சார், நம் கம்பெனியில பெண்கள் வேலை செய்யிற பகுதிக்கு சூப்பர்வைஸர் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருந்தோம் இல்லையா? அதுக்கு அப்ளை பண்ணவங்க எல்லாருக்கும் டெஸ்ட் வச்சு இன்டர்வியூ முடிச்சாச்சு.
வனஜா, கிரிஜான்னு ரெண்டு பேரு சம தகுதியோட இருக்காங்க. அவங்கள்ல யாரை செலக்ட் பண்றதுன்னு நீங்கதான் முடிவு பண்ணனும்
சார்”
மானேஜிங் டைரக்டர் ராஜாவிடம், அவரது உதவியாளர் ஃபைல்களை கொடுதார்.
அந்த இருவரின் சுயவிவரங்களையும், தகுதிகளையும் நோட்டம் விட்ட ராஜா, ”கல்யாணமான இவங்க ரெண்டு பேர்ல யார் கூட்டுக்குடும்பம்,
யார் தனிக்குடுத்தனும்னு விசாரிக்கச் சொல்லுங்க” என்றார்.
சற்று நேரத்தில் அறைக்கு வந்த உதவியாளர், ”எல்லாம் விசாரிச்சுட்டேன் சார்…கிரிஜா மேடம் கூட்டுக் குடும்பமா இருக்காங்க. வனஜா மேடம்
தனிக்குடித்தன்ம்’ என்றார் உதவியாளர்.
அப்ப வனஜாவுக்கே அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்துடுங்க” என்று உத்தரவிட்ட எம்.டி.யை கேள்விக்குறியுடன் பார்த்தார் உதவியாளர்.
கூட்டுக் குடும்பத்துல ‘பெரியவங்க பார்த்துப்பாங்க’ன்னு பெண்கள் சில விஷயங்கள்ல அசட்டையா இருப்பாங்க. ஆனா, தனிக் குடுத்தனும்னா
எல்லா குடும்ப விஷங்களையும் மேனேஜ் பண்ணியே ஆகணும். அவங்களுக்கு நிர்வாகத் திறமையும், அதிக பொறுப்புணர்ச்சியும் வளர்ந்திருக்கும். என் கணக்கு சரிதானே?” என்றார் ராஜா.
புன்னகையால் ”எஸ்’ சொல்லிக் கிளம்பினார் உதவியிளார்.
– மார்ச் 2013