மன்மதப் பாண்டியன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 22, 2024
பார்வையிட்டோர்: 2,594 
 
 

(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20

அத்தியாயம்-11

வீரசேனன் குரல் எழுப்ப, அதிவீரன் சட்டென்று பாதையில் இருந்து விலகி, கிணற்றுச் சுவரில் ஏறி. வேலிதாண்டி வெளியே குதித்தான். 

அதிவீரன் மீது சத்திரத்து தட்டோட்டியில் இருந்து எறியப்பட்ட கத்தி. சரல்பானதயில் கொத்திக் கொண்டு நின்றது. 

அதிவீரன் விருட் என்று தாவி, தன் குதிரை மீது ஆரோகணித்துக் கொள்ள, 

அவனது இரு சகாக்களும் சத்திரத்தை நோக்கி “விடாதே பிடி! கொலைகாரனைப் பிடி” என்று குரல் கொடுத்தார்கள். 

அனைத்துச் சத்திரத்தில் இருந்தும் புற்றீசல் சிதறியது. போல் மக்கள் திரண்டு வெளியே வந்து, “என்ன விஷயம்” – என்று நாலாபக்கமும் பார்க்க. 

தட்டோட்டிச் சோர்வாய் மூலம் வெளியே குதிந்து இருவர்.

ஒரு பாய்ச்சல் குபீரில் பின்புறத்தில் ஒடி மறைய,

அடுத்த கணம் எழுந்த குதிரையின் வடக் லடக் ஒரைகள் அவர்கள் குதிரை ஏறிப் பறக்கிறார்கள் என்பதைக் காட்டிவிட்டது. 

“ம்…?” என்று அதிவீரனின் ஒரு குரல், இரண்டு சகாக்களையும் உலுப்பிவிட… 

மறுவிநாடி மூன்று புரவிகளும் காற்றில் தேய்ந்து பறக்க ஆரம்பித்தன. 

சந்திரத்தின் முடுக்குகளைத் தாண்ட, பிரதான பாட்டை வரும்பவரை அவர்கள் சற்று நிதானத்தைக் கையாண்டு. 

பிரதான பாட்டை வந்ததும் வேகத்தை முடுக்கிவிட்டார்கள். 

சோலைகளும், தோட்டங்களும் உபவனங்களும் நிறைந்த பிரதேசம் அது. 

சாலையோ இதில் நெளிவும் வளைவுமாகச் செல்ல, முன்னால் தப்பித்து ஓடும் அந்தக் குதிரை வீரர்களை சற்று தூரம் போன பின்னரே கண்டுபிடித்தார்கள். 

“துரோகிகளை விடக்கூடாது! என்று வீரசேனன் இரைந்து, குதிக்கால் தாரைக் குத்தி குதிரையைக் கிளப்பிவிட, 

அதிவீரன் சலனம் அதிகம் காட்டாமல், தூரத்தில் நெளியும் சாலையை மட்டிலும் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். 

அவன் பார்வை வெகு சூசகமாக பாதைப் பரப்பு மீது படர்ந்தது. 

வீரசேனன் முண்டியிடித்துக் குதிரையை முன் செலுத்தி ஓட, 

“வீரா” என்று இரைந்தான். அதிவீரன். 

“பிரபு வாருங்கள்) என்னை நிறுத்தாதீர்கள்” என்று கூவினான், அவன். 

குதிரையும் அவனும் ஒரே வெறியில் இணைந்து பறந்து கெண்டிருந்தார்கள். 

“வீரா,வேண்டாம்? நில்லு நில்லு! பாதையில் முன் உருண்டை போட்டு இருக்கிறார்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை!” என்று கத்தினான். அவரது வீறிட்ட சத்தம் ஒரு வளையம்போல் சகாவின் கழுத்தில் விழுந்து அவன் விருசலைக் குறைக்க ஆரம்பித்தன. 

தக்க சமயத்தில் சகாக்கள் இருவரும் குதிரையை இழுத்து நிறுத்தினார்கள். 

அல்லது அன்று அத்து நீறி ஒடி. பாட்டையில் கிடக்கும் முள் உருண்டையில் அடிபட்டு குதிரைகளின் கால்கள் பிரயோசனம் அற்றதாக மாறியிருக்கும். 

உலோகப் பந்துகளில் நிறைய உலோகமுட்களைப் பொறுத்தி வைத்திருக்கிறார்கள். 

குதிரைகள் இவை மீது மிதித்தாலும் ஆபத்து! இவைகளை அடுத்து மிதித்தாலும் ஆபத்து. 

அடுத்து மிதித்தால், குதிரைக் கால்களில் எப்படியும் இந்த முள்கள் தாக்கி விடும். 

சகாக்கள் இருவரும் வியர்வைச் சிலும்பலோடு குதிரைகளை இழுத்து நிறுத்த, 

“சுவாமி! சேர மன்னனாக இருக்கலாம். அல்லது தஞ்சை மன்னனாக இருக்கலாம்! அல்லது இரண்டு பேரும் சேர்ந்து இருக்கலாம்! என்றான், வீரசேனன். 

“என்ன ஆதாயத்திற்கு இதைச் செய்கிறார்கள்?” “பாண்டிய நாட்டில் அமைதியைக் குலைக்க விரும்புகிறார்கள். குழப்ப நிலையை உண்டாக்கிப் பின்னர் சுபளீகரம் செய்து விட விரும்பி இருப்பார்கள்” 

“தர்மசேனா! உன் அபிப்பிராயம் என்ன?” 

“வீரன் சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன். நமது பிரதானிகள், சைனிய அதிபதிகள் யாவுமே இந்த அபிப் பிராயத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். 

“இதன் காரணம் என்ன?” 

“தற்போது இருக்கும் ராஜரீகத்தில் இந்த இரண்டு மன்னர்கள்தான் நிலம் சேர்க்கும் வெறியில் இருக்கிறார்கள்!” அதிவீரன் சற்று யோசித்து இருந்தான். 

“இவர்களுக்கு ஏன் பாண்டியத்தின் மீது கண் விழ வேண்டும்” என்றான். 

“நாம்தான் அவர்களுக்கு அண்டையநாடு!” என்றான், வீரன்.

அதிவீரன் யோசித்தான், “உண்மை! நம்மைப் பலவீனம் ஆக்குவதில் அவர்களுக்கு விருப்பம் நிறைய இருக்கும். இதை இனியும் விடக்கூடாது?” என்றான். 

“இலஞ்சிச் சாமியாரும் அதைத்தான் கூறுகிறார். சுவாமி! தங்களிடம் எடுத்துக் கூறச் சொன்னார்!” 

“இனி கூறவேண்டியதில்லை. வீரா வாய் பேசு வதைவிட-சம்பவங்களே பேசிவிட்டன. இனி வாளா விருப்பதற்கு இல்லை புறப்படுங்கள் 

பிறகு, மூவருமாகச் சேர்ந்து பாட்டையில் இருக்கும் முள் உருண்டைகளை  எடுத்து பக்கவாட்டில் வீசி எறிந்தார்கள். அரை நாழிகையில் இந்த வேலையைச் செய்து விட்டுப் புறப்பட்டார்கள். 

பொழுது சாயுமுன் கரிசூழ்ந்த மங்கலத்தை அடைந்தார்கள். 

அதன் கோட்டை மூடப்பட்டிருந்தது. 

மேற்கு வாசலை அணுகி, சையைத் தட்டி. “அஹோய்! அஹோய்!” என்று அழைத்தார்கள். 

கோட்டைக் காவலர் மேலே பரிகத்தில் வந்து நின்றார். அதிவீரன் அவரைப் பார்த்ததும், ‘வீரபத்திரா! நானதான கதவைத் திற” என்றான். 

“சுவாமி” என்று வணக்கம் போட்டு பரிகதிலிருந்து மறைந்தான், காவலன், 

அடுத்த நிமிடங்களில் இழுபாலம் விடப்பட்டு, கோட்டைக் கதவுகளும் திறக்கப்பட்டன; 

மூவரும் உள்ளே செல்ல. மீண்டும் வீரபத்திரன் அவர்களை வணங்கினான். 

அண்ணன் வரதுங்க ராமனின் ராஜ்யம் அது! இந்த நகரமதான் அவர் வாழும் தலைநகரம்! 

அரண்மனைக்கு நேரே சென்று அதிவீரன் விரைவாக உள்ளே நுழைந்தான். 

மற்ற இருவர்களும் வெளியில் தங்கினார்கள்.

மன்னர் மாடி அறையில் படுத்திருக்கிறார் என்று தெரிந்து அங்கே விரைந்தான். 

அவரது அறைக்குள் நுழைந்ததும். அவன் கண்ட காட்சி அவனைத் துணுக்குற வைத்தது. வரதுங்கர் காய்ச்சலில் படுத்திருந்தார். அவர் அருகே அண்ணி வரகுண மங்கை நின்று கொண்டிருந்தாள். 

வரதுங்கனின் பாதங்களைத் தொட்டு வணங்கி விட்டு, அண்ணியாரையும் வணங்கினான், அதிவீரன். பிறகு “என்ன உடம்புக்கு” என்று கேட்க, “சாதாரணக் காய்ச்சல” என்று கூறி. வரதுங்கர் அவனை அன்புடன் குசலம் விசாரித்தார். 

“ஏது அண்ணா? கோட்டையை மூடிவிட்டாயே!” என்று கேட்க, 

“இல்லாவிடில் வாழ்க்கையைக் கோட்டைவிடுவோம்!” என்று கூறினார், அண்ணி. 

அண்ணி குணமங்கை படித்தவர். பல சாத்திரங்களைக் கற்றதுடன் சொந்தத்தில் கவி எழுதும் திறமை பெற்றவர். அண்ணனது ராஜரீகத்தில் அவரது வலதுகையாக இருப்பவர். ஆனால், அதேநேரம் அண்ணனும் தம்பியும் ஏட்டிலேயே பொழுது போக்குவதை விரும்பாதவர். 

“ஏன்? இங்கேயும் நீலப்பாகைக்காரர்கள் வந்துவிட் டார்களா?” என்று கேட்டான், அதிவீரன். 

“ஏன் வராமல் அண்ணனும் தம்பியும் பாட்டுக் கேட்டே காலத்தைக் கடத்தினால் நீலப்பாகை என்ன. அங்கே தூத்துக்குடித் தொப்பிக்காரன்கூட வந்துவிடுவான்”. என்றான, அண்ணி கடுமையாக.. 

வரதுங்கர் இலேசாக புன்னகைத்தார். 

“அண்ணி! இனி பயப்படவேண்டாம். கத்தியை என்றான். அதிவீரன். எடுத்தாகிவிட்டது கவிதையை உதறியாகிவிட்டது!” 

“ஓகோ! இப்போதுதான் ரோஷம் வந்துவிட்டதோ! அதுவும் தாசி போன பிறகு” என்றாள், அவள். 

அதிவீரன் கண்கள் மேலே சடக்கெனப் பறந்தன. இங்கேகூட செய்தி வந்துவிட்டதா? அதற்குள்ளாகவா? 

“ஆமாம், அண்ணி! கண்முன் நிதர்சனமாக எதுவும் நடக்காதவரை எதுவும் நமக்கு வலுவாகப் பதிவதில்லை,”

“மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்” என்று எழுதியவர் நீங்கள்தானே?” என்றாள், அவன். 

”ஆமாம்!”

“தங்கள் மந்திரிகள் வரும் பொருள் உரைக்க வில்லையே?” என்றாள். அண்ணியார். 

அதிவீரனுக்குக் குத்தலாகப் பட்டது. 

”இல்லை! அவர்கள் உரைத்தார்கள். ஆனால் எனக்கு அது உறைக்கவில்லை.” 

”தாசியைக் கடத்திய பிறகுதான் தெரிகிறதாக்கும்!”

“ஆமாம்! அதுவும் என் துர்பாக்கியமே!” என்றான். அதிவீரன். 

அண்ணி முகத்தைச் களித்தாள்! 

“ஆமாம்! அண்ணனும் தம்பியும் ஏற்கனவே “க” விலும் “வி” யிலும் ஈடுபட்டிருப்பவர்கள்! இப்போது இரண்டாவது “சு” வும் “வி” யும் சேர்ந்துவிட்டது!” என்று இடித்துரைத்தாள், அண்ணி. 

அதிவீரன் உடனே நுட்பமாக யோசித்தான். பட் டென்று அதன் பொருள் விளங்கிவிட்டது. முதல் ‘க’வும் “வி” யும் கல்வி! இரண்டாவது “ஜு” வும் “வி”யும் கலவி! 

அண்ணியார் சொல்வது ஓரளவு உண்மை!!

தமிழில் தாங்களே அவசியாற்றுவதைத் தவிர, வட மாழியில் வெவ்வேறு நிபுணர்கள் எழுதியதைத் தமிழில் ஆக்கவும் அவர்கள் முனைத்திருந்தார்கள். 

அந்த வகையில் இப்போது இருவருக்கும் காம சாத்திரம் அது! அதன் மீது கண்படர்ந்திருந்தது. என்ன அற்புதமான சாத்திரம் அது! மானிட வாழ்க்கையில் “காமம்” எவ்வளவு சிறப்பு வாய்ந்தது! “காமம்” இல்லாவிடில் வாழ்க்கை ஏது? 

அந்தக் காமத்தை ஆய்ந்து, அறிந்து, வகைப்படுத்தி வட மொழியில் பல நூல்கள் வந்துவிட்டன. தமிழில் வர வேண்டாமோ! தமிழ் பேசும் மக்களும் அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமோ! 

இதன் காரணமாக இருவர்களும் வடமொழியில் எழுதப்பட்டிருந்த “ரதி சாத்திர”த்தின் மீது கண் விழுந்திருந்தது. அதை எழுதியவர், கொக்கோக முனிவர். அவர் எழுதியது போல், தாங்களும் எழுத மனம் நினைத்து சமீப காலங்களில் ஈடுபட்டிருந்தார்கள். 

இதற்காக சில பல வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். 

இதைத்தான் அண்ணி சுட்டிக்காட்டி இடித்துரைக்கிறார், என்று தெரிந்தது 

“அண்ணி!” என்றான். அதிவரன! ”அது எல்லாவற்றையும் கட்டி அப்பால் வைத்துவிட்டேன். வீர சபதத்தோடு புறப்பட்டிருக்கிறேன்” என்றான், அவன்.

“அதுதான் இந்தப் புதுவேடமோ” என்றாள், அண்ணி. 

“ஆமாம்! என்னை என் காரியத்தில் ஆசீர்வதியுங்கள்!” என்று கூறி நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்து வணங்கினான், அவன். 

“எழுந்திருங்கள்! போதும்! போதும்! என் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு!” என்று கண்கள் பொங்கக் கூறினாள் அவள். 

அதிவீரனின் பணிவு அவளை வெகுவாகக் கவர்ந்து விடுவதுண்டு. 

பிறகு எல்வோரும் ராஜரீகத்தைப் பற்றி பேசினார்கள். நீலத் தலைப் பாகைக்காரர்கள் திடீர் என்று தோன்றியிருப் பதை எல்லோரும் சற்று கவலையுடன் உணர்ந்திருந்தார்கள். வடக்கே பூசல் எழ வாய்ப்புண்டு என்பதையும் தெற்கே உள்ள சேரர்கள் தங்களுக்குத் தொல்லை தரலாம் என்பதையும் உணர்ந்திருந்தார்கள். தற்சமயம் நாட்டில் ஒரு கொந்தளிப்பும், யுத்த அபாயமும் தோன்றி இருப்பதை இருவரும் தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொண்டார்கள். 

இரவு உணவு அருந்துவதற்கு அதிவீரன் சித்தமானான்.

அத்தியாயம்-12

அந்தப்புரத்தை அடுத்த போஜனசாலையில் தங்க பீடத்தின் முன் அதிவீரன் அமர்ந்தான். தங்கப் பாத்திரத்தில் நீர் சுற்றிலிருந்த தங்கக் கிண்ணங்கள்! சேடி ஒருத்தி பின் னால் நின்று ஆலவட்டம் வீசினாள். 

பரிகாரகர் வரிசையாக அமுது வரிசைகளைக் கொண்டு வந்தார். வாசனை கம கம் என்று கமழ்ந்தது. 

தம்பி உண்பதைக் கவனிப்பதற்கு வரதுங்கர் தமது காய்ச்சலையும் பொருட்படுத்தாது எழுந்து வந்து எதிரே அமர்ந்தார். 

அவர் அருகே அண்ணி குணமங்கையும் அமர்ந்து கொண்டார். 

“என்ன அதிவீரா! புறப்பட்ட அவசரத்தில் பாகையைக் கூட மறந்து வைத்துவிட்டாயா? என்றார். வரதுங்கா. 

“இல்லை, அண்ணா! இப்போது நான் அதிவீரனாக வரவில்லையே! வேடத்தில் வந்திருக்கிறேன்!” என்றான். அதிவீரன். 

“இந்த ஜம்பத்திற்கு எல்லாம் குறைவில்லை! பாகை ஏன் காணவில்லை என்று உண்மையாகச் சொல்லச் சொல்லுங்கள்!” என்றாள், குணமங்கை. 

கையில் கவளத்தை எடுத்து அதிவீரன் சட் என்று அண்ணியை பார்த்தான். 

அண்ணி முகத்தில் மர்மமான புன்னகை மலர்ந்தது. “ஏன், அதிவீரா! எனன காரணம்?” என்றார், வரதுங்கர். 

அதிவீரன் இன்னும் விழித்தான். அண்ணி இப்படி அவனை ஆழம் பார்க்கிறாளே! 

“இல்லை சுவாமி!” என்று கணவரை நோக்கித் திரும்பினாள், குணமங்கை. “எல்லா அரசர்களும் கொடி போனால் குலைவார்கள், குடைபோனால் குலைவார்கள், ஆதமை போனால் குலைவார்கள். இவர் எதற்காகக் குலைந்திருக்கிறார் என்று கேளுங்கள்!” என்றாள். 

பக்கென்று அடிவயிற்றில் பற்றியது. “அண்ணி” “பழியா வருவது. மொழியாது ஒழிவது” என்றான். 

“ஓகோ! உங்கள் ”கொன்றை வேந்தன்” உபதேசத்தை பிறருக்கு வைத்துக் கொள்ளுங்கள்! எங்களிடம் வேண்டாம்!” என்றான்.

உடனே வரதுங்கர் மனைவி பக்கம் திரும்பி, “என்ன மங்கை! என்ன பேசுகிறாய் எதாவது இலக்கண இலக்கி யத்தை எடுத்துவிடாதே! தம்பி உண்பதை நிறுத்திவிடுவான்! அவனுக்கு எப்போதும் செவிக்கு உணவுதான்!” என்று ஆதுரமாகக் கூறினார். 

”இல்லை இப்போது விவாதம் ஏதுமில்லை!” என்றாள். குணமங்கை 

“பழியா வருவது என்றாயே! அது என்ன?” என்றார். வரதுங்கர். 

“ஒன்றுமில்லை” என்றாள், குணமங்கை.

“ஏன் சொல்லேன்?” என்றார், வரதுங்கர்.

“உங்கள் தம்பிதான் “கொன்றை வேந்தனை”ச் சொல்லிப் பூட்டுப் போட்டுவிட்டாரே!” 

“அண்ணி!” என்று இடைமறித்தான், அதிவீரன். “கொன்றை வேந்தனில் மற்றொன்றை மறந்திருக்கிறீரே!” 

“மெய்யுடை ஒருவன் சொல் மாட்டாமையால் பொய் போலும்மே! பொய் போலும்மே!” 

”உண்மையை உடைய ஒருவன் அதைச் சொல்ல முடியாத காரணத்தால் பொய்யன்போல ஆவான்! அதைப் போல நானும் பொய்யன் போல இருக்கிறேன். நீங்கள் அண்ணனிடம் உண்மையைச் சொல்லி, என்மேல் பொய்யன் பழி வராமல் பார்த்துக் கொள்ளக் கூடாதோ!” என்றான். 

“ஏன், நீங்களே சொல்லுங்கள்!” என்றாள், அவள்,

“நீங்கள் சொல்லுவதுதான் பொருத்தம்! கொடி என்றீர்! குடை என்றீர் ஆதமை என்றீர்! அண்ணனுக்கு விளக்கமாகக் கூற வேண்டாமோ!” 

“ஏது! இருவரும் புதிருக்கு மேலாகப் புதிர் போடுகிறீர்களே! என்ன விஷயம்?” 

“அண்ணி! அந்த விஷயத்தை நீங்களே சொல்லுங்கள்! அதுதான் பொருத்தம்” 

அண்ணி சிரித்தவாறு சொன்னாள்: “உங்கள் தம்பி ஏன் இப்போது வீறு கொண்டு புறப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்? குடையோ, கொடியோ போனதற்காக அல்ல! அல்லிக்கொடி போனதற்கு” என்றாள். 

“இந்தப் புதிர் வேண்டாம்! விளக்கிச் சொல்!” என்றார். வரதுங்கர். 

“அல்லிக்கொடி தெரியாதா?” 

“தெரியாதே” 

“அதிவீரனின் பிரியத்தைக் கவர்ந்தவள்.” 

“என்ன?” என்றார். வரதுங்கர் திடுக்கிட்டு 

“அண்ணா! தேவரீரிடம் நான் சொல்வது முறை ஆகாது! இருந்தாலும் கூறுகிறேன். அரச சபையின் பிரதான தாசி, கடத்தப்பட்டுவிட்டாள்.” 

“அப்படியா” என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டார், வரதுங்கர். 

அதிவீரன் தலை குனிய, அண்ணி நிமிர்ந்து தலையாட்டினாள். 

“அப்படியா பேஷ் பேஷ் பேஷ்..” என்றார், வரதுங்கர். 

அதிவீரன் திடுக்கிட்டான். 

“அண்ணன் என்னவோ கடினமொழி கூறப்போகிறார் என்று நினைத்தால், அவர் பாராட்டுகிறாரே!!” என்று நினைத்தான், 

“அதிவீரா! நீதான் மன்னன். கேவலம் நாட்டுக்கும் கொடிக்குமா, சபதம் செய்வது, மனிதர்கள் மேல் அல்லவா? அதுவும் பெண்கள் அதைவிட மேல் அல்லவா! “என்றார்.

பாராட்டா. பரிகாசமா! எது என்று தெரியவில்லை. அதிவீரன் திகைத்தான். 

“கடைசியில் தாசி போய்தான் உங்கள் தம்பிக்கு ரோஷம் வந்திருக்கிறது” என்றாள். 

“வரட்டுமே! யாரால் வந்தால் என்ன? நன்மை தானே!” என்றார், வரதுங்கர்! 

பிறகு அவர் அதிவீரனை நோக்கி, “அதிவீரா! கல்வி கற்பது நல்லதுதான்! நீ சொல்லி இருப்பதுபோல், “பிச்சை புகினும் கற்கை நன்றே!” ஆனால், அதற்காக அதிலேயே மூழ்கி இருந்துவிடக் கூடாது. கோல்தான் காக்குமே தவிர. நூல் காக்காது” என்றார். 

“அதை இப்போது உணர்ந்துவிட்டார்!” என்றாள், குணமுங்கை, 

“ஆமாம், அண்ணி இப்போது உணர்ந்துவிட்டேன்!” என்றான், அதிவீரன். 

உடனே, மன்னர் “இரு. மங்கை! அவன் உண்டு முடிக்கட்டுமே!” என்று கூறினார். 

அதிவீரன் உணவு அருந்தி, கைகழுவி, தாம்பூல அறைக்கு வந்தான், 

அங்கே எல்லோரும் மீண்டும் அமர்ந்தார்கள். 

துளிர் வெற்றிலையும், பாக்குமாக அவர்கள் தாம்பூலம் தரிக்க, 

“தம்பி…! நாடு இப்போது சரியில்லை! அதுவும் நீ, மலையாளத்துப் பக்கத்தில் இருக்கிறாய்! அவர்கள் உன் நாடு மீது கண்ணாக உள்ளவர்கள்!” என்றார். 

“புரிகிறது அண்ணா!” 

“கோட்டைக் கதவைப் பற்றிக் கூறினாய்! நாங்கள் அதைச் சாத்தி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. தெரியுமா?” என்றார். 

“அவ்வளவு காலம் ஆகிவிட்டதா!”

“ஆமாம்! நாட்டின் ராஜரீகம் சரியில்லை! எல்லா அரசர்களும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்! ஒருவரை ஒருவர் சந்தேகத்தோடு பார்க்கிறார்கள்!” என்றார். 

குணமங்கை அந்தப்புரக் காரியமாகப் போய்விட அண்ணனும் தம்பியும் தாம்பூல அறையில் தனியாக இருந்தார்கள். 

வரதுங்கர் கூறினார். 

“இந்தா, அதிவீரா! அண்ணி சொல்வதை மனதில் வையாதே! நமது மனச்சாட்சிக்கு மாற்று உரு இந்த அண்ணி! எப்போதும் இடித்துரைப்பாள். நான் சும்மா இருக்கிறேன் என்று நினைத்துவிடாதே! எனது உளவுப் படைத் தலைவர் நல்ல தம்பி மதுரைக்குப் போயிருக்கிறார். தெரிந்துவிட்டாலோ, யுத்தம் மூண்டுவிட்டாலோ, மூன்வதற்கு அடையாளங்கள் உடனே செய்தி அனுப்பும்படி ஏற்பாடு பாளையத்தை எல்லாம் எச்சரிக்கை செய்து, படை புறப்பட்டாய்? திரட்டி வைக்கச் சொன்னோம்! நீ இப்போது ஏன் வடக்கே கேவலம் ஒரு தாசியைத் தேடியா போகிறாய்?” என்றார். 

‘இல்லை’ அதைக் காரணமாக வைத்துக் கொண்டு, நீலத் தலைப்பாகைக்காரர்கள் யார் இவர்கள் என்று அறிந்து வரப்போகிறேன். நிறையத் தொல்லை தர ஆரம்பித்து விட்டார்கள்! 

“யார் இந்த தலைப்பாகையா? அவர்கள் தலைவர் யார்? நமக்கும் நல்லதம்பி ஓலை அனுப்பினார் . ஏதோ ஒரு சக்தி வாய்ந்த அரசர் இதன் பின்னால் இருக்கிறாரோ? விஜயநகர அரசுபோய், தெற்கத்தி அரசுகளை எல்லாம் ஒன்று சேர்கசு முயல்கிறாரோ?” 

“ஒருவேளை வெறும் கொள்ளைக்கூட்டத்தினராக இருப்பார்களோ?” என்றான், அதிவீரன். 

“எப்படி இருந்தாலும் எல்லாருக்கும் நிறைய தொல்லை தருகிறார்கள்!!! என்றார், வரதுங்கள். 

“காரணம், எதிர்பாராத நேரத்தில் அவர்கள் தாக்கி விட்டு ஓடிவிடுகிறார்கள்! அதனால்தான் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை.” 

“உண்மைதான்! நீ சொன்னதுபோல் அவர்களின் ஆணிவேர் யார் என்று தெரிந்து, அழித்து விடுவது மேல்” 

“அதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன்” என்றான், அதிவீரன், 

“இன்னொரு பகையும் நமக்கு இருக்கிறது” என்றார்,வரதுங்கா, 

“எந்தப் பகை?” என்றான். அதிவீரன்.

“மலையாளமும் தஞ்சையும் சிநேகமாகப் பார்க்கிறார்கள்!” 

“இடைவெளியில் உள்ள நம்மை விட்டுவிட்டா?”

“ஆமாம் இந்தச் சிநேகமே நம்மை விழுங்குவதற்குத் தான்?”

“இலஞ்சிச் சாமியாரும் அதைத்தான் சொல்கிறார்.”

“இந்தப் பாகை கை ஓங்குவதற்குள் அதையும் நாம் முறியடிக்கவேண்டும்!” 

“இந்தச் சமயத்தில் நாம் ஐந்து பாண்டியர்களும் சேர்ந்தாலே நன்றாக இராதா?” 

”பகல் கனவு காணாதே நாம் இருவரும் ஒன்றாக இருந்தாலே பெரிசு! பாதிக்குமேல் பாண்டிய நாட்டை ஆள்பவர் நாம்தானே!” 

“ஆமாம், அண்ணா! நம்மைக் கேவலம் இரத்தம் மட் டும் சேர்த்து வைக்கவில்லை? தமிழ்தான் சேர்த்து வைத்திருக்கிறது!” என்றான், அதிவீரன். 

வரதுங்கருக்கு அந்த வார்த்தைகள் மகிழ்ச்சியாக இருந்தது. 

“தமிழ்தான் தம்பி தமிழ்தான்! கடைசிவரை அதுதான் சேர்த்து வைத்திருக்கும்” என்றார், அழுத்தமாக 

“நம்முடைய ஒற்றுமையைக் சேவலம் மலையாளமும் தஞ்சையும் சிதைத்து விட முடியுமா? முடியாது!” என்றான். அதிவீரன். 

“நானும் ஆமோதிக்கிறேன் தம்பி! இருந்தாலும் உறவையும் தமிழையும் மட்டும் நம்பி சும்மா இருக்கக் கூடாது” 

“உண்மைதான் அண்ணா! இலஞ்சிச் சாமியார் கூட அதைத்தான் தெரிவித்தார். எப்போதும் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார். தவிர இன்னொரு செய்தி சொல்லி என்னை நடவடிக்கையும் எடுக்கச் சொன்னார்!” 

“என்ன நடவடிக்கை?” 

“மலையாள அரசர் தமது மகளை அனுப்பி தஞ்சை மன்னரோடு பரிசம் போடப் பார்க்கிறாராம்.”

“அப்படியா” 

“அந்த அரசகுமாரியும் சமீபத்தில்தான் நமது நாடு தாண்டி தஞ்சை நோக்கிப் போயிருப்பதாகக் கூறினார்.” 

“உண்மைதானா?” 

”ஆமாம்! இலஞ்சியார் சொல்லி நான் அந்த இளவரசியை சங்கர நயினார் கோவிலில் சந்தித்தேன்! அவளை நீலப் பாகையர் அபகரிக்கும் முயற்சியையும் தோற்கடித்தேன்.” 

“ஓ அவ்வளவு தூரம் செய்தாயா? அந்த இளவரசி என்ன ஆனாள்?” 

“தெரியாது! எனக்குப் புஜத்தில் காயம் ஏற்பட்டு விட்டதால் நான் உடனே தலைநகரம் திரும்ப வேண்டி வந்தது 

“அப்படியா?” என்று கூறிய வரதுங்கர், சற்று புருவத்தை உயர்த்தினார். ஒரு வேளை.. ஒரு வேளை…. அந்த இளவரசி இங்கே எங்கள் ஊர்க்கோவிலுக்கு வந்திருப்பார்களோ?

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” 

“யாரோ நாத்திதிகள் வந்திருப்பதாகக் கூறினார்கள் என்று நெற்றியைச் சுருக்கிக்கொண்டு கூறினார். வரதுங்கர்,

“அப்படியானால் உடனே போய்ப் பார்க்கிறேன்!” என்றான். அதிவீரன். 

“நிச்சயமாக அவர்கள்தான் என்று தெரியாது. இந்த ஊர்க் கோவிலுக்கு வரும் யாத்திரிகர்களுக்கு அனுமதி தந்து கோட்டைக்குள் விடச் சொல்கிறோம். இவர்களும் வந்திருக்கிறார்கள்.” 

“இதோ அவர்களைப் பார்த்துவிட்டு வடக்கே புறப் படுகிறேன்!” என்றான், அதிவீரன். 

“ஏதாவது விசேஷம் இருந்தா சொல்லிவிட்டுப் போ!” என்றார். வரதுங்கர். 

அதிவீரன் தலை அசைத்துவிட்டு, வெளியே வந்தான். தனது சகாக்களைத் தேடி, ராஜ விடுதிக்குப் போன போது….. 

அது என்ன? 

அத்தியாயம்-13

அதிவீரன் விடைபெற்றுப் புறப்பட்டு கோவில் வாசலை அடைந்தான். நன்றாக இருட்டி இருந்தது. தெருவில் அரவம் இல்லை. கோட்டைக் கதவு மூடப்பட் டதால் சீக்கிரம் போக்குவரத்து முடிந்திருந்தது. 

சன்னதித் தெரு பலமாட விளக்குகளுடன் அழகாக இருந்தது. இரு வரிசை விளக்குகளையும் பார்க்கும் போது. தெகு பல் முளைத்துச் சிரிப்பது போல இருந்தது. 

கோயிலுக்கு சற்று தொலைவில் குதிரையை நிறுத்தினான் அதிவீரன். 

பிறகு முகப்புப் படிக்கட்டுகளை நோக்கி விரைந்து போனான். 

அவனிடம் வேகம் வந்திருந்தது. 

இத்தனை நாளும் ராஜரீகத்தைக் கவனியாதது போல குறை ஒன்று தோன்றி இருந்தது. 

அண்ணி இடித்துரைத்தால், அது உண்மைதான்! அண்ணி மாதிரி படித்தவர்கள் உலகத்தில் ஏது! தமிழில் என்ன புலமை! தேர்ச்சி “உம்” என்றால் கவி பாடும் சாமர்த்தியம். 

படிகளை நெருங்கும் போது, மேலே இருந்து யாரோ இறங்கிக் கொண்டிருந்தார்கள். 

அவனுக்கு இருக்கும் அவசரத்தில் முதலில் யார் என்று கவனிக்கவில்லை. ஆனால், ஏறும்போதே கண் எதேச்சையாகத் திரும்ப. 

அந்தக் கணத்தில் கால் விரைந்து நின்றது.

இறங்கி வருபவள் அந்தப் பெண்! மங்கை! சங்கர நயினார்! கோவிலில் சந்தித்தோமே! அந்தப் பெண்!

அவள் பின்னால் அவளது தாதி! 

கண் அவனை அறியாமல் அவள் மீது லயிக்க,

மனதில் ஆயிரம் கிண்ணங்களாக மது நிரம்பிக் கொண்டிருந்தது. 

நாதங்களாகக் கீதங்கள் காதுகளில் வந்து ஒலித்தன.

“ஓ! உன்னைத் தெரியுமே” என்று ஒரு அர்த்தத்தை தனது பார்வையில் காட்ட முயலும்போது- 

“உங்களைப் பார்த்திருக்கிறேன்!” என்ற பாவனை யில் அவள் பார்வை மிதந்து வந்தது. 

“சவுக்கியமா?” 

“சவுக்கியம். நீங்கள்?”” 

“நானும் சவுக்கியம். அப்புறம் எப்படி இங்கே வந்தீர்கள்” 

“ஓ! அதைச் சொல்ல ஒரு பகல் போதாது. எனினும் நீங்கள் என்னைக் காப்பாற்றி விட்டீர்களே! நன்றி! இல்லா விடில் அந்த நீலத் தலைப்பாகைக்காரர்கள் என்னைப் பிடித்துப் போயிருப்பார்கள்.” 

“ஓ! உங்களை வழி மறித்தவர்கள், அவர்கள் தானா?”

“அப்படித்தான் இருக்க வேண்டும். நல்லவேளை உங்களால் பிழைத்தேன். அப்புறம் உங்களையே நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் காணாமல் போய்விட்டீர்களே!!” 

“ஆமாம்! அவசரக் காரியம் இருந்தது. போய்விட் டேன்! அப்புறம் உங்களையேதான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.” 

“மெய்யாகவா! 

“மெய்யாக”

“ஓ! நான் பாக்கியவதி!” 

“நான் பாக்கியவான்.” 

இத்தனையும் அவள் கண்கள் பேசுவதாக அவன் சுற்பனை செய்துகொண்டான். 

அரை நொடியில் முடிந்துவிட்டது உரையாடல்! அத்தனை நேரமும் இருவர் கண்களும் ஒன்றை ஒன்று பிணைந்திருந்தன என்பது ஆச்சரியமாக இருந்தது. 

பார்வையை அவள் தயக்கமாகத் திருப்பும் போது மெல்லிய குங்குமக் குழைவாக ஒரு புன்னகை புரிந்தாள்.

அவனை மெய்மறக்க வைத்தது அது. 

அதிவீரன் பிறகு தன் வேலையில் வயித்தவனாய் உள்ளே ஓடினான். 

நெஞ்சு விம்மி சுவாசங்கள் வந்தன. 

கோவில் உள்புற சர விளக்குகள் முழுமையாகக் கண்ணில் விழுந்தன. 

கோவிலின் அந்தப்புரங்கள் தெரிந்தும் தெரியாமலும் ஒரு சோபையில் இருந்தன. 

சன்னதி சென்று வணங்கும்போது மனம் ஒரு வயப் பட மறுத்தது. 

அடிக்கடி அந்தப் பெண்ணின் கண்கள் சுழிந்து வந்து மனதுள் புதைந்தது. 

சுற்பூர தீபம் ஜொலித்த போது, அத்தனையும் அவள் புன்னகைகளாகத் தோன்றின. 

“சுவாமி! என் மனம் ஒன்றுகூட வில்லையே! கையொன்று செய்ய, விழி ஒன்று நாட, வஞ்சகக் கருத்து ஒன்று எண்ண. என்கிறது போல் உங்களை வணங்கு கிறேனே! இந்தக் கடையேன் பிரார்த்தனையை ஏற்று அடி யேனுக்கு அருள் புரிய வேண்டும். நான் எடுத்துள்ள காரியம் எளிதில் முடிய வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தான் அவன். 

பிறகு பிரகாரம் சுற்றி வெளியே வந்தான். தெருவில் இறங்கி குதிரையை அவிழ்க்கச் சென்றபோது, 

“ஐயா!” என்று ஒரு மென்மையான குரல் கேட்டது. திடுக்கிட்ட கண்களை அங்கும் இங்கும் திருப்ப, 

பக்கத்தில் இருந்த அம்பலத்தாடும் மடத்தின் முகப்புத் தூண் ஓரம் மறைவிலிருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். அவளை உடன் இனம் கண்டு கொண்டான் அதிவீரன். 

மங்கையின் சேடி இவள்! 

புல்வாக்கு போல ஒரு புன்னகை பூத்து, அவன் முன்னால் நின்றாள். 

அதற்குள் அதிவீரனுக்கு ஒரு இன்பம் மேலிட்டது. 

“ஐயா! தாங்கள் வடக்கே மதுரை போவதானால் எங்கள் எஜமானி ஒரு விண்ணப்பம் விடுகிறாள். தாங்கள் எங்களையும் மதுரைக்கு அழைத்துப் போக முடியமா? தனி யாகப் போசு முடியவில்லையே! வழியில் கொள்ளைக்காரர் களும் கடத்தல்காரர்களும் தென்படுகிறார்களே!” என்று கூறினாள். 

அந்த வார்த்தைகள் அவனுக்கு ஒரு சிலிர்ப்பைத் தந்தாலும், அதன் சாதகப் பாதகங்களை அவன் யோசிக்க ஆரம்பித்தான். 

அவசரமாக நீலத்தலைப் பாகைக்காரர்களைப் பின் பற்றி அவன் செல்ல வேண்டும். இதுவரை அவர்கள் போன தடம் தெரிந்து விட்டது. இனி எங்கே போவார் களோ, எப்படித் திரும்புவார்களோ! 

முதலில் அவனது ராஜசபை தாசி அல்லிக்கொடியை மீட்க வேண்டும்! நீலத்தலைப்பாகைக்காரர்கள் யார் என்பதை உளவறிய வேண்டும்! பிறகு தஞ்சை மன்னனும் மலையாள மன்னர்களும் கூட்டுச் சேர்ந்து யுத்தம் ஆரம்பிக்கப் போகிறார்களா என்று கண்டுகொள்ள வேண்டும். 

“அம்மணி!! நான் போவதில் பல வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. ஒரே திசையில் நான் போவேன் என்று சொல்வதற்கில்லை. அதனால்தான் தயங்குகிறேன்” என்றான் அதிவீரன். 

“அதனால் ஒன்றும் தவறில்லை! எங்கள் எஜமானி மதுரைப் பக்கம் எவ்வளவு தூரம் போகிறீர்களோ, அவ்வளவு தூரம் தங்களோடு வருவதற்குச் சித்தமாக இருக்கிறார்” என்றாள் சேடி. 

“நான் தஞ்சைப் பக்கம் திரும்பினால்” என்று கேட்டான் அவன். 

“ஐயா! எங்கள் எஜமானி இரண்டு வேண்டுகோள் களுடன் வருகிறார். ஒன்று மதுரை மீனாட்சியைத் தரிசிக்க வேண்டும்! இரண்டாவது இராமேசுவரத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இரண்டில் எந்தத் திசையில் தாங்கள் சென்றாலும் எங்களுக்கு அது வசதியாகவே இருக்கும்” என்றாள் அவள். 

“அம்மணி! தாங்கள் சொல்வது சரி ஆனால் பெண்க ளோடு சேர்ந்து செல்வதில் எத்தனையோ தொல்லைகள் உண்டு. உங்கள் வசதிகளை நாங்கள் கவனிக்க முடியாது”

“அதைப் பற்றி கவலை வேண்டாம். சுவாமி! நாங்கள் எந்தவித வசதிக்கும் வசதியின்மைக்கும் சித்தமாக இருக்கிறோம்” பிரயாணத்தில் இவைகளைப் பார்த்தால் முடியுமா?” என்றாள் அவள். 

“எல்லாவற்றையும் விட இன்னொ விஷயம் இருக்கிறதம்மா! நாங்கள் குதிரைகளில் செல்கிறோம். உங்கள் பல்லக்கு எங்களோடு ஒத்து வராது!” என்றான் அவன். 

“ஐயா! அதற்குக் கூடக் கவலைப்பட வேண்டாம்! நாங்கள் பல்லக்கை விடுத்து குதிரைகளில் வர முடியும்”. 

ஒவ்வொரு ஆட்சேபனைக்கும் அவள் ஒவ்வொரு பதிலாக சொல்லி வந்தது அதிவீரனை ஆச்சரியத்துன் ஆழ்த்தியது. 

இனி சொல்வதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை! 

சொல்லவேண்டுமானால், உங்களைக் கூட்டிப் போக இஷ்டமில்லை” என்று கூறலாம். அதற்கு அவர்கள், “ஐயா! எங்களை நீங்கள் கூட்டிப் போகாவிட்டாலும் வேண்டாம். தங்கள் பின்னால் நாங்கள் வந்துகொண்டிருக்க அனுமதி யுங்கள்!” என்று சொன்னாலும் சொல்லிவிடுவாள்! 

தார்மீக ரீதியில் பார்த்தால், அது அவனுக்குச் சங்கடம் விளைவிப்பதாக இருந்தது. 

“ஐயா! தயங்களிதீர்கள்! அனுமதி அளியுங்கள்! தாங்கள் முன்னால் எங்களைக் காப்பாற்றியதிலிருந்தே எங்கள் எஜமானி அம்மாளுக்குத் தங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுவிட் டது. வேறு எத்தனையோ ஆண்கள் குழுக்கள் போனாலும் எஜமானி தங்கள் குழுவைத்தான் தேர்ந்து எடுத்திருக்கிறார். தயவுசெய்து மறுப்புத் தெரிவிக்காதீர்கள்!” என்றாள் சேடி. 

“சரி நீங்கள் யார்? அதை முதலில் சொல்லுங்கள்!” என்றாள் அதிவீரன், 

“பிரசித்திப்பெற்ற கொல்லங்கோடு தன் வணிகர் கேசவன் பிள்ளையுடைய மகள், என் எஜமானி! கல்விக் கேள்விகளில் சிறந்தவள். அது போலவே மல், வில், வாள் மூன்றிலும் தேர்ச்சி பெற்றவள்! குதிரை ஏற்றம், யானை ஏற்றம் எல்லாம் தெரியும். அதனால் அவரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்!. எங்கள் பாதுகாப்பையும் பராமரிப்பையும் நாங்களே பார்த்துக் கொள்வோம்” என்று கூறினாள் அவள்.

“சரி, புறப்படுங்கள்!” என்று கூறினான் அதிவீரன்.

அடுத்த ஜாமத்தில் அந்தக் கும்பல் வடக்குக் கோட்டை வாசலில் நின்றது. 

“கோட்டைக் காவலன் எங்கே?” என்று கோட்டை மதிலை நோக்கி அதிவீரன் வினவ, கூட வந்த சகா திடீரென்று அதிவீரனைப் பின்னால் தள்ளினான். 

அது எதிர்பாராதது, 

அதிவீரன் சரிய, குதிரை கால்களை மேலே தூக்கியது.

அத்தியாயம்-14

குதிரையின் கீழே ஒரு அம்பு தைத்துக் கொண்டு நின்றது. அதிவீரன் மயிரிழையில் தப்பி இருந்தான். 

“ஏய், ஏய், ஏய்!” என்று ஓங்கிக் கத்தினான் அதி வீரனின் சகா வீரசேனன். “ராஜாவின் தம்பியார் வந்திருக்கிறார்! தென்காசிப் பாண்டியர்” என்று மீண்டும் இரைய, 

கோட்டைக் காவல்காரர் ஒரு கட்டுச் சூழ்நதியை நெருப்பில் கொளுத்தி அவர்கள் அருகே வீசி எறிந்தார். 

சூழ்ந்தி எரியும் வெளிச்சத்தில் அதிவீரனின் முகத்தை அடையாளம் கண்டதும், “மகாராஜா, வணக்கம்!” என்று கூறி கீழே குதித்து ஓடிவந்தார். 

“அடியேனைப் பொறுத்தருள வேண்டும். இரண்டு நாழிகை முன் சாமர்த்தியமாக நால்வர் ஒரு பெண்ணோடு தப்பித்து ஓடிவிட்டார்கள்!” என்றார் கோட்டைக் காவலர். 

“நீலப் பாகைக்காரர்களா?” என்றான் அதிவீரன். 

“தெரியவில்லை! முதலில் ஒரு ஆண் வெளியே போக அனுமதி கேட்டார். அவருடன் வந்த பெண் பேசாமல் மவுனமாக நின்றாள். யாத்ரீகர்கள் என்று சொல்ல, நாங்கள் கதவைத் திறந்து அகழியை மூடியதுதான் தாமதம், மூன்று பேர் நான்கு குதிரைகளோடு வந்தார்கள். வெற்றுக் குதிரையில் ஆண் ஏறி பெண்ணைத் தூக்கிக் கொள்ள நால்வரும் வாசலைக் கடந்து ஓடிவிட்டார்கள். எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. அதனால்தான், தாங்களும் யாரோ என்று நினைத்து எச்சரிக்கை அம்பு விடுத்தேன்!” என்றார். 

அதிவீரன், ”நல்லது!” கதவைத் திறவுங்கள்!” என்றார்.

காவல் பெரியவர் வணங்கிவிட்டு, கதவைத் திறக்க பணியாட்களுக்குக் கட்டளை இட்டார். 

கதவு திறந்தது. வெளியே போனார்கள்.

அரை நிலா வீசிக் கொண்டிருந்தது. 

பரந்த வெளிகளும், தோப்புகளும், காடுகளும் ஏதோ சொப்பனம் போல் தெரிந்தது. 

அதிவீரன் எச்சரிக்கையாக வந்துகொண்டிருந்தான்.

மூன்று நாழிகை தூரம் சென்ற பிறகு தூரத்தில் நரசிம்மபுரம் கோபுரம் தெரிந்தது. 

எல்லோரும் சற்று ஓய்வாகப் போகும் நிலையில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. 

ஒரு திருப்பத்தில் அவர்கள் திரும்பும்போது, மூன்று குதிரை வீரர்கள் அவர்கள் வழி மறித்தார்கள். 

பெண்கள் சென்ற இரு குதிரைகளும் நின்றன. 

வந்த வீரர்கள் அட்டகாசமாய்ச் சிரிப்பதைப் பார்த்த தும் அவர்கள் வந்த காரியம் நல்லதற்கு அல்ல என்று தெரிந்தது. 

அதிவீரன் சட்டென்று குதிரையை இழுத்துவிட்டான். அவன்முன்னே போவதற்கு முன், இரு பெண்களும் வாளை உருவி இருந்தார்கள்! 

சேடியாக இருந்தவளின் குதிரை விருட்டென்று பாய்ந்து மூன்று எதிராளிகளையும் மறைத்தது. 

வாள் அங்கங்கே மின்னுவதுதான் தெரிந்தது. அத்தனை வேகத்தில் சுழற்சி நடந்தது. 

மூவரும் சற்று திகைத்தது நன்கு தெரிந்தது. 

“அம்மணி நான் கவனித்துக் கொள்கிறேன்.” என்று அதிவீரன் பாய்ந்து வாளை காற்றில் வீசினான். 

பின்னர் அதன் உஷ். உஷ் சத்தங்களே கேட்டன. சீக்கிரத்தில் எதிரிகள் உக்கிரம் வாய்ந்தவர்கள் என்பது தெரிந்துவிட்டது. 

எனவே அதிவீரனுக்கு உதவியாக இரு சகாக்கள் சண்டையில் நுழைந்தார்கள். 

ஒரு வெறியான யுத்தம் அங்கே நடந்தது. பயந்துபோய் மரங்களில், காக்கைகள் கத்தின. பூமி அதிர்ந்து துகள்கள் மேலே கிளம்பின. 

தூசியில் மூவரும் மறைந்து அவர்களது நிழல்கள்தான் சாடிக் கொண்டிருக்கும் சாயல் தெரிந்தது. 

எதிரியில் ஒருவன் காயமாசித் திரும்பினான். இருவர் இன்னும் உன்மத்தில் இருந்தார்கள். அதிவீரனைக் குறித்து அவர்கள் குறியாக இருந்தார்கள். சகாக்களை அவர்கள் அதிகம் பொருட்படுத்தவில்லை. 

ஒரு நேரத்தில் அதிவீரனை இருவரும் ஒரு நெருக்கத்தில் வைத்துவிட்டார்கள் என்பதும், சகாக்கள் அந்த நெருக்கடியை உடைக்கச் சிரமப்படுகிறார்கள் என்பதும் தெரிந்தது. 

சேடியும் மங்கையும் ஒருவருக்கு ஒருவர் கண்ணைச் சிமிட்டினார்கள். 

இருவரும் ஏக காலத்தில் இரு கத்தியை உருவி விருட் டென்று வசினார்கள். 

சக்கரங்களாகச் சுழன்று சென்ற கத்திகள் சண்டை செய்வோரின் இடுக்களில் நுழைந்தது அற்புதமான காட்சி! அதை வீரன் சுவனித்தான். 

மங்கையின் கத்தி ஒரு வீரனின் மார்பு ஓரம் பாய்ந்தது.

மற்ற கத்தி சற்றோ குறி பிசகி மற்றொரு வீரனின் தோள் வழியே விலகிச் சென்றது. 

ஒரு வீரன் சுத்தியோடு திரும்பினான்.

மற்றவனுக்கு எச்சரிக்கை கொடுத்தான். 

மங்கை விடவில்லை. மற்றொரு கத்தியை வீச. அதுவும் சுழன்று அடுத்த வீரனை நோக்கிப் பாய்ந்தது. 

அது அவனைத் துரத்துவது போல் பாய்ந்துவர, அவன் அதிலிருந்து விலக முயற்சி செய்து கடைசியில் எதுவும் இயலாமல் குனிய, தோள் மீது ஒரு முத்திரை போல் ஆழப் பதிந்தது. 

அவன் குதிரை திரும்பியது. மற்ற இருவரைத் தேடி ஓட ஆரம்பித்தது. 

உடனே அதிவீரன் கீ.ழே குதித்து, மங்கையை நோக்கி ஒடிவந்தான். 

அவளும் கீழே குதித்தாள். 

“ஆச்சரியம்! அற்புதம்! இதென்ன அதிசயக் கத்தி வீச்சு!” என்று அவளைப் புகழ்ந்து நின்றான். 

மங்கை அவனை நாணக் கண்களோடு பார்த்நாக முகத்தில் குறுநகை வீசி மறைந்தது. 

“அம்மணி! நீங்கள் செய்த காரியத்தைப் பார்த்தால், நீங்கள்தான் எனக்குத் துணை வந்திருக்கிறீர்கள் போல இருக்கிறது! நாங்கள் உங்கள் துணையல்ல!” என்றான் அதிவீரன். 

“அப்படி இல்லை அய்யா! சில வேலைகள் சுற்று வைத்திருக்கிறோம். சமயம் வந்தால் பயன்படுத்துவோம்! இல்லாவிட்டால் இந்த யாத்திரைக்கு நாங்கள் புறப்படுவோமா?” என்றாள் அவள். 

குரல் மெல்லிய வீணை போல ஒலித்தது. மனதுக்குள் அது சென்று ஏதோ குறுகுறுப்பை ஏற்படுத்துவது போல் தோன்றியது. 

“அதை எப்படி எறிகிறீர்கள்? தயவுசெய்து காட்டுங்கள்!” என்றான் அதிவீரன், 

மங்கை தலைகுனிந்தாள். 

மங்கை முறுவலித்து சேடியைப் பார்த்தான். சேடியும் கண்களில் முறுவலித்தாள். 

“இந்த வித்தையைக் காட்டுங்கள்” என்று மீண்டும் தழைந்து கேட்டான், அதிவீரன். 

மங்கையின் ஒரு புருவம் சொடுக்கியது. 

சேடி தனது சேணத்திலிருந்த கத்தி ஒன்றை எடுத்தாள். மங்கையிடம் நீட்டினாள். 

மங்கை அந்தக் கத்தியைக் கைப்பிடியில் பற்றவில்லை. கூர்மை நுனியில் இரு விரல்களால் பற்றினாள். 

அருகில் இருந்த மரத்தின் கிளை ஒன்றில் கண்ணை வைத்தாள். 

கால்களை அகற்றி நின்றாள். 

தோளுக்கு மேல் கையைத் தூக்கி விருட்டென்று கத்தியை விடுத்தாள். 

காற்றில் அது சுற்றுவது வினோதமாக இருந்தது. வேகமும் வீச்சலுமாக பாய்ந்து மரக் கிளையில் களுக் கென்று தைத்தது. 

அதிவீரன் கண் இமைப்பதற்குள் மங்கை மேலும் இரு கத்திகளை வீசிவிட அவை அதிசயமாகக் குறி தவறாமல் முதல் கத்திக்கு அடுத்து அடுத்து. வரிசையாகப் பதிந்து கொண்டன. 

பந்திக்கு அமர்வது போல் வரிசையாகப் பற்றிகொள் வது வியப்பாக இருந்தது. 

“அம்மணி! இந்த வித்தை எங்கே கற்றீர்கள்?” என்றான் அதிவீரன். 

அவன் விழிகளில் எல்லாம் அதிசயம். 

“இதை ஒலாந்தியரிடமிருந்து (டச்சுக்காரர்கள்) கற்றோம்” என்றாள் மங்கை.

அந்தப் பேச்சும் குரலும், முறுவலும் அவனுக்குப் பரசவமாக இருந்தது. 

“எவ்வளவு காலம் ஆகும் இது கற்க” என்றான் அதிவீரன். 

“தினம் பயிற்சி செய்தால் ஒரு வருடம் ஆகும்!” என்றாள் அவள்.

பிறகு எல்லோரும் அருகே ஓடையைத் தேடிச் சென்று நீர் பருகினார்கள். 

“யார் இவர்கள்? நீலத் தலைப்பாகைக்காரர்கள் தானே?” என்றான் அதிவீரன். 

“அவர்கள்தான்! பாகை அவர் சேணத்தில் தொங்கியது” என்றான் வீரன். 

“இவர்கள் மர்ம மனிதர்களாக இருக்கிறார்களே! கடைசி வரை சண்டை செய்வதில்லை! யாரும் அகப் படாமல் ஓடிவிடுகிறார்கள்!” என்றான் அதிவீரன். 

“இதுதான் அவர்களது போர் முறையாக இருக்கிறது. வடக்கே ஒரு இனத்தார் இதைப் போலவே சண்டை செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் வீரன். 

“இந்த முறையினால் இவர்களை தொடர்வதும், முறியடிப்பதும் கஷ்டம்!” என்றான் தீரன். 

“ஏன் இப்படிச் செய்கிறார்கள்? இவர்கள் நோக்கம் என்ன? வழிப்பறியா? கொள்ளையா? பெண் கடத்தலா? எதுவும் புரியவில்லையே!” 

“முக்கிய நோக்கம் நாட்டில் அமைதி சீர்குலைந்து விட்டது என்று காட்டுவது!” எனறான் தீரன். 

“அதனால் என்ன லாபம்?” 

“நாட்டில் கிலி ஏற்படுத்திவிட்டால், பிறகு நுழைவது சுலபம்?”

“இதை யார் செய்கிறார்கள்?” 

”அதைக் கண்டுபிடிக்கத்தானே புறப்பட்டிருக்கிறோம்! அல்லிக்கொடியைக் கடத்தியவர் தெரிந்தால் இவர்களைக் கண்டு பிடித்த மாதிரி” 

“அவர்கள் இந்த வழிதானே போனார்கள் என்று கோட்டைக் காவலர் சொன்னார். சீக்கிரம் பின்பற்ற வேண்டும்”. 

“நரசிம்மபுரம் ஒரு கூடுமிடம் ஆயிற்றே! நிச்சயம் அங்கே இருப்பார்கள்!” 

குதிரைகள் விரைவாக நடக்க, இரவின் முடிவுக்கு இரு ஜாமங்கள் முன்னாலேயே நரசிங்கபுரத்தை அடைந்தார்கள்.

வழக்கமான குணவதி அம்மாள் சத்திரத்தில் தங்கினார் ஊருக்குத் தென் எல்லையில் இருந்தது. 

அங்கே சென்று யாரையும் அந்த வேளையில் எழுப்ப மனமில்லாமல் நீளமான திண்ணை மீது ஏறி சற்று நேரம் அயர்ந்தார்கள். 

கண்கள் ஆழ்ந்து போயிருக்கும். விடியலுக்கு ஒரு ஜாமமம் முன்னால் அந்தக் குரல் கணீர் என்று கேட்டது. அருமையாக ஒரு கடவுள் பாடலைப் பாடிக் கொண்டிருந்தது. 

அது யார் என்று அதிவீரனுக்குத் தெரியும்..

இவர் இங்கே எப்படி வந்தார்? 

அதிவீரன் சட்டென எழுந்து கண்களைக் கலைக்க, போலவே எழுந்திருப்பது தெரிந்தது. அதே நேரம் எட்டத்தில் படுத்திருந்த மங்கையும் அவனைப் 

அதிவீரன் திண்ணையை விட்டுக் கீழே குதித்தான்.

பாட்டு வரும் திசையை நோக்கிச் செல்ல.

மங்கையும் அதை நோக்கியே வருவது தெரிந்தது.

அத்தியாயம்-15

மங்கை அந்த கருக்கல் இருட்டில் போவதைப் பார்த்து அதிவீரன் யோசித்தான். 

பாடலில் கனிந்து வரும் குரல் இலஞ்சிச் சாமியாருடை யது என்று நன்றாகப் புரிந்துவிட்டது. 

இந்தப் பெண்ணுக்கு இலஞ்சியாரைத் தெரிந்திருக்குமோ?. 

இருக்கலாம்!. 

இலஞ்சியார்தான் ஒரு சந்நியாசி ஆயிற்றே! அவர் போகாத இடம் ஏது மலையாள தேசம் போயிருக்கும்போது இந்தப் பெண்ணையும் அறிந்திருக்கலாம். 

சட்டென்று நின்று. முற்றம் பக்கம் போவது போல் திரும்பினான். 

அவன் திரும்புவதைப் பார்த்த மங்கை. தன் வழியே வேகமாகப் போனாள். 

முற்றம் வரை சென்ற அதிவீரன் சிறிது காத்திருந்தான்.

பிறகு மெல்ல பூனைப் பாதம் வைத்துச் சென்று, தோட்டத்தில் எட்டிப் பார்த்தான். 

இருள் மாறி சாம்பல் நிற வெளிர்வு எங்கும் பரவி இருந்தது. அத்தனை தென்னைகளின் அடிவாரங்களும் ஆயிரங்கால் மண்டபத்தின் தோற்றத்தைத் தந்தன. 

சற்று தூரத்தில் தென்னை ஒன்றின் கீழே இலஞ்சி யார் அமர்ந்திருப்பதையும், அவர் அருகே மங்கை விதயமாக வீற்றிருப்பதையும், பார்த்தான். 

இலஞ்சியார் அப்போதுதான் திருவாசகத்தை முடித்திருந்தார். 

பிறகு அவரும் மங்கையும் ஏதோ பேசுவது கேட்டது.

அவன் எதிர்பார்த்ததைவிட சற்று அதிகமாகவே பேசினார்கள், 

இலஞ்சியாருக்கு இந்தப் பெண்ணைத் தெரியுமா? அவர்கள் பேச்சு முடிந்த பிறகு, அந்தப் பெண் எழுந்திருக்க, 

அதிவீரன் விலகிப் போய் மறைவில் நின்று கொண்டான். 

தாழ்வாரம் ஏறிய மங்கை, நாலா பக்கமும் பார்த்தாள்.

அவனைத்தான் தேடுகிறாள் என்று அதிவீரன் யோசித்தான். 

அவளது யோசனைக்கு அதிக இடம் கொடுக்க. விடாமல், முற்றத்தில் ஓசையில்லாமல் தாவி ஓடி கிணற்று ராட்டையைச் சட சட என்று ஒசைப்படுத்தி குளிக்க நீர் எடுக்கிற பாவணையை உண்டாக்கினான். 

ஒரு நாழிகை கழித்தே இலஞ்சியாரை அவன் சந்திக்கச் சென்றான். 

அப்போது காலையின் இள வெளிச்சம் வந்துவிட் டது, எங்கும் சோபையான முதுவலில் இயற்கை மினுக் கியது. அந்தத் தென்னந்தோப்பு, ஒரு பொன் கூரை வேய்ந்த வனப்பு கொடுத்தது. 

“அதிவீரா! நீ இங்கேயா இருக்கிறாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் இலஞ்சியார். 

”ஆமாம். சுவாமி தங்களை இங்கே சந்திப்பது ஆச்சரியமாக இருக்கிறதே!” என்றான் அதிவீரன். 

“நான் துறவி! கால்போன இடமெல்லாம் செல்வேன்! எனக்கு குறி ஏது, இலக்கு ஏது? சரி, வந்திருக்கிற காரியத்தைச் சொல்” என்றார் அவர்.

“அல்லிக் கொடியை அபகரித்துப் போய்விட் டார்களே! நீங்கள் கேள்விப்படவில்லையோ?”

“யார் அல்லிக்கொடி” 

“தங்களுக்குத் தெரியாதா? தாசி அல்லிக்கொடி”

“ஓகோ. தாசியா? அவளைத் தேடி இங்கு வந்துவிட்டாயா!” 

அவர் குரலில் கலந்திருந்த கலகலப்பை அவன் அறியாமல் இல்லை. 

“ஆமாம். சுவாமி! பெரிய கவுரவப் பிரச்சினை ஆயிற்றே!” 

“முக்கிய விஷயந்தான், இல்லை என்று சொல்ல வில்லை! அதைவிட முக்கியம் ஏதேனும் இல்லையோ?”

“சுவாமி! நாட்டுக்கு அபாயம் நெருங்கி இருக்கிறது; யுத்தம் வரப்போகிறது என்றீர்கள்!” 

“ஆமாம்” 

”அதையும் அறிந்து விடத்தான் கிளம்பி வந்திருக்கிறேன்!” 

“ஏதாவது தெரிந்ததா?” 

“தாங்கள் கூறியது போல, நீலத் தலைப்பாகைக் கூட்டம் அங்கங்கே தலைநீட்டுகிறது. எதிரில் நேருக்கு நேர் சண்டை செய்வதில்லை!’ தாக்குகிறார்கள். ஓடுகிறார்கள் என்றான் அதிவீரன். 

சிரித்தார் இலஞ்சியார் 

“அது அவர்கள் பழக்கம் அதற்கு நாம்தான் பரிகாரம் ஆயிற்று?” தேடவேண்டும்! சரி. அல்லிக்கொடி விஷயம் என்ன 

“இதுவரை தடயம் கண்டுபிடித்து வந்துவிட்டோம்! இனிமேலும் தெரிய வேண்டும். 

இலஞ்சியார் குறுநகையுடன் மவுனமானார். “சுவாமி! தங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்றான் அதிவீரன். 

“நான் என்ன முக்காலத்தை உணரும் ஞானியா? ஒரு ‘காலம்’ கூட எனக்குச் சரியாகத் தெரியாது. நான் என்னத்தைக் கண்டேன்” என்றார் இலஞ்சியார். 

“தாங்கள் எதுவும் கேள்விப்பட வில்லையா?” என்றான் அதிவீரன். 

“நான் கேள்விப்பட்டதை எல்லாம் சொல்லிவிட்டேனே! அங்கங்கே படைகள் திரட்டப்படுகின்றன.”

“எனக்கு அறிகுறி ஏதும் தெரியவில்லையே!” 

“இங்கே தென்பாண்டிய நாட்டில் இருந்தால் உனக்கு என்ன தெரியப்போகிறது? அண்ணணும் தம்பியும், தமிழையும் இலக்கியத்தையும் படித்துக் கொண்டிருந்தால் நாட்டு நடப்பு எப்படித் தெரியும்? வடக்கே போனால்.”

“அதையும்தான் செய்து கொண்டிருக்கிறேன், சுவாமி!” 

“வருகிற வழியில் பாளையக்காரர்களைப் பற்றி ஏதாவது வினவினாயா?” 

“இலலை சுவாமி!”

“ஏன்?”

“நான் மாறுவேடம் பூண்டிருக்கிறேனே”

“அதனால் என்ன? இந்த ஊர்ப் பாளையக்காரர் எங்கே இருக்கிறார் என்று கேட்கலாமில்லையா?”

“கேட்கவில்லை சுவாமி!”

“விருப்பமில்லையா?” 

“விருப்பம் உண்டு சுவாமி! அது எனக்குத் தோன்ற வில்லையே!” 

“அதைத்தான் நான் குறை கூறுகிறேன். சாமித் தேவரை மட்டும் நினைத்து இருந்துவிடாதே” என்றார் இலஞ்சியார். 

சாமித் தேவர்தான் அதிவீரனுக்கு ஆசான்! தமிழைப் புலமை நிறைந்த ஞானி! அதிவீரனுக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்தவர் அவரே! அடிக்கடி அவருடன் அளவளாவி இருப்பதைத்தான் இலஞ்சியார் அப்படிக் கூறினார். 

“தங்கள் சொல்லுக்குக் கீழ்ப்படிகிறேன் சுவாமி! சொல்லுங்கள் பாளையக்காரர்கள் எல்லோரும் எங்கே போயிருக்கிறார்கள்?”” 

“எல்லாப் பாளையக்காரர்களும் அல்ல! மண் ஆசையும் மகுட ஆசையும் பிடித்தவர்கள் எல்லாம் மதுரைக்கு உளவாகவும், தஞ்சைக்குத் தோழனாகவும் சென்றிருக்கிறார்கள்” 

”தஞ்சைக்குத் தோழனாகப் போவது சரி! நம் பகைவனோடு உறவு கொள்ளப் போகிறார்கள். மதுரைக்கு ஏன் உளவாகப் போகிறார்கள்?” 

“தளவாய் பற்றி தெரியாதா?” 

“தளவாய் அரியநாதர் தானே! அவருக்கு என்ன?”

“அவரை சில காலமாகக் காணவில்லை என்பது தெரியுமா?” 

“கேள்விப்பட்டேன். அவருக்கு என்ன நேர்ந்தது?”

“யாருக்குத் தெரியும்?” 

“இப்போது நாயக்க அரசிடம் அவர் இல்லையா?”

“இருக்கிறார். ஆனால் ஆளைக் காணவில்லை!”

“யாராவது கொன்று விட்டார்களா?” 

“இருக்கலாம். கிழம் ஆயிற்றே!” 

“அவரைக் கொன்று என்ன லாபம்?” 

சிரித்தார் இலஞ்சியார். 

“கிருஷ்ணா ஆற்றங்கரைப் போர் தெரியாதா?” 

“விஜய நகர சக்கரவர்த்தி இட்ட போரா? தலைக் கோட்டை யுத்தம் தானே” 

“ஆமாம், நடந்து பதினெட்டு ஆண்டுகளாகின்றன. அப்போதுதான் நீ பட்டணத்திற்கு வந்த இளைஞன்! உனக்கு அதிகம் தெரிந்திருக்காது.’ 

“உண்மை சுவாமி! தென்னாட்டில் நடந்த பெரிய போர் அது! மக்கள் லட்சக்கணக்கில் மாண்டார்கள், அதன் பலனாக பேரெழில் வாய்ந்த விஜய நகரமே அழிந்து போயிற்று”. 

“ஆமாம்!. அந்த நகரத்தை நீ பார்த்திருந்தால், இப்போது அது பாழாக இருக்கும் நிலை கண்டு இரத்தக் கண்ணீர் விடுவாய்!”

“பலர் சொல்லி இருக்கிறார்கள். என் தந்தையார் கூட படை அனுப்பி இருந்தார்” 

“ஆமாம்! பாளையக்காரர்கள் அனுப்பினார்கள். அவர் களை எல்லாம் சேர்த்து, மதுரை நாயக்கர் தமது தளவாய் அரியநாதர் தலைமையில் வடக்கே அனுப்பி வைத்தார். சமுத்திரம் போல் திரண்ட படை அது. இந்த சமுத்திரப் படையை எந்த வடக்குப் படையும் வென்றிருக்க முடியாது. ஆனால் சூழ்ச்சியில் வென்றுவிட்டார்கள். இது தெற்சுத்தி நாடுகளுக்கு எல்லாம் பெரிய துரதிர்ஷ்டம்!” 

“தெற்கத்திப் படைகள் என்ன ஆயிற்று, சுவாமி?” 

“எல்லாப் படைகளும் தோல்வியில் ஓடும் போது தெற்கத்தி படைகள் மட்டும் என்ன செய்யும்? அப்படி இருந்தும் இராமராயனைக் கூடியமட்டிலும் காப்பாற்றி அவர் பக்கத்திலேயே இருந்தன படைகள் அவர் கொலையுண்டார் என்று தெரிந்த பிறகுதான் களத்தைவிட்டு வெளியேறின.” 

“ஒகோ பல போர்களில் வெற்றி கண்ட தளவாய் அரியநாதரே எதுவும் செய்ய முடியவில்லையே!” 

“அவர் மட்டும் என்ன செய்ய முடியும்? பகைவர் தாக்கு முன் விஜய நகரப் படைகளை கிலி தாக்கிவிட்டது. வழ்ச்சி அடைந்தது. அரியநாதர் கடைசி வரை மாமன்னர் இராமராயர் அருகில்தான் இருந்தார். யுத்த நிலை மோசமாகிறது என்று தெரிந்ததும், இராமராயர் தளவாய் அரிய நாதரைக் கூப்பிட்டு “அரியநாதரே! யுத்த முடிவு என்ன ஆகும் என்ற கவலை எமக்கு! உம்மிடம் ஒரு காரியம் ஒப்படைக்கிறோம். நாம் தோல்வியடையும் பட்சத்தில், இதோ என் கூடாரப் பகுதியில் இருக்கும் பொக்கிஷம் அனைத்தையும் எங்கேயாவது எடுத்துச் சென்று காப்பாற்ற வேண்டியது தங்கள் கடமை! நாம் மறைந்தாலும் பின்னர் ஒரு சாம்ராஜ் ஜியம் மீண்டும் எழுப்ப இந்தப் பொக்கிஷத்தைக் கொடுத்து உதவுங்கள்” என்றார். 

அதிவீரன் வெகு ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தான். 

”அப்படியா? விஜயநகர மன்னர்தான் தோல்வி அடைந்தாரே! பொக்கிஷம் என்ன ஆயிற்று?” 

“தம் படை ஆட்களோடு தளவாய் அரியநாதர் அந்தப் பொக்கிஷங்களை தெற்கே கொண்டு வந்துவிட்டார்”

“மதுரையில் வைத்திருக்கிறாரா?”

– தொடரும்…

– மன்மதப் பாண்டியன் (நாவல்), முதல் பதிப்பு: 1998, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *