நான் எழுதிய சிறு கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 9,112 
 

“தமிழ் கற்றதன் முழுமையும்,

கவி பெற்றதன் பெருமையும்,”

அடுத்த வரி எழுதும் முன் தொலைபேசி அழைப்பு வந்தது தமிழ் பாரதிக்கு…

“ஹலோ தமிழ்”…

“சொல்லு மகா”

“ ‘செம்மொழி நற்பணி மன்றம்’, சிறுகதை போட்டி”

“தேதி?”

“அடுத்த வாரம் திங்கள்…”

“இடம், நேரம்?”

“காமராஜர் நினைவு அரசு பள்ளி, காலை 9 மணி…”

“நல்லது.. நான் முயற்சி பண்ணி பாக்குறேன்…”

“உன்னால கண்டிப்பா முடியும் தமிழ்.. உனக்கு அந்த திறமை இருக்கு…”

“நன்றி மகா..”

“அட இதுக்கு எதுக்கு நன்றி லாம்…”

“சரி நான் வெக்கிறேன்…”

அழைப்பை துண்டித்த பின் மிச்சம் வைத்த வரிகளை அழகு சேர்த்து முடித்தான்…

ஒரு வாரம் கழித்து…

பள்ளிக்கு ,அரை மணி முன்னரே வந்து சேர்ந்தான் தமிழ்…

“செம்மொழி நற்பணி மன்றம்” நடத்தும் 17ஆவது சிறுகதை போட்டி… வெற்றி பெறுபவருக்கு “சிறுகதை மைந்தன்” என்ற பட்டமும், எங்கள் வார இதழில் சிறுகதை எழுதுவதர்கான ஒரு ஆண்டு ஒப்பந்தமும் வழங்கப்படும்….” என்று பதாகையில் போட்டிருந்தது…

சிறுகதை மைந்தன்!!! உள்ளே சிரித்து கொண்டான்… போட்டி நடக்கும் அறையின் வெளியே ஒருவர் அமர்ந்திருந்தார்…

“அய்யா,சிறுகதை போட்டிக்கு விண்ணப்பிக்கணும்…”

“பெயர்?”

“தமிழ் பாரதி…”

“இப்போ மணி 8.30 ஆகுது…சரியா 9 மணிக்கு ஹால் குள்ள போய்டனும்.. தொலை பேசி,துருப்பு சீட்டு எதுவும் கூடாது…. 45 நிமிடம் அவகாசம்…முடிச்சிட்டு 10.30 மணிக்கு பரிசுகள் அறிவிக்க படும்..ஆடிட்டோரியத்துல வெயிட் பண்ணுங்க… வேற ஏதாவது கேக்கணுமா…”

“நன்றி அய்யா,எதுவும் இல்லை…”

வெளியே வந்து ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு மேலே இருந்த குருவி கூட்டையும் அதில் இருந்த குஞ்சுகலையும் ரசித்து கொண்டிருந்தான்….

சரியாக 9 மணிக்கு போட்டி நடைபெறும் அறைக்கு சென்றான்.. போட்டிக்கு வந்தவர்களுள் பெரும்பாலானோர் பைஜாமா அணிந்து கொண்டுறிந்தனர்… எழுத்தாளர்களுக்கு உள்ள அடயாளம் போன்றது அது… மனதினுள் நினைத்து கொண்டான் தமிழ்…

தனக்கு ஒதுக்க பட்ட இடத்தில் அமர்ந்ததும்,பக்கத்தில் ஒருவர் புலம்பி கொண்டிருந்தார்..

“போட்டி நடத்துரானுங்கலாம் போட்டி…எல்லாம் உள் நிர்வாக பூசல்..

முன்னாடியே தேர்வு செஞ்சிட்டானுங்க யாரு ஜெய்க்கணும்னு…

சரியான ஒழுங்குமுறை இல்லை… நிர்வாகம் சரி இல்லை…

ஏன் கலந்துக்குட்டோம்னு இருக்கு…

என் தகுதிக்கு லாம் இங்க வந்துர்க்கவே கூடாது….”

அனைத்து இடங்களிலும் இப்படி ஒருவர் இருக்கிறார் என்பதை எண்ணி கொண்டான் தமிழ்…

45 நிமிடம் முடிந்தது… அனைவரும் தங்கள் கதைகளை பார்வையாளரிடம் ஒப்படைத்தனர்… தமிழ் ஆடிட்டோரியத்தில் சென்று அமர்ந்தான்….

பக்கத்தில் ஒருவர்

“ஹலோ… நான் கவியரசன்..” என்று கைகொடுத்தார்…

“வணக்கம்… நான் தமிழ் பாரதி” என்று வணக்கம் வைத்தான்….

“எழுத்தாளர்களுக்கே உண்டான பண்பு இது… பாராற்றேன்…”

“அய்யா,இது தமிழர்களுக்கே உண்டான பண்பு… வெள்ளயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கிட்டோம்னு நம்ம நெனச்சிட்டு இருக்கோம்… அவங்க 300 ஆண்டு காலம் நம்மள அடிமை படுத்தனதொட விளைவு,மேற்கத்திய கலச்சாரம் நம்ம மனுஷங்க மனசுல ஒட்டிக்குச்சி… அது தான் நாகரிகம்னும் எல்லாரும் நெனச்சிட்டு இருக்காங்க…

பிரிட்டிஷ்கு அவங்க கலாசாரம் தான் நாகரீகம் தந்துது… அமெரிக்க கலாச்சாரமோ,ருசியா கலாச்சாரத்தயோ அவங்க பின்பற்றணும்னு நெனைக்கல… அவங்க அவங்க கலாசாரத்த பின்பற்றுறது தான் உன்மயான நாகரிக வளர்ச்சினு என்னைக்கு நம்ம மக்கள் உணர்ராங்களோ அன்னைக்கு தான் நமக்கு முழுமையான சுதந்திரம்… அடையாளத்த தொலச்சிட்டு வாழ்ற எந்த சமுதாயமும் முன்னுக்கு வரமுடியாது”

“நல்ல சிந்திக்கிறீங்க தமிழ் நீங்க… ஆனா இவ்ளோ உருதியா ஒரு மனுஷன் இருக்க முடியுமா? அதுவும் இந்த காலத்துல?…வளஞ்சி குடுத்தா தான இந்த சமுதாயத்துல சுலபமா வாழ்க்க நடத்த முடியும்?…”

“கவி… இந்த பெரிய குழப்பம் எல்லார் கிட்டயும் இருக்கு.. மக்கள சார்ந்து சமுதாயம் உருவாகுதா? சமுதாயத்த பொருத்து மக்கள் வாழ்க்கை மாருபடுதா?

மக்கள் தான் சமுதாயம்…நம்ம வாழ்க்கை முறை தான் சமுதாயத்த வடிவமைக்குது… தமிழ் கலாச்சாரத்த பின் பற்றணும்னு ஒரு எண்ணம் எல்லார் மனசுலயும் இருக்கு…ஆனா அத பின்பற்ற தயங்குறோம்… நீங்க ஹலோ சொன்னதும் நான் ஹலோ சொல்லி இருந்தா எதுவும் மாறி இருக்க போரதில்ல…

சமுதாயம் மாறனும்னு நிஜமாவே ஆச பட்டீங்கனா நீங்க முதல மாறனும்… இல்லனா என்ன மாறி ஆட்கள எங்க வழியில விட்டுடனும்… “

“வித்யாசமான ஆள் பா நீ…” வியந்து கூறினான் கவி…

தமிழ் கவி மீது பார்வையை வீசி கொண்டே பேசினான்…

“பார்திங்களா… தமிழ் கலாச்சாரத்த பத்தி பேசுறவன்லாம் வழக்கதுக்கு மாறான வித்யாசமான ஆள்னு தான் ஒரு எண்ணம் எல்லார் மனசுலையும் இருக்கு…”

இதற்கு மேல் தமிழிடம் பேசி வெள்ள முடியாது என்பதை அறிந்தவனாய் “உங்க கருத்து லாம் ஆழமா இருக்கு தமிழ்… பேச்சு தெளிவா இருக்கு…. என் கிட்ட பேசி யாராலயும் ஜெய்க்க முடியாதுணு நெனச்சேன்…”

“எனக்கு யாரயும் ஜெய்க்கணும்னு ஆச இல்ல கவி…”

கவி ஆச்சர்யமாக பார்த்தான்….

மணி 10.30 ஆனது… பரிசுகள் அறிவிக்க பட வேண்டிய நேரம்…

“மேடையில் போட்டி அமைப்பாளர் பேச தொடங்கினார்…

“செம்மொழி நற்பனி மன்றம் நடத்திய சிறு கதை போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகளை முதலில் தெரிவித்து கொள்கிறேன்… கலந்து கொண்ட அனைவரும் தங்கள் திறமைகளை பிரமாதமான முரையில் வெளி படுத்தி உள்ளீர்கள்… எழுத்து போட்டி என்றாலே முதலில் பார்க்க வேண்டிய இரண்டு விஷயம், என்ன கருத்து சொல்கிறீர்கள் என்பது… பிறகு அதை எப்படி தெளிவாக எழுதி உள்ளீர்கள் என்பது… கலந்து கொண்ட அனைவரும் இவ்விதத்தில் வெற்றியாளர்களே… ஆனால் அதில் பொதுவான கருத்தை யார் முன்னிறுத்தி இருக்கிறீர்கள் என்பதை பார்ப்போம்… அவ்வகையில் இன்று ஒரு எழுத்தாளர், “சிறுகதை மைந்தர்”, அருமையாக தான் கூற வந்த பொது கருத்தை முன்னிறுத்தி இருந்தார்… அவர் எழுதிய சிறுகதையின் நடையும் அவர் இலக்கண அறிவும் சிலிர்க்க வைத்தது… ஆகவே அவருக்கே முதல் பரிசை வழங்குவதாக முடிவு செய்துள்ளோம்…

சிறு கதை மைந்தர் பட்டத்தை இந்த முறை தட்டி செல்வது “கவியரசன்”.. அவர்

சிறு கதையின் தலைப்பு “மலர் சாலை”… “

“வாழ்த்துக்கள் கவி…”

“நன்றி தமிழ்” என்று கூறிவிட்டு பரிசு பெற மேடை ஏறினான்… முதலில் தமிழின் கைதட்டல் ஓசை தான் அரங்கில் ஒளித்தது… ஒரு கலைஞனின் திறன் ஆவையில் பாராட்ட படும் போது அவனுக்கு கிடைக்கும் முதல் கை தட்டல் இன்னொரு கலைஞன் உடையதாக தான் இருக்கும்…

பரிசு கொடுத்த பின் கவியரசனை ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு கேட்டு கொண்டனர்…

கவியரசன் பேசி முடித்ததும் அமைப்பாளர் மறுபடியும் மேடைக்கு வந்தார்…

“”எதற்கு நான் மறுபடியும் பேசுகிறேன் என்று தானே குழம்புகிறீர்கள்…விஷயம் இருக்கிறது… இன்று நடந்த போட்டியில் இன்னொரு போற்றத்தக்க படைப்பு இடம் பெற்றிருந்தது… அந்த எழுத்தாளரின் சிந்தனை ஆழம் மிக சிறப்பாக இருந்தது… விழா குழுவினர் பேசி முடிவு செய்து அவருக்கு சிறப்பு பரிசும், “சிந்தனை மைந்தன்” என்ற பட்டமும் வழங்க இருக்கிறோம்… அந்த சிந்தனை மைந்தனின் சிறு கதை தலைப்பு “நான் எழுதிய சிறு கதை”,எழுதியவர் ”தமிழ் பாரதி”.. தமிழ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்…”

தமிழ் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தான்…

மேடை ஏறினான், ஆனந்த கண்ணீருடன்…

தமிழை ஒரு சில வார்தைகள் பேசுமாரு கேட்டனர்…

“அனைவருக்கும் வணக்கம்… முதலில் என் கருத்துகளை ஏற்று “சிந்தனை மைந்தன்” பட்டம் அளித்த செம்மொழி நற்பணி மன்றத்திற்கு நன்றி… முதல என்னை பற்றி கொஞ்சம் பேசி கொள்கிறேன்… என் திறமைகளை மதித்து அவற்றை வளர்த்து கொள்ள உதவியாய் இருக்கும் என் நண்பர்களுக்கு நன்றி… எல்லாவற்றிற்கும் மேலாக நான் சிற்பம் என்றால் என்னை வடித்த சிற்பிக்கு, நான் ஓவியம் என்றால் என்னை வரைந்த ஓவியருக்கு, நான் கவிதை என்றால் என்னை பாடிய கவிஞனுக்கு, நான் மனிதன் என்றால் என்னை பெற்ற என் அம்மா அப்பா விற்கு என் நன்றிகள்…

சிறு வயதிலிர்ந்தே கதைகள் மேலும் , கவிதைகள் மேலும் எனக்கு மிக பெரிய ஆர்வம் இருந்துது… ஆனா என் ஆர்வதுக்கு தீனி போடுர விருப்பம் எங்க அப்பா அம்மா வுக்கு இல்ல.. ஏன்னு கேக்றீங்களா…?

நடுத்தர வர்கத்த சேர்ந்த குடும்பங்களுக்கு பணம் என்பது ஒரு பெரிய தேவைங்குர மனப்பான்மை இருக்கு… அப்படி தான் எங்க குடும்பமும்… தனி திறமைகளுக்கு முக்கியத்துவம் குடுக்குற நிலமைல எங்க அப்பா இல்ல… அதுவும் எழுத்தாளன் ஆகணும்னு அவர் கிட்ட போய் நின்னா… “”எடு செருப்ப… இங்க உங்களுக்காக மாடு மாறி ஒழச்சி கொட்டிட்க்கிட்டுர்க்கேன்… கதை எழுத போராராம்.. உங்களலாம் படிக்க வேக்கிறதே பெருசு… எங்க அப்பன் அடுத்த வேல சோறுக்கு கூட காசு தர மாட்டான்… ஒழுங்கா படிச்சி குடும்பத்த முன்னேத்துர வழிய பாரு” னு ஏசுவார்… முதலில் எனக்கு கோவம் வந்தது… ஆனா அந்த மனுஷன் பேச்சு தான் இப்படி… அவரும் தன் ஆசைகள,கனவுகள பொதச்சிட்டு குடும்பத்துக்கு ஒழச்சவர் தானே… சரின்னு அவர் சொன்ன படியே நல்லா படிச்சு, நல்ல வேலை கடச்சு, கை நெறைய சம்பாதிச்சாச்சு…

அதுக்கப்பறம்??

கேள்வி குறி தான்…

எது சந்தோஷம் தரும்னு நெனச்சி நான் இவ்ளோ நாள் வாழ்க்கய செலவு செஞ்சனோ,அது எனக்கு சந்தோஷம் தரல…

பணத்துக்கு பின்னாடி ஓடுனா ஆச படுற இலக்கை அடைய முடியாது… கனவுகளுக்கு பின்னாடி ஒடுங்க… அது தான் வாழ்க்கைய முழுமையா வாழ்றதுக்கான சிறந்த வழி… வாழ்க்கயோட மிக முக்கியமான பருவமான இளமை பருவத்த எந்த அளவுக்கு புரிஞ்சிக்கிட்டு,உபயோகமா செலவு செய்றிங்களோ அந்த அளவுக்கு வாழ்க்கை இன்பம் அளிக்கும்… நன்றி ”

என்று கூறி முடித்து கொண்டான்…

அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்…

கவியரசன் அருகில் வந்து வாழ்துக்கள் கூறினான்… விழா முடிந்து அவரவர் கதைகளை அவரவரிடம் கொடுத்தனர்… கவியரசனுக்கு தமிழின் கதையை படிக்க வேண்டும் என்ற ஆர்வமாக இருந்தது… கேட்டு வாங்கி படித்தான்…

அதில் முதல் பக்கத்தில்:

“நான் எழுதிய சிறு கதை”

“தமிழ் கற்றதன் முழுமையும்,

கவி பெற்றதன் பெருமையும்”…………………………………………………..

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

முழுவதும் படித்து முடித்ததும் திகைத்து போனான் கவியரசன்… எப்படி இவனால் இது முடிந்தது? நியாயமாக பரிசு தமிழுக்கு தானே கிடைத்திருக்க வேண்டும்…? குழப்பத்தில் ஆழ்ந்தான் கவி…

சற்றே தயக்கத்துடன் “எங்க பா இருந்த இவ்ளோ நாள்?”

“கனவு கண்டுட்டு இருந்தேன்.. இப்போ தான் துரத்தி புடிக்க ஆரம்பிச்சிருக்கேன்…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *