தண்ணீர் கோபுரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 8,507 
 

எலே மாடசாமி எழுந்து வாடா வெளியில..

நேரம் ஆகரது தெரியாம தூங்கரெயாடா என்று பக்கத்து வயல்காரர் சீனுவாசன் கூப்பிட்டார்..

அண்ணே.. இதோ வந்துடர்னே

நேற்று மோட்டர சரிபன்ன நாங்க டவுனுக்குப் போனோம் வர கொஞ்சம் லேட்டுனே அதான் தூங்கியாச்சினே…

சரிவாடா ….

அண்ணே போகலாம்னே

கயிறு,கடப்பாறை மற்றும் கொஞ்சம் சாவி என எடுத்துக் கொண்டு நடந்தார்கள்..

ஊரின் நடுவில் டீக்கடை வந்ததது அங்குச் சற்று கூக்குரல் கேட்டது,காலையில் செய்திதாளில் படித்துகொண்டே இருவர் வாக்குவாதம் செய்தார்கள்…

முதலாமனவன்
தமிழ்நாட்டு நிலைமை ரொம்ப மோசமா போவுது..எங்கபோயி முடியபோவுதுனு தெரியல என்றான்..

அதற்கு இரண்டவது ஆள்..
ஆமான்டா செய்திதாள்ல வர விஷயத்தைப் பார்த்தா ரொம்ப நாள் தள்ளாது போல என்றான்…

சீனுவாசன் அந்த நேரம் டீ கடையில ஏம்பா மணி இரண்டு டீ போடுபா என்றார்.

உடனே மாடசாமி அண்ணே கொஞ்சம் டீ சாப்டுங்க இதோ வந்துடேறனே என்றான் ….

ஏன்டா எங்கடா போற…

வீட்டுக்கு போயி செல் போண் எடுத்து வார என்றான்…

சரிபோயி வாடா என்றார் சீனுவாசன்…

அண்ணே இந்தாங்க டீ என்றான் மணி…

இவ்வளவு காலையிலே எங்கன்னே

ஒன்னும் இல்ல ஏரியிலயிருந்து கொஞ்சம் தண்ணீர எடுத்து நிலத்துக்குப் பாசனும் ..நேற்று மோட்டர் ரிப்பேர்டா மணி..

நேத்து போய் நம்ம மாடசாமி டவுனுக்குப் போய் மோட்டர கூடுத்துட்டு வந்தான்…

இப்போ மெக்கானிக் மோட்டரர எடுத்துகினு வாராறு டா..

இன்னா நெல்லானே

இல்லடா நெல்லுக்குத் தண்ணீர் பத்தாது… வாழைடா..

டீயை உறிஞ்சார்…

அண்ணே போகலாமானே என்றான் மாடசாமி…

டேய் டீ சாப்பிடு போகலாம் என்றார் சீனுவாசன்..

மணி இந்தாப்பா டீ என்றான்..

டீயை குடித்தான் மாடசாமி பொழுது விடிந்து சற்று வெளிச்சம் வந்தது..

சீனுவாசன் இந்தாடா மணி என்று சில்லரையைக் கொடுத்தார்…

இருவரும் நிலத்தை நோக்கி நடந்தார்கள்…

ஏரிக்கரையில் மேல் மரத்தின் அடியில் மோட்டார் வைத்து இறைப்பது வழக்கம்..

அங்குப் பொருளை வைத்துவிட்டு அண்ணே இதோ வந்து விடுகிறேன் ..

டீ வேற சாப்பிட்டேன் கொஞ்சம் வைத்த கலக்குது…

போடா..போடா..

மாடசாமி சற்றுத் தூரம் சென்று பீடியை வாயில் வைத்தான் அப்படியே ஒதுங்கினான்..

புகை,மது உடல் நலத்திற்கு கேடு என்று விளம்பரம் போட முடியாது ஏன்னா அரசாங்கமே அதற்கும் ஜி.எஸ்.டி எல்லாம் போட்டு வருமானம் ஈட்டுகிறது…

அப்படியே போட்டாலும் அந்த வரிய போட்டுவிட்டு புகை,மது அரங்கேற்றம்..

தூண்டுதல் சின்னப் பெரிய திரையில் வருவதைப் பார்தோ இன்னவோ மாடசாமி புகைத்தான்..

அதுதான் அவனுக்கு மலசிக்கலுக்கு மருந்து என நினைத்தான்..

பக்கத்திலும் நிறையப் பேர் அவ்வாறே இருப்பதால் அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை…

இவன் நினைவு ஏங்கே போக.. மாடசாமி …எலேய் மாடசாமி எனக் கத்தினார் சீனுவாசன்…

அண்ணே இதோ வந்துவிட்டேன் தண்ணீரில் கை கால்களைக் கழுவிகொண்டான்…

எப்படியும் கிராமத்து ஏரி குளம் ஒரு நாளைக்கு நூறு பேராவது ஒரே தண்ணியில அலம்புவது வழக்கம்..

ஏன்டா இவ்வளவு நேரம்..

நேற்று மெக்கானிக்கும் நானும் பரோட்டா சாப்பிட்டோம் அதான் என்றான் மாடசாமி…

சரி மெக்கானிக்கு போண்போடு என்றார் சீனுவாசன்…

டீங்..டீங்…டீங் என அவன் எழுதி வைத்திருந்த நெம்பரை மொபைலில் அழுத்தினான் மாடசாமி…

ஹலோ…மெக்கனிக்கா?

ஆமாம் ..யாரு…?

நான் மாடசாமி …..எப்போ வாரீக என்றான்…?

இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்ரேன்டா…என்றான் மெக்கனிக்.

இதோ கிளம்பிவிட்டார்ன்னே என்றான் மாடசாமி…

டேய் மாடசாமி தண்ணீர் வேற ஏரில குறையது எப்படியாவது இந்த வாழைய பயிர் ஏத்திபுடனும் டா….

ஏரி வத்தி போச்சி மழையும் இல்லை

ஆமான்னே கால் ஏக்கர் நிலத்துக்கு இம்புட்டு பாடு என்றான் மாடசாமி

டேய் எம்புள்ள வேற இந்த வருஷம் படிப்ப முடிச்சுட்டானா கொஞ்சம் சுதந்திரமா கடன கொடுத்திடலாம்..

சரி விடுங்க அண்ணே என்றான் மாடசாமி..

எத்தனை வருஷம் நம்ம வாழ்க்கை சேத்துலயும் தண்ணியிலயும் முடியலடா..

சரிங்கன்னே மணி 8 ஆகி போச்சி திரும்ப ஒரு போண் போடறேன்..

மீண்டும் மெக்கானிக்கு போன் செய்தான் மாடசாமி…

ஹெலோ மெக்கானிக்கா?

ஆமான்டா மாடசாமி உங்க ஊரு டீக்கடைக்கிட்ட வந்துவிட்டம்பா..

அண்ணே பக்கத்துல வந்துடார்னே..

மோட்டார் சைக்கிள் சப்தம் கேட்டது..

வாப்பா நடராஜா என்றார் சீனுவாசன்

அண்ணே வணக்கம் எப்படி இருக்கிறீங்க

நல்லா இருக்கறம்பா..

சரி கொஞ்ஙம் பிடிங்க என்று மோட்டாரை இறக்கினார்கள்..

நடராஜன் மோட்டாரை சரியாகப் பைப்போடு வைத்து டைட் செய்தார்

கனக்க்ஷன் கொடுத்தார் ..

அண்ணே மோட்டர போடுங்க என்றார் ..

சீனுவாசன் சுவிட்சை போட்டார்

மோட்டார் இறைத்து நீரை வெளியில் தள்ளியது…

சீனுவாசன் முகத்தில் சந்தோஷம் பிறந்தது…

வாழை அறுவடை நேரம் அதை அறுவடை செய்து அந்தத் தொகையைப் பயனுக்கு அனுப்பவேண்டும் என மனதில் நினைத்தார்..

அண்ணே நான் புறப்படுகிறேன் என்றார் மெக்கானிக்..

இருங்க தம்பி சாப்பிட்டு விட்டு போகலாம் என்றார் .

டேய் மடசாமி இந்தாபோய் மூனுபேருக்கும் இட்லியும் வடை வாங்கிவாடா என 60 ரூபாய் பணம் கொடுத்தார்..

மாடசாமிக்குச் சந்தோஷம் குக்கிரமத்து ஓட்டலில் விலை மலிவுதான்….

தினமும் பழைய கஞ்சி குடித்தவனுக்கு இட்லி என்றவுடன் மகிழ்ச்சி….

ஆம் இன்னும் எத்தனையோ கிரமத்தில் நிலமை மாடசாமியை போல்…

கடைக்குச் சென்று இட்லியுடன் வந்தான்…

மெக்கானிக் மற்ற இருவரும் அமரந்து சாப்பிட மாடசாமிக்கு ஆவல் சீனுவாசன் மூன்று இட்லியுடன் எழுந்தார் …

மாடசாமி நன்றாகச் சாப்பிட்டான்…

மெக்கானிக் சர்வீஸ் செய்த பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினார்..

டேய் நாளைக்கு டவுனுக்குப் போய் என் மகன பார்கோனும் வாறீயா என்றார் சீனுவாசன்..

சரி வரேன் என்றான் மாடசாமி..

பஸ் ஏற காத்திருந்தார்கள் இருவரும்

அதிகாலை மணி 4

பஸ் வந்தது..

இரண்டு சென்னை டிக்கட் கொடுங்க என்று எடுத்தார் மாடசாமி..

பஸ் புறபட்டது..

காலை 9 மணிக்கு இறக்கி விட்டார்கள்.

மாடசாமிக்கு பசி..

அண்ணே சாப்பிடலாமா என ஒட்டலை கை காட்டினான் மாடசாமி.

சரி என்றார் சீனுவாசன் ..

இருவரும் ஒட்டலுக்கு நுழைந்தனர்.

சாப்பிட்டுமுடித்த உடன் பில் வந்தது

250 ரூபாய்..

தோசை 75,இட்லி 50 என்றார் சீனுவாசன் ….

அண்ணே நம்ம ஊர்ல 50 ரூபாய்கு சாப்பிட முடியாது..

இங்க என்ன இவ்வளவு விலை என்றான்..

விவசாயப் பொருள் நம்ம கைய விட்டு வண்டியில ஏறிபுட்டா விலையும் ஏறிடும் என்று பில்லை கொடுத்து விட்டு சென்றனர்..

எம் ஐ டி வளாகம் வந்தனர் …

தன் மகனை அன்போடு பார்த்தார் சீனுவாசன்..

தன் தந்தையை அன்போடு பார்த்தான் வெங்கடராமன்..

மாடசாமி அண்ணே எப்படி இருக்கிறிங்க என்றான்..

நல்லா இருக்கிறேன்பா என்றான் மாடசாமி..

அப்பா வாங்க ரூமுக்கு என்று அழைத்துச் சென்றான்..

நாளைக்கு ஒரு கான்பிரன்ஸ் இருக்கிறது என்றான் வெங்கடராமன்..

மறுநாள் காலை …

எம் ஐ டி வளாகம் கோட் ஷீட் உடன் கலை கட்டியது ..

கான்பிரஸ்க்கு தன் தந்தையுடன் சென்றான் வெங்கடராமன்..

சீனுவாசன் தன் மகனை பார்த்தார் எளிமை அவரை வாட்டியது கையில் பணமில்லை அவரது கண்கள் கலங்கியது..

மைக் ஒலித்தது..

வெங்கடராமனை எம். டெக்..ஜியாலஜி என அழைத்தது..

வெங்கடராமன் விரைந்தான் ..

தன் உரையை ஆரம்பித்தான் நாட்டில் உள்ள பெரிய பிரச்சனை தண்ணீர் தான் …

வேற்றுகிரத்தில தண்ணீர் தேட விழையும் நாம்,இங்க வாழக்கூடிய இடத்தில எப்படி அதை மறு சீரமைக்கலாம் என்று தன் உரையை ஆரம்பித்தான்..

தன்னுடைய கண்டுபிடிப்பான புது சென்சார் மூலமாக எத்தனை ஆயிரம் அடியில் இருக்கும் தண்ணீரை வெளியில் கொண்டு வருவது பற்றி விளக்கினான்..

பலத்த கை தட்டல் அரங்கம் முழுவதும்..

சீனுவாசன் கண்களில் நீர்துளி..

கிடைத்த கொஞ்சம் நீரை வைத்து விவசாயம் பார்த்து படிக்கவைத்த தன் மகனின் கண்டுபிடிப்பு எதிர்காலத் தலைமுறைக்கு உதவும் என்ற நம்பிக்கை விதையை எம் ஐ டி வளாகத்தில் தூவிவிட்டு கிளம்பினார் தன்கிராமங்களில் தண்ணீர் கோபுரமாய் எழும் என்ற கனவோடு கிளம்பினார்.

தன் கிராமம் நோக்கி பஸில் ஏறினார்கள் சீனுவாசனும் மாடசாமியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *