மச்சான்.. உன்ன இப்படி பாக்கறதுக்கே பிரம்மிப்பாவும் பெருமையாவும் இருக்குடா.. தன் பள்ளிக் காலத்து நண்பன் அஷோக்கை பார்த்து வியந்தான் விவேக். இன்று ஒரு பள்ளிக்கூடத்தை நிருவி நடத்திக் கொண்டு வருகிறார் அஷோக். அய்யோ சாரி அப்படி கூப்பிடலாம் இல்ல.
டேய்..Come on.. No problem விவேக். எப்படி இருக்க. என்ன பண்ற..நல்ல மார்க் எடுத்து First rank வாங்கிறவங்க மட்டும் தான் முன்னேற முடியும்னு சொல்லி சொல்லி வளர்த்துட்டாங்க. உனக்கே தெரியும் நான் ரொம்பவே Average student என்று..
அது சரி அங்க லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்கிற வார்டன் திருநங்கை மாதிரி இருக்கே.. எங்கேயோ பார்த்தா மாதிரியும் இருக்கு மச்சான்..
உனக்கு அடையாளம் தெரியலையா.. கமல் டா.. சாரி சாரி இப்போ கமலி.. டேய் இதோ பாருடா பொம்பள மாதிரி நடக்கிறான்னு அறியாத வயசில கிண்டலும் கேலியும் பண்ணுவாங்களே அவன பார்த்து.. அவள் தான் இவள்..
விவேக் சார் எப்படி இருக்கீங்க என்ற குரல் கேட்டு திரும்பினான். இவரையும் எங்கேயோ பார்த்த மாதிரி தான் இருந்தது.
என்ன தெரியல. லாஸ்ட் பென்ச்சுல அரட்டை அடிச்சிட்டு school fees கூட கட்ட முடியாத principal கிட்ட அப்பப்ப திட்டு வாங்குவேனே.. நான் தான் லோகு.. அடையாளம் தெரியுதா. நம்ம அஷோக் சார் கிட்ட தான் டிரைவரா இருக்கேன். என்ன தேடி கண்டு பிடிச்சி வேலை குடுத்த தெய்வம். எனக்கு மட்டுமில்ல என்றான் பீடிகையுடன்.
அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் அஷோக்கை ஆரத் தழுவினான் விவேக். இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி விவேக் சார்.. இன்னொரு அதிசயம் காத்துகிட்டு இருக்கு உங்களுக்கு. சொல்லிடலாமா முதலாளி என்று அஷோக்கை பார்த்தான் விவேக்..
ஆரம்பிச்சி வெச்சிட்ட. வேண்டாம்னா சொல்லாம இருக்கப் போறியா. நடத்து..
விவேக் சார்.. உங்க முன்னாள் காதலி கனகா தான் இன்னாள் பிரின்ஸ்பால் எங்க ஸ்கூல்ல..
ஓ..அப்படியா.. டேய் மச்சான் ப்ளீஸ்..ப்ளீஸ் உங்க ஆஃபீஸ் கூட்டிட்டு போடா.. பாக்கணும் அவள.
சரி வா போகலாம். அங்கு மற்றொரு ஆச்சரியமும் காத்திருந்தது விவேக்கிற்கு.
ஆஃபீஸ் ரூமில் நுழைந்தார்கள். அவனே கண்டு பிடித்து விட்டான் அவளை யாரென்று. லோகு அவளருகே மிக நெருக்கமாக சென்று.. கனகா இவர் யார்னு தெரியுதா என்று அறிமுகப் படுத்த.. இவனது நினைவலைகள் சிறகடித்து பறந்தன..
சார்.. விவேக் சார்.. முழிச்சிட்டே கனவா..
மச்சான்..லோகு என்ன அவ்வளோ நெருக்கமா பேர் சொல்லி கூப்பிடறான் கனகாவை என்று கேட்க.. அவனோட பொண்டாட்டிய அவன் பேர் சொல்லி கூப்பிடாம… எப்படி கூப்பிடுவான்..
வசதி வாய்ப்புகள் வந்த பிறகு சொந்தம், நட்புகளை தள்ளி வைக்கும் இந்த காலத்தில் அஷோக்கின் செயல்கள் வியக்க வைத்தன விவேக்கிற்கு.
யார் தருவார் இந்த அரியாசனம்..