புண்ணீயவாத்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 4,692 
 

இங்கே வந்தவர்களில், இந்த இருபது வருசங்களில் எத்தனை பேர்கள் கழன்று போய் விட்டார்கள்..இப்ப, இவனும்? நினைக்க, நினைக்க ‌மனசு. கனக்கிறது.

வந்த புதிதில் தேவன் வேலை செய்து கொண்டிருந்த உணவகத்திலேயே இவனும் வலது காலையை எடுத்து வைத்து “வேலைக்கு ஆட்கள் எடுக்கிறீர்களா?”என்று கேட்டுச் சேர்ந்திருந்தான் .உணவகத்தின் இயக்குனர் ‘பில்’ நல்லவர் ,கறுப்பினத்தவர் ! , கறுப்பர்களும் ஈழத் தமிழர்கள் போல‌. அடக்குமுறை களில் சதா சீரழிந்தவர்கள்.அவருக்கு ஈழத்தமிழர் மீது அனுதாபம்அந்த மாதிரி இருந்தது. .அவனின் சமூக எண்,மற்றும் வதியும் விலாசம்,தொலைபேசி எண் முதலானவற்றைக் குறித்து வைத்து ஒரு பைல் லைத் திறந்து அவனை வேலையில் சேர்த்து விட்டிருந்தார்,

“நாளையிலிருந்து நீ வேலைக்கு வரலாம், என்ன‌ சொல்கிறாய் “என்று சிரித்தார்.அன்றைக்கே சேர்த்திருக்கலாம்.அவன் உச்சியைப் பிளக்கிற வெய்யில் சென்றது. தோல் எரிய‌, .களைச்சுப் போன முகத்துடன் இருந்தான். சுத்தம் முக்கியம்.அன்றன்றைக்கு வெளுத்த வெள்ளை சேட்,வெள்ளைக் நீள் கால்சாராய்க்கு மாறிக் கொண்டு, தலை மயிருக்கு நெட் தொப்பி போட்டுக் கொண்டு தான் வேலையை தொடங்குவார்கள். நண்பகல் வேளை வேர்வையில் குளித்திருந்தான் .ஃபிரஸ்ஸாக தொடங்க வேண்டும் என்று நினைத்தாரோ?

அந்த நாட்டில் எல்லா வேலைகளிற்கும் மணித்தியாலய….. சம்பளமே கணக்கிடப் படுகிறது. 7 டொலரிலிருந்து தொடங்கி,10,20,….100,200…என போய்க் கொண்டே இருக்கும். பாராளமன்ற உறுப்பினருக்கும் அப்படியே தான் கொடுக்கிறார்களோ தெரியவில்லை.

அதோடு மற்றைய பக்கெட்ஜ்களும் …போனஸ்,விடுமுறைக்கான படி (ஒரு வருசத்தில் உழைத்த மொத்த பணத்தில் 4%)சுகாதாரக் காப்புறுதிகள்…என பலவற்றை பெறுகின்றது இருக்கின்றன‌..பங்குதாரிகளிற்கு லாபமும் குறிப்பிட்ட வீதம் கிடைப்பதாக இருக்கும் என ரதனுக்கு தோன்றுகிறது.இலங்கையில் கோழி மேய்த்தாலும்,கோவணத்தோடு மேய்த்தாலும் இவற்றை பெறுவதற்காகத் தான் அரச வேலையாய் இருக்க வேண்டும் என்பார்கள்

அந்த அரசாங்கம்,வடக்கு,கிழக்கிலுள்ள வேலை வாய்ப்புகளையும்..பறித்து,தென்னவர்களிற்கே கொடுத்ததாலும் கல்வியிலும் தரப்படுத்தலைச் செய்து தென்னவர்களை அதிகப் படுத்தியதாலுமே… அங்குள்ள‌அரசியல் பிரச்சனைகள் எழ ஆரம்பித்தன. சில்லறைப்பிரச்சனைகள்!நேர்மையற்ற தன்மைகளால்….. பூதாகரமாக்கப் பட்டுக் கிடக்கின்றன. அவற்றில் இனச்சாயத்தையும் சேர்த்து விட்டிருப்பதால்,கோபமும்,வெறுப்பும் வளர்ந்து போய் விட்டிருக்கின்றன.சாயத்தை அகற்றுப் போராட்டம் காலகாலமாக நடத்தப் பட வேண்டிய ஒன்றாக நீண்டு கொண்டே போய்க் கொண்டிருக்கிறது.பச்சைப்பசேல் என பார்க்கும் இடமெல்லாம் அழகை விரித்து வைத்திருக்கிற அழகிய தீவு, ரத்தச் சகதியாக்கப்பபட்டிருக்கிறது.

அடிப்படைச் சம்பளத்தை மணித்தியாயலத்திற்கு இவ்வளவு கொடுக்கலாம் என மாகாணவரசே சட்டமாக அறிவித்து விடுகிறது.அதற்கு கீழே யாரும் கொடுக்க முடியாது . நகரசபை அரசு கட்சி வேறுபாடிருந்து இயங்க வேண்டியது,கட்சி சார்புடன் தான் இயங்கிறது. அதன் தன் கொள்கைகளைப் புகுத்தி விடுகிறார்கள்.

ஆனால், சுழியோடிகள் எங்கும் தானே இருக்கிறார்களே!

சிறிய கடைகள் கையிலே காசைக் கொடுத்து …களவாக வேலை வாங்கிறதும் இருக்கின்றன. ஒருவித பலன்சில் இங்கே எல்லாமே நடை பயில்கின்றன‌.

ஓரே குடும்பத்தினர் வர்த்தகத்தைச் செய் யிற போது, சலுகைகளும் கிடைக்கின்றன. கடைகள்,உணகங்கள்,கைத்தொழில்கள்…எல்லா வேலைக களிலுமே முதலில் நகர அரசாங்கத்துடன் பேசி அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். வழிகாட்டலும் …சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.அதற்கு ஒரு சிறிய தொகை அறவிடப்படுவது வழக்கத்தில் இருந்தது.எல்லாச் சேவைகளிற்குமே சேர்வீஸ் சார்ஜ் என சிறிய தொகை வசூலிக்கப் படுகிறது தான்.ஆனால், முனிசிபல்(நகரசபை) அரசு,தனது செலவுகளை சமாளிப்பதற்காக….அவற்றை எல்லாம் அதிகப்படுத்தி …வசூலிக்கத் தொடங்கி விடுகின்றன. மத்தியில் ஒரு கட்சியும்,இதில் எதிர்க்கட்சியும்(ஆதரவாளர்)இருந்து விட்டால்…சீர் குலைவைக் கேட்க வேண்டுமா?

இ து, முதலாளித்துவ உலகம்! அதனால்‌, இங்கே,இலங்கையைப் போலில்லாமல் ,எல்லாருமே பொருளாதர வளர்ச்சியிலும் ஒரு கண் வைத்திருப்பார்கள்.அதனால் ஒருவித சமநிலையும் பேணப்படுகின்றன.வர்த்தகச் சுதந்திரங்களும் இருக்கின்றன. பிறகு,அவர்களுடைய சுய விதிகள் , சுய முற்சி,சுய ஆற்றல்….!

இங்கே,சுடுகருவிகளைக் கூட விற்பனை செய்கிற கடை களும் இருக்கின்றன. சுடுகருவிகள், பயங்கர…கருவிகள் அதனால், கறுப்புச் சந்தையும் பரவிக் கிடப்பதாகப் படுகிறது. அதில்,பக்கத்து நாட்டில் அதிகளவு சட்டத் தளர்வுகள் இருப்பதால்… அங்கத்தையக் ‌சுடுகருவிகள் இங்கே இலகுவாக கடத்தப் படுவதையும் தடுக்க முடியாமல் இருக்கின்றன. வாங்கக் கூடியதாக இருப்பதால் , இன,மத…அரசியல்களால்… அடிக்கடி உணர்ச்சி வசப்படுற தலைமுறைகளால்…, அவர்கள் பிள்ளை(களான சிறுவர்)களாலும், போதைப் பொருள் சம்பந்தப்பட்டவர்களாலும், சமூகக் குழுக்களாலும் ,உதிரிகளாலும் என ‌உயிரிழப்புகளும் ஒருபுறம் கூடிக் குறைய நடைப் பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

இந்தியாவைப் போல இங்கே ஆன்மீகத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது ஊடகங்களும் பேசுவதில்லை. பொது மன்னிப்பளித்தல்,புனர் வாழ்வு பெற வைத்தல்…பொதுவாகவே இல்லை . பலவீனப்பட்ட சமூகங்கள் மீள்வதற்கான வழிகள் இல்லை. பரம்பரை அலகுப். பரிசோதனை மூலம் ஆய்வு செய்து நீண்ட கால தண்டனைகள்,மின்சார கதிரையில் சாம்பராக்குதல்…என அளவுக்கதிகமாக கடினப்பட்டுக் கொண்டே போகின்றன‌. அங்கே, சம்பல் பள்ளத்தாக்குதலில் எல்லாம் பூக்கள் மலர்ந்தன,பூலான் தேவிக்கு கூட மன்னிப்பு கிடைத்து,பாராளமன்ற உறுப்பினரானார். ஆனால் ,மரண தண்டனையை நிறுத்தி விட முடியாத தளும்பல் உடையதாகவும் இருக்கிறது.இத்தன்மை,வல்லரசாக முடியாததிற்கு ஒரு தடையாக…கிடக்கிறது.

இங்கே, பூர்வக் குடிமக்கள் இருக்கிறார்கள்.அவர்கள் பிரச்சனைகளில்…. நிறைய‌ வாய்ச்சவடாலாக பேசுவார்கள். எனவே,அவர்களிற்கு நில உரிமையைக் கொடுத்து விட்டால்….எப்படி நிலத்தை வாங்குவதாம்? இல்லை பிடுங்குவதாம் சிறிலங்காவைப் போல கொடுக்கப்படுவதில்லை.பொலிஸ் அதிகாரமும் இல்லை.

.ஆனால் சிறிலங்காவை விட தளர்வுகள் இருக்கின்றன. நாய்க் குட்டியை தங்கச் சங்கிலியால் கட்டினால் என்ன,இரும்புச் சங்கலியால் கட்டினால் என்ன?ஒன்று தானே ! நோக்கம் ஒன்று தான். ஒடுக்கப்பட வேண்டும்.போதைப்பொருள் பாவனை,மதுப்பலவீனம்,கல்வியறிவின்மை….அதனால் தற்கொலை வீதமும் அதிகரிக்கப்பட வேண்டும். இலங்கையில்,அவற்கும் “படையினருக்கும் சம்பந்தம் இருக்கின்றது”என்று தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் குற்ற‌ம் சாட்டுவதைப் போல,இங்கேயும் சம்பந்தம் இருக்கவே வேண்டும் !

இவர்களிற்கென்று பிறிம்பான நீதி மன்றம் முறை. இல்லை.ஆனால்,பொலிஸிற்கென்று பிறிம்பான நீதிமன்றம்,ராணுவத்திற்கு பிறிம்பானது,அரசியல்வாதிகளிற்கு பாராள மன்றம்…..என ஜனநாயகம் கொடிக் கட்டிப் பறக்கிறது.எல்லாருக்கும் சட்டங்கள் ஒன்று தான் என்கிற பொது நீதிமன்ற முறை தான் முறை !

சில புறநடைகளும் அவசியப் படுறதும் உண்டு தான்.பூர்வக் குடியினருக்கு பிறிம்பான நீதிமன்றம்…என்பது அதிலே ஒன்று!

ஒன்றுமே கிடைக்கக் கூடாது என்பதற்காகத் தான் ‘அரசின் வேட்டை நாய்க ளாக பொலிஸ்’ !அவர்களிற்கு இனப்பிரச்சனையும் விளங்காது,பூர்வக் குடியினர் பிரச்சனைகளும் விளங்காது,அரசு என்ன கட்டளை இடுகிறதோ ,அவற்றையே செய்வார்கள்.யாழ்ப்பாணத்தில் நூலகத்தை எரிக்க வேண்டுமா?எரித்தார்கள்.திரும்பவும் எரிப்பார்கள்.அதன் தார்ப்பியம் எல்லாம் விளங்கவே விளங்க மாட்டாது.என்ஃபோர்சர்ஸ்….மட்டுமே ! பொலிஸ் பிரிவு,மக்களுடன் நட்பாக இல்லா விட்டாலும்,பத்திரிகையாளர்களூடாகவாது நட்பாக இருக்க வேண்டும்.அப்ப,தான் அவர்களால் சிறப்பாக பணியாற்ற முடியும்.ஆனால், கீரோக்கள் ,அதில் சீரோக்களாகவே இருக்கிறார்கள்!எல்லா நாடுகளிலும் இவர்களிற்கு லெவல் கூடித் தான் விட்டிருக்கிறது.அரசு போடுகிற தீனி..!பழமைவாதக்கட்சி,(அடிப்படைவாதக் கட்சியினர்) ஆட்சிக்கு வார போது,அவர்களது நலன்கள் அதிகமாக கவனிக்கப்படும்.பட்ஜெட்டில் ..தாராளம். மக்கள் நலன் பின்னுக்குப் போய் விடும்.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு என்று என்று எதுவுமே கிடையவே கிடையாது. தண்டனைகள் எல்லாமே விலைவாசிப் போல ஏற்றப்பட்டு விடுகின்றன.

ஜனநாயகத்தை (உண்மையான) விலத்தியே எல்லா நாடுகளுமே ஆட்சி புரிய விழைகின்றன.. நிலாவைக் காட்டி பால் ஊட்டுவது போல,அதைத் தருவோம்,இதைத் தருவோம்…என்று பேசிக் கொண்டே சிறைகளிலே நிரப்புவார்கள். இன்றைய சிறிலங்காய்ச் சிறைகளிலே….அதிகமாய் இருப்பவர்கள் தமிழர்கள் என்பது போல,இங்கேயும் ….40%ஆனவர்களிற்கு மேலே சிறைகளிலே இருப்பவர்கள் இந்த பூர்வக் குடியினரே…என ஒரு கருத்துக் கணிப்பு வேற சொல்லுகிறது.கணிசமானவர்கள் பெண்கள் என்றும் வேற கூறுகிறது. நாடு முழுதும் இருந்தஅவர்களது சனத்தொகை கடுகாய்ப் போய் விட்டது.ஆனால், இந்த சமூகம் கடும் பிரச்சனைகளால் பெரும்பாலும் உள்ளே போனவர்களும் இல்லை.

ஆதிக் குடிகளை அடக்குவதில் நாட்டுக் நாடு ஒரு போட்டியே நிகழ்கிறது போலப் படுகின்றன. பாலாஸ்தீன நாட்டில், பாலாஸ்தீனர்கள் அடித்து ஒடுக்கப் படுகிறார்கள்.எல்லா நாடுகளுமே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நிற்கின்றன.இன்னொரு உலப் போரை அல்ல, இந்த உலகம் இன்னும் பலப் போ ர்களைக் காணவே போகின்றது இந்த சதிவலைகளில் இந்தியாவும் அதில் ஒரு நாடாகச். சேர்ந்திருப்பது தான் பரிதாபத்திக்குரியது .இவர்களைச் “சவாடால் பிறவிகள்” எனாமல் வேற எவர் என்பதாம்? கூட்டு நாடுகள் காந்தியைக் கேலி செய்யிறதும் தொடரவேப் போகின்றன.

லிபரல் கட்சிகள், அவர்களிற்கு உரிமைகளை ஓரளவுக்குக் கொடுக்கிறதுக்கு முயற்சிக்கின்றன.பழமைவாதக் கட்சிகள், மகிந்தாவைப் போல, கொடுத்த உரிமைகளையும் பிடுங்கி,இருந்த இடத்தை விட்டே நகர விடாமலே (தமிழர்களை போலவே….) இருத்தியே விடுகின்றன. தமிழர்களை போல …இவர்களிற்கு,பாலாஸ்தீனர்களிற்கு எல்லாம் தலைவிதிகள் …, மாறவே போவதில்லை ! , கர்மம் பிடித்தவை . கடவுள் இருக்கின்றாரா?

இதுவும் ஒரு சாதாரணம் , அசாதாரணம் என கடந்து போய்க் கொண்டே இருக்கின்றன‌. யார் தலையில் அணுகுண்டு விழுந்தாலும் நமக்கென இருக்கிற வர்கள்,இதில்,நண்பர் யார்?,எதிரிகள் யார்?என்பதை அறியாதிருப்போமானால்…, அல்லது பிழையாக அறிந்திருப்போமானால்… நமது அவலங்களும் தொடர்கதை தான் ! “என்ன இது !,எனது சிந்தனை எல்லாம் ஒரு போக்காவே …..இருக்கின்றன.தேவனின் ஆவி,கீவி…என்னுள் புகுந்து விட்டதோ?”ரதனுக்கு உதறல் எடுத்தது. “ஏன் ? இவர்கள் (மனிதர்கள்) இந்த மாதிரி இருக்கிறார்கள்?”தனக்குள் கேட்டுப் பார்த்தான்.கிடைத்த விடை பயங்கரமாக இருக்கின்றது.எனக்கு என்னவோ தான் நடந்து விட்டிருக்கிறது.சிந்தனை எல்லாமே ஒரு மாதிரியாய் போய்க் கொண்டிருக்கிறது.மனிதரில் மிருகம் உண்டு.அது தான் விடை. ! ,”மனிதன் ,ஒன்றும் அப்பாவி கிடையாது! அவன் ,உயிருள்ள கணனி.அவனில் இருக்கிற பரம்பரையலகுகள் தாம் சிப்ஸ்.அதில் எல்லாமே பதியப் பட்டு விட்டிருக்கின்றன.மூளை.கணனி யந்திரம்.அது அந்தந்த நேரம் வருகிற போது அக்டிவேட் பண்ணுகிறது.ஒரு குழந்தை,வளர்ந்த பிறகு,எம்.ஜி.ஆராக வருவானா?விஜய்யாக வரவானா?நம்பியாராக வருவானா? என்பது எல்லாமே அதனுள் எழுதப்பட்டு தான் இருக்கின்றன.அதை வாசிக்கிற தொழினுட்பம் தெரிந்திருந்தால்..குழந்தையிலேயே வாசித்து விட முடியும்.ஐயன்ஸ்டைன் கணக்குகள் போல போட்டு…சோதிடர்களும்,காற்றிலே கணனித் திரையை ஓபின் பண்ணி, கிட்டத்தட்ட கொஞ்சம் சரியாய் கண்டு பிடித்து விடுகிறார்கள் போலவே படுகிறது. தேவன்,இப்படி வேளைக்கே போய்யிருக்க வேண்டாம்.

பழைய செய்திகளைத் தொடர்ந்தான்.

பெரிய வர்த்தக நிறுவனங்கள் சம்பளங்களை அடிப்படையிற்கு மேலேயே வைத்து… கொடுக்க‌ ஆரம்பிப்பார்கள். பிறகு ,அவை எல்லா வேலைகளிற்குமே தாமே சம்பளங்களைக் நிர்ணயித்து விடுகின்றன ‌. தமக்குரியச் சட்டங்களையும் தாமே ‌ ஏற்படுத்திக் கொள்கின்றன பெரிய ஃபைனான்ஸியல் நிறுவனங்களாச்சே அரசாங்கங்கத்தாலும். தலையிடமுடியாது, கைக்கட்டி சற்று எட்டவே நின்று வேடிக்கை பார்க்கவே வேண்டும்..

அடுத்த நாள் தான் அவனுக்குத் தெரிந்தது நுழைந்திருப்பது குட்டி யாழ்ப்பாணம் என்பது.எல்லாருமே கிட்டாரடியில் சேர்ந்தே, பிறகு பல்வேறு சமையல் பிரிவுகளிற்கு தரம் உயர்த்தப்பட்டு வேலை செய்து கொண்டிருப்பவர்கள்.தேவனுக்கு கோழிகளை நீளக் கம்பிகளில் கொளுவி அவனில் செருகி ,வெந்ததும், மெசின் மணி அடிக்க,எடுத்து பிளாஸ்டிக் கூடையில் கொட்டுற குக் வேலை.வெக்கையிலே அவனும் கூட‌ கிடந்து வெந்து கொண்டிருந்தான்.

தேவ‌னுக்கு சிரிச்ச முகம்.தோழமையுடன் கதைக்கிறதால்.அவனை பார்த்தவுடனேயே பிடித்து விட்டிருந்தது.

கிட்டாரடியில் இருந்த சூரி அவனுக்கு வேலையை கற்றுக் கொடுத்தான்.சிறிய வண்டிலில். மேல்,கீழ் தட்டுகளில் வைத்துள்ள பிளாஸ்டிக் கூடைகளில் ,வந்தவர்கள் சாப்பிட்டு விட்டுப் போகிற …தட்டுக்க ளை,கிளாஸ்களை வெவ்வேறாக எடுத்து மெசினடிக்கு ஓட்டி வர வேண்டும்.

தள்ளி வார போது வண்டி தாறுமாறாக ஓடியது.” எல்லாருக்குமே இப்படித் தான்!, பயப்படாதே.ஓட , ஓட பழக்கத்திலே சரியாய் வரும்.” என்று அவன் சிரித்தான் மெசினோடு சேர்ந்தபடி கிடக்கிற‌ நீள அலுமினிய மேசையிலேஅவற்றை குவிக்க‌ ,அவன் மெசினூக்கூடாகச் செல்கிற பிளாஸ்டிக் தட்டுகளில் என்ன வேகமாய் அடுக்கிறான் . அதே விரைவில் உள்ளே தள்ளி விட்டு மெசின் சுவிச்சை தட்டி, தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருப்பான் . உள்ளே செல்கிறவை, கார் கழுவுறது போலத் தான்.முதலில் வளைய வடிவில் இருக்கிற சிறிய குழாய்களிலிருந்து வார வெறும் தண்ணீரால் பிசிறடித்து கழுவுகிறது.அடுத்த பகுதியில் சோப் தண்ணீரால் பிசிறடிக்கும்.பிறகு நல்லத் தண்ணீரால் நேரம் எடுத்து கழுவும்.அடுத்து வெப்பக் காற்று வீசும்.வெளியில் வார போது காய்ந்த நிலையில் தட்டுக்களும் மற்ற‌யவையும் கிடக்கும்.அலுமினியப் பானை,சட்டி…என கிடக்கிற‌ எல்லாவற்றையும் குப்புறக் கவிழ்த்து அனுப்பிக் கழுவப்பபடுகின்றன. சூரிக்குப் பக்கத்திலே மெசினோடு ஒட்டிக் கிடக்கிற ,கழுவுற நீர் வெளியேறுகிற அலுமினியப் , பெட்டியில் கிடக்கிற வாளி போன்ற வடிகட்டியில் சேர்கிற உணவுப் பருக்கைகளை இடைக்கிடை கழிவுக் கூடையில் எடுத்துக் கொட்ட வேண்டும்.

கண்ணாடிக் கிளாசில் ஸ்பொட் லெஸ் அடையாளம் இல்லாத மாதிரி எல்லாமுமே கழுவப் பட வேண்டும் அதில் கவனம் எடுக்கிறார்கள்.எங்கடயாட்களின் வர்த்தகத்தில் இந்தக் கவனம் வலு குறைவு.’இதிலே கவனமும் எடுத்து , வர்த்தகத்தில் கூட்டு முயற்சியிலும் இறங்குவார்கள் என்றால்…முதலாளிகளாவார்களாக மலர்வார்கள் என்று ரதன் நினைப்பான்.

எங்கடயாட்க ள் மாற வேண்டும் . சிமார்ட்டாக வேண்டும் !

சிலநேரம், கிடாரில் வேலை செய்கிறவர்கள் வரவில்லை என்றால்…உப இயக்குனராக சார்ள்ஸ் வெட் க்கப்படாது உள்ளே இறங்கிக் கழுவித் தள்ளுவார். சமயத்தில் முஸ்பாத்தியாகவும் கூடக் கதைப்பார். திறமை,கிறமை ஏதாவதிருந்தால்…ஏற்றி விடவும் உதவிடுவார். அவருக்கும் ஈழவர் மீது சிறிது அனுதாபம் இருந்தது.?

இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் ராணுவ ஆட்சியை நடத்திக் கொண்டு ,ஜனநாயக ஆட்சி புரிவதாக பீற்றிக் கொண்டிருக்கிறவர்கள்.

ஈழவர்கள் ,வெளியில் முன்னேறினால் தான் உரிமைப் போராட்டத்தை தொடர்ந்தும் நடத்த முடியும். உள்ளே ஏகப்பட்ட கால்ப்பந்துச் சிக்கல்கள் இருக்கின்றன.அதை எல்லாம் டொஜ் பண்ணி,கூட்டாக பந்தைக் கொண்டு போனாலே கோலே… இறக்க முடியும். முடியுமா?முடியும் ,என்பார் முடியாது,முடியாதென்பார் முடிந்து விடும்!

இந்த‌ சித்தர், வாக்கு பலிக்க வேண்டும் !

சனப்புழக்கம் கூடிய நேரங்களில் ,கின்னஸ் புத்தகத்தில் பேர் எடுப்பது போல கோப்பையடி நடக்கும். .மற்ற பகுதியில் கழுவி வாரதை பரணி எடுத்து அடுக்கிக் கொண்டேயிருப்பான். அவன் ஏறத்தாழ மெசினாகி விடுவான்.

உப இயக்குனர்களில் ஒருத்தனாக இருக்கிற, உடுவிலில் படித்த கரன் அடிக்கடி வளைய வருவான். தாமரை இயக்கத்தில் பிரதேசப் பொறுப்பாளராக இருந்த மணியை,கழுகு இயக்கம் துரத்தி வேட்டையாடிய போது,அகப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தான். தேவன் தப்பி விட்டவ‌ன் மணி இன்றும் ரதனின் மனதில் குருஜியாக…உயிர் வாழ்பவன். சாகும் வரையில் இருந்து தொந்ததரவு கொடுத்துக்கொண்டே இருக்கப் போறவன், கரனுக்கு ‘ஒன்றை விட்ட அண்ணன்காரன் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவனுடைய பெரியப்பாவின் மத்திய‌ மகன்.அங்கே இருக்கிற வரையில், ரதனுக்கு மணி யின் தனிப்பட்ட விசயங்கள் துப்பரவாகவே தெரிந்திருக்கவில்லை.எனவே, இவனின் வாய்யை சதாக் கிளறிக் கொண்டே இருப்பான்.கரனுக்கும் லெவல் இல்லாததால் ..பதில் சொல்லிக் கொண்டே இருந்தான்.

மணி, முதல் தரம் எ.லெவல் எடுத்தவுடனேயே ,கொழும்பி ற்குப் போய் மகாராஜாவில் …வேலையில் சேர்ந்து விட்டிருக்கிறான்..83 கலவரத்திலே…அந்த வர்த்தக நிறுவனமும் அடிக்கப்பட்டிருந்தது. எங்கே அகப்பட்டிருந்தானோ?, இவனுடைய மனநிலை மோசமாக பாதிக்கப் பட்டிருந்திருக்கிறது.திரும்ப கொழும்பிற்கு போக விருப்பமில்லாது…,இவனோடு வந்திருந்த கொழும்பிலேயே பிறந்து , வளர்ந்து ‌வேலை செய்த ஓரிரு நண்பர்களுடன் சேர்ந்து இயக்கத்தில் பயிற்சி எடுக்க இந்தியாவிற்கு போய்யிருக்கிறான் . திரும்பி வந்தவனை பிரதேசப் பொருப்பாளராக நியமித்திருந்தார்கள். ரதன், உப பிரதேசப் பொருப்பாளருடன் சேர்ந்து அவனுடைய கூட்டங்களிற்குப் போய் இருக்கிறான்.அதிலே அவன் விசயங்களை நட்பு ரீதியாக சொல்லி விளங்கப் படுத்துறதில் சூரன். ரதனின் அண்ணன் சிலவேளை அவனை கேலி பண்ணுவான்.”என்ன வாய்யை ‘ஆ’என திறந்து கொண்டிருக்கிறே,’ஈ’ புகுந்திடப் போகிறது”,அப்படி கேட்டுக் கொண்டிருப்பான். ‘என்ன மாதிரி பேசி விளங்கப் படுத்துவான்’

சொல்லி வேளைக்காகாது . முஸ்லிம்கள்,”செல்லி முடியாது”என்பார்கள்.சிங்களவர்களும் ..இப்படி(சிங்களத்தில்) சொல்லுவார்கள்.விளங்காட்டியும் அந்த டயலாக்கைக் கேட்டிருக்கிறான்.

ரதனால் மறக்க முடியாதவன்.பேசாமல் கரனையே,அவனைப் பற்றி தெரிந்த எல்லாவற்றையுமே வைத்து ஒரு சிறுகதையாய் எழுதக் கேட்டிருக்கலாம் , விட்டு விட்டான்.

பசிச்சால் எதையும் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். குக்,தட்டிலே எடுத்து போட்டுக் கொடுப்பான். சாப்பிடுற போது யாருமே எந்த வேலையையும் சொல்லி இடையூறு விளைவிக்க மாட்டார்கள்..அந்த நல்ல பழக்கம் எல்லாரிடமும் குடி கொண்டு இருந்தன‌. ஆகக் களைத்து விட்டால்… இயக்குனர்கள் பியர் கூட எடுத்து தருவார்கள்.

இவனுக்கு அழுக்கான கோப்பைகளை எடுத்து வார ‘பஸ்போய்’வேலை.

பொதுவாக மாணவர்களிற்கு அரைவாசி சம்பளம் கொடுக்கலாம்.ஆனால்,அந்த உணவகத்தில்,இயக்குனரே மாணவராக இருந்து தான் வேலை செய்தவர் என்பதால்…முழுச் சம்பளமே… கொடுத்தார். சம்பளப் பணத்தில்.உணவை .எடுக்காட்டியும் கூட‌ 5% எல்லாருக்குமே கழிப்பார்கள் ஒவ்வொரு நாளும் கணக்கு வழக்குகளைக் கூட்டிக் கழிக்கிற போது துண்டு விழாமலா இருக்கும்?.அதைச் சமாளிக்க …. இந்த வழி கையாளப்படுகிறது என்று கரன் சொன்னான்.

பெரும்பாலும் முடிப்பு நிகழ்கிற போது இரவு ஒரு மணி,இரண்டு மணியாகி விடுகின்றன. .ஈழத்தமிழர் தான்…எதற்கும் தயாரானவர்களாச்சே! இரவுக்குருவிகள். பிந்திய இரவுகளில் சப்வேய்கள் ஓடுவதில்லை..புளூ லைன் என பஸ்கள் ஓடுகின்றன‌. பிறகென்னக் கவலை.

இவர்கள் செல்ல‌,உணவகத்தை துப்பரவு செய்கிற பணியாட்கள் வந்து விடுவார்கள்.

தொடக்கத்தில் சொந்தமாக யார் கார் வைத்திருந்தார்கள்?.குறைவு தான் .எல்லாருமே பஸ்ஸில் ,சப்வேய்யில் தான் பயணம். ஓரிருவரே கார் வைத்திருந்தார்கள்.போகிற வழியில் என்றால் ….ஏற்றிப் போவார்கள் ஒரே இடத்தில் வேலை செய்கிறவர்களிடத்தில் அடிக்கடி கெளரவக் குணங்கள் எட்டிப் பார்க்கவில்லை.

ரதனுக்கு பஸ்சிலே வீட்ட வருகிற போது உடம்பிலே ரத்தம் எல்லாம் செத்து ப் போய் இருக்கும். கிட க்கிற செட்டியிலே தொப்பென ‌வீழ்ந்து கிடந்து தொலைக்காட்சியைப் ….பார்ப்பான். ஓரு பியர் உள்ளே இறங்கும். இது ஓரு சுதந்திர நாடு.பின்னிரவில் …கவர்ச்சிப் படங்களிற்குக் குறைவில்லை.அலுபடிக்க அப்படியே நித்திரையும் ஆகி விடுவான்.

பகல் எல்லாம் தூங்கி வழிவார்கள். உணவகம் ,10 மணியிற்கு உயிர்ப் பெற்று, 11 மணியிற்குத் திறக்கப்படும். பகல் வேலையாட்கள் வேலை முடிந்து போக,இவர்கள் பின்னேர வேலையாட்களாக அவசரமாக நுழை வார்கள்.

கீர்த்தி, இவனை கிட்டாரிலிருந்து மாற்ற‌ ‘சிக்கினை’ லாவகமாக வெட்ட எத்தனையோ முறை பழக்கினான்.அவனுக்குத் தான் கடைசி வரையில் லாவகமாக வெட்டுறது சரி வரவே இல்லை.

கீர்த்தி அயலில் இருக்கிற பள்ளிக்கூடத்தில் உயர் வகுப்பில் படிக்கிற மாணவன். பகுதி நேர வேலை பார்க்கிறவன்.

அச்சமயம், தேவனைத் தவிர எவருமே கல்யாணம் கட்டி இருக்கவில்லை. அங்கிருந்த பலர் அவனை “அண்ணா” என்றே கூப்பிட்டார்கள். அவனுக்கு ரதனை விட ஒரு வயசு தான் கூடுதலாக இருந்திருக்கிறது.

அது, ,இப்படி வெள்ளைப் படுக்கையில் வந்து படுத்திருக்கிற போதே தெரிய வருகிறது..

தேவன், முல்லை இயக்கத்தின் இருந்த மாஜித் தோழன் என ஏற்கனவே அறிந்தேயிருந்தான். தேவனை நேரிலே தெரியாதே,தவிர நாட்டுக்கு வரும்போதே, இவனுடைய நண்பன், விமலின் தம்பி சக்தி , தேவன் இருந்த முல்லை இயக்கத்தில் இருந்தவன்,……எல்லோரும் தானே கொழும்பிற்கு ஒதுங்கி விட்டிருந்தார்களே,கொழும்பையே தெரியாது வந்த‌ ரதனுக்கு அங்கே தங்க பல உதவிகளைச் செய்தவன்,விமானத்தில் ஏற்ற வந்த போது “உரும்பிராய்த் தோழர், தேவனை கட்டாயம் சந்திக்கப் பார்” என இந்த தேவனைத் தான் கூறியிருந்தான்

அவன் , தான் தப்பிய அனுபவத்தை தொடர்ந்து… “விடியல்” பத்திரிகையில் சுவாரசியமாக எழுதிக் கொண்டிருந்தான். வேற இடத்தில் வேலை செய்திருந்தாலும் கூட‌ தொடர் மூலம் அறிந்தேயிருப்பான் தான்.

ரதன் தான் வாசிக்கிற பிறவி,.தவறாது பத்திரிகையை வாங்கி படிப் பவன்.

பொன் விலங்கு நாவலை எழுதுற போது நா.பார்த்தசாரதி பக்கத்து வீட்டில் இருந்தால், ஒவ்வொருநாளும் நேரே நேரே கதைப்பதாக இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு அதிருஸ்டம் வாய்த்திருக்கிறது. இவன், பிறவிக் கவிஞன் வேற! அது பிற கே தெரிந்தது.

தேவனுடைய இயக்கத்திலிருந்த தோழி சரோஜாவின் குடும்பத்தினரே, கழுகு இயக்கம், முல்லை இயக்கத் தோழர்களை துரத்தி நரவேட்டையாடிய போது, இவன் உயிர் தப்பி வெளியேற … உதவி செய்து இருக்கிறார்கள். , அதன் காரணமாக‌ அவன், அவளையே கட்டிக் கொண்டு , இந்த நாட்டுக்குள் காலை எடுத்து வைத்திருந்தான்.

தேவன் எழுதுவதோடு மட்டும் நிற்கவில்லை.நாடகங்களை எழுதி ,மேடையேற்றுவது,கவியரங்கம் நடத்துவது,தென்னிந்திய எழுத்தாளர்கள் வந்தால் விடியல் குழுவினருடன் சேர்ந்து நள்ளிரவு கடந்த பிறகும் கூட‌….கலந்துரையாடல்களை நடத்துவது… என சதா அலைந்து கொண்டே இருந்தான். அவனைக் கட்டியவளை அதிருஸ்டப்பிறவி என சொல்ல முடியாது., முற்பிறவியில் பாவம் செய்திருப்பாளோ?

இண்டர்நெற் எல்லாம் கண்டு பிடிக்காத 90ற்குப் பிறகான‌ …காலம். அப்ப ஒரு டொலருக்கு வாங்கிற ஜோர்ஜின் ‘விடியல்’ பத்திரிக்கை தான் அவர்களிற்கு…. கணனி வலை, இணையப்புத்தகம், முகநூல் எல்லாமே.ரதனும் விடியலில் பார்த்தே இலக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போய்க் கொண்டிரு ந்தான். .

ரதன் பார்த்து ரசித்த தேவனின் குறிப்பிடக் கூடிய இரண்டு நாடகங்களைப் பற்றி பேசத் தொடங்கினான்.அதில் ஒன்று “தூர் வாரப்பட‌ வேண்டிய விடுதலை”. தலைப்பைப் பார்த்தாலே விளங்கும் தானே, அதற்காக மாற்ற முடியுமா? அவனும் மாற்றுறவன் இல்லை.ஏற்கனவே இவனுடைய நாடகங்களைப் பார்த்தவர்கள், இலக்கிய நண்பர்களின் குடும்பத்தினர்களே பெரும்பாலும் வ ந்தார்கள். இடதுசாரி நாடு என்றாலே ,வெறுக்கிற பார்வையுடையவர்களாக…இந்நாட்டவர் இருக்கிறது போலவே நம்மவர்களும் …இருக்கிறார்கள். மனித உரிமைகளை பேசுவதால் …வாய் அவிந்து விட மாட்டாது. அதிகளவு மனித உரிமைகள் பேசுவதால் நாம் ஒன்றும் குறைந்து ம் போய் விட மாட்டோம்.சுதந்திரமற்ற பார்வைகள் தான் எம்மை…மேலும் மேலும் பாதிக்கச் செய்து கொண்டு போகும். இதையெல்லாம் புரிய நாளாகுமோ,இல்லை,புரியாமலேயே. மேலே போய் விடுவார்களோ?

நம்மவர்கள் எல்லாத் துறைகளிலுமே எப்பவும் ஒரளவிற்கு மேலேயும் செல்ல முடியாத‌ தடுமாற்றமுள்ளவர்களாக வும்.. .இருக்கிறார்கள். அடுத்தடுத்த காலடிகளையும் எடுத்து வைக்க பழக‌ வேண்டும். அங்கே தான், விடுதலைப் போராட்டத்தில் கழுகு, ராட்சதனாக எழுந்து நின் று தடுத்தது என்றால் இங்கேயும் யாரும் நிற்கிறார்களோ?

எப்பவுமே, மற்ற‌ நாடுகளில் நிலவுகிற மொழி,மத வாத அநீதியான சட்டங்களிற்கெதிராக எழுகிற உணர்ச்சிப் புள்ளிகள் பெரிய நாடுகளிற்கு கோழிக் குஞ்சுகளாக கண்ணிலே பட்டுக் கொண்டே இருக்கின்றன. மற்றைய நாடுகளின் அரசியலுக்குள் வர்த்தகத்திற்குள் நுழையிற வழிகளாக அவற்றைப் பார்க்கின்றன‌ மேலே பறந்து கொண்டிருக்கிற பருந்துகள்,வல்லூறுக் கணக்கிலே இருக்கிற அவை சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றன‌ ..

குஞ்சுகளும் (எல்லா) பிரச்சனைகளிலிருந்தும், வட்டங்களிலிருந்தும் வெளிய வர முடியாது ,சகோதரச் சண்டை,கருத்துப் போராட்டம்…என உள்ளுக்குள்ளே அடித்துக் கொள்ளும் போக்குகளால் மேலும் தனிமையாகிக் கொண்டிருக்கிற பலவீனம் அவையிற்கு வாசியாக வாய்க்கின்றன‌. .இதனால் ,விடுதலைப் போராட்டமும் பழி வாங்கும் போராட்டமாக சிறுத்து விடுகின்றது.

அற்பனுக்கு பவிசு வந்தால் என்பது போல ,ஆயுதங்களைக் காணாதவர்களின் கைகளில் ஆயுதங்கள் வந்தால்..???பெரிய நாடுகள் இந்த பலவீனத்தை வைத்தே அரசியல் செய்து விடுகின்றன‌. ஒவ்வொரு நாடுகளும் “பெரிய ஆயுதங்களைத் தாரேன்,அதைச் செய்வாய்யா,இதைச் செய்வாய்யா?என விடுதலைப் போராட்ட இயக்கங்களிலும் நுழைந்து தமது இலக்குகளை இலகுவாக சாதித்தும் விடுகின்றன‌ ..அப்படி நடந்தே ‌இந்தியத் தலைவர்களின் கொலைகளுமெனப் படுகிறன.

இத்தகைய தேசிய தலைவர்களால் கிட்டத்தில் கிடைக்க வேண்டிய விடுதலை… வெகு,தூரத்திற்கு அடித்துக் கொண்டு போய் விடுகிற அவலத்தைத் தான் நாம் எல்லா சந்தர்ப்பங்க ளிலும் காண்கிறோம்.

இவ்வளவு காலமும்’எமக்கெதிராக நிகழ இருந்த இந்த பெரும் யுத்தத்தை இந்தியா தான் பெரும் தடையாக இருந்து தடுத்துக் கொண்டிருந்தது’என்ற சிறு நிலமையைக் கூட புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே நம் புத்திரர்கள் இரு ந்திருக்கிறார்கள். அந்த தடை அகன்ற உடனேயே போர் மேகங்கள் சூழ்ந்து பேரவலமே நிகழ்ந்து விட்டனவே .

தற்போது, இந்தச் சிக்கலில் ஈழப் போராட்ட மே காணாமல் போய் விட் டிருக்கிறது.

அவனுக்கு ஏற்பட்ட சுய‌அனுபவத்தையே திரும்பவும் கோபத்துடன் ஒரு குடும்பத்தில் வைத்து நாடகமாக மறு வாசிப்பு செய்திருக்கிறான்.நாம் எல்லோருமே,எங்களிற்கு உண்மையில் நடந்தது என்ன ? என்பதை கட்டாயம் தெளிவாக அறி ந்திருக்க‌ வேண்டும்.’நம்மவர்களிற்கும் அவசியம் அரசியல் அறிவு இருக்க‌ வேண்டும்’என வலியுறுத்தி முடிவதாக இருக்கிறது.

மற்ற நாடகம் “ஒய்வெடுத்துக் கொள்ளும் போராட்டம்”.அது தற்போதைய நிலை யை அலசு ,அலசு என‌ அலசுகிறது . தேவன் உயிருடன் இல்லை தானே.எனவே ரதன், ,தன்னுடையக் கருத்துக்களையும் துணிவாகச் சொல்லி…களைத்துப் போய் இருந்தான்.இலக்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்களை விட , மற்ற‌வர்கள் காது கொடுத்துக் கேட்டிருப்பார்களா? என்பது சந்தேகம் தான்.

விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு கூட முந்திய நிலை அவ்வளவாக மாறி இருக்கவில்லை என்பது தான் கசப்பான‌ உண்மை. மறுபடியும் சிலுவை சுமக்க வேண்டும்.நினைக்க ,நினைக்க ஆயாசமாக ரதனுக்கும் இருக்கிறது. நானும், இன்னும் பத்து வருசத்திற்குள் உன்னைப் போல‌ ,கழன்று விடுவேன் நண்பனே.நம் சந்ததியும் உருப்படியாய் இல்லை. இந்தத் தேரை கொண்டிழுக்க இனி,தேவர்கள் தான் மேலே இருந்து கீழ் இறங்கி வர வேண்டுமோ? ,வொட்கா அடித்தால் நல்லாய் இருக்கும் போல இருக்கு மச்சான்”என்று மானசீகமாக தேவனுடன் கதைத்துக் கொண்டான். ‘தேவன் ஏன் குடித்தான்?’என்ற காரணமும் புரியிற மாதிரி இருக்கிறது. தலை போற பிரச்சனைகள் கிடக்கிற‌ போது,உடல் நலமாவது? மண்ணாங்கட்டி!

ரஸ்சியாவில் இப்படியான கசப்பான நிலைமைகளை மாற்றுவதற்கு ,அனைத்து ரஸ்சிய மக்களையும் கல்வி அறிவுடையவர்களாக மாற்ற வேண்டும்,அதாவது படித்தவர்களாக்க வேண்டும் என போல்சேவிக் கட்சி முழு மூச்சாக‌ இறங்கியது என்கிறார்கள். முழுதாக நிறுவனப்படுத்தப்பட்டிருந்த கல்விமுறையை வெளியே எடுத்து,முதியோர் கல்வி,இளைய கல்வி வட்டங்கள்,கம்யூன்கள்,பகுதி நேர வகுப்புகள்…என எல்லாவிதத்திலுமாக‌ நடத்தினார்கள்.வெண் படை,செம்படை என பிளவு பட்டு பெரும் சீரழிவை அடைந்த போதிலும்…ரஸ்சியர்கள் 90 வீதமானவர்கள் படித்தவர்கள் என்ற நிலையை எய்தியே இருந்தார்கள். அப்படி இருந்ததாலே கடைசியில் புரட்சியும் வெற்றி பெற்றது .

இன்று ,சுப்பர் பவராக இருக்க வேண்டிய இந்தியா இன்னமும் வெற்றி பெறாமல் இருப்பதும்,ஒரு கட்டப்பஞ்சாயித்து நாடு,”சுப்பர் பவர் நாடு” என தன்னைச் சொல்லிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். நிறுவனக் கல்வி முறையை முதலில் வெளியில் எடுக்க வேண்டும் என்பதை இந்தியாவும் புரிந்து கொள்ளவில்லை… . என்றே படுகிறது. பழைய சுப்பர் பவரான பிரித்தானியா நாடு, இன்னமும் வலு இழக்கவில்லை தான். அதன் பிள்ளை நாடுகளைச் சேர்த்து ஒரு கூட்டமைப்புப்பாகத் தான் இருக்கிறது.பொதுநலவாய நாடுகள்,ஐரோப்பியாக் கூட்டமைப்புகள்.. நேட்டோ அமைப்பில் தேவையில்லாமல் போய் செருகிப் கிடப்பதால்…செல்வாக்கிழந்து போய்க் கிடக்கின்றன.

‌. இவ்விரண்டுமே அகதிகள் பிரச்சனைகளை,பாலாஸ்தினர்களின் பிரச்சனைகளை எல்லாம் கதைக்க வலுவற்றையாய்யும் கிடக்கின்றன‌.

இதையெல்லாம் ஒரு காலத்தில் கதைத்ததை இந்தியா,இப்ப மறந்து விட்டது.ஆனால்,மறுபடியும் ..கதையாது என்பதிற்கு உத்தரவாதம் இல்லை என்பதாலேயே…இந்திய தலைவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் போலப்படுகிறது.எப்படி ஈழப்பாராட்டத்தில் …இந்தியத் தலைவர் கொல்லப்பட வேண்டிய தேவை இல்லையோ?,அதே மாதிரி,சீக்கியப் போராட்டத்திலும் அப்பவிருந்த இந்தியத் தலைவர் …சாக வேண்டிய தேவை யும் இருக்கவில்லை. வெளிநாட்டவர்கள் தான் இவர்களை கருவிகளாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களிற்குத் தான் தேவை இருக்கிறது.

முறையான தலைவர்கள் ஆட்சிக்கு வருகிற போது நிலமைகள் கொஞ்சம் மாறும் தான்.எதற்குமே ஒரு காலம் வர வேண்டும் போல இருக்கிறது.நமது ஈழ‌மாநிலமும் சுதந்திரம் பெறவும் ஒரு காலம் வர வேண்டும் போல இருக்கிறது. நமது மண்ணில்,நமது,கடலில்,நம்மவர்களே சமூக காவலர்களாக.. தரிக்கும் காலம் … ரதனின் கனவுகள் சிறகடிக்கின்றன. ஒருநாள் காலம் மாறாமலா போகும்? செத்துக், கித்துப் போனாலும் கூட‌ வந்து செக் பண்ணுவான். நிறைவேறாத ஆசைகளை உடைய‌ ஆவிகள் திரும்ப பூமிக்கு வரும் என்பது ஜதிகம்.

ஒரு நாடு, டிஜிட்டல் வெற்றிகளால் உலகத்தை ஆளவே முடியாது.ஏனெனில் அந்த வெற்றியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால்…கள்ளனும் அதுவாகவே இருக்க வேண்டும்.அந்த விசயம் அம்பலத்தில் வார போது ,அதன் மதிப்பு ஓரேயடியாய் இறங்கி விடும்.பிறகு தனி நாடு தான்.கூட்டமைப்புகள் கூட ஒதுக்கி விடுவார்கள்.

விண்வெளியில் போய் ஆட்டம் போட்டாலும் கூட ஒதுக்கியே தான் விடுவார்கள்.

அவன் பேசி ஓய்ய கலா அவனுக்கு கிட்ட வந்து காதிலே மெதுவாக.

,”தேவனுக்குப் படிப்பிச்ச பார்வதிரீச்சர் பேச விரும்புகிறார்.அறிவி மச்சான்”என்றான் .

“எழுத்தறிவிச்சவர் கடவுள்.தேவனுக்கு படிப்பிச்ச ரீச்சர் சொர்பொழிவு ஆற்ற வருகிறார் “என்றான்.திரும்பி எங்கடா?என்று கண்ணால் கேட்டான். ஒரு அக்கா சக்கர நாற்காலியில் வைத்து தள்ளி வார முதியவரைக் காட்டினான்.கிட்ட வர “இவர் என்ர அக்கா மாலதி,அம்மாடா”என அறிமுகப் படுத்தினான்.

அடப்பாவி!

ரதனுக்கு இலக்கியக் கூட்டங்கள்களிற்கு வர ஆரம்பித்த கொஞ்ச நாளில் தேவன் அறிமுகப்படுத்தி கலாவைத் தெரியும்.ஆனால், . அவன் பேசனல் லைவ்பைப் பற்றி இன்று வரையில் எதுவுமே தெரியாது.மண்டபத்திலும் இலக்கியக் கூட்டத்திற்கு வார முகங்களே தெரிகின்றனர்.பலரின் பெயரைக் கேட்டால் அவனுக்கு சொல்ல வராது. கலாவில் பழக்கம் கூட என்றபடியால்… தெரிகிறது .

இவனுக்கும் கூட தன்னைப் பற்றி தெரிந்திருக்காது என்றே தோன்றியது .சிலவேளை அவனும் தேவனைப் போல சாகிற போது கொஞ்சம் தெரிய வரலாம். ஆனால், அவன் தான் பிரபலமான புள்ளி இல்லையே.பேரானவனும் இல்லையே. தாமரை இலையும் நீரும் போல வாழ்க்கை மட்டுமில்லை நட்பும் கிடக்கிறது .

ஊரிலே இருந்த போது தாமரை இயக்கத்திலே இருந்திருக்கிறான். அதனால் ,வந்த புதிதில் அதன் தொடர்ச்சியாக தாமரைப் பெடியள்களுடன் பழக்கம் இருந்தது.கல்யாணம் கட்டிய பிறகு அந்த‌ தொடர்புகள்.. அறுபட்டு ‌அப்பப்ப காற்றிலே கேள்விப்பட்டு ” அட இவன் செத்துப் போய் விட்டானா?”என்று துக்கம் விசாரிக்கிறதோடு … முடிகிறது.

இவனுக்கும் கிழடு தட்ட ,தட்ட இலக்கியக் கூட்டங்களிற்குப் போறதும் கூட குறையப் போகிறது ..

கலாவின் அம்மா ,வெள்ளைத் தலை மயிர் , கம்பிகளாக‌ பறக்க‌, …அனேகமாக கொட்டுண்டு போய் இருக்க‌,கண்கள் உள்ளே தள்ளிப் போ ய் தளர்ந்து போய்யிருந்தார். ,”பேசுங்கள் அம்மா “என வயர் இணைப்பு இல்லாத மைக்கை அவரிடம் கொடுத்தான் பின்னுக்கு துயரத்துடன் நின்ற தேவனின் ‘விடியல்க் கூட்ட நண்பர்களுடன் போய் நின்று கொண்டான். அவர்களுடைய தூண்கள் ஒவ்வொன்றாக சரிந்து கொண்டு வருகிறது.கலாவும் அவனுக்குப் பின்னால் வந்து நின்றான்.

இங்கத்தைய வாழ்க்கை வட்டம் தலை கீழாகக் கிடக்கிறது .

இங்கே வாழ்பவர்கள் பலர் பொதுவாக‌ இயல்பாகவே சாவதில்லை.தற்கொலையே செய்து கொள்கிறார்கள். கசினோ விளையாட்டுகள்ப் போல நடை பெறுகின்றன. ஏன் என்று தெரியவில்லை ?

நாடுகளிற்கிடையிலான பிரச்சனைகளில் கூட்டமைப்பு நாடுக‌ள் நிறைய மக்களைக் கொல்கிறார்கள் . பெரும்பாலும் அரபு மக்களிற்குத் தான் இந்த ஈழத்தமிழரின் பேரவலத் தலைவிதி.இஸ்ரேல், ஒருபுறம் பாலாஸ்தின மக்களை கொல்றதை நிறுத்தவில்லை. தொலைகாட்சியில் எம்மக்கள் கொடூரமாக இறந்த காட்சிகளை திரும்பத் திரும்ப இவர்களில் …பார்த்துக் கொண்டிருக்கிறோம்!இந்த மனிதர்கள் மாறவே மாட்டார்களா?இந்தச் சாக்கள் எம்மை மேலும் வதைக்கின்றன. எனவே ,தான் இவர்கள் இப்படி சாகிறார்களா? பிறகு, வேற எப்படி சாவார்களாம்?

இங்கே, இந்தியாவைப் போல இடிந்து விழுகிற உயர் கட்டிடங்களை கட்டாது உறுதியாக கட் டினாலும், கூட‌ விஞ்ஞானம் வளர்ந்து விடவில்லை .அடிக்கடி இலகுவாக‌ தீ பிடித்து எரிந்து சாம்பராகின்றன‌.வீடுகளிலும் இதே கதை தான்.அதோடு மெளனமாக காபனோற்சைட்டு வாயும் …ஏற்பட்டு அதி லே எல்லாம் அகப்பட்டும் மனிதர்களும் இறந்து போகிறார்கள்.

இங்கத்தை தொழினுற்பங்களும்…… மோசமாக‌ தள்ளாட்டம் போடுகின்றன‌ .இயற்கை அழிவுகள் வேறு அதிகமாக இடம் பெறுகின்றன.அணுப் பிரிசோதனைகளை நிறுத்துவது போல ,அடிக்கடி விண்வெளிக்கு ஏவுகிற ரொக்கெற்றுக்களையும் ஏவுறதை நிறுத்த வேண்டுமோ,என்னவோ?

இதற்கும் சர்வதேசச் சட்டங்களைக் கொண்டு வர வேண்டுமோ? இப்படி இடைக்கிடை குறுக்குத் தனமாக விசாரணையும் செய்து கொள்கிறான்.ஆழ்மனசு நக்கல் அடிக்கிறதோ?.

ஈழத்தில் இருக்கிற நம்மவர்களும் தாமே இருக்கிற தொழில்நுட்பங்களை சுயமாகவே வடிவமைத்து செய்கிற போதே “வளர்ச்சி” என்பதை க் காண்பார்களோ? மீள் சுழற்சிக்கான தொழிற்சாலைகளை கட்டி எழுப்புவது தான் அதன் தொடக்கப் புள்ளி களா ?.

ரதனுக்கு இவற்றைப் பார்க்கிற போது,.பழந்தமிழர் தொழினுட்பங்களும் பெட்டராகவே இருந்தன போலவே …இருக்கின்றன.அவற்றை நாங்கள் தேடி தேடி எடுத்து பரீசிலி த்துப் பார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வரலாமே !, அவன்,தன்ர நினைப்புகளை நினைத்துச் சிரித்துக் கொண்டான் .

எல்லாருமே தனிப் புள்ளிகளாகவே இருக்கிறோம். அது தான் பிரச்சனை.. யாரும் இறந்து போனால் இப்படி தனிமையிலிருந்து வேற அழ வேண்டி வருகிறது. நினைப்புகளிற்கு ம் குறைவில்லை .துக்கத்துடன் மறுபடியும் பெட்டியில் கிடக்கிற தேவனை நினைத்தான்” தேவனும், நம்மவர்கள் பலவற்றை சாதிப்பார்கள்,நானும் நேரிலே பார்ப்பேன்”என எவ்வளவு கனவுகள் கண்டிருப்பான் !, காணாமலே போகிறானே?

பாரதத்தில் ,கண்ணன் (பெருமாள்),” ஆத்மா, மனித உடல்கள்,சட்டையை மாற்றிக் கொள்கிற மாதிரி…அடுத்தடுத்து சட்டைகளைப் போட்டுக் கொண்டே இருக்கிறது, அது அழிவதில்லை”என்கிறார். இவனும் ,கனவை தரிசிக்காமல் சமாதானம் அடையப் போவதில்லையா? மறுபடியும்,மறுபடியும் வந்து பிறக்கப் போறானோ?

வீரர்களாக இருப்பது,அநீதிகளை எதிர்த்துப் போராடுவது,சுதந்திர பிறவிகளாக இருப்பதற்கு குறுக்கே நிற்கிற அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிய முயற்சிப்பது எல்லாம் வெட்டித் தனமானவையா? சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறோமா? போராடிக் கடைசியில் என்னத்தை த் தான் கண்டோம் என்ற விரக்தியும் கூட எட்டிப் பார்க்கிறதே ? விரக்தி கூடாது.

அவனின் தலைமாட்டுப் பக்கம் பெட்டிக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த கணனித் திரையில் சிலைய்ட்டாக தேவனின் ஒவ்வொரு புகைப்படங்களும் மாறிக் கொண்டிருந்தன.பாரதிராஜாவின் திரைப்படங்களில் வார கதாநாயகன் சுதாகர் போல கறுத்த மீசையுடன்,80களில் போட்ட பெல்பொட்டமுடனான நீள்கால்ச்சாராய்யுடன்…அவனும் ஒரு நாயகன் போல இருந்தான்.

இவன் நேரே,இந்த நாட்டுக்கு வந்து இறங்கி இருக்கவில்லை.பல ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் இருந்த…சந்தோசம் பூக்கும் குடும்பப் படங்கள்,அவனுடைய மூத்த மகளும்,அடுத்தவளும் அங்கே தான் பிறந்திருக்க வேண்டும்.குழந்தையை ஏந்திய படம்,உறவுகள் சூழ,நண்பர்களுடன் …என மாறிக் கொண்டிருந்தன. பக்கத்தில் நின்ற கலா, ஒரு படத்தைச் சுட்டிக்காட்டி “அது, அவனுடைய இயக்கக் கூட்டம்” என்றான். தனிய பெடியள்களுடன் நின்றிருந்தான். அங்கே எடுத்திருக்க மாட்டான்.அதுவும் வெளிய வந்த பிறகு தான் எடுத்திருப்பான்.

அம்மாவின் பேச்சும் காதில் வீழ்ந்து கொண்டிருந்தது. “இவன் என்னுடைய மாணவன்.குட்டிப் பையனாக இருக்கிற போதே,மழை,பூ,நதி,வானம்…என அழகாக இயற்கையை ரசித்து,குட்டிக் கவிதைகள் எழுதுவான்.தீபாவளி,சிவராத்திரி,சரஸ்வதிப் பூசை,பொங்கல்…என வார விசேச நாட்களையும் கவிதையாக்கி விடுவான்.இடதுசாரிக் கட்சியில் இருந்த இவனுடைய தந்தையார்…இவனின் அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருக்க வேண்டும்.சுட்டிப் பையனாக பள்ளிக்கூடத்தில் கவனிக்கப் பட்டவன்.7ம் வகுப்பிலே, ஈழநாடுப் பத்திரிகையின் ஞாயிறுகளில் வார வாரமஞ்சரியில்,மாணவர் உலகுப் பகுதியில்,இவன் எழுத்துக்கள் அச்சில் வரத் தொடங்கின. ஒருநாள் ,ஈழநாடு ,ஆசிரியரான பெருமாளின் முன்னால் போய் நின்று,”நிருபராக எப்படி எழுதுகிறது?எனக் கேட்டிருக்கிறான்.”நீ இப்ப எழுதுறது போலவே எழுதி வா.செய்தி எழுதுவது பள்ளிப் பாடம் போன்றது.அது,உன்னுடைய எழுதுற திறமையை அழித்து விடும்.இதிலே முதலில் தேர்ச்சியைப் பெறு, பிறகு,… பார்க்கலாம்”என தெரிவித்து அனுப்பி இருக்கிறார்.ஈழநாட்டில் வேலை செய்கிற ஊழியர் ஒருவர் தெரிவித்து எங்களுக்கெல்லாம் தெரிய வந்தது.இவன் எதிலும் பெரிதாக செய்ய ஆசைப்படுறவன்.

இவன் படிச்சுப் பெரிய ஆளாவான்’என அதிபர் உட்பட நாமெல்லாம் நினைத்தோம்.83ம் ஆண்டுக் கலவரம் எல்லாத்தையும் தலைகீழாக்கி விட்டது. பிஞ்சு இதயங்கள் பலவற்றில் நிறையக் கோவங்கள்… எல்லாரும் திசைமாறிப் போய் விட்டார்கள்.”கரைகிறார்.

“ஆம்பிள்ளைப் பிள்ளையைப் பெற்றவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்,பெண்களைப் பெற்றவனோ புண்ணியவான்.இவ னோ மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்றவன்.பெரும் புண்ணியவான்”என்கிறார்.

ரதன்”கலா,உன்ர அம்மா, நல்லாய் மயக்குற மாதிரி பேசுகிறார்”என்றான்.

“அம்மா சொல்றது,சரியா,பிழையா?என உனக்கு கேட்கத் தோன்றவில்லையா?” என குதர்க்கமாகக் கேட்டான் கலா.

“என்ன பிழை?சரியாத் தானே,சொல்கிறார்,விளங்கவில்லையே “என்றான் ரதன்.

“புண்ணியம் பெரிசில்லையா?”கேட்டான் கலா.

“தாய்வழிச் சமுதாயம் தானே முதலில் தோன்றியது!,உண்மையாய் இருக்கலாம் தானே?” “ரதன்.

கலா “ரீச்சருக்கு இருசாராருமே சரிசமன்.அம்மா,தேவன் ,பேச்சைக் கேட்டு மனம் குளிரணும்’என்று தான் அப்படி பேசுகிறார்”என்றான்.

“செத்தவன் எப்படி கேட்பான்?”வியப்புடன் கேட்டான் ரதன்

.”நீ என்ன நினைக்கிறாய்?செத்து விட்டால் உடனே, ஆவியாய் பறந்து விடுவோம்,என்றா?…ஒரு கிழமைக்கு மேலே குடும்பத்தையே சுற்றி, சுற்றி வருவோம் தெரியுமா?.”என்றான் கலா. “படையல்,கழிச்சல்..என்று எல்லாம் செய்கிறார்களே(செலவு..என சொல்லப்படுகிறது),ஆவியை சாந்தப்படுத்த தானே?”கலா.

அவன் , நாடகத்தில் என்னவோ எல்லாம் பேசினான்.இந்த வலத்தில் சிந்திக்கவே இல்லை. அம்மாவிற்கிருக்கிற‌ நுண்னறிவு அவனிற்கு இல்லை தான்.ஒப்புக் கொள்ள வே வேண்டும். இவன் , என்ரப் பேச்சையும் கேடிருப்பானே!,சே!,கொஞ்சம் எடிட் பண்ணி இருக்கலாம் .

“அவனுடைய விடுதலைப்பற்றிய புதிய பேச்சுக்களை விளங்கிக் கொள்ள முடியவில்லை தான்.ஆனால்,அவன் உயிர் தப்பியதை …டயறிக் குறிப்புப் போல எழுதி இருக்கிற தொடர் ‘ஒரு ஆவணம்’ போலவே இருக்கிறது.புத்தகமாக அச்சில் அடித்த போது முதல் பிரதியை என்னைத் தேடியே வந்து கையில் தந்தான்,நல்லப் பெடியன்”அழுதே விட்டார்.

“எனக்குப் பிடிச்ச ரீச்சர் உன்ர அம்மா தான்.அவரிடமே கொடுக்க விரும்புறேன்,என்றான்.நான் தான் கூட்டிப் போனேன்”என்றான் கலா.

மேலும் தொடர்ந்த அம்மாவின் பேச்சை..ரதன் கேட்டுக் கொண்டிருக்க,கலாவின் நினைப்பு , சிற‌கடித்து பின்னோக்கிப் பறந்து விட்டிருந்தது. தேவனைச்,சேர்ந்த ஈழவர் ஆய்வு மன்ற அமைப்புப் பெடியள்கள் கிராமத்துப் பெடியள் மத்தியில் கூட்டங்கள் வைப்பார்கள்.பள்ளிக்கூடங்களிலும் வைப்பார்கள்.பலதைப் பற்றிப் புதுவிதமாக‌ பேசுவார்கள்,அலசுவார்கள்.

“சங்ககாலத்தில் இருந்த குமரிமலை தான் இலங்கையின் மத்தியில் உள்ள மலை’என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்”…. என்று தொடங்கி, “இந்தியாவின் தெற்குப் பக்கத்தில் இருந்த நீட்சி தான் இலங்கையும்.கடல்கோளாலால் பூம்புகார் உட்பட நிறைய பிரதேசங்கள் கடலால் மூடப்பட்டன.தப்பிய நிலப்பரப்பு தீவுகளில் ஒன்று தான் இலங்கை.

அன்றிருந்த தமிழர்களின் வழி வழி வந்தவர்கள் கட்டிய‌ கட்டிய பெருங்கோவில்கள் தற்போதும் கூட இலங்கையில் காணப்படுகின்றன‌. இடித்திடித்து கட்டப்பட்ட கோவில்களின் பரப்பரைக் கதைகள் .தமிழர்கள், ஆரம்பத்தில் இலங்கை முழுதிலுமே பரந்தே இருந்தனர்.” என்றனர்

அவர்களிலேயே ஒருத்தன் “முழுக்க, முழுக்க திராவிட நாடாக இருந்த இலங்கை எப்படி சிங்கள நாடாக முடியும்?” கேள்வி யும் ‌ கேட்பான். தேவனுக்கு, சுவாரசியம் தட்டி விட்டது என்றால் பிதற்றவும் கூட ஆரம்பித்து விடுவான்.அவனுக்குள்ளே இருக்கிற கவிஞன் பேசுகிறானாம். ““தென்னவர்கள் சொல்லுற பொய்களிற்கு அளவே இல்லை கேணையன் என்றால் நாக்குளிப் புழு கூட இடுப்பிலே பாவாடை கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடுமாம்.” என்பான்.

அது என்ன, நாக்குளிப்புழு டான்ஸ்?..

இந்தளவுபெரியவைரமுத்தே,கவிதையில்’மண்ணெண்னெய்யுக்கும்,தண்ணீருக்கும் கல்யாணம்’எல்லாம் கட்டி வைக்கிற போது,இதை விட்டு விடலாம்.

“கலிங்கப் போரில் , அவர்களுடைய கடல்ப் படை சண்டையில் ஈடுபடவில்லை.தரைப்படையே அசோகனிடம் தோல்வியடைந்து பேரவலத்தைச் சந்தித்த போது, கடற்படையினர் , அவனுக்குத் தெரியாமல் தமது மக்களை காப்பதற்காக கடலில் உள்ள பெரிய,சிறிய தீவுகளிற்கெல்லாம் மக்களைக் கொண்டு போய் இறக்கினர்.

தரையுடன் தொடர்புபட்ட நாடுகளை பாதுகாப்பற்றவை என்று அவற்றை நாட வே இல்லை.

அப்படியே இலங்கையிலும் பெருமளவு கலிங்கர்களைக் கொண்டு வந்து இறக்கினார்கள். ‘அந்த கொடூர யுத்தம் நடை பெறாமல் விட்டிருந்தால்….இந்த ஈழத்தில் சிங்கள இனம் என்ற…. ஒன்றே தோன்றி இருக்க மாட்டாது’என்று ஒருநாள் ஒருத்தன் அள ந்தான்.

தொடர்ந்து “அன்றைய இலங்கையின் பூர்வக்குடியினரான தமிழர்கள், காலப்போக்கில் தமிழ்நாட்டுக்கு கிட்டவாக இருந்த இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலே செறிவடையலாயினர்.அதனால் ,மற்றைய பகுதிகளில் எல்லாம் அடர்ந்த காடுகள் செழிப்பாக வளர்ந்து விட்டிருந்தன.” பெருமூச்சு விட்டு

“ இன்றைய வடக்கிலே ராணுவம் காணிகளை எல்லாம் பறித்தும்,குடியேற விடாமல் செய்ததால் காடுப் பத்திப் போனது போலவே தெற்கு,மேற்குப் பகுதிகளில் இயற்கை விளையாடியிருந்தது.ஒளிந்து வாழ வந்தவர்களிற்கு சிங்கம்,புலி,பாம்புகளிற்குப் பயமா? மனிதர்களை விட அவை கொடியவை இல்லையே தவிர‌ பயமே அறியாத வர்கள் இயற்கையோடு ஒன்றி மறைந்து வாழ தங்களிற்கு ஏற்ற இடம் என‌ வாழலானார்கள். அவர்கள் தமிழர்களை எதிரிகளாகவே நினைக்கவில்லை .என்றும் நன்றி உடையவர்களாகவே இருந்தார்கள்” கேட்கிறார்களா?என்று கவனித்து தொடர்ந்தார்கள்

“.இவர்கள் பாதுகாத்ததாலே, தென்பகுதியிலே இன்றும் தமிழர்களின் பழையக்கோவில்கள் இருகின்றன.

அசோகன், மனமாற்றம் அடைந்தானோ,இல்லையோ?சமாதானமாக வாழ முடிவெடுத்திருந்தான்.ஈழத்தில் நிறைய கலிங்கர்கள் இருப்பது அவனுக்கு தெரிந்தே இருந்தது.

ஆனால்,கலிங்கர்கள் அவனை கடைசி வரையில் நம்பவில்லை.”கலிங்க நாட்டிற்கே வாருங்கள்,சுதந்திரமாக நீங்கள் வாழலாம்”என அவன் முரசரைந்து அறிவித்தான். அது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு..

பதிலுக்கு, இவர்கள் ” அவன், ஏறத்தாழ தனது சகோதரர்கள் அனைவரையும் கொன்ற கொடும்பாதகன், “என தூற்றி த் திரிந்தார்கள் .

உண்மையில்,அசோகன்,தனது சகோதரர்களில் 3,4 பேர்களை மட்டும் தான் கொன்றான்,என்றும் மற்றவர்களை அரச அதிகாரிகளாக்கினான்’என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.கிரிஸ்துக்கு முன் நடந்த கதையை இனிமேல், கிளற முடியாது .அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம் ..நெப்போலியன்,சதாம் குசையின்,கடாபி.. போன்றவர்கள் உறவினர்களை ஆட்சியில் அமர்த்தியே பலமாக ஆள முடிந்திருக்கிறது. அசோகனும் பலமாக வே ஆட்சி புரிந்திருக்கிறான்.

சளைக்காத அசோகன் தனது மகள் சங்கமித்தையும்,சகோதரனான மகேந்திரனையும் சமாதானத் தூதுவர்களாக்கி வெள்ளரசம் மரக்கன்றையும் கையில் கொடுத்து அனுப்பி இருந்தான். அவர்களை வரவேற்றவர்கள் திராவிட அடியைக் கொண்ட அரசராக இருக்கலாம் என நம்பப் படுகிறது. அசோகன் பின்பற்றிய புத்தமதம் வேறு,இலங்கையின் புத்தமதம் வேறு..

கலிங்கர்கள்,அசோகனின் முயற்சியை அவமானப்படுத்த பர்மாவிருந்த திக்காய் பள்ளியிலிருந்து அடிப்படைவாதத் தேரோக்களை இலங்கைக்கு வரவழைத்திருக்கிறார்கள்…என்கிறார்கள் . ஆனால், ‘சிங்களம்’ ,இவ்வாறு வந்த‌ தேரோக்கள் உருவாக்கவில்லை.

கல்வி அறிவில் சிறந்த கலிங்க அறிஞர்களே சிங்கள மொழியை உருவாக்கியவர்கள் புதிய மொழியை உருவாக்கணும் என்று கூட‌ சிங்கள மொழியை உருவாகவில்லை, தம் பாளியை சிறப்புற வடி அமைத்த போதே பிறந்தது அழகிய‌ சிங்களம்.

. அவர்கள் தாம் தங்கிய தீவுகளிலிருந்து வெளியேற விரும்பாது,நிரந்தரமாக தங்கி விடவே விரும்பினார்கள்.

அசோகன் தம்மை அறவே அழித்து விடுவான் என்ற பயம் அவர்கள் கண்க‌ளை விட்டு அகலவே இல்லை. அவன் இனிப்பு வார்த்தைகளைக் கூறி எப்படி அழைத்தாலும்.ஓரிடத்தில் .. கூட்டி அழித்து விடவே சூழ்ச்சி செய்கிறான் என கருதினார்கள் எனவே.கலிங்கரா?கொக்கா?… என‌ மசியவில்லை.தற்போதைய சிறிலங்காப்படைகளும் அதைத் தானே செய்தன‌. கோயில்கள்,மருத்துவமனைகள் என ‌குறிப்பிட்ட இடங்களிற்கு வரும்படி வருந்தி , வருந்தி அழை ப்பு விடுத்து விட்டு,பெருமளவு கொத்துக் குண்டுகளாய்ப் போட்டு கொன்றொழித்தார்கள்.

“கொத்துக் குண்டுகளை நாங்கள் போடவில்லை”என்று சரத் பொன்செகா கூறுகிறார். யார் போட்டார்களோ…?இவர்கள் தானே பொறுப்பாளிகள். அதனால் தற்போது அவர்களது படைகள் அனைத்துமே (‘ரீபோர்ம்’பண்ணப்பட‌ வேண் டிய)மீளக் கட்டமைக்கப்பட வேண் டிய நிலைக்கு தள்ளப் பட்டிருக்கின்றன.

. கலிங்கர்கள் ,விவசாயத்தில் உள்ள‌ சிறப்புற்ற அறிவை.. பயன்படுத்தி .இலங்கையில் பராக்கிரம சமுத்திரம் போல பெருங்குளங்களையும் சிறுகுளங்களையும் கட்டி (வெட்டி) விவசாய நாடாக்கினார்கள்.”சிறு மழைத் துளியையும் கடலில் சேர்ந்து வீணாக விட மாட்டேன்”என்பது அவர்களுடைய சிறப்பான வார்த்தை வழக்காக இருந்தது.

சிறந்த கடற்படையும் இலங்கை மன்னர்களிடம் இவர்களாலே எழுந்தன‌

ஆனால், இவர்கள் வரவழைத்த பர்மா புத்தபிக்குகள் தம் குணத்தைக் காட்டி விட்டார்கள். தமிழர்க்கும்,சிங்களவர்க்குமிடையில் பகைமையை ஏற்படுத்தி,இலங்கையை சிங்கள நாடாக்கி…கலிங்கருக்கிருந்த மரியாதைகளை எல்லாம் அழித்து விட்டிருக்கிறார்கள் கலிங்கர்களின் சந்ததியினர் தமிழருக்கு எதிரான நிகழ்த்திய‌ இன்றைய போரில் மற்றைய நாடுகளின் தயவில்,வீரமிழந்து ,ஜனநாயகப் பண்புகளற்று சோரம் போய் விட்டிருக்கிறார்கள்.தலை நிமிர்ந்து நிற்க வேண்டியவர்கள் ,இலங்கை மண்ணில் புழுக்களாய் இழிந்து போய்க் கிடக்கிறார்கள்.உரிமைகளிற்காக போராடுகிற தமிழர்கள் சிவனொளி மலை போல உயர்ந்து போய் இருக்கிறார்கள்”தேவ னும் அவர்களோடு சேர்ந்து அப்பப்ப சொன்ன கருத்துகளின் சுருக்கம் இது தான் !

சிங்களவர், தம்மை “நாம் ஆரிய (வம்சா) வழியினர்”என்று வேறு சொல்லிக் கொள்கிறவர்கள் .

தேவனின் பேச்சை இவனும் நம்பத் தொடங்கி விட்டிருந்தான்.” கலிங்கர் தான் ஆரியர். இந்தியாவின் தற்போதைய ஒரிசா மாநிலம் தான் அவர்களின் தேசம். கலிங்கரின் மதம் சமணம்.அதிருந்து ஏற்பட்ட ஒரு கிளையே.பெரும்பாலும் திகப்பர நிலையை களைந்து எழந்ததே புத்தரின் கொள்கைகள்; புத்தமதம்.ஆனால்,அவர்களைப் போல திகம்பர நிலையை எய்தியே ஞானம் பெற்றார்.புத்தரை கலிங்கர்கள் ‘அன்னியராக ‘நினைக்கவில்லை.அதனால் புத்தர் இறந்த போது…ஒவ்வொருவரும் புத்தரின் உடற் பகுதிகளை புனிதப் பொருட்களாக எடுத்த போது, கலிங்கரும்இவரின் பற்கள் சிலதை எடுத் துக் கொண்டிருக்கிறார்கள்.. சிகை..?,புத்தருக்கு எங்கே சிகை இருக்கிறது? , எடுத்தவை எலும்புகளாக இருக்கலாம்.நம்மவர்களிடம் ‘காடாத்தேடு’என சாம்பலை எடுத்து கீரிமலையில் கரைக்கிறது இருக்கிறது தானே,அவர்கள் எலுப்புகளை எடுத்திருக்கவே .சாத்தியம் கூடுதலாக இருக்கிறது.எலுப்பு கல்சியம் தானே?,அது எரிந்து பஸ்மமாகப் போகாதா?பேஸ் புக் நண்பர்கள் தான் இதெற்கெல்லாம் விடை அளிக்க வேண்டும்கலாவிற்கு தலை வெடித்து விடும் போல இருக்கிறது.

ஒரு சாதாரண வையித்தியரின் செயற்பாடுகள்…விளம்பர வெளிச்சத்தினால் பெரிசுபடுத்தப் பட்டு விட்டதோ?எனவும் தோன்றுகிறது. மற்றைய உடற் பகுதிகளை யார்,யார் பெற்றுக் கொண்டார்கள் எனத் தெரியவில்லை. அவற்றை பாதுகாத்து ,விழாவாக வெளியில் கொண்டும் வருகிறார்களா?…என்றும் கலாவிற்குத் தெரியவில்லை.

மனித உடல்ப் பகுதிகள் அழுகி வீச்சம் அடிப்பவை.

கனகாலமாக பற்களை போற்றி வந்தவர்கள்…இலங்கையில் இருந்த தம் இன சனத்தவர்களிடம் கொண்டு வந்து கைகளில் கொடுத்தனர்.ஒருவேளை அவற்றை பிடுங்கிக் கொள்ள அசோகன் முயற்சித்திருக்கலாம்.அதைப் பறிக்கத்தான் “உங்களை மன்னித்து விட்டேன்,உங்கள் நாட்டிற்கு திரும்பி வாருங்கள்”என பிறகு தேனொழுக அழைத்தானோ?

எவருமே புனிதம் எனக் கருதுகிறவற்றை சொந்தக்காரர் கைகளிலே தான் கொடுப்பார்களே தவிர , அன்னியர் கையில் கொடுக்கவே மாட்டார்கள்.

தற்போதைய‌ சிங்களவர்களின் அளக்கிற‌ பசப்பு வார்த்தைகளிற்கு அளவே இல்லை ,பொய்யானவை.”பெரகரா”என வருசாவருசம் அப்பற்கள் யானையில் பவனி வர பெரு விழாவாகவே இலங்கையில் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர்கள்,அப்பற்களை திருப்பிக் கொடுக்க வேயில்லை,வைத்திருக்கிறார்களாலலாம் எப்படி??? “ஒருத்தர் மாறி ஒருத்தராக கதை அளந்து கொண்டிருப்பார்கள். தென்னவர்களும்,”இலங்கை எங்கள் சொந்த நாடு” என அளக்கிறார்கள்.

‘கலிங்கர்கள்” திரும்பிப் போகவே இல்லை. இங்கேயே தங்கிவிட்டார்கள் கலிங்கர்கள்,வீரம்,திறமை,நேர்மை,சத்தியத்திற்கெல்லாம் பேர் போனவர்கள் . என்பது தெரிந்ததே!அடுத்தவர் நிலத்தை அபகரிக்கும் நரிப் புத்தியும் அற்றவர்கள்.

அவர்களது சந்ததி ஒன்று தான் எடுப்பார் கைப்பிள்ளையாகி,வீரமிழந்து,தலை குனிந்து,இழிந்து போய் நிற்கிறது.இந்த அவமானத்திலிருந்து இவர்கள் வெளியே வருவார்களா?இல்லை,களப்பிரர் காலம் போல இந்த இருண்ட காலத்தை சிருஸ்டித்துக் கொண்டு தானிருப்பார்களா? ம்!,இன்னும் எத்தனை காலம் இந்த மானம் கெட்டவர் ஈழத்தில் ஆட்சி தொடர ப் போகிறதோ?.’ சிந்தனை அறுபட்ட‌, கலா “என்ன மாதிரி அவர்கள் பேசுவா ர்கள் தெரியுமா? ரதன் , நாங்கள் எல்லாம் மகுடிக்கு ஆட்பட்ட பாம்புகள் போல கேட்டுக் கொண்டிருப்போம்,தெரியுமா?”என்று கூறினான்., தொடர்ந்து நீண்ட பெரு மூச்சு ம் விட்டான்.

இவனிடமும் என்னவோ பவர் இருக்கிறது,.எல்லாரையும் தன் பக்கம் இழுத்து விடுகிறானே என்றே ரதனுக்கும் பட்டது.

புதிதாய் வந்த ஒரு கூட்டம் ஒன்று பெட்டியை மொய்த்துக் கொண்டிருந்தது.

அந்த சாவீடு, வந்த கூட்டத்தை பதிவு செய்து கொண்டிருக்கிறது.

“இதைப் போல கூட்டம் எப்பவும் வரவில்லை”பணியாள் ஒருவர் தெரிந்தவரிடம் கூறுவது கேட்டது. கலாவின் அம்மா பேசி ஓய்ந்திருந்தார்.

ரதனின் சிந்தனையும் பின்னோக்கிப் பாய்ந்தது. அப்ப ரதனுக்கு தேவனைத் தெரியாது, ஆனால்…அந்த ப் பிரச்சனையைத் தெரியும். இப்ப,தான் தேவன்,இந்தியாவிலிருந்து திரும்பி வந்திருந்த போது அச்சம்பவமும் நடந்திருக்கிறது என்று அறிகிறான்.

அந்தப் பிரச்சனை சில்லறை விசயம். அரசியல் அனுபவமில்லாததால் பெரிசாக்கப் பட்டிருக்கிறது.பல்கலைக்கழக புகு வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.பழைய மாணவர்கள்,புதியவர்களை ராகிங் செய்யிறது வழமை போல… களை கட்டி இருந்தது.பிரச்சனை என்னவென்றால் புதிய மாணவி சுபா கழுகின் பொறுப்பாளர் ஒருவரின் உறவினராக இருந்தது தான்.கபிலனின் செட் எல்லாரையும் ஓரே மாதிரியே இருத்தி எழுப்பிக் கொண்டிருந்தது.சுபாவை இனம் கண்டு கொண்ட விமல்,”டேய்,டேய்..இவள் சந்திரனின் மச்சாளடா,மச்சான் அவன் சும்மாவே கோபக்காரன்,இவளை ராகிங் செய்தது தெரிந்தால்…தொலைந்தோம்.சுபா,நீங்க போகலாம்”என்றான்.

“இயக்கம் எல்லாம் வெளியிலே, நாம் முதலில் மாணவர் தான்.”, ஏ பொண்ணு சைக்கிள் விடு,நீச்சல் அடி..”… என்று.அவளையும் அலைக்கழித்து விட்டே கபிலன் விட்டான்.

.விசயம் தான் காற்றை விட கடுதியாய் பறந்து போனது.அன்றிரவே கொஸ்டலிற்குள் புகுந்து கபிலனை கைது செய்து கொண்டு போய் விட்டார்கள்.படையினர் வளாகத்திற்குள் நுழைந்தாலே கொந்தளிக்கிறவர்கள்,விடுவார்களா?கழுகு என சொல்லவில்லை,”பிடித்துக் கொண்டு போன இயக்கம் கபிலனை உடனடியாய் விடுதலை செய்ய வேண்டும்”என மாணவர் அமைப்பு பகிரங்கமாக‌ அறிக்கை விட்டது.

.மாணவர் அமைப்பு,பல்வேறு இயக்கச் சார்புடையதாக பிரிபட்டிருந்ததாலும்., இச் சந்தர்ப்பத்தில் எதிராக ஒன்றும் சொல்லவில்லை.உண்ணாவிரதக் கொட்டில் உள் வளவில் முளைத்தது.மாணவிகள் பலரும் …இருக்க முன் வந்தார்கள்.தொழினுட்பக்கல்லூரி மாணவர் உட்பட,பாடசாலை மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலமும் நடத்தப் போகிறோம் என எச்சரித்தார்கள்..பெரியவர்கள் சிலர் “எங்கட பெடியளுக்கு எதிராக எங்கட ஆட்களே ..இப்படி செய்வது நல்லதில்லை”என இயக்கத் தலைவர்களுடன் கதைத்துப் பார்த்தார்கள். விழலுக்கு இறைத்த

முயற்சியாக..விரயமா கிப் போனது.

கழுகு ,அவனைப் போட்டு மோசமாக‌ அடித்திருக்கிறது.கபிலன் இறந்து விட்டிருக்கிறான்.அதை வெளியிலே சொல்லவும் முடியவில்லை,நாம் தாம் ..செய்தோம் என உரிமை கோர‌வும் முடியவில்லை.

இப்படியான தர்மசங்கடமான நிலைமைகள் எல்லா இயக்கங்களிலும் இடம் பட்டிருக்கின்றன‌.

உண்ணாவிரதம் தொடர,ஆர்ப்பாட்ட ஊர்வலமும் விமர்சிகையாக‌நடைப்பெற்றது ஊர்வல முடிவில் இயக்க உப தலைவர்கள்,கழுகு உட்பட…மேடை ஏறி,”கபிலனைப் பற்றிய செய்திகள் ஏதும் கிடைத்தால் கட்டாடயம் அறியத் தருகிறோம்”என வாக்குறுதி அளித் திருந்தார்கள் . கழுகு தான் பிடித்தது என பல்கலைப் பெடியளுக்கு தெளிவாக தெரிந்திருந்தன.ஆனால் ,கழுகைச் சுட்டிக்காட்டிப் ….பேசப் எல்லாருக்குமே பயம்!

“அடக்குமுறைகளிற்கெதிரான போராட்டத்தில் உள்ளுக்கேயும் ஒரு அடக்குமுறையா?”தேவனின் செட் கோபப்பட்டது.சும்மாவும் இருக்கவில்லை.நகரத்து மதில்களில் எல்லாம் அழகான பெயின்ற் எழுத்தில் நறுக்கென வார்த்தைகளில் சுருக்கென குத்தலான கவிதை வரிகள்..ஒவ்வொரு நாளும் காணப்படத் தொடங்கின.பிள்ளையார் சுழி போட்டது போல பிரபல உணர்ச்சிக் கவிஞர் பசுபதியின் கவிதை வரிகளை எழுதியவன், பிறகு,தன் சொந்தக்கற்பனையில் உதித்தவற்றை எழுதிக் கொண்டிருந்திருக்கிறான்.

இவர்கள் தான் முதல் முதலில் மதில்களில் நேரடியாக நல்ல, பெரிய எழுத்துகளில் எழுதத் தொடங்கியவர்கள்.அதற்கு முதல் எல்லாரும் அச்சிட்ட போஸ்டர்களையே ஒட்டிக் கொண்டிருந்தவர்கள்.

இவை செய்திப் பலகைகள் என அழைக்கப் படலாயின.கடைசியில் கபிலனை விடுதலை செய் “என முடியும்.

ரதனுக்கு கவிதை வரிகள் சுவாரசியமாய் இருந்தன.சைக்கிளில் திரிந்து திரிந்து போய் வாசிப்பான்.இவனுக்கு தேவனையும் தெரியாது.அவனுடைய தோழர்களையும் தெரியாது.ஆனால் முல்லை இயக்கம் தான் எழுதுகிறது எனத் தெரியும்.

கபிலன் இறந்தது கசிந்து வெளியில் தெரிய வர, உண்ணவிரத்தத்தை நிறுத்தி விட்டார்கள். ஆனால், எழுதிய தேவனில் கழுகினர் வலு கோபத்தில் இருந்தார்கள்.முல்லை தடைசெய்யப்பட்ட போது,தேவன் இலக்கு வைக்கப் பட்டு விட்டான்.

பிறகு, …அவன் தப்பி வந்தது(தை),தெரியு ம் தானே!

ரதன்,ரீச்சரின் குடும்பத்துடன் நின்று திரும்பவும் தேவனை ப் பார்த்த‌ போது,பெட்டியோட நின்று கொண்டிருந்த தேவனின் மனைவி,மெலிந்து,காய்ந்து போய்யிருந்தவள் ,மெல்ல அவனருகே வந்து துயரம் பகிர,அவன் கைகளையும் பற்றி…விடுகிறாள். செத்த வீடுகளில் சொந்தக்காரர்களின் கைகளைப் பற்றி விடுகிறதை அவன் பார்த்திருக்கிறான்.

அவ‌னும் தோழன் தானே,அவளும் தோழி தானே. இயக்கங்களைச் சேர்ந்த‌ நாமும் புதிய சொந்தக்காரர் தானே.அவ ள் கையைப் பற்றிய போதே ,எங்கையோ அவளைப் பார்த்திருப்பது போல.. அவனுக்குத் தோன்றியது. “பார்த்தீங்களா அண் ணா, எங்கட நிலமையை?”என அவள் சொல்வது மாதிரியும் இருந்தது.

அட, அவனுடைய கிராமத்துக்கு உள்ள இயக்கங்களின் மகளிர் அமைப்பெல்லாம் சிறு சிறு கூட்டமாக சைக்கிளில் வருவார்கள்; போவார்கள் அப்படி வந்தவர்களில் அவளும் இருந்திருக்கிறாள் என இப்பத் தோன்றுகிறது.

அப்படி இருந்தால்,அவளுக்கு இந்தத் திருவை க் கட்டாயம் தெரிந்திருக்கும் .அவனுடைய இயக்கப் பேர் திரு.

அப்ப, அவன்…. தாமரையின்…. கிராமப் பொருப்பாளராக வீற்றிருந்தவன் !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *