வாய்ப்புகள் உன்னாலே உருவாகின்றன

6
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 13,479 
 
 

மூன்றாம் குறுக்குத்தெருவைக் கடந்து புனிதா வீட்டின் வாயிலுக்கு அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து வினிதா, திவ்யா, புவனா ஆகிய தோழிகள் வந்தனர். வீட்டின் கதவு மூடப்பட்டிருந்ததைக் கண்டதும் ஏமாற்றம் அடைந்தனர். உடனே புவனா தனது மொபைல் மூலம் புனிதாவை அழைத்தாள். ஆனால் வீட்டிற்குள் ரிங்டோன் ஒலிப்பதை வினிதா கவனித்தாள். உடனே தோழிகளையும் கவனிக்க அறிவுறுத்தினாள்.

வீட்டுக்குள்ள சவுன்டு கேக்குது பாருங்கடி, என்று வினிதா கூறினாள்.

அப்போது அந்தத் தெருவின் குப்பைகளை எடுத்துச் செல்லும் குப்பை வண்டி வந்தது. வாசலில் இருந்த கூடையை எடுத்து அதிலிருந்த குப்பையைக் கொட்டினான் தொழிலாளி. ஓடிச் சென்ற திவ்யா அவனைத் தடுத்தாள். கூடையில் பூச்சி மருந்து தீர்ந்து போன நெகிழிப் பெட்டி இருந்தது. பதறிப்போன திவ்யா உடனே வீட்டின் ஜன்னல்களைச் சென்று கவனித்தாள். அப்போது வீட்டினுள் புனிதா மயங்கிக் கிடந்தாள்.

அப்போது ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து வீட்டு உரிமையாளர் வந்தார்.

சார், புனிதா வீட்டுக்குள்ள மயக்கத்துல இருக்கா, பாய்சன் சாப்ட்டுருக்கா போலத் தெரீது சார், இப்பவே பின் வாசல் டோரத் திறந்து விடுங்க சார் என்று கதறினாள் திவ்யா.

நானும் புனிதாவுக்குக் கால் பன்னேம்மா, ஆனா ரிங் போயிட்டே இருந்துச்சுன்னுதாம்மா பயந்து போய் இப்போ இங்க வந்தே என்று உரிமையாளர் வீட்டைத் திறக்கச் சென்றார்.

வீட்டைத் திறந்ததும் உள்ளே சென்றார்கள் தோழிகள். டைனிங் டேபிள் அருகே புனிதா மயங்கிக்கிடந்தாள். “புனிதா” என்று கதறிக் கொண்டே சென்ற புவனா உடனே தன்னீர் கொண்டு முகத்தில் தெளித்தாள். ஆனால் புனிதா எழவில்லை. மூன்று தோழியரும் அழுது கொண்டே ‘சார்’ என்று ஓடி வந்தனர்.

புனிதாம்மா என்று துடிதுடித்துப் போனவர் உரத்த குரலில் சத்தமிட்டுக் கொண்டே வந்து புனிதாவுக்கு என்னம்மா ஆச்சு என்று கேட்டார்.

டைனிங் டேபிளில் இருந்த டம்ளரில் எஞ்சியிருந்த விஷம் கலந்த பால் கிடந்தது.

இந்த விஷயம் போலீஸ் காதுக்குப் போச்சுன்னா எனக்குதாம்மா பிரச்சனை, உடனே ஹாஸ்பிட்டலுக்குப் போகலாம் என்று தனது காரில் அழைத்தார் உரிமையாளர்.

சார் நான் வீட்டை ஒதுங்க வெச்சுட்டு வர்றேன் சார் என்று கூறிய வினிதா புவனாவையும் திவ்யாவையும் மட்டும் அனுப்பி வைத்தாள். வீட்டிற்குள் வந்த வினிதா முதலில் பாலினை கழிவுநீர்க் கால்வாயில் ஊற்றிவிட்டு பாத்திரங்களைக் கழுவி வைத்தாள். புனிதாவின் அறைக்குள் சென்ற வினிதா புனிதாவின் டைரியை எடுத்துப் பார்த்தாள். அதில் வினிதாவுக்குத் தெரிந்த அனைத்து விசயங்களும் இருந்தன. அதில் மனதைப் பெரிதளவில் பாதிக்கும் எந்த நிகழ்வும் இல்லை. பின் புனிதாவின் கணினி சுவிட்ச் ஆன் செய்த நிலையிலேயே இருப்பதைக் கண்டாள். அதில் புனிதா வழக்கம் போல் வரைந்து கொண்டிருக்கும் ஓவியங்கள் அழகாய் கண்களைக் கவர்ந்தவையாய் காணப்பட்டன. பின் அவளது ஆப்பிள் மொபைலை எடுத்து அவளுக்கு வந்த அனைத்து அழைப்புகள், எஸ்எம்எஸ், வாட்சப் சேதிகள், ஃபேஸ்புக் மெசேஜ் என்று அனைத்தையும் பார்த்தாள். ஆனால் மூன்று நாட்களாக புனிதா ஃபேஸ்புக், வாட்சப் என்று எதையும் பயன்படுத்தவில்லை. தோழிகளின் அழைப்பைத் தவிர்த்து வேறு யாருடைய அழைப்புகளையும் அவள் ஏற்கவில்லை. அனைத்தும் மிஸ்டு காலாக இருந்தன. குழம்பிப் போன வினிதா சற்று அமைதியாக அமர்ந்து சிந்தித்து வந்தாள். அவளது பார்வைக்கு கணினி தெரிந்தது. அதன் திரையில் புனிதா வரைந்திருந்த ஓவியம் அவள் கண்களுக்குத் தெரிந்தது. அவள் மீது இருந்த கவலை ஓவியங்களை இரசிக்க விடவில்லை. அப்போது புனிதாவின் மொபைலிற்கு ஒரு கால் வந்தது. அது திவ்யா அழைத்தது என்றதைக் கண்டவுடன் உடனே எடுத்துப் பேசினாள்.

ஏய் வினிதா, வீட்ல அப்புடி என்னடி செஞ்சுட்டு இருக்க, சீக்கிரமா முடுச்சுட்டு வாடி என்று திவ்யா கேட்டாள்.

இதோ வந்துடுறேன்டி என்று வினிதா கூறினாள்.

ஏ எரும, டாக்டர் ரொம்ப சீரியஸ்னு சொல்றாங்கடி, நீ என்னன்னா அசால்ட்டா இருக்க என்று அதட்டினாள் திவ்யா.

என்னடி சொல்ற, ஆமடி, நானும் ரொம்ப அசால்ட்டா இருக்கேன்டி, புனிதா எப்ப இதக் குடுச்சாளோ, அது என்னமும் பன்னிடுச்சோ தெரீல, இப்பவே கிளம்பி வர்றேன்டி என்று வினிதா கூறினாள்.

ஏ இந்தா உன்னிட்ட ஹவுஸ் ஓனார் பேசுறாராம்டி என்று கொடுத்தாள் திவ்யா.

வினிதாம்மா, பதட்டம் இல்லாம கிளம்பி வாம்மா, அவசரத்துல தப்பு நடந்துடக்கூடாதும்மா, அப்புறம் நேத்து சாயங்காலம் புனிதாவுக்கு யாராவது கால் பன்னி பேசிருக்காங்களாம்மா என்று கேட்டார் உரிமையாளர்.

இல்லீங்க சார், எங்களத் தவிற யாருட்டயும் அவ பேசல சார், ரொம்ப பயமா இருக்கு சார் என்று வினிதா கூறினாள்.

இல்லம்மா போலீஸ் கேஸ் ஆச்சுன்னா என்னையும் என்குயரி பன்னுவாங்கம்மா, அதான் என்று உரிமையாளர் கேட்டார்.

பயப்புடாதீங்க சார், அவ எங்கள விட்டு யாருட்டயும் பேசல சார், எந்த காலும் அட்டன் பன்னல சார், ஆனா இந்த விசயத்த இப்பவே அவ பேரன்சுக்கு இன்ஃபாம் பன்ன வேணாம் சார் என்று வினிதா கூறினாள்.

அதெப்புடிம்மா, ஏதாச்சு நடந்தா அவங்க என்னையும் கேப்பாங்களேம்மா என்று கேட்க

அப்புடி எல்லாம் நடக்காது சார், கண்டிப்பா புனிதாவுக்கு எதுவும் ஆகாது சார், நா வணங்குற தெய்வம் அவளுக்கு துணயா இருக்கும் சார் என்று வினிதா கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

பின் வீட்டிலிருந்து கிளம்பிய வினிதா அவர்கள் இருந்த மருத்துவமனையை அடைந்தாள். அதற்குள் புனிதாவிற்கு சற்று நினைவு திரும்பும் நிலை வந்து விட்டது. இன்னும் சில நிமிடங்களில் விழித்து விடுவாள் என்று செவிலியர் கூறியதும் அனைவரும் பெருமூச்சு விட்டனர். சற்று நேரத்தில் மருத்துவர் வந்து கவனித்து விட்டு தோழிகளை புனிதாவைச் சென்று பார்க்க அனுமதி;த்தார். தோழிகள் மட்டும் முதலில் சென்று பார்த்தனர். புனிதா சற்று விழிகளைத் திருப்பிப் பார்த்தாள்.

என்னை எதுக்குடி காப்பாத்துனீங்க, நா எதுக்குடி உசுரோட இருக்கனும், இந்த பூமில பெறக்குறதுக்கு கூட யாராச்சும் ரெக்கமண்டேசன் தந்ததுக்கு அப்புறமா பெறந்துருந்தா நல்லா இருந்துருக்கும் போல என்று கோபத்தோடு கத்தினாள் புனிதா.
புனிதா, ஏன்டா இப்புடிப் பன்னிட்ட, உனக்கு ஏதாச்சும்னா நாங்க இருக்கோம்லடா, உனக்கு என்னடா பிராப்லம், நீ எங்களுக்கே அட்வைஸ் பன்னுவ, நீ எதுக்குடா இப்புடி முடிவு பன்ன என்று தோழிகள் அழுதுகொண்டே கேட்டனர்.

இந்த லைஃபே பிராப்லம், நா இனிமே வாழ்றதே பிராப்லம்தா, அதா எதுக்கு என்னக் காப்பாத்துனீங்க என்று புனிதா கேட்டாள்.

அப்புடீல்லாம் பேசாத புனிதா, எதுன்னாலும் சொல்லிடும்மா, பாத்துக்கலாம் என்று திவ்யா கூறினாள்.

என்னத்தப் பாத்துக்கலாம், இந்த ஆஸ்பத்திரீல ஏதும் ரெக்கமண்டேசன் கேக்கலயா, அதிசயமா அட்மிட் பன்னிட்டாங்களாக்கும் என்று விரக்தியோடு கூறினாள் புனிதா.

சரி புனிதா, நீ ஃப்ரீயா ரெஸ்ட் எடும்மா என்று கூறிவிட்டு தோழிகள் மூவரும் வெளியே வந்தனர். பின் வீட்டு உரிமையாளரை உள்ளே சென்று பார்க்குமாறு கூறினர். அவரும் நோயாளிப்படுக்கை அறைக்குள் சென்றார்.

புனிதா, என்னம்மா, ஏம்மா இப்புடிப் பன்னிட்ட, என்ன ஊ அப்பாவா நெனக்கிறதா சொல்லுவீயே, ஏம்மா எதுனாலும் சொல்லிருக்கலாமேம்மா, என்று உரிமையாளர் கதறினார்.

அப்பா, இந்த ஒலகத்து மேல எனக்கு இருந்த நம்பிக்கயே போச்சுப்பா, எதுக்கெடுத்தாலும் ரெக்கமண்டேசன் கேக்குறாங்க, ரியல் ஸ்கில்ஸ்க்கு நோ ரெஸ்பெக்ட் பட் ரெக்கமண்டேசன்க்கு எல்லாம் என்று கண்ணீரைச் சிந்திக் கொண்டு கூறினாள் புனிதா.
அப்போது மருத்துவரும் காவல்துறை பெண் ஆய்வாளரும் வந்தனர்.

ஓகே, ஜஸட் ஃபார் டென் மினிட்ஸ், நீங்க வெளில இருங்;க, நா என்குயிரி பன்னனும் என்று ஆய்வாளர் அனைவரையும் அனுப்பினார்.

வெகுநேரமாக முயன்ற ஆய்வாளரிம் உண்மையைக் கூற மறுத்து விட்டாள் புனிதா. பின் அவளை அமைதிப்படுத்துவதற்காக அங்கிருந்து புறப்பட்டார் ஆய்வாளர். அவர் செல்வதைப் பார்த்ததும்

கேட்டுக்கோங்க மேடம், இப்ப சொல்றேன், உங்கள அப்பாயின் பன்னிருக்க அந்த கவர்மன்ட் தா நா இந்த முடிவ எடுத்ததுக்குக் காரணம், இந்த கவர்மன்ட் தா என்ன எதுக்குமே லாயக்கு இல்லாதவன்னும், ரெக்கமண்டேசன் இல்லாததால நா ஒரு தகுதியும் இல்லாதவன்னு தொரத்திருக்கு, போய் அந்த கவர்மன்ட் மேல ஆக்சன் எடுங்க என்று உரத்த குரலில் கூறினாள் புனிதா.

பின்பு விசாரணை மூலம் புனிதா ஓவியக்கலையில் சிறந்த நிலையில் இருப்பவள் என்றும், காகிதங்கள், திரைகள் மட்டுமன்றி கணினியிலும் நன்றாக ஓவியம் வரைபவள் என்பதையும் தெரிந்து கொண்டார். ஒரு வாரத்திற்கு முன் மாநில அளவிலான ஓவியர்களுக்கான போட்டியின் தகுதிச்சுற்றிற்கு வாய்ப்பு தராமல் அரசு அதிகாரிகள் அவளை தேவையில்லாத காரணங்களைக் கூறி அவமதித்து அனுமதி மறுத்ததையும் தெரிந்து கொண்டார். பின் புனிதாவிடம் சென்று

கவர்மன்ட் நடத்துற போட்டிய முழு கவர்மன்ட்டும் நடத்துறதில்லை புனிதா, ஏதோ ஒன்னு ரெண்டு அதிகாரிங்க செய்ற தப்புக்காக அரசாங்கமே ஒன்ன ஒதுக்கிட்டதா நெனக்காதம்மா, இன்னும் நீ உன் தெறமய வெளிப்படுத்து, அரசாங்கமே ஒன்னத் தேடி வரும் என்று அறிவுரை கூறினார்.

பின் மருத்துவ சிகிச்சை முடிந்த பின் சில நாட்கள் சாந்தமாக செயல்பட்டு வந்தாள் புனிதா. ஒரு நாள் வீட்டிற்குச் செல்லும் வழியில் ஒரு சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனம் தீவிபத்துக்குள்ளாகி இருந்ததைக் கண்டாள். நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மின்கம்பத்திலிருந்து விழுந்த தீப்பொறிகளினால் அந்த விபத்து ஏற்பட்டதாக தெரிந்து கொண்டாள்.

உடனே தனது இரு சக்கர வாகனத்தை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு விபத்து நிகழ்ந்த வாகனத்தை நோக்கிச் சென்றாள். அங்கு ஓட்டுநர் வெளியில் இருந்ததால் தப்பியிருந்ததைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தாள்.

அவரே அவ்வாகனத்தின் உரிமையாளர் என்றும் அந்த வாகனத்தில் அலங்காரத்திற்கான திரைகள் இருந்ததாகவும் அவை தீக்கு இரையானதையும் கவலையோடு தெரிந்து கொண்டாள். அவை முழுவதும் அரசியல் தலைவர் ஒருவரது இல்லத் திருமணத்தை அலங்கரிப்பதற்காக கொண்டுவரப்பட்டவை என்றும் தெரிந்து கொண்டாள். அன்று மாலை திருமண நிச்சயம். உடனே அவரது நிலைக்காக அவள் உதவுவதாக வாக்களித்தாள். அவள் தனது திட்டம் என்னவென்பதை அவரிடம் தெரிவித்தாள்.

மேலும் அவரது நிலையை தெரிந்து கொண்டால் யாரும் கோபமடைய மாட்டார்கள் என்று ஆறதலும் கூறினாள். தனது ஓவியக் கலையை வெளிப்படுத்துவதற்கு அதனை சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டாள் புனிதா. தனது திறமையால் கண்களைக் கவரும் ஓவியங்களைப் படைத்தாள். மேலும் அவள் படைத்திருந்த முப்பரிமாண 3டி ஓவியங்களைப் பார்த்தால் உண்மையான உருவங்களாகவே தெரிந்தது. அதனை அந்த நபரோடு சேர்ந்து அரசியல் தலைவரது இல்லத் திருமண நிச்சயத்திற்கு எடுத்துச் சென்று அலங்கரித்தாள்.

அரசியல் தலைவரை சந்தித்து அந்நபரை தனது உறவினர் வழியில் சகோதரர் என்றும் அவருக்கு நேர்ந்ததை விளக்கிக் கூறினாள். ஓவியங்களாலான அலங்காரத்தைப் பார்க்க வந்த அரசியல் தலைவருக்கு பெரும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. அதுவரை எந்த ஒரு அரசியல் தலைவரது இல்ல நிகழ்வுகளிலும் அப்படியொரு அழகான ஓவியங்கள் திரைகளில் இருந்தது கிடையாது. அந்த அளவிற்கு அவை முழுவதும் கண்களைக் கவரும் வண்ணம் இருந்தன. நுழைவாயிலில் இருந்து சிறிது தொலைவிற்கு பாதையின் இருபுறமும் இருந்த முப்பரிமாண 3டி ஓவியத்தில் பனிமலைகளும் அவற்றிற்கு மேல் மேகங்கள் நகர்ந்து செல்வதைப் போல் இருந்தன. மேலும் ஒரு ஆறு செல்வதைப் போலும் இருந்தது. நிகழ்வுக்கு வந்த அனைவரும் அந்த ஓவியங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.

கல்வி மற்றும் கலைத்துறை அமைச்சர் நிகழ்வுக்கு வந்திருந்தார். அவரது கண்களைக் கவர்ந்த அந்த ஓவியங்கள் அவரை நிகழ்வைக் காண விடவில்லை. நிகழ்வைக் காட்டிலும் அந்த ஓவியங்களையே பலரும் கண்டு மகிழ்ந்தனர். அவற்றைப் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றனர். அவற்றைப் படைத்தவர் யார் என்பதை அரசியல் தலைவரிடம் கேட்ட போது அவர் புனிதாவை அழைத்து வந்து காட்டினார். அடுத்த வாரம் நிகழவிருக்கும் கல்வி வளர்ச்சிப் பெருவிழாவை அலங்கரிக்க புனிதாவிடம் ஓவியங்கள் படைத்துத் தருமாறு கேட்டார் கல்வி மற்றும் கலைத்துறை அமைச்சர். அதற்கு வேண்டிய செலவுகளுக்குத் தனது காசோலையிலிருந்து ஒரு தொகையை எழுதிக் கொடுத்தார்.

மகிழ்ச்சி அடைந்த புனிதா உடனே தனது தோழிகளிடமும், பெற்றோர் என்று அனைவரிடமும் தெரிவித்தாள். தனது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்திய புனிதா கண்களைக் கவரும் ஓவியங்களைப் படைத்துக் கொடுத்தாள். அவளது ஓவியங்களை நிகழ்ச்சிக் கூட்டத்தில் புகழ்ந்தார் அமைச்சர். அப்போது புனிதாவை ‘எதற்கும் பயனற்றவள்;’ என்று ஒதுக்கிய அரசு அதிகாரியும் கூட்டத்தில் அமர்ந்திருந்தார். பின் புனிதாவை மேடைக்கு அழைத்த அமைச்சர் அந்த ஓவியங்களைப் படைத்தவள் என்று அனைவருக்கும் அறிமுகம் செய்தார். திடீரென்று எழுந்த அந்த அரசு அதிகாரி

இதற்கெல்லாம் இந்தப் பொன்னப் பெரிய ஆர்ட்டிஸ்ட்டா அக்சப்ட் பன்னிக்க முடியாது சார், நான் சொல்றத இந்தப் பொன்னு ஓவியமாகப் வரஞ்சு குடுத்தா மட்டுந்தா என்னால் ஏத்துக்க முடியும் என்று கூறினார்.

உங்க விருப்பம் என்னவா இருந்தாலும் இந்தக் கூட்டம் முடிவதற்குள் என்னால நிறைவடையச் செய்வேன் என்று புனிதா கூறினாள்.

அதனைக் கேட்டதும் பொறாமை கொண்டவர் இந்த நாட்டு மக்களோட மனச அப்டியே ஓவியமா வரைஞ்சு கொண்டுவா என்று கேட்டார். அனைவரும் அதிர்ந்து பார்த்தனர். புண்ணகைத்தாள் புனிதா. உடனே தனது மடிக்கணினியை எடுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் சென்று மூன்று முப்பரிமான ஓவியங்களைப் படைத்தாள். அதனை அனைவரும் கண்டனர். அவற்றில் ஒரு மீனவன் டால்பின் மீன் ஒன்றைப் பிடிக்க முயன்றவாறும் கடல் சீற்றத்திற்குள் சிக்கியவாறும் பின் அந்த டால்பின் அவனைக் கரைக்குக் கொண்டு சென்றவாறும் இருந்தது.

என்னம்மா, மக்கள் மனசக் கேட்டா கடல் சீற்றத்தக் காட்டுற, மக்கள் சீற்றம் கொள்கிறார்களோ என்று ஏளனமாக சிரித்தார்.

சார், இந்த டால்பின் தன் உசுரப் பறிக்க வருபவன விட பலசாலிதான். இருந்தாலும் அவனுக்கு ஒரு கஷ்டம்னு வந்ததும் இரக்க கொணத்தோட அவனைக் கரைக்குக் கொண்டு வருது, இதே போலத்தா இந்த நாட்டு மக்களும் தங்களோட பலத்த மறச்சுட்டு எறக்க கொணத்தால எதிரிய வெல்பவங்க என்று புனிதா அதிரடியாக பதிலளித்தாள்.

அதிர்ந்து போனர் அனைவரும், புனிதாவின் திறமையை தொலைக்காட்சிகள், வானொலி அலைவரிசைகள், முகப்புத்தகம், வாட்சப் என்று அனைத்திலும் காணொளிக்காட்சியாகவும் ஆடியோவாகவும் கண்டு பலர் மகிழ்ந்தனர். புனிதாவின் ஓவியத் திறமைக்கு அந்நாட்டு அரசு சிறந்த ஓவியர் – ருக்கான விருது வழங்கி சிறப்பித்தது. அந்தக் கூட்டத்தில் பாதுகாப்பிற்காக பணிபுரிந்து கொண்டிருந்த காவல்துறைப் பெண் ஆய்வாளர் புனிதாவை நோக்கி வந்தார்.

கங்ராஜுலேசன்ஸ் புனிதா, எதுக்கும் லாயக்கு இல்லன்னு உன்ன யாரு தொரத்துனாங்களோ அந்த அரசு அதிகாரியே உன் தெறமய உலகத்துக்கு காட்டுறதுக்கு வாய்ப்புத் தந்துட்டாரு பாத்தீயா என்று மருத்துவமனையில் புனிதாவிற்கு அறிவுரை கூறிய காவல்துறை ஆய்வாளர் வாழ்த்தினார்.

பெரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட புனிதா அவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்து விட்டு சென்றாள். யாரும் தனது திறமையைக் காண வர மாட்டார்கள் என்று தற்கொலைக்கு முயன்ற புனிதாவை அன்று பல தொலைக்காட்சி நிறுவணங்கள் பேட்டிக்காக போட்டியிட்டு வந்தன. அவளது தோழிகளும், பெற்றோரும், வீட்டு உரிமையாளரும் அவளது இந்த வெற்றி கண்டு பெரிதும் மகிழ்ந்தனர்.

Print Friendly, PDF & Email

6 thoughts on “வாய்ப்புகள் உன்னாலே உருவாகின்றன

  1. போட்டி ல கலந்துட்டு தான் ஜெயிக்கனும்னு இல்ல. நாமே முயற்சி செய்யனும் போராடனும். வெற்றி நிச்சயம்

  2. யாரு சான்ஸ் தர்றாவங்குறத விட எப்டி பிரசன்டேசன் குடுக்றோம்குறதுல வெற்றி

  3. மிகவும் அருமை ✍✍✍✍✍✍✍✍✍
    மேலும் வளர்ச்சி ✍✍✍✍✍✍✍✍✍✍✍
    பேறு வாழ்த்துக்கள் ✍✍✍✍✍✍✍✍✍✍✍
    என்றும் அன்புடன் உங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *