‘கிளுகிளு’
‘காதல் அரிச்சுவடி’ என்கிற டைட்டிலைப் பதிவு செய்திருந்த டைரக்டர் ரொமான்ஸ்ராஜா, பொருத்தமான கதையைத் தேடிக் கொண்டு இருந்தார்.
‘‘கிளுகிளுப்பான காதல் கதை சொல்லுய்யா!’’
‘‘சொல்றேண்ணே! நம்ம ஹீரோ யூ.கே.ஜி. ஹீரோயின் எல்.கே.ஜி…’’
டே… டே..!
மொட்டை மாடியை அண்ணாந்து பார்த்த பார்வதி திடுக்கிட்டாள். ‘‘என்னங்க, நம்ம பையன் மாடியில கைப்பிடிச் சுவத்தைப் பிடிச்சுட்டுத் தொங்கறான். ‘ஓ’ன்னு கத்திட்டே ஓடுறான். விழுந்து வைக்கப் போறான். என்ன ஆச்சு அவனுக்கு?’’
‘‘நாளைக்கு காலேஜ் ‘பஸ்&டே’ ஆச்சே! பயிற்சி எடுத்துட்டு இருக்கான்!’’
அன்புள்ள ராதா..
மகனின் பாடப் புத்தகத்தில் இருந்த ‘அன்புள்ள ராதா’ என்று தொடங்கும் கடிதத்தைப் பார்த்துத் துணுக்குற்றார் ராமசாமி.
‘‘யாருடா இந்தப் பொண்ணு?’’
‘‘ஐயோ அப்பா! ராதாங்கிறது என்னோடு படிக்கிற பையன்!’’
‘‘ஐயோ! அது இன்னும் மோசமாச்சேடா!’’
ப்ரியம்!
‘‘சாமி, எனக்கு ஒரு நாய்க் குட்டி வேணும்’’ என்று கடவுளிடம் வேண்டிக்கொண்ட சிறுவன் ராமு, அதற்கான காரணத்தையும் சொன்னான்.
‘‘ஸ்கூல் விட்டு வரும்போது அம்மா திட்டுறா. விளையாடிட்டு வரும்போது அக்கா திட்டுறா. டியூஷன் விட்டு வரும்போது அப்பா திட்டுறார். ஆனா, நான் எப்போ வீடு திரும்பினாலும், நாய்க் குட்டி சந்தோஷமா வாலை ஆட்டுமே!’’
– 17th ஜனவரி 2007