பச்சைத் துண்டு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 9,088 
 
 

முத்தப்பா!|

மைசூர் வண்டி எத்தனை மணிக்கு வரும்? போங்க!
போய் விருந்தாளியை அழைச்சுகிட்டு வாங்க! – புனிதா.

இப்பத்தான் கும்பகோணம் தாண்டியிருக்கு! நான் போறேன் பாத்துக்கிறேன் – மாரி் என்கிற மாரியப்பன்.

வண்டியை எடுத்துகிட்டு குத்தாலம் ரயிலடி போகத் தயாரனான்.

புனிதா மாரி தம்பதியரின் மூத்த ஒரே மகன் முத்து தற்போது பெங்களூரில் ஒரு IT company ல் வேலை, அங்கே கூட வேலைச் செய்யும் அவனின் நண்பனின் தாய், தந்தை, அவரின் மகள் ஆகியோர் இங்கு நாடி பார்ப்பதற்கும், சனீஸ்வரன் ஆலய தரிசனம் செய்யவும் வந்துள்ளனர்.

இரு குடும்பத்திற்கும் அறிமுகம் முன்னதாக இல்லை, அவர்களும் முதல் முறையாக தமிழகம் வருகின்றனர். ஆகையால் சீக்கிரமே போய் கோச் பார்த்து நின்றால், அழைத்துக் கொள்ளலாம் என முத்து கூறியருந்தான், அதன்படி விருந்து தயாரகிக் கொண்டிருக்க,
மாரி ரயிலடி விரைந்து கொண்டு இருந்தான்.

அவன் போன நேரம், வண்டி வந்தது. விசாரித்து கோச்சுக்குச் சென்றான், ஒரு குடும்பம் இறங்க ,

புவனேஷ் அப்பா, அம்மாவா நீங்க ? எனக் கேட்டு

இருவரும் கைக் குலுக்கிக் கொள்ள , பயணம் எப்படி இருந்தது, எனக் கேட்க அவரும் புரிந்துக்கொண்டு ம்ம். நல்லா இருந்துச்சு, என்றார்.

தனது பெயர் குரு சுவாமி எனவும், மனைவி சீதா, மகள் சாத்விகா என அறிமுகப்படுத்தினார்.

அருகில் உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆட்டோ பிடித்துக் கொடுத்து விட்டு கிளம்பினார்கள்.

இடையில் காவிரிப்பாலம் இடிந்து கிடக்க, ஆட்டோ மாற்று வழியில் இறங்கிச் செல்லும் போது, இது என்ன வாய்க்காலா? எனக் கேட்டார் குரு.

சாமி, இது வாய்க்கால் இல்ல! ஆறு, காவிரி ஆறுதான் இப்படி இருக்கு. என்றார் ஓட்டுநர்.

வீடு வரவே, இறங்கி உள்ளேச் செல்ல,

ஐயா,நம்ம வீடு கொஞ்சம் வசதி கம்மிதான் பார்த்து அட்ஜெஸ்ட் பண்ணிகிடுங்க, சரியா வரலைன்னா சொல்லிடுங்க ஐயா, பக்கத்துல மயிலாடுதுறையிலே லாட்ஜ்ல ரூம் போட்டுடலாம் என்றார் .முத்தப்பா.

மாரி அண்ணா, ஒரு பிரச்னையும் இல்ல, இரண்டு நாள்தானே ஓடிடும்.என்றாள் சீதா.

சரிங்க ,நீங்க குளிச்சுட்டு தயாரகுங்க, சாப்பிட்டு விட்டு நாம வைத்தீஸ்வரன் கோவில் போகலாம். நாடி பார்க்க .

குளிக்கப் போனார், புனிதா மோட்டார் போட, நீர் மஞ்சளாக வர, குரு அலறினார்..

என்னாச்சு ?

தண்ணி ஏன் கலரா வருது?

அப்டிங்களா? கொஞ்சம் நேரம் வரும் அப்புறமா சரியாகிடும், இங்க எல்லார் வீட்லேயும் இப்படித்தான்.

காவிரியிலே தண்ணி வந்து பல வருடமாச்சு. மழையும் அவ்வளவா இல்லை, நிலத்தடி நீர் குறைஞ்சு போச்சு. சில வீட்ல குடிக்கக் கூட தண்ணியே இல்லை.

என்ன சொல்றீங்க! என கேட்டுக்கொண்டே குளித்து வெளியே வந்தார்.

சாப்பிட அமர்ந்தனர்..

விவசாயத்திற்குப் பெயர் போன ஊரு, நிறைய நிலம் ,மாற்று பயிர் சாகுபடினு நாங்க எல்லாம் உங்களைப் பற்றி பெருமையாக பேசிகிடுவோம், நீங்க என்னன்னா இப்படி சொல்றீங்க?

வாஸத்தவம்தான்! பெயர் போனதுதான் உண்மை.

ஒரு போகத்துக்கே வழி இல்லை, பாதி பேர் நிலத்தை வித்துட்டு சென்னை போயாச்சு.

சில பேர் விரசா போட்டு வைச்சுட்டாங்க. நான் பாதி்யை வித்துதான் என் மவனை படிக்க வைச்சேன் ,மீதியையும் வித்துட்டு என் பொண்ணை கட்டிக் கொடுத்துட்டு எங்கயாவது போக வேண்டியதுதான், என அங்கலாய்த்தார்.

இந்த நிலை எனக்கு மட்டுமில்லேங்க! இங்க இருக்கிற நான்கு மாவட்டத்துக்கும் இதே நிலமைதான்..

அங்க உங்க ஊர்லே வெள்ளம் வந்தாதான் இங்க காவிரிலே

தண்ணி வரும். அப்போது மட்டுமே சாகுபடி சாத்தியமாகுது. மற்ற நேரத்தில் நாங்கள்தான் சாகும் படிதான் ஆகுது.

என்கிட்டே இருந்த நிலங்களை நான் ஆறு மடங்கா ஆக்கி இருக்கிறேன், அதை வைத்துத்தான் நான் வசதியானேன், பிள்ளைகளைப் படிக்கவைத்தேன். இதிலே தெரிகிறது நீங்கள் இழந்தது அதிகம் என்று வருந்தினார்.

நாடி பார்க்குமிடத்தில் அமர்ந்து இருந்தனர்.

குரு சார் வாங்க! ஜோதிடர். நாடி பார்க்க ஆரம்பித்தார்.

ஏறெடுத்துப் பார்த்தார்.

அகத்திய குலத்திலே பிறந்த நீ!
சரியான நேரத்திலே வந்ததாலே!
பஞ்சமும்,பட்டினியும் தீரப்போகுது உன்னாலே!
இங்க கடல்லே நீரெடு!

குடகு மலை சென்று கவுத்திடு!
காவிரியும் பாயும், உன் பாபமும் கழியும்,
பஞ்சமும் தவிரும்!

பரிகாரம் முடித்து வந்து ஐந்து சக்ஸ்ரநாம தட்சினையோடு, புடவை, வேட்டி எடுத்து படித்தவருக்கு கொடுக்க உன் கிரக நிலை மாறும். எனச் சொல்லி அனுப்பினார்.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்,? கேட்டார் குரு.

மழை பொய்த்ததும், ஆத்தில தண்ணி வராததும்தான். அரசியலும் தான்.

அதுமட்டும்தான?

வேற என்ன?

இந்த மணல் கொள்ளை, ரியல் எஸ்டேட், தூர் வாராதது மீத்தேன், ஹைட்ரோ கார்பன், இதுபோன்ற மத்திய, மாநில அரசின் திட்டங்களாலும்தான் உங்க விளைச்சல் பாதிக்குது. அதனால நிலங்கள் உங்க கையை விட்டுப் போகுது.

பொதுவா அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகளால்தான் நாம இரண்டு மாநிலத்திலும் இந்த நிலைமை, இதற்கு ஒற்றுமையான அனுகுமுறை மட்டுமே சாத்தியமாக்கும்.அது இப்போதைக்கு ஏற்படாது, அதற்குள்ளே உங்கள் வளங்கள் அனைத்தும் கொள்ளைப் போய்விடும்.

நாடி பார்த்த இடத்திலே நல்ல செய்தி ஒன்று சொல்லி இருக்கார் ,என நாடி படித்த விபரத்தை அவர் கூறினார்.

இந்த நாடி, பரிகாரம் ,இதெல்லாம் நாங்க நம்பறதே இல்லை. உங்களுக்காகத்தான் வந்தேன்.

ஆலய தரிசனம் முடித்து பூம்புகார் சென்று கடல் நீர் எடுத்துக் கொண்டு ரயிலடி வந்தனர்.

மாலை 5.00 மணி, ஆகியிருந்த்து.

ஒரு விவசாயியா உங்க பிரச்சினை எனக்கு நல்லா புரியுது, எங்க பகுதி விவசாயிங்களுக்கும் அது நல்லாவே தெரியும். ஆனாலும் அரசியல் காரணங்களால் பிளவுப்பட்டுள்ளனர். மனிதம் இன்னும் மிச்சமுள்ளது, ஆகையால் நம்பிக்கையோடு இருங்கள்.

ஆட்சிகள் மாறி, காட்சிகள் மாறும். தர்மமும், மனிதமே என்றும் வெல்லும், எனத் தேற்றினார்.

தனது தோளில் கிடந்த வெள்ளத் துண்டினை எடுத்து மாரிக்குப் அணிவித்தார், மாரி தனது பச்சைத் துண்டினை எடுத்து குருவிற்கு அணிவித்தார். ரயில் வந்தது, நம்பிக்கையோடு இருங்கள் எனக் கூறிச் சென்றார்.

அங்கே வறண்ட வானிலை மாறி, மேகம் சூழ சிறு சிறு நம்பிக்கைத் தூறல் வீழ்ந்து மனது இனித்தது. மாரிக்கு!

Print Friendly, PDF & Email

1 thought on “பச்சைத் துண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *