கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 3,946 
 
 

(1984ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

36 – 40 | 41 – 45 | 46 – 50

41. பறந்த வாள் 

குட்டுவன் கொடுத்த ஓலையைப் படித்ததும் பெரிதும் வெகுண்டு தன்னை நாடி வந்து தனது தோள்களைப் பிடித்துக் குலுக்கி “இப்பொழுது கடல்வேந்தன் எங்கே?” என்று கொந்தளித்த குரலில் விசாரித்த கிளேஸியஸைப் பார்த்த சஞ்சயன், ஓலையில் தனக்குப் புரியாத செய்தி ஏதோ இருக்கிறதென்பதைப் புரிந்து கொண்டான். ஆகவே உண்மையையே சொன்னான், “எனக்குத் தெரியாது” என்று. அந்தப் பதில் கிளேஸியஸுக்குத் திருப்தி யளிக்காததால், “அப்படியானால் தூக்கிலாடு” என்று சீறியதையும், அவன் கட்டளையை நிறைவேற்ற இரு யவனர்கள் தன்னை இழுத்துச் சென்றதையும் கவனித்த சஞ்சயன், “கிளேஸியஸ் பொறு பொறு” என்று பெரிதாகக் கூவினான். 

அதன் விளைவாக சஞ்சயனைத் திரும்ப அழைத்து வர யவனர்களுக்கு உத்தரவிட்ட கிளேஸியஸ், சஞ்சயன் தனக்கு எதிரே நிறுத்தப்பட்டதும் “சரி, இப்பொழுது உண்மையைச் சொல்” என்றான். 

சஞ்சயன் மெல்லத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “கிளேஸியஸ்! பெரும் பதவியை அடைந்திருக்கிறாய். தலைமைப் பதவியிலிருப்பவர்களுக்கு நிதானம் வேண்டும். கேள், உண்மையைச் சொல்கிறேன் இந்த ஒலையை எழுதியது கடல்வேந்தனல்ல” என்று தன்னைத் திடப்படுத்திக் கொண்டு சற்று உறுதியுடன் பேசினான்.

கிளேஸியஸின் முகத்தில் இகழ்ச்சிச் சாயை மலர்ந்தது. “சஞ்சயா! யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய்? இத்தனை நாள் கடல்வேந்தனுடன் பழகிய எனக்கு, அவர் கையெழுத்துத் தெரியாதென்று நினைக்கிறாயா?” என்று விலவினான். 

சஞ்சயன் முகத்தில் சிறிது சஞ்சலம் நிலவியது. “ஓலை யிலிருப்பது கடல்வேந்தன் கையெழுத்தைப் போலிருக்கலாம். ஆனால் ஓலை எழுதியது அவரில்லை” என்று சொன்னான் சஞ்சயன், சஞ்சலத்தை உதறிக்கொண்டு திடமான குரலில். 

கிளேஸியஸ் சஞ்சயனைச் சந்தேகப் பார்வையாகப் பார்த்தான். “வேறு யார் எழுதியது?” என்று விசாரித்தான் சந்தேகத்துடன். 

“குட்டுவன்” என்று தயக்கமின்றிப் பதில் சொன்னான் சஞ்சயன். 

நம்பிக்கையற்ற பார்வை கிளேஸியஸின் கண்களில் விரிந்தது. “யார்? அந்தப் புலவர் பிள்ளையா?” என்று கேட்டான், குரலிலும் சந்தேகம் ஒலிக்க. 

“ஆம்” சஞ்சயன் சளைக்காமல் பதில் சொன்னான்.

“அவன் எதற்காக எனக்கு இந்த ஓலை அனுப்புகிறான்?” கிளேஸியஸின் கேள்வியில் வியப்பு இருந்தது.

“அவர்தான் இப்பொழுது முசிறி தரைப்படையின் தலைவர். சஞ்சயன் குரலில் மரியாதை நிரம்பி வழிந்தது.

“என்னது!” கிளேஸியஸின் குரலில் நம்பிக்கை என்ற அம்சம் லவலேசமும் இல்லை. 

“ஆம். அவர்தான் தலைவர்.” 

“அந்தக் கோழையா?’ 

“இப்பொழுது கோழையல்ல” 

“திடீரென்று துணிவு எப்படி வரும்?’

“அசட்டுத் துணிச்சல் யாருக்கும் வரலாம்” 

“ஆம் ஆம். வரலாம் வரலாம்'” என்று சொன்ன கிளேஸியஸ், “இவனை யார் தலைவராக நியமித்தது? அமைச்சரா?” என்று கேட்டான். 

“இல்லை, அரசரே நியமித்திருக்கிறார்” என்று சொன்னான். 

சேர மன்னனை நன்றாக அறிந்திருந்த கிளேஸியஸ், “ஒருகாலும் மன்னர் இந்தப் பைத்தியத்தை நியமித்திருக்க மாட்டார்” என்றான். 

”ஓலையை நானே பார்த்தேன்” சஞ்சயன் திட்டமாகச் சொன்னான்.

“கையெழுத்து மன்னருடையதுதானா?” 

”கிளேஸியஸ்! உங்களுக்கு வர வர கையெழுத்து சந்தேகம் வருகிறது. காரணம் எனக்குப் புரியவில்லை. ஆனால், கையெழுத்து மன்னருடையதுதான்” என்றான் சஞ்சயன். 

கிளேஸியஸ் அதிகமாகக் குழம்பினான். மன்னர் இப்படியொரு காரியத்தைச் செய்திருப்பாரென்று அவனால் முடியவில்லை. இதில் ஏதோ பெரும் புரட்டு இருக்கிற தென்பதைப் புரிந்து கொண்டான் கிளேஸியஸ், ஆகவே இதைப் பற்றி அறிய மறுபடியும் பேச்சுக் கொடுக்கத் தொடங்கி, “குட்டுவன் எப்பொழுது பதவி ஏற்றான்” என்று வினவினான். 

“நேற்று. உடனடியாக உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் செய்தார் குட்டுவர்” என்று பதில் சொன்னான் சஞ்சயன். 

“என்ன உத்தரவுகளோ?” 

“முதலில் உமக்கு ஓலை கொடுத்தார். அடுத்து தரைப் படையில் ஒரு பகுதியை வஞ்சிநகர்ப் பாதைப் பாசறைக்கு அனுப்பிவிட்டார்.” 

இதைக் கேட்ட கிளேஸியஸின் கண்களில் விவரிக்க  இயலாத ஒரு விபரீத ஒளி பிறந்தது. “என்ன! என்ன! இன்னொருமுறை சொல்லும்” என்று அவசரமாகக் கேட்டான். 

”முசிறி தரைப் படையின் ஒரு பகுதி வஞ்சிநகர்ப் பாதைப் பாசறைக்கு அனுப்பப்பட்டுவிட்டது” என்று சஞ்சயன் மீண்டும் சொன்னான். 

“ஏன்?” என்று கேட்டான் கிளேஸியஸ். 

“காரணம் தெரியாது. நடந்தது அதுதான். ஆனால், குட்டுவர் யவனர்களைச் சமாளிக்க மூவாயிரம் பேருக்கு மேல் தேவையில்லை என்று அபிப்பிராயப்படுகிறார்” என்று விளக்கினான் சஞ்சயன். 

கிளேஸியஸின் முகத்தில் கவலை படர்ந்தது. “ஆமாம். யவனர் இப்பொழுது என்ன செய்து விட்டார்கள், அவர்களைச் சமாளிக்க?” என்று வினவினான் கவலை குரலிலும் தெரிய. 

சஞ்சயன் கிளேஸியஸின் தந்திரத்தை உணர்ந்தே யிருந்ததால் அவனிடமிருந்தே விஷயத்தை வரவழைக்க “யவனர் புரட்சி செய்யப்போவதாகக் கேள்வி” என்றான். 

கிளேஸியஸின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது “யார் சொன்னது?” என்று கேட்டான் அதிர்ச்சி குரலில் தெரிய.

“குட்டுவ மகாப் பிரபு” என்றான் சஞ்சயன் வேண்டு மென்றே. 

“அவர் மகாப் பிரபுவாகி விட்டாரா?” 

“ஆம்!”

“சரி புரட்சிக்கு யார் தலைவனாம்?” 

“நீங்கள் தான் என்று சொல்லி இந்த ஓலையை என்னிடம் கொடுத்தார்.”

கிளேஸியஸ் தனது ஆசனத்திலிருந்து எழுந்து ‘உம், உம்’ என்று உறுமினான் “சஞ்சயரே! இது சுத்தப்பொய்” என்று கூறினான். 

“பொய்யாயிருந்தால் நல்லதுதான்” என்றான் சஞ்சயன். 

”எனக்கு வாழ்வு கொடுத்தவரே சேர மன்னர் செங்குட்டுவர்தான். அவருக்கு எதிராக நான் புரட்சி செய்வேனா?” என்று கேட்டான் கிளேஸியஸ். 

“மாட்டீர், யவனர் தலைவரே!” என்றான் சஞ்சயன். 

 “இன்னொரு முறை என்னைத் தலைவரே என்று கூப்பிட்டால் உமது பல்லை உடைத்து விடுவேன்” என்று சீறினான் கிளேஸியன். 

“பல் போனால் பாதகமில்லை. முன் தடவை போல் என்னைப் படுக்க வைத்துக் கூரையில் எனக்கு நேரே வாளைக் கட்டாதிருந்தால் சரிதான்” என்றான் சஞ்சயன்.

”ஓ அதுவா!” என்று கேட்டு கிளேஸியஸ் நகைத்தான்.

“அதேதான்” 

“அது இன்னும் நினைவிருக்கிறதா?” 

“எப்படி மறக்க முடியும்? அப்பொழுது உமக்குக் தான் பார்வை கூடச் சரியில்லை?” 

“எனக்குப் பார்வை சரியில்லையா?” 

“ஆமாம். என்னை யாரென்று தெரியாதென்று சொன்னீர்.”

கிளேஸியஸ் நகைத்து, “அது ஒரு நாடகம். ஆனால் நீர்தான் தப்பிவிட்டீரே” என்றான். 

“ஆம்.” என்றான் சஞ்சயன். 

“இப்பொழுது தப்ப அவசியமில்லை.”

“ஏன்?” 

“உம்மை நான் சிறை செய்யப் போவதில்லை,”

“ஏன்? ஒரு வழியாக…” 

“….கொல்லவும் போவதில்லை.”

“வேறு என்ன செய்ய உத்தேசம்?” 

“உம்மை எனது தூதனாக்கிக் கொள்கிறேன். நான் ஒரு பதில் ஓலை தருகிறேன். அதைக் குட்டுவனிடம் கொடுத்து விடும்” என்றான் கிளேஸியஸ். 

“ஆகா அப்படியே” என்றான் சஞ்சயன் தனக்கும் ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கிறதென்பதை உணர்ந்து கொண்டான். 

அந்த இடத்திலிருந்தபடியே கிளேஸியஸ் ஓலையை எழுதி “இதைக் குட்டுவனிடம் கொடும்” என்றான். 

பதில் சொல்லாமல் ஓலையை வாங்கிக் கொண்ட சஞ்சயன் ஆற்றங்கரை வரையில் கொண்டு விடும்படி இரு யவனர்களுக்கு உத்தரவிட அவர்களைப் பின்பற்றிச் சென்றான் சஞ்சயன். ஆற்றங்கரையை அடைந்ததும் அங்கொரு படகிலேறி மறுகரை அடைந்து அமைச்சர் மாளிகைக்கு வந்த சஞ்சயனுக்கு அங்கு மீண்டும்  அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த பெரிய அறையில் குட்டுவன் கோலாகலமாக அமர்ந்திருந்தான். நற்கிள்ளி அவனுக்குப் பக்கத்தில் நின்ற வண்ணம் அடிக்கடி குனிந்து குனிந்து அவன் சொல்வதைக் கேட்டுத் தலை ஆட்டிக் கொண்டிருந்தான். சஞ்சயன் சிறிது நேரம் எட்ட நின்று குட்டுவன் தன்னைப் பார்த்ததும் தலைவணங்கி ‘முசிறிப் படைத்தலைவர். வாழ்க’ என்று விருது கூறினான்: 

குட்டுவன் சஞ்சயனிடம் நேரிடையாகப் பேசவில்லை. நற்கிள்ளியை நோக்கி “உபதலைவரே? தூதர் என்ன சொல்கிறார் கேளும்” என்றான்.  

நற்கிள்ளி “தூதரே! எங்கு வந்தீர்? என்ன செய்தி” என்று கேட்டான் 

சஞ்சயன் ஒரு விநாடிதான் தாமதித்தான் பதில் சொல்ல. அதற்குள் குட்டுவன் சொன்னான். “நற்கிள்ளி! கிளேஸியஸ் நமக்கு அனுப்பியிருக்கும் ஓலையை வாங்கும்” என்று. 

நற்கிள்ளி பதுமையைப் போல் கையை நீட்டினான். ஓலையை உடனடியாகக் கொடுக்கவில்லை சஞ்சயன். “ஓலை….” என்று இழுத்தான். 

“நமக்குத் தெரியும் உபதலைவரே! வாங்கும் ஓலையை” என்று கடுமையாக உத்தரவிட்டான் குட்டுவன். 

அதற்குப் பின்பும் தாமதிப்பதற்குக் காரணமில்லை யென்று உணர்ந்த சஞ்சயன் கச்சையிலிருந்து ஓலையை எடுத்து நீட்டினான். அதை வாங்கிய நற்கிள்ளி அதைப் பிரித்துப் படித்தான். அவன் முகத்தில் கோபம் எல்லை பிறந்தது. “அயோக்கியன்! பரம அயோக்கியன்” என்று கூறினான் நற்கிள்ளி- 

“என்ன எழுதியிருக்கிறான் தம்பி கிளேஸியஸ்?” என்று குட்டுவன் கேட்டான். 

“உங்களை அவன் புரிந்து கொண்டு விட்டானாம்…” என்றான் நற்கிள்ளி, 

“நல்லது”. 

“நீங்கள் யாரென்பது அவனுக்குத் தெரியுமாம்” 

“நல்லது நல்லது” 

“உங்களுக்குத் துணிவிருந்தால் தனியாகப் போருக்கு அழைக்கிறான்” 

“சாலச் சிறந்தது! சாலச் சிறந்தது”

“அடுத்து…” நற்கிள்ளி சிறிது தயங்கினான். 

 “அடுத்து என்ன எழுதியிருக்கிறான்?” என்று குட்டுவன் வினவினான். 

“நீங்கள் போலியாம்.” 

“அப்படியா எழுதியிருக்கிறான்?” 

“இந்த ஓலையில் அப்படித்தான் எழுதியிருக்கிறான்?” 

“உண்மையாகவா?” 

”ஆம். தலைவரே!” 

“இப்படி நம்மை அவமானப்படுத்தும் ஓலையைக் கொண்டு வந்த சஞ்சயனை என்ன செய்யலாம்?” 

“எதை வேண்டுமானாலும் செய்யலாம்?” 

அந்த இருவர் உரையாடலைக் கேட்ட சஞ்சயன் “இதென்ன அநியாயம்? அவன் கொடுத்த ஓலையைச் கொண்டு வந்தேன். அவனிஷ்டப்படி கொடுத்தேன்” என்றான். 

குட்டுவன் சஞ்சயனை நோக்கினான். “அவன் விஷம் கொடுத்தாலும் கொண்டுவந்து எனக்குக் கொடுப்பீரா?” என்று வினவவும் செய்தான். 

“உவமை சரியில்லை. ஓலை எப்படி விஷமாகும்?” என்று வினவினான் சஞ்சயன். 

“இந்த ஓலை விஷம். என்னை அவமானப்படுத்தும் விடுதம், இதை எழுதியவன், கொண்டு வந்தவன் இருவருக்குமே தண்டனை உண்டு. இன்று அவனைத் தனிப் போரில் சந்தித்துக் கொன்று விடுகிறேன். உம்மை அதிக மாகத் தண்டிப்பதற்கில்லை. சிறையில் மட்டும் தள்ளு உத்தரவிட்டான் குட்டுவன். றேன். நற்கிள்ளி! தூதரைச் சிறையில் தள்ளு!'” என்று 

சஞ்சயனை நற்கிள்ளி கையைப் பிடித்து இழுத்தான். சஞ்சயன் அமைச்சரை நோக்கி, “இந்த அநியாயத்திற்குப் பரிகாரமில்லையா?” என்று கூவினான். 

அப்பொழுது குட்டுவன் எழுந்தான். “நற்கிள்ளி! இவனைச் சிறையில் தள்ளவேண்டாம், கிளேஸியஸுக்கு பதில் இவனை தனிப்போரில் சந்தித்துக் கொன்றுவிடுகிறேன்” என்று கூறித் தனது வாளை எடுத்துக் கொண்டான். 

சஞ்சயன் முகம்  மலர்ந்தது. ‘இந்த  கோழைக்குத் தகுந்த படிப்பினை கற்பிக்கிறேன்’ என்று உள்ளூரக் கறுவிக் கொண்டு தானும் ஒரு வாளை எடுத்துக் கொண்டான். 

குட்டுவன் வாளைப்பிடித்த முறையிலிருந்தே அவனுக்கு வாட்போருக்கும் சம்பந்தமில்லை என்பதைப் புரிந்து கொண்ட சஞ்சயன், “வாளை அப்படிப் பிடிக்கக்கூடாது” என்றான்.

“வேறு எப்படிப் பிடிக்க வேண்டும்?” என்று குட்டுவன் வினவினான். “இப்படி” என்று தனது வாளைப்பிடித்து நீட்டினான். அடுத்த விநாடி மந்திரத்தால் – ஏவப்பட்டது போல் சஞ்சயன் வாள் ஆகாயத்தில் பறந்தது. 

42. உள்ளே இருந்த நிலை 

சஞ்சயன் வாள் அவன் கையை விட்டுப்பறந்து சற்று எட்ட விழுந்து அழும்பில்வேளின் மாடி முழுதும் பேரொலி கிளப்பியதன் விளைவாக சஞ்சயன் மட்டுமின்றி அழும்பில்வேளும் பேரதிர்ச்சிக்கு உள்ளானார். வாளைச் சரியாகப் பிடிக்காமல் வக்கிரமாகக் கையில் பிடித்த குட்டுவன், சஞ்சயன் வாளை நிமிட நேரத்தில் தட்டிப் பறக்க விட்டதைக்கண்ட அழும்பில்வேள் சில விநாடிகள் அதிர்ச்சி வசப்பட்டு நின்று விட்டாலும் பிறகு சுரணை வரப்பெற்று “விசித்திரம் விசித்திரம்” என்ற சொற்களை உதிர்த்தார். 

அதைக் கேட்ட குட்டுவன் நற்கிள்ளியை நோக்கி “நற்கிள்ளி! இதிலென்ன விசித்திரம் இருக்கிறது? அமைச்சர் எனக்குப் போரிடத் தெரியாதென்று நினைக்கிறாரா?” என்று வினவினான். 

“அப்படித்தானிருக்க வேண்டும்’ என்றான் நற்கிள்ளி. 

அதன் விளைவாகக் குட்டுவன் அமைச்சர் மீது குரூரம் நிறைந்த பார்வையைப் படரவிட்டதும், “இல்லை இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை” என்று அவசரம் அவசரமாக நற்கிள்ளியின் பேச்சுக்கு மறுப்பு விடுத்தார் அமைச்சர். 

“அப்படி நினைக்கவில்லையாம்” என்று நற்கிள்ளி தெரிவித்தான் குட்டுவனை நோக்கி. 

“அப்படியானால் விசித்திரம் என்று ஏன் கூவினார்? விசாரி” என்றான் குட்டுவன். 

“ஏன் விசித்திரம் என்று கூவினீர் என்று தலைவர் விசாரிக்கிறார்” என்று நற்கிள்ளி அமைச்சரை நோக்கி வினவினான். 

“இந்த மாதிரி ஒரு போர்முறையை நான் கண்ட நில்லை. அதனால் சொன்னேன்” என்றார் அமைச்சர். 

“இந்தப் புதிய போர் முறையை அமைச்சர் பார்த்த நில்லையாம்” என்று குட்டுவனுக்குத் தெரியப்படுத்தினான் நற்கிள்ளி. 

இப்படி குட்டுவன் தன்னிடம் நேரிடையாகப் பேசாமல் நற்கிள்ளி மூலம் பேசுவதைக் கண்ட அமைச்சர் “தரைப்படைத் தலைவரே! என்னிடம் நேரில் தாங்களே பேசினால் என்ன?” என்று வினவினார். 

அதற்கு நேரிடையாகவே பதில் சொன்ன குட்டுவன் “சரி! வாளை எடுத்துக்கொள்ளும்” என்றான். 

“நானா! நானா வாளை எடுத்துக் கொள்ள வேண்டும்?” என்று வியப்புடன் வினவினார் அமைச்சர். 

”ஆமாம். நீர்தான்” குட்டுவன் குரல் ஆணை போல் ஒலித்தது. 

“எதற்கு?” 

“உமக்குப் புதுமுறை வாட் பயிற்சியளிக்கிறேன்” 

“இப்பொழுது எதற்கு எனக்கு வாட் பயிற்சி?”

“இங்கு போர் ஏற்படப் போவதால் அதில் நீர் ஒழுங்காக போரிட” 

இதைக்கேட்ட அமைச்சர் பெரிதும் மலைத்தார். “இனிமேல் நான் புதுமுறையில் வாள் சுழற்றக் கற்றுக் கொண்டு எந்த நிமிடத்திலும் எந்த நாழிகையிலும் தொடங்கவிருக்கும் போரில் கலந்து கொள்ள முடியுமா?” என்று வினவினார். 

“முடியும். ஆசான் நானிருக்கிறேன்” என்ற குட்டுவன் தனது வாளை மறுபடியும் வக்கிரமாகத் திருப்பிப் பிடித்தான். 

அமைச்சரும் வேறு வழியின்றி தமது வாளை எடுத்துக் விநாடி அவர் வாள் குட்டுவன் கொண்டார். அடுத்த வாளுடன் மோதியதே தவிர கையிலிருந்து பறக்கவுமில்லை. சேர்சர்? மீளவுமில்லை. அவன் வாளுடன் இணைந்து ‘சர்சர்’ என்று ஒலியையே கிளப்பியது. அமைச்சர் என்ன முயன்றும் தமது வாளைக் குட்டுவன் வாளிடமிருந்து பிரிக்க பிடிக்கப் முடியவில்லை. திரும்பத்திரும்ப வக்கிரமாகப் பிடிக்கப் பட்ட குட்டுவன் வாள், அமைச்சரின் வாளைத் தன்னிட மிருந்து, பிரியவிடாமல் தடுத்து உராய்ந்து கொண்டிருந்தது. அதிலிருந்து விடுபட அமைச்சர் பின்னடைந்தும், தாவியும், குதித்தும் முயற்சி செய்தார். அதைக்கண்டு நகைத்தான் குட்டுவன். “அமைச்சரே! நீர் நாட்டியம் கற்றிருந்தால் பெரிய கலைஞராகப் பெயர் எடுத்திருப்பீர். உமது தலை யெழுத்து உம்மால் நிர்வகிக்க முடியாத அமைச்சர் வேலைக்கு வந்துவிட்டீர்” என்று நகைப்பின் ஊடே கூறிய குட்டுவன், தனது வாட்பிடியை அவரது வாளின் பிடிக்கு அருகில் கொண்டு இணைத்து தனது இடக் கையால் அவர் வலது மணிக்கட்டைப் பிடித்து உதற, அமைச்சரின் வாள் கீழே ‘கிளாங்’ என்ற சத்தத்துடன் விழுந்தது. அதைக் காலால் உதைத்து தூரத்தள்ளிய குட்டுவன், “அமைச்சரே! எனது வாள் திறமையில் உமக்கு இப்பொழுதாவது நம்பி கை வருகிறதா?” என்று வினவினான். 

அமைச்சர் ஏதுசொல்வதென்று தெரியாமல் விழித்தார். “குட்டுவரே! இத்தனை நாள் இந்தப் போர்த் திறமையை ஏன் மறைத்து வைத்தீர்கள்?”’ என்று வியப்பும், அதிர்ச்சியும் கலந்த குரலில் வினவவும் செய்தார். 

குட்டுவன் தனது வாளை உறையில் போட்டுக் கோண்டு, “எனக்குக் கவிதையில்தான் நம்பிக்கை. போரில் அல்ல. மன்னர் வற்புறுத்தலாலும், வேந்தன் தவியாகச் சிக்கிக் கொள்ளப் போகிறானே என்ற கருணை யாலும் வாளை ஏந்தியிருக்கிறேன். இந்தப் போர் முடிந் இதும் வாளைப் பழையபடி பூசையில் வைத்து விடுவேன்” என்று விளக்கினான். 

அமைச்சருக்கும் சஞ்சயனுக்கும் என்ன பேசுவ தென்றே தெரியவில்லை. “கடல்வேந்தனைக் காக்க இன்னொருவன் தேவையா?” என்று அமைச்சர் உள்ளூரக் கேட்டுக் கொண்டாலும் அதை வெளியில் சொல்ல அஞ்சினார். 

அப்பொழுதுதான் மற்றோர் இடி அவர் தலையில் இறங்கியது. ”அமைச்சரே! இப்பொழுது எனது வாட் போர் முறையில் உமக்கு நம்பிக்கை வந்துவிட்டதால் கிளேஸியஸிடம் தூது செல்லும்” என்ற குட்டுவன் சொற்கள் நெருப்புத் துண்டமென அழும்பில்வேளின் காதில் விழுந்தன. 

“நானா? தூது போவதா?” என்று வினவினார் அமைச்சர். 

“ஆம். தாங்கள்தான்” என்ற குட்டுவன் “கிளேஸியஸை இன்று இரவு மூண்டதும் சுள்ளியாற்று வட கரைக்கு வரச்சொல்லும்” என்றான். அவன் குரலில் ஆணை ஓரித்தது. 

“நான் அமைச்சன். தூதனல்ல” என்று சுட்டிக்காட்டினார் அழும்பில்வேள். 

“இப்பொழுது தூதராகி விட்டீர்” என்றான குட்டுவன். 

“அதற்கு மன்னர் உத்தரவு வேண்டும். என் பதவியை யாரும் மாற்றமுடியாது” இதைக் கம்பீரமாக நிமிர்ந்து நின்று சொன்னார் அமைச்சர். 

குட்டுவன் நற்கிள்ளியை நோக்கித் திரும்பி “நற்கிள்ளி! மன்னரின் இரண்டாவது ஓலையை அமைச்சரிடம் கொடு” என்று உத்தரவிட மடியிலிருந்த ஓர் ஓலையை எடுத்து அமைச்சரிடம் நற்கிள்ளி நீட்டினான். 

அந்த ஓலையின் முத்திரையை உடைத்து ஓலையைப் படித்த அமைச்சர் தமது கண்களையே நம்பாமல் சிலையென நின்றார். “முசிறிக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டிருப்பதாலும், சந்தர்ப்பத்துக்குதக்கபடி நம்மால் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாதாகையாலும் நமக்குப் பதில் தரைப்படைத் தலைவர் குட்டுவரே உத்தரவுகளைப் பிறப்பிப்பார். அவர் உத்தரவை மீறுவது நமது உத்தரவை மீறுவதாகும்” என்று ஓலையில் கண்டிருந்தது. அடியில் மன்னர் கையொப்பமிட்டிருந்தார். 

அதைப் படித்த அமைச்சரை நோக்கி, “அமைச்சரே! இப்பொழுது என்ன சொல்கிறீர்?” என்று குட்டுவன் எச்சரித்தான். 

“தங்கள் சித்தம்’ என்றார் அமைச்சர். 

“இந்த நிமிடம் முதல் நீங்கள் தூதர்” என்றான குட்டுவன். 

“அப்படியானால் அமைச்சர் உத்தியோகம்?” 

“இந்தப் போர் முடியும் வரையில் அந்த உத்தியோகத்துக்கு அவசியமில்லை, பிறகு பார்த்துக் கொள்வோம்” என்ற குட்டுவன், “நற்கிள்ளி! அமைச்சருடன், நீயும் போய் வா. இரவின் ஆரம்பத்தில் கிளேஸியஸை ஆற்றங்கரைக்கு அழைத்துவா” என்றான் குட்டுவன். 

நற்கிள்ளி உடன் வருவதால் அமைச்சர் சிறிது துணிவடைந்தாலும் கிளேஸியஸை நினைத்தால் பெரிதும் அச்சமும் அடைந்து பயணமானார். அவர் கிளம்பிய சமயத்தில் மாலை முற்றிக் கொண்டிருந்தது. கடலின் கொந்தளிப்பு அதிகமாகி இருந்ததால் அதன் அலைகள் உள்ளியாற்றுக்குள்ளும் புகுந்து நீரை அதிகமாக்கி நதியை சற்று பயங்கரமாக அடித்திருந்தது. அது எதையும் பார்க்காமல் நற்கிள்ளி அமைச்சரை அழைத்துச் சென்றான். படகொன்றில் அவரை ஏற்றிக்கொண்டு அக்கரை அடைந்து வில்லம்பு இலச்சினை இல்லத்தை நோக்கிச் சென்றான். 

சுள்ளியாற்று வடகரை மெல்ல மெல்ல மாறுபடத் தொடங்கியது. யவனர்கள் கூட்டம் கூட்டமாக நடமாட முற்பட்டனர். எதிர்க்கரையிலிருந்த அராபியர் குடிசைகளிலும் அளவுக்கதிகமான நடவடிக்கை தெரிந்தது. ஆபத்து சிறுகச் சிறுக முற்றுவதை உணர்ந்த அமைச்சர் ஏதும் பேசாமல் நடந்தார். வில்லம்பு இலச்சினை இல்லத்தின் முகப்பில் காவல் பலமாக இருந்தது. ஆனால் அமைச்சரைக் கண்டதும் அந்தக் கூட்டம் வழிவிட்டது. அந்த வழியில் புகுந்து சென்ற அமைச்சர் உள் அறைக்கதவின் முன்பு வந்ததும் சற்று நின்றார். “நற்கிள்ளி! நான் வந்திருப்பதை அறிவி” என்று தமக்குப் பின்னால் நின்றிருந்த நற்கிள்ளியை நோக்கிக் கூறினார். 

கதவைத்தட்ட நற்கிள்ளி ஓர் அடி எடுத்து வைத்தவன் சட்டென்று நின்றான். உள்ளே கேட்ட குரல் நற்கிள்ளியை அயர வைத்தது. அந்தக் குரல் அமைச்சர் காதிலும் விழவே அமைச்சர் முகம் போல் பேயறைந்தது மாறியது. 

”கிளேஸியஸ்! இப்பொழுதும் குடிமுழகிப் போய் விடவில்லை. அவரிடம் சரணடைந்துவிடு. நீ பிழைக்கலாம்” என்ற குரல் நிலக்கள்ளியின் குரல், அதில் அதிகாரம், அனுதாபம் இரண்டும் கலந்தே இருந்தது. 

அடுத்து கிளேஸியஸின் குரல் பயங்கரமாக ஒலித்தது, “யாரங்கே? இவளைப் பிடித்துக் கட்டுங்கள்” என்று. அடுத்த நிமிடம் வெளியிலிருந்த இரண்டு யவன வீரர்கள் அமைச்சரையும், நற்கிள்ளியையும் தள்ளிக்கொண்டு அறைக் கதவைத் திறக்க முயன்றனர். ஆனால் கதவு தானாகவே திறந்தது படீரென்று. உள்ளிருந்த நிலைமை அமைச்சரி எதிர்பார்த்தது போல் இல்லை. முற்றும் மாறுபட்ட நிலையை அமைச்சர் மட்டுமல்லாமல் நற்கிள்ளியும், யவனருங்கூட கண்டனர். 

கிளேஸியஸ் தரையில் கிடந்தான். அவன் கழுத்தில் நிலக்கள்ளியின் வாள் ஊன்றி இருந்தது. 

43. சங்கு ஒலி 

வில்லம்பு இலச்சினை இல்லத்தின் முகப்பு அறைக் குள்ளே இருந்த நிலை அமைச்சரையும், நற்கிள்ளியையும் மட்டுமின்றி, கிளேஸியஸ் உத்தரவுப்படி உள்ளே நுழைந்த இரு யவனரையும் அதிர்ச்சியடையச் செய்ததால் அவர்கள் செயல்பட முடியாமல் நின்றுவிட்டனர். வாளின் நுனியை நிளேஸியஸின் கழுத்தில் ஊன்றியபடியே உறுதியான குரலில் சொன்னாள் நிலக்கள்ளி, “யாராவது சிறிது அசைந்தாலும் கிளேஸியஸின் வாழ்க்கை இன்றுடன் முடிந்துவிடும்” என்று. அத்துடன் மீண்டும் கிளேஸியஸின் கழுத்தில் வாளின் நுனியைச் சிறிது அதிகமாகவே அழுத்தி “பதில் என்ன கிளேஸியஸ்? சண்டையா? சமாதானமா?” என்று வினவினாள். 

கிளேஸியஸின் முகத்தில் அந்த அபாய நிலையிலும் அச்சம் சிறிதுமில்லை. அவன் பதில் சொன்னபோது குரலும் திடமாகவே இருந்தது. “என்னை நீ கொன்று போட்டாலும் சண்டை நிற்காது. யவனர்களுக்கு ஒரு தனி நிலம் வேண்டும். அதைச் சம்பாதிக்க நான் தீர்மானம் செய்துவிட்டேன். என்னைக் கொன்றால் அடுத்த யவனர் கப்பலின் தலைவனொருவன் இருக்கிறான் என் பதவியை ஏற்க. இந்தப் புரட்சி இனிமேல் நிற்காது. இங்குள்ள யவனர் கூட்டம் மட்டுமல்ல புரட்சியில் ஈடுபடப்போவது, முசிறிக்கு வடபுறத்திலிருக்கும் சேரநாட்டுப் பகைவர் சிலரும் இந்தப் புரட்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் படையின் ஒரு பகுதி தரையிலும், இன்னொரு பகுதி கடலிலும் ஊடுருவச் சித்தமாயிருக்கின்றன. ஆகையால் இந்த சுதந்திரப் போரை இனி நிறுத்த முடியாது” என்றான் கிளேஸியஸ். 

இதைக்கேட்ட நிலக்கள்ளி மெல்ல நகைத்தாள். “கடல்வேந்தரை நீ இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. தவிர உன்னை வளர்த்த இந்த நாட்டில், உனக்குப் புகலிடம் கொடுத்த சேரமன்னன் நிலத்தின் ஒரு பகுதியை யவன அரசாக்க நீ முயல்வது ராஜ துரோகம் மட்டுமல்ல, நன்றிகெட்ட செய்கையும்கூட, உன்னையும் உன் யவனர் களையும் உங்களுக்கு உதவ வந்திருக்கும் மற்ற இந்நாட்டுக் குறுநில மன்னர் படைகளையும் ஒழித்துக்கட்ட கடல் வேந்தர் சித்தமாயிருக்கிறார். ஆனால், உன்னிடமுள்ள பாசத்தால், வீண் அழிவையும், ரத்தம் சிந்துவதையும் தவிர்க்கும் நோக்கத்தால் நோக்கத்தான் உன்னிடம் என்னைத் தூது அனுப்பினார். உன் கடைசி எண்ணந்தான் என்ன?” என்று வினவினாள் நகைப்பின் ஊடே. 

ஆனால், கிளேஸியஸின் முகத்தில் எந்தவித உணர்ச்சி யும் இல்லை. “நான் போருக்குச் சித்தமாயிருக்கிறேன் நிலக்கள்ளி! அதுவும் நீ காலம் கடந்து வந்திருக்கிறாய், சமாதானம் பேச. இப்பொழுது எந்த விநாடியிலும் போர் தொடங்கலாம். அதில் நீ சிக்குமுன்பு கடல்வேந்தனிடம் சென்றுவிடு. உன்னை யாரும் தடைசெய்ய மாட்டார்கள்” என்றான் வறண்ட குரலில். 

அதுவரை வாளாவிருந்த அமைச்சர், “கிளேஸியஸ்! நானும் ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன்” என்றார் மெதுவாக. 

நிலக்கள்ளி சற்றே திரும்பித் தனது தந்தையை நோக்கினாள். “நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்?” என்று சினத்துடன் வினவினாள். 

தமது பெண்ணே தம்மைப் பார்த்து அதிகாரத் தடனும் சினத்துடனும் பேசுவதைக் கண்ட அமைச்சரும் சினத்தின் வயப்பட்டு, “நீ என் மகள் என்பதை நினைவில் வைத்துக்கொள்” என்று சீறிவிட்டு, “கிளேஸியஸ்! இந்தப் போரைத் தவிர்க்கத் தரைப்படைத் தலைவர் இஷ்டப்டுகிறார். அதற்காக செய்தியும் அனுப்பியிருக்கிறார்” என்றார் துணிவை வரவழைத்துக் கொண்டு. 

“யாரது தரைப்படைத் தலைவர்?” இகழ்ச்சி நிரம்பிய குரலில் வந்தது கிளேஸியஸின் கேள்வி. 

“குட்டுவ மகாப்பிரபு” என்றார் அமைச்சர். 

“என்ன செய்தி?”

“உங்களை இன்றிரவு தனியாக வாட்போரில் சந்திக்க விரும்புகிறார்.”

“எதற்காக?” 

“உங்கள் இருவரில் ஒருவர் மாண்டு விட்டால் இந்தப் போர் நடக்காது என்று நினைக்கிறார்.” 

“கடல்வேந்தர் எங்கே போய்விட்டார்? அவரால் போரை நடத்த முடியாதா?” 

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாததால் விழித்தார் அமைச்சர். “நற்கிள்ளி! இதற்கு என்ன பதில்?” என்று வினவினார் பக்கத்தில் நின்றிருந்த நற்கிள்ளியை நோக்கி. 

“குட்டுவரைத்தான் கேட்க வேண்டும்” என்றான தந்கிள்ளி. அதே சமயத்தில் நற்கிள்ளியின் கண்கள் நிலக்கள்ளியின் கண்களுடன் ஒரு விநாடி கலந்து மீண்டன. 

அதைக் கவனிக்காத அமைச்சர் “அப்படியானால் குட்டுவரைப் போய்க் கேட்டு வாரும்” என்று யோசனை சொன்னார். 

“எப்படிப் போவது?” 

“வாயில் வழியாக”. 

“அங்கு யவனர் காவல் இருக்கிறதே!” 

“அவர்கள் நம்மை உள்ளே விடவில்லையா?” 

“ஆம், விட்டார்கள்.” 

“வெளியே போவதை மட்டும் ஏன் தடை செய்ய வேண்டும்?” 

“போய்ப் பார்த்தால்தான் தெரிய வேண்டும்” என்று நற்கிள்ளி சொன்னதும் நிலக்கள்ளி நகைத்தாள். அதுவரை கிளேஸியஸின் கழுத்தில் ஊன்றியிருந்த கத்தியையும் நீக்கி, “எழுந்திரு கிளேஸியஸ்” என்றாள். 

கிளேஸியஸ் மிக நிதானமாக எழுந்தான். அவன் எழுந்ததும் நிலக்கள்ளியை அணுகப் போன இரு யவனர்களையும் நோக்கி, “வெளியே செல்லுங்கள்” என்று உத்தரவிட்டான். 

“நிலக்கள்ளியைப் பிடித்துக் கட்ட உத்தரவிட்டீர்களே…” என்று ஒரு யவனன் இழுத்தான். 

“உத்தரவை மாற்றிவிட்டேன். போங்கள். இவர்கள் யார் வெளியே சென்றாலும் தடை செய்யவேண்டாம் என்று மற்ற காவலர்களுக்கும் சொல்லிவிடு” என்றும் உத்தரவிட்டான். 

“உன் பதில் இதுதானா கிளேஸியஸ்?” என்று கடைசி முறையாகக் கேட்டாள் நிலக்கள்ளி, 

“ஆம் நிலக்கள்ளி! யவனர் சுதந்திரப் போரை என்னால் நிறுத்த முடியாது” என்று திட்டமாகக் கூறினான் கிளேஸியஸ்.

அதற்குப் பின்பு நிலக்கள்ளி அங்கு நிற்கவில்லை. வாளை உருவிப் பிடித்தபடி தந்தை மீது ஒரு பார்வையை வீசிவிட்டு வெளியே சென்றாள். அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த கிளேஸியஸ் அமைச்சரைப் பார்த்து, “அமைச்சரே! போவது யார் தெரியுமா?” என்று வினவினான். 

“தெரியாமலென்ன? என் மகள்” என்றார் அமைச்சர். 

“அதுதான் உமக்குத் தெரியும். நிலக்கள்ளி இப்பொழுது உமது மகள் மட்டுமல்ல, கடல்வேந்தன் மனைவி. அது மட்டுமல்ல. சேரர் கடற்படையில் உபதளபதி” என்றும் தெரிவித்தான் கிளேஸியஸ். “அமைச்சரே! கோழையான உமது வயிற்றில் இத்தகைய வீராங்கனை எப்படிப் பிறந்தாள்?” என்றும் வினவினான். 

அமைச்சரின் கோபம் எல்லை கடந்தது. “கிளேஸியஸ்! பேசுவதை யோசித்துப் பேசு” என்றார் கோபம் குரலில் மிதமிஞ்சி ஒலிக்க. 

அதற்கு கிளேஸியஸ் பதில் சொல்லுமுன்பு நற்கிள்ளி பதில் சொன்னான், “கிளேஸியஸ் யோசித்துத்தான் பேசி யிருக்கிறான்” என்று. 

“நற்கிள்ளி!” சினம் மிகுந்த விழிகளை நற்கிள்ளி மீது இருப்பினார் அமைச்சர்.

“என்ன அமைச்சரே?” 

“நீயும் கிளேஸியஸிடம் சேர்ந்து கொள்கிறாயா?” 

“எதிரியுடன் எப்படி சேர முடியும்?” 

“என்னைக் கோழையென்று கிளேஸியஸ் சொன்னான்” 

“சொல்லிவிட்டுப் போகிறான்” 

“அதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும்” 

“முடியாது” 

“ஏன்?” 

”நீர் இப்பொழுது அமைச்சரல்ல. தூதர். ஆகையால் சண்டையிட முடியாது”. 

இதை ஒப்புக்கொண்ட அமைச்சர், “கிளேஸியஸ்! எனது தூதுக்கு பதில் என்ன?” என்று வினவினார். 

கிளேஸியஸ் சிறிது சிந்தித்தான். “குட்டுவரிடம் நான் போரிட முடியாது என்று சொல்லுங்கள்” என்றான் சிந்தனைக்குப் பிறகு. 

“ஏன்?” என்று விசாரித்தார் அமைச்சர். 

“காரணம் அவருக்குத் தெரியும். அவரை நான் பணிந்ததாகச் சொல்லும்” என்றான் கிளேஸியஸ். 

“பணிந்ததாகவா?” அமைச்சர் குரலில் வியப்பு ஒலித்தது. 

“ஆம்” கிளேஸியஸ் தயக்கமின்றிப் பேசினான். 

“என்னைக் கோழை என்றாயே?” என்று கேட்டார் அமைச்சர். 

“உண்மையைச் சொன்னேன்” என்றான் கிளேஸியஸ்.

“குட்டுவரைப் போரில் தனியாகச் சந்திக்க மறுக்கும் நீ மட்டும் என்னவாம்?”” என்று அமைச்சர் வினவினார்.

“அவருக்குத் தெரியும்” என்றான் கிளேஸியஸ்.

“யாருக்கு?’ 

“என் குருநாதருக்கு.” 

“குருநாதரா!” 

“ஆம். குட்டுவர் எனது குருநாதர்,” 

இதைக் கேட்ட அமைச்சர் வியப்பின் எல்லையை எய்தினார். “உமக்கு அவர் எப்படி குருநாதர்?” என்று விசாரித்தார். 

“போர் முறைகளை எனக்குச் சொல்லிக் கொடுத்தவரே அவர்தான். நான் தனி நபர் போரை மறுப்பதாகச் சொல்லும். அவர் புரிந்து கொள்வார். அது மட்டுமல்ல, பிரதமை, பூசம் 45 என்றும் சொல்லும்” என்றும் கூறிய கிளேஸியஸ் அவர்களிருவரையும் இல்லத்துக்கு வெளியே தானே அழைத்து வந்து அவர்களை வெளியே விட்டு உள்ளே சென்றான். 

அமைச்சர் மனத்தில் ஆயிரம் கேள்விகள் எழுந்து குழம்பின. அதைவிடக் குழப்பமளித்தது குட்டுவன் செயல். கிளேஸியஸின் பதிலை அவர் குட்டுவனிடம் சொன்னதும், குட்டுவன் மாடித்தாழ்வறைக் கோடிக்குள் சென்று ஆகாயத்தைக் கவனித்தான். “நற்கிள்ளி! புறப்படு” என்று துரிதமாகக் கூறிவிட்டு, படிகளில் இறங்கி கீழே ஓடினான் அதே ஓட்டத்துடன் சுள்ளியாற்றுக் கரைக்கு வந்ததும் நற்கிள்ளியிடம் அங்கிருந்த படகோட்டியிடமிருந்து ஒரு சங்கை வாங்கிக் கொடுத்து, “பலமாக ஊது” என்று உத்தரவிட்டான். 

சங்கை பலமாக ஊதினான் நற்கிள்ளி. அதன் ஒலி மிக விபரீதமாக முசிறியைச் சூழ்ந்து கொள்ளவே, முசிறியின் இல்லங்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்தார்கள். முசிறியின் பிரதான வாசலிலிருந்த முரசுகள் பலமாக ஒலித்தன. எங்கும் பேரிரைச்சல் உண்டாயிற்று. அடுத்து அங்கு நிற்கவில்லை குட்டுவன். “நற்கிள்ளி! நான் சொன்னபடி நட!” என்று கூறிவிட்டுப் படகொன்றை எடுத்துக்கொண்டு துடுப்புகளை வேகமாகத் துழாவிக் கொண்டு சுள்ளியாற்றின் சங்கமத்தை நோக்கி விரைந்தான். 

44. போர்க் கீதம் 

அமைச்சர் அழும்பில்வேள் தமது மாளிகையின் மாடித் தாழ்வறையில் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டும். பொழுது நின்று தலையை ஆட்டிக் கொண்டும் பெரும் குழப்பத்திலிருந்தார். அமைச்சரான தமக்குக் தெரியாமல் ஏதேதோ விவகாரங்கள் முசிறியில் நடப்பதை நினைத்து தாம் அமைச்சர் பதவியை மேலும் ஏற்றிருப்பது சரிதானா என்ற கேள்வியை தம்முள் எழுப்பிக்கொண்டார். யவனர் புரட்சி ஏற்படுமென்று அவர் அறிந்திருந்தாலும், இப்பொழுது ஏற்படும். எப்படி ஏற்படும் என்பதையெல்லாம் அவர் முற்றிலும் அறியாதிருந்ததாலும், அமைச்சரான தம்மைப் புறக்கணித்துப் புதிய தரைப்படைத் தலைவரை நியமித்துவிட்டதாலும், மன்னருக்குத் தம்மீது நிதி நம்பிக்கை இருக்கமுடியாது என்று தீர்மானித்துக் கொண்டார். அப்படி நம்பிக்கையில்லாதபோது தம்மை ஏன் பதவியை விட்டு நீக்கவில்லை என்று ஒரு வினாவையும் உள்ளத்தில் எழுப்பிக் கொண்டார். 

இத்தனைக்கும் மேலாகத் தமது மகள் வில்லம்பு இலச்சினை இல்லத்தில் தம்மைக் துரும்புபோல் நடத்தியதையும், ஏற்கனவே கடல்வேந்தனை விவாகம் செய்து விட்டதாகக் கிளேஸியஸ் தமக்குச் சொல்லும் நிலைமையில் தான் இருந்ததையும் எண்ணி, “என் மகளே என்னைப் பொருட்படுத்தாதபோது வேறு யார் எனக்கு மரியாதை அளிப்பார்கள்?” என்றும் கேட்டுக்கொண்டு பெருமூச்செறிந்தார். அவர் திணறும் நிலையையும், நடந்த போது அவர் கால்கள் பாவினவேயன்றி மனம் எங்கோ ஓடிக்கொண்டிருந்ததையும் அமைச்சர் முகத்தின் கலக்கத்தி லிருந்தே புரிந்து கொண்ட தூதுவனான சஞ்சயன், “அமைச்சரே!” என்று மெதுவாகக் குரல் கொடுத்தான். 

அமைச்சர் தமது குழம்பிய முகத்தை சற்றே திருப்பித் தூதரைக் கவனித்தார். “அமைச்சருக்கு என்ன இப்பொழுது?” என்று எரிந்து விழுந்தார் சஞ்சயன் மீது. 

“கவலை அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது” என்றான் சஞ்சயன். 

“பெரிய ஆராய்ச்சி” என்று எரிச்சலும் இளக்காரமும் கலந்த குரலில் பதில் சொன்னார் அமைச்சர், 

“பெரிய ஆராய்ச்சியோ, சிறிய ஆராய்ச்சியோ, உள்ள நிலையை எடுத்துரைப்பது எனது பொறுப்பாகிறது” என்று சஞ்சயன் பணிவுடன் சொன்னான். 

“உள்ள நிலையா?” இகழ்ச்சியுடன் கேட்டார் அமைச்சர். 

“ஆம் அமைச்சரே!” என்றான் சஞ்சயன். 

“சொல்லும்” 

“தங்கள் துக்கத்திற்குக் காரணமிருக்கிறது.” 

“அப்படியா?” 

“ஆம்.” 

“மகிழ்ச்சி?”

“மகிழ்ச்சி இருக்க முடியாது. முகத்தில் அப்படி புகழ்ச்சியும் காணோம்.” 

“தூதரே!’ 

“அமைச்சர் பிரானே!” 

“உருப்படியாக ஏதாவது சொல்ல இருந்தால் சொல்லும். இல்லையேல் என் பிராணனை வாங்க வேண்டாம். போய் விடும்” என்று சினத்துடன் சொற்களை உதிர்த்தார். 

சஞ்சயன் சிறிது தயங்கினான். “அமைச்சர் பிரானே!” என்று மீண்டும் தொடங்கி “முசிறியில் தங்களுக்குத் தெரியாமலே முக்கிய காரியங்கள் நடைபெறுகின்றன. உங்களுக்குத் தெரியாமல் தரைப்படைத் தலைவர் நியமிக்கப் பட்டிருக்கிறார். அவரையும் காணோம் இப்பொழுது. முசிறி இப்பொழுது வெடிக்கும் நிலையிலிருக்கிறது, புரட்சி எந்த விநாடியிலும் ஏற்படலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டான் சஞ்சயன். 

அமைச்சர் தமது கணகளைச் சிறிது உயர்த்தி சஞ்சயனை நோக்கினார். “செய்ய வேண்டியது என்ன தென்பது உமக்குப் புரியவில்லையா?” என்று வினவினார்.

“புரியவில்லை” என்று சஞ்சயன் அடக்கத்துடன் சொன்னான். 

“நாம் செய்ய வேண்டியது கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது” என்று கூறிய அமைச்சர் “தூதரே! இந்த முசிறியை ஆபத்து அணுகியது உமக்குத் தெரியும், புரட்சி ஏற்படப் போவதும் தெரியும். அது கடல் மூலமாகவும், தரை மூலமாகவும் வருமென்பதும் நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் நமக்கு எந்தக் கட்டளையும் கிடையாது. கடலைப் பாதுகாக்கக் கொள்ளைக்காரனான கடல் வேந்தனை அரசர் நியமித்திருக்கிறார். தரைப்படைகளுக்குப் புலவர் மகன் தலைவனாக்கப்பட்டிருக்கிறான். நாம் உதவாக்கரை என்பது மன்னர் எண்ணம். ஆகையால் நமக்கென்று தனிக்கடமை கிடையாது. ஆனால் ஒரு பொறுப்பு இருக்கிறது” என்ற அமைச்சர் இந்த இடத்தில் பேச்சைச் சிறிது நிறுத்தினார். 

சஞ்சயன் சந்தேகத்துடன் பார்த்தான் அமைச்சரை. “அது என்ன பொறுப்போ?” என்று கேட்டான். 

“புரட்சி ஏற்பட்டால் நமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வது” என்று கூறி அமைச்சர் சிரித்தார் வாய்விட்டு. அந்தச் சிரிப்பில் வயிற்றெரிச்சலும் கடுமையும் கலந்திருந்தன. 

அதைக் கவனிக்கவே செய்த சஞ்சயன், ஏதோ பதில் சொல்லத் தொடங்கிய சமயத்தில்தான் சங்கொலி பலமாக ஆற்றங்கரைப் ஒலித்தது பகுதியில், அதையொட்டி முரசும் பயங்கர ஓசையை எங்கும் எழுப்பியது. இவற்றைத் தொடர்ந்து ஆங்காங்கு இரைச்சலும் கேட்கவே சஞ்சயன் தாழ்வறையின் கைப்பிடிச் சுவரைநோக்கி ஓடி வெளியே பார்த்தான். சுள்ளியாற்றுப் பகுதியில் மக்கள் கூட்டங் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். பலர் பந்தங் களை ஏந்தியிருந்தார்கள். கூச்சல் எங்கும் மிக அதிக மாயிருந்தது. அதே சமயத்தில் ஆற்றுக்கு அக்கரையில் துண்டு துண்டாக ஆங்காங்கு நடந்த கூட்டம் ஒரே சீராக ஒன்று சேரத் தொடங்கியது. அப்படி சேர்ந்த யவனர் படை, பெரும் யந்திரம் நகருவது போல் சுள்ளி யாற்றை அத்தனை நோக்கி வந்து கொண்டிருந்தது. நாளாகப் புரட்சி வரும், புரட்சி வரும் என்று சொல்லிக் கொண்டிருந்தது. அன்று நிஜமாகவே உருவெடுத்து விட்டதைப் புரிந்து கொண்ட சஞ்சயன், “அமைச்சரே! இப்படி வாருங்கள். இந்தப் பிரளயத்தைக் கவனியுங்கள்” என்று அவசரமாக அழைத்தான். 
 
அமைச்சரும், சஞ்சயனிருந்த இடத்துக்குச் சென்று வெளியே கவனித்தார். சுள்ளியாற்றுக்கு இருபுறத்திலும் கும்பல் அதிகமிருந்தாலும், இக்கரையில், அதாவது தமது மாளிகைப் பகுதியில் வெறும் கூட்டமே இருந்ததையும், எதிர்க் கரையில் யவனர் கூட்டம் மட்டும் படையாகத் திரண்டு வந்ததையும் அமைச்சர் கண்டார். அதன் விளைவு என்னவென்பது அமைச்சருக்குத் திட்டமாகத் தெரிந்தது. முசிறியின் சாதாரண மக்கள், படைப்பயிற்சி இல்லாதவர்கள். போர்ப் பயிற்சியுள்ள யவனர்களுடன் மோதினால் விளையக்கூடிய விபரீதத்தை உணர்ந்த அமைச்சார் சட்டென்று உட்புறம் ஓடி, தமது வாளை அணிந்து கொண்டு திரும்பினார். சஞ்சயனும், அவர் உத்தரவுப்படி வாளை அணிந்து கொண்டதும், “சஞ்சயரே! நீர் கீழே சென்று நமது காவலர் தலைவனை உடனடியாக அழைத்து வாரும்” என்று உத்தரவிட்டார். 

கீழே ஓடிய சஞ்சயன் போன வேகத்தில் வேகத்தில் திரும்பி வந்து “அமைச்சரே! கீழே காவலர் தலைவன் இல்லை” இன்று அறிவித்தான். 

“”எங்கே போய் விட்டானாம்?” 

“தெரியாது” 

“அடுத்தவனைக் காவலர் தலைவனாக நியமிப்பது தானே!”

“அடுத்தவனும் இல்லை.” 

“வேறு…” 

“யாருமே இல்லை” என்ற சஞ்சயன் “அமைச்சரே! நாம் மட்டும் இங்கிருக்க வேண்டுமா?” என்று வினவினான். 

“வேண்டியதில்லை. வாருங்கள் புறப்படுவோம்” என்று அமைச்சர் கூறியதும், சஞ்சயன் தடதடவென்று படிகளில் இறங்க முற்பட்டான். 

வாளை உருவிக்கொண்டு அவனைப் பின்பற்றிச் சென்ற அமைச்சர் தமது மாளிகைக்கு வெளியே இருந்த சூன்ய நிலையைக் கண்டார். வாயிலில் யாருமே இல்லை. அது மட்டுமல்ல, வாயிலிலிருந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித சஞ்சாரத்தைக் காணோம். 

“எல்லாரும் கடற்புறமோ ஆற்றங்கரைப் பக்கமோ போயிருப்பதாகத் தெரிகிறது அங்கு போய்ப் பார்ப்போம்” என்று கூறிவிட்டு சஞ்சயன் தொடர வேகமாக நடந்தார் ஆற்றங்கரையை நோக்கி. 

ஆற்றங்கரையில் மனித நடமாட்டம் ஏராளமாக இருந்தது. யாரிடமும் எந்த ஆயுதமும் இல்லாவிட்டாலும் சாதாரண மனிதர்கள் படைகளைப்போல் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். ஆற்றங்கரையோரமாகச் சென்ற அந்த அணிவகுத்த கும்பல், யவனர்கள் படை அக்கரையில் காட்சியளித்த உடனேயே சட்டென்று நின்றது. அந்தக் கும்பலில் ஒருவன் கையிலிருந்த தாரையைத் தூக்கிப்பிடித்து ஊதினான் ஒருமுறை. அந்த மனிதக் கூட்டம் திடீரென்று ஐந்தாகப் பிளந்து ஏதோ புதிய தொரு வியூகம் போல் நின்றது. பிறகு ஆற்றங்கரை ஓரமே வளைந்து வளைந்து சென்றது. 

அந்த வியூகத்தைக் கண்டு பிரமித்தார் அமைச்சர். இத்தகைய வியூகத்தைச் சாதாரண மக்கள் வகுக்க முடியாதென்பதையும், போரில் கைதேர்ந்த தலைவனால் தான் செய்ய முடியுமென்பதையும் புரிந்துகொண்ட அமைச்சர் அவன் யாராயிருக்கும் என்பதைப் பற்றிச் சிந்திக்கலானார். அது மட்டுமல்ல அவர் சிந்தித்தது. சாதாரண மக்களைப் போர் அனுபவமில்லாதவர்களை இழுத்து வியூகம் ஏற்படுத்துவதில் பயனென்ன இருக்க முடியும் என்றும் தம்மைக் கேட்டுக் கொண்டு விடை கிடைக்காமல் திணறினார். ஆனால் கூட்டத்திலிருந்த வர்கள் யாரும் அமைச்சரையோ, சஞ்சயனையோ கவனிக்கவில்லை. பெரிய கடல்முதலை போல் காட்சியளித்த பிரிதி வியூகம் மீண்டும் ஊர்ந்தது சுள்ளியாற்றின் தென் வடகரையில் யவனர் படை பெரிய யந்திரம் ஊர்ந்து வந்தது. திடீரென்று ஓரிடத்தில் வந்ததும் யவனர்கள் மண்டியிட்டுத் தங்கள் பட்டையான கத்திகளைக் தலைக்கு மேலே சுழற்றினார்கள். அவர்கள் மார்புக் கவசங்களும் கையிலிருந்த பட்டையான வாள் தென்கரையிலிருந்த முசிறிக் குடிமக்கள் கைகளிலிருந்த பளபளத்தன. எதிர்க்கரை யவனர்கள் மெல்ல மெல்ல கரையின் ஜலப்பகுதிக்கு தொடங்கினார்கள். அப்பொழுது சுள்ளியாற்று முகத் தூரத்திலிருந்து ஒரு பெரும் படகு வந்துகொண்டிருந்தது. அதைச் செலுத்தி வந்த நற்கிள்ளி பெரிதாகப் செலுத்தினான. அந்த அமர்க்களமான போர் நிலையில் அவர்கள் எழுந்து நதிக்குள் புகுந்த நற்கிள்ளியின் படகை வேகமாக இழுத்து வந்த சூழ்நிலையில், திடீரென வேகமாக கடலிலிருந்து எழுந்த காற்றில், நற்கிள்ளியின் குரல் பெரிதாக எல்லார் காதிலும் விழுந்தது. நற்கிள்ளியின் சாரீரம் ஸ்தாயிக்கு எழுந்து சுழன்றது. அவன் பாடியது கீதம். அதைத் தொடர்ந்து நிகழ்ந்தன புதிய விசித்திரங்கள்.

45. மூன்று ஜ்வாலைகள் 

சுள்ளியாற்றின் தென்கரையில் ஊர்ந்த மக்கள் படைத்த முதலை வியூகம், எதிர்க்கரையில் அணிவகுத்து முட்டுப் பாறைபோல் ஒரே சீராக இணைந்துவிட்ட யவனர் படை நின்றதும் தானும் நின்றுவிட்டது. அந்த சமயத்தில் நற்கிள்ளி இசைத்த போர்க் கீதத்தை அந்த வியூகமும் இசைக்கத் தொடங்கியது. “பிரதமை பூசம் பூசம் பூசம், வந்தது யவனர் நாசம் நாசம்’ என்று நற்கிள்ளி பாடிய வரிகளை சுமார் பேர் மூவாயிரம் கொண்ட அந்த முதலை வியூகம் வாங்கிப் பாடவே, போர்க்கீதத்தின் ஒலி கடலிலிருந்து ஆற்றினுள் புகுந்த கடலலைகளின் ஓசையைவிட மிக அதிகமானதால் கடல் அலை ஆற்றங்கரைகளில் மோதியபோது ஏற்பட்ட “சர் சர் சளூக் சரூக்” என்ற நற்கிள்ளியின் ஒலிகள் கீதத்துக்குத் தாளம் போடுவது போன்ற பிரமையை ஏற்படுத்தியது அக்கரையிலிருந்த யவனர்கள் இந்தக் கீதத்தைக் கேட்டதும் மண்டியிட்டு வாள்களை உயர்த்திக் கொண்டு ஆற்றைக் கடக்க படகுகளில் ஏற முற்பட்ட தும், தென்கரையிலிருந்த முதலை சற்றே தலையைத் திருப்பி நின்றது. அதுவரை மெதுவாக ஊர்ந்து முதலை வியூகத்தில் சென்ற முசிறியின் சாதாரண மக்கள் தங்கள் உடல்கள் மீது போர்த்தியிருந்த போர்வைகளை நீக்கி ஆற்றில் எறிந்து விடவே அந்தப் போர்வைகளுக்குள் ளிருந்து கவசமும் ஆயுதங்களும் தரித்த வீரர்கள் வெளிப் பட்டதைக் கண்ட அமைச்சர், பெரும் பிரமிப்பை அடைந்து பக்கத்தில் வந்து கொண்டிருந்த சஞ்சயனை நோக்கி ‘தூதரே! பார்த்தீரா? இது சாதாரண மக்கள் கூட்டமல்ல, படை” என்றார். 

“ஆம் சாதாரண மக்கள் உருவத்தில் வந்த சென்யம்” என்றான் சஞ்சயன். 

“இதை நாம் எதிர்பார்த்தோமோ?” என்று அமைச்சர் வினவினார். 

“எதைத்தான் எதிர்பார்த்தோம், இதை எதிர்பார்க்க?” என்று கேட்டான் சஞ்சயன். 

“இப்பொழுது நமது கடமை என்ன?” என்று அமைச்சர் வினவினார். 

“என்னைக் கேளுங்கள்! மிகவும் விஷயம் தெரிந்தவன்” என்ற சஞ்சயன், தனது இடையிலிருந்த வாளை உருவிக் கொண்டான். 

அமைச்சர் ஏற்கெனவே வாளை உருவிப் பிடித்திருந்ததால் இருவரும் வியூகத்தில் கலந்து கொள்ள முயன்றனர்..”யார் வியூகத்தில் புக முயல்வது?” என்று கடுமையாக விசாரித்தான் ஒருவன். 

“இவர் அமைச்சர் அழும்பில்வேள்” என்ற சஞ்சயன், “சேர மன்னர் தூதுவன் சஞ்சயன்” என்று அமைச்சரையும் அறிமுகப்படுத்தி, தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டான். 

கேள்வி கேட்ட வீரன் சிறிது சிந்தித்தான். “சரி வியூகத்துக்குள் வாருங்கள். மற்றவர்கள் இயங்குகிறபடி நீங்களும் இயங்குங்கள்” என்று உத்தரவிட்டுத் தனது இடத்தில் நின்று கொண்டான். 

யவனர் படை ஆற்றுப்படகுகளில் இயங்க முயன்றதும் சங்கமப் பகுதியிலிருந்து வந்த நற்கிள்ளி படகிலிருந்தபடியே ஒரு சங்கை எடுத்து மும்முறை ஊதினான், இடைவெளி விட்டு விட்டு, ஒவ்வோர் ஊதலுக்கும் ஒவ்வொருவிதமாக அசைந்தது முதலை வியூகம். முதலில் சங்கு ஒலித்ததும் அக்கரையை நோக்கித் திரும்பியது. இரண்டாவது முறை ஒலித்ததும் மண்டியிட்டு வியூகத்தின் வீரர்கள் தங்கள் விற்களைத் தரையில் ஊன்றினார்கள். மூன்றாவது முறை சங்கு ஒலித்ததும் அம்புகள் பறந்தன. அக்கரையி லிருந்த எதிரிகளை நோக்கிச் சேரர் படையின் அம்புகள் யவனர் லட்சியம் பெருத்த சேதத்தை விளைவித்தாலும் செய்யாமல் ஆற்றுப் படகுகளைச் செலுத்திய வண்ணம் வேகமாக வந்தனர். எதிரிகளின் அம்புகளிலிருந்து தப்ப அடிக்கடி படகில் படுத்து துடுப்புகளைத் துழாவி வந்தனர். இக்கரையை அடைந்ததும் சாரி சாரியாகக் கரையில் ஏறி யூகத்தைப் பிளக்க முற்பட்டனர். எதிரி கைகலக்கும் தூரத்தில் வந்ததும் வியூகத்திலிருந்து வீரர்கள் விற்களைத் தோளில் மாட்டிக் கோண்டு வாள்களை உருவிப் போரிட்டனர். 

இப்படி யவனரும் முசிறி காலாட்படையும் கை கலந்த சமயத்தில் இன்னும் தெற்கே பலமான ஓசை கேட்டது அங்கு அராபியர்கள் அணிவகுத்து வலப் புறமாகச் செல் வதைப் பார்த்த அழும்பில்வேள் “தூதுவரே! நீர் இங் கிருக்க வேண்டாம். வேகமாகப் புரவியில் சென்று அரபுக் குடியிருப்பும் புரட்சி செய்வதாக வஞ்சிப் பாசறையிலிருக் கும் சேரநாட்டுத் படைத் தலைவர் வில்லவன் கோதை என்று கூற, தூதன் பறந்தான் யிடம் சொல்லும் அவ்விடத்தை விட்டு.
 
இக்கரையில் யவனர்-முசிறிப் படையினர் போர் மும்முரமாக நடந்து கொண்டிருக்கையில், கடற்புரத்தில் பெரிய வெடிகள் கேட்டன. இதுவரை கடலில் நங்கூரம் பாய்ச்சி நின்ற யவனர் மரக்கலங்கள் மூன்றும் கடலுக்குள் பாய்விரித்து ஓடின. வேறு இரண்டு பெரிய போர்க் கலங்கள் வடக்கிலிருந்து இவற்றுடன்சேர்ந்து கொண்டன. 

அந்த ஐந்து மரக்கலங்களும் வரிசையாகக் கடலில் நுழைந்து கடற் கரையை யாரும் அணுகவொட்டாமல் சுவர்போல் அடைத்துக் கொண்டன. 

வியூகத்தின் ஒரு பகுதியிலிருந்து அந்தப் போர்க் கலங்களைக் கண்ட அமைச்சர், கடற்புறமிருந்து யாரும் வருவதோ, கடற்புறமாகத் தப்புவதோ முடியாத காரியமென்று தீர்மானித்தார். திடீரென்று அந்த மரக்கலங்களிலிருந்து பொறிகளால் வீசப்பட்ட பெரும் எரி பந்தங்கள் சுள்ளியாற்றுத் தென்கரையை நோக்கிச் சீறி வந்தாலும், சரேலென்று அவை கடற்புறம் போய் விழுந்தன.

அந்தப் போர்க்கலங்கள் இப்படிப் பந்தங்களை வீசிக் கொண்டே கடலில் சஞ்சரித்ததும் அவற்றை எதிர் நோக்கி வேறு நானகு மரக்கலங்கள் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தன. அவற்றிலொன்றில் நின்றிருந்த கடல்வேந்தன் ஆகாயத்தைப் பார்த்துப் பக்கத்தில் நின்றிருந்த நிலக்கள்ளியையும் பார்த்தான். “நிலக்கள்ளி! இந்தா பார், பூசம் வானில் கொத்தாகச் சுடர்விடுகிறது. அந்தச் சுடரோடு நாம் அளிக்கும் சுடர்களும் எதிரிகளுக்குத் தீ வைக்கட்டும்” என்று கூறிவிட்டு “இப்படி வா என்று அவளைத் தனது அறைக்கு அழைத்துச் சென்று அறைக்கதவைச் சாத்தித் தாளிட்டான். பிறகு முரட்டுத்தனமாக அவளை அணைத்து அவள் மெல்லிய உதட்டைக் கவ்வினான் தனது பற்களால். பிறகு தனது மார்புமீது அழுந்திக்கிடந்த அவள் மார்பு எழில் அழிக்கவும். அடக்கவும் முயன்று தனது மார்புடன் இறுக்கினான். 

எலும்புகளை முறித்துவிடுவதுபோல் அவன் அணைத்த முரட்டுத்தனத்தால் மூச்சுத்திணறிய நிலக்கள்ளி தனது இச்சையையும் காட்டி “இன்னும் சிறிது இறுக்கி…” என்று அவன் இதயத்தோடு பேசுவது போல் முணு முணுத்தாள். அதனால் கடல்வேந்தன் உணர்ச்சி வேகம் அதிகப்படவே அவன் சொன்னான்- “உன் இதயத்துடன் என்னால் பேச முடியும் நிலக்கள்ளி! ஆனால் உன் இதயத் துக்கும் எனக்கும் இடையில் இரண்டு விம்மும் தடைகளிருக்கின்றனவே. அவற்றைத் தண்டித்தாலென்ன?” என்று கூறி அவற்றை தண்டிக்க கையையும் முகத்தையும் கொண்டு போனான். அந்தச் சமயத்தில் கப்பல் பெரிதாக ஒருமுறை ஆடவே இருவரும் பக்கத்திலிருந்த பஞ்சணையில் விழுந்தார்கள்.

வெளியே போர் நிகழ முற்பட்டுவிட்ட அந்த நிலையிலும் தனது மனத்தை ஏற்கனவே கொள்ளைகொண்ட அந்தக கொள்ளைக்காரன் வெறியைக் கண்டு நகைத்தாள் நிலக்கள்ளி. அவள் அடுத்தமுறை நகைக்காதபடி தனது உதடுகளால் அவள் உதடுகளை மூடினான் வெறிபிடித்த கடல்வேந்தன் 

“போ…” என்று முணுமுணுத்தாள் அவள். 

“நாம் தேவையில்லை அதற்கு; நாமில்லாவிட்டாலும் நடக்கத் திட்டம் சிறிதும் பலவீனமின்றித் தீட்டியிருக்கிறேன்” என்ற கடல்வேந்தன், அவளைத் தனது உடலால் மறைத்தான், இப்படித்தான் எதிரிகள் படையும் இருக்குமிடம் தெரியாமல் மறைக்கப்படும். விடியும் நேரத்துக்குள் எதிரிகள் முறியடிக்கப்படுவார்கள். முதலில் அவர்களுக்குத் தரையில் தோல்வி. அடுத்துக் கடலில் தோல்வி. கடலில் அவர்களை மாமன்னரான செங்குட்டுவரே விரட்டுவார். “ஏன் தெரியுமா?’ என்று வினவினான். 

“ஏன்?” என்று ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காகக் கேட்ட நிலக்கள்ளி, அவனது கைகள் தனது உடலின் நாலா பக்கங்களிலும் நுழைய முயல்வதை உணர்ந்தாள். உணர்ந்தும் தடுத்தாளில்லை. நெகிழ்ந்தும் வளைந்தும் இடமே கொடுத்தாள். 

கடல்வேந்தன் விசாரித்தான் “பரணர், மன்னருக்கு உதவி அளித்திருக்கிறார். யவனர் சேஷ்டையை முன்னரே அறிந்து கடலில் அவர்களை மன்னர் விரட்டுவார் என்று கவிபாடியிருக்கிறார். அதை நான் நிலைநிறுத்த வேண்டும். மன்னர், கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் என் வரலாற்றில் விளங்குவார்” என்று கூறிக்கொண்டே அவளை வாரி எடுத்தான். வெளியே மரக்கலங்கள் இயங்கத் தொடங்கி விட்டன. கடல்வேந்தனும் நிலக்கள்ளியும் வந்தபோது கடற்போர் மூண்டிருந்தது. கடல்வேந்தன் தனது தளத்திலிருந்து போரை மிகுந்த திருப்தியுடன் கவனித்துக் கொண்டிருந்தான் கப்பல்கள் அவ்வப் பொழுது கழன்றதும், வேல்களையும் தீப்பந்தங்களையும் உத்திகளை கொண்டு விசிறியதையும் கண்ட கடல்வேந்தன், “நிலக்கள்ளி! எந்தப் போரிலும் முன்னதாக எதிரியின் பலாபலமறிந்து நாம் வகுக்கும் திட்டந் தான் முக்கியம்” என்றான். அந்தச் சமயத்தில் யவனர் கப்பல்கள் வீற்றிருந்த பாய் தீப்பிடித்ததால் ஏற்பட்ட குழப்பமும், கடல் வேந்தன் உதடுகளில் சிறிது புன்முறுவலை வரவழைத்தன.”நிலக்கள்ளி! எதிரி கப்பல் ஆடை இழந்து நிற்கிறது பார்”என்று கூறினான் பக்கத்தில் நின்ற யை  நோக்கி.

நிலக்கிள்ளியின் முகத்தில் வெட்கமும், வேட்கையும் தோன்றின. “உங்களுக்கு எப்பொழுதும் நிர் பேச்சுதான்” என்று கடிந்து கொண்டாலும் அவள் அந்த பேச்சில் எத்துனை உவகை கொண்டாளென்பதை அவள் குரல் நிரூபித்தது. 

இதற்கு பிறகு கடல்வேந்தன் பேசவில்லை. கரையில் நடந்த போரையும், கடற்போரையும் மட்டும் கவனித்துக் 
கொண்டிருந்தான். சுமார் அரை ஜாமம் கழித்துக் கரைப்புறத்தில் தூரத்தே பெரிய நெருப்பு ஒன்று தோன்றவே “நிலக்கள்ளி! வஞ்சிப் பாதையிலும் போர் மூண்டு விட்டது. இனி நாமிருவரும் போரில் இறங்க வேண்டியது தான். நீ போய் உன் போருடையை அணிந்து வா” என்றான். 

அவன் ஆணைப்படி நிலக்கள்ளி அவன் அறைக்குச் சென்றதும் அவனும் அவளைத் தொடர்ந்தான். தான் ஆடை களைய முற்பட்ட நேரத்தில் கடல்வேந்தன் உள்ளே வந்ததைக் கண்ட நிலக்கள்ளி “எங்கே வந்தீர்கள்?” என்று சீறினாள். 

“சேரநாட்டுக்கு ஒரு வீராங்கனையைச் சிருஷ்டிக்கப் போகிறேன்” என்று கூறிக்கொண்டு கட்டில் மேலிருந்த போருடையை அவளுக்குத் தானே அணிவித்தான். பிறகு அவள் தோள்களைப் பிடித்து எட்ட நிற்க வைத்து “இந்த உடை உனக்கு எத்தனை பொருத்தமாயிருக்கிறது!” என்று சிலாகித்து, “உபதளபதி! வாருங்கள்” என உத்தியோக முறையிலும் அழைத்து அவள் இடையில் தனது இடக் கையைச் சுற்றி அவளை அழைத்து வந்தான் தளத்துக்கு. தளத்தில் நின்று போர்க்கலங்களை ஒருமுறை கவனித்துவிட்டு “உபதளபதிக்கு ஒரு படகு சித்தமாகட்டும்” என்றான். 

படகு சித்தமானதும் அவளைப் படகில் தானே இறக்கிவிட்டு “நிலக்கள்ளி! அபாயத்தை நோக்கிச் செல்கிறாய். இன்னும் கால் ஜாமத்திற்குள் போர் கடுமையாகி விடும். நான் சொல்வதை நினைவில் வைத்துக்கொள். ஏதாவது சந்தேகம் வந்தால் இந்தக் கப்பலைக் கவனி. 

நான் செய்யும் சைகையை அனுசரித்து உன் மரக் கலங்களை இயக்கு” என்றுகூறி அவள் கையைத் தனது கையால் சிறிது அழுத்திக் கொடுத்தான். 

நிலக்கள்ளி படகில் விரைந்தாள், சற்று எட்ட இருந்த மாக்கலத்தை நோக்கி, தனது தளத்தில் நின்ற வண்ணம் நிலக்கள்ளியின் படகைக் கவனித்துக் கொண்டே இருந்தான் கடல்வேந்தன், பிறகு கரையை நோக்கி கண்களை ஓட்டினான். 

தரைப்போர் மிகக் கடுமையாக நடந்துகொண்டிருந்தது. மூன்று இடங்கள் எரிந்து கொண்டிருந்தன. அந்த மூன்று ஜவாலைகளும் வானத்தை எட்டிப் பிடிக்க முயல்வன பால் தீ நாக்குகளை நீட்டலாயின. 

“நான்காவது ஜ்வாலையைக் கடலில் நான் சிருஷ்டிக்க வேண்டும்” என்று கூறிக்கொண்டே தனது மரக்கலத்தின் பாய்களை நெருங்கினான் கடல்வேந்தன். அவன் நெருங்குவதைச் சற்று எட்ட இருந்த இன்னொரு மரக்கலத்திலிருந்து கிளேவியஸ் கவனித்துக் கொண்டிருந்தான்.

– கடல் வேந்தன்(நாவல்), முதற் பதிப்பு : டிசம்பர், 1984, பாரதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *