யாருக்கு வேண்டும் வரம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 24, 2021
பார்வையிட்டோர்: 4,660 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

gokulam_tamil1991-12-01_0014-picஓர் ஏழைக் குடியானவள் கண்ண பிராளை மிக பக்தியுடன் பூஜை செய்து வந்தாள். கண்ணன் அவனுக்கு இரங்கி, ”உனக்கு என்ன வேண்டும்? கேள், தருவேன். ஆனால் ஒன்று, உனக்குத் தருவதை நான் எல்லோருக்கும் தருவேன். எதையும் உனக்கு மட்டும் என்று தருவதற்கு முடியாது” என்றான்.

“கோபாலா! எனக்கு வேண்டியதை நீ தந்தால் போதும். அதை நீ எல்லோருக்கும் தந்தாயானால் எனக்கு என்ன ஆட்சேபணை? நான் அப்படித் துர்ப்புத்திக்காரன் அல்ல. எனக்கு யார் பேரிலும் அசூயை இல்லை” என்றான் குடியானவன்.

“நீ மிகவும் நல்லவன். எனக்குத் தெரியும். உனக்கு வேண்டியதைக் கேள். மனைவியுடன் யோசித்துக் கேள். பிறகு மாற்றிக் கொள்ள முடியாது” என்றான்.

“அப்படியானால் மனைவியைக் கேட்டுச் சொல்கிறேன். எனக்கு மூளை உன்னைப் பார்த்ததும் கலங்கிப் போயிற்று. நாளை கேட்கலாமா?” என்றான் குடியானவன்.

“அப்படியே” என்றான் கண்ணன்.

குடியானவன் அன்றிரவு தன் மனைவியுடன் யோசனை செய்தான். தன் புருஷன் பெற்ற வரத்தைக் கேட்டு மனைவிக்கு வெகு சந்தோஷம். இதைக் கேட்கலாமா, அதைக் கேட்கலாமா என்று இருவரும் வெகு நேரம் யோசித்துக் கடைசியாக முடிவு செய்து கொண்டார்கள்.

மறுநாள் குடியானவன் கண்ணனைத் தியானித்தான். ஆண்டவன் சிரித்துக் கொண்டே தரிசனம் தந்தான்.

“தம்பீ, என்ன கேட்கிறாய்?” என்றான்.

“கருணைக் கடலே, கோபித்துக் கொள்ள வேண்டாம். நான் ஏழை. எனக்கு அறிவு அதிகமில்லை. ஆனபடியால், நீ சொல்லியபடி என் மனைவி யுடன் யோசித்தேன்” என்று ஆரம்பித்தான்.

கண்ணன், ”என்ன வேண்டுமோ அதைக் கேட்டுப் பெறுவாய். அது ஊரில் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்” என்றான் கண்ணபிரான்.

“ஆண்டவனே என் பெட்டி நிறையப் பணம் வெள்ளி ரூபாயாக இருக்க வேண்டும். எவ்வளவு எடுத்தாலும் குறையக்கூடாது. இதையே கேட்கிறேன்” என்றான் குடியானவன்.

“அப்பனே உனக்கு ஏன் பண ஆசை பிடித்து விட்டது?” என்று சொல்லிக் கோவிந்தன் தாமதித்தான்.

gokulam_tamil1991-12-01_0015-picதான் கேட்ட வரத்தையே தர வேண்டும் என்று குடியானவன் வணக்கத்தோடு பிடிவாதம் செய்தான்.

“சரி, அப்படியே!” என்று சொல்லிக் கோவிந்தன் மறைந்து விட்டான்.

பணம் இருந்தால் எல்லாமே பெறலாம். அவ்வப்போது என்ன வேண்டுமோ அதைப் பெறலாம். ஆனபடியால் இந்த வரத்தைக் கேள் என்று தன்னுடைய மனைவி சொன்னதைக் குடியானவன் சரி என்று ஒப்புக் கொண்டு இவ்வாறு கேட்டு வரம் பெற்றான்.

வரத்தின்படி பெட்டியில் ரூபாய் நிறைந்து விட்டது. உடனே குடியானவன் கை நிறைய ரூபாய் எடுத்துக் கொண்டு, அடுத்த ஊரில் துணிக் கடைக்குச் சென்றான். வீட்டுக்காரிக்கு நல்லதாக புடைவை இரண்டு வாங்க வேண்டுமெனச் சென்றான்.

குடியானவன் சென்ற வழியில் ஜனங்கள் எல்லாரும் ஏதோ வெகு குதுகலமாக இருப்பதைக் கண்டான். தனக்குக் கோவிந்தன் தந்த வரம் எல்லாருக்குமே பயன்பட்டு விட்டதை அவன் முதலில் மறந்து விட்டான். பிறகுதான் நினைவுக்கு வந்தது. ஊரில் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து அவனும் மகிழ்ந்தான். ஜவுளிக் கடைக்குள் நுழைந்தான்.

நல்ல புடைவைகள் இரண்டு எடுத்துத் தரச் சொன்னான்.

“நீ என்ன கொடுப்பாய்?” என்று கேட்டார் கடைக்காரர்.

“என்ன விலை சொல்லுகிறீரோ அதைத் தருகிறேன்.”

“விலையா? எங்களுக்குப் பணம் வேண்டாம். பணத்தை இப்போது மதிப்பார் இல்லை. அது எல்லாரிடமும் ஏராளமாக இருக்கிறது. எத்தனை மூட்டை அரிசி தருவீர், சொல்லும்” என்று கேட்டார் கடைக்காரர்.

“ரூபாய்க்கு ஏன் மதிப்பில்லை? அதற்கு என்னவாயிற்று?” என்றான் குடியாளவன். கடைக்காரர் வேடிக்கை செய்கிறார் என்று எண்ணி இப்படிக் கேட்டான்.

“எல்லாரிடமும் ரூபாய் வேண்டிய அளவு குறையாமல் இருக்கிறது. இப்போது யாருக்கும் பணம் வேண்டிய தில்லை . இது உமக்குத் தெரியாதா?” என்று கேட்டார் கடைக்காரர். குடியானவனுக்கு விஷயம் விளங்கவில்லை. அடுத்த கடைக்குப் போனான். அங்கேயும் “அரிசியோ, பருப்போ , கடலையோ ஏதாவது உணவுப்பண்டமாகக் கொண்டு வா, பணம் வேண்டாம் அது நம்மிடம் ஏராளமாக இருக்கிறது” என்றார்கள்.

gokulam_tamil1991-12-01_0016-picகுடியானவன் துக்கமடைந்தான். எந்தக் கடைக்கு எந்த பண்டம் வாங்கப் போனாலும் இந்த நிலையே இருப்பதைக் கண்டான். ரூபாய்க்கு மதிப்பே இல்லாமல் போயிற்று. மனைவியும் புருஷனும் துயரத்தில் மூழ்கினார்கள்.

“கோவிந்தா, என்னை ஏமாற்றி விட்டாயே” என்று அழுதான் குடியானவன்.

“நான் ஏமாற்றவில்லை உன்னை! நீயே ஏமாற்றிக் கொண்டாய்” என்றான் கோவிந்தன்.

“நானும் குடும்பமும் பசியால் செத்துப் போவோமோ” என்று குடியானவன் அழுதான்.

“வரத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டான் கண்ணன்.

“உன் வரத்தை நீயே எடுத்துக் கொண்டு போ! நான் முன்போல் உழைத்துப் பிழைப்பேன். அதற்கு நீ உதவினால் போதும்” என்றான் குடியானவன் தைரியமாக.

“அதுவே சரி. நீயும் உழைத்துப் பிழை, எல்லோரும் உழைத்துப் பிழைக் கட்டும்” என்றான் கோவிந்தன்.

– 01-12-1991

(1957இல் கல்கியில் வெளியான இந்தக் கதை, வரங்களால் மனிதர்களுக்குத் தொல்லையே. உழைப்பே மனித சமுதாயத்தை மேம்படுத்ததும் உயர்ந்த சக்தி என்பதை எவ்வளவு அழகாக உணர்த்துகிறது)

Print Friendly, PDF & Email

அறிவுக்கண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

விவசாயி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *