அடைவாயாக! நீயும் அருச்சுனனும் ஒன்று சேர்ந்து துஷ்டர்களை அடக்குவீர்களாக! உலகமே உங்களை வணங்கும். பலராமனும் கிருஷ்ணனும் போல நீங்கள் இருவரும் பிரசித்தி அடைவீர்கள். தம்பிமார் ஐவருக்கும் மூத்த சகோதர னான நீ அவர்களால் சூழப்பட்டுத் தேவர்களால் சூழப்பட்ட பிரம்ம தேவனைப் போல் ஜொலிப்பாய். தரும சங்கடமான விஷயங்களில் அன்புள்ள தாய்க்கும் தகப்பனுக்கும் சந்தோஷம் தருவதே உயர் ந்த தருமம் என்பது சாஸ்திரம்” என்றாள்.
சூரிய பகவானை உபாசித்து முடித்த சமயத்தில் இவ்வாறு தன்னைப் பெற்ற தாயால் கேட்டுக்கொள்ளப்படும்போது சூரிய பகவானும் குந்தியின்.. வேண்டுகோளை – ஆதரிப்பதாகக் கர்ணன் உள்ளத்தில் ஓர் உணர்ச்சி தோன்றிற்று. ஆனால் அவன் தன் மனத்தை ஸ்திரப்படுத்திக்கொண்டு சூரியன் தன்னுடைய தைரியத் தையும் சத்தியத்தையும் சோதிக்கிறான்: அந்தச் சோதனையில் தோல்வி அடையலாகாது என்று மனத்தைத் திடப்படுத்திக்கொண் டான்.
“க்ஷத்திரியத் தாயே! உன்னால் சொல்லப்பட்ட இந்த வார் த்தை தர்ம விரோதமான பேச்சு. நான் உனக்காக க்ஷத்திரியர் கடமையைத் தள்ளி விட்டு அதருமத்தில் இறங்கினேனானால் அதை விடப் பெருந் தீங்கு யுத்தத்தில் எந்தப் பகைவன் எனக்குச் செய்ய முடியும்? குழந்தைப் பருவத்தில் என்னை நீ தண்ணிரீல் எறிந்து விட்டு இப்போது ஜாதிக்குரிய சம்ஸ்காரங்களுக்குக் காலம் மீறி விட்ட பிறகு என்னைப் பார்த்து “நீராஜ வம்ச க்ஷத்திரியன்” என் கிறாய். தாயின், கடமைகளைச் செய்யவேண்டிய காலத்தில் செய்யா மல் இப்போது உன்னுடைய மக்களின் நன்மையைக் கருதி எனக்கு இந்த ரகசியத்தைச் சொல்லுகிறாய். இப்போது பாண்டவர்களுடன் நான் சேர்ந்தேனானால் எதிரிகளைக் கண்டு பயந்து அவர்களோடு சேர்ந்தேன் என்றுதான் க்ஷத்திரிய உலகம் சொல்லும். திருத ‘ராஷ்டிர புத்திரர்களால் எல்லா சுகமும் சொத்தும் மதிப்பும் மரியாதையும் இதுவரையில் அனுபவித்து விட்டு இப்போது யுத் தம் வந்த சமயத்தில் அவற்றையெல்லாம் பொய்யாக்கிப் பாண்டவர்களுடன் சேரச் சொல்லுகிறாய். திருதராஷ்டிர புத்திரர்கள் யுத்தம் என்கிற வெள்ளத்தைத் தாண்ட என்னையே ஓடமாக நம்பி வருகிறார்கள். நானே அவர்களை யுத்தத்துக்கு அதிக மாகத் தூண்டியிருக்கிறேன். அவர்களை நான் இப்போது எப்படி நடு ஆற்றில் விட்டு விடமுடியும்? உதவி செய்ய வேண்டிய காலம் வந்து எதிரில் நிற்கும்போது துரோகம் செய்து விட்டுப் பிறகு மானமாகப் பிழைக்க முடியுமா? தாயே! நான் கடனைத் தீர்க்க வேண்டும். உயிரையும் கொடுத்துத் தீர்க்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் சோற்றைத் திருடின அற்பனாவேன். நான் என் சக்தியை யெல்லாம் செலுத்தி உன் புத்திரர்களுடன் போர் செய் யத்தான் வேண்டும். உன்னிட ம் பொய் சொல்ல மாட்டேன். நீ என்னை மன்னிக்க வேண்டும். ஆயினும் நீ செய்த முயற்சி எது வும் வீண் ஆகாது. உன் புத்திரர்களில் அருச்சுனனை மட்டும் எனக்குத் தந்து விடு. அவனாவது நானாவது இந்த யுத்தத்தில் இற க்க வேண்டியது நிச்சயம். உன்னுடைய மற்றப் புத்திரர்கள் என்னை என்ன செய்தாலும் அவர்களை நான் கொல்ல மாட்டேன். வீர மக்களைப் பெற்றவளே! உனக்கு ஐந்து புத்திரர்கள் எப்படியும் இருப்பார்கள். நானாவது அருச்சுனனாவது இருவரில் ஒருவன் உன க்கு மிஞ்சுவான். மற்ற நால்வரோடு உனக்கு ஐந்து மக்கள் நிச்சயமாக இருப்பார்கள், போ!”
க்ஷத்திரிய தர்மத்துக்குப் பொருந்திய இந்த மொழிகளைத் தன் மூத்த மகன் சொன்னதைக் கேட்ட குந்தி அவனைக் கட்டித் தழுவிக்கொண்டு பேச முடியாமல் கண்ணீர் விட்டாள்.
“விதியை யார் தடுக்க முடியும்? நீ நான்கு தம்பிகளுக்கு அபயம் கொடுத்தாய். அதுவே போதும். உனக்கு மங்களம்!’ என்று ஆசீர்வதித்து விட்டு வந்த வழி சென்றாள் வீரத்தாய்.
இந்த அத்தியாயத்தை நன்றாகப் படித்து ஞானம் பெற்றவர்கள் எந்தத் தருமசங்கடத்தையும் தாண்டி வெற்றியடைவார்கள்.
பாண்டவ சேனாபதி
கோவிந்தன் உபப்பிலாவியம் வந்து சேர்ந்தான். ஹஸ்தினா புரத்தில் – நடந்த விஷயங்களைப் பாண்டவர்களுக்குச் சொன்னான். “உண்மையையும் ஹிதத்தையும் சொன்னேன்; ஒரு பய னுமில்லை. இனி நான்காவதும் கடைசியானதுமான தண்டப்பிர யோகம் தவிர வேறு வழியில்லை. சபையிலுள்ள பெரியோர்கள் அனைவரும் சொல்லியும் மூர்க்கனான துரியோதனன் புறக்கணி த்து விட்டான். இனி யுத்தத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் தாமத மின்றி நடைபெறவேண்டும். குருக்ஷேத்திரம் பெரும் பலிக்குக் காத் திருக்கிறது” என்றான்.
‘புருஷ சிரேஷ்டர்களே! இனிச் சமாதான ஆசை இல்லை, நம் முடைய சேனையை அணி வகுப்பீர்களா!” என்று யுதிஷ்டிரர் தம்பிகளுக்குக் கட்டளையிட்டார்.
சேனையை ஏழு பாகமாகப் பிரித்து அவற்றிற்கு முறையே துருபதன், விராடன், திருஷ்டத்யும்னன், சிகண்டி, சாத்தியகி, சேகிதானன், பீமசேனன் ஆகிய ஏழு நாயகர்களை அமைத்தார் கள். பாண்டவ சேனாபதியாக யாரை அபிஷேகம் செய்வது என்று ஆலோசித்தார்கள்.
‘சகதேவ! இந்த ஏழு பேர்களுள் ஒருவனைப் பொறுக்கி யெடுத்துச் சேனாபதியாக அமைக்க வேண்டும். நெருப்பைப் போல் பகைவர்களை எரிக்கும் பீஷ்மரைத் தாங்கக் கூடியவனும் எல்லாச் சேனைகளையும் சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி நடத்த வல்ல வனுமான ஒருவன் நமக்குச் சேனாபதியாக இருக்க வேண்டும். உன்னுடைய அபிப்ராயத்தில் இதற்கு யார் தகுந்தவர்?” என்று யுதிஷ்டிரர் முதலில் சகதேவனைக் கேட்டார்.
அபிப்ராயங்களை அறிவதற்கு இளையவர்களை முதலில் கேட்டு அதன் பிறகே பெரியோர்களையும் முதிர்ந்தவர்களையும் கேட்பது பழைய வழக்கம். சிறுவர்களுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் வளருவதற்கு இதுவே சரியான கிரமம். முதலில் பெரியோர்களைக் கேட்டால் அதன் பின் மற்றவர்களுக்குச் சுதந்திரமாக எதையும் சொல்ல இடமிருக்காது. ஏதேனும் சொன்னால் அது வினயத் துக்குப் பாதகமாகும். ஆனபடியால் தருமபுத்திரன் சகதேவனைக் கேட்டான்.
“அஞ்ஞாத வாசத்தில் எந்த ராஜாவை அடுத்திருந்தோமோ எவருடைய நிழலில் நின்று நாம் மறுபடியும் நம்முடைய பாகத் தைக் கேட்கிறோமா அந்த விராட ராஜாவையே சேனாபதியாக அபி ஷேகம் செய்யலாம்” என்றான் சகதேவன்.
நகுலனைக் கேட்க அவன் சொன்னதாவது:- ‘வயதிலும் அறி விலும் தைரியத்திலும் குலத்திலும் பலத்திலும் சிறந்தவரான துருபத ராஜாவைச் சேனாபதியாக்குவது உசிதம் என்று எனக்குத் தோன்றுகிறது. பாரத்வாஜரிடமிருந்து அஸ்திரங்கள் கற்றவரும் துரோணரை எதிர்க்க வேண்டுமென்றே அநேக காலமாகக்’ திருப்பவர்களும் அரசர்களால் மிக மதிக்கப்பட்டவரும் திரௌபதி யின் பிதாவும் நமக்குப் பெற்ற பிதாவைப் போல் ஆதாரமாய் இருப்பவருமான துருபதரே நம்முடைய சேனையின் முன்னணியில் நின்று துரோணரையும் பீஷ்மரையும் எதிர்க்கக் கூடியவர்” என்றான். பிறகு தருமபுத்திரர் தனஞ்சயனைக் கேட்டார்.
“இந்திரியங்களை வென்றவரும் துரோணருடைய முடிவுக் கென்றே தோன்றிய வீரருமான திருஷ்டத்யும்னன் நம்முடைய சேனாபதியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய அபிப்ரா யம். பரசுராமரைத் தயங்கக் செய்த பீஷ்மருடைய பாணங்களைத் தாங்கக் கூடியவன் திருஷ்டத்யும்னனே. துருபத புத்திரனைத் தவிரப் பிதாமகரை எதிர்க்கத் தகுந்தவன் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவனே இந்தப் பதவிக்குத் தகுதி யுடை யவன்” என்று அருச்சுனன் சொன்னான்.
பீமன் ‘அரசரே! அருச்சுனன் சொன்னது சரியே. ஆயினும் பீஷ்மருடைய வதத்திற்காகவே உண்டானான் என்று சிகண்டியைப் பற்றி ரிஷிகளும் பெரியோர்களும் சொல்லுகிறார்கள். பரசுராம ரைப் போன்ற தேஜசு பொருந்திய தோற்றத்தைப் படைத்த அந்த வீரனைத் தலைவனாக அமைப்பதே என்னுடைய யோசனை. சிகண்டி யைத் தவிர வேறு எவனும் பீஷ்மரைத் தோல்வியடையச் செய்ய முடியாது ”என்றான்.
கேசவனுடைய யோசனை என்ன “என்று முடிவாகக் கேட் டான் யுதிஷ்டிரன்.
“இவர்கள் சொல்லிய யாவருமே தலைமைப் பதவிக்குத் தகுந்தவர்கள். எல்லாருமே துரியோதனாதியருக்குப் பயத்தை உண்டாக்கக் கூடியவர்கள். ஆயினும் மொத்தத்தில் அருச்சுனன் சொன்னதை நான் அங்கீகரிக்கிறேன். திருஷ்டத்யும்னனை முழுச் சேனைக்கு ம் தலைவனாக அபிஷேகம் செய்யலாம் என்றான் கிருஷ்ணன்.
கௌரவ சேனாபதி
சுயம்வரத்தில் திரௌபதியை அருச்சுனனுக்குக்குக் கையைப் பிடித்துத் தந்தவனும் பாஞ்சாலிக்கு அரசர் சபையில் செய்யப் பட்ட கொடுமையை எண்ணி எண்ணி அதற்குப் பழி தீர்க்கும் காலம் எப்போது வரப்போகிறது என்று பதின்மூன்று வருஷங்கள் காத்திருந்தவனுமான துருபதராஜனுடைய வீர குமாரன் திருஷ் டத்யும்னனை பாண்டவ சேனைக்குத் தலைவனாக அமைத்து அபி ஷேகஞ் செய்தார்கள். வீரர்கள் செய்த சிம்மநாதங்களும் சங்க த்வனிகளும், துந்துபி முழக்கமும். ஆகாயத்தைப் பிளந்து, பெரும் ஆரவாரத்துடன் பாண்டவ சேனை குருக்ஷேத்திரம் புகுந்தது.
கௌரவ சேனைக்குப் பீஷ்மர் சேனாதிபத்யம் வகித்தார். துரியோதனன் அஞ்சலி செய்து வணங்கி “தேவர்களைக் கார்த்தி கேயன் தலைமை வகித்து நடத்தியவாறு பிதாமகர் எங்களுக்கு நாயகராயிருந்து வெற்றியும் புகழும் பெறுவாராக! ரிஷபத்தின் பின் கன்றுகள் செல்லுவது போல் நாங்கள் பிதாமகரின்பின் செல்வோம்” என்றான்.
“அப்படியே ஆகுக’ என்றார் பீஷ்மர். “ஆனால் என்னு டைய ஒரு நிச்சயத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். திருதராஷ்டிரனுக்குக் குமாரர்களான நீங்கள் எப்படியோ அப் படியே எனக்குப் பாண்டுவின் புத்திரர்களும். உங்களுக்கு · நான் செய்துகொடுத்த பிரதிக்ஞைப்படி யுத்தத்தை நடத்தி என் கடனைத் தீர்ப்பேன். நாள்தோறும் யுத்தகாலத்தில் பயினாயிரக் கணக்கான போர் வீரர்கள் என் பாணங்களுக்கு ரையாவார்கள். ஆயினும் பாண்டு புத்திரர்களை நான் கொல்ல முடியாது. இந்த யுத்தம் என். சம்மதத்தைப் பெற்றதன்று. பாண்டவர்களை நானாகக் கொல்லா மல் என் கடமைகளையெல்லாம் செய்வேன். மற்றொரு விஷயம். உங் களுக்கு மிகவும் பிரியனான சூதபுத்திரன் என் யோசனைகளை எப் போதும் எதிர்ப்பவனாகவே இருக்கிறான். அவனை முதலில் கேளுங் கள். அவன் தலைமை வகித்து யுத்தத்தை முதலில் நடத்தலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை” என்றார் பிதாமகர். பீஷ்மருக்குக் கர்ணனுடைய நடவடிக் க்கை எப்போதும் பிடிக்காது.
“பீஷ்மர் உயிருடன் இருக்கும் வரையில் நான் விலகி நிற் பேன். அவருடைய வீழ்ச்சிக்குப் பிறகே நான் வருவேன். அப் போது அருச்சுனனை எதிர்த்து அவனை வீழ்த்துவேன். ” இது அகம் பாவத்தால் பீடிக்கப்பட்ட கர்ணனின் பிடிவாதம்.
சிறந்த பல நற்குணங்களைப் படைத்தவர்களுங் கூடச் சமனஸ்தர்களிடம் பொறாமைப்படுவதும் மேம்பட்டவர்களிடம் அசூயை கொள்வதும் அந்தக் காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது.
துரியோதனன் பீஷ்மர் சொன்ன நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு அவரைச் சேனாபதியாக அபிஷேகம் செய்தான். பிதாமகர் தலைமை வகித்த கௌரவ சேனையும் பெரும் சமுத்திரத் தைப் போல் கம்பீரமாகக் குருக்ஷேத்திரத்தில் பிரவேசித்தது,
பலராமன்
புகழ் பெற்ற வீரனான பலராமன் பாண்டவர்களுடைய பாச றைக்கு வந்தான். பருத்த தோள்களும் நீலப்பட்டும் சிங்க நடை யுமாக * ஹலாயுதன் வந்ததும் யுதிஷ்டிரனும் கிருஷ்ணனும் மற் றவர்களும் பெரு மகிழ்ச்சி அடைந்து எழுந்து வணங்கினார்கள். விருத்தர்களும் பெரியோர்களுமான துருபதனையும் விராடனையும் வணங்கிவிட்டுப் பலராமன் தருமபுத்திரருக்குப் பக்கத்தில் உட் கார்ந்தான்.
‘பரத வம்சத்தில் ஆசையும் கோபமும் துவேஷமும் வலுத்து விட்டன. சமாதானப் பேச்சு எல்லாம் முறிந்து போயிற்று : போர் துவங்கி விட்டீர்கள் என்பதை அறிந்து குருக்ஷேத்திரத்துக்கு வந் தேன்’ என்றான் பலராமன்.
வருத்தம் தாங்காமல் பேச்சை ஒரு கணம் நிறுத்திக்கொண்டு மறுபடியும் “தருமபுத்திரனே! பயங்கரமான விநாசம் உண்டாகப் போகிறது. வெட்டப்பட்ட அங்கங்களாலும் இரத்தச் சேற்றினா லும் பூமி முழுவதும் கோரமாக அலங்கரிக்கப்படப் போகிறது. உலகத்திலுள்ள அரசர்களும் க்ஷத்திரிய சாதியும் விதியினால் எப் பட்டு யமாலயத்தைத் தேடிப் பைத்தியக்காரர்களைப் போல இங்கே கூடியிருக்கிறார்கள். நான் கிருஷ்ணனுக்குப் பல தடவை சொன் னேன். நமக்குப் பாண்டவர்களைப் போலவே துரியோதனனும். இருவருக்குள் உண்டாயிருக்கும் மூடச் செய்கைகளில் எந்தப் பக்க மும் நாம் சேர முடியாது என்று நான் எவ்வளவு சொல்லியும் கிருஷ்ணன் என் சொல்லுக்கு இசையவில்லை. தனஞ்சயனிடத்தில் அவனுக்குள்ள பிரீதியினால் பாண்டவர்களாகிய உ ங்கள் பட்சத்தி லேயே இருந்துகொண்டு யுத்தத்திற்கும் அனுமதி கொடுத்து விட்டான். கிருஷ்ணன் ஒரு பக்கத்திலிருந்து நான் மற்றொரு பக்கத்தில் இருக்க எவ்வாறு முடியும்? வீரர்களான பீமன் துரியோ தனன் இருவரும் என்னிடம் கதாயுதப் பயிற்சி பெற்ற சிஷ்யர்கள். இருவரிடம் நான் சமமான அன்பை உடையவன். கௌரவர்கள் நசிப்பதைப் பார்த்து என்னால் பொறுக்க முடியவில்லை. நீங்கள் யுத்தம் செய்யுங்கள். இந்த விபரீதம் பொங்கி வழியட்டும். நான் தீர்த்த யாத்திரை போகிறேன். எனக்கு உலகமே பிடிக்க வில்லை’ என்றான்.
இவ்வாறு சொல்லி விட்டுக் கிருஷ்ணனுடைய சகோதரனான் பலராமன் துக்கத்தைப் பொறுக்காதவனாகப் பரம்பொருளைத் தியானித்துக்கொண்டு யாத்திரை சென்றான் என்கிறார் வியாசர்.
“தரும சங்கடம்” என்றால் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கடமைகளில் எதனைச் செய்வது என்பது நிச்சயமாக விளங்காமல் திகைக்கும் நிலைமை. இந்த நிலைமை யோக்கியர்களுக்கு அடிக்கடி நேருகிறது. அயோக்கியர்களுக்கு இந்தக் கஷ்டம் இல்லை. தங்கள் தங்கள் பற்றுக்களும் ஆசைகளுமே அவர்களை நடத்தும். ஆசைக ளைக் கழற்றிவிட்ட மகான்களுக்குத் தருமசங்கடங்கள் வந்துசேரும். பாரதக் கதையில் பீஷ்மர், விதுரர், யுதிஷ்டிரன், கர்ணன இவர்க ளுக்குப் பெருஞ் சோதனைகள் ஏற்பட்டன். புராணத்தில் இவர் கள் அவ்வப்போது எவ்வெவ்வாறு சங்கடத்தைத் தீர்த்துக்கொண்டார்கள் என்பதைப் படிக்கிறோம். அவரவர்களுடைய இயற்கைக் குணங்களுக்கும் புத்தி நுட்பத்திற்கும் படித்த பண்பாட்டுக்கும் த தக்கவாறு சங்கடங்களைத் தீர்த்துக்கொண்டதாகக் கதை மாறுபட்டுச் செல்லும். இப்போது விமரிசனை செய்பவர்கள் சில சமயம் இதை மறந்து எல்லாவற்றையும் ஒரே தராசில் நிறுக்கப் பார்க்கிறார்கள். அது தவறு. இராமாயணத்தில் தசரதன், கும்பகர்ணன் மாரீசன், பரதன், லக்ஷ்மணன், இவர்களுக்குத் தர்ம சங்கடங்கள் நேர்ந்து அவரவர்கள் ஒவ்வொரு முறையில் தீர்த்திருப்பதைப் பார்த்து நாமும் பயன்பெறலாம். இவ்வாறே பாரதத்திலும் பலராமன் யுத்ததினின்று ஒதுங்கி நின்ற கதை இது. மகாபாரதப் போரில் சேராதவர்கள் பரத நாட்டு அரசர்களில் இருவரே. ஒரு வன் பலராமன். மற்றவன் ருக்மன் என்னும் போஜகட நாட்டு அதி பதி. ரு ருக்மன் கதையை ஒரு தனி அத்தியாயமாக முதலிலிருந்து சொல்ல வேண்டும். ருக்மன் தங்கையே ருக்மிணி. கண்ணன் மனைவி.
ருக்மிணி
விதர்ப்ப தேசாதிபதி பீஷ்மனுக்கு ஐந்து குமாரர்களுடன் ஒரே ஒரு பெண் இருந்தாள். அழகிலும் குணத்திலும் ஒப்பற்ற இந்தப் பெண்ணின் பெயர் ருக்மிணி. கிருஷ்ணனைப் பற்றி உலக மெல்லாம் புகழ்ந்ததைக் கேட்டு ருக்மிணிக்கு அந்த வீரனை மண ந்து இல்லறம் நடத்த வேண்டும் என்ற ஆவல் வளர்ந்தது. பந்துக் கள் அனைவரும் இந்த எண்ணத்தையே ஆமோதித்தார்கள். ஆனால் பீஷ்மனுடைய மூத்த குமாரனும் இளவரசனுமான ருக்மன் என்ப வன் கண்ணனைத் துவேஷித்தான். அவன் ருக்மிணியைத் துவராகா பதிக்குக் கொடுக்கக்கூடாது. அவளைச்சேதி தேசத்து ராஜனான் சிக பாலனுக்கு விவாகம் செய்து முடிக்க வேண்டும் என்று தகப்பனாரை வற்புறுத்தி வந்தான். தகப்பனார் வயதானவரானபடியால் இளவர சன் பேச்சே வலுத்தது. சிசுபாலனுக்கே ருக்மிணியைக்கொடுத்து விவாகம் முடியும் போல் இருந்தது.
கண்ணனை விரும்பினவளும் தேவியின் அவதாரமுமான ருக் மிணி அசுர குணம் படைத்த சிசுபாலனை எவ்வாறு ஒப்புக்கொள் வாள்? தகப்பனார் தன்னைக் காப்பாற்ற மாட்டார், பிடிவாதக்கார னான குக்மனின் உபதேசமே வெற்றியடையும் என்று அவள் பயந்து மிக்க துயரப்பட்டாள்.
பிறகு ஒருநாள் ருக்மிணி தைரியம் செய்து கொண்டு தன் துயரதத்தினின்று மீள்வதற்கு ஒரு வழி எப்படியாவது தேடவேண் டுமென்று தீர்மானித்தாள். அதைப் பற்றி ஒரு பிராமணனுடன் ஆலோசனை செய்தாள். இயற்கைக் கூச்சத்தை விட்டு விட்டுக் கிரு ஷ்ணனிடம் அந்தப் பிராமணனைத் தூது அனுப்பினாள். போய்த் தன் நிலைமையைச் சொல்லி எப்படியாவது தன்னைக் காப்பாற்றும் படியாக அவனை வேண்டிக்கொள்ளச் சொல்லி அனுப்பினாள்.
பிராமணன் துவாரகைக்குப் போய்க் கண்ணபிரானைக் கண்டு ருக்மிணியின் பரிதாபத்தையும் வேண்டுகோளையும் அவனுக்குத் தெரிவித்து ருக்மிணி அனுப்பிய கடிதத்தையும் பகவானிடம் தந் தான்.
“உன்னை நான் வரித்தேன். என் உள்ளம் உன்னுடைய சொத் தாகிவிட்டது. உனக்குச் சொந்தமாகச் சேர்ந்து விட்ட பொரு ளைச் சிசுபாலன் கவர்ந்து கொள்வதற்கு முன்னமே நீ இவ்விடம் வந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். நாளைய தினமே இவ்விடம் வர வேண்டும். சிசுபாலனுடைய படைகளையும் ஜராசந்தனுடைய படைகளையும் எதிர்த்துச் சிதற அடித்து என்னை நீ பெற வேண்டிய தாயிருக்கிறது. வீரனாக என்னை அடைவாய். சிசுபாலனுக்கு என்னை விவாகம் செய்து விடுவதாக அண்ணன் தீர்மானித்திருக்கிறான்.விவா கச்சடங்குக்காகச் செய்யவேண்டிய பூஜைக்காக அம்மன் கோயி லுக்கு என் பரிவாரத்துடன் போவேன். நீ அப்போது வந்து என்னை மீட்கலாம். இல்லையேல் நான் உயிரை மாய்த்துக்கொள்வேன். மறு பிறப்பிலாவது உன்னை அடைவேன் அல்லவா?” – இந்தக் கடி தத்தைப் படித்த உடனே கண்ணன் தேரில் ஏறினான்.
விதர்ப்ப தேசத்தின் ராஜதானியான குண்டினபுரம் அலங்க ரிக்கப்பட்டு ருக்மிணியின் விவாகத்திற்கு வேண்டியதெல்லாம் பீன் மக ராஜனுடைய கட்டளைப்படி தயார் செய்யப்பட்டது. சிசுபால்னும் அவனைச் சேர்ந்தவர்களும் வந்து சேர்ந்து விட்டார்கள். அனை வரும் கிருஷ்ணனுடைய பரம விரோதிகள்.
கண்ணன் தனியாகத் தேர் ஏறிச் சென்ற செய்தி பலராமனுக் குத் தெரிந்தது. இது விதர்ப்ப ராஜனுடைய மகளைப் பற்றியதா கவே இருக்கலாம்: தம்பி கண்ணன் அவ்விடம் போய் ஜன்ம விரோ திகளால் சூழப்பட்டு அபாயத்தில் சிக்கிக்கொள்வான் என்று பலதேவன் கவலைப்பட்டு உடனே பெருஞ் சேனையை அவசரமாகத் திரட்டிக்கொண்டு குண்டினபுரத்துக்கு விரைவாகச் சென்றான்.
ருக்மிணி அந்தப்புரத்தை விட்டுப் புறப்பட்டாள். பரிவார மும் படையுமாகப் பெருங் கூட்டம் அவளுடன் சென்றது. கோவி லுக்குப் போய் விவாகத்துக்காகத் தேவி பூஜை நடத்தினார்கள். தேவி! உன்னை வணங்குகிறேன். நான் இவ்வளவு நாளாக உன் னைப் பணிந்து வந்திருக்கிறேன். கண்ணன் என்னை அடைய வேண்டும். எனக்கு இந்த வரம் நீ தரவேண்டும் என்று உள் ளம் கரைந்து தேவியின் சந்நிதியில் முறையிட்டாள்.
ஆலயத்திலிருந்து ருக்மணி வெளியே வந்ததும் கண்ணனு டைய தேரைக் கண்டாள். கண்டதும் காந்தத்தினால் இழுக்கப்பட்ட ஊசியைப்போல் ஒன்றும் பேசாமல் நேராகப்போய் அந்தத் தேரில் ஏறினாள். பகைவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, கண்ணன் அவளை ஏற்றிக்கொண்டு தேரை ஒட்டினா ன்.
இளவரசனான ருக்மனிடம் சேவகர்கள் ஓடிச்சென்று நடந்த தைச் சொன்னார்கள்.
“கிருஷ்ணனைக் கொல்லாமல் திரும்ப மாட்டேன்” என்று அவன் சபதம் செய்து பெருஞ் சேனையுடன் கிருஷ்ணனைத் துரத்திக் கொண்டு சென்றான். இதற்குள் பலராமனும் ம் சேனையுடன் வந்து சேர்ந்தான். இரு கட்சியினருக்கும் பெரும் யுத்தம் நடந்தது. பலராமனும் கண்ணனும் பகைவர்களைச் சிதற அடித்து வெற்றியுடன் துவாரகைக்குச் சென்றார்கள். அங்கே ருக்மிணியின் விவாகம் முறைப்படி நடந்தது.
தோல்வியை அடைந்த ருக்மன் வெட்கத்தால் பீடிக்கப்பட்டு குண்டினபுரத்துக்குத் திரும்பிப் போகாமல் கிருஷ்ணனுக்கும் தன க்கும் யுத்தம் நடந்த இடத்திலேயே தன் சேனையை நிறுத்தி அவ் விடத்தில் போஜகடம் என்கிற புதிய நகரத்தை நிர்மாணம் செய்து அங்கேயே அரசு நடத்தி வந்தான்.
குருக்ஷேத்திரத்தில் யுத்தம் நடைபெறப் போகிறது என்று அறிந்து ருக்மராஜன் ஒரு அக்குரோணி சேனையுடன் அவ்விடம் வந்தான். வாசுதேவனுடைய நட்பை இப்போது அடையலாம் என்று எண்ணிப் பாண்டவர்களிடம் சென்றான். தனஞ்சயனைப் பார்த்து ”பாண்டவனே! உன்னுடைய எதிரிகளின் சேனை பெரி தாக இருக்கிறது. உனக்குச் சகாயம் செய்ய வந்திருக்கிறேன். எதிரிகளுடைய படையில் எந்தப் பாகத்தைத் தாக்க வேண்டுமென் று விரும்புகிறாயோ அதை நான் தாக்குவேன். துரோணர், கிருபர் அல்லது பீஷ்மரையும் தாக்க நான் சக்தியுள்ளவனாக இருக்கிறேன். உனக்கு வெற்றியைச் சம்பாதித்துத் தருவேன். உன் விருப்பம் என்ன? என்று கேட்டான்.
ருக்மனுடைய பேச்சைக் கேட்ட தனஞ்சயன் வாசுதேவனைப் பார்த்துச் சிரித்துப் பதில் சொன்னான்.
“போஜகடாதிபதியே! நாம் எதிரிகளின் பெரிய சேனையைக் கண்டு பயப்படவில்லை. உன்னுடைய சகாயத்தை நான் விரும்ப வில்லை நீ போகலாம். அல்லது இருக்கலாம்’” என்றான்.
கோபமும் வெட்கமும் அடைந்த ருக்மன் தன் சேனையைத் திருப் பிக்கொண்டு உடனே துரியோதனனிடம் போனான்.
“பாண்டவர்கள் என்னை மறுத்தார்கள். உனக்குச் சகாயம் செய்வேன்’ என்று துரியோதனனிடம் சொன்னான்.
“பாண்டவர்கள் வேண்டாம் என்று சொன்ன பின் அல்லவா என்னிடம் வந்தாய்? அவர்கள் நீக்கி விட்ட பண்டத்தை எடுத்துக் கொள்ளும்படியான அவசியம் எனக்கு நேரவில்லை என்று துரியோதனனும் சொல்லி விட்டான்! இருதரப்பிலும் அவமானப் பட்ட ருக்மன் யுத்தத்தில் சேராமல் தன் நாட்டுக்குத் திரும் பினான்.
யுத்தத்தில் சேராமலிருப்பதிலும் பலவிதம் உண்டு. சாத்வீக காரணங்களாகவுமிருக்கலாம். ரஜோ குணங்கள் – அதாவது அகம் பாவம், சுயநலம் முதலிய காரணங்களாகவுமிருக்கலாம். சோம்பல் பயம் முதலிய காரணங்களாகவுமிருக்கலாம். பலராமன் பாரத யுத் தத்தில் சேராத காரணம் சாத்வீகம். ருக்மன் சேராததற்குக் கார ணமோ அவனுடைய ரஜோ குணம். தருமத்தை ஆராய்ந்து, எது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதைச் செய்யாமல் தன் பெருமையையே லட்சியமாகக் கொண்டு ருக்மன் அவமானப் பட்டான்.
ஒத்துழையாமை
யுத்தம் ஆரம்பிப்பதற்கு முதல் நாள் பீஷ்மர் துரியோதன னுக்குத் தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார். அவனுக்காகப் போர் செய்யப் போகும் வீரர்களுடைய திறமையையும் குணங்க ளையும் எடுத்துக் காட்டித் துரியோதனனுக்கு உற்சாகம் ஊட்டி வந்தார். கர்ணனைப் பற்றிப் பேச்சு வந்தது.
உன்னுடைய பிரியத்தைச் சம்பாதித்தவனும் உனக்குப் பாண்டவர்கள் பேரில் பகையை வளர்த்து வருபவனும் தன்னை புகழ் ந்து கொண்டிருப்பதிலேயே சந்தோஷப்படுகிறவனும் அகங்கார த்திற்கு வரம்பு தெரியாதவனுமான கர்ணனை நான் அதிகமாக மதிக்கவில்லை. இவனை நான் அதிரதர்கள் கணக்கில் சேர்க்க மாட்டேன்.
இவன் பிறரை நிந்திக்கும் சுபாவம் கொண்டவன். தவிர இவன் தன்னுடைய பிறவிச் சம்பத்தான கவச குண்டலங்களை இழ ந்து விட்டிருக்கிறபடியால் நம்முடைய யுத்தத்தில் அதிகமாக உதவச் சக்தியற்றவன். பரசுராமருடைய சாபத்தினால் ஆபத்துக் காலத்தில் இவன் நினைவை இழந்து விட்டுப் பரிதவிப்பான்.அருச்சு னனோடு செய்யப்போகும் யுத்தத்தில் இவன் உயிருடன் மீள மாட்டான்”. இவ்வாறு பீஷ்மர் உள்ளதை உள்ளது போல் துரியோ தனனுக்கும் கர்ணனுக்கும் மிகவும் அப்பிரியமான வார்த்தைகளைச் சொன்னார்.
துரோணரும் அதையே ஆமோதித்து “இவன் கர்வம் கொண்டவன். விஷயங்களைக் கவனிக்க மாட்டான். அஜாக்கிரதையால் தோல்வி அடைவான் என்றார்.
கடுமையான இந்தச் சொற்களைக் கேட்டுக்கொண்டு வந்த கர்ணன் கோபம் கொண்டு கண்கள் சிவந்து பீஷ்மரைப் பார்த்துப் பேசலானான்.
‘பிதாமகரே! ஒரு குற்றமும் செய்யாத என்னை நீர் எப்போ தும் அவமதித்து வருகிறீர். துவேஷத்தினாலும் பொறாமையினாலு ம் சொல்லம்புகளினால் அடிக்கடி இவ்விதம் என்னைக் குத்துகிறீர்) துரியோதனனுக்காக அவற்றை யெல்லாம் நான் பொறுத்து வந் தேன். யுத்தத்தில் நான் அதிகமாக உதவ மாட்டேன் என்று சொன்னீர். என்னுடைய நிச்சயமான அபிப்ராயத்தைக் கேளும். நீர்தான் உதவ மாட்டீர். பொய் சொல்ல வேண்டாம்.உங்களுக்குக் சௌரவர்கள் மேல் அன்பு கிடையாது. அரசனுக்கு இது தெரியாது. உம்முடைய துவேஷத்தினால் துரியோத னனுக்கு என்மேல் உண்டாயிருக்கும் பிரியத்தைக் கெடுக்கப் பார்க்கிறீர். நண்பர்களுக்குள் பேதத்தை உண்டாக்குவதற்காக என்னுடை ய உண்மையான பராக்கிரமத்தைக் குறைத்துச் சொல் லியும் நிந்தித்தும் வருகிறீர். உம்மைப் போல் எவனும் இவ்வித அக்கிரமத்தைச் செய்ய மாட்டான். க்ஷத்திரியர்களுக்குள் முதுமை யால் மட்டும் கௌரவம் இல்லை.பலத்தினால்தான் மதிப்பு உண் டாகும். துரியோதனனுக்கும் எனக்குமுள்ள சிநேகிதத்தைக் கெடுக்க முயற்சி செய்யவேண்டாம்.”- இவ்வாறு பீஷ்மரை நிந்தித் துத் தாக்கினான்.
பிறகு துரியோதனனைப் பார்த்து “வீரனே!. நன்றாய் ஆலோ த்து உன் நன்மையைத் தேடிக்கொள். இந்தப் பீஷ்மரை நீ நம்பாதே! நம்முடைய போர் வீரர்களுககுள் பேதம் விளைவிக்க இவர் பார்க்கிறார். என்னைப் பற்றி இவர் சொன்னது உன்னுடைய காரி யத்திற்கு இடையூறு விளைவிக்கும். தேஜோ பங்கம் செய்து என்னு டைய உற்சாகத்தை அழித்து விடப்பார்க்கிறார். இவருடைய மூளை வயதினால் தளர்ந்து விட்டிருக்கிறது. இவர் இறக்கும் தருணம் வந்துவிட்டது. இவருக்கு அகம்பாவம் அதிகம். உலகத்தில் வேறு ஒருவரையும் இவர் மதிக்கிறதில்லை.முதியோர்களுடைய ஆலோச னையை அவசியம் கேட்க வேண்டியதுதான். ஆனால் சாஸ்திரத்தின் படி முதுமைக்கும் ஒரு வரம்பு உண்டு. மறுபடியும் இரண்டாம் பால பருவம் அடைந்து விட்ட இத்தகைய முதுமை ஒன்றுக்கும் உதவ மாட்டாது. இவரைச் சேனாதிபதியாகச் செய்தாய். மற்றவர் கள் செய்யும் வீரச்செயல்களைக் கொண்டு இவர் புகழ் சம்பாதிப் பார். நான் இவருடைய தலைமையில் நடக்கும் யுத்தத்தில் ஆயுதப் பிரயோகம் செய்ய மாட்டேன். பீஷ்மர் வீழ்ந்த பின்னரே நான் ஆயுதமெடுப்பேன் ” என்றான்.
அகம்பாவம் கொண்ட மனிதனுக்குத் தன் அகம்பாவம் தன குத் தெரியாது. அதை எடுத்துச் சொல்லும் மனிதனை அகம்பாவம் கொண்டவனாகக் கருதுவான். குற்றத்தை எடுத்துக் காட்டுவதே பெருங் குற்றமாக அவனுக்குத் தோன்றும். இந்தக் கர்ண பீஷ்ம சம்பாஷணையில் இது நன்றாக எடுத்துக் காட்டப்படுகிறது.
பீஷ்மர் ‘சூதபுத்திரனே! மிக்க நெருக்கடியான காலமாக இருக்கிறபடியால் உன் தகாத வார்த்தையையும் நான் பொறுத் துக்கொள்கிறேன். அதனால் நீ உயிருடன் இருக்கிறாய். துவேஷ புத்தி கொண்ட உன்னைக் கௌரவர்கள் அடைந்தபடியால் அவர்க ளுக்கு இந்தப் பெரிய கஷ்டம் நேரிட்டது.” இவ்வாறு சொல்லி விட்டுப் பீஷ்மர் தம் கோபத்தை அடக்கிக் கொண்டார்.
துரியோதனன் காங்கேயரே! உங்கள் இருவரிடமும் நான் உதவி பெற வேண்டியவனாக இருக்கிறேன். இருவரும் பெரிய வீரச் செயல்களைச் செய்யப் போகிறீர்கள். விடிந்த உடன் யுத்தம் நடக் கப் போகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் கலகம் வேண்டாம்” என்றான்.
பீஷ்மர் சேனாபதியாக இருக்கும் வரையில் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று கர்ணன் பிடிவாதமாகச் சொல்லி விட்டான். துரியோதனனும் அதை ஒப்புக்கொண்டு அவ்வாறே கர்ணனுடைய சபதம் நடைபெற்றது. இந்தக் காரணத்தினால் பாரத யுத்தத்தில் முதல் பத்து நாட்களில் நடந்த போரில் கர்ணன் சேர்ந்துகொள்ள வில்லை. தன்னுடைய சேனையை மட்டும் யுத்தத்தில் ஏவினான். பத்து நாட்கள் தீர்ந்தது. பீஷ்மர் உடம்பெல்லாம் அம்புகள் பாய் ந்து யுத்தகளத்தில் வீழ்ந்த பின் அவரிடம் கர்ணன் வந்து பணிந்து தன் பிழைகளைப் பொறுத்தருள வேண்டும் என்று பிரார்த்திக் கொண்டு பீஷ்மருடைய ஆசீர்வாதத்தையும் பெற்றான். பிறகு கர்ணனே பிரேரேபித்துச்சொல்லித் துரோணரைச் சேனாபதியாக அபிஷேகம் செய்தார்கள். அப்போது கர்ணன் யுத்தத்தில் சேர்ந்து கொண்டான். துரோணரும் இறந்த பின் கர்ணன் கௌரவர்களின் சேனாபதியாகவே அமர்ந்து யுத்தம் நடத்தினான்.
கீதையின் தோற்றம்
யுத்தம் துவங்குவதற்கு முன் இரு பட்சத்து வீரர்களும் கூடி அந்தக் காலத்துப் பண்பாட்டிற்குப் பொருந்திய பிரதிக்ஞைகளைச் செய்தார்கள். யுத்த முறைகள் காலத்துக்குக் காலம் மாறிக்கொண் டே வருகின்றன. அந்தக் காலத்து யுத்த முறைகளை நினைவில் வைத்துக்கொண்டு படித்தால்தான் பாரதம் விளங்கும். இல்லாவிட்டால் சிற்சில இடங்களில் நிகழ்ச்சிகள் அசம்பாவிதமாகத் தோன்றும்.
பாரத யுத்த விதிகள்: ஒவ்வொரு நாளும் போர் முடிந்த பிறகு இருதரப்பினரும் பிரீதியுடன் கலக்க வேண்டும். யுத்தத்தில் யாவரும் தத்தம் சமானஸ்தர்களையே தாக்க வேண்டும்.
அதர்ம முறையில் யார் பேரிலும் யுத்தம் நடத்தக் கூடாது: சேனையின் மத் தியிலிருந்து விலகிப் போகிறவர்களை ஒருபொழுதும் கொல்லக் கூடாது. தேர் ஏறினவன் தேர் ஏறினவனையும் யானை வீரன் யானை வீரனையும் குதிரை ஏறியிருப்பவன் குதிரை ஏறியிருப்பவனையும் காலாள் காலாளோடும் எதிர்த்துச் சண்டை செய்ய வேண்டும். எதிரியை நம்பிப் போரை நிறுத்தினவன் மீதும் பயந்து வணங்கி னவன் மீதும் ஆயுதம் பிரயோகிக்கக் கூடாது. வேறு ஒருவனோடு போர் செய்து கொண்டிருக்கும் ஒருவனைப் போரில் கலந்து கொள்ளாமல் மற்றொருவன் ஆயுதப் பிரயோகம் செய்து கொல்லக் கூடாது. ஆயுதம் இழந்தவனையாவது கவனம் செலுத்தாமல் புறங்காட்டி ஓடுபவனையாவது கவசம் இழந்தவனையாவது கொல் லக் கூடாது.ஆயுதங்களை எடுத்துக் கொடுக்கும் பணியாட்கள். பேரிகை அடிப்பவர்கள், சங்கம் ஊதுகிறவர்கள் இவர்கள் மேல் ஆயுதங்கள் பிரயோகம் செய்யலாகாது. இவ்வாறான யுத்த முறை யைக் கெளரவ பாண்டவர்கள் இருவரும் பிரதிக்ஞை செய்து கொண்டார்கள்.
காலப் போக்கில் நியாய அநியாயக் கோட்பாடுகள் மாறுதல் அடையும். இக்காலத்தில் போர் என்றால் போரில் உபயோகிக்கப் படும் எல்லாச் சாதனங்களும் குதிரைகள் முதலிய ஊமைப் பிரா ணிகளும் சிகிச்சைக்கு வேண்டிய மருந்தும் கூட அழிக்கப்படலாம். எவ்வித வரம்பும் கிடையாது. முற்காலத்தில் இவ்வாறல்ல.
அக்காலத்தில் பின்பற்றி வந்த நியமங்களும்- அக்காலத்தி லேயே சிலசமயங்களில் பல காரணங்களினால் புறக்கணிக்கப்பட் டதாகப் பாரத் கதையில் காணப்படுகிறது. விசேஷ சந்தர்ப் பங்களும் காரணங்களும் கூடி அவற்றால் நியதிகள் சில சமயம் புறக்கணிக்கப்பட்டு வரவர நியதியே அழிந்து போய்ப் புது நியதி உண்டாகும். பாரத யுத்தத்தில் வரம்பு கடந்த செயல் களும் சிற்சில சமயங்களில் நடைபெற்றன. ஆனபோதிலும் பொது வாக மேற்கூறிய நியதிகளை எல்லாரும் ஒப்புக்கொண்டு அவற் றின்படியே நடந்தார்கள். விதிகள் புறக்கணிக்கப்பட்ட போது எல்லோரும் நிந்தித்தார்கள். புறக்கணிக்கப்பட்டவர்கள் வெட்க மடைந்தார்கள்.
“வீரர்களே! இதோ உங்களுக்கு எதிரில் சுவர்க்க வாயில் திற ந்து நிற்கிறது. இந்திரனுடனும் பிரம்மனுடனும் சேர்ந்து வாழும் பாக்கியம் உங்களுக்குக் கிட்டியிருக்கிறது. உங்கள் பெற்றோரும் மூதாதையரும் அவர்களைப் பெற்ற முன்னோர்களும் சென்ற வழி யில் நீங்களும் செல்லுங்கள். வெற்றி அல்லது சுவர்க்கம் உங்கள் முன் நிற்கிறது. இதுவே உங்களுடைய குலங்களின் சனாதன தர்மம். மனக் கவலையின்றி மகிழ்ச்சியுடன் போர் புரிந்து புகழும் மேன் மையும் அடையுங்கள். வீட்டில் வியாதியினால் மரணம் அடைதல் க்ஷத்திரியனுக்குத் தகாது. ஆயுதத்துக்கு இரையாவதே க்ஷத்திரியனுடைய தருமம்”.
இவ்வாறு சேனாதிபதி பீஷ்மரால் தூண்டப்பட்ட அரசர்கள் பேரிகை முழக்கம் செய்துகொண்டு கௌரவர்களுக்கு வெற்றியும் புகழும் உண்டாக்கித் தருவோம் என்று யுத்தம் துவங்கினார்கள்.
பீஷ்மருடைய கொடியில் பனைபரமும் ஐந்து நட்சத்திரங்களும் பிரகாசித்தன. சிம்மத்தின் வால்எழுதிய அசுவத்தாமன் கொடி காற் றில் ஆடிற்று. துரோணருடைய பொன் நிறத் துவஜத்தில் கமண் டலமும் வில்லும் பிரகாசித்தன. துரியோதனனுடைய புகழ் பெற்ற கொடியில் பாம்புப்படம் ஆடிற்று.கிருபருடைய கொடியில் காளை மாடும் ஜயத்ரதனுடைய கொடியில் பன்றியும் இவ்வாறு இன். னும் பல வீரர்கள் தேரில் பலவிதக் கொடிகள் பறந்தன.
அணி வகுக்கப்பட்ட கெளரவ சேனையைப் பார்த்து யுதிஷ்டிரன் அருச்சுனனுக்குக் கட்டளையிட்டான்.
”பகைவர்களுடைய படை மிகப்பெரிதாக இருக்கிறது. குறை வாக இருக்கிற நம்முடைய படையை விஸ்தாரப்படுத்தாமல் கு த்துப் போர் புரிய வேண்டும். அகலமாக விரிந்தால் நம்முடைய சேனைக்குப் பலக்குறைவு ஏ ஏற்படும். ஊசிமுக வியூகமாக நம்முடை படை யை அணி வகுப்பாயாக” என்று தனஞ்சயனுக்கு உ த்திரவிட்டான்.
இவ்வாறு இரு பக்கத்திலும் சேனைகள் அணி வகுக்கப்பட்டு நின்றதும் அருச்சுனனுக்கு உண்டான மனக் கலக்கமும் அதைத் தீர்க்க கிருஷ்ணன் உபதேசித்த கரும யோகமும் உலகப்பிரசித்தம். அப்போது கண்ணனுடைய வாக்கில் தோன்றிய பகவத்கீதை என் கிற உபதேச மொழிகள் உலகத்தில் எந்தத் தொழிலில் ஈடுபட்டு எந்த நிலைமையிலிருப்பவர்களுக்கும் எந்தக் குண விசேஷங்களுடன் பிறந்தவர்களுக்கும் உய்யும் வழி காட்டி உதவும்படியான சாஸ்திர மாகப் பெரியோர்களால் கருதப்பட்டு வருகிறது. பகவத்கீதைபார தத்தில் ஒரு பாகம். எந்த எந்தச் சமயத்தில் எந்த எந்தக் கடமை விதிப்படி ஏற்படுகிறதோ அதைச்சரிவரச் செய்யவேண்டும். செய்து முடித்து விட்டு அதன் பயனை ஆண்டவனுக்குச் சமர்ப்பித்து விட வேண்டும். இதுவே கண்ணன் உபதேசித்தது.
ஆசி பெறுதல்
யுத்தம் ஆரம்பித்து விட்டது என்று எல்லோரும் எண்ணியி ருந்த தருணத்தில் வீரனும் தீரனுமான யுதிஷ்டிரன் திடீரென்று தன் கவசத்தைக் கழற்றி விட்டு எல்லா ஆயுதங்களையும் தேரில் வைத்து விட்டுக் கீழே இறங்கிக் கைகுவித்துக்கொண்டு பாதசாரியாகக் கெளரவ சேனாதிபதி இருக்குமிடம் நோக்கிச்சென்றான். அவ்வாறு ஒன்றும் சொல்லாமல் யுதிஷ்டிரன் சென்றதைப் பார் த்து எல்லோரும் திகைப்பு அடைந்தார்கள்.தனஞ்சயன் விரைவாகத் தேரிலிருந்து கீழே குதித்து யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து வேக மாகச்சென்றான். அவன் கூட மற்றச் சகோதரர்களும் கிருஷ்ணனும் சென்றார்கள். யுதிஷ்டிரன் ஒருவேளை தன் இயற்கைத் தருமத்தை அனுசரித்துக் கருணையால் தூண்டப்பட்டு திடீரென்று யுத்தம் வேண்டாம் என்பதாகத் தீர்மானித்து விட்டானோ என்று சந்தேக மும் கவலையும் பட்டார்கள்.
“ராஜாவே! எங்களை விட்டுவிட்டு ஒன்றும் பேசாமல் நிராயுத பாணியாகப் பகைவர்களை நோக்கிச் செல்லுவது என்ன காரணம்? சத்துருக்கள் கவசம் பூண்டு ஆயுதங்களை எடுத்து நிற்க, கவசத் தையும் ஆயுதங்களையும் வைத்து விட்டு நீர் யுத்த ஆரம்ப சமயத் தில் தனியாக எங்கே போகிறீர்?” என்று அருச்சுனன் கேட்டான்.
ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து சென்றுகொண்டிருந்த யுதிஷ் டிரன் ஒன்றும் பேசாமல் நடந்தான். அச்சமயம் வாசுதேவன் “இவ ருடைய கருத்து எனக்கு விளங்கிற்று. யுத்தம் துவக்குவதற்கு முன் பெரியோர்களிடம் அனுமதி பெறச்செல்கிறார். பெரியோர்களிடம் அனுமதி பெறாமல் யுத்தம் செய்வதால் அது நிந்தனைக்கு இடமாகும். பீஷ்ம துரோணரிடம் அனுமதி கேட்கவே தருமபுத்திரர் நிராயுதபாணியாகச் செல்கிறார். அது தருமத்திற்கு இயைந்ததும் வெற்றி உண்டாக்கத் தக்கதுமான முறை” என்றான்.
துரியோதனனுடைய சேனையிலிருந்தவர்கள் யுதிஷ்டிரன் கை கூப்பிக்கொண்டு பீஷ்மரிடம் வருவதைக் கண்டு ‘“அதோ பார், நம்முடைய சேனையைக் கண்டு பயந்து போய்ச் சமாதானம் பெற யுதிஷ்டிரன் வணங்கி வருகிறான். இந்தக் கோழை மனிதன் க்ஷத்திரிய ஜாதிக்கு அவமானம் தருவதற்காகப் பிறந்தவன்” என்று ஒருவரோடு ஒருவர் சந்தோஷமாகப் பேசிக்கொண்டு தரும புத்திரனை நிந்தித்தார்கள்.
பகைவர் படையில் ஆயுதபாணிகளாக நின்ற வீரர்களிடை யில் யுதிஷ்டிரன் நுழைந்து பீஷ்மர் இருந்த இடம் சென்று அவரு டைய இரண்டு பாதங்களையும் இரண்டு கைகளால் தொட்டு வணங்கி,
”எவராலும் ஜெயிக்க முடியாத வீரரே! உம்முடன் போர் புரியத் துணிந்த எங்களுக்கு யுத்தம் துவக்க அனுமதி தர வேண்டு கிறேன். எங்களை ஆசீர்வதிக்கவும் கோருகிறேன்” என்றான்.
பிதாமகரான பீஷ்மர் “குழந்தாய்! பரத குலத்தில் பிறந்த நீ குலத்தினுடைய தருமத்தின்படி நடந்து கொள்ளுகிறாய்! நான் மகிழ்ச்சியடைந்தேன். யுத்தம் செய். ஜயம் பெறுவாய்! எனக் குச் சுதந்திரம் இல்லை.பார தீனமாக இருக்கிறேன். நான் கௌரவர் கள் பக்கம் யுத்தம் புரியக் கட்டுப்பட்டவனாக இருக்கிறேன். ஆனா லும் உனக்குத் தோல்வியில்லை” என்றார்.
இவ்வாறு அனுமதியும் ஆசியும் பெற்ற யுதிஷ்டிரன் ஆசாரி யரான துரோணரிடம் சென்று அவரையும் வலம் செய்து பணிந் தான். துரோணரும் தருமபுத்திரனை ஆசீர்வதித்தார்.
“பொருளானது எவனுக்கும் அடிமைப்படாது. மனிதனோ பொருளுக்கு அடிமைப்பட்டவன் ஆகிறான். நான் கௌரவர்களுக் குக் கட்டுப்பட்டுப் போனேன். அவர்கள் பக்கம் யுத்தம் செய் வேன். ஆயினும் உனக்கு ஜயம் நிச்சயம்” என்றார்.
இவ்வாறே கிருபரிடமும் மாமன் சல்லியனிடமும் போய்த் தருமபுத்திரன் ஆசி பெற்றுத் திரும்பினான்.
போர் துவங்கிற்று. முதலில் வீரர்களுக்குள் துவந்த யுத்தங் கள் நடந்தன. அதாவது சமமான ஆயுதங்களுடன் ஒருவரை ஒரு வர் தேடி எதிர்த்துச் சண்டை செய்தார்கள். பார்த்தனைப் பீஷ்மர் எதிர்த்தார். சாத்யகி கிருதவர்மாவை எதிர்த்தான். அபிமன்யு யி ருகத்பலனை எதிர்த்தான். துரியோதனனைப் பீமன் எதிர்த்தான். யுதிஷ்டிரன் சல்லியனை எதிர்த்தான். திருஷ்டத்யும்னன் துரோ ணரை எதிர்த்து இருவருக்கும் பெரும் போர் நடந்தது. இவ்வாறே அநேக வீரர்கள் யுத்த தருமப்படி துவந்த யுத்தம் நடத்தினார்கள்.
இவ்வாறு சம வீரர்களுக்குள் நடந்த ஆயிரக்கணக்கான துவ ந்த யுத்தங்களைத் தவிர ‘சங்குல யுத்தமும்’ நடைபெற்றது.யார் யாருடன் என்பதில்லாமல் ஒரே குழப்பமாகப் போர் நடப்பதற்கு “சங்குல யுத்தம்’ என்று பெயர். மிகவும் கோரமாக நடக்கும் அந்தச் சங்குல யுத்தங்களில் இருதரப்பிலும் எண்ணற்ற பேர்கள் பைத்தியம் பிடித்தவர்களைப் போல் போர் புரிந்து இறந்தார்கள். ரத்தமும் சதையும் மண்ணும் கலந்த சேற்றில் படையாட்களும் சாரதிகளும் யானைகளும் குதிரைகளும் கொன்று வீழ்த்தப்பட்டுத் தேர்களைச் செலுத்த இட நெருக்கடி உண்டாயிற்று. தற்கால யுத் தங்களில் துவந்த யுத்தம் என்பது நின்று போயிற்று. எல்லாம் சங் குலமாகவே நடைபெறுகிறது.
பீஷ்மர் தலைமையில் கௌரவ வீரர்கள் பத்து நாட்கள் யுத் தம் நடத்தினார்கள். பீஷ்மர் வீழ்ந்த பின் துரோணர் தலைமை வகி த்தார். துரோணரும் இறந்தபின் கர்ணன் கௌரவ சேனைக்குத் தலைவனானான். பதினேழாம் நாள் யுத்தத்தில் கர்ணன் இறந்தான். அதன் பின் சல்லியன் தலைமைவகித்துக் கௌரவசேனையை நடத்தினான்.
பாரத யுத்தம் பதினெட்டு நாள் நடந்தது. யுத்தத்தின் பிற் பகுதியில் அநேக கோரமான அதரும் முறைகள் கையாளப்பட்டன. தருமம் ஒரேநாளில் திடீர் என்று கெடுவதில்லை. அவ்வப் ப துசங் கடமான நிலைமைகள் நேரிட்டுத் தருமத்துக்குச் சோதனை உண்டா கிறது. பெரியோர்களும் தவறுகள் இழைத்து விடுகிறார்கள். பிறகு அதைப் பார்த்து மற்றவர்களும் அதருமத்தில் இறங்கி விடுகிறார் கள். இவ்வாறே அறம் ஒழிந்து மறம் ஓங்கும் காலம் உலகத்தை ஆட்கொள்கிறது.
முதல் நாள் யுத்தம்
கெளரவர்களுடைய பட்சத்தில் துச்சாதனன் சேனை முன் னணியில் சென்றான். அவ்வாறே பாண்டவர்கள் பட்சத்தில் பீமன் முன்னால் சென்றான். சிம்மநாதங்களும் சங்ககோஷங் களும் கொம்பு வாத்தியங்களும் பேரிகைகளின் கொட்டு முழக் கும் குதிரைகளின் கனைப்பும் யானைகளின் பிளிறலும் சேர்ந்து வானளாவிய முழக்கம் உண்டாயிற்று அம்புகள் விசையுடன், செல்லும் போது கொள்ளி நட்சத்திரங்கள் போல் ஜொலித்தன.
முதல் நாள் முற்பகலில் பாண்டவ சேனை பீஷ்மருடைய தாக்குதலினால் நடுக்கமுற்றது. அவருடைய ரதம் சென்ற வழி எல்லாம் காலனுடைய தாண்டவமாக இருந்தது. அருச்சுனன் மகன் அபிமன்யு இதைக் கண்டு பொறுக்காமல் பிதாமகரை எதிர்த்தான். இருபக்கத்துப் படை வீரர்களுக்குள் வயதில் சிறி யவனாகிய அபிமன்யு அனைவரிலும் மூத்தவரான பிதாமகரை எதிர்த்துத் தடுத்ததை தேவர்களும் நின்று பார்த்தார்கள்.அபி மன்யுவின் தேர்க்கொடியில் கர்ணீகார மரம் பொன்னால் சித்தரிக் கப்பட்டு விளங்கிற்று. கிருதவர்மனை ஒரு பாணத்தாலும் சல் லியனை ஐந்து பாணங்களாலும் பீஷ்மரை ஒன்பது பாணங்களா லும் அடித்தான். ஒரு அம்பினால் துர்முகியின் சாரதியின் தலை அறுபட்டுக் கீழே விழுந்தது. மற்றொரு பாணம் கிருபருடைய வில்லை ஒடித்தது. அபிமன்யுவின் யுத்த லாகவத்தைக் கண்டு தேவர்கள் புஷ்பமாரி பெய்தார்கள். பீஷ்மரும் அவரைப் பின் பற்றிய வீரர்களும் தனஞ்சயனுக்குக் தகுந்த மகன் வன் என்று பாராட்டினார்கள்.
பிறகு பல கௌரவவீரர்கள் அவனைச் சுற்றிக்கொண்டு தாக் கினார்கள். அமிமன்யு அசையவில்லை. பீஷ்மர் வில்லினின்று விடுபட்டுப் பாய வந்த அம்புகளையெல்லாம் அவன் தன்னுடைய அம்புகளால் துண்டித்தான். லட்சியம் தவறாமல் அவன் எய்த பாணங்களில் ஒன்று பீஷ்மருடைய பனைமரக் கொடியை அறுத்து பூமியில் வீழ்த்திற்று. பீஷ்மருடைய கொடி கீழே அறுபட்டு விழுந்ததைக் கண்டு பீமன் பெரு மகிழ்ச்சி அடைந்து உரத்த சிம்மநாதம் செய்தான். பெரியப்பனுடைய சிம்மநாதத்தைக் கேட்டு அபிமன்பு மேலும் உற்சாகமடைந்தான்.
பாலனுடைய அற்புதப் போரைக் கண்டு பீஷ்மர் மனம் பூரித்தார். தன் முழு பலத்தையும் அவன் மேல் பிரயோகிக்க வேண்டியதாயிற்றென்று வருத்தப்பட்டார். அபிமன்யுவின் மேல் பிதாமகருடைய வில் சரமாரி பொழிந்தது. விராடனும், அவன் மகன் உத்தரனும், துருபத குமாரனான திருஷ்டத்யும்னனும் பீமனும், எல்லாரும் அபிமன்யுவைக் காப்பாற்ற ஓடிவந்து பிதா மகரைத் தாக்கினார்கள். பீஷ்மர் அபிமன்யுவை விட்டுவிட்டு அவர் களை எதிர்க்க ஆரம்பித்தார்.
விராடன் மகன் உத்தரன் அச்சமயம் யானையின்மேல் ஏறிச் சென்று சல்லியனை எதிர்த்தாள். தேர்க் குதிரைகள் நான்கும் யானையால் மிதிபட்டு இறந்தன. இவ்வாறு தாக்கப்பட்ட சல்லி யன் சக்தியாயுதத்தை உத்தரன்மேல் வீசி எறிந்தான். அது உத் தரனுடைய கவசத்தைப் பிளந்து உட்சென்றது. அவன் கையிலிருந்த அங்குசமும் தோமரமும் நழுவி விழுந்தன. யானைப் பிடரி யினின்று உத்தரன் பிரேதமாகக் கீழே விழுந்தான்.
யானை சல்லியனைத் தாக்குவதை நிறுத்தவில்லை. சல்லியனும் கத்தியை எடுத்து யானையைத் தாக்கினான். துதிக்கை அறுபட்டு மர்மஸ்தானங்களில் பாணங்களால் அடிபட்டு யானையானது பயங் கரமான சப்தம் போட்டுக்கொண்டு கீழே விழுந்து மரித்தது. பிறகு சல்லியன் கிருதவர்மனுடைய தேரில் ஏறினான். அப்போது விராடனுடைய புத்திரன் சுவேதன் தன் தம்பி உத்தரன் கொல் லப்பட்டதைக கண்டு நெய்விட்ட அக்கினியைப்போல் ரௌத்ரா காரமாகத் தன் ரதத்தைச் சல்லியனை நோக்கி ஓட்டிவந்தான். சல்லியன் மிருதயுவின் வசமாய்விடுவான் என்று ஏழு ரதிகர்கள் அவனைக் காப்பாற்றுவதற்காக மிகவும் விரைவாக வந்து அவனை நாற்புறமும் சூழ்ந்துகொண்டு போர் செய்தார்கள். மேகங்கள் மின்னுவதைப் போல் ஜொலிக்கும் வில்கள் சுவேதன் பேரில் அம்பு மழை பொழிந்தன. கௌரவ வீரர்களின் விற்களை சுவேதன் தன் பாணங்களினால் அறுத்தான். அவர்கள் ஏழு பேரும் ஏழு கக்தி களைச் சுவேதன் பேரில் வீசினார்கள். அவன் அவற்றை உடனே ஏழு பல்லங்களாலே து ண் டித்தான். சுவேதன் செய்த யுததத் தைக் கண்டு இரு பட்சத்து வீரர்களும் வியந்தார்கள். சல்லிய னுடைய ஆபத்தான நிலைமையைக் கண்டு துரியோதனன் ஒரு பெரும் படையை அந்த இடத்திற்குச் செலுத்தினான். அதன் மேல் பயங்கரப் போர் நடந்து ஆயிரக்கணக்கில் வீரர்கள் மாண் டார்கள். தேர்கள் உடைத்து வீழ்த்தப்பட்டன. யானைகளும், குதிரைகளும் ஆயிரக்கணக்கில் செத்தன. சுவேதன் துரியோதன டைய படையைத் துரத்தியடித்துப் பீஷ்மரைத் தாக்கினான். இருவருக்கும் கோரமான யுத்தம் நடந்தது.
பீஷ்மருடைய தேர்க் கொடியைச் சுவேதன் அறுத்துத் தள் ளினான். பீஷ்மர் சுவேதனுடைய தேர்க் குதிரைகளையும் சொடி யையும் சாரதியையும் வீழ்த்தினார். அப்போது சுவேதன் ஒரு சக்தி ஆயுதத்தை எடுத்துப் பீஷ்மர்மேல் எறிந்தான். அதைப் பீஷ்மர் தம் பாணத்தால் தடுத்து விட்டார்.
அதன்பின் சுவேதன் கதாயுதத்தை எடுத்துச் சுழற்றிப் பீஷ்ம ருடைய தேரின் மேல் எறிந்தான். தேர் ஓடிந்து பொடியாகும் என்று தெரிந்த பீஷ்மர் தேரினின்று கீழே குதித்தார். அந்தக் கணம் கொடி மரத்துடன் தேர் சுக்கு நூறாயிற்று. பிதாமகர் கோபம் மேலிட்டு வேறு தேரின் மீதேறி வில்லை நன்றாக வளைத்து ஒரு அம்பைச் சுவேதன மேல் செலுத்தினார். விராடன் மகன் சுவேதனும் யமாலயம் சென்றான். துச்சாதனன் வாத்திய கோஷங் களோடு வெற்றிக் கூத்து ஆடினான். அதன் பிறகு பிதாமகர் பாண்டவ சேனையைத் தாக்கினார்.
முதல் நாள் யுத்தத்தில் பாண்டவ சேனை மிகவும் துன்புறுத் தப்பட்டது. தருமபுத்திரன் பயந்தான். துரியோதனனுடைய மகிழ்ச்சியோ கரை புரண்டு ஓடிற்று. பாண்டவர்கள் கிருஷ்ணனிடம் வந்து, “என்ன செய்வோம்?” என்று ஏங்கி ஆலோசனை செய்யலானார்கள்.
கிருஷ்ணன் யுதிஷ்டிரனைப் பார்த்து, “பரத சிரேஷ்டரே! கவலைப்படாதீர். சூரர்களான தம்பிகளைப் பெற்றிருக்கிறீர். நீர் ஏன் பயப்படுகிறீர், சாத்யகியும் விராடனும் துருபதனும் திருஷ் டத்யும்னனும் நானும் இருக்க உமக்கு ஏன் விசாரம்? பீஷ்மருடைய மரணத்துக்காகவே சிகண்டி காத்திருப்பதை மறந்தீரோ?” என்று தேற்றினார்.
இரண்டாம் நாள்
முதல்நாளில் பாண்டவசேனை பயத்தினால் பீடிக்கப்பட்ட தைக் கண்டு, சேனாதிபதியான திருஷ்டத்யும்னன் கவலைப்பட்டு அடுத்த தினம் தன் சேனையை மிக்க கவனத்தோடு வியூகப்படுத்தித் தைரியமும் உற்சாகமும் ஊட்டினான்.
துரியோதனனோ கர்வமடைந்து தன் சேனையின் நடுவில் நின்றுகொண்டு யுத்த வீரர்களைப் பார்த்து, “கவசம் பூண்ட வீரர் களே. நம்முடைய வெற்றி நிச்சயம். உயிரைப் பொருட்படுத்தா மல் போர் புரியுங்கள்” என்று கர்ஜனை செய்தான்.
பீஷ்மரின் தலைமையில் கௌரவப் படை மறுபடியும் பாண் டவ சேனையைப் பலமாகத் தாக்கிற்று. வியூகம் உடைந்துபோய்ப் பாண்டவ சேனையில் மறுபடியும் பெரும் நாசம் ஏற்பட்டது.
அருச்சுனன் தன் சாரதியாயிருந்த கிருஷ்ணனைப் பார்த்து, ‘நாம் இப்படியே அஜாக்கிரதையாக இருந்தோமானால் பீஷ்மர் நம்முடைய சேனை முழுமையையும் சீக்கிரமே நாசம் செய்துவிடு வார். பீஷ்மரை வதம் செய்தாலொழிய நம்முடைய சைன்யம் தப்பாது” என்றான்.
கிருஷ்ணன் “தனஞ்சய! இதோ பிதாமகருடைய ரதத்தை அடைவாய். தேரைச் செலுத்துகிறேன். அவரைத் தாக்க ஆயத் தம் செய்துகொள்” என்று சொல்லி அருச்சுனனுடைய தேரைப் பீஷ்மர் இருந்த இடத்தை நோக்கிச் செலுத்தினான்.
வேகத்தோடு தம்மை நோக்கி வரும் அருச்சுனனைக் கண்டு பிதாமகர் அவனை பாணங்களால் வரவேற்றார். வீரர்களுக்குள் முதன்மையானவர் என்று உலகம் எங்கும் புகழ் பெற்றிருந்த பீஷ்மர் நன்றாகக் குறி பார்த்துப் பார்த்தன் மேல் பாணங்களை விட்டார். பிதாமகரை எந்தக் காலத்திலும் ஜாக்கிரதையாகப் பாதுகாக்கும்படி சேனைக்குத் துரியோதனன் கட்டளை இட்டிருந் தான். பீஷ்மரைச் சுற்றியிருந்த வீரர்கள் அனைவரும் அருச்சுன னைத் தாக்கினார்கள்.
தனஞ்சயன் அதையெல்லாம் கொஞ்சமும் லட்சியம் செய்ய வில்லை. தனஞ்சயனை எதிர்த்துப் போர் செய்யக் கூடியவர்கள் கௌரவ சேனையில் பிதாமகரான பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகிய மூன்று பேர்களே; வேறு யாராலும் முடியாது என்பது பிர சித்தி. தன்னைத் தடுத்த வீரர்களின் கூட்டத்தில் அருச்சுனன் பிர வேசித்து மகாரதர்கள் அனைவரையும் பிரமிக்கச் செய்யும்படியான லாகவத்தோடு தேர்களிடையில் அவனுடைய தேர் அற்புதமுறை யில் இங்குமங்கும் கண்ணுக்குத் தெரியாமல் சஞ்சாரம் செய்தது. துரியோதனனுடைய ஹிருதயம் அப்போது கலங்கிற்று. பீஷ்மரிடம் வைத்திருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.
‘கங்கா புத்திரரே! நீரும் துரோணரும் உயிரோடிருக்கும் போதே இந்த அருச்சுனனும் கிருஷ்ணனும் நம்முடைய சேனை முழுவதையும் நாசம் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது. என் மேல் உண்மையான அன்பை வைத்திருக்கும் கர்ணன் உமக்காக ஆயுதம் எடுக்காமல் இருக்கிறான். நான் ஏமாற்றம் அடைவேன் போலிருக்கிறது. பல்குனனைக் கொல்லும்படியான வழியை நீர் உடனே தேட வேண்டும்” என்றான்.
பீஷ்மார்ஜுன யுத்தத்தைப் பார்க்கத் தேவர்களும் கந்தர் களும் வந்துவிட்டார்கள். இருவர் ரதங்களிலும் வெள்ளைக் குதிரைகள் பூட்டியிருந்தன. இருவரும் சம வீரர்களாகவும் போர்த் திறமை காட்டுவதில் மகிழ்ச்சி கொண்டவர்களாகவும் வெகு நேரம் யுத்தம் செய்தார்கள். இரு பட்சத்திலும் பாணங்கள் எண்ணற்ற கணக்கில் விடப்பட்டன. அம்புகள் அம்புகளை வெட் டித்தடுத்தன. சிலசமயம் பீஷ்மருடைய பாணங்கள் கிருஷ்ணன் மார்பிலும் பாய்ந்தன. காயங்களிலிருந்து ரத்தம் ஒழுகிப் பச்சை வண்ண மாதவன் மலர் பூத்த பலாச மரம் போல் முன்னை விட அழகாக ஜொலித்தான். மாதவன் காயம் பட்டதைக் கண்டு பார்த்தனுக்கு ஆத்திரம் பொங்கப் பிதாமகரைப் பலமாகத் தாக்கினான்.
ஆயினும் இருவரில் யாரும் ஜெயிக்க முடியாமல் அருச்சுன னும் பீஷ்மரும் வெகு நேரம் அற்புதப் போரை நடத்தினார்கள். இரு ரதங்களும் ஒன்றை ஒன்று தாக்கி இங்குமங்கும் செல்லும் போது இரு தரப்புச் சேனைகளுக்கும் கொடிகளின் அடையாளம் ஒன்றே வித்தியாம் தெரிந்தது. மற்றப்படி எங்கே பீஷ்மர் எங்கே அருச்சுனன் என்று சொல்ல முடியவில்லை.
பிதாமகரும் தனஞ்சயனும் யுத்தம் செய்து குருக்ஷேத்திரத்தி லிருந்த வீரர்களையும் வானத்திலிருந்த தேவர்களையும் வியக்கச் செய்து கொண்டிருக்கையில் மற்றொருபுறம் யுத்த களத்தில் துரோணரோடு அவருக்குப் பிறவிப்பகையும் பாஞ்சால ராஜன் மகனும் திரௌபதியின் சகோதரனுமான திருஷ்டத்யும்னனன் பெரும் போர் நடத்திக்கொண்டிருந்தான்.
துரோணர் திருஷ்டத்யும்னனைப் பலமாகத் தாக்கிக் காயங்கள் உண்டாக்கினார். ஆனால் திருஷ்டத்யும்னன் மனம் கலங்காமல் துவேஷச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு பாணங்களைப் பொழி ந்தான். துரோணரும் அவன் எய்த பாணங்களையும் வீசிய கத்தி யையும் கதாயுதத்தையும் வெகு சாமர்த்தியமாகத் தம் அம்பு களால் வெட்டித்துண்டாக்கினார். திருஷ்டத்யும்னனுடைய வில்லைப் பல தடவை துரோணர் அறுத்து வீழ்த்தினார். திருஷ்டத்யும்னனு டைய சாரதியும் வீழ்த்தப்பட்டான். அதன் மேல் கோபங்கொண்டு கதாயுதம் ஒன்றை எடுத்துத் தேரினின்று கீழே குதித்துத் துரோணர் மேல் பாய வந்தான். துரோணர் கதாயுதத்தையும் பாணங்களால் கீழே விழச் செய்தார். பாஞ்சாலன் ஆத்திரம் தாங்காமல் கத்தியை வீசிக்கொண்டு யானை மேல் சிங்கம் பாய் வது போல் துரோணரை நோக்கிச் சென்றான். துரோணர் சரங்க ளைப் பொழிந்து அவனைத் தடுத்து நடக்கவும் முடியாத நிலைமையை அவன் எய்தும்படி செய்தார். அந்தச் சமயத்தில் பீமசேனன் திருஷ்டத்யும்னனுடைய நிலைமையைத்தெரிந்து விரைவாக வந்து துரோணர் பேரில் பல பாணங்களை விட்டான். அவ்வாறு அவ காசம் செய்து கொண்டு பாஞ்சாலனைத் தன் தேரின் மேல் ஏற்றிக் கொண்டு சென்றான்.
இதைப் பார்த்த துரியோதனன் பீமனைத் தாக்கும்படி கலிங்கர் சேனைக்குக் கட்டளையிட்டான்.
பீமசேனன் தன்னை எதிர்த்த கலிங்கர் படையைச் சின்னா பின்னம் செய்து வெட்டி நாசமாக்கினான். காலனே பீமனைப் போல் உருவம் எடுத்து வந்து கலிங்கரை வதம் செய்கிறான் என்று சேனை முழுவதும் அலறிற்று. கௌரவ சேனை உற்சாகம் அழிந்து பயப்படுவதைப் பார்த்த பீஷ்மர் கலிங்கருடைய உதவிக்கு அந்த இடம் வந்து சேர்ந்தார். பீஷ்மர் பீமனைத் தாக்கச் சென்றதையறிந்து சாத்யகியும் அபிமன்யுவும் மற்றவர்களும் பீஷ் மரைத் தாக்கினார்கள். சாத்யகி விடுத்த ஒரு அம்பு பிதாமக ருடைய சாரதியை வீழ்த்திற்று. சாரதி வீழ்ந்ததும் குதிரைகள் பிய்த்துக்கொண்டு எதிர்பாராத வேகத்துடன் யுத்தகளத்தை விட்டு ஓடின. இதைப் பார்த்துப் பாண்டவ சைன்யம் குதூகலம் அடைந்து சூட்டோடு சூடாகக் கௌரவ சேனையைப் பலமாகத் நாக்கிற்று.
அருச்சுனன் அன்று காட்டிய பராக்கிரமத்தினால் கௌரவ சேனை மிகவும் சேதமடைந்தது. கெளரவ பட்சத்து வீரர்கள் உற்சாகம் இழந்து சூரியன் எப்போது மறைவான் என்று எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்கள்.
சூரியன் அஸ்தகிரி அடைந்ததும் பீஷ்மர் துரோணரைப் பார் த்து “யுத்தத்தை இப்போது நிறுத்துவதே உசிதம். நம்முடைய சேனையோ களைப்பும் பயமும் அடைந்திருக்கிறது என்றார். பாண்டவர் பக்கத்தில் தனஞ்சயன் முதலானோர் நான்கு வித வாத் திய கோஷங்களுடன் வெகு சந்தோஷமாகத் தங்கள் பாசறைகளுக் குத் திரும்பினார்கள். முதல் நாள் யுத்தத்தில் பாண்டவர்கள் பயந்தது போல் ரண்டாவது நாள் முடிவில் கௌரவர்கள் மனக் கலக்கத்தை அடைந்தார்கள்,
மூன்றாவது நாள் யுத்தம்
மூன்றாவது நாள் உதயமானதும் பீஷ்மர் தம் சேனையைக் கருட வியூகமாக அமைத்துத் தாமே அதன் முன்னணியில் நின் றார். துரியோதனன் வியூகத்தின் பின் பக்கத்தில் தன் பரிவாரத் துடன் நின்று காத்தான். மிக்க ஜாக்கிரதையாக எல்லா ஏற்பாடு களும் செய்யப்பட்டிருந்தபடியால் வியூகம் அன்று உடையவே உடையாது என்று கௌரவர்கள் நிச்சயமாக இருந்தார்கள்.
பாண்டவர்கள் தம் சேனையை நன்றாகவே அணி வகுத்தார்கள். தனஞ்சயனும் திருஷ்டத்யும்னனும் கெளரவர்களுடைய கருட வியூகத்தை வளைத்துத்’ தாக்கப் பாண்டவ சேனையை அர்த்த சந்திர வடிவமாக வகுத்தார்கள். பிறையின் வலப்பக்கத்துக் கொம்பில் பீமனும் இடக் கொம்பில் அருச்சுனனுமாகச் சேனை யை இரு பக்கத்திலும் காத்து நடத்தினார்கள்.
இவ்வாறு அணிவகுக்கப்பட்ட இரு சேனைகளும் ஒன்றை யொன்று தாக்கின. எல்லாப் பகுதிப் படைகளும் போரில் கை கலந்து ரத்தம் ஆறாக ஓடிற்று. தேரும் குதிரையும் யானையும் கிளப் பிய புழுதி சூரியனை மறைத்தது. தனஞ்சயன் மிகக் கடுமையாகத் தாக்கினான். ஆயினும் பகைவரின் வியூகத்தை உடைக்க முடியவில்லை.
பிறகு கௌரவர்களும் பாண்டவர்கள் வியூகத்தை உடைக்கப் பார்த்தார்கள். கௌரவரின் முழுப் பலமும் அருச்சுனன் மேல் செலுத்தப்பட்டது. பளபளவென்று மின்னும் கூரிய சக்தியாயுதங் களையும் பரிகங்களையும் ஈட்டிகளையும் முத்கரங்களையும் பரசுகளை யும் தனஞ்சயனுடைய தேரின் மேல் வீசினார்கள். விட்டிற் பூச்சிக் கூட்டத்தைப் போல் தன் ரதத்தை நோக்கி வரும் அஸ்திரங்களை அருச்சுனன் அற்புத சாமர்த்தியமாகத் தன் ரதத்தைச் சுற்றி அம்புகளை இடை விடாமல் செலுத்தி அரண் உண்டாக்கிக்கொண்டு தடுத்தான்.
மற்றொரு பெரும் படையோடு வந்த சகுனியை சாத்யகியும் அபிமன்யுவும் எதிர்த்தார்கள். சாத்யகியின் தேர் உடைந்து தூள் தூளாகப் போயிற்று. உடனே அவன் அபிமன்யுவின் தேரில் ஏறிக்கொண்டு ஒரே ரதத்தில் இருவருமாகச் சகுனியின் சேனையைத் தாக்கித் துவம்சம் செய்தார்கள். துரோணரும் பீஷ்மரும் இருவ ரும் சேர்ந்து தருமபுத்திரன் இருந்த படை வகுபபைத் தாக்கினார் கள். நகுல சக தேவர்கள் தருமபுத்திரனுக்குச் சகாயமாகச்சென் று துரோணருடைய படையை எதிர்த்தார்கள். பீமனும் கடோத் கசனும் சேர்ந்து துரியோதனனை எதிர்த்தார்கள். அந்தப் போரில் கடோத்கசன் தன் பிதாவையும் மிஞ்சும்படியான பராக்கிரமத் தைக் காட்டினான்.
பீமனுடைய பாணம் துரியோதனனை இடித்ததினால் அவன் மூர்ச்சையடைந்து ரதத்தில் பிரக்ஞையில்லாமல் சாய்ந்தான். இதைக் கண்டு அவனுடைய சாரதி தேரை வேகமாகப் போர்க களத்தினின்று அப்புறப்படுத்தினான். துரியோதனன் மூர்ச்சை யடைந்ததைக் கண்டு சேனை பீதி அடைந்து அணி வகுப்புக் கலைந்து போகும் என்று அவன் இவ்வாறு செய்தான். ஆனால் அதுவே குழப்பத்துக்குக் காரணமாயிற்று. துரியோதனன் யுத்தகளத்தை விட்டுப் போய் விட்டான் என்று கௌரவ சேனை கலக்க மடைந்து இங்குமங்கும் ஒழுங்கின்றி ஓடியதால் அணி வகுப்பு அடியோடு கலைந்து விட்டது. ஓட்டம் பிடித்த படைகளைப் பீம் சேனன் துரத்திச் சென்று பாணங்களால் துன்புறுத்தினான்.
இவ்வாறு கெளரவ சேனையானது சிதறியோடுவதைத் துரோ ணரும் பீஷ்மரும் மிகவும் கஷ்டப்பட்டுத் தடுத்து நிறுத்தினார்கள். துரியோதனனும் திரும்ப வந்து நாலாபக்கமும் சென்று சிதறிக் கிடந்த சேனையை மறுபடி ஒன்று கூட்டி அணி வுகுத்தான். அதன் மேல் அவன் சென்று பீஷ்மரிடம் ” நீரும் துரோணரும் நின்று தலைமை வகித்த சேனை இவ்வாறு சிதறியடிக்கப்பட்டு ஓடும் போது அந்த அவமானத்தை எவ்வாறு பொறுத்துக்கொண்டு சும்மா நிற்கிறீர்கள்? பாண்டவர்களிடம் உமக்குள்ள அன்பே இதற் குக் காரணம். ”பாண்டவர்களையும் திருஷ்டத்யும்னனையும் சாத் யகியையும் என்னால் எதிர்க்க முடியாது. அவர்கள் எனக்குப் பிரிய மானவர்கள்” என்று எனக்கு ஏன் முந்தியே வியக்தமாகச் சொல்லி யிருக்கக் கூடாது? இவர்களை எதிர்ப்பது உண்மையில் உங்களுக்குக் கஷ்டமல்ல. நீரும் துரோணரும் என்னைக் கை விடுவதாயிருந்தால் இப்போதாவது பளிச்சென்று சொல்லி விடலாம்” என்று பிதாமகரைத் தாக்கிப் பேசினான்.
தோல்வியினால் ஏற்பட்ட மனக் கலக்கத்தினாலும் தான்செய்த தவறுதல்கள் பீஷ்மருக்கு வெறுப்பாக இருப்பதை முதலிலிருந்து அறிந்திருந்தபடியாலும் துரியோதனன் இவ்வாறு பேசினான்.
மூர்க்கனுடைய பேச்சைக் கேட்டு பீஷ்மர் சிரித்தார். “அரசனே! உனக்கு நான் சந்தேகமறச் சொன்ன புத்திமதியை நீ கேட்க வில்லை. பாண்டவர்களை நீ ஜெயிக்க முடியாது என்கிற உண்மை யை உனக்கு நான் சொல்லியும் கேளாமல் நீ யுத்தத்தை ஆரம் பித்தாய். அது என் குற்றமல்ல. ஆயினும் உனக்காக நான் என் கடமையைச் செய்கிறேன். நான் கிழவன். என் சக்தியின் அள வில் நான் செய்யக் கூடியதைச் செய்வேன். என் முழு பலத்தை யும் வஞ்சனையின்றி உன் கண் முன்னால் செலுத்துவேன்” என்று துரியோதனனுக்குச் சொல்லி விட்டு மறுபடியும் போர் துவக்கினார்.
முற்பகலில் நடத்திய நிகழ்ச்சிகளின் பயனாகப் பாண்டவர்கள் மிகக் களிப்புற்றிருந்தார்கள். ஓடிய சேனையை ஒன்று சேர்த்து மறுபடியும் பீஷ்மர் தாக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. துரி யோதனன் இடித்துச் சொன்ன வார்த்தைகள் அவருடைய கோபத் தைத் தூண்டவே சுழலும் கொள்ளிக்கட்டையின் வட்டத்தைப் போல் அவருடைய சஞ்சாரம் யுத்த களத்தில் நாலா பக்கமும் பிர காசித்தது. அது வரையில் நடைபெறாத கொடூரமான யுத்தம் நிகழ்ந்தது. மாயையினால் தன்னைப் பல பீஷ்மர்களாகச் செய்து கொண்டாரோ என்று எல்லோரும் எண்ணும்படியாகப் பீஷ்மர் ரண களத்தில் எங்கு பார்த்தாலும் காணப்பட்டார். நெருப்பில் பூச்சிகள் வந்து விழுவது போல் வீரர்கள் அவரைத் தாக்கி டார்கள். பாண்டவ சேனை தைரியம் இழந்து சிதறிப் போக ஆரம் பித்தது. வாசுதேவனும் பார்த்தனும் சிகண்டியும் எவ்வளவு முயற் சித்தும் தடுக்க முடியவில்லை. அப்போது கிருஷ்ணன் “தனஞ் சயனே! உன்னுடைய சோதனைக் காலம் வந்துவிட்டது. பீஷ்மர் துரோணர் பந்து மித்திரர்கள் அனைவரையும் கொல்லப் போகிறேன் என்று நீ செய்த பிரதிக்ஞையை: நிறைவேற்ற வேண்டிய காலம் இப்போது வந்து விட்டது. நம்முடைய சேனை பயத்தில் நிலைதவறி யிருக்கிறது. இப்போது நீ பீஷ்மரைத் தாக்க வேண்டும்.” என்றான்.
“ரதத்தைச் செலுத்து” என்றான் அருச்சுனன்.
பீஷ்மரை நோக்கி மிக வேகமாகத் தனஞ்சயனுடைய தேர் சென்றது. பிதாமகர் அதைப் பார்த்துச் சரமாரி பொழிந்தார். அருச்சுனன் காண்டீபத்தை வளைத்து மூன்று பாணங்களைச் செலுத் திப் பீஷ்மருடைய வில்லை உடைத்தான். உடனே அவர் வேறொரு வில்லை எடுத்தார். அதுவும் முறிந்தது. அருச்சுனனுடைய லாகவ த்தைப் பார்த்து ஆசாரியர் மகிழ்ந்து “வீரனே வா! என்று சொல்லி வேறாரு வில்லை எடுத்துப் பிழையாத பாணங்களைப் பொழி ந்தார். அந்தத் தாக்குதலை அருச்சுனன் தடுத்த முறையானது கிருஷ்ணனுக்குத் திருப்தி தரவில்லை. பிதாமகருடைய தாக்குதல் பலமாக இருந்தது. அவர்பேரில் இவன் வைத்திருக்கும் கௌரவத் தால் இவனுடைய கைகள் சரியாக வேலைசெய்யவில்லை. தங்களுடைய படை பயந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் இவ்வாறு தயங்கினால் காரியம் கெட்டுப் போகும் என்று கிருஷ்ணன் தனக் குள்எண்ணினான். தேரை மிகத் திறமையாக வளைத்து வளைத்து ஓட்டினான். ஆயினும் உடலில் பல இடங்களில் அருச்சுனனும் கிருஷ்ணனும் அம்புகளால் அடிபட்டார்கள். ஜனார்த்தனனுடைய கோபம் பொங்கிற்று.
‘இதை இனிப் பொறுக்க முடியாது. பீஷ்மரை நானே கொல் லுவேன்! என்று கிருஷ்ணன் குதிரைகளின் கடிவாளத்தை விட்டு விட்டுச் சக்ராயுதத்தைக் கையில் பிடித்துத் தேரினின்று கீழே குதித்தான். குதித்துப் பீஷ்மர் இருந்த இடம் நோக்கி மிக வேக மாகச் சென்றான்,
பீஷ்மரோ இதைக் கண்டு கலக்கமடையவில்லை. சந்தோஷ முகத்தோடு “‘QUIT! வா! தாமரைக் கண்ணா! மாதவா! லோக நாதா! உன்னை வணங்குகிறேன். எனக்காகத்தேரிலிருந்து இறங்கினாயா? நீயே என் உயிரைக் கொள்வாயாக! மூவுலகத்தி லும் எனக்குப் புகழ் அளித்தவனாவாய்! உன் கையினால் நான் கொல் லப்பட்டால் மீளாப் பதவியை அடை வேன்’ என்று கூறினார்.
காரியம் கெட்டு விட்டது என்று அருச்சுனன் ரதத்தை விட் டுக் கீழே அதி வேகமாகச் சென்றுகொண்டிருந்த கிருஷ்ணனைத் துரத்திக்கொண்டு ஓடினான். வெகு சிரமப்பட்டுக் கிருஷ்ணனைப் பிடித்துக்கொண்டான். ‘கோபம் வேண்டாம்! திரும்புவாயாக. இந்தக் காரியத்தை நான் செய்கிறேன்” என்று அருச்சுனன் சொன்ன பின் கிருஷ்ணன் மறுபடியும் தேர் ஏறிக் குதிரைகளை நடத்தலானான்.
அதன் பின் அருச்சுனன் கெளரவப் படையைப் பலமாகத் தாக்கி ஆயிரக் கணக்கான பேர்களை வதம் செய்தான். அன்றுமாலை யுத்தம் முடிந்ததும் கௌரவ சேனை பெரும் தோல்வியுற்றுத் தீவட்டிகளின் வெளிச்சத்தில் பாசறை திரும்பிற்று.
“அருச்சுனன் வெற்றி பெறுவது தகுந்ததே. அவனுடைய சாமர்த்தியத்தை வேறு யார் படைத்திருக்கிறார்கள்?” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு போனார்கள்.
நான்காவது நாள்
யுத்த நிகழ்ச்சிகள் தினமும் ஒரே மாதிரியாகத்தான் இருக் கும். அடிப்பதும் கொல்லுவதும் தவிர வேறு ஒன்றுமே இல்லை. கதையில் சுவாரஸ்யம் இருக்காது. ஆயினும் பாரதக் கதையில் யுத்தமே பெரும் நிகழ்ச்சி. அதை விட்டு விட்டால் கதாபாத்திரங் களின் உணர்ச்சி வேகங்களை நாம் சரியாக உணர முடியாது.
பொழுது விடிந்தவுடன் பீஷ்மர் கெளரவ சேனையை மறுபடி அணி வகுத்தார். துரோணன் துரியோதனன் முதலியோரால் சூழப்பட்டு நின்ற பி தாமகர் தேவர்களால் சூழப் பட்ட வஜ்ஜிராயுதபாணியான இந்திரனைப் போல் விளங்கினார். அணி வகுக்கப்பட்ட சேனையானது மகா ரதங்களும் யானைகளும் குதிரைகளும் நிறைந்து, மேகமும் மின் னலும் இடி முழக்கமும் நிறைந்த மாரிக்காலத்து ஆகாயம் போல் விளங்கிற்று. பிதாமகர் சேனையை முன் செல்லக் கட்டளையிட் டார். வானரக் கொடி பறந்த தேரின் மேல் நின்ற அருச்சுனன் பிதாமகருடைய காரியங்களைத் தூரத்தினின்று பார்த்தான். அவ னும் ஆயத்தமானான். யுத்தம் தொடங்கிற்று.
அசுவத்தாமனும் பூரிசிரவசும் சல்லியனும் சித்திரசேனனும் சலனுடைய மகனும் ஆகிய ஐவர் அபிமன்யுவைச் சூழ்ந்துகொண்டு தாக்கினார்கள். ஐந்து யானைகளை ஒரு சிங்கம் எதிர்ப்பது போல் அவன் இந்த ஐவரையும் எதிர்த்துப் போர் புரிந்தான். பலர் சூழ் ந்து கொண்டு தன் குமாரனைத் தாக்குவதைப் பார்த்த அருச்சுனன் கோபங் கொண்டு சிம்மநாதம் செய்து மகனுக்கு உதவியாக வந்து சேர்ந்தான். அதன் மேல் போரின் வேகம் இன்னும் அதிகரித்தது. திருஷ்டத்யும்னனும் பெரியதொரு படையுடன் வந்து சேர்ந்தான்.
சலனுடைய மகன் கொல்லப்பட்டபடியால் சலனும் சல்லியனும் திருஷ்டத்யும்னனைப் பலமாகத் தாக்கினர். திருஷ்டத்யும்ன னுடைய வில்லைச் சல்லியன் ஒரு கூரிய பாணத்தை வீசி அறுத் தான். இதைக் கண்ட அபிமன்யு சல்லியன்மேல் அம்புகளைப் பொழிந்தான். அபிமன்யுவின் கோபத்தைப் பார்த்துச் சல்லியனுக்கு அபாயம் வந்தது என்று துரியோதனனும் அவனுடைய தம்பிக ளும் வந்து சல்லியனைச் சூழ்ந்து காத்தார்கள். அச்சமயம் பீமசேன னும் வந்து சேர்ந்து விட்டான்.
பீமன் கதாயுதத்தைக் கையில் எடுத்தான். அப்போது தன் தம்பிகளும் நடுங்கியதைக் கண்ட துரியோதனனுக்குக் கோபம் உண்டாயிற்று. பெரியதொரு யானைப் படையைப் பீமன் மேல் செலுத்தினான். யானையைக் கண்டதும் பீமன் ரதத்தினின்று இறங் கிக்கையில் ஒரு இ ம்புக் கதையை எடுத்துக்கொண்டு அந்த மிரு கங்களைத் தாக்கினான். அவை வெகுண்டு ஒன்றை ஒன்று தாக்க ஆரம்பித்தன.
பாண்டவச் சேனை வீரர்கள் அந்தச் சமயத்தை உப யோகித்து யானைகள் மீது சரங்களைப் பொழிந்து அவற்றை இன் னும் வெறி கொள்ளச் செய்து விட்டார்கள்.
பீமன் யானைக் கூட்டத்தில் பிரவேசித்து அவைகளை வெட்டிக் கொன்றது பூர்வத்தில் இந்திரன் மலைகளைப் பிளந்து வீழ்த்திய காட்சியைக் காட்டிற்று. அந்த மிருகங்கள் பெருங் கணக்கில் மாண்டு வீழ்ந்து அந்த யுத்த களத்தில் பர்வதங்கள் போல் கிடந்தன. எஞ்சித் தப்பின யானைகளும் இங்குமங்கும் ஓடி கௌரவப் படையையே நாசம் செய்தன. பிறகு துரியோதனனுடைய கட்ட ளைப்படி எல்லாப் படைகளும் பீமனை எதிர்த்தன. அவனோ அசை வற்று மேருவைப் போல் காட்சி தந்தான்.
அச்சமயம் பாண்டவ சைன்யத்தில் முக்கியமான வீரர்கள் அவனுக்குச் சகாயமாக வந்து சேர்ந்தார்கள்.
துரியோதனன் எய்த பல பாணங்கள் பீமசேனனுடைய மார்பில் தைத்துத் துன்பப்படுத்தின. பீமசேனன் மறுபடியும் தேரின் மேல் ஏறித் தன் சாரதியான விசோகனைப் பார்த்து ‘விசோகனே! இந்த யுத்த களத்தில் இப்போது என் முன்பாக திரு தராஷ்டிர புத்திரர்கள் இவ்வளவு பேரும் வந்து நிற்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. என்னுடைய ஆசையான மரத்தில் பழங்கள் தோன்றியவாறு இவர்கள் இன்று என் கையில் கிக்கினார்கள். குதிரைகளைச் சரியாக இழுத்துப் பிடித்து இவர்களை நான் யமா ல யம் அனுப்பப்போகிறேன்” என்றான்.
இவ்வாறு சொல்லி விட்டு வில்லை வளைத்துத் துரியோதனன் மேல் பல அம்புகள் செலுத்தினான். துரியோதனனுக்குக் கவசம் இல்லையேல் மாண்டிருப்பான். அன்று பீமன் துரியோதனனுடைய தம்பிகள் எண்மரை வதம் செய்தான். துரியோதனனும் பல பாண ங்களைப் பீமன் பேரில் செலுத்தினான். பீமன் பிடித்திருந்த வில்லை துரியோதனன் ஒரு அம்பைச் செலுத்தி ஒடித்தான். உடனே பீமன் வேறொரு வில்லை எடுத்து அதில் கத்தியைப் போன்ற அம்பைத் தொடுத்துச் சுயோதன்னுடைய வில் அறுபட்டுக் கீழே விழுமாறு செய்தான். துரியோதனனும் ம் வேறொரு வில்லை எடுத்துக் கோரமான ஒரு பாணத்தை எடுத்து நன்றாகக் குறி பார்த்துப் பீமனை நடு மார்பில் அடித்தான். அதன் வேகத்தால் பீமன் மூர்ச்சைய டைந்து உட்கார்ந்தான்.
இதைப் பார்த்த பாண்டவ வீரர்களான அபிமன்யு முதலான வர்கள் துரியோதனன் மேல் சரமாரி பொழிந்தார்கள். தகப்பனாரின் நிலைமையைக் கண்டு கடோத்கசனுக்கு கோபம் மேலிட்டுப் பெரும் போர் துவக்கினான். அந்தப் போரைக் கௌரவப் படையினால் தாங்க முடியவில்லை.
அதைப் பார்த்து பீஷ்மர் “இந்த அரக்கனோடு இன்று நாம் யுத்தம் செய்ய முடியாது. நம்முடைய சேனை களைத்துப்போ யிருக்கிறது. அஸ்தமன காலமும் ஆயிற்று. அரக்கனுக்கோ இரு ட்டே பலம் தரும். நாளைய தினம் பார்ப்போம் ” என்று துரோ ணருக்குச் சொல்லி விட்டுச் சேனையைத் திருப்பினார். துரியோத னன் தன் சகோதரர்களில் பலரை இழந்த துக்கத்தால் பீடிக்கப் பட்டுக் கண்களில் நீர் ததும்பப் பாசறையில் உட்கார்ந்து ஆழ்ந்து சிந்திக்கலானான்.
போரில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் சஞ்சயன் அவ்வப் போது சொல்லக் கேட்டுக்கொண்டிருந்த திருதராஷ்டிரன் “அப்பா சஞ்சயா! என்னைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டார்கள், துன் பப்பட்டார்கள் என்றே எப்போதும் சொல்லி வருகிறாயே? எனக்கு மிகவும் துக்கம் உண்டாகிறது. எந்த உபாயம் செய்து நம்மவர்கள் ஜெயிக்கப்போகிறார்கள்? எனக்குத் தாங்க முடியாத பயமாக இருக் கிறதே! முயற்சியைக் காட்டிலும் விதியே பெரிது போலிருக் கிறது” என்றான்.
அதைக் கேட்ட சஞ்சயன் “அரசனே! இந்த அநியாயம் உம் முடைய காரியமே அல்லவா? மனக்கலக்கமடையாமல் உறுதியான மனத்துடன் நிகழ்ச்சிகளைக் கேட்கவேண்டும்” என்றான்.
விதுரனுடைய வாக்கியங்கள் நிச்சயமாகி வருகின்றன” என்று திருதராஷ்டிர மகாராஜன் சொல்லிக்கொண்டு பெருந் துய ரத்தில் மூழ்கினான்.
ஐந்தாம் நாள்
யுத்த களத்தில் அவ்வப்போது நடைபெற்றவையெல்லாம் சஞ்சயன் கண்ணில்லாத கிழ அரசனுக்குச் சொல்லி வரும்போது துக்கத்தைத் தாங்க முடியாமல் பிரலாபிப்பான்.
“கைகளால் நீந்தி ஒருவன் கடலைத் தாண்டி அக்கரையை அடைய முடியாததைப்போல் இந்தப் பெருந் துக்கத்தின் அக் கரையை நான் காணப் போவதில்லை. என் புத்திரர்கள் அனைவரை யும் பீமன் கொல்லப் போகிறான். அவர்களைக் காப்பாற்றக் கூடிய வீரன் நம்முடைய சேனையில் யாரும் இருப்பதாக நான் எண்ண வில்லை. யுத்தத்தில் நம்முடைய சேனை பயந்து ஓடியதைப் பீஷ்ம ரும் துரோணரும் கிருபரும் ஏசுவத்தாமனும் சும்மா பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்கள் என் மக்களுக்கு என்ன உதவி எப்போ செய்யப் போவதாக எண்ணி இருக்கிறார்கள்? என் புத்திரர்கள் எவ்வாறு மிஞ்சப் போகிறார்கள்?” என்று சொல்லிக் கிழவன் அழுதான்.
“அரசனே! சாவதானமாக இருக்க வேண்டும். பாண்டவர் கள் தரும மார்க்கத்தில் செல்லுகிறார்கள். ஆனபடியால் யுத்தத் தில் வெற்றி பெறுகிறார்கள். உம்முடைய புத்திரர்கள் வீரர் களாயினும் கெட்ட எண்ணமுடையவர்கள். ஆனபடியால் க்ஷண தசை அடைகிறார்கள். அவர்கள் பாண்டவர்களுக்கு அநேக அ காரங்கள் செய்திருக்கிறார்கள். அந்தச்செயல்களின் பயனை இப் போது அனுபவிக்கிறார்கள். பாண்டவர்கள் மந்திரமாவது மாயமா வது ஒன்றும் செய்யவில்லை. க்ஷத்திரியர்கள் யுத்தம் செய்கிற முறையில்தான் செய்து வருகிறார்கள்.நியாய வழியில் சென்றபடி யால் பலம் பெற்றிருக்கிறார்கள். மித்திரர்கள் சொன்னதை நீர் கேட்கவில்லை. விதுரரும் பீஷ்மரும் துரோணரும் நானும் தடுத்த போது உம்முடைய வழியிலேயே சென்றீர். நோயாளி மருந்தைச் சாப்பிட மாட்டேன் என்று மூர்க்கமாக நடந்து கொள்வதைப் போல் நீர் மகனுடைய அபிப்ராயத்துக்கு இணங்கிக் குலத்துக்குப் பத்தியமான சொல்லை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது தவிக் கிறீர். துரியோதனனும் நான்காம் நாள் இரவில் உம்மைப் போ லவே பீஷ்மரைக் கேட்டான். அவர் சொன்னதைக் கேளும்” என்று கதையைச் சொல்ல ஆரம்பித்தான் சஞ்சயன்.
நான்காம் நாள் யுத்தம் முடிந்தபின் இரவில் பிதாமகரிடம் தனியாகச் சென்று துரியோதனன் நீரும் துரோணரும் கிருப ரும் அசுவத்தாமாவும் கிருதவர்மாவும் சுதக்ஷணனும் பூரிசிரவசும் விகர்ணனும் பகதத்தனும் யமனுக்குப் பயந்தவர்கள் அல்லவென்று உலகத்துக்கெல்லாம் தெரியும். உங்களுடைய வல்லமைக்கு வரம்பே இல்லை என்பதில் இல்லை என்பதில் சந்தேகமில்லை பாண்டவர்கள் எல் லாம் ஒன்று சேர்ந்தாலும் உங்களில் ஒருவரை வெல்ல முடியாது. இப்படி இருந்தும் குந்தி புத்திரர்கள் நம்மைத் தினமும் தோற்கடித்து வருவதன் ரகசியம் என்ன? என்று வணக்கமாகக் கேட்டான்.
பீஷ்மர் “ராஜனே! நான் சொல்லுவதைக் கேள். பலவிதத் தில் உனக்கு நான் இதத்தைச் சொன்னேன். நீ பெரியோர் சொன் னதைச் செய்யவில்லை. பாண்டவர்களிடம் நீ சமாதானமாகப் போவதே நலம். அவ்வாறு செய்வது உனக்கும் உலகத்துக்கும் நல்லது. ஒரே குலத்தைச் நேர்ந்த நீங்கள் இந்த ராஜ்யத்தைச் சுகமாக அனுபவிக்கலாம். இவ்வாறு நான் உனக்கு முன்னமே சொன்னதை நீ கேட்கவில்லை. பாண்டவர்களை அவமதித்தாய். அதன் பயனை அடைகிறாய். ஸ்ரீ கிருஷ்ணனாலே காக்கப்பட்டிருக் கும் பாண்டவர்கள் வெற்றியடைவதில் சந்தேகமில்லை. இப்போ தும் சமாதானமாகப் போகலாம். பலசாலிகளான சகோதரர்களைச் சிநேகம் செய்து கொண்டு பூமியை அனுபவிக்கலாம். நரநாரா யணர்களாகிய தனஞ்சயனையும் கிருஷ்ணனையும் அவம்தித்தாயா னால் நீ நாசமடைவாய்” என்றான்.
துரியோதனன் விடை பெற்றுக்கொண்டு தன் இருப்பிடம் சென்று படுக்கையில் படுத்தான். ஆனால் தூக்கம் வரவில்லை.
மறு நாள் பொழுது விடிந்தவுடன் பழையபடி இரண்டு படை களும் யுத்தத்துக்கு நின்றன. பீஷ்மர் கௌரவ சேனையைப் பலமாக வியூகப்படுத்தினார். பாண்டவ சேனையும் யுதிஷ்டிரனால் நன்றாக வியூகப்படுத்தப்பட்டிருந்தது. பீமசேனன் வழக்கம் போல் முன்னணி யில் நின்றான். சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் அடுத்தாற் போல சேனையைக் காத்து நின்றார்கள். மற்ற வீரர் கள் அதற்கும் பின்புறமாக நின்றார்கள். அனைவருக்கும் பின் தருமபுத்திரனும் நகுலசகதேவர்களும் இருந்தார்கள்.
பீஷ்மர் வில்லை வளைத்து அஸ்திரங்களை விட ஆரம்பித்தார். வெகு சீக்கிரம் பாண்டவ சேனையைக் கவலை அடையச் செ ய்தார். சேனை சிதறுவதைப் பார்த்த தனஞ்சயன் பீஷ்மரைப் பல அம்புக களால் துன்புறுத்தினான்.
துரியோதனன் தன் வழக்கம்போல் துரோணரிடம் சென்று தாக்கிப் பேசிக் கோபமூட்டினான். அவர் “மூர்க்கனே! பாண்ட வர்களுடைய பராக்கிரமத்தை அறியாமல் நீ பேசுகிறாய்! ஆயி னும் என்னால் வஞ்சனை இல்லை” என்று சொல்லிப் பாண்டவ சேனையைப் பலமாகத் தாக்கினார். சாத்யகிக்கும் துரோணருக் கும் பயங்கரமான யுத்தம் நடந்தது. சாத்யகி துரோணருடைய கண்டு பீமசேனன் தாக்குதலைத் தாங்க முடியாமலிருந்ததைக் துரோணரைத் தாக்கினான்.
அதன் மேல் யுத்தம் இன்னும் அதிக வேகம் கொண்டது. துரோணரும் பீஷ்மரும் சல்லியனும் சேர்ந்து பீமனை எதிர்த்தார் கள். அச்சமயம் சிகண்டி பீஷ்மர் பேரிலும் துரோணர் பேரிலும் அம்புமாரி பொழிந்தான். சிகண்டி நுழைந்ததும் பீஷ்மர் விலகிச் சென்றார். சிகண்டி ஆண் பிறப்பல்ல என்றும் பெண்ணாகப் பிற ந்து வளர்ந்தவன் என்றும் க்ஷத்திரியனுக்குப் பெண்ணோடு போர் புரிவது அதருமம் என்றும் பீஷ்மருடைய கொள்கை. இதுவே, கடைசியில் பிதாமகருடைய மரணத்துக்கும் காரணமாகும் என்று விதிக்கப்பட்டிருந்தது.
பீஷ்மர் விலகியதைப் பார்த்துத் துரோணர் சிகண்டியை எதிர்த்தார். மகாரதனான சிகண்டியினால் துரோணருடைய எதிர்ப் பைத் தாங்க முடியவில்லை. எனவே பின் திரும்பினான்.
முற்பகல் முழுவதும் கோரமான சங்குல யுத்தம் நடந்தது. சேனை முழுவதும் கைகலந்து இரு பக்கத்திலும் வரம்பற்ற கொலை நடந்தது. பிற்பகலில் துரியோதனன் சாத்யகியை எதிர்க்கப் பெரும் படையை அனுப்பினான். சாத்யகி அந்தப் படையை முற்றிலும் நாசம் செய்து விட்டுப் பூரிசிரவஸைத்தேடி எதிர்த்தான். அவனோ மகா பராக்கிரமசாலி. சாத்யகியின் படையைத் தாக்கி அவர்கள் அனைவரும் புறங்காட்டி ஓட்டம் பிடிக்கச் செய்தான். சாத்யகி ஒருவனே நின்றான். சாத்யகியின் நிலைமையைப் பார்த்து அவனு டைய பத்துக் குமாரர்களும் வந்து பூரிசிரவஸைத் தாக்கினார்கள்.
ஒன்று கூடி வந்த அந்தப் பத்து வீரர்களையும் பூரிசிரவசு ஒருவனே எதிர்த்துப் போர் புரிந்தான். பத்துப் பேரும் அவனைச் சூழ்ந்து கொண்டு சரமாரி பொழிந்தார்களாயினும் அவன் அவர்க ளுடைய விற்களைத் தன் அம்புகளால் சேதித்து அவர்கள் பதின் மரையும் யமாலயம் அனுப்பினான். சாத்யகியின் பத்துக் குமாரர் களும் இடி விழுந்த மரங்களைப் போல யுத்த களத்தில் விழுந்தார் கள். தன் புத்திரர்கள் கொன்று வீழ்த்தப்பட்டதைக் கண்ட சாத்யகி சோகமும் கோபமும் மேலிட்டுப் பூரிசிரவசின் மேல் பாய்ந்தான். இருவருடைய ரதங்களும் உடைந்து நாசமாயின. அதன்பின் கத்தியும் கேடயமுமாகத் தரையில் நின்று இருவரும் ஒருவரை யொருவர் எதிர்த்தார்கள். அந்தச் சமயம் பீமசேனன் அவ்விடம் வந்து சாத்யகியின் முன் நின்று யுத்தத்தைத் தடுத்து அவனைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு போய் விட்டான். கத்திச் சண்டையில் யாரும் பூரிசிரவசை ஜெயிக்க முடியாது என்று னுக்குத் தெரியும். ஆகையால் இவ்வாறு சாத்யகியைத் தடுத்தான்.
அன்று மாலை ஆயிரக் கணக்கில் வீரர்கள் அருச்சுனனால் வதம் செய்யப்பட்டார்கள். பார்த்தனை எதிர்த்துக் கொல்லுவதற்காகத் துரியோதனன் அனுப்பிய படை வீரர்கள் அவ்வளவு பேரும் நெருப் பில் பூச்சிகள் விழுந்து சாவது போல் மாண்டார்கள். பாண்டவர்க ளின் சேனையிலிருந்த அரசர்கள் தனஞ்சயனைச் சூழ்ந்துகொண்டு ஜெயகோஷம் செய்தார்கள். அச்சமயம் சூரியன் மறைந்தான். பீஷ்மரின் கட்டளைப்படி ஈளைப்புற்ற குதிரைகளும் யானைகளுமாக எல்லோரும் யுத்த பூமயை விட்டுச் சென்றார்கள்.
ஆறாம் நாள் யுத்தம்
யுதிஷ்டிரன் கட்டளைப்படி அடுத்த நாள் திருஷ்டத்யும்னன் பாண்டவ சேனையை மகர வியூமாக அணி வகுத்தான். கெளரவப் படை கிரௌஞ்ச வியூகத்தில் அமைக்கப்பட்டு நின்றது. சேனா வியூகங்களுக்குப் பட்சி பிராணிகளின் பெயர்களைக் கொடுத்து வந்தார்கள். தேகப் பயிற்சி முறையில் செய்து வரும் ஆசனங் களுக்கு இவ்வாறு பிராணிகளின் பெயர்களை வைத்துச் சொல்லுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். படையின் அணி வகுப்புக்கும் அவ்வாறே பெயர்களைக் கொடுத்து வந்தார்கள். படைகளின் பரப்பமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும். எந்த எந்தப் படைப் பகுதிகள் எந்த எந்த இடத்தில் நின்று யார்யார் எந்தப் ஸ்தானங்களில் தலைமை வகிக்கவேண்டும் என்றெல்லாம் நிச்சயித் துக் காப்புக்கும் தாக்குதலுக்கும் ஒழுங்காக ஏற்பாடுகள் செய்துவரு வதே வியூகம். வியூகத்தின் வெளித்தோற்றம் மீன் பருந்து முதலிய பிராணிகளின் தேகத்துக்கு ஒப்புவமை கண்டு பெயரிட்டார்கள். அக்காலத்து யுத்த சாஸ்திரத்தில் பல வியூகங்கள் கண்டிருந்தன.
ஒவ்வொரு நாளும் பாரதப் போரில் அன்று எந்த நோக்கத்து டன் விசேஷமாகக் காரியங்கள் நிறைவேற்ற வேண்டும்; எந்தப் போக்கில் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதையெல்லாம் உத்தே சித்து அதற்குத் தக்கவாறு வியூக வேறுபாடுகளில் சேனாபதிகள் தேர்ந்தெடுத்து நிச்சயித்து வந்தார்கள்.
ஆறாவது நாள் யுத்தத்தில் காலையிலேயே ஆள் சேதம் பெரிய அளவில் நடக்க ஆரம்பித்தது.
துரோணருடைய சாரதி கொல்லப்பட்டான். சாரதியற்ற தேரைத் துரோணர் தாமே கடிவாளம் பிடித்து நடத்திப் பஞ்சுக் குவியலை நெருப்பு எரிப்பது போல் பாண்டவ சேனையை நாசம் செய்தார்.
சீக்கிரத்திலேயே இரண்டு வியூகங்களும் உடைந்து போயின. அதன் மேல் இரண்டு பக்கத்துச்சேனைகளும் வரம்பின்றிக் கைகல ந்துகோரமாகப் போர் புரிந்தன. ரத்தம் ஆறாகப் பெருகிற்று. களம் முழுவதும் உயிர் நீத்த படை வீரர்களும் யானைகளும் குதிரைக ளும் உடைந்த தேர்களுமாகக் குவிந்தன.
பீமசேனன் பகைவர்களின் சேனைக்குள் புகுந்து துரியோதன் னுடைய சகோதரர்களைக் கண்டு பிடித்து வீழ்த்த வேண்டுமென்று தேடிச் சென்றான். அவர்களும் வெகு சீக்கிரமே அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். துச்சாதனன், துர்விஷஹன், துர்மதன், ஐயன், ஜயத்சேனன், விகர்ணன், சித்திரசேனன், சுதர்சனன், சாருசித்தி ரன், சுவர்மன், துஷ்கர்ணன் முதலிய பலர் பீமசேனனைச் சுற்றிக் கொண்டு ஒரே சமயத்தில் தாக்கினார்கள். பயம் என்பது என்ன வென்பதையே அறியாத வாயுபுத்திரன் அவ்வளவு பகைவர்களை யும் ஒரே சமயத்தில் நின்று எதிர்த்தான். உயிரோடு அவனைப் பிடி க்க வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை. அவர்களனைவரை யும் கொல்ல வேண்டும் என்பது பீமனுடைய ஆசை. போர் உக்கிரமாக நடந்தது. தேவாசுர யுத்தத்தைப் போலவே இருந்தது. திடீரென்று பாண்டு புத்திரன் பொறுமை இழந்து தன்னுடைய ரத த்தை விட்டு இறங்கிச் கதாயுதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு “சாரதியே நீ இங்கேயே நில். நான் முன் சென்று இந்தத் திருத ராஷ்டிர குமாரர்கள் அனைவரையும் கொன்று முடித்து ட்டு வரு கிறேன். அது வரையில் நீ இவ்விடத்திலேயே இரு” என்று சாரதி விசோகனுக்குச் சொல்லிவிட்டுப் பகைவர்களின் கூட்டத்திற்குள் நுழைந்தான். குதிரைகளையும் குதிரைக்காரர்களையும் தேர்களை யும் நாசமாக்கிக்கொண்டு காலதண்டத்தை எடுத்து வந்த அந்த கனைப்போல் பீமன் கௌரவ சேனைக்குள் புகுந்து திருதராஷ்டிர மக்கள் நின்ற இடம் சென்றான்.
தேர் ஏறிய பீமன் பகைவர்கள் படைக்குள் மறைந்ததைப் பார்த்த திருஷ்டத்யும்னன் விரைவாக அவனைப் பின் தொடர்ந்து சென்றான். அவனுடைய தேரைக் கண்டு பிடித்துப் பார்க்கையில் சாரதி மட்டும் இருந்துகொண்டு பீமன் இல்லாததைக் கண்டான், திகைத்துப் போய்க் கண்ணில் நீர் ததும்ப சாரதியைப் பார்த்து,
“விசோக! எனக்கு உயிரைக் காட்டிலும் பிரியனான பீமன் எங்கே?” என்று கேட்டான்.
துருபத குமாரனை வணங்கி விசோகன் பாண்டு புத்திரன் என்னை இங்கே இருக்கச் சொல்லிவிட்டுத் திருதராஷ்டிர புத்திரர் ரர்கள் தேர்கள் ஒன்று கூடி நின்ற சேனாசமுத்திரத்துக்குள் கதை எடுத்துக்கொண்டு பாதசாரியாக நுழைந்து மறைந்தான்!’ என்றான்.
இதைக் கேட்டு பீமசேன்னை அனைவரும் சேர்ந்து கொன்றே விடுவார்கள் என்று எண்ணி மிகவும் கவலைப்பட்ட திருஷ்டத்யும் னனும் பகைவர் சேனைக்குள் புகுந்தான். பீமனுடைய கதாயுதத் திற்கு இரையாகி அடிபட்டுக் கிடந்த யானைகளைக் கொண்டே யுத்த களத்தில் வழி பார்த்துக்கொண்டு சென்றான்.
பகைவர்களுக்கிடையில் பீமனைக் கண்டான். நான்கு பக்கங்க ளிலும் ரதம் ஏறி எதிர்க்கும் பகைவர்களால் சூழப்பட்டு உடம் பெல்லாம் காயங்கள் பட்டுக் கோபாக்னி கக்கிக் கொண்டு கையில் கதாயுதம் பிடித்தவனாக பீமன் நின்றான், திருஷ்டத்யும்னன் அவனைத் தழுவித் தன் தேரில் ஏற்றிக்கொண்டு அவன் உடலில் பதிந்திருந்த அம்புகளை யெல்லாம் எடுத்தான்.
அப்போது துரியோதனன் கட்டளையின் பேரில் பல வீரர்கள் ஒன்று சேர்ந்து துருபதன் மகனையும் பீமனையும் தாக்கினார்கள். இவர்களைக் கொல்லுங்கள். அவர்கள் யுத்தம் கோராமலிருக்கவே அவர்களைத் தாக்குங்கள்” என்று துரியோதனன் கட்டளையிட் டான். அவ்வாறே யுத்தத்துக்கு அழைக்காத பீமனையும் திருஷ்டத் யும்னனையும் அவர்கள் தாக்கினார்கள்.
அப்போது திருஷ்டத்யும்னன் துரோணரிடம் கற்ற ஒரு ரக சிய அஸ்திரத்தை விட்டு எதிரிகளைப் பிரக்ஞை இழக்கச்செய்தான். அச் சமயம் துரியோதனன் வந்து மோகனாஸ்திரத்துக்கு மாற்றான வேறொரு அஸ்திரம் பிரயோகம் செய்து கௌரவ வீரர்களைப் பிரக்ஞை பெறச் செய்து உற்சாகப்படுத்தித் திருஷ்டத்யும்னனனைத் தாக்கினான்.
இதற்குள் யுதிஷ்டிரர் அபிமன்யுவின் தலைமையில் பன்னி ரண்டு ரத வீரர்களுடன் படையை அமைத்துப் பீமனும் திருஷ்ட த்யும்னனும் இருந்த இடத்துக்கு அனுப்பினார். சுபத்திரையின் வீர குமாரன் படையுடன் வந்ததைப் பார்த்துத் திருஷ்டத்யும்னன் மிகுந்த சந்தோஷமடைந்து போரை நடத்தினான். பீமனும் அதற் குள் தண்ணீர் குடித்து இளைப்பாறிக் கேகய ராஜனுடைய தேரில் றி யுத்தத்தில் கலந்து கொடான். ஆனால் துரோணருடைய பராக்கிரமம் அன்று வெகு உக்கரமாக இருந்தது. திருஷ்டத்தும்ன னுடைய சாரதியையும் குதிரைகளையும் கொன் று அவனுடைய தேரையும் உடைத்து விட்டார். தேரிழந்த துருபது குமாரன் உடனே அபிமன்யுவினுடைய தேரில் ஏறி யுத்தத்தை நடத்தினான். பாண்டவர்களுடைய சேனை நிலையிழந்து நடுக்கமுற்றது. துரோண ரைக் கௌரவ வீரர்கள் மிகவும் பாராட்டினார்கள்.
அதன் மேல் கோரமான சங்குல யுத்தம் நடந்தது. ஆயிரக் கணக்கான வீரர்களும் படையாட்களும் மாண்டார்கள். துரியோ தனன் பீமனை நேரே சந்தித்தான். இருவருக்குமுள்ள பகைமையை முதலில் பேச்சில் வெளிப்படுத்திய பிறகு போர் தொடங்கிற்று. தேர்களில் நின்று இருவரும் ஒருவரை யொருவர் பலமாகத் தாக்கி னார்கள். துரியோதனன் பலமாக அடிபட்டு மூர்ச்சையடைந்து விட் டான். அதன் பேரில் கிருபர் அவனைச் சாமர்த்தியமாகத் தன்தேரில் ஏற்றிக்கொண்டு காப்பாற்றினார். பீஷ்மரும் அச்சமயம் வந்து விட்டார். அவ்விடத்தில் நடந்த யுத்தத்தைத் தாமே நடத்திப் பாண்டவப் படைகளைத் துரத்தியடித்தார். சூரியன் சிவந்து அஸ்த மிக்கும் சமயமாக விருந்தும் ஒரு முகூர்த்தம் மகா பயங்கரமான போர் நடந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் மாண்டார்கள். அதன் பிறகு போர் நிறுத்தப்பட்டது. திருஷ்டத்யும்னனும் பீமனும் உயிருடன் திரும்பியது தருமபுத்திரனுக்கு அளவற்ற சந்தோஷம் தந்தது.
ஏழாவது நாள் யுத்தம்
உடல் முழுவதும் அம்புகள் தைத்துத் துன்பப்பட்டவனாய் துரியோதனன் பீஷ்மரிடம் சென்று ”ஒவ்வொரு தினமும் பாண் டவர்கள் வெற்றி பெற்று நம்முடைய சேனையின் வியூகத்தைப் பிளந்தும் சூரர்களைக் கொன்றும் வருகிறார்களே, நீர் சும்மா இருக் கிறீரே! ”என்றான்.
பீஷ்மர் துரியோதனனுக்கு ஆறுதல் மொழிகள் சொன்னார்: “நானும் துரோணரும் சல்லியனும் கிருதவர்மாவும் அசுவத் தாமாவும் விகர்ணனும் பகதத்தனும் சகுனியும் அவந்தி தேசத்து இரு சகோதரர்களும் திரிகர்த்தராஜனும் மகத தேசாதிபதியும் கிருபாச்சாரியாரும் உனக்காக உயிரையும் விடத் தயராக இருக் கும்போது நீ ஏன் மனத் தாழ்ச்சி அடைகிறாய்? வேண்டாம்” என்று சொல்லிச் சேனையை அன்றைய யுத்தத்திற்கு அணிவகுத்தார்.
“இதோ பார், ஆயிரக்கணக்கான ரதங்களும், குதிரைகளும், குதிரை வீரர்களும், சிறந்த யானைகளும் அநேக தேசங்களிலிருந்து வந்து ஆயுதம் எடுத்து நிற்கும் காலாட்படைகளும் கொண்ட இந்தச் சேனையை வைத்துக்கொண்டு தேவர்களையும் ஜயிக்க முடியும்; பயப்பட வேண்டாம்!” என்று சொல்லித் துரியோதனனுக்குக் காயங்களை நீக்கும் சிறந்த ஔஷதத்தையும் தந்தார்.
அவன் அதைத் தன் தேகத்தில் பூசிக்கொண்டு அம்பு பொத் திய காயங்களை யெல்லாம் நீக்கிக்கொண்டு தைரியமாகவும் உற் சாகமாகவும் யுத்தத்துக்குச் சென்றான். அன்று கௌரவப் படை மண்டல வியூகமாக அணிவகுக்கப்பட்டது. ஒவ்வொரு யானைக்குப் பக்கத்தில் ஏழு தேர்களும் ஒவ்வொரு தேருக்குத் துணையாக ஏழு குதிரை வீரர்களும் ஒவ்வொரு குதிரை வீரனுக்குத் துணையாகப் பத்து வில்லாளிகளும், வில்லாளி ஒவ்வொருவனுக்கும் பத்துக் கேடயக்காரர்கள் காப்பாகவும் நின்றார்கள். எல்லா வீரர்க ளும் நல்ல கவசம் பூண்டிருந்தார்கள். இந்தப் பெருஞ் சேனையின் மத்தியில் தேரின்மேல் நின்ற துரியோதனன் இந்திரன் போல் விளங்கினான்.
யுதிஷ்டிரர் பாண்டவ சேனையை “வச்சிர” வியூகமாக அணி வகுத்தார். அன்று நடந்த யுத்தத்தில் அநேக முனைகளில் பெரும் போர் நடைபெற்றது. அருச்சுனனுடைய தாக்குதலைப் பீஷ்மரே எதிர்த்தார். மற்றொரு முனையில் துரோணரும் விராடனும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போர் நடந்தது. வேறாரு முனையில் சிகண்டிக்கும் அசுவத்தாமனுக்கும் பெரும் யுத்தம் நிகழ்ந்தது. மற்றொரு இடத்தில் துரியோதனனும் திருஷ்டத்யும்னனும் கைகல ந்தார்கள். நகுல சகதேவர்களும் தங்கள் மாமனான சல்லியனைத் தாக்கினார்கள். அவந்தி தேச ராஜாக்கள் யுதாமன்யுவை எதிர்த்தார்கள். பீமசேனன், கிருதவர்மா, சித்திரசேனன், விகர்ணன், துர்மர்ஷன், இவர்களனைவரையும் எதிர்த்தான். கடோத்கசனுக்கும் பகதத்தனுக்கும் பெரும் போர் மற்றொரு முனையில் நிகழ்ந்தது. வேறொரு இடத்தில் அலம்பசன் சாத்யகியை எதிர்த்தான். பூரிசிரவசு திருஷ்டகேதுவை எதிர்த்தான். யுதிஷ்டிரன் சுருதா யுவை எதிர்த்தான். சேகிதானன் கிருபரை மற்றொரு முனையில் எதிர்த்தான்.
துரோணருக்கும் விராடனுக்கும் நடந்த யுத்தத்தில் விராடன் தோற்றுத் தன் தேரையும் சாரதியையும் குதிரைகளையும் இழந்து தன்புத்திரன் சங்கனுடைய ரதத்தில் ஏறினான். விராடனுடைய புத் திரர்கள் உத்திரனும் சுவேதனும் முதல் நாள் யுத்தத்திலேயே மாண்டார்கள். ஏழாவது நாளில் சங்கனும் தகப்பனார் அருகில் உயிர் நீத்தான்.
துருபதன் மகனான சிகண்டி அசுவத்தாமனால் தாக்கப்பட்டுத் தேரை இழந்தான். அதன்மேல் அவன் கீழே குதித்து வாளும் கேடயமும் கையில் எடுத்துக்கொண்டு போர் புரியப் பார்த்தான். அசுவத்தாமன் சிகண்டியினுடைய கத்தியைப் பாணத்தினால் உடைத்தான். உடனே சிகண்டி துண்டிக்கப்பட்ட கத்தியைச் சுழற்றி அசுவத்தாமன் பேரில் வீசினான். உக்கிரவேகமாக வந்த அந்தக் கத்தியை அசுவத்தாமன் ஒரு பாணத்தை விட்டு வெகுசாமர்த்தியமாகத் தடுத்தான். மிகவும் அடிபட்ட சிகண்டி சாத் யகியின் தேரில் ஏறி விலகினான்
சாத்யகிக்கும் ராக்ஷதனனன அலம்பசனுக்கும் நடந்த யுத்தத் தில் முதலில் சாத்யகி பலமாக அடிக்கப்பட்டான். ஆனால் முடிவில் அலம்பசன் தோற்றுப் புறங்காட்டி ஓடினான்.
திருஷ்டத்யும்னனால் தாக்கப்பட்ட துரியோதனன் தேர்க் குதிரைகளை இழந்தான். கத்தி எடுத்துக்கொண்டு கீழே குதித்துத் துரியோதனன் திருஷ்டத்யும்னனை எதிர்த்துச் சென்றான். அச் சமயம் சகுனி வந்து அரசனைத் தன் ரதத்தில் ஏற்றிக்கொண்டு போய் விட்டான். கிருதவர்மன் பீமனைப் பலமாகத் தாக்கினான். ஆனால் தோல்வியுற்றான். உடல் நிறைய அம்புகள் பாய்ந்து கிருத வர்மன் முள்ளம் பன்றி போல் விளங்கியவனாய்க் குதிரைகளையும் தேரையும் இழந்து தோல்வியை ஒப்புக்கொண்டு சகுனியின் தேரை நோக்கி ஓடினான்.
அவந்தி தேசத்துச் சகோதரர்களான விந்தனும் அனுவிந்த னும் யுதாமன்யுவை எதிர்த்துத் தோல்வி யடைந்தார்கள். அவர் களுடைய படையும் நாசம் செய்யப்பட்டது. பகதத்தன் யானை யேறிக் கடோத்கசனை எதிர்த்துப் பெரிய வெற்றி அடைந்தான். கூட இருந்த வீரர்களும் படையாட்களும் புறங்காட்டி ஓடி விட் டார்கள். கடோத்கசன் ஒருவன் மட்டும் நின்று பகதத்தனை எதிர்த் தான். கடும்போர் நடந்தது. முடிவில் கடோத்கசன் பெருந் தோல் வியுற்றுக் களத்தினின்று தப்பியோடினான். கௌரவ சேனை மகிழ்ச்சி அடைந்தது.
சல்லியனுக்கும் அவன் சகோதரியின் மக்கள் நகுல சகதேவர் களுக்கும் நடந்த சண்டையில் நகுலனுடைய குதிரைகள் கொல்லப் பட்டன. உடனே நகுலன் சகதேவனுடையரதத்தில் ஏறி இருவரும் ஒரு தேரிலிருந்து யுத்தம் புரிந்தார்கள். சகதேவன் விடுத்த அம்பு சல்லியனைத் தாக்கி மூர்ச்சையடையச் செய்தது. அதன் மேல் சார தியானவன் சல்லியனுடைய ரதத்தை மெள்ள வேறிடம் கொண்டு போய் விட்டான். இவ்வாறு மந்திர தேசத்து ராஜன் புறங் காட்டி விலகியதைப் பார்த்துத் துரியோதன்னுடைய சேனை தைரி யம் இழந்து மாந்திரீ புத்திரர்கள் சங்கங்களை ஊதிக்கொண்டு சல் லியனுடைய சேனையை நாசம் செய்தார்கள்.
மத்தியானத்தில் யுதிஷ்டிரன் சுருதாயுவை நோக்கித் தேரைச் செலுத்தினான். தருமபுத்திரன் தொடுத்த அம்புகளைச் சுதாருயுவானவன் சேதித்து ஏழு கூரிய அம்புகளை எய்து தருமபுத்திரனுடைய கவசத்தை உடைத்து அவனைக் காயப்படுத்தினான். தருமபுத்திரன் சுருதாயுவின் மார்பில் நன்றாகத் தைக்கும்படி ஒரு பாண த்தைச் செலுத்தினான்.
அன்று தருமபுத்திரன் தன் இயற்கை மன நிலைமை இழந்து கோபங்கொண்டு ஜொலித்தான் என்கிறார் வியாசர். முடிவில் தேரும் குதிரைகளும் ஈரதியும் வீழ்த்தப்பட்டுச் சுருதாயு யுத்த களத்தை விட்டு ஓடினான். இது நிகழ்ந்ததும் துரியோதனனுடைய சைனியம் முற்றிலும் தைரியம் இழந்து கலக்கமடைந்து விட்டது.
கிருபரை எதிர்த்துச் சேகிதானன் சாரதியும் தேரையும் இழந்தான். அதன் பின் அவன் கதாயுதத்தை எடுத்துக்கொண்டு கீழே இறங்கிக் கிருபருடைய குதிரைகளையும் சாரதியையும் கொன்றான். கிருபரும் தேரை விட்டு இறங்கித் தரையில் நின்று வில்லை வளைத்து அம்புகள் எய்தார். அவை சேகிதான்னை மிகவும் துன்புறுத்தின. அதன் மேல் அவன் கதாயுதத்தை வீசிக் கிருபர் மேல் எறிந்தான். அதையும் அவர் தம் பாணத்தால் தடுத்து விட்டார். பிறகு சேகிதானன் கத்தி வீசிக்கொண்டு அவர் மேல் பாய்ந்தான். அவரும் வில்லை எறிந்து விட்டுக் கத்தியைக்கொண்டு நின்றார்.
நின்றார். இரு வரும் கத்திச்சண்டையில் காயப்பட்டுப் பூமியில் விழுந்தார்கள். பீமசேனன் வந்து சேகிதானனைத் தன் தேரில் ஏற்றிச் சென்றான். அவ்வாறே சகுனியும் கிருபரைத் தன் தேரில் ஏற்றிச் சென்றான்.
திருஷ்டகேது பூரிசிரவசின் மேல் தொண்ணூற்றாறு பாணங் களை விட்டு அவன் மார்பில் பாயச் செய்தான். கிரணங்களோடு ஜொலிக்கும் ஆதித்தனைப் போல் பூரிசிரவசு தன் மார்பில் தைத்த பாணங்களுடன் பிரகாசித்தான். அப்போதும் போரை நடத்தித் திருஷ்டகேதுவைப் புறங்காட்டி ஓடச் செய்தான். துரியோதன னுடைய தம்பிகள் மூவர் அபிமன்யுவைத் தாக்கிப் பெருந்தோல்வி அடைந்தார்கள். அபிமன்யு ‘இவர்களைக் கொல்லப் பீமன் சப தம் செய்திருக்கிறானாகையால் இவர்களை நான் விட்டு விட வேண் டும்’ என்று எண்ணி விலகினான். அதன் மேல் பீஷ்மர் அபிமன் யுவைத் தாக்க வந்தார். அதைக் கண்ட அருச்சுனன் ”கிருஷ்ணா! பீஷ்மரைத் தாக்க வேண்டும். ரதத்தைச் செலுத்து” என்றான். அச்சமயம் மற்றப் பாண்டவர்களும் அருச்சுனனை வந்து அடைந்தார் கள். ஐவரையும் பிதாமகர் தடுத்தார். யுத்தம் நடந்துகொண்டி ருகையில் சூரியன் மறைந்தான். போர் நிறுத்தப்பட்டது. எல் லோரும் மிகக் களைப்படைந்தவர்களாகவும் காயங்கள் பட்டுத் துன்பப்பட்டவர்களாகவும் பாசறைகள் போய்ச் சேர்ந்தார்கள்.
இரு திறத்து வீரர்களும் உடலில் தைத்திருந்த அம்புகளைப் பிடுங்கி வைத்தியக் கிரமப்படி காயங்களைக் கழுவி இளைப்பாறி னார்கஒரு முகூர்த்தகாலம் எல்லோரும் சங்கீத வாத்தியங்களைக் கேட்டுக்கொண்டு உல்லாசமாகப் பொழுது போக்கினார்கள். அந்த ஒரு முகூர்த்தகாலம் சுவர்க்கத்திலிருப்பது போல் யுத்த விஷய மான வார்த்தை ஒன்றும் பேசாமல் கழிக்கப்பட்டது. அந்தக் காட்சி பார்ப்பதற்கு ரமணீயமாக இருந்தது என்கிறார் வியாச பகவான். மகாபாரதத்தின் உபதேச தத்துவம் இன்னதென்று இதனின்று உணரலாம்.
எட்டாம் நாள் யுத்தம்
எட்டாவது நாள் உதயமாயிற்று. பீஷ்மர் கெளரவச் சேனையைக் கூர்ம வியூகமாக வகுத்தார். யுதிஷ்டிரன் திருஷ்டத் யும்னனைப் பார்த்து, கெளரவர்களுடைய கூர்மவியூகத்தைப் பார். அதை அழிக்கக்கூடிய எதிரணி வகுப்பில் சீக்கிரமாக நம் முடைய சேனையை ஒழுங்கு படுத்து” என்றான்.
திருஷ்டத்யும்னன் பாண்டவ சேனையை மூன்று சிகரங்கள் கொண்ட வியூகத்தில் அமைத்தான். பீமசேனன் ஒரு கொடு முடி யிலும் சாத்யகி மற்றொரு கொடு முடியிலும் தத்தம் படைகளு டன் நின்றார்கள். நடுவில் யுதிஷ்டிரன் நின்றான்.யுத்தக் கலையை நம்முடைய முன்னோர்கள் நன்றாகவே கற்றிருந்தார்கள். அநேக. மாக அது க்ஷத்திரியர்களுக்குள் கர்ண பரம்பரையாகவே இருந்து வந்தது. புஸ்தகங்களில் எழுதப்படவில்லை. எதிரிகள் உபயோ கிக்கக்கூடிய ஆயுத பலத்திற்கும் அந்தக் காலத்தில் அனுசரித்து வந்த போர் முறைகளுக்கும் தகுந்தவா அரசர்கள் தங்களு டைய ஆயுதங்களையும் மறைகளையும் ஒழுங்குபடுத்தி வந்தார்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்ச்சி குருக்ஷேத் திர யுத்தம். பாரதத்தில் காணப்படும் யுத்த வர்ணனையை இத் தக் காலத்து யுத்த முயற்சிகளோடு ஒப்பிட்டு இது வெறுங் கற்பனைக் கதை, சாரமில்லை என்று தள்ளி விடக்கூடாது.நூற்றைம் பது வருஷங்கள் தான் ஆயிற்று ஆங்கில வீரன் நெல்ஸன் நடத் திய கப்பற்சண்டை நடந்து. அவனுடை கப்பல்களையும் அவன் கையாண்ட ஆயுதங்களையும் இப்போது கையாளப்படும் யுத்தக் படைகளையும் ஆயுதங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் காலத்தில் நடந்தவையெல்லாம் மிகவும் விநோதமாகத்தான் தோன்றும். நூற்றைம்பது வருஷத்திய நிலைமையை விடப் பன் மடங்கு புராதனமானது பாரத பார்.
மற்றொரு விஷயத்தையும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். யுத்த விஷயங்களைப் பற்றிக் கவிஞர்களும் ஆசிரியர்களும் எழுதிய நூல்களில் ஆயுதங்களைப் பற்றி பற்றியும் சரியான விவரங்களு யும் யுத்த நடவடிக்கை ளைப் விளக்கமும் எதிர்பார்க்க முடியாது. பழைய காலத்தில் வழங்கி வந்த போர் முறைகள் க்ஷத்திரியப் பண்பாட்டில் சேர்ந்த விஷ யங்கள். அவற்றின் ரகசியங்களும் தத்துவங்களும் அந்தத் தொழிலைச் சேர்ந்தவர்களுக்குள் காண பரம்பரையாகக் ந் தன. கவிகளும் ரிஷிகளும் எழுதிய நூல்களில் அவற்றின விளக் கங்களைக் காண முடியாது. இப்போதுங்கூடச் சிறுகதையிலும் பெருங் கதையிலும் ஒருவனுக்கு நோய்ச் சிகிச்சை நடத்தப் பட்டதாகச் சொல்லும் போது 7 காடுக்கப்பட்ட மருந்துகளை யெல்லாம் விசாரித்து ஆசிரியர் கதையில் எழுதுவதில்லை. எழுதி னால் பொருத்தமில்லா லிருக்கும். ஆகையால் மகர வியூகம என் றால் என்ன, கூர்ம வியூகம் என்றால் என்ன, சிருங்காடகம் என்றால் என்ன; அம்புகளைச் சரமாரியாகப் பொழிந்து அரண உண்டாக் கிக் கொள்ளுவது எப்படி, பாணத்தால் பாணத்தை வெட்டுவது எப்படி, உடம்பெல்லாம் அம்புகள் தைத்தும் பிழைப்பதெப்படி கவசங்கள் எந்தமட்டில் வீரர்களைக் காத்தன முதலிய விவரங்கள் அனைத்தும் நமக்குப் புரியும்படி வியாசர் தம்முடைய புரா ணத்தில் எழுத வில்லை. அவர் எழுதியிருக்கிற அளவு எழுதியிருப் பதே விசேஷம்.
எட்டாவது நாள் போரின் முதல் பாகத்திலேயே திருத ராஷ்டிர புத்திரர்களில் எண்மரைப் பீமன் கொன்றான். துரியோ தன்னுடைய உள்ளத்தை இது பிளந்தது.ஆட்ட மண்டபத்தில் தான் செய்த பிரதிக்ஞையைப் பீமன் இன்றே தீர்த்துவிடுவான் போலிருக்கிறது என்று எல்லாரும் பயந்தார்கள்.
அருச்சுனனுக்கு அன்று பெரிய துக்கம் நேரிட்டது. அவ னுடை ய அருமை மைந்தன் இராவான் கொல்லப்பட்டான். நாக கன்னிகை வயிற்றில் அருச்சுனனுக்குப் பிரந்த இந்த வீரன் பாண் டவர்களுக்குத் துணையாக வந்து போர் புரிந்து கெளரவப் படை யில் மிக்க நாசம் உண்டாக்கினான். துரியோதனன் இராவானை எதிர்க்க ராக்ஷசனான அலம்புசனை அனுப்பினான். இருவருக்கும் கோரமான யுத்தம் நடந்து முடிவில் இராவான் கொல்லப்பட்டான்.
இந்தச் செய்தி அருச்சுனனை எட்டியதும் அவனுக்குத் தாங்க முடியாத துக்கம் உண்டாகி வாசுதேவரைப் பார்த்து விதுரர் முன்னமேயே சொன்னார், இருபக்கத்திலும் பெருந் துக்கம் அடை வோம் என்று. பொருளுக்காக இத்தகைய இழிவான காரியம் செய்து வருகிறோம்! இவ்வளவு கொலைகளைச் செய்து நாமாவது அவர்களாவது என்ன சுகம் அடைய ப் போகிறோம்? மதுசூதனா! யுதிஷ்டிரர் துரியோதனனை ஐந்து கிராமங்களையேனும் கொடு, யுத்தம் வேண்டாம் என்று கேட்டதின் தீர்க்க தரிசனம் இப் போதுதான் எனக்குத் தெரிகிறது. மூர்க்கனான அந்தத் துரியோ தனன் ஐந்து கிராமங்களைக் கொடுக்க மறுத்து இருபக்கமும் நடைபெறும் இந்த மகா பாபச் செயல்களுக்கெல்லாம் காரண மானான். இவன் பயந்தவன், கோழை என்று ஜனங்கள் இகழ்வார் களே என்றலல்வோ நான் யுத்தம் செய்கிறேன்? யுத்த களத்தில் வீழ்ந்து கிடக்கிற க்ஷத்திரியர்களைப் பார்த்து என் மனம் கொதிக் கிறது. நம்முடைய பிழைப்பு பாதகப் பிழைப்பு’ என்று சொல் லிப் பரிதபித்தான். எப்போதுமே இது அருச்சுனனுடைய தரும சங்கடம்.
இராவான் கொல்லப்பட்டதைக் கண்ட பீம சனனுடைய குமாரன் கடோத்கசன் சேனை முழுவதும் நடுங்கும்படி கர்ச்சித் துக் கௌரவ சேனையை அழிக்க ஆரம்பித்தான். அநேக பகுதி களில் கௌரவச் சேனை பயந்து கலைய ஆரம்பித்தது. அதைக் கண்ட துரியோதனன் தானே கடோத்கசனை எதிர்க்க முன் வந் தான்.
துரியோதனனுக்குத் துணையாக வங்கதேசத்து அரசன் யானைப் படையுடன் சென்றான். எட்டாவது நாள் யுத்தத்தில் துரியோதனன் மிகவும் தைரியமாகப் போர் புரிந்தான். கடோத் கசனுடைய படையிலிருந்த அநேக வீரர்களை வதம் செய்தான். தைக் கண்டு மிகக் கோபங்கொண்ட கடோத்கசன் துரியோ யாதனன்மேல் சக்தியை வீசினான். வங்க சேனாதிபதி திடீரென்று யானையை மத்தியில் செலுத்தி துரியோதன னைக் காத்தான்.னையானது கடோத்கசனுடைய சக்தியாயுதத்துக்கு இரையாயிற்று.
பீஷ்மர் துரியோதனன் அபாயத்திலிருக்கிறான் என்று ஊகித்துப் பெரும் படை ஒன்றைத் துரோணர் தலைமையில் அரசனுக்கு உதவியாக அனுப்பினார். கௌரவ சென்னையிலுள்ள புகழ் பெற்ற வீரர்கள் பலர் ஒன்று கூடிக்கடோத்கசனை எதிர்த்தார்கள்.
அப்போது கிளம்பிய கர்ச்சனைகளிலிருந்து கடோத்கசனுக்கு அபாயம் நேரிட்டதாக அறிந்து யுதிஷ்டிரன் பீமசேன்னை உதவி யாக அனுப்பினான். பீமன் வந்ததும் முன்னை விடக் கோரமான போர் நடந்தது.
எட்டாவது நாள் யுத்தத்தில் மொத்தம் துரியோதன்னு டைய தம்பிமார்களில் பதினாறு பேர் மாண்டனர்.
ஒன்பதாம் நாள் யுத்தம்
ஒன்பதாவது நாள் போர் ஆரம்பமாவதற்கு முன் துரியோத னன் பீஷ்மரிடம் சென்று தனக்கு நேர்ந்த தோல்விகளைப் பற்றிப் பிரலாபித்துக் கொடிய மொழிகளை ஈட்டியினால் குத்துவது போல் பேசி அந்தத் தர்மாத்தாவைப் பீடித்தான். ஆயினும் பிதாமகர் பொறுமை யிழக்கவில்லை.
“சக்திக்குத் தக்கபடி முயற்சி செய்கின்றவனும் உனக்காக யுத்தத்தில் பிராணனை ஹோமம் செய்கின்றவனுமான என்னை ஏன் இவ்வாறு துன்புறுத்துகிறாய்? சொல்லத் தக்கது எது சொல்லத் தாகது எது என்பதை அறியாமல் பேசுகிறாய். மரணம் சமீபிக் கும்போது மரங்கள் எல்லாம் பொன் மயமாகத் தோன்றும் என் பார்கள். அவ்வாறு இப்போது நீ விஷயங்களை விபரீதமாக உணர் கிறாய். வேண்டுமென்று நீ செய்துகொண்ட விரோதத்தின் பயனை இப்போது அனுபவிக்கிறாய். ஆண்மையை இழக்காமல் தைரிய மாகப் போர் செய்வதே இப்போது நீ செய்யக் கூடியது. அதுவே தருமமாகும். சிகண்டியை நான் எதிர்த்துப் போர் செய்வது முடியாது. ஸ்திரீயை வதம் செய்வது என்னால் முடியாத காரியம். பாண்டவர்களை என் கையால் கொல்ல என் மனம் ஒவ்வாது. இந்த இரண்டு விஷயங்களைத் தவிர்த்து மற்றபடி எல்லா வீரர் களையும் எதிர்த்துப் போர் செய்வேன். க்ஷத்திரிய குலத்திற்குப் பொருந்திய முறையில் நீயும் மனத் தளர்ச்சி யில்லாமல் யுத்தம் செய்’ என்று பிதாமகர் துரியோதனனுக்கு இதம் சொல்லி விட்டு, அன்று சனையை அணிவகுக்க வேண்டிய முறையைப்பற்றி யும் சொல்லியனுப்பினார்.
துரியோதனன் ஆறுதல் அடைந்து துச்சாதனனை அழைத்து “தம்பி! நம்முடைய முழு பலத்தையும் இன்று யுத்தகளத்தில் செலுத்து. பீஷ்மர் பரிசுத்தமான எண்ணத்தோடேயே நமக்காகப் போர் புரிகிறார். சிகண்டி ஒருவனை மட்டும் நான் எதிர்க்க முடி யாது என்கிறார். வேறு யாரைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. சிகண்டி அவரைத் தாக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அஜாக்கிரதையாக இருந்தால் சிம்மத்தைக் கூடச் செந்நாய் கொன்று விடுமல்லவா?” என்றான்.
ஒன்பதாவது நாள் யுத்த களத்தில் அபிமன்யுவுக்கும் அலம் பசனுக்கும் பெரும் போர் நடந்தது. புகழ் பெற்ற தனஞ்சயனைப் போலவே குமாரனும் யுத்தம் செய்து அலம்பசனை ரதமிழந்து யுத்தகளத்தை விட்டு ஓடச் செய்தான்.
சாத்யகிக்கும் அசுவத்தாமனுக்கும் பெரும் யுத்தம் நடந்தது. துரோணர் அருச்சுனனை எதிர்த்தார். பிறகு எல்லாப் பாண்டவ வீரர்களும் பீஷ்மரை எதிர்த்தார்கள். துரியோதனன் பீஷ்மரைக் காக்கத் துச்சாதனனை ஏவினான். பீஷ்மர் கடும் போர் புரிந்து பாண் டவ வீரர்களுடைய முயற்சிகளை வீணாக்கினார். பாண்டவ சேனை சுற்றிச் சுற்றித் தடுமாறும் பசுக் கூட்டத்தைப்போல் தீனமான நிலையை அடைந்தது.
அப்போது கிருஷ்ணன் தேரை நிறுத்தி பார்த்தனே! நீயும் உன் சகோதரர்களும் பதின்மூன்று ஆண்டுகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலம் இப்போது வந்திருக்கிறது. க்ஷத்திய தரு மத்தை நினைவுக்குத் தந்து கொள். பீஷ்மரைக் கொல்லத் தயங்க வேண்டாம்” என்றான்.
அருச்சுனன் தலைகுனிந்து “கொல்லத் தகாத ஆச்சாரியர்களை யும் பிதாமகரையும் கால்லுவதைவிட வனவாசமே சுகமாக இருந்தது. ஆயினும் நீ சொல்வதைச் செய்கிறேன். ரதத்தைச் செலுத்து!” என்றான். அருச்சுனன் மிகவும் வருத்தப்பட்டுக் காரி யத்தில் விருப்பமில்லாதவனாகச் சென்றான். பீஷ்மரோ மத்தி யான காலத்துச் சூரியன் போல் ஜொலித்தார்.
பார்த்தனுடைய தேர் பீஷ்மரை நோக்கிச் சென்றதும் பாண் டவ சேனை மறுபடியும் தைரியம் அடைந்தது. பீஷ்மர் அருச்சுனனு டைய தேரின் பேரில் பொழிந்த அம்பு மழையானது அதை முற்றி லும் மூடி விட்டுப் பாகனாவது குதிரையாவது தேராவது அருச்சுன னாவது ஏதுமே தெரியாமல் போயிற்று. கிருஷ்ணன் பரபரப்பில்லா மல் ஜாக்கிரதையாகத்தேரை நடத்தினான். அருச்சுனன் செலுத் திய அம்புகளினால் பீஷ்மர் வில் பலமுறை அறுபட்டுக் கீழே விழுந் தது. பீஷ்மர் அருச்சுனனைப் புகழ்ந்து வேறு வில்லை எடுத்துப் பார்த்தனையும். கிருஷ்ணனையும் அடித்துக் காயப்படுத்தினார்.
அப்போது “நீ சரியாகப் போர் புரியவில்லை” என்று கிருஷ் ணன் அருச்சுனனுக்குச் சொல்லிக் கோபத்துடன் தேரை விட்டுக் கீழே குதித்துச் சக்ராயுதத்தை எடுத்துப் பீஷ்மரை நோக்கிச் சென்றான்.
கோபத்துடன் வரும் வாசுதேவனைப்பார்த்து பீஷ்மர் “புண் டரீகாக்ஷனே! வருவாய்! உன்னால் கொல்லப்பட்டு நான் உயிர் விடுவேன்” என்று வரவேற்றார்.
அருச்சுனன் கேசவனைப் பின் தொடர்ந்து இரு கைகளாலும் கட்டிப் பிடித்துக்கொண்டு ‘ஆயுதமெடுத்துப் போர் புரியப்போ வதில்லை என்று நீ சொன்ன வார்த்தையைப் பொய்யாக்க வேண் டாம். இது என் பொறுப்பு. அன்புக்குரிய பீஷ்மரை நான் அம்பு எய்து வீழ்த்துவேன். நீ தேர் ஏறிக் குதிரைகளை நடத்து’ என்று சொல்லி வாசுதேவனைப் பின் திரும்பச் செய்தான்.
பீஷ்மர் போரை மறுபடியும் துவக்கினார். பாண்டவர் சேனை மிகவும் அடிபட்டுக் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் சூரியன் அஸ்தமனமானான். யுத்தம் நிறுத்தப்பட்டது.
பீஷ்மர் வீழ்ந்தார்
பத்தாவது நாள் யுத்தம். சிகண்டியை முன்னால் வைத்துக் கொண்டு அருச்சுனன் பிதாமகரைத் தாக்கினான். கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போல் பீஷ்மர் ஜொலித்தார்.
சிகண்டியின் அம்புகள் கிழவருடைய மார்பைப் பிளந்தன? அப்போது பீஷ்மருடைய கண்களிலிருந்து தீப் பொறிகள் பறந் தன். அந்தத் திருஷ்டியானது அப்படியே சிகண்டியை எரித்து விடும் போலிருந்தது. அடுத்த நிமிஷம் அவர் கோபம் தணிந்து தம் காலம் வந்து விட்டது என்று எண்ணி ஸ்திரீ ஜன்மமாகிய சிகண்டியை எதிர்க்காமலே நின்றார். பார்த்தவர்களுக்கெல்லாம் இது ஒரு அற்புதமாக இருந்தது. தேவர்களும் வியந்தார்கள்.
சிகண்டி பீஷ்மருடைய மன நிலையைக் கவனிக்காமல் அம்பு மேல் அம்பு எய்துகொண்டே போனான். பீஷ்மர் சும்மா இருந்த இச்சமயத்தில் அருச்சுனனும் மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு பிதாமருடைய மர்மஸ்தானங்களை நன்றாகக் குறி வைத் துப் பார்த்து அடித்தான்.
உடல் முழுவதும் இவ்வாறு பிளக்கப்பட பீஷ்மர் புன்சிரிப்புச் செய்து துச்சாதனைப்பார்த்து” இவை அருச்சுனனுடைய அம்பு கள். இவை சிகண் டியின் அம்புகள் அல்ல. தாய் நண்டின் உடலை அதன் சிசுக்கள் கிழிப்பது போல் இந்த அம்புகள் என். உயிரைத் துன்புறுத்து கின்றன” என்றார். தன்னுடைய அரு மைச் சீடன் எய்த அம்புகளை அவ்வாறு பிதாமகர் கருதினார்.
இவ்வாறு சொல்லி ஒரு சக்தியாயுத்த்தை எடுத்துப் பார்த் தன் மேல் வீசினார். அதை அவன் மூன்று பாணங்களால் வெட்டி னான். அதன் மேல் இது கடைசிப் போர் என்று கத்தியும் கேடயமு மாக ரதத்தினின்று பிதாமகர் கீழே இறங்கப் பார்த்தார். அவர் அவ்வாறு இறங்கு முன் அருச்சுனன் அவருடைய கேடயத்தை அம்புகளால் வெட்டித் துண்டு துண்டாக்கினான். பிதாமகரின் உடல் முழுவதும் இரண்டு விரற்கடை இடம் கூட இல்லாமல் அருச்சுனனு டைய அம்புகள் பாய்ந்தன. ரதத்தினின்று பீஷ்மர் த லை கீழாகத் தரையில் வீழ்ந்தார். அவர் விழும்போது தேவர்கள் வானத்தில் கை கூப்பி நின்று நமஸ்கரித்தார்கள். நல்ல மணமும் குளிர்ந்த நீர்த்துளிகளும் கலந்த காற்று வீசிற்று.
ஆகாயத்திலிருந்து பூமிக்கு இறங்கி உடலுக்கு உணவும் ஆன் மாவுக்கு மங்களமும் தந்து மக்களுக்கெல்லாம் தாயாகி நிற்கும் கங்கையின் அவுரச புத்திரன்; தகப்பனான சந்தனு ராஜனுக்குச் சுகம் தருவதற்காக தனக்குச் சந்ததியும் வேண்டாம், விவாக மும் வெண்டாம் என்று அனைத்தும் துறந்து விரதம் காத்த வீரன்; பரசுராமனை வென்ற நிகரற்ற சூரன்; தன்னைச் சந்தே கித்த துரியோதனனுக்குத் தன் சத்தியத்தை நிரூபிக்க உடல் முழுவதும் நெருப்பாக எரிக்கும் அம்புகள் பாய்ந்து உடல் விழும் வரையில் அவனுக்காகத் தன் கடமையைச் செய் து விட் டுப் பாரதப் போரின் பத்தாவது நாளில் பிதாமகர் தேரினின்று கீழே விழுந்தார்.
பீஷ்மர் விழும்போது கெளரவர்களுடைய இதயங்களும் கூட விழுந்தன என்கிறார் வியாசர்.
பீஷ்மருடைய உடல் தரையைத் தீண்டவில்லை. தேகத்தில் எல்லாப் பாகங்களிலும் குத்திக் கோத்து நின்ற கொடிய அம்புகள் பிதாமகருடைய உடலை அப்படியே மேலாகத் தாங்கி நின்றன. அவ்வாறு நிலத்தைத் தீண்டாமல் அம்பு சயனத்தில் கிடந்த உடல் புது தேஜசுடன் ஜொலித்தது. இரு புறத்துச் சேனைகளும் யுத்தத்தை நிறுத்தி விட்டுத் திரள் திரளாக யுத்த களத்தில் விழுந்து கிடந்த பிதாமகரைப் பார்க்க ஒடி வந்தார்கள்.பிராஜ பதியான பிரம்மனைத் தேவர்கள் நமஸ்கரிப்பது போல் பாரத தேசத்து அரசர்கள் பீஷ்மரை வணங்கி நின்றார்கள்.
“என் தலையில் அம்பு குத்தவில்லை. அது தொங்குகிறது. உயரத் தூக்கித் தாங்கும்படியான ஏதேனும் வைத்து உதவுங்கள்” என்றார் பீஷ்மர். அருகிலிருந்த அரசர்கள் உடனே ஓடிப் போய்த் தலையணைகளை கொண்டு வந்தார்கள் பட்டும் பஞ்சுமாக இருந்த அந்தத் தலையணைகளைப் பிதாமகர் – வேண்டாம் என்று சொல்லி விட்டு அவ்விடமிருந்து அருச்சுனனை நோக்கி “அப்பனே! பார்த்தா! என் தலைக்கு கு ஆதாரமில்லை. கீழே நொங்குகிறது. சரியான தலையணையை பார்த்துக் கொண்டு வந்து வைப்பாயாக” என்றார்.
தன் உயிரைக் குடிக்கும் அம்புகளை எய்த அருச்சுனனைப் பார் த்துப் புன்சிரிப்புடன் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.அதைக் கேட்டதும் அருச்சுனன் ன் தூணியிலிருந்து மூன்று அம்புகளை எடுத்துப் பிதாமகர் தலையை அவற்றின் கூரிய முனைகளின் மலே வைத்து அமைத்தான்.
“அரசர்களே! அருச்சுனன் அமைத்திருக்கும் தலையணையே எனக்கு மகிழ்ச்சியளித்தது. தேகத்தை விட்டுப் பிரிய இந்தக் காலம் தகுந்ததல்ல. உத்தராயணம் வரையில் பான் இந்த இடத்தி லேயே இப்படியே கிடப்பேன். அது வரையில் என் ஆத்மா தேகத் தில் நிற்கும்; உங்களில் அப்போது யா உயிருடன் இருப்பீர்களோ அவர்கள் வந்து என்னைப் பார்க்கலாம்” என்றார்.
பிறகு பிதாமகர் அருச்சுனனைப் பார்த்து “அப்பனே உடலெல்லாம் எரிகிறது. கொஞ்சம் குடிக்கத் ண்ணீர் தருவாய்” என்றார்.
உடனே அருச்சுனன் தன் வில்லை நன்றாக வளைத்துப் பீஷ்மரு க்கு வலது பக்கத்தில் அம்பை நிலத்திற்குள் செல்லும்படியாக விட்டான். அது பாதாளத்தில் புகுது மறைந்தது உடனே அந்த இடத்தில் ஒரு ஊற்றுக் கிளம்பி உயர குதித்துப் பாய்ந்தது. தாயாகிய கங்கை தன் அருமை மகனுடைய தாகத்தைத் தீர்க்க வந்தது என்கிறார் கவி. அமிருதம் போன்ற அந்த ஜலத்தைக் குடித்துப் பீஷ்மர் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
“துரியோதனா! நல்ல அறிவை அடைவாயாக! அருச்சுனன் என் தாகத்துக்குத் தண்ணீர் எப்படி உண்டாக்கினான் பார்த்தாயா? இதை உலகத்தில் வேறு எவன் செய்வான்? இனித் தாமதிக்கவேண் டாம்! அவனிடம் சமாதானமாகப் போ. இந்த யுத்தம் என்னோடு முடிவு பெறலாம். அப்பனே நான் சொல்லுவதைக் கேள். பாண்ட வர்களுடன் சமாதானம் செய்து கொள் “என்றார். நோயாளிக்கு இறக்கும் தருவாயிலும் மருந்து பிடிக்காது.கசக்கிறது என்பான். அவ்வா ற துரியோதனனுக்கும் பிதாமகரின் பொன்மொழிகள் பிடிக்கவில்லை.
அரசர்கள் எல்லாரும் தத்தம் பாசறைக்குச் சென்றார்கள்,
பிதாமகரும் கர்ணனும்
பீஷ்மருடைய தலைமையை இழந்த கெளரவ சேனை இடையனை இழந்த ஆட்டுக் கூட்டத்தின் நிலைமையில் இருந்தது. சத்திய சந்த ரான பீஷ்மர் வீழ்ந்தபோதே கௌரவர்கள் அனைவரும் யுத்தகளத் தில் “கர்ணா! கர்ணா! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கத்தினார்கள்.
கர்ணன் போரில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம் என்று கௌரவ வீரர்கள் அனைவரும் எண்ணினார்கள். பீஷ்மர் தலைமை வகித்த பத்து நாட்களும் சூர்ய குமாரன் இன்றியே யுத்தம் நடந்தது. பீஷ்மரால் கர்வ பங்கம் செய்யப்பட்ட கர்ணன் கோபங் கொண்டு “நீர் ஜீவித்திருக்கும் வரையில் நான் போர் புரிய மாட்டேன். நீர் பாண்டவர்களைக் கொன்று துரியோதனனுக்கு வெற்றி தந்தீராகில் நான் அரசனிடம் அனுமதி பெற்றுக் கானகம் செல்வேன். நீர் தோல்வியுற்று வீழ்த்தப்பட்டு மேலுலகம் சென்றீரானால் உம்மால் அதிரதன் என்று மதிக்கப்படாத நான் ரதத் தின்மேல் ஏறி உம்மால் அதிரதர்களாக மதிக்கப்பட்ட அனைவரை யும் வீழ்த்தித் துரியோதனனுக்கு வெற்றியைச் சம்பாதித்துத் தரு வேன் என்று பிரதிக்ஞை செய்து ரியொதன்னுடைய சம்மதத்தின் பேரில் யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் விலகியிருந்த கர்ணன், பாதசாரியாகப் பீஷ்மரிடம் சென்று அவரை வணங்கினான்.
”குலத் தலைவரே! ஒரு குற்றமும் செய்யாமலிருந்தாலும் உம்மால் மிகவும் வெறுக்கப்பட்டவனாகிய ராதையின் மகன் உம்மை வணங்குகிறான்” என்றான்.
வணங்கி விட்டு நிற்கும் போது சூரிய குமாரன் முகத்தில் ஓரளவு பயக்குறி தோன்றியதைப் பிதாமகர் பார்த்தார். மிக்க கருணையுடன் அவன்மேல் கையை வைத்து மகனைத் ததை ஆசீர் வதிப்பதைப்போல் ஆசீர்வதித்தார். கண்களின் திருஷ்டியைத் தடுத்து நின்ற அம்புகளின் வழியாக அவனை மெதுவாகப் பார்த்து “நீ ராதையின் மகன் அல்ல. குந்தி தேவியின் மகன் ஆவாய். உலக ரகசிய மெல்லாம் அறிந்த நாரதர் இதை எனக்குச் சொல் லியிருக்கிறார். சூரிய குமாரா! உன் மேல் எனக்கும் உண்மையில் துவேஷம் ஒன்றும் இல்லை. நீ பாண்டவர்களைக் காரணமின்றித் துவே ஷிக்கிறாய் என்பதே என் மன வருத்தத்துக்குக் காரணமாக இருந் தது. உன்னுடய சௌரியத்தையும் கொடையையும் நான் அறி வேன். சூரத்தனத்தில் நீ பல்குனனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஒப்பி டக் கூடியவன் என்பதில் சந்தேகமில்லை. பாண்டவர்களுடைய சகோதரனான நீ அவர்களை சிநேகிப்பதே தருமம். யுத்தத்தில் என் பங்கு முடிந்ததோடு அவர்கள் பேரில் எனக்குள்ள பகையும் முடி வடைய வேண்டும் என்பது என் விருப்பம்” என்றார்.
இதைக் கேட்ட கர்ணன் மிகவும் வணக்கத்தோடு “பிதாம கரே! நான் குந்தி புத்திரன் என்பதை அறிவேன். தேரோட்டியின் மகன் அல்ல என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் துரியோதனனு டைய பொருளைப் பெற்றுக்கொண்டு அவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன். அவனை விட்டு விட்டு அவன் விரோதிகளின் பக்கம் சேருவது எனனால் முடியாத காரியம். துரியோதனுக்காக நான் போர் புரிந்தே தீர வேண்டும். அதற்கு நீர் அனுமதி தருவீராக! நான் சொன்னதிலும் செய்ததிலும் பல குற்றங்கள் உண்டு. அவற்றை க்ஷமித்து என்னைக் காப்பாற்றுவீராக” என்று வேண்டிக் கொண்டான்.
தருமங்களனைத்தையும் அறிந்த பிதாமகர் கர்ணன் சொன் னதை ஆலோசித்து உன் இஷ்டப்படியே செய். தருமமே செய். தருமமே வெற்றி பெறும்” என்றார்.
பீஷ்மர் விழுந்த பின்னும் பாரத யுத்தம் முடிவடையவில்லை. பிதாமகருடைய பத்தியமான வார்த்தையை அலட்சியம் செய்து கௌரவ வீரர்கள் மறுபடியும் யுத்தத்தைத் துவக்கவே நிச்ச யித்தார்கள்.
“பரசுராமனை வென்ற வீரரே! சிகண்டியினால் அடிக்கப் பட்டு யுத்த பூமியில் படுத்திருக்கிறீர்! தருமத்தின் சிகரமும் உத்தமருமான நீரே இந்தக் கதியை அடைந்து விட்டீர் என்றால் இந்த உலகத்தில் ஒருவனும் புண்ணியத்தின் பலனை அடைய மாட்டான் என்பது நிச்சயம். கௌரவர்களுக்கு வெள்ளத்தைத் தாண்டும் தெப்பமாக இருந்தீர். இனிமேல் பாண்டவர்களால் தாக்கப்பட்டு அவர்கள் மிகவும் கஷ்ட நிலை அடையப் போகிறார் கள். அருச்சுனனும் கிருஷ்ணனும் நெருப்பும் காற்றும் சேர்ந்து காட்டை அழிப்பது போல் நாசம் செய்வார்கள். சந்தேகமில்லை. உம்முடைய புண்ணியப் பார்வையை என் மேல் செலுத்தக் கோருகிறேன்” என்றான்.
பீஷ்மர் கர்ணனை ஆசீர்வதித்தார். “நதிகளுக்குச் சமுத் திரம் போலவும் விதைகளுக்கு மண்ணைப் போலவும் பிராணி களுக்கு மேகம் போலவும் உன்னை நண்பனாகக் கொண்டவர்களு க்கு உறுதியான ஆதாரமாக இருக்கிறாய். துரி யாதனனைக் காப் பாற்றுவாயாக! அவனுக்காக நீ காம்போஜர்களை ஜெயித்தாய். இமய மலையின் துர்க்கங்களிலுள்ள கிராதர்களை யெல்லாம் அவ னுக்காக அடக்கினாய். கிரிவிரஜ ராஜாக்களுடன் துரியோதனுக்கா கப் போர் செய்து வெற்றி பெற்றாய். இன்னும் அநேக காரியங்கள் அவனுக்காகச் செய்திருக்கிறாய். துரியோதனனுடைய சேனைக்கு நீ இனி ரக்ஷகனாக இருப்பாயாக! உனக்கு மங்களம். சத் துருக்களோடு யுத்தம் செய், போ. கெளரவப் படையை உன்னு டைய சொந்த சொத்தாகப் பாவித்துப் பாதுகாப்பாயாக!” என்று கர்ணனைப் பிதாமகர் ஆசீர்வதித்தார்.
கர்ணன் பிதாமகருடைய ஆசி பெற்று மகிழ்ச்சியடைந்தவ னாகரதம் ஏறி யுத்த களத்துக்கு வந்தான். அவனைப் பார்த்ததும் துரியோதனனுக்கு அடங்கா மகிழ்ச்சி பொங்கிற்று. பீஷ்மருடைய பிரிவையும் ஒருவாறு மறந்தான்.
– தொடரும்…
– வியாசர் விருந்து (மகாபாரதம்), முதல் பதிப்பு: ஜனவரி 1956, பாரதி பதிப்பகம், சென்னை.