கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 3,462 
 
 

(1984ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 – 5 | 6 – 10

பதிப்புரை

பேராசிரியர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ‘கடல் வேந்தன்’ என்ற இந்த சரித்திர நாவல் ‘தாய்’ வார இதழில் தொடராக வெளிவந்தது.

சரித்திர நாவல்கள் எழுதுவதில் சாண்டில்யன் அவர்கள் வல்லரசர் என்று சொன்னால் மிகையாகாது. இந்த நாவல் பத்திரிகையில் வெளிவரும் சமயம் நான் வெளியிட வேண்டும் என்று கேட்டேன். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார்கள். என்னிடம், மிகுந்த அன்பு கொண்ட பேராசிரியர் அவர்கட்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

தி.நகர் 27-12-84
தங்கள் பழ. சிதம்பரம் நிர்வாகி, பாரதி பதிப்பகம்
எஸ்.பி.எம். பைன் ஆர்ட் பிரிண்டர்ஸ், சென்னை-600 005

முன்னுரை

‘பதிற்றுப்பத்து’ சங்க நூலை வைத்து கடற்கதை ஒன்றை எழுத வேண்டுமென்று நீண்ட நாட்களாக நண் பர்கள் பலர் என்னைத் தூண்டி வந்தார்கள். அந்தத் தூண் டலின் விளைவுதான் “கடல் வேந்தன்” கதை.

பதிற்றுப்பத்து நூலின் ஐந்தாம் பத்தை இயற்றிய பரணர்பெருமானின் இனிய கவிதையும் என்னைக் கவர்ந் தது. அதில் காணப்பட்ட கடற்பிறகோட்டிய செங்குட்டு வனும் என்னைக் கவர்ந்தான். பரணர் கவிதைக்கு அடிமை யாகி தனது புதல்வனான குட்டுவன் சேரலையே பரணருக்கு மனத்தை ஈர்க்கவே, பரிசலாகத் தந்துவிட்ட அந்த மாமன்னன் குணமும் என் செங்குட்டுவனை வைத்தே கதை எழுதிவிட முடிவு செய்தேன். அதற்காக பதிற்றுப்பத்துக்கு புலியூர் தேசிகன் எழுதிய தெளிவுரையையும் படித்தேன். பேராசிரியர் சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய “பண்டை நாளைச் சேரமன்னர்கள்” எழுதிய வரலாற்று நூலையும் படித்தேன். இக்கதைக்கு வேண்டிய மூலதனம் இந்த இரண்டு நூல்களிலுமே கிடைத்துவிட்டன. யவனரும் வடவரும் கூடி, பெரியதொரு கடற்படை சாமிப் கொண்டு போருக்கு வந்த வரலாற்றை ஒளவை மிகத் தெளிவாக ‘பண்ை லிருந்து நாளைச் சேர மன்னர்களின் வரலாற்றில் 148ஆம் பக்கத்திலிருந்து 153ஆம் பக்கம் வரையில் விவரித்திருக்கிறார். பதிற்றுப்பத்து அகநானூறு பாடல்களையும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

பதிற்றுப்பத்து 45, 46, 48 பாடல்களில் செங்குட்டுவன் படுகிறது. கடலிற் கொண்ட வெற்றியும் அவன் வீரமும் சொல்லப் 45ஆவது பாட்டில், “மேகங்கள் ஈர்த்ததாலே குறையாமலும், ஆற்று நீர் மிகுதியாகப் பாய்வதாலே கரை கடவாமலும் உள்ள கடவிடத்து வேல் படைக்கலங் உனக்கு, களைச் செலுத்தி எதிரிக் கலங்களை எதிர்த்து அழித்தோர் முன்னுமில்லை இன்றுமில்லை”யென பரணர் செங்குட்டுவனைப் பாட்டு பாராட்டுகிறார். 46.ஆவது “உடை திரைப்பரப்பின் படுகடல் ஓட்டிய வெல்புகழ்க் குட்டுவன் என்று பாராட்டுகிறது. 48 ஆவது பாட்டு *சேட லொடு உழந்த பனித்துறைப் பரதவ” என்று சிலாகிக்கிறது.

தவிர முசிறியில் யவனர், அராபியர் குடியிருப்புகள் இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

இந்தக் குறிப்புகளை வைத்தே கடல் வேந்தன் கதை புனையப்பட்டிருக்கிறது. சுவைக்காக சில சலுகைகளை பரணர்க்கு கொண்டிருக்கிறேன். தந்தையால் எடுத்துக் கொடுக்கப்பட்ட குட்டுவன்சேரவின் சினம், தானமாகக் அதனால் அவன் கள்வனானது, பிறகு தந்தைக்கும் நாட்டுக் கும் உதவியது. இவை பதிற்றுப் பத்தில் கிடையாது. கடல்வேந்தனில் உண்டு. தந்தைக்கு இணையான வீரனாக அவன் சித்திரிக்கப்பட்டிருக்கிறான். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

இந்தக் கதையில் அழும்பில்வேள், வில்லவன்கோதை பரணர் இவர்கள் கவிஞர் பெருமான் சேரதூதன். வரலாற்றுப் பாத்திரங்கள் நிலக்கள்ளி, எல்லாரும் நற்கிள்ளி, கிளேஸியஸ் யூசப் முதலானோர் கற்பனைப் பாத்திரங்கள்.

இந்தக் கதையை மிகுந்த ஆர்வத்துடன் எழுதியிருக்கிறேன் கூடியவரையில் எந்தச் சுவையையும் குறைக்காமலே கதையைத் தொகுத்திருக்கிறேன். காதல் கட்டங்கள், போர்க்கட்டங்கள் எல்லாமே அந்தக் காலத்துக் சூழ் நிலைக்கு நிலைக்கு முரண்பாடாக இல்லாமல்அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதுவரை எனக்கு ஆதரவு தந்துவரும் தமிழ் மக்கள் இதற்கும் ஆதரவு தருவார்களென்று நிச்சயமாக நம்புகிறேன்.

‘கடல் வேந்தன்’ கதையை தொடர்கதையாக வெளியிட்ட ‘தாய்’ பத்திரிகை ஆசிரியர் திரு. வலம்புரிஜான் அவர்களுக்கும், இதைப் புத்தக வடிவில் வெளியிட முன் வந்த பாரதி பதிப்பக உரிமையாளர் திரு. பழ.சிதம்பரம் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகும்.

– சாண்டில்யன்

1. அழையாமல் வந்தவன்

“இரும்பணை திரங்கப் பெரும் பெயர் ஒளிப்ப குன்று வர கூரச்சுடர் சினம் திகழ் அருவி அற்ற பெருவறல் காலையும் அருஞ்செலல் பேராற்று” என்று கவிஞர் பெருமான் பரணர் பதிற்றுப்பத்தில் பாடியபடி, பணையாகிய மூங்கில் காயவும், பெரிதாகப் பெய்ய வேண்டிய மழை ஒளிந்து கொள்ளவும் வறட்சியடைந்து, ஞாயிறு தனது சுடரால் சினம் கொண்டு பூமியைப் பொசுச்கிய காலத்தும் பெரும் நீர்ச் செல்வை, அதாவது வெள்ளத்தை உடைய சேரநாட்டுப் பேரியாறு இரண்டாகப் பிரிந்து கடலில் கலக்கும் சிறப்பை எண்ணியும், அப்படிப் பிரிந்த இரு பிரிவில் ஒன்றான சுள்ளியாறு கடலில் பாயுமிடத்திலிருந்த முசிறியெனும் துறைமுக நகரின் பெருமையை நினைத்தும், அந்த நகரத்துக்குத் திடீரென ஏற்பட்ட சிறுமையைச் சிந்தித்தும், சித்தம் கலங்கிய சேரன் வருமானத்துறை அமைச்சர் அழும்பில்வேள் தமது எதிரே நின்ற தூது வனான *சஞ்சயனை நோக்கி “சஞ்சயா! எத்தனையோ அரசர்களிடம் தூது சென்று பல மர்மங்களை அவிழ்த்திருக் கும் உனக்கு இந்த மர்மத்தை ஏன் அவிழ்க்க முடிய வில்லை!” என்று என்று கேட்டார்.

சஞ்சலமென்பதைச் சிறிதளவும் அன்றுவரை அறியா தவனும், மாறு வேடங்களைப் புனைவதில் இணையற்றவ னென்று பிரசித்தி அடைந்தவனுமான சஞ்சயன் வருமானத் துறை அமைச்சரின் கணகளைச் சந்திக்க முடியாததால் அவர்கள் இருவரும் நின்றிருந்த முசிறித்துறை அரண்மனையின் மோட்டுவளைச் சித்திரங்களில் கண்களை ஓட்டினான். அவன் தனக்குப் பதில் சொல்லாமல் தாம் இருந்த உப்பரிகைக் கூடத்தின் கூரையை ஆராய்வதைக் கண்டதால் வெகுண்ட அமைச்சர் “சஞ்சயா! ஓவியத்தை ரசிக்க இது சமயமல்ல. நமது மானம் போய்க் கொண் டிருக்கிறது. கேட்டதற்கு பதில் சொல” என்று வினவி விளக்கினார், சினம் சிறிது அதிகரித்ததைச் சொற்களின் ஒலியால் சஞ்சயன் மெல்ல அமைச்சர் பெருமானை நோக்கி, “இதில் சொல்ல வேண்டியது ஏதுமில்லை. இந்த மர்மம் என் சக்தியையும் மீறியதாக இருக்கிறது” என்றான்.

“உனது நண்பன் சகதூதன் நிலனை அனுப்பிப் பார்ப்பதுதானே?” என்று கேட்டார் அழும்பில்வேள்.

சஞ்சயன் சோகப் பெருமூச்சு விட்டான். “அவன முயன்று கையை விரித்த பின்புதான் நாள் சென்றேன் இந்த மர்மத்தை உடைக்க. ஆனால்.என்னால்முடியவில்லை. அவன் எப்படி வருகிறான், எப்படிப் போகிறான், எங்கு போகிறான், என்பது பெரும் பயமாயிருக்கிறது” என்று சொன்னான் சேரதூதன் பெருமூச்சின் ஊடே.
அமைச்சர் அந்த உப்பரிகைக் கூடத்தில் சிறிது நேரம் உலாவிவிட்டு, அதன் ஒரு கோடிக்குச் சென்று உப்பரிகைத் தாழ்வாரத்தில் நின்று சற்று தூரத்தே தெரிந்த சுள்ளியாற்று சங்கமத் துறையைக் கவனித்து விட்டு. “சஞ்சயா! இப்படி வா” என்று சஞ்சயனையும் அழைத்தார். அவர் அழைப்பை ஏற்று அவரிருந்த இடத்தை அடைந்த சஞ்சயனிடம், “அதோ சுள்ளியாற்று சங்கமத் துறையைப்பார்! யவன நாட்டு மரக்கலங்கள் எத்தனை நிற்கின்றன? நமது நாட்டு மரக்கலங்களும், சோழ நாட்டு மரக்கலங்களும் துறைமுகத்தை எப்படி அடைத்துக் கொண்டிருக்கின்றன?” *என்று கேட்டு. தமது கையால் துறைமுகத்தைச் சுட்டியும் காட்டினார்.

அன்று காலையில் வாற்று சங்கமத்துறை, யரைப் போலக் சிறிது தள்ளியே முசிறித் துறைமுகத்தில் கள்ளி யாரையும் மயக்கும் யவன மங்கை” பெரிய நாவாய்கள் நின்றிருந்ததால் படகுகளின் மூலம் வணிகப் பொருள்கள் கரையை நோக்கி வந்து கொண் டிருந்தன. படகுகளைச் செலுத்தி வந்த யவனரும், தமிழக மாலுமிகளும் அரபுநாட்டு நீக்ரோக்களுமாகச் சேர்ந்து பலநிற மலர்களையுடைய கதம்பம் போல் காட்சியளித்தது. சங்கமத்துறை, எட்ட நின்ற நாவாய்கள் மீதும் நெருங் வந்த படகுகள் மீதும் சீறி எழுந்து தாக்கிய கடல் அலை. களின் உக்கிரம், மாற்றார் சேரநாட்டில் யாயிருக்க எச்சரிக்கை வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. படகுகள் வந்த இடத்தில் நின்றிருந்த கடற்சுரைக் காவலர் செல்லும் மற்ற அவற்றில் வந்த வணிகப் பொருள்களை இறக்கி எடுத்துச் நாட்டாருக்கு சுங்கச்சாவடியிருக்கும் இடத்தைக் காட்டி அங்கு போகும்படி சாடையும்காட்டினர். து தவிர கடற்கரையோரமாகப் பெரும் காவலும் இருந் டும் இருந்தனர். தது. வீரர்கள் எங்கும் உலாவியும் கண்காணித்துக் கொண்டும் இருந்தனர்.

இவற்றையெல்லாம் கண்ட சஞ்சயன், “கடற்கரைக் காவல் பலமாகத்தானிருக்கிறது” என்று சொன்னான்.

“நேற்றுமுதல் காவலை இரட்டித்திருக்கிறேன். மரக் கலத் தலைவர்களையும் எச்சரித்திருக்கிறேன்” என்றார்அமைச்சர்.

“பலமான ஏற்பாடு” என்றான் சஞ்சயன்.

அழும்பில்வேள் முகத்தில் கடுமையைப் படரவிட்டுக் கொண்டு, “மண்ணாங்கட்டி ஏற்பாடு. இத்தனை தடையை யும் அவன் கடந்து விடுகிறான். இதுவரை அவன் அடித்த கொள்ளையில் நமக்கு வருமான நஷ்டம் இரண்டு லட்சம் ரோமாபுரி தங்க நாணயங்கள்” என்று சுட்டிக் காட்டினார். அவர். குரலில் ஏமாற்றம், வெறுப்பு, எரிச்சல் ஆகிய உணர்ச்சிகள் கலந்து ஒலித்தன.

“பெருநஷ்டம்” என்று ஒப்புக் கொண்டான் சஞ்சயன்.

“திருட்டுப் போவது எக்கு கெரியுமா?” என்று வினவினார் அமைச்சர்.

“அமைச்சர் சொன்னால் தெரிந்து கொள்கிறேன்” சஞ்சயன் அதிகப் பணிவைக் காட்டினான்.

பணிவு, அமைச்சருக்குத் திருப்தி அளிக்கவில்லை. “சொன்னால் தெரிந்து கொண்டுவிடுவாயா?” என்று ஏளனமாகக் கேட்டார்.

“சொன்னாலும் தெரியாத அளவுக்கு அடியவன் புத்தி மழுங்கிவிடவில்லை” என்று சஞ்சயனும் தனது சாமர்த்தியத்தைக் காட்டினான்.

அமைச்சர் சிறிது நேரம் மௌனம் சாதித்தார். “சங்கச்சாவடியில் கிடைக்கும் பணம் எப்படி பொக்கிஷத்துக்குப் போகிறது?” என்று கேட்டார் சில விநாடிகளுக்குப் பிறகு.

“இரும்புப் பட்டயங்கள் அடிக்கப்பட்ட பெரிய மரப் பெட்டியில் பலமாக மூன்று பூட்டுகள் பூட்டி முத்திரை வைத்து, காவலருடன் போகிறது” என்றார் அமைச்சர்.

“ஆம்! தெரியும்.”

“உனக்குத் தெரியாத ஒன்றிருக்கிறது.”

“என்ன அமைச்சரே?”

“பெட்டி பூட்டியபடி முத்திரைகள் கலையாதபடி வந்து சேருகின்றன. உள்ளே பணம்மட்டும் இருப்பதில்லை. பெட்டி காலியாக இருக்கிறது.”

இதைக் கேட்ட சஞ்சயன் வாயைப் பிளந்தான். “விந்தையாக இருக்கிறதே” என்று வியப்பு எல்லைமீறிய குரலில் பேசினான்.

“இதில் மாயாஜலம் ஏதுமில்லை. பெட்டி எங்கோ வழியில் மாற்றப்படுகிறது” என்ற அமைச்சர், “”எப்படி எங்கே மாற்றப்படுகிறது என்பது புரியவில்லை என்று சொன்னார். “இந்த மர்மத்தை நானே உடைக்கத் தீர்மானித்து விட்டேன். இன்றிரவு முதல் ஜாமம் முடியும் சமயத்தில் இங்கு வா. இருவரும் போவோம்” என்று கூறினார்.

அத்துடன் விடைபெற்றுக் கொண்ட சஞ்சயன் அன்றிரவு முதல் ஜாமத்தின் இறுதியில் உப்பரிகைக் கூடத்துக் கதவைத் தட்டினான். கதவைத் திறந்தாள் ஒரு கட்டழகி அவளை அதுவரை பார்த்திராத சஞ்சயன் “பெண்ணே! நீ யார்?” என்று வினவினான்.

அவள் பதிலேதும் சொல்லாமல் திரும்பி நடந்தாள். அவளைப் பின்பற்றிச் சென்ற சஞ்சயன் அவள் நடை அழகைப் பார்த்து பிரமித்தான். அவள் அழகிய கால்கள் தரையில் சிறிதும் ஒலி கிளப்பாமல் பரவிச் சென்றன. அதனால் அசைந்த அவள் பின்னெழில்கள் யாவரையும் உன் மத்தம் கொள்ளச் செய்யும் நிலையைச் சிருஷ்டித்தன. சிறுத்த இடைக்குக் கீழே அதிக பருமனில்லாமல் அளவோடு பருத்து, அளவோடு எழுந்திருந்த பின்னெழில்களின் அசைவு மிக லேசாயிருந்தது. பருவம் அவற்றைக் கெட்டிப் படுத்தியிருந்ததால், இடைக்கு மேலே எழுந்த அழகிய உடலின் முன்புறத்தில் முளைத்திருந்த மொட்டுகள் இரண்டும் அவள் மேலாடையை மீற முயன்று முடியாமல் தவித்தன. அவள் குழந்தை முகத்தில் பருவத்தின் எழிலெல்லாம் விரவிக் கிடந்தது. கன்னங்களில் ஒரு புஷ்டி, கண்களின் மயக்கம், கூர்மை இரண்டு, தலையில் கருங்குழலின் அடர்த்தி, வளைந்த புருவங்களின் பூர்ண கருமை இவை அவளை தேவமங்கையாக ஆக்கியிருந்தன.

ஓய்யார நடை நடந்து உள்ளே சென்ற அவள் அமைச்சரை “அப்பா!” என்றழைத்ததும் திடுக்கிட்டான் சஞ்சயன். அமைச்சருக்கு ஒரு பெண்ணிருப்பதை அன்று வரையில் அறியாத சஞ்சயன், காலையில் போலவே தாழ் வறையில் நின்றிருந்த அமைச்சரை நெருங்கி தலைதாழ்த்தி வணங்கினான்.

“சஞ்சயா! இவள் எனது இரண்டாவது மகள். இத்தனை நாள் சோழநாட்டில் என் மைத்துனன் வீட்டிலிருந்தாள்” என்று விளக்கிவிட்டு, “நிலக்கள்ளி! கதவைத் தாளிடு” என்றார்.

அவள் தாளிட்டுத் திரும்பியதும் அமைச்சர் தூதுவனை நோக்கி, ”சஞ்சயா! கடல்வேந்தன் என்று சொல்லிக் கொண்டு நம்மைக் கொள்ளையடித்து வரும் இந்த அயோக்கியனை நாம் சீக்கிரம் பிடிக்காவிட்டால் சேர நாட்டுப் பொக்கிஷம் வெகுசீக்கிரம் துடைத்துப் போகும்!” என்றார்.

“பிடித்துவிடுவோம்” என்று பேருக்குச் சொன்னான் சஞ்சயன்.

“சாதாரண காரியமல்ல சஞ்சயா! மிகத் துணிவும் சாமர்த்தியமும் உள்ள ஒரு கொள்ளைக்காரனை நாம்பிடிக்க முயலுகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள். இதுவரை திறமையான நமது காவற்படைக்கே கடுக்காய் கொடுத்து வருபவன் மிகுந்த விவேகியாயிருக்க வேண்டும்” என்றார் அமைச்சர்.

“ஆம்!” சஞ்சயன் ஏதோ பதில் சொல்ல வேண்டுமென்ப தற்காகச் சொன்னான்.

“ஆம். ஆம். என்ன ஆம்? அவனாக வந்து நமது கையில் விழமாட்டான்” என்று வெறுப்புடன் சொன்னார் அமைச்சர்.

அந்தச் சமயத்தில் உப்பரிகைக் கூடத்தின் கதவு தட்டப் படவே அமைச்சர் மகள் சென்று கதவைத் திறந்தாள், உள்ளே வந்த காவலன் ஒருவன் அமைச்சருக்குத் தலை வணங்கி “யாரோ ஒருவர் தங்களை அவசரமாகக் காண வேண்டுமாம்” என்று அறிவித்தான்.

“நாளைக் காலையில் வரச்சொல்” என்று அமைச்சர் வாசகத்தை முடிக்கு முன்வே, காவலன் சொன்னான் “நானே சொன்னேன், கேட்க மறுக்கிறார்” என்று .

“யாரது?” என்று வினவினார் அமைச்சர்.

அதிர்ச்சி தரும் பதிலைச் சொன்னான் காவலன். “பெயர் கடல்வேந்தனாம்” என்று அறிவித்தான். அவன் அறிவித்த அதே நேரத்தில் அவர்கள் பிடிக்கத் திட்டம் போட்டுக் கொண்டிருந்த மனிதனே உள்ளே நுழைந்தான்.

2. அத்தாட்சி

எந்தக் கொள்ளைக்காரனைப் பிடிக்கத்திட்டம் போட்டு அதற்காகப் புலனறிய சஞ்சயனுடன் சமுத்திரக்கரைக்குக் கிளம்பினாரோ, அந்தக் கொள்ளைக்காரன் தானே வலுவாகத் தம்மிடம் வந்ததை எண்ணியதால் அதிர்ச்சியின் அடிமையாக விளங்கினார் அமைச்சர் அழும்பில்வேள், அவர் அதிர்ச்சியைவிடப் பன்மடங்கு அதிக அதிர்ச்சியை அடைந்த சேர தூதனான சஞ்சயன், வருபவன் உண்மையாகக் சுடல் அல்லது தங்களை ஏமாற்ற அவன் அனுப்பிய ஏதாவது ஒரு போலியா என்ற சந்தேகத்தில் ஈடு பட்டாலும் ஏதும் செய்ய இயலாதவனாய்ச் சிலையென நின்றுவிட்டான் பல விநாடிகள். இத்தனைக்கும் அமைசரின் மகளான நிலக்கள்ளி மட்டும் எந்தவித அதிர்ச்சிக்கோ, அச்சத்துக்கோ ஆளாகாமல் வந்தவனை எடைபோடுவதில் முனைந்து, அவன் மீது தனது அழகிய பெருவிழிகளைக் காட்டினாள்.

கடல்வேந்தனென்று தன்னை அறிவித்துவிட்டு உப்பரிகை அறையின் வாயிலைத் தாண்டி நடந்து வந்த அந்த மனிதன் எந்தவித சலனத்தையும் முகத்தில் காட்டா மலும், நடையில் சிறிதும் தளர்ச்சியைக் காட்டாமலும் சொந்த வீட்டில் நுழைபவன் போல் உள்ளே நடந்து வந் தான். அவனை ஊன்றிக் கவனித்த நிலக்கள்ளி அவன் நடையில் ஒரு திடமும், படைவீரர் அணிவகுப்பு நடை போல் ஒரு சீரும் இருப்பதையும், அவன் நடைக்குத் தகுந்தபடி அவன் குறுகிய இடை லேசாக நெளிந்ததையும் பார்த்தாள். அவன் இடை பெண்களின் இடையைப்போல் சிறுத்திருந்தாலும் நடையில் பெண்மை ஏதுமில்லையென் பதையும், அவன் நடை ஆண்மை மிக்கதாயிருந்ததையும், பாதங்கள் மிக உறுதியாகத் தரையில் ஊன்றியதையும் பார்த்து, பெரிய வீரனொருவன் தங்கள் இல்லத்துள் நுழைந்து விட்டதை உணர்ந்து கொண்டாள். அவன் இடைக்கு மேலே தெரிந்த நெடிய உருவத்தின் மார்புப்பகு அதிகப் பருமனில்லாவிட்டாலும், இளைத்த நிலையிலும் எஃகு போல் கடினமாக இருந்ததையும்,சற்றே நீண்டுவிட்ட கழுத்தின் மீதிருந்த தலையும், அதிக வலுவைக் காட்டி யதையும் கண்டு அந்த மனிதனிடம் தனது தந்தையும் சஞ்ச யனும் எச்சரிக்கையாயிருக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தாள்.

இத்தனைக்கும் அந்த மனிதன் முகத்தில் அழகு என்பது அணுவளவுமில்லை யென்பதோடு அது விகாரத்துக்கு ஓர் எடுத்துக் காட்டு என்பதையும் கவனித்தாள். முகத்தில் இரண்டு மூன்று இடங்களில் கோடுகளாக மடிந்திருந்த சதையும், தடித்த உதடுகளில் காணப்பட்ட குரூரமும் அவன் இதயமற்றவனென்பதற்கு சான்றாக இருந்ததையும் பார்த்த மந்திரி மகள், அவன் குரூரத்தின் சொரூபம் என்று தீர்மானித்தாள். அவன் முகத்தின் பொதுத் தோற்றத்தி லிருந்து அவன் வாலிபனல்லவென்றும் நாற்பத்தி ஐந்து வயதைத் தாண்டியிருக்க வேண்டுமென்றும் முடிவுக்குவந்த நிலக்கள்ளி, அவன் கண்களின் கூர்மையையும் அவற்றில் பளிச்சிட்ட கடுமையையும் கண்டு அவன் எந்தப் பஞ்சமா பாதகத்துக்கும் அஞ்ச மாட்டான் என்று நினைக்கவே செய் தாள். அவன் புருவங்களும், கண் இமைகளும், வலிய கறுத்த உதடுகளின் மீதிருந்த மீசையும், செம்பட்டை நிறமாக இருந்ததையும் அதிகமாக முளைக்காமல் கத்தரித்து விடப் பட்டிருந்த தலைக் குழலில் செம்பட்டையுடன் சிறிது நரையும் தலைகாட்டியதையும் கவனித்து. ஏற்கெனவே இருந்த கொடுமைத் தோற்றத்தை அவை அதிகப்படுத்திய தையும் உணர்ந்தாலும் நிலக்கள்ளி (வெறுப்பைக் காட்டி.. இல்லை. அவன் வந்ததும் அவன் உட்கார ஒரு மஞ்சத் தைச் சிறிது இழுத்துப் போட்டாள்.

அமைச்சரும் சஞ்சயனும் திக்பிரமையிலிருந்தபடி யால் அவர்கள் ஏதும் பேசவில்லை. கடல் வேந்தனென்று சொல்லிக் கொண்டு வந்தவனின் கொடுமை முகத்தைப் பார்த்து அமைச்சர் சிறிது அச்சம் அடைந்தாலும் அதை வெளிக்குக் காட்டவில்லை. பால் இடங்களுக்குத் தூது சென்று பல அபாயங்களைச் சந்தித்திருந்த சஞ்சயன் திக் பிரமை அச்சத்தை அடையாததால் அடைந்தாலும் வந்தவன் யாராயிருக்கும் என்ற ஆராய்ச்சியில் இறங் கினான். அவர்கள் மூவருடைய மனநிலையையும் வந்தவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். நிலக்கள்ளி இழுத்து விட்ட மஞ்சத்தில் உட்காரு முன்பு அமைச்சருக்குத் தலை வணங்கிய அந்த மனிதன், தாங்கள் நிற்கும்போது நான் உட்காருவது நாகரிகமல்ல” என்று கூறினான்.

அவன் நாகரிகத்தைப் பற்றிப் பேசியது அமைச்சர் பெருமானுக்கு மிசு விசித்திரமாயிருக்கவே, “வேந்தர் முன்பு அமைச்சர் நிற்பதுதான் பண்பாடு” என்று மெதுவாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினார்.

அந்த மனிதன் தனது சிவந்த இமைகளை மேலே தூக்கினான் ஒரு முறை, பிறகு நகைத்துவிட்டுச் சொன்னான், “அது நில வேந்தர் நாகரிகம், கடலின் வழி வேறு. அங்கு சகலமும் சமம். நிலத்தின் பாகுபாடுகளை வித்தியாசங்களை நீர் அழித்து விடுகிறது” என்று சொல்லி விட்டு உட்காரவும் செய்த அந்த மனிதன், தனது கால்களை நன்றாக நீட்டிக் கொண்டு இடைக் கச்சையைச் சிறிது திருப்பி அதிலிருந்த வாளைத் தனக்கு முன்னால்கொண்டு வந்து, அதைத் தரையில் ஊன்றி அதன் பிடியை இரு கை களாலும் பிடித்த வண்ணம் “நமது நாட்டில் பெண் களுக்கு புத்தியும் அதிகம். பண்பாடும் அதிகம்” என்று கூறிவிட்டு, “அமைச்சர் மகளே! உட்கார ஆசனமளித்ததற்கு நன்றி” என்று நிலக்கள்ளியை நோக்கித் தலையையும். தாழ்த்தினான்.

நிலக்கள்ளி தமது மகளென்பது அவனுக்கு எப்படித் தெரியுமென்று திகைத்த அமைச்சர், அவனுக்கு மேலும் என்ன தெரியுமென்பதை அறிய சஞ்சயனைக் காட்டி “இவர்….” என்று தொடங்கினார்.

அவர் தொடங்கிய வாசகத்தைக் கடல்வேந்தனே முடித் தான். “சஞ்சயன்-சேரமன்னனின் இரு தூதுவர்களில் ஒருவர்” என்று.

“இவள்….” எனது மகளைக் காட்டினார் அமைச்சர்.

“நிலக்கள்ளி, தங்கள் இரண்டாவது மகள், அறிவில் நிகரற்றவள். பரணரிடம் தமிழ் பயின்றவள். கவிதை இயற்றும் வலுவுடையவள் என்று விடுவிடுவெனச் சொற் களை உதிர்த்தான் அந்த மனிதன்.

அமைச்சர் முகத்தில் வியப்பும், பயமும் ஒருங்கே விரிந்தன. “இவளை முன்பே உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினார் உணர்ச்சி மிகுந்த குரலில்,

“இவள் பெயர் சேரநாட்டில் பிரசித்தி. இவளைப் பார்க்காதவரும், பார்த்து பிரமிக்காதவரும் வெகு சிலர். இவளை நீங்கள் அதிகமாக வெளியில் உலாவ விடுவ தில்லையென்று கேங்வி. ஆனால் அமைச்சரே சந்திரனைச் சிறை செய்ய முடியுமா?”என்று வினவினான் அந்த மனிதன் இதைக் கேட்டதும் அமைச்சரின் வியப்பு அதிகப் பட்டதென்றால் சஞ்சயன் வியப்பு மிக அதிகமாயிற்று. கடல் வேந்தரே!” என்று அழைத்தான் சஞ்சயன்.

“என்ன தூதுவரே?” என்று கடல் வேந்தன் வினவினான்

“நீர் கடல்வேந்தரென்று சொல்கிறீர்”, என்று இழுத்தான் சஞ்சயன்

“ஆம்.” திட்டமாக வந்தது பதில்.

“அதற்கு அத்தாட்சி என்ன? மூன்றாவது மனிதன் ஏன் இந்த வேஷத்தைப் போடக்கூடாது?” என்று வினவினார் சஞ்சயன்.

இதைக் கேட்டுச் சிறிதும் சஞ்சலப்படவில்லை கடல் வேந்தன். “நியாயமான கேள்வி. அவசியமான கேள்வியும் கூட. இப்பொழுது நாடு இருக்கும் நிலையில் யாரும் எந்தப் பெயரை வைத்துக் கொள்ளலாம். பெயர் மாற்றம், ஆள் மாற்றம், ஏமாற்றம் எதிலும் ஈடுபடலாம்” என்று சொன்ன கடல்வேந்தன், சஞ்சயனையும், அமைச்சரையும் நோக்குவதைக் கைவிட்டு, எட்ட நின்று இந்த நாடகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த நிலக்கள்ளியை நோக்கி “நிலக்கள்ளி! இப்படி வா” என்று மிகச் சொந்தமாக அழைத்தான் .

அவள் அவனை நோக்கி நகருமுன்பாக அமைச்சரே நகர்ந்தார். “கடல் வேந்தரே! வயது வந்த ஒரு பெண்ணை நீர் அழைப்பது பண்பாட்டுக்கு உகந்ததல்ல. சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்லுங்கள்” என்று கூறிய வண்ணம் அவனருகே வந்தார்.

கத்தியின் பிடியைப் பிடித்திருந்த கடல்வேந்தன் கைகள் கத்தியின் அடியை லேசாகத் தரையில் தேய்த்தன. ‘அமைச்சரே! அருகில் வர வேண்டாம். உமது மகள் வரட்டும்” என்றான். அவன் குரல் தரையில் இரும்பைக் கீறிய சப்தம் போல் காதில் விழுந்தது.

“அவளிடம் சொல்லக் கூடியதை என்னிடம் சொன்னா லென்ன?” என்று வினவினார் அமைச்சர்.

“உமது மகளிடம் நான் ஏதும் சொல்லப் போவதில்லை” என்று கூறிய கடல்வேந்தன் “நிலக்கள்ளி! இப்படி வா” என்று அழைத்தான் கடுமையான குரலில்.

நிலக்கள்ளியின் முகத்தில் திடீரென்று ஏதோ சந்தேகம் தோன்றினாலும் அதை அவள் வெளிக்குக் காட்டாமல் அவனருகில் வரவே செய்தாள். “கையைக் காட்டு பெண்ணே” என்றான் கடல் வேந்தன்.

அவள் தனது மலர்க் கைகள் இரண்டையும் பிரித்தாள். அதைச் சில விநாடிகள் உற்று நோக்கிய கடல் வேந்தன். தனது கச்சையிலிருந்து சிறு சீலை முடிப் பொன்றை எடுத்து அதன் வாய்க் கயிற்றை அவிழ்த்து அதைத் தலை கீழாகப் பிடித்து அதிலிருந்து சில நாணயங் களை அவள் கையில் கொட்டினான். சலசலவென்று உதிர்ந்த தங்க நாணயங்களைக் கண்டு பிரமித்த நிலக் கள்ளியை நோக்கி, “இவற்றில் ஒன்றை உன் தந்தையிடம் கொடு. மீதியை உனக்கு வைத்துக்கொள்” என்றான்.

விளக்கொளியில் பளபளத்த நாணயங்களை எட்ட இருந்து பார்த்ததாலேயே பிரமிப்பின் எல்லையை எய்திய அமைச்சர், கடல்வேந்தன் சொற்படி மகள் கொடுத்த நாணயத்தைக் கையில் வாங்கி இருமுறை திருப்பித் திருப்பிப் பார்த்ததும் விவரணத்துக்கும் அப்பாற்பட்ட உணர்ச்சிகளில் சிக்கிக்கொண்டார். “இனிச் சந்தேக மில்லை” என்று இரைந்தும் சொன்னார் அவர் குரல லேசாக நடுங்கியது உணர்ச்சிப் பெருக்கால்.

அதுவரை வாளாவிருந்த சஞ்சயன் “எது சந்தேக மில்லை?” என்று வினவினான்.

“இவர்தான் கடல் வேந்தனென்பது நீ அத்தாட்சி கேட்டாய். இதோ இருக்கிறது அத்தாட்சி” என்றார் அமைச்சர் கையிலிருந்த நாணயத்தைக் காட்டி,

“அது எப்படி அத்தாட்சி?” என்று கேட்டான் சஞ்சயன்.

“திருட்டுப் போன பெட்டிகளில் இருந்த நாணயங் களில் இது ஒன்று…” என்றார் அமைச்சர்.

“மற்றும் சில நிலக்கள்ளியின் மலர்க் கரங்களில் இருக்கின்றன” என்றான் கடல்வேந்தன்.

புரிந்துகொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த அமைச்சர் “கடல்வேந்தனே! கொள்ளையடித்த பெட்டிகளிரண்டையும் கொடுத்து விடு. உனக்கு அரச ரிடம் மன்னிப்பு வாங்கித் தருகிறேன்” என்று ஆசை காட்டினார்.

கடல்வேந்தன் குரூரமாகப் புன்னகை செய்து “மன்னிப்பு யார் கேட்டது?” என்றான்.

அமைச்சர் தாம் நின்ற இடத்திலிருந்து சில அடிகள் நகர்ந்து “உனக்கு வேண்டியது மன்னிப்பா, சிறையா? சிந்தித்துச் சொல்” என்றார். இம்முறை அவர் குரல் திடமுடன் ஒலித்தது.

“இரண்டும் தேவையில்லை” என்ற கடல்வேந்தன், “ஓர் அனுமதி தேவை” என்றான்.

“என்ன அனுமதி?” என்று கேட்டார் அமைச்சர்.

“உமது மகளை அழைத்துச் செல்ல அனுமதி” என்று கடல்வேந்தன் சொன்னான்.

அதைக் கேட்டதும் சினத்தின் எல்லைக்குச் சென்ற சேரன் அமைச்சர் “யாரங்கே? இவனைச் சிறை செய்யுங்கள்” என்று கூறி, கைகளைத் தட்டினார் பலமாக.

அடுத்த விநாடி அதிர்ச்சியடைந்தார். காவலர் யாரும் தலை காட்டவில்லை. ஏற்கெனவே கடல்வேந்தனை உள்ளே விட்ட காவலனும் மறைந்தான்.

கடல் வேந்தன் நிதானமாக எழுந்து நின்றான். “அமைச்சரே! உமது காவலர் உதவிக்கு வரும் நிலையில் இல்லை. ஆகையால் சொல்வதைக் கேளும். உமது மகளை அவள் நன்மையை முன்னிட்டே அழைத்துப் போகிறேன்” என்று கூறிவிட்டு “வா வா நிலக்கள்ளி” என்று அவளை அழைத்தான் அவள் வர இஷ்டப்படாததால் அவள் கையைப் பிடித்துச் சரசரவென்று இழுத்துக் கொண்டு செல்ல முயன்றான்.

அமைச்சரும், சஞ்சயனும் ஒரே சமயத்தில் தங்கள் வாட்களை உருவி அவனைத் தடுத்தனர். இரு வாட்களின் நுனிகளும் தன்னை நோக்கி மெல்ல வருவதைக் கண்ட கடல் வேந்தன் பெரிதாக நகைத்தான் ஒருமுறை. அந்த நகைப்பைத் தொடர்ந்து அவனது வாள் மின்னல் வேகத்தில் எழுந்து இருபக்கங்களில் சுழன்றது. அமைச்சர் வாளும் சஞ்சயன் வாளும் உப்பரிகை சாளர வழியாக வெளியே பறந்தன. அடுத்த விநாடி உப்பரிகை அறை இருட்டுக்குக் விளக்கு அணைந்தது. எங்கும் அந்தகாரம் சூழ்ந்தது. அந்த சரிப்படும். வரை பார்வையை இழந்த அமைச்சரும் சஞ்சயனும் நிதானித்தனர். கண்கள் சிறிது நிதானப்பட்டதும் சஞ்சயன் ஓடி இன்னொரு விளக்குடன் திரும்பி வந்தவன் திகைத்து நின்றான்.

அறையில் அமைச்சர் உட்பட யாருமே இல்லை. அவர்கள் மூவரும் போன சுவடும் தெரியவில்லை. ஆனால் கடல்வேந்தன் காட்டிய அத்தாட்சி, அதாவது பொன் நாணயம் ஒன்று மட்டும் தரையில் விழுந்து கிடந்தது,

3. மரக்கட்டிலில் மந்திரி மகள்

மந்திரி மாளிகையின் உப்பரிகையில் பக்கத்து அறைக்குச் சென்று கையிலொரு விளக்கை ஏந்தி வந்த சேர தூது வனான சஞ்சயன், தாங்கள் ஏற்கெனவே இருந்த அறையில் யாருமில்லாததையும், மந்திரி உட்பட மூவரும் அந்தர்த் முதலில் வியப்பின் தானமாகி விட்டதையும் கண்டு வசப்பட்டானென்றாலும், கீழே கிடந்த ரோமாபுரி பொன் நாணயத்தைக் கண்டதும் பெரும் அதிர்ச்சிக்கும் சினத்துக்கும் ஆட்பட்டான். சுடல் வேந்தனென்ற கொள்ளைக்காரன் செய்வதற்காகவே அந்தப் பொன் தன்னை ஏளனம் நாணயத்தை எறிந்து விட்டுப் போயிருக்கிறானென்பதை யும், அந்த நாணயத்தைக் கொண்டு தன்னைத் துப்பறியும் படி அறைகூவல் விடுத்திருக்கிறானென்பதையும் உணர்ந்து விளக்கைக் -கீழே வைத்துவிட்டு அந்த கொண்டதால் இருமுறை திருப்பிப் நாணயத்தைக் கையில் எடுத்து ஆனால் இரு முறையிலும் ஏதும் விளங் பார்த்தான். காதது மட்டுமின்றி அந்த நாணயத்திலிருந்த ரோமாபுரி சர்வாதிகாரியின் உருவம் தன்னைப் பார்த்து நகைப்பதை யும் கண்டதால் சினம் தலைக்கேற அதை வெளியே விட் எறிந்துவிடலாமாவென்று சிந்தித்தவன் அது தேவை நாணயத்தைத் தனது யில்லையென்று முடிவுக்கு வந்து கச்சையில் பத்திரப்படுத்திக் கொண்டான். தான் பக்கத்து அறைக்குச் சென்று திரும்பிய குறுகிய காலத்தில் மந்திரி மகளையும் கடத்திச் செல்ல அந்தக் யையும் அவர் கொள்ளைக்காரனால் எப்படி முடிந்தது என்ற சிந்தனை யில் இறங்கி, படியில் இறங்கிச் செல்லும் மற்றும் இரு கோடிகளிலிருந்த அறைகளையும் சோதிக்க முற்பட்ட சேரதூதுவன், படிக்குச் செல்லும் கதவையும், அறைக கதவின் இடுக்கில் ஒரு சிறு சீலை தொங்குவதைப் பார்த்து அதை எடுத்துப் பிரித்தான். அதில் வில்லும் அம்பும் பொருந்திய சேரநாட்டு முத்திரை பொறிக்கப்பட்டிருந்த கையும். மேலே இரு வரிகள் எழுதப்பட்டிருந்ததையும் பார்த்த சஞ்சயன் “என்ன அயோக்கியன்!” என்று சுடல் வேந்தனைத் தூற்றவும் செய்தான்.”நிலக்கள்ளியையும் அவள் தந்தையையும் சந்திக்க கீழே இடப்பட்டுள்ள முத்திரை பொறித்த இல்லத்துக்குத் தனியாக வரவும். துணைக்கு யாரையும் அழைத்து வராதே” என்ற வரிகள் சீலையில் எழுதப்பட்டிருந்தன.

அந்த இரண்டு வரிகளைப் படித்ததும் பெரிதும் திகிலடைந்தான் சஞ்சயன். அவன் குறித்த இல்லம் முகத் துவாரத்துக்கு அருகே சுள்ளியாற்றின் அக்கரையிலிருக்கிற தென்பதையும், அது கொள்ளைக்காரர் முகாமாக முசிறி வாசிகளால் கருதப்படுகிறதென்பதையும் அறிந்தே இருந்த சஞ்சயன், “பெரிய அபக்கியாதி உள்ள அந்த இல்லத் துக்கு மந்திரியையும் மந்திரி மகளையும் இவன் ஏன் அழைத்துச் செல்கிறான்?” என்று கடல் வேந்தனைச் சபிக்கவும் செய்தான்.

அத்துடன் அந்த பெரிய மாளிகையின் காவலர் யாரும் இந்த அமர்க்களத்தில் தலைகாட்டாதிருந்தது அவனுக்கு வியப்பாயிருக்கவே, “இந்த சனியன்கள் எங்கே சென்று விட்டனர்?” என்றும் சீறி மாடிப்படிகளில் தடதடவென்று இறங்கிச் சென்று கீழ்த்தளத்திலிருந்த காவற் கூடத்தை அடைந்ததும் திகைத்து நின்றான். காவற்கூடத்தின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அதைத் திறக்க தனது கச்சையி லிருந்த குறுவாளை எடுத்து அதன் நுனியால் பூட்டை நெம்பி உடைத்து கதவை காலால் உதைத்துத் திறந்தான். உள்ளே கண்ட காட்சி பெரும் பிரமிப்பைத் தந்தது செர தூதுவனுக்கு.

பத்து காவல் வீரர்கள் ஒரு கயிற்றைக் கொண்டு கட்டி உருட்டப்பட்டிருந்தனர். அவர்கள் வாயில் துணியும் நன் றாகத் திணிக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த சஞ் சயனை, சுட்டுண்ட காவலர் பரிதாபக் கண்களால் பார்த் தனர். கட்டுகளை அவிழ்த்து விடும்படி சைகையும் செய் தனர். அவர்களைப் பற்றிய வெறுப்பு சஞ் சபனுக்கு அதிக மாயிருந்தாலும் அந்த சமயத்தில் தன் வெறுப்பையோ சினத்தையோ காட்டு பதில் அர்த்தமில்லை யென்பதை உணர்ந்தபடியால், அவன் மிகத்துரிதமாக அவர்களின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான். கைகள் அவிழ்க்கப்பட்ட துமே கால் கட்டுகளையும், எல்லாரது உடலுக்கும் குறுக்கே ஓடிய கட்டையும் பிரித்துக் கொண்டதன்றி வாயிலிருந்த துணியையும் எடுத்துவிட்ட காவலர்கள், கை, கால்களில் சுரணை வரவழைத்துக் கொள்ள அவயவங்களை உதறிக் கொண்டனர். அவர்கள் தலைவன் இடுப்பையும் இருமுறை வளைத்து சொடுக்கு எடுத்துக் கொண்டான்.

மிகுந்த ஏளனத்துடன் அவர்களை நோக்கிய சஞ்சயன் “என்ன தேகப்பயிற்சி செய்து கொள்கிறீர்களா?” என்று வினவினான்.

அந்தக் கேள்வியால் அவர்கள் யாரும் வெட்கப்பட்ட தாகத் தெரியவில்லை. அவர்கள் தலைவன் துணிவாகவே சஞ்சயனை நோக்கி தலைவரே! தாங்கள் வராதிருந்தால் எங்கள் கதி என்னவாயிருக்குமோ தெரியவில்லை” என்று கூறியபடி மீண்டும் ஒரு முறை இடுப்பையும் வளைத்து தன்னைச் சரி செய்து கொண்டான்.

சஞ்சயன் எரிச்சல் அதிகமாகவே, “இன்னொரு முறை இடுப்பை வளைத்தால் அந்த இடுப்பை நானே முறித்துப் போடுவேன்” என்று சினந்து கூறினான் காவலர் தலைவனன நோக்கி.

“நன்று சொன்னீர்கள் தூதுவரே! இடுப்பை முறித் கால்கூட இசுமாயிருக்கும் போல் தெரிகிறது. அந்த அயோக்கியன் என்னை என்ன செய்து விட்டானென்பது தெரியவில்லை” என்றான் காவலர் தலைவன்.

சஞ்சயன் மேற்கொண்டு உரையாடலை வளர்த்த விரும்பவில்லை. “என்ன நடந்தது?” என்று ஒரு கேள்வியை மட்டும் கேட்டான்.

“நான் இந்த அறையில் காவல் செய்து கொண்டிருந்த போது நீண்ட வாளைத் தரித்த ஒருவன் வந்தான், அதோ அந்த சாளரத்தின் மூலம். ம் சாளரம் பின்னாலிருப்பதால் அவன் வந்ததை நான் கவனிக்கவில்லை, அவன் பூனை போல் சந்தடி செய்யாமல் சாளரத்திலிருந்து குதித்தபோது தான் நான் திரும்பினேன். அடுத்த விநாடி அவன் வாளின் நுனி என் கண்களின் முன்பு லேசாக அசைந்தது. “கண் வேண்டுமென்றால் கத்தாதே” என்று எச்சரிக்கை செய்து எனது கச்சையிலிருந்த வாளைத் தனது இடக் கையால் உருவிக் கொண்டான். அடுத்து உத்தரவிட்டான். ‘இந்த மாளிகையின் உப்பரிகைப் படிகளைக் காவல் புரியும் ஆட் களை அழை’ என்று. அப்படி உத்தரவிட்டவன், வாயைத் திறக்கு முன்பாக அறைக் கதவின் தாளைத் திறந்து அதன் மறைவில் நின்று கொண்டான். என்னையும் வரும்படி சைகை செய்து என்னை தனக்கு முன்னால் நிறுத்தி ‘கொஞ்சம் விஷமம் செய்தாலும் பிணமாகிவிடு வாய், ஆட்களைக் கூப்பிடு’ என்றான். நான் ஆட்களை அழைக்க, அவர்கள் உள்ளேவந்ததும் அவன் கதவை மூடிஎன் நெஞ்சில் வாளின் நுனியை ஊன்றிய வண்ணம் ‘அவர்கள் வாட்களை கீழே எறிந்து விடச்சொல்’ என்றான். அவன். இஷ்டப்படி செய்வதைத் தவிர வேறு வழியில்லாததால் அப்படியே செய்தோம். அடுத்து என்னை ஒரு கயிற்றை எடுத்து ஆட்களைப்படுக்கச் சொல்லி பிணைக்கச் செய் தான். பிறகு அவர்களோடு என்னையும் பிணைத்து விறகுக் கட்டு மாதிரி செய்து வாட்களை எங்கள் கைகளுக்கு எட்டா வண்ணம் காலால் உதைத்து எறிந்தான் ஒரு மூலைக்கு. பிறகு எனது மாற்று உடையை எடுத்துக் கிழித்து எங்கள் வாய்களில் துணியை அடைத்தான். பிறகு எனது கச்சையி லிருந்து அறைச் சாவியை எடுத்துக்கொண்டு கதவையும் பூட்டிச் சென்றான். நடந்தது இதுதான்” என்று காவலர் தலைவன் கதையைச் சொன்னான்.

சஞ்சயன் சிறிது சிந்தனையில் இறங்கி, “வந்தவனுக்கு இந்த மாளிகையின் காவல் முறை நன்றாகத் தெரிந்திருக் கிறது” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். இருப் பினும் ஒன்றும் விளங்கவில்லை சஞ்சயனுக்கு. “மந்திரியும் அவர் மகளும் சிறிதும் அரவம் செய்யாமல் அந்தக் கொள்ளைக்காரனுடன் எப்படிச் சென்றார்கள்?” என்று ன்னை வினவிக் கொண்டாலும் மேலும் காலம் கடத்த இஷ்டமில்லாமல், கடல்வேந்தன் கட்டளைப்படி சுள்ளி யாற்றை நோக்கிச் சென்றான். அப்புறம் நடந்த நிகழ்ச்சிகள் அவனுக்கு மிக விசித்திரமாயிருந்தன. ஆற்றங்கரைப் படகுத் துறையில் பல படகுகள் இருந்தபோதிலும் படகுக்காரர்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு படகுக்காரன் மட்டும் சிறு விளக்கு ஒன்றை வைத்துக் கொண்டு எதையோ படித்துக் கொண்டிருந்தான். அவனை அணுகிய சஞ்சயன், டேய்! என்ன படிக்கிறாய்?” என்று அதட்டலாகக் கேட்டவுடன் லேசாசுத் தலையைத் தூக்கிய படகோட்டி புன்முறுவல் செய்து “சேர நாட்டில் படிப்புக்கும் தடை உண்டா?” என்று அலட்சியமாகக் கேட்டான்.

“கேட்டதற்கு பதில் சொல்” என்ற சஞ்சயனை நோக்கி கண்களை உயர்த்திய படகோட்டி, “உங்களுக்கு இலக்கிய அறிவு உண்டா?” என்று வினவினான்.

“அதைப்பற்றி இப்பொழுதென்ன?” என்ற சஞ்சயன் குரல் சீற்றத்துடன் ஒலித்தது.

“கவிதை படிக்கிறேன். மகா கவி பரணர் இயற்றியது” என்றான் படகோட்டி.

சேரமன்னனின் இணைபிரியா நண்பரும் சங்க கால சிறப்புக் கவியுமான பரணர் பேரைச் சொன்னவுடன் சிறிது தலைதாழ்த்தினான் சஞ்சயன், சொன்னவன் பட கோட்டியாயிருந்தாலும்கூட, அடுத்து கேட்டான். “பட கோட்டி! கவிதையைப் பிறகு படிக்கலாம். படகை விடுகிறாயா?” என்று.

“ஆகா விடுகிறேன்” என்ற படகோட்டி, “தூதுவரே! ரோமாபுரி பொன் நாணயம் கொண்டு வந்திருக்கிறீரா?” என்று கேள்வி கேட்டான்.

பேரதிர்ச்சி அடைந்த சஞ்சயன் அவன் கடல்வேந்தன் ஆளாயிருக்க வேண்டுமென்று தீர்மானித்து, அவனை சிறை செய்தாலென்ன என்று முதலில் நினைத்தாலும் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு கச்சையிலிருந்த பொன் நாணயத்தை எடுத்து படகோட்டியிடம் நீட்டினான்.

படகோட்டி அந்த நாணயத்தை வாங்கி தனது கச்சையில் செருகிக் கொண்டு படகுக்கு அருகே நீரில் நின்று கொண்டிருந்த சஞ்சயனை நோக்கி, ”தூதுவரே! ஏறுங்கள் படகில்” என்றான்.

சஞ்சயன் சந்தேகத்துடன் கேட்டான். “எங்கே போக?” என்று.

“வில்லம்பு இலச்சினை இல்லத்திற்கு” என்று சகஐமாகச் சொன்ன படகோட்டி, சஞ்சயன் படகில் ஏறியதும் துடுப்புகளைக் கொண்டு படகைத் துழாவி செலுத்தினான்.

அன்றிரவு கள்ளியாற்று சங்கமத் துறையில் அலைகள் அதிகமிருந்தால் உள்ளே புகுந்துவிட்ட கடல்நீர் சற்று அதிகமாகவே இருந்தது. காற்றும் விர்ரென்று பயங்கரமாக வீசி, அதில் படகு ஆடினாலும், படகோட்டி படகை அலட்சியமாக சற்று தூரம் சங்கமத்துறையை நோக்கிச் செலுத்தி பிரகு அதை எதிர்க் கரைக்குத் திருப்பினான் எதிர்க்கரையில் இருந்த பல இல்லங்களில் ஒன்றைக்கூட ஓட்டாமல் தன்னந்தனியே நின்ற வில்லம்பு இலச்சினை இல்லத்தின் முகப்பில் ஒரே ஒரு தனி விளக்கு மட்டும் சுடர் வீட்டுக் கொண்டிருந்தது. அந்த இல்லத்தின் முகப்பில் காவல் ஏதுமில்லாததை கவனித்த சஞ்சயன், “இந்தத் திருடனுக்கு துணிவு மிக அதிகம். இவன் இங்கிருப்பது முன்னமே தெரிந்திருந்தால் அவனை எனது வீரர்களைக் கொண்டு என்றோ பிடித்திருப்பேனே! இவனிருப்பதை ஏன் எனது ஒற்றர் சொல்லவில்லை?” என்று வினா எழுப்பிய வண்ணம் படகு கரையோரமாக நின்றதும் படகிலிருந்து தரையில் குதித்தான். அவன் இறங்கியதும் அவனுடன் இறங்கி படகைத் தளையில் பிணைத்த அந்தப் படகோட்டி மீண்டும் படகில் உட்கார்ந்து பரணரின் கவிதையைப் படிக்கத் தொடங்கினான்.

அந்தப் படகோட்டியின் அலட்சியமும் அவன் எதைப் பற்றியும் சிந்திக்காமல் கவிதை படிக்கத் தொடங்கியதை யும் கண்டதால் மிகுந்த எரிச்சலுக்குள்ளானாலும், ஏதும் செய்ய இயலாத சஞ்சயன் எதிரே தெரிந்த கொள்ளையர் இல்லத்தை நோக்கி நடந்தான். அவன் அந்த இல்லத் தின் படிகளில் ஏறியதும் அதன் பெருவாயில் தானாகவே திறந்தது. சுதவைத் திறந்த முரடன் ஒருவன் சஞ்சய னுக்குத் தலைவணங்கி “வேந்தர் அறை கோடியிலிருக் கிறது” என்று பணிவுடன் தெரிவிக்க. அந்த அறையை நோக்கி நடந்தான் சஞ்சயன். அந்த அறைக்கதவு திறந்தே இருந்ததால் உள்ளிருந்த விளக்கு வெளிச்சம் பட்டையாக விழுந்திருந்தது. அந்த வெளிச்சத்திற்கு சற்று முன்னதாகவே நின்று உள்ளே எட்டிப் பார்த் தான் சஞ்சயன். அங்கிருந்த பஞ்சணையற்ற மரக்கட்டிலில் நிலக்கள்ளி சுரணையற்றுப் படுத்துக் கிடந்தாள். அவளை உற்று நோக்கிக் கொண்டு நின்றான் கடல்வேந்தன். அவனுக்குப் பக்கத்தில் கவலை தோய்ந்த முகத்துடன் அழும்பில்வேள் நின்றிருந்தார். அந்தக் கட்டிலின் மறு புறத்தில் நிலக்கள்ளியின் தலைமாட்டில் மற்றொரு மனிதர் நின்றிருந்தார் தலைகுனிந்த வண்ணம், அவர் சிறிது நேரத்திற்குப் பிறகு தலை நிமிர்ந்த போது அறை விளக் பின் வெளிச்சம் அவர் முகத்தின் மீது விழவே சஞ்சயன் மிதமிஞ்சிய வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகி பிரமை பிடித்து சிலையென நின்றுவிட்டான் பல விநாடிகள். “இவரா! இவருக்கும் கொள்ளைக்காரருடன் பழக்கமா? அரசன் உப்பைத் தின்று…” என்று நினைப்பை ஓட்டியவன் மேலும் நினைக்கவும் சக்தியற்று கல்லாய்ச் சமைந்து விட்டான்.

4. அவன் என் மகன்!

வில் அம்பு இலச்சினை இல்லத்தின் கோடி அறை வாயிலுக்குச் சென்றதும் -உள்ளே நுழையாமல் வெளியி லேயே மறைந்து நின்ற சஞ்சயன், உள்ளிருந்த மரக்கட் டிவில் சுரணையற்றுப் படுத்திருந்த மந்திரி மகளின் தலைமாட்டில் நின்றிருந்த மனிதனைக் கண்டதும் பெரும் வியப்புக்கும், அச்சத்துக்கும், ஏன் வெறுப்புக்குங்கூட இலக்கானான் என்றால், அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. குனிந்த தலையை நிமிர்த்திய அந்த மனிதனின் முகத்தின் மீது விளக்கு வெளிச்சம் விழுந்ததும், அவர் சேர மன்னனின் மதிப்புக்கும், அன்புக்கும் உரிய பெரும் புலவர் பரணர் என்பதைக் கண்ட சஞ்சயன், “மன்னரின் உப்ளபத் தின்ற இவருமா இந்தக் கொள்ளைக்காரனுடன் சேர்ந்திருக்கிறார்?” என்று தன்னுள் ஒரு வினாவையும் எழுப்பிக் கொண்டான்.

கொள்ளைக்காரன் வீட்டிலிருந்த அந்த சமயத்திலும் பரணர் எந்த மாற்றுடையோ, வேடத்தையோ தரிக்க வில்லை. மன்னர் கொலுவுக்குச் செல்லும்போது அணியும் அரசாங்க உடையையே அணிந்திருந்தார். இமயத்தில் இலச்சினை பொறித்த செங்குட்டுவன் காசியிலிருந்து கொணர்ந்த பெரும் சரிகையுடைய சரிகையுடைய காசிப்பட்டு பெரி அவர் தலையில் முண்டாசாகச் சுற்றப்பட்டு பார்ப்பதற்கு மன்னர்களின் கிரீடம் போலவே காணப் பட்டது. அந்தச் சரிகை வட்டாவுக்குக் கீழே விரிந்த புலவரின் வயோதிகத்திலும் அழகு வாய்ந்த சீரிய நுதலின் குறுக்கே பட்டை தீட்டப்பட்ட முப்புரி சந்தனக் கீற்றுகளும், இடையே பெரிதாக வைக்கப் ட்ட கன்னிகோயில் குங்குமமும், அவரது வதனகம்பீரத்தைச் சற்று எடுப்பாகவே காட்டின. அதிகமாகவே வளையா விட்டாலும் இரண்டொரு நரைகள் மட்டும் காணப்பட்ட நீண்ட புருவங்களும், கீழேயிருந்த அகன்ற பெரிய கண்களும், புருவங்களைச் சுளித்தபோது சந்தனக் வெட்டி குறுக்கே விழுந்த திரைக்கோடுகள் கோடுகளை இரண்டும் அவர் சீரிய சிந்தனைக்கு அத்தாட்சியாக விளங் கின. அவர் செவ்விய பரந்த உதடுகளும், அகன்ற வாயும் இரைந்து கவிபாடவே ஏற்பட்டன போல் தெரிந்தன கைதேர்ந்த இயற்கை சிற்பியால் நன்றாக வழித்து விடப் பட்ட முகம் விளக்கொளியில் சிவப்பழமென ஜொலித்தது. இத்தனைக்கும் அந்த முகத்தில் சந்துஷ்டியை அடி யோடு காணோம். துன்பத்தின் சாயையே அதிகமாகப் படர்ந்திருந்தது.

நீண்ட நேரம் நிலக்கள்ளியை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்ற பரணர், மெல்லத் தலைநிமிர்ந்து கடல் வேந்தன் மீது தமது கண்களை நாட்டி, “வேந்தா! இம் முறை நீ அத்து மீறி விட்டாய்” என்று சொன்னார் கடுமையான குரலில்.

கடல் வேந்தனும் தலைநிமிர்ந்து பரணரை நோக்கினான். “வேறு வழி ஏதுமில்லையே தந்தையே!” என்று சொல்லவும் செய்தான்.

பரணர் கடல் வேந்தனை சற்றுக் கடுமையாகவே பார்த்தார். “நிலக்கள்ளியைத் தூக்கி வந்ததைப் பற்றி உன்னைக் குறை கூறவில்லை” என்று சொற்களிலும் கடுமையைக் காட்டினார் கவி.

வெளியே மறைவில் நின்றிருந்த சேர தூதுவன் சஞ்சயன் “பெண்களைத் தூக்க ஆள் வைத்திருக்கிறாரா புலவர்?” என்று உள்ளூரச் சீறினான். “இந்தப் புலவரை எதற்காக மதிக்கிறார் மன்னர்?” என்றும் தன்னைக் கேட்டுக் கொண்டான்.

அப்படி அவன் சுய விசாரணை செய்து கொண்டிருக்கையில் அவனுக்கு அழைப்பு வந்தது புலவரிடமிருந்து.

“சஞ்சயா! இங்கு எந்த ரகசியமும் கிடையாது. உள்ளே தைரியமாக வரலாம்” என்று புலவர் அழைத்தார்.

சஞ்சயன் தனது மறைவிடத்திலிருந்து அறைக்குள் சென்று, “புலவரே!” என்று சீற்றத்துடன் அழைத்தான். “என்ன சஞ்சயா?” என்று ஏதும் நடக்காதது போல் வினவினார் பரணர்.

சஞ்சயன் உஷ்ணமாக விழிகளை பரணர் மீது நிலைக்க விட்டான். “தங்களை….” என்று ஏதோ சொல்ல முயன்றான்

“சிறை செய்யத் துடிக்கிறாய்” என்று பரணரே வாசகத்தை முடித்தார்.

சஞ்சயன் குழம்பினான். “தாங்கள்…” என்று மீண்டும் தொடங்கவே “ராஜத் துரோகியென்று முடிவுகட்டியிருக்கிறாய்” என்று அவனது இரண்டாவது எண்ணத்துக்கும் சொற்களால் உருக்கொடுத்தார் புலவர்.

தான் நினைத்ததையெல்லாம் முன்கூட்டியே சொன்ன பரணருக்கு எந்த பதிலையும் சொல்ல முடியாத சஞ்சயன் “பரணரே! இன்று நீங்கள் கடல் வேந்தன் உடனிருக்கும் தைரியத்தில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்: ஆனால் தனித்து நாம் சந்திக்கும் நேரமும்வரும்” என்று சொற்களில் வேகத்தைக் காட்டினான்.

பரணரின் பெருத்த உதடுகளில் புன்முறுவல் தவழ்ந்தது. “தனியாக. யாராவது அகப்பட்டுக் கொண்டாலன்றி, உன்னால் எதுவும் செய்யமுடியாது” என்றார் புன்முறுவலின் ஊடே.

“யார் சொன்னது அப்படி?” என்று முதலில் சொன்னதை மறந்து பேசினான் சஞ்சயன்.

“நீதானே சொன்னாய்” என்ற பரணர், “அதுவும் உன்னால் முடியாது சஞ்சயா! இந்த கடல் வேந்தன் மந்திரி மாளிகைக்குத் தனியாகத்தானே வந்தான். அவனை ஏன் பிடிக்கவில்லை?” என்றும் கேட்டார்.

சஞ்சயன் அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தான். பரணரே பேசினார். ”சஞ்சயா! கடல் வேந்தனைப் போன்ற வீரனைக் கண்டால் நடுங்குகிறாய். என்னைப் போல் ஆயுதமற்ற புலவர்கள் தனியாக சிக்கிக் கொண் டால் பிய்த்துவிடுவதாக மார் தட்டுகிறாய். சஞ்சயா! வீரர்களின் முறையல்ல இது” என்று.

அடுத்து அவர் சஞ்சயனை கவனிக்கவில்லை. மரக்கட்டி லில் கிடந்த நிலக்கள்ளியைக் கவனித்தார். “வேந்தா! அவளை முகர வைத்த துணியில் மயக்கப் பச்சிலை ரசத்தில் எத்தனை துளிகளைத் தெளித்திருந்தாய்?” என்று வினவினார்.

“பத்துத் துளிகள்” என்றான் கடல்வேந்தன்.

“சிறிது அதிகம். நான்கு துளிகளுக்கு மேல் ஊற்றி யிருக்கக் கூடாது” என்றார் பரணர்.

*அங்கு போய் ஊற்றவில்லை, இங்கிருந்தே ஊற்றிச் சென்றேன். கச்சையில் திணித்தாலும் காற்றில் சில துளிகள் போய்விடுமென நினைத்தேன்” என்று சமாதானம் சொன்னான் கடல் வேந்தன்.

“அந்தப் பச்சிலைத் துளிகள் சீக்கிரத்தில் துணியி லிருந்து விலகாது. சரி அதனால் பாதகமில்லை” என்ற பரணர் “இவள் விழிக்க இன்னும் இரண்டு ஜாமம் பிடிக் கும். அதாவது காலையில்தான் விழிப்பாள்” என்று கூறி
“அதுவரை இவளை யாராவது பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றும் சொன்னார்.

“நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் அழும்பில் வேள்.

பரணர் சிறிது சிந்தித்தார். “உங்களால் முடியாது அமைச்சரே! இவளுக்கு இப்பொழுது உடனடியாக சிறிது பால் புகட்ட வேண்டும். அடுத்து அரை ஜாமத்துக்கு ஒரு முறையாக இருமுறை நான் கொடுக்கும் மாற்று திரவத்தில் மும்மூன்று துளிகளை இவள் நாக்கில் தடவ வேண்டும். குழந்தையை மிக ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும். கடல் வேந்தன் செய்த தவறை அவன்தான் தவிர்க்க வேண்டும். அவன் கவனிப்பான் உமது மகளை அஞ்சவேண்டாம். காலையில் முன்னைவிட அதிக பலத் துடன் இவள் எழுந்திருப்பாள்” என்று தமது கருத்தைப் பட்டவர்த்தனமாகத் தெரிவித்தார்.

சேரனின் வருமானத்துறை அமைச்சரும், சேர தூது வனும் அதற்கு சம்மதிக்கவில்லை. “கடல் வேந்தன் வாலிபன், அவளும் வயது வந்த பெண்” என்று சூசகமாகக் குறிப்பிட்டார் அமைச்சர்.

“தவிர கொள்ளைக்காரன்” என்றான் சஞ்சயன்.

“இருப்பினும் நெறி தவறாதவன்’” என்று சஞ்சயனைக் கடிந்துகொண்ட புலவர் பரணர், “அமைச்சரே! கடல் வேந்தனைப் பற்றி கவலை வேண்டாம். கண்களை இமை காப்பது போல் உமது மகளைக் காப்பான். கடல்வேந்தன் கொள்ளைக்காரனென்று பிரசித்தி உண்டு. ஆனால் அவன் பெண்களைப் பிடித்ததாகவோ, கெடுத்தாகவோ பெயர் கிடையாது. கடம்பரிடமிருந்தும், யவனர்களிடமிருந்தும் பொகளைக் காத்ததாகத்தான் பெயர் இருக்கிறது. ஆகையால் அவனிடம் உமது மகளை விட்டுச் செல் லுங்கள். அவள் நலனுக்கு நான் பொறுப்பாளி” என்றார்.

அமைச்சர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார். “இருவர் பருவமும்….” என்று சுட்டிக் காட்டினார். “பருவத்திலிருப்பவரெல்லாம் கெடுவதில்லை. பருவம் ஏறியவர்களெல்லாம் தூய்மையாக இருப்பதுமில்லை. நெறி அநேகமாகப் பிறவியில் விளைகிறது” என்றார் பரணர்.

“இவன் பிறவி எப்படியோ?” என்று அமைச்சர் கேட்டார்.

“இந்த நாட்டில் உயர்ந்த பிறவி இவன்தான்” பரணர் சொற்களில் திடமிருந்தது.

“வியப்பாயிருக்கிறது புலவரே! இவன் தொழிலுக்கும் நெறிக்கும் சம்பந்தமில்லையே!” அமைச்சர் கேள்வியிலும் உறுதியிருந்தது.

பரணர் முகம் சுளித்தார். “சந்தேகமிருந்தால் நாளை மன்னரையே கேட்டுப் பாரும்” என்றார்.

அதுவரை ஏதும் ஏதும் பேசாமல் நின்று கொண்டிருந்த கடல்வேந்தன் தனது முகத்தை அமைச்சரையும் சஞ்சயனையும் நோக்கித் திருப்பினான். சுடும் கண்களைக் கண்ட அமைச்சர் அஞ்சவில்லையானாலும் சஞ்சயன் கால் சிறிது ஆட்டம் கண்டது. “அமைச்சரே! புலவர் பெருமாள் சொன்னதெல்லாம் உங்கள் மகளின் தனமைபைப் பொறுத்தது. ஆகையால் உடனடியாக உங்கள் மாளிகைக்கு திரும்பிச் செல்லுங்கள். வீணாகக் காலம் கடத்தாதீர்கள்'” எனறு கூறிவிட்டு, “யாரங்கே?” என்று குரல் கொடுத்தான்

அடுத்த விநாடி எதிர் அறை திறக்கப்பட்டு ஒரு மூதாட்டி சிறிய மண்குவளையுடன் வெளியே வந்து கடல் வேந்தன் அறைக்குள் நுழைந்தாள். “பால் இதோ இருக்கிறது” என்று குவளையை நீட்டினாள்.

குவளையைக் கையில் வாங்கிக் கொண்ட கடல் வேந்தன் கட்டிலில் படுத்திருந்த அஞ்சுகத்தின் செம்பருத்தி இதழ்களைத் தனது விரல்களால் மெதுவாகத் திறந்து குவளையிலிருந்த பாலை மெதுவாகப் புகட்டினான். அவள் சிறிது சிரமப்பட்டே இரண்டு வாய் பாலை விழுங்கினாள். குவளையை மீண்டும் மூதாட்டியிடம் நீட்டிய கடல்வேந்தன் “இன்னும் அரைஜாமம் கழித்து பால் கொணர்ந்தால் போதும்” என்றான்

அந்த இல்லத்தில் மூதாட்டியும் ஒருத்தி இருக்கிறா கண்ட அமைச்சருக்கு சிறிது தைரியமும், ளென்பதைக் நம்பிக்கையும் வந்ததால் கடல் வேந்தனிடம் ஓரளவு அவர் அமைதிப்பெருமூச்சு விட்டார். ஆனால் அடுத்துஅவன் இட்ட உத்தரவு அவரை அசர வைத்தது. “அமைச்சரே! சஞ்சயனை அழைத்துக் கொண்டு மாளிகைக்குச் செல் லுங்கள். நாளை இரவு உமது மகள் உம்மிடம் வந்து சேரு வாள்” என்று கூறிவிட்டு, கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான்.

“சரியாக வருவாளென்பதற்கு யார் உத்தரவாதம்?’ என்று கேட்டார் அமைச்சர்.

”கடல்வேந்தன் சொல்” என்றார் பரணர்.

“அது என்ன அவ்வளவு உறுதியானதா?” என்று கேட்டார் அமைச்சர்.

”இந்தச் சேர நாடே அவன் சொல்லை நம்புகிறது” என்றார் பரணர்.

அமைச்சர் நிதானத்தை இழந்தார். “உமக்கும் கடல் வேந்தனுக்கும் என்ன அப்படி நெருக்கமான உறவு?” என்றி கோபத்துடன் இரைந்தார்.

பரணர் கோபிக்கவில்லை. மிகுந்த நிதானத்துடன் அமைச்சருக்கு அதிர்ச்சி தரும் பதிலைச் சொன்னார்.

“அவன் என் மகன்” என்றார் பரணர்.

அமைச்சர் சிலையென நின்றார்.

5. அழைத்த இதழ்கள்…

கொள்ளைக்காரனான கடல் வேந்தனை, தமது மான் என்று சேரனின் அரசவைப் புலவரான பரணர் உறவு கொண்டாடியது அமைச்சர் அழும்பில்வேளுக்கு அதிர்ச்சி யைத் தந்ததா, வியப்பைத் தந்ததா, அவநம்பிக்கையைத் தந்ததா என்று நிர்ணயிக்க முடியாத நிலை அவர் முகத்தில் பரவி நின்றதால், அவர் உணர்ச்சிகளை மீட்க பரணரே மீண்டும் பேசத் தொடங்கி, “இச் செய்தி உமக்குப் புதிதாயிருக்கலாம், ஆனால் வஞ்சிமாநகர்வாசிகளுக்குப் புதிதல்ல. என்றார்.

அமைச்சர் அழும்பில்வேள் பரணரை உற்றுநோக்கி, “புலவரே! உமக்குக் குழந்தை ஏதும் கிடையாது என்றுதான் எனக்குக் கேள்வி” என்றார் பதிலுக்கு.

“ஆம்! எனக்குக் குழந்தை ஏதும் பிறக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் குழந்தையைப் பெற்றுத்தான் அடைய வேண்டுமென்ற நியதி இல்லை” என்றார் பரணர் தமது பெரிய சரிகை முண்டாசு தாங்கிய தலையை அசைத்து,

“தத்து எடுத்த பிள்ளையா? அப்படி சுவீகாரம் ஏதும் புலவர் இல்லத்தில் நடந்ததாகக் கேள்வியில்லையே” என்று அமைச்சர் மீண்டும் சந்தேகக் குரலில் கேட்டார்.

“பிள்ளையைத் தத்து எடுத்துத்தான் பெற வேண்டும். என்ற நியதியும் கிடையாது” என்று பரணர் உறுதியாகப் பேசினார்.

அரும்பில்வேள் முகத்தில் சந்தேகத்தின் சாயை பூர்ணமாக நிலவியது. புலவர் தம்மை ஏமாற்ற ஏதோ பேசுகிறார். ஏதோ முக்கிய விஷயத்தை மறைக்கப் பார்க்கிறார் என்று நினைத்த அழும்பில்வேள், “மகனைப் பெற வேறு வழியும் இருக்கிறதா புலவரே?” என்று வினவினார், குரலில் சந்தேகம் அதிகமாக ஒலிக்க.

“இருக்கிறது” புலவர் பதில் திட்டமாக இருந்தது. “அந்த வழியை நான் அறியலாமா?” என்று அமைச்சர் கேட்டார்.

”ஆகா! தாராளமாக அறியலாம்” என்ற பரணர் “பிள்ளையை தானம் வாங்கலாம்” என்று அறிவித்தார்.

அழும்பில்வேளின் முகத்தில் பிரமை அதிகமாகத் தட்டியது. “என்ன என்ன? பிள்ளை தானமா?” என்று வினவினார் அமைச்சர்.

“ஆம்! இவனை தானம் வாங்கினேன். ஆனால் பெற்றிருந்தால்கூட இத்தனை அருமையான பிள்ளை எனக்குக் கிடைத்திருக்காது’ என்ற பரணர், “அமைச்சரே! சம்ஸ்கிருதத்தில் யாரைப் பாராட்டலாம், யாரைப் பாராட்டக் கூடாது என்பதற்கு சுலோகம் இருக்கிறது. ‘நஸ்வ புத்ர சுதாசன” என்று சொல்லுகிறது சுலோகம். அதாவது தனது மகனை தந்தை எப்பொழுதும் பாராட்டக்கூடாது என்பது அந்த வாக்கியத்தின் பொருள்” என்ற பரணர் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.

“அதனால் தான் கடல்வேந்தனை நீர் அதிகமாகப் பாராட்டவில்லை?” அமைச்சர் கேள்வியில் வெறுப்பு இருந்தது.

“ஆம்!”

“இல்லையேல் இன்னும் அதிகம் சொல்லியிருப்பீர்!”

“ஆம். சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது”

“நிரம்ப இருக்கிறதோ?”

“இருக்கிறது.”

“கொள்ளை உள்படவா?” இகழ்ச்சியுடன் கேட்டார் அமைச்சர்.

பரணர் இதற்கு பதில்சொல்லவில்லை. ஏதோ சிந்தனையில் இறங்கினார். பதில் கடல்வேந்தனிடமிருந்தே வந்தது. “அழும்பில்வேள்! என்னைப் பற்றி நீங்களிருவரும் பேசுவது எனக்குச் சங்கடமாயிருக்கிறது. நீர் என்னைப் பற்றி எந்தக் கருத்தை வைத்திருந்தாலும் சுவலையில்லை. உடனடி யாகச் சஞ்சயனுடன் உமது மாளிகைக்குக் கிளம்பும்” என்று கடுமையான குரலில் சொன்னான். பிறகு பரணரை நோக்கி, “தந்தையே!. நீங்களும் செல்லலாம்” என்றான். அதில் உத்தரவின் தோரணை இருந்தாலும் பணிவும் கலந்திருந்தது.

அழும்பில்வேள் நன்றாக நிமிர்ந்து நின்றார். “கடல் வேந்தனே! உன்னுடன் பருவ மங்கையான என் மகளை விட்டுப் போக முடியாது” என்றார் கம்பீரமான குரலில்.

“முடியாது” சஞ்சயனும் மந்திரிக்குத் தாளம் போட்டான்.

கடல்வேந்தன் சொன்னான்: “மூன்றாவது ஜாமம் நெருங்குகிறது. இன்னும் இங்கிருந்தால் கொஞ்ச நேரம் உங்களை நான்கூட காப்பாற்ற முடியாது” என்றான்.

“ஏன்?” என்று அமைச்சர் கேட்டார்.

“என் மாலுமிகள் வந்து விடுவார்கள்” என்று குறிப்பிட்டான் கடல்வேந்தன்.

“அப்படியானால் என் மகள் மட்டும் எப்படி உன் கொள்ளைக்…. இல்லை மாலுமிகளிடமிருந்து தப்புவாள்?” என்று வினவினார் அமைச்சர், சற்று தடுமாற்றத்துடன்.

கடல்வேந்தன் கட்டிலில் கிடந்த அழகுச் சிலையையும் பார்த்து மந்திரியையும் பார்த்தான். “அவளைக் காக்க என் கரம் இருக்கிறது” என்று சொன்னான் முடிவாக.

அமைச்சர் வெகுண்டார். “அந்தக் கரம் எங்களைக் காக்காதா?” என்று கேட்டார்.

“காக்க அவசியமில்லை’ என்று கடல்வேந்தன் மற்ற மூவரையும் செல்லும்படிச் சைகை காட்டினான்.

பரணரே முதலில் கிளம்பினார். கிளம்பு முன்பு சொன்னார் “மகனே! நான் சொன்னது நினைவிலிருக்கட்டும். இன்னும் ஒருமுறை மருந்து, ஒருமுறை பால் புகட்ட வேண்டும்” என்று கூறி கிளம்ப முற்பட்டார்.

*’கவலை வேண்டாம் தந்தையே! நிலக்கள்ளி நாளைக் காலையில் புத்துயிரும் புதுத் தெம்பும் பெற்று எழுந்திருப்பாள்” என்று கடல்வேந்தன் சொன்னதும் பரணர் கிளம்பிச் சென்றார்.

ஆனால் அமைச்சர் மட்டும் இடித்த புளியைப் போல் நின்றார். சஞ்சயனும் இருந்த இடத்தைவிட்டு அகலவில்லை. பரணர் சென்ற பிறகு அவர்களைத் திரும்பிப் பார்க்கவும் முயலவில்லை. கடல்வேந்தன், கட்டிலில் கிடந் கட்டழகியை உற்றுப் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந் தான், அந்த வாலிப கொள்ளைக்காரன், அமைச்சருக்கும் சஞ்சயனுக்கும் அவன் முதுகுப் புறத்தைக் காட்டி உட் சார்ந்திருந்ததால், அவன் முதுகின் திடமும் ஒல்லியான சரீரப் பகுதி உருவிவிடப்பட்ட சாட்டையைப் போல் காட்சியளித்ததையும், நிலக்கள்ளியை கவனித்த அவன் சிறிதும் குனியாமல் நெட்டுத் குத்தாகவே உட்கார்ந்திருந் ததையும் கவனித்த அமைச்சர் அழும்பில்வேள். மிக பலசாலியும் உறுதியுமுள்ள ஒரு மனிதன் தன் பின்புறத்தில் நிற்பதைப் புரிந்து கொண்டார். அடுத்து தமது மாளிகை யில் நடந்த நிகழ்ச்சிகளின் விவரங்களையும் எண்ணிப் பார்த்து ‘பலமும் உறுதியும் மட்டுமல்ல, கூர்மையான அறிவையும் உடைய கடல்வேந்தன் எதையும் சாதிக்க வல்லவன்’ என்று உள்ளூரச் சொல்லிக்கொண்டார்.

அமைச்சர் மாளிகை உப்பரிகைக்கூடத்தில் விளக்கை ஊதியவுடன் எதிரேயிருந்த நிலக்கள்ளியை அணுகி அவளது மூக்கில் ஏதோ ஒரு சிறு துணியை அழுத்தி அவளைச் சிறு குழந்தைபோல் தூக்கி கடல் வேந்தன் தோளில் போட்டுக் கொண்டதையும், ஒரு கையால் அவள் உடலைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் தமது உடலில் குறு வாளை அழுத்தி பேசாமல் தொடரும்படி கூறியதையும் நினைத்துப் பார்த்தார். தமது காவலர் யாரும் அவனைத் தடுக்காததும் அவருக்குப் பெருவியப்பாயிருந்தது, இப்படி அமானுஷ்யமான வேலைகளைச் செய்யக் கூடியவனைப் பகைத்துக் கொள்வது உசிதமல்லவென்று நினைத்தாரா னாலும் மகளை அவனுடன் விட்டுச் செல்வதற்கு அவருக்கு மனம் வராததால் நின்ற இடத்திலேயே நின்றார்.

விநாடிகள் ஓடின. கடல்வேந்தன் ஒருமுறை கூட பின்னால் நின்ற இருவரையும் திரும்பிப் பார்க்கவில்லை. சென்றதும் மூதாட்டி திரும்பவும் பால் அரை ஜாமம் கொண்டு வந்தாள். மீண்டும் தனது கச்சையிலிருந்து பரணர் கொடுத்த மாற்று மருந்துத் துளிகளை நிலக்கள்ளி யின் வாயைத் திறந்து நாக்கில் தடவினான் வேந்தன் வலுக்கட்டாயமாகப் பிறகு பாலையும் புகட்டினான். அப்படிப் புகட்டியபோது அவள் கன்னங்களில் சிறிது பால் வழிந்திருந்ததால், தனது அங்கியின் நுனியால் துடைத்தான்.

கட்டிலில் கிடந்த கட்டழகியின் எழில் வதனத்தில் வியர்வைத்துளிகள் அரும்பின. மூதாட்டியை ஒரு துணியைக் கொண்டு வரச்சொல்லி முகவியர்வையையும் துடைத்தான் அடுத்த அறையின் சாளரங்களைத் திறந்து விட்டு சுள்ளியாற்றின் காற்று நிலக்கள்ளியின் அழகிய மேனியில் படும்படி செய்தான். அத்துடன் மூதாட்டியை விளித்து “அம்மா ! ஒரு விசிறி கொண்டு வா” என்றான். அவள் கொணர்ந்த விசிறியால் அவள் முகத்தில் லேசாக விசிறவும் செய்தான்.

“நான் விசிறட்டுமா?” என்று கேட்டுக் கொண்டு முன்னே அடிவைத்தார் அமைச்சர்.

கடல்வேந்தன் பதிலேதும் சொல்லவில்லை. ஆனால் எதையோ உற்றுக் கேட்டான். அவன் உற்றுக்கேட்டதை அமைச்சரும் கேட்டார் ஆற்றங்கரையில் பலர் தட தட வென படகுகளிலிருந்து இறங்கும் ஒலிகள் கேட்டன. பிறகு பூர்ண குடியுடன் பலர் பாடுவதும் இரைச்சல் போடும் சத்தமும் கேட்டன. அமைச்சர் உள்ளூர நடுக்கம் கொண் டார். சஞ்சயனுக்குப் பிராணனே போய்விடும் போல் இருந்தது. அந்த ஒலிகள் வரவர தாங்களிருந்த இல்லத்தை நோக்கி வருவதையும் உணர்ந்த அமைச்சர், தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டதை உணர்ந்தார்.

அதுவரை வாளாவிருந்த கடல் வேந்தன் மூதாட்டியை நோக்கி “அம்மா! இவர்களிருவரையும் ஓர் அறையில் வைத்துப்பூட்டிவிடு. இந்தக் கதவை சாத்திவிடு. மாலுமிகள் வந்தால் நான் களைத்து உறங்குவதாகவும் யாரும் என்னை எழுப்பக்கூடாதென்று உத்தரவென்றும் சொல்லிவிடு என்று கூறினான்.

மூதாட்டி வெளியே சென்று இரு காவலருடன் திரும்பி வந்தாள். “நீங்களிருவரும் இவர்க இவர்களுடன் செல்லுங்கள், உங்களுக்கு எந்தத் தீங்கும் வராது” என்றும் உத்தரவிடும் தோரணையில் கூறினாள்.

அமைச்சர் சஞ்சயனைப் பார்க்க சஞ்சயன் அமைச்சரைப் பார்த்தான். அவ்விருவரையும் பார்த்த மூதாட்டி “நிலைமை மீறுமுன் போய்விடுங்கள். மாலுமிகள் உங்களை வெட்டிப் போடு முன் தப்புங்கள்” என்றாள் சற்று கடுமை யாக. அமைச்சரும் சஞ்சயனும் காவலரைப் பின் தொடர அந்த அறைக்குப் பின்னாலிருந்த உள்ளறையில் அடைக்கப்பட்டனர். அந்த அறை சிறியதாயிருந்தாலும் அங்கிருந்து அடுத்த அறையை கவனிக்கக் கதவில் ஒரு துவாரம் இருந்ததைக் கவனித்த அமைச்சர் சிறிது ஆறுதலடைந்து அந்த துவாரத்தின் மூலம் அடுத்த அறையை கவனிக்கலானார்.

ஆனால் அவர் கண்ட காட்சி அவர் திகிலைக் குறைக்க வில்லை. அதிகப்படுத்தவே செய்தது. மூதாட்டி கொடுத்த துணியால் கடல்வேந்தன் நிலக்கள்ளியின் முகத்தை இரு முறை துடைத்தான். பிறகு கழுத்தையும் அடுத்து அவள் மேலாடையை நீக்கி, மார்பையும் துடைத்தான் அமைச்சருக்குப் பிராணனே போய்விடும் போலிருந்தது. ஆனால் அடுத்து கடல்வேந்தன் அவள் மார்பின் மீது பழையபடி. சேலையைப் பக்குவமாக மூடினான். கடைசியாக எழுந்து அறை வாயிற் படியிலிருந்து சுள்ளியாற்றங்கரையை நோக்கினான். பிறகு கதவைத் தாளிட்டுவிட்டு மீண்டும் கட்டிலின் பக்கத்தில் உட்கார்ந்து நிலக்கள்ளியின் அழகைப் பருகலானான். அவள் மூச்சில் இருந்த பழைய வேகம் மறைந்து விட்டதால் மூச்சு ஒரே சீராக வந்து கொண்டிருந்தது. அதனால் அவன் எழில் மார்பின் இரு மொட்டுகளின் முனைகளும் ஒரே சீராக எழுந்து தாழ்ந்து கொண்டிருந்தன. அப்பொழுது வந்த சுள்ளியாற்றின் பெருங்காற்று ஒன்று நிலக்கள்ளியின் மேல் சீலையை சற்றே விலக்க மொட்டுகளிரண்டும் கடல்வேந்தன் கண்களைக் குத்துவது போல் எழுந்தன. பிறகு இன்னொரு முறை வீசிய அதே காற்று அவள் மார்பை மூடியது. “சுள்ளியாறே! தாயே! உன் மகளைக் காக்க நீ இருக்கும் து. போது இவள் தந்தை ஏன் மன்றாடுகிறார்?” என்று சற்று உரக்கவே கேட்டான் கடல்வேந்தன், அமைச்சர் காதில் படும்படியாக.

பிறகு நிலக்கள்ளியின் முகத்தை உற்று நோக்கினான். சுரணை மெல்ல வந்து கொண்டிருந்ததால் நிலக்கள்ளி தனது செம்பருத்தி இதழ்களைச் சிறிது மடித்தாள். அதைத் விரல்களால் பிரித்த கடல்வேந்தன், சற்றே குனிந்தான் அவற்றை நோக்கி. அப்போது மெல்ல சுண்களைத் திறந்த நிலக்கள்ளி, லேசாகப் புன்முறுவல் செய்தாள் கடல்வேந்தனை நோக்கி. பிறகு நடந்தது அமைச்சர் முற்றும் எதிர்பாராத நிகழ்ச்சி. அவர் மகள், எதுமறியாத பேதை என்று அவர் அதுவரை நினைத் திருந்த நிலக்கள்ளி தனது கைகளை உயரத் தூக்கி அவன் . கழுத்தை வளைத்தாள். தனது தலையையும் லேசாகத் தூக்கி “சுள்ளியாற்றுக் காற்று சுகமாயிருக்கிறது” என்றாள் தனது செவ்விய உதடுகளை விரித்து. அவள் உதடுகள் துடித்தன. லேசாக அசைந்தன. பாதி விரிந்தன. அத்தனையிலும் அழைப்பு இருந்தது, கடல்வேந்தனுக்கு.

– தொடரும்…

– கடல் வேந்தன் (சரித்திர நாவல்), முதற் பதிப்பு : டிசம்பர், 1984, பாரதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *