கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 1,108 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

இஃதிவ்வாறிருக்க நாம் உன்னாச்சிகிரி என அழைக்கப் பட்ட குறிஞ்சி நாடாகிய கண்டி இராச்சியத்திற்குச் சிறிது எமது பயணத்தைத் தொடர் வேண்டியவர்களாக உள்ளோம். அங்கே அரசோச்சியவன்தான் மனுநேய கயவாகு மன்னன். அவன் இறப்புக்குப் பின் அவனது செல்லக்குமாரி அரசி ஆடக சவுந்தரி அரசுக்கு வந்தாள். அரண்மனையில் சிங்காசனத்தில் அரசி வீற்றிருக்க, சற்றுத் தூரத்தே மந் திரி விசித்திரயூகி அமர்ந்திருக்கிறார். ஏனைய மந்திரிகளும் பிரதானிகளும் சுற்றிவர அமர்ந்தனர். அச்சி கம்பீரமாக அமர்ந்து அமைச்சரை நோக்கித் தன் ஆணையின் கீழுள்ள சிற்றரசுகள் பற்றி விசாரிக்கிறாள். அவளுடைய வினாக்களுக் கெல்லாம் திருப்தியான முறையில் பதிலளித்துவந்த அமைச் சர் விசித்திரயூகி தட்சிணகைலாயம் பற்றிய பிரச்சினை எழுந் ததும் மௌனமாகி விடுகிறார் அந்தக் கேள்விக்குப் பதி லளித்து அரசியைச் சமாளிக்க முடியாதென்பது அவருக்குப் புரிந்து விடுகிறது. “தட்சிணகைலாயத்தில் சோழநாட் டிலிருந்து வந்து குடியேறியுள்ள மன்னன் எம் உத்தரவின் றிக் குடியேறியதுடன் மட்டும் அமையாது தன் விருப்பப் படி ஓர் ஆலயத்தையும் எழுப்பிக் கொண்டிருக்கிறதாக நான் கேள்விப்பட்டது உண்மை தானா அமைச்சரே?” என்று அரசி நேரடியாகவே அமைச்சரிடம் வினாவைத் தொடுத்தபோது “ஆம் அரசி! பிரமாண்டமான ஓர் ஆல யத்தை அமைத்துத் தன் நேரத்தையெல்லாம் அதிலேயே செலவிட்டு உடல் பொருள் ஆவி அனைத்தையும் கோயிலுக் காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறான் மன்னன் குணக் கோட்டன்” என்று அமைச்சர் மெதுவாகப் பதில் கொடுத்தார். 

அவருடைய பேச்சு அரசிக்கு ஆத்திரத்தைக் கொடுத் திருக்க வேண்டும். ‘வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு குறுநில மன்னன் என் ஆட்சிக்குட்பட்டிருக்கும் இந்த ஈழத்திரு நாட்டில் என் அனுமதியின்றி ஆலயம் அமைக்கத் துணிந் தால், அவன் எவ்வளவு கர்வம் உள்ளவனாக இருக்கவேண் டும். அவனைச் சும்மா விடக்கூடாது!” என்று மனதுக்குள் வெகுண்டாள். அதனால் அமைச்சர் பக்கந் திரும்பி “அமைச் சர் பேசுவதைப் பார்த்தால் அந்த மன்னரின் துணிச்சலான இச் செய்கையைத் தாங்களும் பாராட்டுவது போல் தெரி கிறது. ஒரு வேளை மன்னன் தங்கள் ஒத்தாசையுடன்தான் இந்தந் துணிச்சலான காரியத்தைச் செய்கிறானோ என்றுகூடட ஐயுறவேண்டி இருக்கிறது. 

வெளிநாட்டிலிருந்து வந்த மன்னன் தட்சிணகைலா யத்தில் குறுநில மன்னனாகத் தன் ஆட்சியை ஸ்திரப்படுத் தியதோடு மட்டும் நிற்காமல் பிரமாண்டமான கோயிலும் அமைத்துத் தன் விருப்பப்படி சோழநாட்டிலிருந்து குடிக ளையும் கொண்டுவந்து குடியேற்றுவதென்றால் நாமும் அவ னுக்கு உடந்தையாக இருக்கிறோம் என்றுதானே அர்த்தம் அமைச்சரே” என்று அரசியே தொடர்ந்து சிறிது கண்டிப்புடன் பேசியபோது அந்தத் தொனியில் ஒருவித ஏழனமும் துணிச்சலும் தொனித்தன. 

அவளது வினாக்களுக்கெல்லாம் மிகத் தெளிவோடும் துணிச்சலோடும் பதிலளித்துவந்த அமைச்சர் தட்சிண கைலாயம் பற்றிய பேச்செழுந்ததும் மௌனமாகிவிடுகிறார். அந்தக் கேள்விக்குப் பதிலளித்து அரசியைச் சமாளிக்க முடி யாதென்பது அவருக்குப் புரிந்து விடுகிறது. 

“தட்சிண கைலாயத்தில் சோழ நாட்டிலிருந்து வந்த மன்னன் எமது உத்தரவு இன்றிக் கோயில் எழுப்பியிருப் பதாகக் கேள்விப்பட்டது உண்மையா அமைச்சரே?” என அரசி திரும்பவும் அமைச்சரை வினவ அவர் சற்றுத் தடு மாற்றத்துடன் ‘ஆம் அரசியாரே! பிரமாண்டமான ஓர் ஆலத்தை அமைத்துப் புகழ் பெற்றுவிட்டான் மன்னன் குளக்கோட்டன்” என்று திரும்பவும் மன்னனைப் புகழ்ந்து பேச ஆரம்பித்ததும் ஆத்திரம் எல்லை கடந்துவிட்டது. 

“வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவன் என் ஆட்சிக்குட் பட்டிருக்கும் இந்த ஈழநாட்டில் எனது உத்தரவின்றி ஆல யம் அமைப்பதானால் அவனுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்.. ? அவனைச் சும்மா விடக்கூடாது” என்று மன திற்குள் எண்ணிக்கொண்டு “அமைச்சர் திருப்பித்திருப்பி அரசரைப் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தால், அவருடைய இந்த துணிச்சலான செய்கைக்கு அமைச்சரும் உடந்தை யாக இருப்பதுபோலத் தோன்றுகிறது. வெளிநாட்டு மன் னன் ஒருவன் இங்கு சாதாரண பிரஜையாக வந்து குறு நில மன்னனாகத் தன் ஆட்சியைத் ஸ்திரப்படுத்தியதோடு மட்டும் நில்லாமல் பிரமாண்டமான கோயில் அமைத்து சோழநாட்டிலிருந்து குடிகளும் கொண்டுவந்து குடியேற்றுவ தென்றால் நாமும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கிறோம் என்றுதானே அர்த்தம் அமைச்சரே” என்று திரும்பவும் அரசி இடித்துக் கூறியபோதுே அந்தப் பேச்சு அமைச்சரைக் கதிகலங்க வைத்தது. 

அவர் இம்முறை சிறிது மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு அரசியைப் பார்த்துப் பணிவுடன் “மகாராணி அவர்களே! தாங்கள் மிகவும் அவசரப்பட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். தங்கள் பேச்சு அமைச்சர் என்ற பெரும் பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கும் என்னை யும் தண்டிப்பது போலிருக்கிறது. மன்னன் குளக்கோட் டன் தட்சிணகைலாயத்தில் கோயில் எடுக்கும் செய்திபற்றி மாண்புமிக்க மகாராணியார் அவர்களுக்குத் திருப்பணி ஆரம்பிப்பதற்கு முன்னரே சில வார்த்தைகள் கூறியிருந் தேன். ஆனால் மகாராணியார் அதுபற்றி எந்தவித ஆட் சேபனையும் தெரிவிக்காது விட்டதால் தேவி அவர்களுக்கும் மன்னனது செய்கை சம்மதமாக இருக்கலாம் என்று நான் அபிப்பிராயப்பட்டேன். மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பார்கள். ஆனால் எனது அபிப்பிராயம் தவறானது என் பதை இப்போது உணர்கிறேன். அதற்கேற்ற நடவடிக்கை எடுப்பது மகாராணியாருக்கு உசிதமாகப்பட்டால் கட்டளை யிடுங்கள்!” என்று அமைச்சர் உணர்ச்சியுடன் பேசிமுடித் தார். அவருடைய வினாவுக்கு அரசியால் எந்தவித பதிலும் கொடுக்க முடியவில்லை. அரசி சிந்திக்கத் தொடங்கினாள். 

அவள் மன்னன் குளக்கோட்டன் பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தாள். இதுவரை அரசனைப்பற்றிப் புகழ்ந்துரைத் வைர்களைத்தான் அவள் அறிந்திருந்தாளே தவிர, புன் மொழி பகன்றவரை அவள் அறியாள். அத்துடன் குளக் கோட்டு மன்னன் ஒரு பேரழகன் எனவும் அவள் கேள்விப் பட்டிருந்தாள். அவனைப்பற்றி அறியத் தொடங்கிய நாள் முதலாக, விரிசல் அவள் இதயத்தில் அவனுக்காக ஒரு ஏற்படுவதை அவள் உணர்ந்தாள். அவனை அவள் கண்ட தில்லை.ஆயினும் மக்கள் கூறியவற்றிலிருந்து அவன் எப் படியிருப்பான் என்று அவள் கற்பனை செய்துபார்த்தாள். அதனால்தான் ஆரம்பத்தில் அமைச்சர் விசித்திரயூகியார் பலமுறை கோயில் திருப்பணிபற்றி எடுத்துக்கூறியும் அவள் அதைக் கேட்டும் கேட்காதது போலிருந்துவிட்டாள். 

ஆனால் சபையில் ஏனைய குறுநில மன்னர்களின் பேச்சு எழுந்தபோது, குளக்கோட்டு மகாராசனைப்பற்றிக் கேட்காது விட்டால் அமைச்சரும் பிரதானிகளும் தன்னைப்பற்றித் தவ றான அபிப்பிராயம் கொண்டுவிடலாம் என்கிற பயம் ஒன்று அவள் மனதில் எழுந்தது அதனால்தான் அவள் அமைச்ச ருடன் அவ்வளவு கண்டிப்பாய்ப் பேசவேண்டி ஏற்பட்டது. ஒருவித அசட்டுத் தைரியத்தில் அவள் பேசிவிட்டாள். இப் போது அமைச்சர் திருப்பிக் கேட்டதும் பதிலளிக்கமுடியா மல் திண்டாடுகிறாள். ஆனால் அவள் அரசி அல்லவா? சந்தர்ப்பத்திற்கேற்றவிதமாக ஏதாவது சொல்லித்தீரவேண்டும். என்ற நினைவுடன் “குறுநில மன்னர்கள் எவராக இருந்தா லும் எமக்கு அக்கறையில்லை அமைச்சரே, குளக்கோட்டு மன் னன் எமது உத்தரவின்றிக் கோயில் எழுப்புகிறார். முறைக்கு நமக்கு ஏதாவது திறை செலுத்தியிருக்கலாம். அதைக்கூடச் செய்யத் தவறிவிட்டார். அவர் செய்யும் திருப்பணி அவரு டன் இருக்கட்டும். அதற்காக அவருக்கு நாம் எந்தவித சலு கையும் காட்டக்கூடாது எனது தந்தையும் ஈழநாட்டின் பேரரசருமாயிருந்த மனுநேய கயவாகு நீதி தவறாது அர சாண்ட ஒரு மாபெரும் மன்னன். அவருடைய மகள் நான். ஆகவே அவருடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாத வகையில் அரசாள வேண்டியது என்னுடைய தலையாய கடமை அமைச்சரே!” என்று அரசி ஒருபடியாகக் கூறி முடித்தாள். 

அரசியின் பேச்சை மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்து விட்டு “அப்படியானால் போருக்கு ஆயத்தப்படுத்தட்டுமா…?” என்று புன்சிரிப்புடன் வேண்டுமென்றே கேட்டு வைத்தார். 

அமைச்சர் விசித்திரயூகி குளக்கோட்டு மன்னனைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தார். அவனுடைய புகழும், அரும்பெரும் குணமும் அகிலமெல்லாம் பரவியிருந்ததை அவர் அறிவார். அத்துடன் மன்னன் அழகிற் சிறந்தவன் என்பதும் அவருக்குத் தெரியும். இவற்றையெல்லாம் மன திற்கொண்டுதான் மந்திரியவர்கள் அரசனுடைய ஆலயத் திருப்பணியில் தலையிடாமல் இருந்தார். அல்லது அவர் மட்டும் நினைத்திருந்தால் மன்னனுக்குரிய தண்டனையை அவரே அரசியிடம் கூறிப் பெற்றுக்கொடுத்திருப்பார். மனு நேய கயவாகு மன்னன் இறந்தபின் அரசி ஆடகசவுந்தரிக்கு அவர் ஒரு சிறந்த அமைச்சராக மட்டும் அல்லாமல் பாசம் நிறைந்த ஓர் அன்புத் தந்தை போலவும், அவள் இன்ப துன்பங்களிற் பங்குபற்றி வந்துள்ளார். அரசியைத் தன் சொந்த மகளிலும் மேலாக மதித்து அன்பு காட்டி வருகிறார். ஆகவேதான் மன்னன் குளக்கோட்டன் பற்றி அவர் கேள் விப்பட்டதும் அவர் மனதில் உதித்தது ஒன்றே ஒன்றுதான். அதுதான் குறிஞ்சிநாட்டு அரசிக்கு ஏற்ற மணாளன் அவர் தான் என்பது. 

குளக்கோட்டு மன்னன் குறிஞ்சிநாட்டு அரசிக்கு ஏற்ற மணாளன் என்பது மட்டும்தான் எழுந்த சிந்தனை அதை அரசியிடம் வெளியிட அமைச்சர் தயங்கினார். சுருங்கச் சொன் னால், அவருக்குப் பயம். அரசி ஆடகசவுந்தரி பெண்ணாக இருந்தாலும் அவளிடம் ஆணுக்குரிய வீரமும் துணிச்சலும் இருந்தன. அவள் எதிர்கால அரசியாக இருந்ததால் மன்னன் கயவாகு அவளை ஓர் அரசனுக்குரிய தகைமைகளுடன் வளர்த் துவிட்டான். அவளிடம் ஆண்மூச்சு இருந்தது. அதனால் சமயம் வரட்டும் கூறுவோம் என்று காத்திருந்தார். ஆனால் அவர் காத்திருந்த சந்தர்ப்பம் வந்து சேரவில்லை. ஆயினும் குறுநில மன்னர்களின் பேச்செழும் போதெல்லாம் மன்னன் குளக்கோட்டனைப் பற்றி அவர் புகழ்ந்துதான் பேசி வந் துள்ளார். அரசி ஆலயத்திருப்பணி பற்றி எந்தவித ஆட் சேபனையும் தெரிவிக்காமல் இருந்ததால் அவர் அரசிக்கு மன்னன் மீது கருணை பிறந்து விட்டது என்றுதான் எண் ணியிருந்தார். ஆனால் தன்னுடைய யூகம் தவறிவிட்டதை அவர் இப்போதுதான் உணர்ந்துகொண்டார். ஆனாலும் மதிநுட்பம் வாய்ந்த அமைச்சரல்லவா? அதனால் அரசியின் உள்ளத்தை இன்னும் தொட்டுப் பார்த்துச் சோதிக்கவிரும் பினார். அதனால் தான் போருக்கு ஆயத்தப்படுத்தட்டுமா?”” என்று கேட்டு வைத்தார். ஆனால் உள்ளூர அவருக்கு இஷ்ட மேயில்லை. அப்படி எதுவும் அரசியின் வாயிலிருந்து வந்து விடக்கூடாதே என இறைவனை மனதாரவேண்டிக் கொண்டார். 

அமைச்சருடைய வினா அரசியைக் குழப்பி விட்டிருக்க வேண்டும். அரசியாரும் அமைச்சரை நன்றாகப் புரிந்து வைத் திருந்தார். சிறு வயது முதற்கொண்டே அவருடன் பழகி யவர் அல்லவா.. ? அதனால் அவருடய குணத்தையெல்லாம் அரசி நன்கு அறிந்து வைத்திருந்தார். அமைச்சரது கேள்வி யின் உட்கருத்து அரசிக்குப் புரிந்துவிட்டிருக்க வேண்டும். அமைச்சர் தன் உள்ளத்தைச் சோதிக்கிறார் என்று அறிய அதிகநேரஞ் செல்லவில்லை. அதனால் முகத்தில் 

எந்தவித மாற்றமுமின்றி “இப்படியான துணிச்சல்காரர்களுக்குச் சரி யான தண்டனை போர்தான் அமைச்சரே? ஆனால் . ஆமாம்! ஆனால் நீதி என்ற ஒன்றை நிலைநாட்ட வேண்டிய அரியாச னத்தின் மீது அமர்ந்திருப்பதால் சிறிது தயங்க வேண்டியுள் ளது. அல்லது அவர் எதிர்பார்க்காத நேரத்தில் போருக்குச் சென்று அரசனைச் சிறைப்பிடிப்பதோடு மட்டும் நிற்காமல் அவரை அகிலமெல்லாம் போற்றுவதற்குக் காரணமாயிருக்கும் அந்தக் கோயிலையும் அவர் முன்னிலையில் இடித்துவிட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அரசி ஆடகசவுந்தரி யார் என் பது அவருக்குப் புரியும். ஆனால் சாமபேத தான தண்டம் என நம் மூதாதையர்கள் கூறி வைத்துள்ளனர். அதனால் படைகளுடன் நீங்கள் செல்லுங்கள். ஏனைய குறுநில மன் னர்களைப்போல் அவரும் எமக்குத் திறை செலுத்த வேண்டும் என்று பணியுங்கள். அத்துடன் அவரால் தரைமட்டமாக் கப்பட்ட பிறமத ஆலயங்களையெல்லாம் திரும்பவும் எழுப் பித்தரவேண்டும் என்றும் கூறுங்கள். அரசி ஆடகசவுந்தரியின் ஆட்சியில் மதபேதம் இருக்கக்கூடாது என்பதை அவருக்கு உணர்த்துங்கள். எல்லாச் சமயாசிரியர்களும் என் ஆட்சியில் ஒன்றாகத்தான் கவனிக்கப்படுவார்கள் என்பதை எடுத்துக் கூறுங்கள். என் கட்டளைக்குப்பணிய அவர் மறுத்தால் போர்! …ஆம். போர் அமைச்சரே! சரி நீங்கள் சென்று வெற்றியு டன் திரும்பி வாருங்கள்,” என்று கூறிவிட்டு அரசி அவர் பதிலுக்குக் காத்திராமல் எழுந்து உள்ளேசென்று விட்டாள். 

அவளுடைய மனதில் நிம்மதியில்லை. ‘போர்’ என்ற சொல் அவளுடைய உள்ளத்தைக் கலக்கிவிட்டது. கலக்கியே விட்டது. தன்னிடம் இருக்கும் படைகளும் போர்க்கருவிக ளும் ஈழத்தின் எந்தப் பகுதியிலும் இல்லவேயில்லை என்பது அரசி அறிந்த உண்மை. தென்கையிலையிலே ஆலயத்திருப் பணியில் ஈடுபட்டிருக்கும் மன்னனிடம் எங்கே படைகள் இருக்கப் போகின்றன என்பதும் அவளுக்குத் தெரியும். ஒன் றில் அவன் திறைசெலுத்தச் சம்மதிக்கவேண்டும் அல்லது அடிமையாகச் சிறைப்பிடித்து வருவதற்கு உடன்படவேண் டும். அது அரசனுக்கு உடன்பாடாக இருப்பினும் அரசியார் அதை விரும்பவில்லை. மன்னன் குளக்கோட்டனை அவள் எந்த விதத்திலும் அவமானப்படுத்தவிரும்பவில்லை. ஒருவேளை அவ ரைப்பார்க்க நேர்ந்தால் அவளுடைய மனம் அவருக்கு அடி மைப்பட்டுவிட்டால் அவரிடம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி எப்படிக் கேட்க முடியும்? அதற்கு அவர் உடன்படுவாரா? அப்படித்தான் உடன்பட்டாலும் வாழ்நாள் முழுக்கத் தன்னை அடிமைப்படுத்தி வஞ்சம் தீர்த்துக்கொள்ளக் கூடும் என்கிற பயமும் அரசிக்கு இருந்தது. மந்திரி விசித்திர யூகியார் அர சரைப்பற்றி மறைமுகமாகப் பேசிக்கொள்வதிலிருந்து அவ ரைத் தன் கணவனாக வரிப்பதில் அமைச்சருக்கு நிறைய ஆசையுண்டு என்பதும் அரசிக்குத் தெரியும், இவற்றையெல் லாம் சிந்தித்துவிட்டுத்தான் தென்கையிலை மன்னனைச் சிறைப் பிடிக்கும் பெரும்பணியை அமைச்சரிடம் ஒப்புவித்தாள். 

அரசி தன் சிங்காசனத்தை விட்டு எழுந்து உள்ளே சென் றதும் அமைச்சரின் அதரங்களில் ஒரு புன்னகை மலர்ந்தது. அரசியாரின் உள்ளத்தை அவர் மிகவும் சுலபமாக அறிந்து கொண்டுவிட்டார். அரசியின் உதடுகள் மட்டும் அரசருக்குத் தண்டனை வழங்கும்படி கூறினாலும் அது அரசியின் உள்ளத் திலிருந்து வரவில்லை என்பதை அமைச்சர் மிகவும் எளிதாக உணர்ந்து கொண்டார். அதனால் அமைச்சரின் மனதில் ஆறுதல் ஏற்பட்டது. மனதில் ஏதோ பெரும் திட்டமிட்ட வராய் அவ்விடத்தை விட்டகன்றார். 

அத்தியாயம்-5

அந்தப்புரத்துக்குச் சென்ற அரசிக்கு அங்கும் ஆறுதல் கிடைக்காமற் போகவே, அவள் தன் நந்தவனத்தை நோக்கி நடந்தாள். நந்தவனத்தில் அரசியின் அன்புக்குரிய முதல் தோழி பூங்குழலியும் மற்றும் வள்ளி,அபிராமி, பூங்கோதை முதலியோரும் பூப்பறித்துக் கொண்டிருந்தனர். பூங்குழலி தன் கூடையிலிருந்த மலர்களைக் கையால் ஒருமுறை அள் ளிப் பார்த்துவிட்டு, “இந்தப் பூக்கள் எவ்வளவு மென்மை யாக இருக்கின்றன பார்த்தாயா வள்ளி ? எங்கள் அரசி ஆடகசவுந்தரியின் உள்ளங்கூட இந்த மலர்களைப் போன்றது தான். ரோஜாச் செடியிற் கை வைக்கவே பயம். நிறைய முள்ளாக இருக்கும்; ஆனாற் பட்டுப்போன்ற அழகிய இதழ் களையுடை மலர்களைத் தருகின்றது. அந்த இதழ்கள் எவ்வ ளவு மென்மையானவை. நமது அரசியாரும் அப்படிப்பட்ட வர்தான். பார்த்தாற் புலிமாதிரி. பேசினாற் சிங்கம் கர்ச் சிப்பது போலிருக்கும். ஆயினும், அவருடைய உள்ளம் இருக்கிறதே, அது…ரோஜா இதழ்போன்றது,” என்று பூங்குழலி கூற வள்ளி அவளைப்பார்த்துச் சிரித்தாள். 

“அரசியின் அந்தரங்கத் தோழியாகியபின் நீ கூட என்ன அழகாகப் பேசக் கற்றுக்கொண்டு விட்டாயடி. உன் உவ மைகள் எல்லாம் பிரமாதம். நீ ஒரு கவியாகப் பிறந்திருக்க வேண்டியவள். ஆமாம்! அரசியைப்பற்றி இவ்வளவு தூரம் புரிந்து வைத்துப் பேசுகிறாயே…! நீ பேசுவதைப் பார்த் தால் ஏதோ விடயம் இருக்கிறதுபோல் தெரிகிறது. சோழி யன் குடுமி சும்மா ஆடாது என்று ஒரு பழமொழி சொல் வார்கள். என்னடி விஷயம்? அரசியாரைப்பற்றி நீ இவ்வ ளவு புகழ்ந்தும் பரிந்தும் பேசக்கூடியதாக அவர் அப்படி என்னதான் செய்துவிட்டார் உனக்கு?” என்று குறும்பா கக் கேட்டாள் வள்ளி. வள்ளியின் கூற்றிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்று வள்ளிக்காகப் பரிந்து பேசினாள் அபிராமி. 

இவர்கள் பேச்சிற் கலந்துகொள்ளாமலிருந்த பூங்கோதை மட்டும் சிரித்துவிட்டு, “என்னடி அவள் என்ன, எம்மைப் போன்ற சாதாரணப் பணிப்பெண்ணா…? ஈழத்திருநாட்டின் அரசி ஆடகசவுந்தரியின் அந்தரங்கத் தோழியாகிய அவள் காரணமில்லாமற் பேசமாட்டாள். ஏதாவது அரண்மனை இரகசியமாக இருக்கும்” என்றாள். 

அவர்களுடைய பேச்சையெல்லாம் கேட்ட பூங்குழலி சிரித்துவிட்டு, “என்னடி? என்னைவிட நீங்கள்தான் மிக நன்றாகப் பேசுகிறீர்கள். கற்பனை வளம் அப்படியே சொட் டுகிறது. அபிராமி சொன்னதுபோல இது அரண்மனை இர கசியந்தான். என்ன செய்வது…? அரசியின் அந்தரங்கத் தோழி யாகிய நான், எனக்கு நீங்கள் எல்லாம் வேண்டிய தோழி கள், அரண்மனையில் எது நடந்தாலும் அதை உங்களிடம் கூறாமல் இருக்க என்னால் முடிவதில்லையே” என்றாள். 

“தட்சிண கைலையிலே ஒரு மன்னன் வந்திருப்பதாக முன்னர் கூறினேன் அல்லவா? அவன் சோழநாட்டைச் சேர்ந்தவனாம். அத்துடன் பெருங் கர்வம்பிடித்தவனாம். நம்ம அரசியின் உத்தரவின்றித் தட்சிணகைலைக்கு வந்ததுடன் மட்டுமல்லாமல் அங்கே ஒரு பெரிய ஆலயத்தையும் நிறுவிக் கொண்டிருக்கிறானாம். அரசிக்கு அவன்மேல் வெகு கோப மாக இருக்கிறது. வராதா பின்னே.. ? எவ்வளவு திமிர் இருந்தால் அவன் இப்படியான ஒரு செயலைச் செய்வான்? அமைச்சர் விசித்திரயூகியாரை அழைத்து, அவனுடன் போர் செய்து அவனைப் பிடித்துவரும்படி அரசியார் கட்டளையிட்டு விட்டார்…” என்று அவள் கூறிமுடிக்கவில்லை. “பாவம்! ஆயிரம் இருத்தாலும் அவர் ஓர் ஆண்மகன்- அரசர்! அவர் என்ன பெரிய தவறு செய்துவிட்டார். அப்படியான தண் டனைக்கு…? ஆலயம் எழுப்புவதில் என்ன தவறு? இருந்தா லும் நமக்கேன் அரண்மனை விவகாரம்! அது பெரிய இடத் துச் சமாச்சாரம்” என்றாள் பூங்கோதை. 

“நான் என்னுடைய கதையை முடிப்பதற்குள் நீ முந் திரிக்கொட்டை மாதிரி முந்திக் கொண்டு விட்டாயேடி. கட்டளையிட்டார் என்றுதானே கூறினேன். ஆனால் அவரு டைய மனந்தான் பட்டுப்போன்றது என்று கூறிவிட்டேன். அப்படி முதலில் கட்டளையிட்ட அரசி திடீர் எனத் தன் முடிவை மாற்றிக்கொண்டு, சோழ அரசரிடம் சென்று தனக்குத் திறை கட்டும்படி பணிக்கும்படியும் அதற்கு அரசர் மறுத்தால் போர்செய்து அவரைப் பிடித்துவரும்டியும் கூறி யிருக்கிறார்” என்று தன் பேச்சை முடித்தாள். 

“ஓ! அப்படியா? அப்போது நம்ம அரசியாருக்கு மன் னன்மீது திடீர் எனக் கருணை பிறந்து விட்டதென்று கூறு. அது கருணையாகவும் இருக்கலாம் அல்லது காதலாகவும் இருக்கலாம்” என்று கூறிச் சிரித்தாள் பூங்கோதை. 

“வயதும் அதுதானேடி!” என்று சிரித்தாள் அபிராமி. 

“மன்னன் பேரழகு வாய்ந்தவனாம், அத்துடன் சிறந்த வீரனுமாம். அதனால் அவரை நேரில் பார்ப்பதற்காகப் பிடித்துவாருங்கள் என்று அரசி கட்டளையிட்டிருக்கலாம்” என்று வள்ளி இடையிற்கூற, எல்லோரும் அவளுடைய பேச்சைக் கேட்டுக் ‘கொல்’ என்று சிரித்தனர். 

அப்போது, “என்ன சிரிப்பும் கும்மாளமும் பலமாக இருக்கிறதே. அப்படி என்ன பிரமாதமாக நடந்துவிட்டது? உங்கள் காதலர்களைப் பற்றிப் பேசிச் சிரிக்கிறீர்களாக்கும்” என்று வினவிக்கொண்டே யாரும் எதிர்பாராத விதமாக அங்கே அரசி வந்தாள். 

அந்தவேளையில் அரசி அங்கே வருவாள் என அவர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர். ஆயினும், அரசிக்கு ஏதாவது கூறி நிலைமையைச் சமாளிக்க வேண்டுமே என்பதால் பூங்குழலி மட்டும் வாய் திறந்து, “நாங்கள் தென்கையிலைக்கு வந்தி ருக்கும் அந்தத் துணிச்சற்கார மன்னரைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம் மகாராணி!” என்று வேண்டுமென்றே துணிவை வரவழைத்துக் கூறினாள். 

தங்களையெல்லாம் கொண்டுபோய் ஒரு பெரிய சிக்கலில் மாட்டிவிட்டாளே இவள் என்று மற்றப் பெண்கள் எல்லோ ரும் பூங்குழலியைக் கோபத்துடன் பார்த்தனர். தென் கைலை என்ற பெயரைக் கேட்டதும் அரசியின் முகம் ‘திடீர்’ என மாறியதை மற்றவர்கள் கவனிக்காவிட்டாலும், பூங் குழலி கவனித்து விட்டாள். அரசிக்கு மன்னன் மேல் ஒரு பரிவு உண்டென்பது அவளுக்குப் புரிந்துவிட்டது. அதனால் அவள் அரசியின் உள்ளத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்னும் நோக்கத்துடன் “அவர் பெரிய பேரழகனாம்… வீரனாம்… அதுதான் கர்வம் பிடித்து அடைகிறார். இல்லை யென்றால் எங்கள் மகாராணியின் உத்தரவின்றித் தட்சிண கைலாயத்தில் ஆலயத்திருப்பணி ஆரம்பித்திருப்பாரா? அவருக்கு நம்ம மகாராணி அளித்ததுதான் சரியான தண்டனை அமைச்சர் விசித்திரயூகி அவர்கள் போர் செய்து அவரைச் சிறைபிடித்து வரச் சென்றுவிட்டார்கள் என்றுதான் இவர் களிடம் கூறிக்கொண்டிருந்தேன். அதற்குள் அரசி அவர் களே வந்துவிட்டீர்கள்,” என்று கூறிச் சிரித்தாள். 

பூங்குழலி இப்படிப் பயமில்லாமல் மகாராணியின் எதி ரிற் பேசிக்கொள்கிறாளே என்று மற்றவர்கள் யோசித்தார் கள். அரசி தங்களைப்பற்றி என்ன நினைத்துக்கொள்ளப் போகி றாரோ என்று சிந்தித்துக்கொண்டிருந்த சமயம், அவர்கள் எதிர்பாராத வகையில் அரசி சிரித்தாள். “என்னைவிட அந் தத் தட்சணகைலாய மன்னன்மீது உனக்குத்தான் அதிக கோபம்போல் தெரிகிறது. நீ இவர்களுக்கு கூறிய செய்தி பிழைத்துவிட்டது; நான் என் முடிவை மாற்றிக் கொண்டு விட்டேன். ஆனால,ஏன் மாற்றினேன் என்று எனக்கே தெரியவில்லை. ஒருவேளை அந்த மன்னன் திருப்பணி செய்து கொண்டிருக்கும் தெய்வந்தான் என் நாவில்வந்து முடிவை மாற்றும்படி செய்துவிட்டதோ என்று சிந்திக்கத் தோற் றுகிறது. ஆமாம் ஆரம்பத்தில் போர்செய்து அவரைச் சிறை பிடித்து வரும்படிதான் கட்டளையிட்டேன். ஆனால், பின்பு என் முடிவை மாற்றி’ அவரிடம் திறை பெற்று வரும்படியும் அதற்கு அவர் மறுத்தால், உடனே கைது செய்து கொண்டு வரும்படியும் கட்டளையிட்டுள்ளேன்” என்றும் கூறினாள். 

“அதுவும் எனக்குத் தெரியும் தேவி!” என்று பூங்குழலி தான் அறிந்ததைக் கூறி வைத்தாள். ஆனால், மற்றத் தோழி களிடம் தான் அதைக் கூறியதாகச் சொல்லவில்லை. 

“ஆமாம்! நீங்கள் எல்லோரும் அவருடைய அழகைப் பற்றியும் வீரத்தைப்பற்றியும் நிறைய வர்ணிக்கிறீர்களே! உங்களை என் தோழிகளாக வைத்திருப்பதில் எனக்கு இப் போது என்னையறியாமலே ஓர் அச்சம் ஏற்படுகிறது. நீங்கள் என் உத்தரவின்றித் தட்சிண கைலாயத்துக்குச் சென்று அந்த மன்னனைப் பார்த்து வந்து விட்டீர்களோ அல்லது அந்த மன்னரே மாறுவேடத்தில் இங்கு வந்து உங்களிடம் பேசிப் போகிறாரோ என்கிற சந்தேகத்தினால் ஏற்பட்ட பயம்தான் அது” என்று கூறிவிட்டு, அரசி மேலும் சிரித்தாள். 

அப்போதும் பூங்குழலிதான் அரசிக்குப் பதிலளித்தாள். “அப்படிக் கூட இரகசியமாக அரசியின் ஆட்சியில் ஏதா வது நடைபெற முடியுமா? அவ்வளவு தைரியம் எங்களுக்கு ஏது தேவி? ஒருவேளை மன்னருக்கு அந்தத் தைரியம் வரலாம் அப்படித்தான் அவர் மாறுவேடத்தில் வந்திருந்தாற்கூட கேவலம். இந்தச் சேவகப் பெண்களாகிய எங்களையா பார்க்க வரப்போகிறார். அவர் அரசியின் அழகை நேரிற் பார்த்து இரசித்திருப்பார்; ஆட்சித் திறத்தை வியந்திருப் பார்” என்று பூங்குழலி கூற, அரசி அவள் முதுகில் தட் டிக்கொடுத்து “நீ உண்மையில் அவரை விடப் பெரியதுணிச் சற்காரி தாண்டி!'” என்று கூறிவிட்டு ” நீ உன் தோழி களுடன் நந்தவனத்தில் இவ்வளவு நேரமாக என்னடி செய்து கொண்டிருந்தாய்?’ என்று] கேட்க, மற்றவர்கள் மெதுவா கப் பூப்பறிக்குஞ் சாட்டில் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். 

அதன்பின் அந்த நந்தவனத்தில் அரசியும் பூங்குழலியும் மட்டுமே தனியாக நின்றனர். பூங்குழலி அரசியைப் பார்த்து “மகாராணியவர்கள் என்னை மன்னிக்கவேண்டும் மன்னிக்கவேண்டும் ஏதோ அதிக உரிமை பாராட்டி மற்றப் பெண்கள் நிற்கிறார்கள் என்பதையும் மறந்து ஏதோ பேசிவிட்டேன்” என்றுமன்னிப்புக் கோரும் பாவனையிற் பேசினாள். அரசி தன்னை மன்னிக்கவேண்டிய அளவுக்குத் தான் பாரதூரமாக எதுவும் பேசவில்லை என்றும் தான் சும்மா ஒரு மரியாதைக்காகத் தான் அப்படிப் பேசினாள் என்பதும் அவளுக்குப் புரியும். 

“நீ என்னிடம் மன்னிப்புக் கோரவேண்டிய அளவுக்கு என்னடி தவறு செய்தாய்? அதிருக்கட்டும். மன்னர் குளக் கோட்டன் வெகு அழகானவர் என்று கூறினாயல்லவா…? அந்த விவரம் எல்லாம் யாரடி உனக்குக் கூறிவைத்தார்கள்?'” என்று மிகவும் சாதுரியமாக அரசி கேட்க, “அவருடைய அழகைப்பற்றி நாமேன் கவலைப்படவேண்டும்? அவர் எங்கள் எதிரியாயிற்றே. ஆதலால் அந்தப்பேச்சை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது பேசலாமா?” என்று பூங்குழலியும் விட்டுக் கொடுக்காமல் அரசியின் மனதை அறிந்து விடவேண்டும் என்னும் நோக்கத்துடன் பேசினாள். 

அரசி அவளைக் கூர்ந்து கவனித்துவிட்டு, “என்னடி நீ என்னைச் சோதித்து வேடிக்கை பார்க்கிறாயா?” என்று சற்றுக் கடுமையாக கேட்கப் பூங்குழலி நிஜமாகவே பயந்து விட்டாள். 

‘அரசி என்ன சொல்கிறார்? அவர் என்னுடன்தான் பேசுகிறாரா? அல்லது… அப்படியானால் அரசியின் மனம் மன் னனுக்காக நெகிழத்தான் செய்கிறது’ என்று தனக்குள்ளாகவே சிந்தித்த பூங்குழலி “என்ன தேவி கூறுகிறீர்கள்? உங்களை நான் சோதிப்பதா…! நீங்கள் கூறுவது ஒன்றுமே எனக் குப் புரியவில்லை” என்று ஒன்றுமே புரியாதவள் போற் கூறி னாள். உண்மையில் அவளுக்கு அரசியின் உள்ளம் புரிந்தே இருந்தது. அரசியின் அந்தரங்கத் தோழியல்லவா?. அரசியே விடயத்தை விண்டு கூறட்டும் என்று அவள் எதிபார்த்தது வீண்போகவில்லை. 

“பூங்குழலி! நீ என்னுடன் சிறுவயதிலிருந்தே பழகி வரும் உயிர்த்தோழி” என் சுகதுக்கங்களிலும் நன்மை தீமை களிலும் இன்பதுன்பங்களிலும் இது காலவரை உனக்குப் பங்கு கொடுத்து வந்திருக்கிறேன். நீயும் அவற்றை ஓர் அந் தரங்கத் தோழிக்குரியவகையில் போற்றிக்காத்து, என்னு டன் பகிர்ந்து, வேண்டியபோது எனக்கு ஆறுதலும் தெம் பும் அளித்து வந்திருக்கிறாய். ஆனால், மிகச் சமீபகாலமாக என் உள்ளத்தை ஏதோ ஒரு கவலை பீடித்து வருத்திக்கொண்டிருக்கிறது என்பதை நீயும் ஒருவேளை ஊகித்திருக்கலாம்; பல நாட்களாக உன்னிடம் அதைச் சொல்லவேண்டும் என்று துடித்தேன். ஆனால் ஏதோ ஒன்று என்னைச் சொல்லவிடா மல் தடுத்துவிட்டது. இப்போது கூட நான் இதை உன்னி டம் கூறுவேன் என்ற எண்ணத்துடன் வரவில்லை ஆனால், நீங்களே பேச்சை ஆரம்பித்துவிட்டீர்கள். இப்போது ஓரள வுக்கு நீ என்னைப் புரிந்திருப்பாய் என்று எண்ணுகிறேன். குளக்கோட்டு மன்னரைப் பற்றியே உன்னிடம் பேச நினைத் தேன் ” என்று அரசி தன் மனந்திறந்து கூறியபோது. பூங் குழலி பாசம் நிறைந்த கண்களுடன் அவளைப் பரிந்து நோக்கினாள். 

அத்தியாயம்-6

அரசி கூறியதற்கு எந்தவித பதிலுங் கூறமுடியாமல் பூங்குழலி திக்பிரமை பிடித்தவள்போல் நின்றாள். வீரமும் துணிச்சலும் நிறைந்த அரசி இன்று காதல் வசப்பட்டுக் கரைந்து நிற்குங் காட்சி உண்மையில் மனதை உருக்கக்கூடிய தாக இருந்தது. பூங்குழலி மெளனமாக நிற்பதை அவதானித்த அரசியே தன் பேச்சைத் தொடர்ந்தாள் 

“நீ அரசிக்கு என்ன நேர்ந்துவிட்டது என்று யோசிப் பாய். நீயும் ஒரு பெண். என்வயதினள். இளமைத் துடிப்பும் பருவ ஆசைகளும் நிறைந்த உள்ளத்தை உடையவள், அத் துடன் என் அன்புக்குப் பாத்திரமானவள். அந்தரங்கத் தோழியுங்கூட. அப்படியான உள்ளத்துடன் மனம் விட்டுப் பேசுவதில் எந்தவித தவறும் இருக்காது என்று நான் நினைக் கிறேன். எனக்குத் தாயில்லாக் குறையே தெரியாமல் என்னை என் தந்தை வளர்த்துவிட்டார்: என் அன்புக்குரிய தந்தை யார் இறந்த பின் மதிப்பிற்குரிய அமைச்சர் விசித்திரயூகி அவர்களே எனக்கு எல்லாமாக இருந்துவருகிறார். அவரிடம் மனம்விட்டுப் பேச எனக்கு வெட்கமாக இருக்கிறது. அந்த துணிச்சலும் எனக்கில்லை. 

நாட்டின் அரசியாக உலகத்திலுள்ள அத்தனை ஐஸ்வரி யங்களையும் பெற்றிருந்தாலும் ஒரு பெண் தக்க பருவத்தில் ஒரு நல்ல கணவனை அடைந்து இல்லறத்தை ஏற்காது விட் டால் அவளுடைய வாழ்க்கை பூரணமாவதில்லை எனக் கேள் விப்பட்டிருக்கிறேன். அந்த வகையில் இதுபற்றி உன்னுடன் கலந்தாலோசிக்கலாம் என்று எண்ணினேன். அமைச்சர் விசித்திரயூகியாருக்கும் எனது திருமண லிடயத்தில் அதிக அக்கறையுண்டு என்பதை அண்மையில் அவரது செய்கைகளி லிருந்தும் பேச்சிலிருந்தும் அறிந்துகொண்டேன். அவர் அந் தப் பேச்சை எடுக்கும்போதெல்லாம் நான் வேறு பேச்சை ஆரம்பித்து அவர் அதைப்பற்றிப் பேசாமல் தடுத்துவிடுவேன்.” 

“பூங்குழலி! நான் அரசியாக இருந்தாலும், நானும் எலும்பினாலும் தசையினாலும் இரத்தத்தினாலும் ஆக்கப்பட்ட உணர்ச்சியுள்ள ஒரு மனித உருவந்தான் என்பதை நான் உணர்கிறேன். என் உணர்ச்சிகள் பருவத் துடிப்புகள் இவை யாவும் என்னை வேதனைப்படுத்துகின்றன. மன்னர் குனக் கோட்டன் என் உத்தரவின்றி தட்சிணகையிலையில் தன் ஆட்சியைச் செலுத்துவததோடு மட்டும் நிற்காமல், அங்கே ஒரு பிரமாண்டமான கோயில் அமைக்கும் அளவுக்குத் துணிச் சல் பெற்றுவிட்டார். அவரது செய்கை என்னை அவமதிப்ப தாக இருந்தாலும் அவர்மீது கோபப்படவேண்டுமென்றோ அவரைத் தண்டிக்கவேண்டுமென்றோ என் மனந் துணிய வில்லை.வை தூலிய மதத்தை நான் முற்றிலும் வெறுப்பவ ளாக இருந்தாலும் அவரை மட்டும் என்னால் வெறுக்கமுடியவில்லை. அவரைப்பற்றியும் அவரது அழகைப்பற்றியும். வீரத்தைப்பற்றியும் சீரிய குணத்தைப்பற்றியும் பிறர் புகழ்ந்து பேசும்போதெல்லாம் நான் என் வசம் இழந்து தவிப்பதுண்டு. என்னுடைய இதயம் அவருக்காக ஏங்குவதை என்னால் உணரமுடிகிறது. ஆதலால் என் மனதில் ஓர் எண் ணம் ஆழமாகப் பதிந்து வேரூன்றிவிட்டது. அதாவது நான் இந்தப்பிறவியில் திருமணஞ் செய்துகொள்வதாக இருந்தால், இந்த ஈழத்திருநாட்டில் அவரைவிட எனக்குப் பொருத்த மானவர் வேறு யாரடி கிடைக்கப்போகிறார்கள்…?” என்று அரசி சற்று நிறுத்தியபோது பூங்குழலி அதிசயத்துடன் “தேவி” என்றாள். 

பூங்குழலி, “தேவி” என்று அழைத்ததும் அரசி ஆடக சவுந்தரியின் முகம் நாணத்தால் இரத்தச் சிவப்பேறியது. அவளது வாழ்ககையில் முதலாவது காதலனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் தோழி பூங்குழலிதான் என்கிற உண்மை புலப்பட்டபோது அவளால் வெட்கப்படாமல் இருக்கமுடியவில்லை. 

“தேவி! தங்கள் உள்ளத்தில் மன்னர் குளக்கோட்ட ருக்காக ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருந்ததை நான் ஒருவாறு ஊகித்திருந்தேன். ஆனால் இவ்வளவு தூரத்துக்கு அரசியா ரின் உள்ளத்தை மன்னர் கொள்ளைகொண்டுவிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவேயில்லை தேவி! மன்னர்மீது எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது என்று கூறிவிட்டுப் பூங்குழலி சிரித்தபோது அரசி நாணத் துடன் தலை கவிழ்ந்துகொண்டாள். 

“தலைவிக்காகத் தோழியர் தலைவனிடம் தூது போவ தாகக் கூறுவார்கள். அப்படியான உதவி ஏதாவது தங்க ளுக்கு என்னாற் செய்யமுடிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி யடைவேன். அந்தவகையிலாவது என்னால் தங்களுக்கு உதவ முடிகிறதே என்கிற திருப்தியும் ஏற்படும்” என்றாள் பூங்குழலி தொடர்ந்து. 

“நீ என் அந்தரங்கத்தோழி. அத்துடன் என் பூரண அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவள். ஆனால் எந்த அலுவலையும் திறம்படச் செய்யக்கூடிய ஆற்றலும் தகுதி யும் உனக்குண்டு என்பதும் புரியும். ஆனால்! ஆமாம்! ஆனால்…? என்று கூறிவிட்டு அரசி இடையில் நிறுத்திய போது, “ஆனால் என்ன தேவி?” என்று அரசியின் பேச்சு அத்துடன் முற்றுப்பெறா வண்ணம் அவளைப் பேசும்படி தூண்டினாள் பூங்குழலி. 

அரசி சிறிது நேரம் சிந்தித்துவிட்டு “ஆனால் அவர் எனக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறார்” என்றுதான் கூற வந்தேன் பூங்குழலி அவர் இரவும் பகலும் ஆலயத்திருப் பணியிலேயே ஈடுபட்டிருப்பதாக அறிகிறேன். அதனால்தான் அவர் தான் ஒரு குறுநில மன்னர் என்பதையும் அரசி ஆடகசவுந்தரியிடம் இருந்து தனக்கு எந்நேரமும் ஆபத்து வரலாம் என்பதையும் மறந்துவிட்டிருக்கிறார். அப்படியான ஒருவரிடம் நீ எப்படியடி தூது போகமுடியும்? அது அரசி என்கிற ஸ்தானத்தில் இருக்கும் எனது கௌரவத்திற்கே களங்கம் ஏற்படுத்திவிடும். அவரைத் தந்திரமாகத்தான் வசப் படுத்தவேண்டும். அது அமைச்சர் விசித்திரயூகி ஒருவரால் தான் முடியும். ஆனால் முடிதரித்திருக்கும் அரசியாகிய யான் எனது இந்த மனநிலையை அமைச்சரிடம் எப்படி எடுத்துக் கூறுவது..? 

“பூங்குழலி! கடந்த சில நாட்களாக என்னிடம் ஏற் பட்டிருக்கும் சில மாற்றங்களை நீ அவதானித்திருக்கலாம். என்னால் வயிறார உண்ணமுடியவில்லை. உறக்கமும் வருவ தில்லை. விழித்திருக்கக்கூடாத ஒரு மந்தநிலை. மன்னரின் நினைவு என்னை நாள்தோறும் குழப்பிக்கொண்டேயிருக்கிறது” என்று அரசி நிறுத்தியதும், “அப்படியானால் அமைச்சரிடம் கூறும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். நான் சமயம் பார்த்து சந்தர்ப்பம் அறிந்து கூறிவிடுகிறேன்’” என்றாள் பூங்குழலி. 

“அது மிக நல்ல யோசனைதான் பூங்குழலி. ஆனால் அமைச் சருக்கு என்மீது ஒரு சிறுதுளி சந்தேகம்கூட ஏற்படக்கூடாது. மிகவும் நுட்பமாக அவரிடம் இதுபற்றிக் கூறிவை. இது பற்றி அவர் என்னிடம் ஏதாவது கேட்டால் நான் எனக்கு விருப்பமில்லாததுபோல் நடித்துவிடுவேன். காரியத்தை வெற் றிகரமாக நீ தான் ஒப்பேற்றிவைக்கவேண்டும். 

என் வெட்கத்தைவிட்டு இப்படி உன்னிடம் கேட்பதற் காக என்னை மன்னித்துவிடு பூங்குழலி. ஒரு பெண்ணுக்குப் பெற்றோர் இல்லாத நிலையில் தன் மனக்கிடக்கையை வெளி யிடக்கூடிய அளவுக்கு ஒரு தோழியைவிட வேறு எவரும் ஈடாக முடியாது. இந்த உதவியை உன்னாற் செய்ய முடியுமா பூங்குழலி?” என்று அரசி தன்னை மறந்து கேட்க, எப்பாடுபட்டாவது அதை ஒப்பேற்றித் தருவதாகப் பூங் குழலி வாக்குறுதியளித்தாள். 

தங்கள் இருவரையும் தவிர, வேறு யாருக்கும் இதுபற்றித் தெரியக்கூடாதென அரசி ஆணையிட்டுக் கூறி அவளிடம் விடைபெற்று அந்தப்புரம் சென்றாள். அவள் செல்வதையே பார்த்துநின்ற பூங்குழலி தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டாள். 

அரசியின் போக்கும் பேச்சும் அவளுக்குப் பெரும் புதி ராக இருந்தன. ஆண்களையே மதிக்காத அரசி இன்று ஓர் ஆண்மகனின் அன்புக்காக ஏங்கி நிற்கும் பரிதாப நிலை அவள் உள்ளத்தை நெகிழ வைத்தது. மன்னனை அரசி கண்டது மில்லை. பேசியதுமில்லை. பழகியதுகூட இல்லை. அப்படி யிருந்துங்கூட மன்னன்மேல் அரசி காட்டும் அன்பு அவளை ஆச்சரியப்பட வைத்தது. அரசி மன்னரைத் தன் கணவ னாக மனதில் வரித்துவிட்டாள். இனி அவருடைய உறவு கிடைக்காது விட்டால் அரசியார் கன்னியாகவே காலங் கழித்தாலும் கழித்து விடலாம். இந்தப் பெரிய ஈழத்திரு நாட்டின் மணிமுடியைத் தாங்கிச் செங்கோலோச்சும் அரசிக்கும்கூட மனதில் எவ்வளவு கூலை! பாவம்! தன் உள்ளத்துடிப்பைச் சொல்லி ஆறுதல் பெறுவதற்குக்கூட ஒருவர் இல்லாத நிலையில்; என்னிடம் நம்பிக் கூறியுள்ளார். அவர் என்மேல் கொண்டிருக்கும் அன்பும் விசுவாசமும்தான் எவ் வளவு! மற்றவர்கள் இவற்றை அறிந்தால் நிச்சயமாகப் பொறாமைப்படப் போகிறார்கள், என் உயிரைத் தியாகஞ் செய்தாவது. அரசிக்கு நான் இந்த உதவியைச் செய்தே தீருவேன். மன்னர் குளக்கோட்டனை அரசியின் கணவராக்குவது இனி என் பொறுப்பு! அந்தக் கோண நாயகரே அதற்கு உதவி செய்யட்டும் என்று பூங்குழலி தனக்குள்ளாகவே சிந்தித்துக்கொண்டிருந்தபோது அபிராமியும் பூங்கோ தையும், வள்ளியும் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தனர். 

“இவ்வளவு நேரமும் எங்கேயடி போயிருந்தீர்கள்?” என்று பூங்குழலி அவர்களைக் கேட்சு, “அரசியும் அவர் அந்தரங்கத்தோழியும் பேசும் இடத்தில் எங்களுக்கு என்ன வேலை? உங்களுக்குள் ஆயிரம் இருக்கும். ஆமாம்! நாங்கள் இங்கே கூடிப் பேசியதைப்பற்றி அரசியார் ஏதாவது கூறி னாரா?” என்று பூங்கோதை கேட்க, “ஆமாம் அரசியார் மிகவும் வருத்தப்பட்டார்கள். மன்னன் குளக்கோட்டனால் தனக்கு அவப்பெயர் உண்டாகி விடுமோ என்று தான் பயப்படுவதாகவும் கூறினார். அத்துடன் தான் எக்காரணங் கொண்டும் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என் றும் கூறிவிட்டார்”என்று பூங்குழலி வேண்டுமென்றே ஒரு பொய்யைக் கூறினாள். 

அவளுடைய பேச்சும் அவள் பேசிய விதமும் நிஜமாகவே மற்றவர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தன. அரசியைப்பற்றிப் பேசுவதற்குத் தங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என நினைத்தார்கள். அதனால் வள்ளி பூங்குழலியைப் பார்த்து “என்னவோ தெரியாத்தனமாக நாங்கள் ஏதோ பேசிவிட் டோம். அரசிக்கு எங்கள்மீது கோபம் ஏற்படாமல், நீ தான் எங்களை ஒருமாதிரிக் காப்பாற்றி விடவேண்டும்,” என்றாள். 

அதற்குப் பூங்குழலி “போடி பைத்தியம்! நீங்கள் எதற் கும் பயப்படவேண்டாம். நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன். நான் ஏற்கனவே அரசியை ஒரு மாதிரிச் சமா தானஞ் செய்துவிட்டேன். அவர் இதுவரை நாம் பேசிய தையெல்லாம் மறந்திருப்பார்கள். ஆமாம்! நீங்கள் கொய்த மல்லிகை மலரில் அரசிக்கு ஓர் அழகான கொண்டை மாலை கட்டும்படி பணித்தார்கள். எனக்கு அரண்மனையில் நிறைய வேலையிருக்கு. நான் செல்கிறேன்” என்று கூறிவிட்டுப் பூங் குழலி அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள். 

அவள் சென்று மறைந்தபின் “என்ன இருந்தாலும் எம்மையெல்லாம் விடப் பூங்குழலி அதிர்ஷ்டக்காரிதான்’ என்று அங்கலாய்த்தாள் அபிராமி. 

இல்லாட்டி அவ் வளவு துணிச்சலாக அரசியுடன் பேசக் கூடிய அளவுக்குப் பழகும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தி ருக்குமா?” என்று பூங்கோதை அவளை ஆமோதித்தாள். 

நந்தவனத்திலிருந்து அரண்மனைக்குச் செல்லும் வழியில் மந்திரி விசித்திரயூகியைச் சந்தித்தால் நல்லது என்று நினைத்தாள் பூங்குழலி. அமைச்சர் தட்சிணகைலாயம் போகுமுன், அவரைச் சந்தித்து அவரிடம் அரசியின் திருமண விடயமாகப் பேசிவிட வேண்டும் என அவள் பெண்மனந் துடித்தது. அரசியின் திருமணத்தில் தனக்கு அதிக அக்கறை உண்டு என்பதுபோற் பேசிவிட வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டாள். 

நந்தவனத்தின் கிழக்குப் பக்கமாக இருந்த மலையடிவா ரம் வழியாக நடந்து இடப்புறமாகச் சென்ற குறுக்குப்பாதை யினூடாக விரைந்தாள். எங்கோ தூரத்தில் குதிரையின் காலடி ஓசை கேட்டது. அவள் தன் செவிகளைக் கூர்மை யாக்கி அவதானித்தாள். எதிர்ப்புறத்தில் இருந்துதான் சத் தம் வந்துகொண்டிருந்தது. அவள் தன் நடையைத் துரிதப்படுத்தினாள். அமைச்சர் போருக்குப் புறப்பட்டுவிட்டாரோ என்று அவள் நெஞ்சு ஒரு கணம் துணுக்குற்றது. சுலபமாக மனம் அவர் தனியாக வந்தால் அவருடன் விட்டுப் பேசலாம் என்ற எண்ணத்தில் அவர் வரவை ஆவலோடு எதிர்பார்த்து நடந்தாள். அவள் முன்னோக்கி நடக்க நடக்கக் குதிரையின் காலடிச் சத்தம் மிகவும் அண் மையிற் கேட்பதுபோல் தோன்றியது. அவள் தூரத்தே கூர்ந்து நோக்கினாள். சேய்மையில் ஒரு வெண்புரவி வருவது தெரிந்தது. நிச்சயமாக அது அமைச்சர் விசித்திரயூகியாரின் புரவிதான் என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது. அவர்கூட வேறு யாராவது வருகிறார்களா என்று கவனித்தாள். ஆனால் வேறு குதிரையின் சாயல் தெரியாததால் அமைச்சர் மட் டும் அரண்மனைக்குப் போவதற்காக இவ்வழியாக வருகிறார் என எண்ணிக்கொண்டாள். அவரிடம் எப்படி. அரசியின் விடயத்தைப் பேசுவது என மனதில் கற்பனை செய்து பார்த் தாள், அமைச்சரின் குதிரை அவளை மிகவும் நெருங்கிவிட் டது. அமைச்சர் விசித்திரயூகி, புன்முறுவலுடன் குதிரை யின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டு, “என்ன இந்தப் பக்கம் பூங்குழலி” என்றுகேட்டுக் கொண்டே குதிரையினின்றும் இறங்கினார்.

– தொடரும்…

– கோவும் கோயிலும் (நாவல்), முதற் பதிப்பு: ஜனவரி 1980, நரெசி வெளியீடு, திருகோணமலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *