நீதி நின்று கொல்லும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 13, 2022
பார்வையிட்டோர்: 3,811 
 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த ஊரில் அவனே ராஜா; அவன் இட்டதே சட்டம்; அராஜகமே அவன் ஆட்சி முறை.

ஏழை மக்கள் அவனால் சொல்லி முடியாத கஷ்டம் உற்றார்கள். “எத்தனிவன் ஒழியும் நாளே எமக்கின்ப நாள்” என அவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.

அந்த ஊரிலே வசித்த அழகிய இளம் பெண்கள் ஆயி ரம் தெய்வங்களிடம் அழுது புலம்பியும் முதல் தர லீலா விநோதனான அவ்வூர் மன்னனின் பார்வையிலிருந்து தப்ப மூடியவில்லை .

பெண்களைப் பெற்றவர்கள் பேதலிக்க – ஏழைகள் ஏங் கிச் சாக – நல்லறிஞர் இதயம் மிகநோக அந்தக் கொடுமை மிக்க அரசன் தனது அறங்கோடிய ராஜாங்கத்தை நடாத்திவந்தான்.

அதோ! அந்த அரக்க மனங்கொண்ட அரசனுக்குப் பின்னால் ஏதோ பயங்கரப் பிசாசின் வயிற்றிற் பிறந் தாற்போல ஒருவன் நிற்கிறானே, அவன் தான் அந்த அர சனின் முக்கிய ஆலோசகன் – அமைச்சன். அவனே நாச காலனான வேந்தனின் காட்டுத் தர்பார் ஆட்சிக்குத் திட் டங்கள் தீட்டிக் கொடுப்பவன்.

அது அமைதியான நதிக்கரை; அந்த நதிக்கரையிலே ‘அவ்வூரிலேயே வனப்புமிக்கவன் இவனே’ எனச் சகலரும் சான்று பகர்ந்த பதினைந்து வயதான சிறான் குமார நம்பி தனது கனவு காணும் – காண்பாரைக் கனவு காணச் செய்யும் கண்கள் நதியை உற்றுப்பார்க்க உட்கார்ந்திருக் கிறான். அவனுக்குப் பக்கத்தே கூர்மையான கண்களோ டும், பரந்த நெற்றியோடும், திடகாத்திர சரீரியாக அமர்ந்து, அச் சிறான் குமார நம்பியின் கேசத்தை நேசத் தோடு தடவியபடி உள்ளாரே அவர் யார் தெரியுமா? அவர்தான் அவ்வூர் ராஜசபையின் ஆஸ்தான கவிஞன்.

அரசன் தீயவனே ஆயினும் கொஞ்சம் கலாரசனையும் மிக்கவன். ஆதலால் அவ்வப்பொழுது கவிஞர் பெருமா னான ‘மதன பித்தனின்’ கவிதைகளைக் கேட்டானந்திக்கத் தவறுவதில்லை.

கவி அந்தப் பெரிய இராஜசபையிலே கம்பீரமாகத் தனது வெண்கலக் குரலிலே பண்ணோடிணைந்த பைந் தமிழ்ப் பாமாலைகளை இசைக்கின்றபோது மன்றெல்லாம் மகிழ்ச்சி லாகிரி லயிப்பிலே நர்த்தனம் புரியும்.

தனது மேதையால் ஊராரின் ஒருமித்த பாராட்டுத் லைப் பெற்றது மட்டுமின்றி கொடுங்கோன்மை அரசனால் கூட கௌரவிக்கப்பட்டார் அக் கவிஞர் பெருந்தகை.

இது கண்டு அரசனின், நரித்தந்திர அமைச்சன் மனம் புழுங்கினான். பொறாமை அவனைப் பிடித்தாட்டியது. கவி ஞர் முகத்திற் கரி பூச ஒரு சந்தர்ப்பத்தை வேண்டி நின் றான் அவன்.

அரசனின் மிருக ஆட்சிக்கு மேன்மேலும் எண்ணெய் வார்த்தான் அமைச்சன். அரசனோ முன்னையிலும் பார்க்க பெரிய மது பக்தனாகி – மாதுலோலனாகி சர்வாதிகார சண்டாளனுமாக மாறினான்.

ஒரு நாள் ஒரு சம்பவம் நடந்தது. அரசனுடைய உற வுக்காரப் பெண்ணொருத்தி சபையின் இளம் காவலாளி ஒருவன்பால் நசையுற்றாள்.

இருவர் இதயம் இணைந்தன. உறவின் தீபம் சுடர்ந்தது.

செய்தியை அரசனுக்கு உடனே எட்டச் செய்தது மட்டுமல்லாது “முறையான பாடம் படிப்பித்தாலொழிய மேற்கொண்டும் இவ்வாறான சம்பவங்கள் நடக்காது தடுக்கமுடியாது” எனக் கூறி அரசனை முடுக்கிவிட்டான் மந்திரி.

மிருகத்தனமான அரசன் அந்த இளம்பெண்ணையும், அழகிய காவலாளி இளைஞனையும் விசாரணைக்கு இழுத்து வரச் செய்தான். இருவரதும் ஆடைகளைப் பலவந்தமா கக் களை யச் செய்து, முதலில் அந்தப் பெண்ணின் கோயிற் தூணன்ன தொடைப்புறங்களிலும், அவளின் பருவ விருந் துக்குச் ‘சலாம்’ போட்டு வரவேற்கின்ற தனங்கள் மேலும் சவுக்கினால் அடிபோட எழுந்தான்.

அந்த அழகிய இளைஞனுக்கும் கூறவே மனங் கூசக் கூடிய தண்டனைகள் வழங்க அரசன் சித்தமானான்.

அரசன் தண்டனையை நிறைவேற்ற முற்பட்ட அதே வேளையில்,

“நிறுத்து! நீதிகெட்ட நீசனே நிறுத்து! நாதியற்ற வர்க்கு நலிவு செய்யும் நாசனே நிறுத்து!”

கம்பீரமான குரல் மேற்கண்டவாறு கனன்றுரைத் தது. அரசன் ஒருகணம் ஸ்தம்பித்தே போய்விட்டான்.

எதிரே ராஜ்ய கவி ரௌத்ரகாரமே உருவாக நிற்கக் கண்டான். மறுகணம்

“ஏ! புலவனே, நீ பேசுவது மாமன்னனிடம்! நான் நினைத்தால் ஒரு வினாடியில் உன்னைச் சாக்காட்டுக்கு அனுப்பிவிட முடியும்”

“மன்னா! தர்ம விரோதத்துக்கும் ஒரு எல்லையுண்டு. பாவம்! இளம் காதற் புறாக்களை நீ ஹிம்சிப்பது தெய் வத்துக்கே அடுக்காது.”

“ஏ! மூடக் கவியே! மூடு உன் வாயை. நீ ஒரு கவி என்றபடியால் இத்தோடு மன்னித்து விடுகிறேன். இன்றி லிருந்து நீ இச் சபையின் ஆஸ்தான கவிஞனல்ல”

“அரசனே! அழிவுப் பாதை உன்னை அண்மித்துக் கொண்டிருக்கிறது. ‘மனிதனை அழிக்கும் முன்பு கடவுள் அவனுக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்கிறான்’ என்பார் களே! அது முற்றிலும் உண்மையே. நீ எக்கேடும் கெட் டுப் போ! நல்லவர்களைக் கடவுள் காப்பாற்றட்டும்”

கவிஞர் சபையைவிட்டு ஆவேசமாக வெளியேறினார். அரசன் தன் கொடும்பணியைத் தொடர்ந்தான்.

கவிஞன் அரச நிந்தனைக்கு ஆளான சம்பவங்களை அசட்டை செய்து அமைதியான நதிக்கரையிலே அமர்ந்து கொண்டு அற்புதமான காவியங்களைச் செய்தார். ஓய்ந்த நேரத்திலே தனக்குதவி புரிந்து – தன்பால் உழுவலன்பு பூண்டொழுகும் கவின் கொழுந்தான குமார நம்பியோடு சல்லாபித்து மகிழ்வார்.

“சிறுவனே! என் உள்ளத்தே பாடாது கிடந்த அமர காவியமே உன் உருக்கொண்டதடா” எனச் சொல்லிக் கொள்வதில் கவிஞருக்குச் சாந்தி கிடைத்தது.

ஒரு நாள் இரத்தவெறி வேந்தனின் குள்ளமதி அமைச் சன் அமைதியான ஆற்றங்கரையிலே “சுந்தரச் சுவை” என்ற காவியம் செய்து கொண்டிருந்த கவி மதன பித்தனை ஏளனமாகப் பார்த்து,

“புலவனே! இன்னமும் நீ இறக்காதிருக்கின்றனையே” என ‘குத்தல் மொழி’ பேசி நிற்க,

“தூ!” வென அந்த நரி அமைச்சரின் முகத்திலே காறித் துப்பினான் இளங்கன்றான குமாரநம்பி.

ஆ! என் மானம் போனது; என் மானம் போனது இப்படிச் சொன்ன மந்திரி “சந்தர்ப்பம் வரட்டும்” என சினந்து சென்றான்.

நாட்கள் கரைந்தன. அரசன் கட்டு மீறிக் கயமைகள் புரிந்தான். ‘இம்’ என்றால் சிறைவாசம்’ ‘ஏனென்றால்’ ‘வனவாசம்’ என்ற நிலை இருந்திருப்பினும் பரவாயில் லையே! ‘இம்’ என்றவுடனேயே இயம லோக வாசமே மக்களுக்குக் கிடைத்தது.

அரசனின் அட்டூழியந் தாங்க முடியாத இளம்பெண் கள் தற்கொலை புரிந்தார்கள். வாலிபர்கள் விக்கித்து நின்றார்கள். தாயர், தந்தையர் இதயம் வெடித்துச் செத்தார்கள்.

ஒரு வாலைக் குமரி பிறந்த மேனி யோடு தன் மானத்தை மறைக்க, அபயமளிக்க முடியாத கைகளாற் பகீதரப் பிரயத்தனம் புரிந்தபடி ஆற்றை நோக்கி ஓடி வந்தாள். அவள் பின்னால் காமப் பிசாசான அமைச்சன் – விட்டாற் பார்” என்றபடி ஓடி வந்தான்.

கவிஞர் கனன்றார்; எழுந்தார்; “ஏ! காமுகனே அந் தப் பெண்ணைத் தீண்டாதே!”

பதிலுக்குப் பயங்கரமாகச் சிரித்த அமைச்சன் “கவிக் குரங்கே ஒழிந்து போ” என்றபடி வாளை உருவினான்.

ஒரே ஒரு கணம். “அம்மா” என்ற அலறலோடு நில மிசை வீழ்ந்தான் அமைச்சன்.

சிறான் குமார நம்பி அமைச்சனின் பின் மண்டையிலே கூர்க்கல்லாற் தாக்கிய பெருமிதத்தில் நின்றான் .

கவிஞர் பூரிப்போடு அவனைப் பார்த்தார். பின் அந் தப் பெண்ணிடம் “பெண்ணே! இந்தா, இதனை அணிந்து “கொள்” என்று தனது நீண்ட சால்வையை அவளுக்குக் கொடுத்து விட்டு,

“இனிச் சகியேன்; இந்தக் கொடிய அரசனை அறம் பாடியே அழிப்பேன்; நீதியை நிலை நிறுத்துவேன்” என திடசங்கற்பத்தோடு சொல்லிச் சென்றார். கன்னியுஞ் சிறுவனும் அவரைத் தொடர்ந்தனர்.

இரு நாட்கள் கழிந்தன.

கொடுங்கோல் வேந்தன் குடைசாய்ந்தது. மன்னன் மாண்டே போனான். கன்னியர் களித்தார்கள். காளையர் புத்துணர்ச்சி பெற்றார்கள். ஊரார் உத்சாகமுற்றார்கள். அனைவரும் ஒருசேரத் திரண்டு,

“கவிஞர் பெருமானே! நீங்களே எம் இரட்சகர். எம்மை நீங்களே ஆளவேண்டும்” என்றனர். கவிஞர் புன்னகைத்தார். அவர் சொன்னார்:

“குடிகளே குடிகளை ஆள்க! அதுவே நீதி! உங்களுக்கு இஷ்டமெனில் நான் நல்லாலோசனைகளை அவசியமான போதுகளில் வழங்கக்காத்திருக்கிறேன்.”

அந்த ஊரிலே மக்களால் மக்களுக்காக நடாத்தப் படும் குடியாட்சி பூத்தது. மக்கள் நல்லாலோசனைக்காக கவிஞர் பெருந்தகையைத் தேடிச் சென்றார்கள்.

அதோ! அந்த அமைதியான ஆற்றங் கரை. அதன் மடி.யிலே கவிஞர் மதன பித்தன் வழமைபோற் காவியக் கனவுகளில் நீந்தித் திரிகிறார். அவருடைய ஆற்றல் மிக்க வலக் கரம் வனை மிக்க குமார நம்பியின் கேசத்தை அன் பாகத் தடவிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

– சௌந்தர்யா பூஜை (இனிய சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1970, பிரசுரித்தவர்: ஐ.குமாரசாமி, கல்வளை, சண்டிருப்பாய்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *