கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 9,205 
 
 

காத்து வலுவா வீச ,பேரிரைச்சலோடு பேயாட்டம்ஆடிக்கொண்டிருந்தது பனைமரங்கள் பனங்காட்டின் மணற்பரப்பில் கால் புதைத்து எட்டி நடை போட முடியாமல் மண்ணில் புதைதிருந்த பதினி கழையத்தின் உடைந்த சிறு சிறு ஓட்டாங்கனி துண்டுகளை கையில் பொருக்கிகொண்டே தனக்கு முன்பாக செல்லும் வேட்டைக்கார நண்பர்களின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்தங்கியே நடந்து வந்து கொண்டிருந்தான் ராஜன்.

பனங்காட்டின் இரைச்சலை கிழித்து கொண்டு அவனை நோக்கி விசில் அடித்தான் மாடசாமி

ஏல மயிராண்டி வேகமா வால ,அங்கஎன்னல புடுங்கவா செய்யிர,வா, வந்து இந்த மட்டைய கையில எடுத்துக்கோ மத்தவமம்லாம் ,ஆளுக்கு ஒரு பக்கமா போயி நின்னு கிடுங்கல சொல்றது வெளங்குதா சீக்கிரம் போயி நில்லுங்கள வேட்டைக்கு வந்திருந்த நான்கைந்து பயலுவலையும் , வேட்டைக்கு தயார் படுத்திகொண்டிருந்தான் .

லே ,ராஜன் சும்மா மட்டைய தூக்கிகிட்டு நிக்காம ,நான் இந்த வேலிய கலைச்சதும் எது ஓடுனாலும் அடிக்கனும் ,ஏல அருனு நீ நாலஞ்சி கல்ல எடுத்துக்கோ, தங்கராசு ,அய்யனு ,செல்வம் ,நீங்க மூனு பேரும் வேலிய சுத்தி நில்லுங்கல, கையில கம்ப சும்மா வச்சிருக்காம ,மொசலு வந்தாலும் ,அனிலு வந்தாலும் ஓங்கி குறி பார்த்து அடிச்சி தொலைங்கல, நான் இந்த தரங்க வச்சி ஒரே குத்தா குத்தி புடுரேன் என்றான் மாடசாமி

,கல்லு ,கம்பு ,பனைமட்டை ,தரங்கு இதுகல தூக்கி புடிச்சிகிட்டு, ஒற்றை பனைமரத்தில் விடிளியில் பதினி காய்ச்சுவதற்காக சாத்தி வைக்கபட்டிருக்கும் , முள் வேலி மீது போர் தொடுக்க தயாரான நிலையில் அத்துணை பேரும் வேலியை வெறித்து பார்த்து கொண்டு இருந்தனர்

ஏலே………… பேதில போரவைய்ங்கலா யார்ல நீங்க அங்க என்னல பன்றீய ஓடுங்கல அங்குட்டு வேலிக்கு சொந்தக்காரி,தூரத்திலிருந்து இவர்களை பார்த்துவிட்டு வேசாடு எடுத்து ,வாய்க்கு வந்த படி கதறி கொண்டே ஓடி வந்தாள்.பதினி காய்க்குரதுக்கு ,வேகாத வெயிலுல காட்டுவழியா நரிப்பையூர் தரவை வரை
கால் கடுக்க நடந்து போயி முள்ள சொமந்து வந்து அடுப்பெரிக்க வச்சிருந்தா.

மொசலு ,அனிலு புடிக்கியால வந்துருக்கிய ,எந்த ஊர் காரய்ங்கல நில்லுங்கல .சத்தமிட்டபடியே ஓடோடி வந்தால்

ஏல மயிராண்டி கலா ஒடுங்கல நிக்காதிய ,அவ கத்துர கத்துல அவ புருசன் எந்த பனையிலிருந்தாது பாலருவால விட்டு எரிய போராம்லே என்றான் மாடசாமி

அத்தனை பேருமே திரும்பி பார்க்காமல் ஓடி கொண்டிருந்தனர்

கால் புதைபடும் அந்த செம்மண் நிறைந்த மணல் வெளியில் புழுதி பறக்க திரும்பி பார்க்காமல் ஓடி கொண்டிருந்தனர்

எங்கே ஓடி வந்து பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் முசல் வேகத்தில் ஓட்டம் பிடித்து வந்ததில் பொட்டல் காடான அடர்ந்த கருவ மரம் சூழ்ந்த தரவையை வந்தடைந்திருந்தனர்

பெரிய இவா.. அவ என்ன தைரியம் இருந்தா நம்மளையே வெரட்டி வருவா திரும்பி போகும் போது அவா விடலிய கொளுத்தி விட்ருவம்ல என்று கோவத்தில் மூச்சிரைத்த படியே சொன்னான் தங்கராசு

அனைவரையுமே பசி தின்றது குடிப்பதற்கு கூட தண்ணீர் வாங்கி குடிக்க அக்கம் பக்கத்தில் அந்த காட்டில் எவர் வீடும் இல்லை

அந்த கூட்டத்திலெயெ வயதில் சிறியவன் ராஜன்,முதல் முறையாக இவர்களோடு வேட்டைக்கு வந்திருக்கிறான் தாகத்தில் மிகவும் களைத்து போயிருந்தான்

தரவையை கடந்து சென்றால் குதிரை மொழி ஊர் வந்து விடும் அங்கே எங்க அத்த வீடு இருக்கு அங்க போயி தண்ணி வாங்கி குடிக்கலாம்

பொடிநடையாக அத்தனை பேரையுமே தூரத்தில் பனைமர காட்டின் பின்புறமாக இருந்த குதிரை மொழி ஊரை நோக்கி அழைத்து சென்று கொண்டிருந்தான் மாடசாமி

போகும் வழியில் பனங்காட்டின் நடுவே இடிந்த கல் சுவருக்குள் காலில் அரக்கன் ஒருவனை மிதித்த படி நாக்கை துருத்தி கொண்டு மஞ்சள் நிற பட்டு புடைவையில் கல் சிலையாக அமர்ந்து இருந்தால் உலகம்மாள் ,அருகில் யாரோ அந்த வழியாக சென்றவர்கள் ஏற்றி விட்டு சென்ற ஊது பத்தி ஒன்று தனிமையில் புகைந்து கொண்டிருந்தது

கோவிலின் முன்பாக நின்று வணங்கி விட்டு பின்னர் நடக்க தொடங்கினர்

வாயா மாடசாமி கனமா பேரோட வந்துரிக்கிய போல எங்க கடக்குளிக்கவா போரிய என்று கேட்டு கொண்டே அனைவரையும் பனை ஓலையால் வேய பட்ட சிமெண்ட் தளம் பூசபட்ட வீட்டின் உள்பக்கம் வந்து அமர சொல்லிவிட்டு இரண்டு சொம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தால் மாடசாமியின் அத்தைக்காரி

குதிரை மொழியிலிருந்து தெற்கு பக்கமாக கண்ணை மூடிகொண்டு சிறிது தூரம் நடந்தால் நேராக கடலில் தான் விழ வேண்டும்

கடல் ரொம்ப பக்கமாக இருந்தது ,அலை ரொம்ப மோசமா இருக்கும் ஆழம் அதிகம் வீட்டில் அமர்ந்திருந்தவர்களின் காதில் அலையின் சப்தம் துல்லியமாக கேட்டு கொண்டிருந்தது

கடகுளிக்க போறோம் என்று சொன்னால் அம்மையிடம் சொல்லி கொடுத்து விடுவாள் என நினைத்து இன்னைக்கு ஸ்கூல் லீவுங்க்குரதுனால எல்லா பயலுவலுமா சேர்ந்து தேன் எடுத்து திங்க வந்தோம் அத்த

மாமாவ ஆள காங்கல எங்க போயிருக்காவ என்றான்

மாமா பனசீவ போயிருக்கவ ,இருந்து மாமா வந்த பெறவு போங்களேன் நொங்கு வெட்டி தருவாவ எல்லோரும் சாப்டு போங்க

இல்லதா ஒன்னும் வேணாம் வரும்போதுதான் எல்லோரும் சாப்டு வந்தோம் இன்னொரு நாளு நொங்கு திங்க வாரோம் இப்போ கெளம்புறோம் என சொல்லிவிட்டு நடக்க தொடங்கினர்

காடுகளில் ஏதாவது முயல் ,இருக்கிறதா என வேடிக்க பார்த்து கொண்டே கிழக்கு பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தனர் ,

மீண்டும் தரவை பகுதிக்கு வந்திருந்தனர் அங்குள்ள முள் வேலிகளில் கருவ மர தூர்களில் கூர்மையாக கண்களால் துலாவி கொண்டே போனதில் பெருத்த முயல் ஒன்று கண்ணில் பட்டது

முயலை கண்டது ராஜன் ,அவன் கண்ணுக்கு முயல் பட்டதில் சந்தோசம் தாங்கமுடியல அவனுக்கு இப்போ முயல பார்த்ததும் அத்தனை பேருக்குமே களைப்பு பறந்து போய்விட்டது

ராஜன் மிகவும் ஆர்வமானான்

கையில் இருந்த கம்புகளை இப்போது அத்துணை பேரும் இறுக பற்றிகொண்டனர்

எறிவதற்கு தோதான கருங்கல்லை அந்த காடுகளில் கிடந்ததை பொருக்கி கையில் வைத்து கொண்டனர்

இவர்களின் அசைவை கவனித்த முயல் பாய்ந்து தப்பியோடியது அனைவரும் கல்லை கொண்டு குறி பார்த்து எறிந்தனர்

தாக்குதலில் இருந்து அடி படாமல் புயலாக ஒடியாது ,முயலை பிடித்தே ஆகவேண்டிய வெறியில் அனைவரும் முயலை பின் தொடர்ந்து காலில் குத்திய முல்லை கூட பொருட்படுத்தாமல் விரட்டி ஓடினர்

அடர்ந்த முள் வேலி ஒன்றுக்குள் போய் ஒளிந்து கொண்டது

சிறுவன் ராஜனுக்கு கால் பதத்தில் ஆழமாக குத்தியிருந்த முல்லை ,அருண் எடுத்து விட்டான் ரத்தம் கசிந்து வந்தது

,வழியால் துடித்து கொண்டிருந்தான் கருவை மரத்தின் இளம் கொழுந்து இலைபகுதிகலை பறித்து உள்ளங்கையில் வைத்து கசக்கி சாறு பிழிந்து முள் குத்திய இடத்தில் வைத்து தேய்த்து விட்டு கொண்டான் ராஜன்

முள் குத்திய வலி அவனுக்கு அப்போது அவ்வளவாக இல்லை அவன் கவனம் எல்லாமே முயலின்மீதெ இருந்தது ,எறிவதற்கு சில கல்லை பொருக்கி கொண்டான்

முயல் மறைந்து பதுங்கி இருந்த முள் வேலியை சூழ்ந்து கொண்டனர் அத்தனை பேரின் கையிலும் கம்பு இருந்தது ,மாடசாமி இரும்பால் ஆன தரங்கு என்ற கூர்மையான ஈட்டி வைத்திருந்தான்

மாடசாமியின் வழிகாட்டுதலின் பேரில் வேலிக்குள் சிலர் கல்லை கொண்டு தொடர்ந்து எரிய தொடங்கினர்

வேலியை விட்டு ஓடி வரும் போது குறி பார்த்து தாக்கி விடுவதுதான் திட்டம்

தங்கமும் ,ராஜனும் கல்லை கொண்டு ஓங்கி ,ஓங்கி வெலம் கொண்டு எறிந்தனர் மற்றவர்கள் எந்த திசையில் தெறித்து ஓட போகிறது, தாக்கிவிடலாம் என வெறித்து பார்த்து கொண்டிருந்தனர் ,

இவர்களின் செயல்களை எல்லாம் தூரத்தில்
மொட்டை பனைமர பொந்திலிருந்து உருண்டையான கண்களால் ஆந்தை ஒன்று கவனித்து கொண்டிருந்தது

மாரி மாரி முள் வேலிக்குள் கல்லெறி விழுந்துகொண்டிருந்தது ,சிறுவன் ராஜன் எறிந்த சிறிய கருங்கல் முயலின் காலில் வசமான தாக்குதலாக இருந்ததில் வேலியை விட்டு வெளியேறி ஓட பாய்ந்து வந்தது முயல்

மாடசாமியின் கூர் ஈட்டி முயலின் வயிற்று பகுதிக்குள் இறங்கி இருந்தது

சப்தமில்லாமல் துடிதுடித்துகொண்டிருந்தது முயல், மொட்டை பனைமரத்திலிருந்து ஆந்தை அலறி கொண்டே கொண்டே பறந்து சென்றது

அந்த காட்டில் நீண்ட நேரம் வண்டுகளினால் தொடர்ந்து எழுப்பி வந்த ஒருவகையான ஒலி இப்போது முழுமையாக நின்றிருந்தது வேட்டையாடியவர்களின் மகிழ்ச்சியை அந்த காடு கனத்த மௌனத்துடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது

மகிழ்ச்சி பொங்க ஊர் நோக்கி நடந்து போய் கொண்டிருந்தனர் ராஜனின் கைகளில் முயல் இருந்தது அவனுக்கு தூக்கி செல்வதற்கு சற்று கனமாக இருந்தது ,முயலின் உடலில் இருந்த ராஜனின் கைகளில் கசிந்திருந்த ரத்தம் மிகுந்த சூடாக இருப்பதை உணர்ந்தான் ,முயலின் உடலில் சற்று அசைவு இருந்தது ,அதன் முகத்தை கூர்ந்து பார்த்தான் அதன் கண்கள் அவனை பார்த்து எதையோ சொல்ல வந்து சொல்லாமல் மெல்ல சுருங்கி கொண்டிருந்தது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *