கடல் மட்டத்திலிருந்து 2அடி உயரத்தில் பாணந்துறை கடற்பரப்பிலிருந்து 3 கிலோமீட்டர் உட்பகுதியில் கொழும்பு காலி பழைய பிரதான வீதியின் உட்பகுதியில் சமசீதோஷணமும் சமதரையும் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த ஊரது. தனி முஸ்லிம் கிராமமமது.
அக்கிராமத்தின் மத்தியில் ரவுலத்துல் அத்கியா ஜும்மா மஸ்ஜித்திற்கு பின்புறத்தில் பபுன் வத்தையில் சிறுவன் ஆமீரின் வீடு உள்ளது. அச்சிறுவன் உலக வரலாறு மற்றும் இலங்கை வரலாறு போன்றவற்றை தேடி கற்பதில் ஆர்வமுள்ள சிறுவன். தினமும் தன் தாயிடம் வரலாற்றுக் கதைகளை கேட்ட வண்ணமே தூங்குவது அவனது வழக்கம். அவனுக்கு வரலாற்றை தேடுவதில் ஆர்வம் ஏற்பட காரணம் அவன் பாடசாலைக்கு செல்ல முன்னரே அவனது தாய் அவனை உறங்க வைக்க வரலாற்று கதைகளை கூறுவதாகும். அவனது தாய் முதல் முதலாக தன்னூர் வரலாற்றை சுருக்கமாக கூறிய விதம் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது.“உம்மா எஙட ஊர் முஸ்லிம் ஊர்தானே ஏன் ஊர் பேர சிங்களத்துல வெச்சீச்சி?”
“மவன் எஙட ஊர்ட பேர் தொட்டவத்த அதுட அர்த்தம் உனக்கு தோட்டம். அதாவது பொல்கொட வாவியோட உள்ள இந்த பகுதி ஆரம்பத்தில சிங்களவங்களுக்கே சொந்தமா ஈந்த. இங்கு தென்னை, பலா, மா, ஈரப்பலா, கமுகு, கித்துள் மரங்கள் அடர்ந்த பெரும் தோட்டங்கள் ஈந்த. அந்த காலத்தில இங்கு குடியேறிய எமது மூதாதையர் அத்தோட்டங்களை விலைக்கு வாங்கினாங்க. இப்டி கைமாறும் போது தொட்டவத்த (உனக்கு தோட்டம்) என்று கூற பொபறகு அது நிலைத்து பெயராகவே மாறிட்ட. ஆனாலும் இந்த ஊருக்கு மதீன வத்த என்ற செறப்புப் பெயரும் ஈச்சீ.
“ஆனால் இப்ப அப்பிடி தோட்டங்களெல்லாம் இல்லயே?”
“ஓ மவன். இப்ப இங்க கிட்டதட்ட 900 ஊடு ஈச்சி அதான் தோட்டமில்ல”
இப்படி தினமும் ஒவ்வொரு ஊர் வரலாற்றையும் தாயிடம் கதை வடிவில் கற்கும் சிறுவன் அன்றும் அவ்வாறு வரலாற்றுக் கதை கேட்கும் ஆர்வத்தில் இஷா தொழுகைக்கு பின்னர் இராச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு கட்டிலில் தாய்க்கு அருகில் சாய்ந்து கொண்டான்.
“உம்மா இன்டக்கி எங்கேத்து வரலாற்று கத சொல்லபோற?”
ஆபிரிக்காவின் முத்தான உகண்டாவில் உள்ள பள்ளிப்பத்தியும் அந்த பள்ளியில நடந்த எலெக்ஷன் கதயதான் சொல்லப்போற.
“ஒகே உம்மா”
உகண்டாவின் தென் கிழக்கு பகுதியில விக்டோரியா ஏரிக்கு அருகில அவுலியா ஒருத்தர்ட தியாரத்தை மையாமாகக் கொண்டு 1840 ஆம் ஆண்டு புகாண்டா பேரின பழங்குடியினருக்கு மத்தியில் சிற்றினமகிய அரேபியா வணிகர்களின் குடியேறிற்றத்தால் உருவாகிய ஊராகும் அது.
“உம்மா ஊர் பெயர் என்ன?”
அது ஒரு தீவு அந்த தீவுட பேர் தம்ப தீவு (Damba Island) அந்த பள்ளிட பேரு கல்யாம்புதி பள்ளிவாசல் (Kalyambuzi Mosque) தேவ என்ட குகுள் செர்ச் பண்ணிபாருங்க.
“அதுக்கெல்லாம் டைம் இல்ல நீங்க கதய சொல்லுங்க. ஆசியாவின் முத்து இலங்கைதானே உம்மா”
இந்த ஊரின் பிரபல பள்ளிவாசலை இடி அமீன் மௌத்தாகின கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் நிர்வகிப்பது, இடி அமீனினால் உருவாக்கப்பட்ட உகாண்டா முஸ்லிம் உயர் சபை உறுப்பினர்களுக்கு உயர்தரமான கோப்பியை கொடுத்து கைலபோட்டுக்கொண்டு அவர்களின் ஸபோர்ட்ல வாழும் ஊர் மக்களின் அங்கீகாரம் அற்ற சர்வாதிகார நிர்வாஅமைப்பொன்றாகும்.
இறைநேசர்களுடன் தொடர்புள்ள ஊரென்டபடியால் அந்த பள்ளிவாசலை மையாமாக கொண்டு கந்தூரிகளும் இடம்பெறுகின்றது. கராமத்களும் நடக்குது. அந்த ஊர் மக்கள் பட்டிணி கிடந்தாலும் உகண்டாவின் நாலாபுறமிருந்தும் துஆ பரக்கத்திற்காக வரும் பக்தர்களுக்கு இலவசமாக கந்தூரி கொடுப்பதால் இந்த குழுவிற்கு ஊரில் எதிர்ப்பென்றாலும் நாட்டில் ஆதரவு.
இனி தவறாது கந்தூரி கொடுப்பதால் அங்கு கராமத்களும் நடக்குது. அதிலொன்றுதான் அந்த பள்ளியில் கந்தூரி வைக்கும் போது அவர்கள இலக்காக வைத்து லாங்கி பழங்குடியை பிரதிநிதித்துவப் படுத்திய தீவிரவாத குழுவொன்று குண்டு வைக்குது. குண்டு வச்ச கையோட ஒரு கராமத்தாய் அந்த தீவிரவாத குழுவே ஆறு மாஸத்தில அழிந்து போகுது.
இந்த நிலையில் இந்த எதிர்பாராத வெற்றியுடன் அடுத்த தேர்தலில் வெற்றி பெற ஆசி வேண்டி இந்த பள்ளிவாசலுக்கும் வருகை
தருகிறார் 1986 முதல் ஜனாதிபதியாகவுள்ள யோவேரி முசெவேனி. இப்படி ஆபிரிக்காவின் முத்தான உகண்டாவில் உள்ள இந்த பள்ளிவாசலின் இறுதிப் பகுதி வரலாறு தொடறுது. இதனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயகவாதி போல ஆட்சி செய்யும் ஜனாதிபதிக்கும், இந்த நிர்வாகத்திற்கும் நல்லுறவு காணப்படுது.
“உம்மா அப 1840 வரை 2002வரை இந்த ஊர் எப்படி?”
“அத பத்தி வாசிக்க எனக்கு புக் ஒன்டும் கிடைக்கல மவன். நீங்க இந்த புதிய வரலாற்ற கேளுங்க”
“சரி உம்மா”
என்னதான் கராமத்களுடன் ஜனாதிபதியின் விஜயம் என்று இந்த நிர்வாக காலத்தில் ஊருக்கு பெருமை சேர்க்கும் பல விடயங்கள் நடந்தாலும் அந்த நிர்வாக குழுவிற்கு ஊரில் எதிர்ப்பும் மறைமுக ஆதரவு உள்ளது. ஏனெனில், கந்தூரி மற்றும் வருடாந்த கணக்கறிக்கைகள் காட்டாமை, வருடாந்த பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யாமை, கந்தூரிகள் வைக்கும்போது ஊர் பொதுமக்களுடனும் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து மக்கள் ஆலோசனை பெறாமை, கூட்டங்களை ஏற்பாடு செய்தாலும் தீடிரென கூட்டங்களை நடத்தாமை போன்ற இடியமீனை ஒத்த ஆட்சி நடப்பதாகும்.
இனி இந்த சர்வதிகார நிர்வாகத்திற்கு ஸபோர்ட் பண்ணி பேச கோப்பி எடுத்த உகண்டா முஸ்லிம் உயர் சபை ஆதரவு இதால டெம்பரிக்கு 2003ல வந்த குரூப் 2015 வர ஒவ்வொரு மந்திரிமாற புடிச்சி அவங்கட பேர்ல ரெஸ்ட் போர்ட்அ எழுதி கொண்டாங்க என்றாலும் 2015கு போறகு, ஊர் மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக அந்தப் பள்ளிவாசலுக்கு புதிய தேர்தலை நடாத்த வேண்டி ஏற்படுது. மறுபுறம் நாட்டில் முசெவேனிக்கும் எதிர்கட்சி வேட்பாளர் பாபி வைனுக்கும் எதிராக தேர்தல் நடாத்த போறாங்க.
ஒரு புறம் முசெனிக்கு நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலென்று சொல்லி ரிடர்ன் ஜனாதிபதியாகனும், மறுபுறம் இந்த பள்ளிவாசல் தேர்தலையும் நிறுத்தனும் எண்டு ஆச பள்ளி தலைவருக்கு. அதற்குள் சில சந்திப்புக்கள் ஜனாதிபதிக்கும் பள்ளி தலைவருக்கும். அதற்குள் புகாண்டா மக்களின் புத்தாண்டு முடிவடைந்து ஒரு வாரத்தில் புகாண்டா மக்களின் 5 தேவலயங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடிக்குது.
அத காட்டியே மீண்டும் ஆட்சி பீடமேறுது முசெனி. மறுபுறம் இந்த பள்ளிக்கும் பாதுகாப்பு இல்லை என காட்டி நாலு புறமும் வீதி உள்ள இப்பள்ளியில் ஒரு புறத்தை மூடி மறுபுறம் இராணுவத்தை போட்டு
மீதிப் பக்கங்களை திறந்து வைத்து பயங்காட்டி பள்ளிவாசல் தேர்தல் பேச்சையை மறக்க வைக்குது போர்ட். அந்த குண்டு பேச்சுக்கள் மறைய கொரோனா ஆட்சிபீடமேற அத பேசியே மூன்றாண்டை கடத்தி விட்டது நிர்வாகம்.
இனி மீண்டும் வேதாளம் மரத்தில் ஏறுவது போல மீண்டும் உகண்டா முஸ்லிம் உயர்சபையை தேர்தல வைக்க சொல்லி நச்சரிக்க துடங்கியது இந்த ஊர் மக்களில் சிலர். மறுபுறம் நாட்டில் பொதுத் தேர்தல் வைக்கனும் என்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பாபி வைன் தலைமையில், ஆனால் தலைவரோ தேர்தலை வைக்க மட்டுமல்ல தன் அன்றாட செலவுக்கும் சல்லி இல்லாமால் திண்டாடும் காலகட்டமது.
இனி நவம்பர் வந்தால் சல்லி இல்லாம பட்ஜட் வாசிக்கிற ஜனாதிபதி சல்லி இல்லாமல் இன்னும் நாலு மாஸத்தில எலெக்ஷன் வைக்கிற எண்டுட்டார். அதுக்குள் இந்த பள்ளிலயும் எலெக்ஷன மூணு மாஸத்தில வைக்கிற எண்டு அறிவிச்சிட்டாங்க. அதோட அந்த ஊர் வாலிபர்களுக்கு ஒரு ஆச இந்த பள்ளிவாசலுக்கு என்டு ஒரு சட்டக்கோவ இருக்கணும் எண்டு அதக்கான வேலயுல இறங்குது ஊர் இளைஞர்கள் அதோட அதுக்கு சபோட்டாக அந்த பள்ளிக்கு புதிசா வந்த மௌலவியும் இருக்குற. இனி வந்தான் வருத்தான் வேறுபாடு பார்க்க படாது, மௌலவிமார்ட சம்பளத்த கூட்டணும், மாஸ மாஸம் கூட்டம் வெக்கனும் என்டெல்லாம் யாப்ப எழுதிட்டு அடுத்த கெழம எலெக்ஷன் வரும்வரை காத்திருக்காங்க. ஊர் நிலமய பார்த்த அடுத்த கிழம இந்த சர்வாதிகார குழு வீட்டுக்கு போறது கன்போர்ம்.
இப்படி ஊர்ல நிலவரம் இருக்கையில நாட்டிலயும் பார்ளிமெண்ட் எலெக்ஷனுக்கு சல்லி இல்லாமல் வேல நடக்குது. அதுக்குள் எலெக்ஷன் கோமிட்டி ஒரு மீடியா ரெப்போர்ட்ட போடுது அதாவது நாட்டில எலெக்ஷன் நடக்கப்போகுது அடுத்த அறிவித்தல் வர நாட்டில வேற எந்த சின்ன சின்ன எலெக்ஷனும் வைக்க தட. அதோட மீடிங் ஒன்றும் வைக்க எலாது என்ட எச்சரிக்கை வேற. அதோட அடுத்த நொடிஸ் வருது உகண்டா முஸ்லிம் உச்ச சபயால, அதாவது நாட்டுல நடக்க இருந்த எல்லா பள்ளி எலெக்ஷனும் பிற்போடப்படுது என்டு.
பொறுத்திருந்து பார்த்தா பள்ளி எலெக்ஷனும் நடக்கல பார்ளிமெண்ட் எலெக்ஷனும் நடக்கல. ரெண்டு மாஸத்தில எலெக்ஷன் கோமிஷனும் தன் கட்டளய வாபஸ் பெற மீண்டும் மூன்றாம் முற வேதாளம் மரத்தில் ஏறுது. மூனாம் முற பார்த்த அந்த உகண்டா முஸ்லிம் உச்ச சபையிக்கு புதிய மேம்பர்மார் போடிருக்கு அதுல ஒருத்தர் அந்த ஊராள். இனி அவரோட சேர்ந்து அந்த போர்ட்ஆல ஒரு பப்ளிக் மீடிங் பள்ளில, அந்த மீடிங்க போட்டு பிரச்சின வந்த அதகாட்டி, இடி அமீன்
மௌத்தாகின டைம் டெம்பரிக்கு அந்த டைம் போர்ட்ஆள வந்து போட்டுட்டு போனமாறி போட பிளான் பண்ணின. ஆனா ஊர் மக்கள் யாரும் பிரச்சினபடல்ல மாறாக எலெக்ஷன் வைச்சி புதிய நிர்வாக சபய போட சொன்னாங்க.
போர்ட்ஆள வந்த இந்த ஊராள் பேசும்போது யாப்பேல்லாம் இப்படி ஊர் மக்கள் சேர்ந்து எழுதினாலும், எலெக்ஷன வைச்சாலும் அத ஏத்துக்கொள்றதும், நிராகரிக்கிற உரிம நமக்கு இருப்பதோடு நாம விரும்பின நாம விரும்புறவங்கள பள்ளி ரெஸ்டியாக மாத்து சர்வாதிகார அதிகாரமும் இருப்பதாக சொன்னாங்க. என்டாலும் கந்தூரிக்கு முந்தியே ஊர் மக்கள் தயாரித்த யாப்பையும் திருத்தி அனுப்புவதாக சொல்றாங்க.
இனி லாஸ்ட்டாக எப்ப எலெக்ஷன் வைப்போம் என்ற கேள்வி வருது. அடுத்த மாஸம் கந்தூரி வருது இந்த நிர்வாகம் அத லாஸ்ட்டாக வார மக்கள பசில அனுப்பாம பெஸ்டாக செய்யட்டும், அது முடிய ரெண்டு கிழமயில எலெக்ஷன் வைப்போம் என்று கூறிட்டு போராங்க.
அதோட ஏரியோரமுள்ள அந்த ஊர்ல மழ பெய்ய தொடங்கி அடிக்கடி சின்ன வெள்ளம் வந்து ரோட்டும் ப்ளக்கும் ஆகுது எந்தளவுக்கு என்டா நாளக்கி கந்தூரி ஸ்டார்ட் என்டால் இன்று வெள்ளம்.
இதால இந்த முற லாஸ்ட் கந்தூரிய பெஸ்டாக வைக்க முடியாம கஷ்டப்படும் என்டு ஊர் மக்கள் நினைக்கிறாங்க மட்டுமல்ல நாடளாவிய ரீதியில் உள்ள பக்தர்களும் கோல் பண்ணி கேக்குறாங்க. ஆனாலும் அவுலியாக்கள்ட கராமத்போல கந்தூரி நாள்ள இருந்து அஞ்சி நாளக்கி மழயே பெய்யவில்ல. அதால வழமய வார சனம் இந்த முறயும் கந்தூரிக்கு.
“சரி உம்மா அப கந்தூரி முடிஞ்சி ரெண்டு கிழமயில எலெக்ஷன் நடந்தா?”
“இல்ல. அதோட இந்த பிடியட்ல இஸ்ரேல் – பலஸ்தீன் பிரச்சின நடக்குது.”
“இனி இஸ்ரேல் பலஸ்தீன்ல சண்ட என்டு இந்த இலக்ஷன வைக்க வாணம் என்டா? தூங்கணும் உம்மா அவசரமாக கதய சொல்லுங்க”
அந்த சண்ட பிடியட்ல அந்த ஊர்ல வசிக்கிற பாபி வைன் ஆள் முஸ்தபா அட்ரிஸிக்கு ஒரு சந்தேகம்.
அதாவது உகாண்டாவ ஆட்சி செய்த இடி அமீனுக்கு கடைசி காலத்தில தஞ்சம் கொடுத்த சவுதி அரேபியா இஸ்ரேல் ஆதரவா?
பலஸ்தீன் ஆதரவா? என்பது, ஏன்டா இஸ்ரேல்டா பிளைட் ஒன்டா கடத்த பலஸ்தீன விடுதலை முன்னணிக்கு ஆதரவு கொடுத்து உகண்டாவுல இறக்க இடமும் கொடுத்த இடி அமீன். இப்படி இஸ்ரேலுக்கு எதிராக வேல செய்த ஆளுக்கு கடைசி காலத்தில தஞ்சம் கொடுத்த சவுதி அரேபியா ஆனா இப்ப பலஸ்தீனுக்கு பகிரங்க ஆதரவு கொடுக்க பயப்படுவது ஏன்? அதோட இந்த முற பலஸ்தீன் வெத்தி பெற்ற மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வருமா? அதோட இஸ்லாத்தில மஹ்ரமான உறவினர்கள் எல்லோருக்கும் வராஸத் என்ற வாரிசுரிமை இருக்க?” என்று நிறய சந்தேகம், இனி இதபத்தி ஊருக்கு அடிக்கடி உபதேசம் செய்ற மௌலவிட்ட கேட்போம் என்று மௌலவிட ரூமுக்கு போறர்.
அப்போது மௌலவியிடம் ஓதும் மாணவர்கள் தாம் பள்ளிக்கு வந்ததை உறுதிப்படுத்திவிட்டு சென்றுகொண்டிருந்தனர். அனைவரும் சென்றதும் முஸ்தபா அட்ரிஸி தமது கேள்வியை கேட்க ஆரம்பிக்கிறார்.
அப்போது முஅஸ்ஸின் அவர்கள் கைபேசில பேசிய வண்ணம் வந்து கதீப் அவர்களிடம் அதை கொடுக்கிறார்.
“சரி ஹாஜியார் நான் முஅஸ்ஸினுக்கு துறப்ப கொடுக்கிறேன்” என்று கூறி கைபேசியை கட்பண்ணி விட்டு முஅஸ்ஸினுக்கு தன் ஜூப்பா பொக்கட்இல் இருந்து துறப்பொன்றை எடுத்து கொடுக்கிறார்.
அதைப் பார்த்துவிட்டு முஅஸ்ஸின் அவர்கள், “இது நான் தந்த தொறப்பல்ல. இது உங்களுக்கு உப கதீப் தந்த தொறப்ப நான் தந்த தொறப்பயே எனக்கு தாங்க” என கேட்டார்.
“என்ன மௌலவி ஹாஜியார் சொன்ன மந்ரஸா தொறப்ப கொடுக்க சொல்லி, இது எனக்கு இப்ப லுஹருக்கு முன்னுக்கு அடுத்த மௌலவி தந்த தொறப்பு. ரெண்டு தொறப்பாலேம் மத்ரஸா கதவ தொறக்கலாம்.”
“இல்ல இந்த தொறப்பு பழசி நான் தந்த புதிய தொறப்பு அதயே எனக்கு தாங்க”
“என்ன மௌலவி நீங்க என்னவிட வயதில மூத்தவர். அந்த தொறப்ப போன கிழம தந்ததும் நான் தொறப்பு செட்ஓட போட்டு வைச்சன்.” எனக்கூறியவாறு தொறப்ப திறப்புக்கோர்வையில் இருந்து எடுப்பதற்கு கதிரையில் அமர்கிறார்.
“அது சரி நான் தந்த அதே தொறப்ப எனக்கு தாங்க?”
“என்ன மௌலவி அதே தொறப்ப கேட்டு அலட்டுற நான்தான் ஒங்கள ஹாஜியார்ட பேசி சம்பளத்த கூட்ட மத்ரஸாவுக்கும் ஓதி கொடுக்க எடுத்த. ஆனால் இந்த கந்தூரி டைம்ல இருந்து என்னொட பிரச்சினதான்.”
“மௌலவி நான் தந்த தொறப்பயே எனக்கு தாங்க. ரெஸ்ட்டி எனாட்ட பொறகு ஒருநாளக்கி வந்து அந்த புதிய தொறப்ப கேட்ட கொடுக்கனும்.”
என்று இருவரும் வாக்கு வாதம் செய்து கொண்டிருக்கும் போது கேள்வி கேட்க வந்த முஸ்தபா அட்ரிஸியின் நினைவலைகள் இமாம் புஹாரி அவர்களின் சம்பமொன்றை நினைவுபடுத்தியது.
இமாம் புஹாரி அவர்களின் காலத்தில் ஹதீஸ் ஓன்று அரியதாக ஒருவரிடம் மட்டும்தான் இருந்தது. அந்த ஹதீஸை பெற பல நூறு மைல் தூரம் பிரயாணித்து வந்து அந்த ஊர் மக்களிடம் அந்த ஹதீஸை மனனமிட்டு வைத்துள்ள நபர் பற்றி விசாரித்தார்கள் அப்போது அந்த ஊர் மக்கள் அனைவரும் அந்த நபர் நாணயமானவர் உண்மையாளர் என சான்று கூறினார்கள்.
அதன்பிறகு அந்நபரிடம் ஹதீஸை நாடி சென்றார், அவரை சந்திக்கும் போது அவர் தன்னுடைய குதிரையை தொழுவத்தில் கட்டிவிட்டு வருகிறேன் என்று புஹாரி இமாமிடம் கூறிவிட்டு ஒரு கூடையை எடுத்து அதில் புள் இருப்பது போல் காட்டி அந்த குதிரையை ஏமாற்றி அதை தொழுவத்தின் பக்கம் அழைத்தார்கள்.
இதை கண்ட இமாம் புஹாரி நீங்கள் மனிதர்களிடம் உண்மையாக இருந்தாலும் நீங்கள் விலங்குகளை ஏமாற்றிவிட்டீர்கள். நீங்கள் அறிவிக்கும் ஹதீஸ் தேவை இல்லை.
நான் நபிமொழிகளின் உண்மை தன்மையில் உறுதியானதை மட்டும் சேகரிக்க விரும்புகிறேன் என்று கூறி தன்னுடைய பல நூற்றுக்கணக்கான பயணத்தை கூட பொருட்படுத்தாமல் அந்த ஹதீஸை பெறாமல் சென்றார்.
இவ்வாறு கேள்வி கேட்க வந்ததை கேட்காமல் திரும்புவோமா? ஏனெனில் பொறுமையாக இருக்கனும் என்று உபதேசம் செய்கிறவர்டயே பொறுமை இல்லை என்றால் என்ன செய்வது என சிந்தனையில் ஆழ்ந்தார் முஸ்தபா அட்ரிஸி.
“என்ன மௌலவி உங்களுக்கு ஸபோர்டாக எத்தனயோ முற உங்கள காப்பாத்தி உட்ட. ஆனால் அன்டக்கி கந்தூரி டைம் புதிய மௌலவி ஒருத்தர் நீங்க இல்லாத போது பாங்கு சொன்னதும் அவர பள்ளிக்கு
எடுக்க நான் ரை பண்ரன்டும் பொய்ய பரப்பின” எனக் கூறியவாறு தீடிரென ஆவேசப்பட்டவாறு எழும்பிவிட்டார் கதீப்.
எழும்பியதும் பக்கத்தில் இருந்த இருந்த புட்டுவத்த தூக்கி முஅஸ்ஸினுக்கு அடிக்க முற்பட்டுவிட்டார். பக்கத்தில் இருந்து உடன் பாய்ந்த முஸ்தபா அட்ரிஸி அதை தடுத்துவிட்டார். உடன் கதீப் புட்டுவத்த கீழே வைத்துவிட்டார் பின்னர் மீண்டும் முஅஸ்ஸினை அடிப்பதற்கு முற்பட்டார்.
முஅஸ்ஸின் அவர்கள் பயந்தவாறு கதீப் அவர்களின் ரூமிலிருந்து வெளியே ஓடினார். பின்னால் கதீப் துரத்திச் சென்றார். அவர்களை தொடர்ந்து பின்னால் ஓடினார் முஸ்தபா அட்ரிஸி. பத்து மீட்டருக்குள் கதீப் முஅஸ்ஸினை பின்னால் அடிங்க கையோங்க கதீபின் ஜுப்பாவை பின்னால் தடுத்து நிறுத்தினார் முஸ்தபா அட்ரிஸி. அதற்குள் முஅஸ்ஸின் தப்பிப் பிழைத்து அவரது ரூமுக்கு போய் கதவை மூட்டிக் கொண்டார்.
இவை அனைத்தும் ஐந்து நிமிடங்களுக்குள் நடந்து விடுகிறது. கேள்வி கேட்பதற்கு இது பொருத்தமற்ற நேரமென தன் மனதில் எண்ணியவாறு கதீபின் அவர்களுடன் பேசாமல் வீட்டுக்கு சென்றார் முஸ்தபா அட்ரிஸி.
அன்றிரவாகும் போது பள்ளி ரெஸ்ட்டி போர்ட் தலைவர் நேரடி சாட்சியாக உள்ள முஸ்தபா அட்ரிஸியிடம் எதுவும் கேட்காமலே இருவரையும் விசாரித்து இருவருக்கும் பள்ளிவாசல் பணிகளில் ஈடுபட வேண்டாம் என பத்து நாட்களுக்கு தடைவிதிக்கின்றார்.
மூன்று நாட்களுக்குள் போது, உள்ளுரில் முஸ்தபா அட்ரிஸியால் நம்ப முடியாத பல செய்திகள் பறவுது.
கதீப் முஅஸ்ஸினுக்கு இரும்பு புட்டுவத்தால அடிச்சி கை வலி தாங்காமல் ஊர்ல உள்ள பரிகாரிட்ட எண்ண பூச போனால் அவர் பார்த்து கை ஒடைஞ்சன்டு பெமஸ் ஹொஸ்பிடலான கம்பாலாவில் உள்ள முலாகோ மருத்துவமனைக்கு சென்று டாக்டர் மார்க் கட்டுமுகஸாவிடம் கைக்கு பண்டெஜ் போட்டதாக செய்தி பரவுது. இடையில முஅஸ்ஸினை பணிய போட்டு மீறிச்சி அடிச்சதாக………… இப்படி பல செய்தி பறவுது. அந்த முஸ்தபார அட்ரிஸி இல்லாட்டி முஅஸ்ஸின்ட உயிரே போய் இருக்கும் என்றும் ஊர் ஊடகங்களில் செய்தியை நேரடி ஒலிபரப்பப்படுகிறது.
மறுபுறம் இதற்கு மறுப்பாக கதீபின் பக்கமுமிருந்தும் செய்தி பறவுது அதில் தான் புட்டுவத்தை தூக்கவுமில்லை அடிக்க கையொங்கவுமில்லை என்கிறார். இதற்கு பள்ளியில் உள்ள சிசிடிவி
பார்த்தாலே வெளங்கும். மேலும் இதற்கு சாஹிதாக முஸ்தபா அட்ரிஸியும் இருப்பதாக தான் நம்புவதாக குறிப்பிடுகிறார்.
இனி நேரடி சாட்சி என்று ஊரவர்கள் முஸ்தபா அட்ரிஸியிடம் இது தொடர்பாக கேள்வி கேட்கத் துவங்கினர். அவர்களிடம்,
“புட்டுவத்தால அடிச்சால் கை ஒடையுமா என்பத டெஸ்ட் பண்ணி பார்க்க மௌலவி அடிச்சமாறி உங்களுக்கு அடிச்ச பார்க்கவா” என்று கேட்டுவிட்டு
“மௌலவி அடிக்க கையொங்கவுமில்ல, புட்டுவத்த தூக்கவுமில்ல என்பத ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அதற்காக மௌலவி அடிச்சி கையொடஞ்ச கதயெல்லாம் பொய். அதோட யூஸுப் – ஸுலைஹா கதயில ஸுலைஹா யூஸுப் நபிட உடுப்பால பிடிச்சி இழுத்த போது அது பின் சைட்டால பிஞ்சாமாறி நான் மௌலவிட ஜுப்பாவ பிடிச்ச போது அது பிஞ்சி வந்திருந்தால் அத எனக்கு ஆதரமாக காட்டிருக்கலாம்.” என்று கூறினான்.
மறுபுறம் இது மௌலவிய விலக்க நிர்வாக சப முஅஸ்ஸின்; ஊட சேர்ந்து செய்ற சதி ஆனால் ஊர் மக்கள் எல்லாம் மௌலவிக்கு சபோர்ட் அதன் ஓன்டும் செய்ய முடியாம இருக்குறாங்க என்ற விமர்சனங்களும் வெளிவந்த வண்ணமிருந்தது.
அதோட இந்த சில்லர பிரச்சினக்காக இருவருக்கும் பத்துநாள் தடை விதித்ததுக்கும் விமர்சனங்கள் வருகிறது.
“எஙட நாட்டு மினிஸ்டர் கட்டும்பா வாமலாட மகள் நாந்தோங்கோ அன்ட் ரைவர் கொலை, அமைச்சர் சார்லஸ் ஒகெல்லோ கொல, அது மட்டுமா காலங்காலமாக இப்படி நிறைய படுகொலைகள் நடக்கிற நாட்டில், அதுகளுக்கே சரியாக தண்டன கொடுக்கிறல்ல அதுக்குள்ள இந்த பிரச்சினய பெரிது படுத்தனுமா என்று சோடா போத்தல் போல பேசி ரெண்டு கிழமயில கேஸ் மறந்து போகுது.
இதற்குள் கந்தூரி நடந்து ரெண்டு மாஸம் கடந்துவிட்டது. இனி உகண்ட முஸ்லிம் உயர் சபையின் புதிய அறிவித்தலுக்கமைய மீண்டும் கல்யாம்புதி பள்ளிவாசல் நிர்வாக தெரிவு தொடர்பான கூட்டம் அன்று நடக்கிது. பெஸ்ட் மீடிங்ல பேசினதயே பேசிட்டு அடுத்தாக கவுன்ஸில் தலைவர் எப்போது இலக்ஷன் வைப்போம் என்று கேட்கிறார்.
கூட்டத்தில் சில நிமிட அமைதிக்கு பின்னர் ஒரு மூலையில் இருந்து பள்ளி முஅஸ்ஸின் எழும்புகிறார்.
“அஸ்ஸலாமு அலைக்கும் ஷேஹ் அவங்களே! எனக்கு மௌலவி அடிச்சதால அவரு எதிராக பள்ளி நிர்வாகத்தின் கீழ் உள்ள காதி கோர்ட்ல வழக்கு போகுது. பள்ளிக்கு புதிய ரெஸ்ட்டி போர்ட் போட்டால் பள்ளி சட்டப்படி அந்த காதி கோர்ட்டும் அஹோஸி ஆகுது. அதோட அதிலுள்ள கேஸ் எல்லாம் கேன்ஸலாகிடும் என்டுதான் பள்ளி சட்டத்தில போட்டிருக்கு எனவே ஏன்டா வழக்கு முடியும் வர எலெக்ஷன் வைக்க வேண்டாம்.”
“வழக்கு எப்ப முடியும்”
“மூனாவது முற என்னயும் மௌலவியையும் போன கிழம விசாரிச்ச, இனி அடுத்த வழக்குல மூனாவது ஆள் முஸ்தபா அட்ரிஸியையும் விசாரிக்கிறன்டா அந்த வழக்கு 2024.08.31 ஆந் திகதி நடக்குது.
“ஊருக்குள்ளதானே அத அடுத்த மாஸம் வைக்க கஷ்டமா?” என கேட்டதுக்கு,
“முஸ்தபா அட்ரிஸிக்கு லங்காவுல ஜொப் கிடைச்சி போய் இருக்கு. அவர் 2024 ஆகஸ்ட்லதான் வார.”
இறுதியாக கவுன்ஸில் தலைவர் தனதுறையில்,
“பாதிக்கப்பட்ட கதீப் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய அவருக்கு நீதி கிடைச்சதும் தேர்தல் நடத்துவதாக அறிவித்தார்.
வரலாற்றை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்து ஆமிர்,
“இனி உம்மா அந்த பள்ளில இலக்ஷன் நடந்த”
“மகன் நாம இப்ப இருப்பது 2023ல அந்த இலக்ஷன் நடந்த இல்ல என்டு 2024 செப்டெம்பர்ல சொல்றேன்.”
“உம்மா அப 2024 செப்டெம்பர்ல இலங்கையில ஜனாதிபதி தேர்தல் நடக்கும் போது அங்க கல்யாம்புதி பள்ளிலயும் இலக்ஷன் நடக்கும்” எனக்கூறிவிட்டு தூங்கினான்.
(யாவும் கற்பனை)