சோப்பிடலின் உருதாங்கி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 7,947 
 
 

மதயானை கடையில்தான் சோப்பு வாங்கினான்,

மகன் யானை என்பதே மறுவி மதயானை ஆகிபோனது என்று சொல்வார்கள் கடைக்காரைப்பற்றி அந்த ஊர்க்காரர்களிடம் கேட்கிற போது,அவர் பிறந்த போது பிரசவம் பார்த்த தாதி உன் மகன் யானை ஓங்குதாங்காக வருவான், மகன் இனி யானை போல எனதாதி சொன்ன சொல் மறுவி,,,,மறுவி இன்று மதயானையாய் நிற்கிறது,

உள்ளபடிக்குமாய் இது மதயானையின் அண்ணன் கடை.பலசரக்கு தவிர மற்ற தெல்லாம் இங்கு கிடைத்தது,

என்ன சோப்பு வேணும்…கடைக்காரர்.

குளியல் சோப்பு…இவன்,

குளியல் சோப்புல எது?…கடைக்காரர்.

சொல்லத்தெரியவில்லை இவனுக்கு.

இதற்கு முன்பாய் சோப்புப்போட்டுக்குளித்ததில்லை இவன்,அந்தப்பழக்கம் இல்லை இது நாள் வரை,

இடுப்பில் அழுக்கேறிப்போன சிவப்புக்கலர் ட்ரவுசர் இரண்டும்,காக்கிக்கலர் டரவுசர் ஒன்றும் நூல்த்துண்டுகள் இரண்டு தவிர்த்து வேறொன்றும்பெரிதாக இவனிடம் இருந்ததில்லை விவசாய கூலியாய் இருந்த காயாத பொழுதுகளில் பெரும்பாலான சமயங்களில் தலையில் இருக்கும்,துண்டும் இடுப்பில் இருக்கிற டரவுசரும் இவன் பணி செய்கிற நேரத்து பணிசீருடை மட்டும் அல்ல. பொதுவாகவே அவனது அன்றாட உடைகள் என இவனை அடையாளம் கொள்ள வைக்கும்/

மண்வெட்டி வேலை செய்துகொண்டிருக்கிறநேரங்களில்இவன்தலையை சுற்றி கட்டி இருக்கிற தலைப் பாகையில் வலது பக்கம் மண்வெட்டியை சுரண்டு வதற்கு ஏற்றார்ப்போல ஒரு கல்வைத்திருப்பான்.

அதை தேர்வு பண்ணியெல்லாம் தெடிச்சென்று எடுப்பதில்லை,போகிற போக்கில் சதுரமாய் சப்பட்டை உர் கொண்டு இருக்கிற கல் ஏதாவது தென்பட்டால் எடுத்து தலையை சுற்றியிருக்கிற துண்டில் சொருகிக் கொள்வான்.

ஈரம் சுமந்த அல்லது அது அல்லாத மண்,, மண் வெட்டி முழுவதுமாய் நிறைந்து ஒட்டிக் கொண்டிருக்கிற நேரங்களில் சுரண்டுவதற்கு ஏற்றார் போல வைத்திருக்கிற சப்பட்டைக் கல் இவன் எப்பொழுதுமே இவன் தலை துண்டு பொதிந்ததாக அப்படியாய் உடல் முழுவதுமாய் நிரம்பிய உழைப்பும் அலுப்பு வியர்வையுமாய் இருக்கிற தினசரிகளில் இவன் அறிந்ததெல்லாம் சோப்புப் போடாமல் குளித்த கண்மாய்த் தண்ணீர், கிணற்றுத் தண்ணீர் தவிர வேறொன்றுமில்லை பராபரமே என்பது தான் இந்நேரத்து நிஜமாகிப்போகிறது.

ரோட்டிற்கு வலது பக்கமாய் குளித்தால் மாடச்சாமி அய்யா கிணறு, ரோட்டிற்கு இடதுபுறமாய்குளித்தால் கண்மாய்த்தண்ணீர், அவ்வளவுதான் வித்தியாசம்.

கண்மயங்காத சாயங்கால வேளைகளுக்கு முன் போனால் மாடசாமி அய்யா கிணற்று தண்ணீர்,கண் மயங்கிய பின் இருட்டிய வேளையில் சென்றால் இருட்டுக்குள்பதுங்கியிருக்கும் பூச்சி பொட்டுகளுக்கு கைதட்டியவாறு சைகை செய்து ஓரம் காட்டி ஒதுங்கியிருக்குமாறு சப்தம் காட்டி சொல்லி விட்டு கண்மாயில் இறங்கி குளித்துவிட்டுவருவான்,

இது கூட அவனாக அறிந்து வைத்தவிஷயமில்லை.இவன் போலவே இந்த கண்டிஷன் சுமந்து குளிக்க வருகிற கிருஷ்ணன்ணன்ந்தான் சொன்னார்,

”எப்பவுமேகண்மாயிலகுளிக்கவந்தாஅப்பிடியேகரையெறங்கிறாத,இருட்டுல, மனுச நடமாட்டம் ஓஞ்சு போன நேரத்துல ஏதாவது பூச்சி பொட்டு நடமாட்டம் தலைதூக்கியிருக்கும். அதுக்குயெடஞ்சலா நாம வந்துட்டம்ன்னு அதும் நெனைச்சிறக்கூடாது, நம்மளுக்குயெடைஞ்சலா அது இருக்குன்னு நம்மளும் நெனைச்சிறக்கூடாது,

அது இல்லாத யெடம்ன்னு ஒண்ணு இருக்காசொல்லு, நாமளும் அது இல்லாத யெடமாப்பாத்து நடமாடவும் முடியாது,

அதுக்காகத்தான் இப்பிடி ஒரு தட்டு நம்ம கையும் வலிக்காம, நம்மளுக்கு குறுக்கவர்றதுக்கும்பாதிப்பில்லாமபோயிக்கிறவேண்டியதுதா” என சொல்வார்,

அப்படியாய்வந்துகுளித்துச்செல்கிறநாட்களின்நினைவுகள்மனம் தாங்கி நின்ற பொழுதுகளில்சமயாசமயங்களில் கண் வெளிச்சமாய் இருக்கிற நேரங்களில் மாடசாமி அய்யா கிணறுதான் குளிக்க வாய்க்கும், அது என்னவெனத் தெரியவில்லை, இவன்அதுபோலாய்குளிக்கப்போகிற தினங்களில் கிருஷ்ணன்ணனும் வந்து விடுகிறார்,

அவரும் இவனைப் போலத்தான். உடல் முழுவதுமாய் உழைப்பை அப்பிக்கொண்டு திரிபவர்,

நாட்களின்இருபத்திநான்குமணிப்பொழுதுகளில்தூங்குகிறநேரம்போகஉழைப்பை கைகோர்த்துக் கொண்டு இருக்கிற மனிதராய், இருவருமாய் அப்படி குளிக்கிற இடங்களில் சந்தித்துக் கொள்கிற நாட்களில் பேசிக் கொள்வதுண்டு. இன்னைக்கு எந்தக் காடு, யாரு தோட்டம், உழவா,,களையெடுப்பா, மரம்வெட்டா இல்லை கெணறு தூறுவாறலா,, என அடுக்கிக் கேட்கிற கேள்விக்கு அவர் முழுத்தகுதி பெற்றவராய் இருப்பார். அவர் செய்யாத வேலை இல்லை எனலாம்.

விவசாய வேலைகளில் அவருக்குத்தெரியாத வேலைகளும் கிட்டத் தட்ட இல்லை எனலாம்,

பால் பட்டு கரடு தட்டிப்போன ஒரு நிலத்தை அவரதுகையில் கொடுத்தால் அதை விவசாய நிலமாக மாற்றிக்காட்டுகிற வல்லமை அவரிடம் எப்பொழுதும் இருந்ததுண்டுதான், அது மட்டுமில்லை, பேசாத மண்ணை பேச வைக்கவும் விளையாதமண்னைவிளைய வைக்கவுமான சக்தியை தன்னகத்தே கொண்ட மனிதராக இருக்கிறார் என அவருக்கு ஒரு தனிப்பெயர் உண்டு,அது மட்டுமில்லை அவருக்கிணையாய் இந்தஊரில்வேலைசெய்யஆட்கள் இல்லை எனச் சொல்லலாம்.

ஊருக்குள் உதைப்பு உழவு மும்பரமாய்நடந்து கொண்டிருந்த நேரம்.வடக்குக் காட்டில் அன்று அவர் உழுகப்போயிருந்தார்.காலையில் ஏழு மணிக்கு ஏர் கட்டிய அவர் மதியம் மூன்று மணிக்குள்ளாய் கட்டாந்தரையாய் க்கிடந்த நிலத்தை உழுது பண்படுத்தி நிலத்தின் மண்ணை மலரச்செய்து விதைத்து விட்டு வந்து விட்டார்,

இதில்விதைத்துமுடித்த நிலத்தை இன்னும் உழுது முடிக்க இன்னும் சால்கள் தான் பாக்கியிருக்கிறது,காலையிலிருந்து வேலை செய்து அழுத்துக்கலைத்த மாடு படுத்து விடுகிறது.

படுத்துவிட்டமாட்டைவம்புபண்ணியெல்லாம் எழுப்பத்துணியவில்லை அவர், காட்டின் ஓரமாய் ஒடிய ஒடைக்கு மாட்டை ஓட்டிபோய் நீர்க்காட்டி விட்டு மர நிழலில் கட்டிப்போட்டு விட்டு ஒடையோரமாய் வளர்ந்து நின்ற புற்களை மேய மாட்டிற்கு முன் அனுமதி கொடுத்து விட்டு வருகிறார்,

என்ன செய்யலாம் இப்போது,,,,,,?இப்படியே பாதியில் விட்டு விட்டுப்போக முடியாது,பாதி கூட இல்லை நிலத்தில் முக்கால் வாசிமுடிந்து போனது விதைப்பு,இதை இப்படியே விட்டு விட்டும் போக முடியாது,நிலத்தின் மேனியில் மிதக்கிற விதைத்த விதைகளை காற்றுக்குடித்துவிடும்,தவிர காக்கை குருவிகள் கொத்திக்கொண்டு போய் விடும்,பின் நிலத்துக்காரருக்கு அவர் பதில் சொல்லி முடியாது,

இது போலான அனுபவம் இது நாள்வரை ஏற்பட்டதில்லை,இது போலாய் எப் பொழுதாவது ஏற்படுகிற சமயங்களில் பக்கத்துக்காட்டில் அல்லது அவருடனாய் ஜோடியாக வந்த எரில் இருந்து ஒற்றை மாட்டை கழட்டி இதில் கட்டி உழுது விடுவார், அது இடத்து மாடகாக இருந்த போதும் சரி,வலத்து மாடாக இருந்த போதும் சரி.சரிக்கட்டி உழுது முடித்து விட்டுக்கிளம்பி விடுவார்,

ஆனால் அன்று அப்படி ஏதும் செய்ய முடியவில்லை,கூட வருகிறேன் எனச் சொன்ன ஜோடி கலப்பையை இன்னொரு காட்டிற்கு அனுப்பி விட்டு இவர் ஒற்றையாகவே வந்திருந்தார், சரி ரொம்ப நேரமெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது அல்லது அப்படியாய் யோசிப்பதில் ஏதும் பிரயோஜனம் இல்லை.

விதைப் பெட்டியோடு நின்று கொண்டிருந்த காட்டுக்காரரைக்கூப்பிட்டு ஏரை பிடியுங்கள் கொஞ்சநேரம்,மாடு இல்லாத வெற்றிடத்தை நான் நிரப்பி இழுத்துச் செல்கிறேன் ஏரை,ஒரு பக்கம் மாடு.ஒருபக்கம் நான்,வலத்துக்காளை காளையாகவே இருக்க இடத்துக்காளையின் இடத்தில் மனிதனான நான் நின்று ஏர் இழுக்கிறேன் எனச்சொன்னவரை காட்டுக்காரர் வேண்டாம் எனத் தடுத்தும் கேட்கவில்லை.

“விடுங்கய்யா,இது வரைக்கும் நான் செய்யாத ஒரே வேலை இதுதான், இதுக்கும் ஏங் ஒடம்பு ஏத்ததுதானான்னு தெரிஞ்சிக்கிறதுக்காவது உழுகணுமா இல்லையா” எனச்சொல்லி விட்டு, காட்டுக்காரர் வருத்தப்பட்டுக் கொண்டே ஏர்பிடிக்க கிருஷ்ணன்ணனும் விதைப்பை முடித்துக்கொடுத்துவிட்டு காட்டுக் காரரைப் பார்த்து சிரித்த சிரிப்பிற்கு காட்டுக்காரர் ரொம்பவும் சிரமப்பட்டுப் போனார்.

“ஏம்பா நீயி வாட்டுக்கு வந்து ஏன் காட்டுல இப்பிடி செஞ்சிட்டுப்போற, ஊர்க் காரங்க நான் என்னமோ ஒன்னைய கொடுமைப்படுத்தி வேலை வாங்குன மாதிரியில்ல பேசுவாங்க. இந்தப் பாவத்தை நான் எங்க கொண்டு போயி தொலைக்கிறது”“? என ஏகத்துக்கு வருத்தபட்டிருக்கிறார் காட்டுக்காரர்.

”அட அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே,விடுங்க இப்ப என்ன நடக்காததா நடந்து போச்சி,இதெல்லாம் ஒரு அனுபவந்தான வாழ்க்கையில, என அவரிடம் சொல்லிவிட்டு வந்த நாளன்று போலவே அன்றும் வந்திருந்தார்,

இவனும் அது போலவே உழைப்பின் கழைப்பை உடல் முழுவதுமாய் அப்பிக் கொண்டு போயிருந்த சமயத்தில் வந்த அவருடன் பேசிக் கொண்டே கிணற் றில்இறங்கப்போன
சமயம் ஆள் அரவம் ஏதோ கேட்டது போல் இருந்தது.

எப்போதுமே சப்தம் போட்டு பேசும் இவன் அன்று சபதமில்லாமல் பேசினான், கிருஷ்ணன்ணன்போலவே,அவர்அதிகம் சப்தம் போட்டு பேச மாட்டார்,

ஆனால் காரியம் அல்லது வேலை என்று இறங்கிவிட்டால் ஒரு புலிப் பாய்ச்சல் அவரது உடம்பில் கூடுகட்டிக்கொண்டு விடும். கட்டிய கூட்டை கலைய விடாமல் இழுத்துப் பாதுகாத்துக் கொண்டு திரிபவர் வேலை முடிகிற வரை, அந்த விரைவும்,அந்த கூடு கட்டலும்,வேலை சுத்தமுமே அவரை இது நாள் வரை அடையாளப்படுத்திக்கொண்டு வந்திருக்கிறது ஊருக்குள்ளாக அம்மாதிரியான அடையாளப்படுத்துதலை அவர் ஒரு போதும் பெருமை யாகநினைத்ததில்லை,அதேநேரம் சிறுமை காட்டியும் புறந்தள்ளியதில்லை.

கேட்டால் சொல்வார்,”தம்பி இதெல்லாம் நம்ம அடிப்படை கொணம் இதைப் போயி பெருமையின்னி நெனைச்சி பீத்திக்கிட்டு திரிஞ்சம்ண்ணு வையி, சரிப்பட்டு வராது, என்ன சொல்றீங்க” என்பார்,

இது போலான பேச்சுக்கள் போலவே அன்றும் ஏதோ ஒன்றை பேசிக் கொண்டே கிணற்றில் இறங்க காலடி எடுத்து வைத்த நேரம் பெருமாள் ஆச்சி மகள் கிணற்றினுள் குளித்துக் கொண்டிருந்தாள்.

வயதுப்பெண் வாளிப்பான உடம்புக்காரி, ஊர்க்கார இளவட்டங்களுக்கு அவள் மேல் ஒரு கண்,

கண் எப்பொழுதும் உடலின் மீது மட்டுமே இருக்க அவளது பருவத்து ஆசைகள் காற்றில் பறக்கும் துணி போல ஆடிக்கொண்டே இருந்தது,

அவள் எப்பொழுதுமே இவனை மாமா என்றுதான் அழைப்பாள், அவள் ஒன்றும் சொந்தக்காரி இல்லை இவனுக்கு,இன்றளவும் கிராமங்களில் முடியிடிட்டு வைத்திருக்கும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக வேற்று சாதிகளுக்குள் முறை யிட்டு அழைத்துக்கொள்ளும் வரப்பிரசாதத்தை இவனது கிராமமும் வைத்திருந்தது.’

அந்த வைத்திருத்தலின் அடையாளத்தில் கருவாகி உருவான அவள் இவனை மாமா முறை வைத்து அழைத்தாள்.

”பெருமாள்ஆச்சியாஇல்லாதவீடுபாவம்,,,”எனச்சொல்லி அவளை அந்த கிராமத்தினர் அடையாளப்படுத்தி வைத்திருந்த நாட்களில் அவளது வேலை ஊருக்குள் உள்ள சம்சாரி வீடுகளில் போய் வரகு அரிசி திரிப்பதுதான்,

காடுகளில் மனித உழைப்பின் அடையாளம் மண்ணின் மணத்தோடு விளைந்து வீட்டிற்கு வந்த வரகு அரிசி பெருமாள் ஆச்சியின் உரலில் திரிபடும் போது அந்த வீட்டிற்குள் ஒருவித புது மணம் பரப்பும்,இவளது பேச்சையும் சேர்த்து அந்த அடையாளப்படுத்துதல்கள் பெருமாள் ஆச்சிக்கு மட்டுமே சொந்த மாய் இருந்ததில்லை எப்பொழுதும்,அவளோடு கூடச்சேர்ந்து வரகு அரிசி திரிக்க வருகிற நான்கு பேருக்கும் சேரும்.

அவளதுவேலைகளிலும்கஷ்டங்களிலும் கனவுகளிலுமாய் பங்கு கொள்கிற உரிமையும் அந்த நாலு பேருக்கும் உண்டு,

ஏனெனில்அந்தநான்கு பேரும் கிட்டத்தட்ட பெருமாள்ஆச்சியைப் போலவே, அதனால்தான் பெருமாள் ஆச்சி வரகு திரிக்கும் வேலையை கையில் எடுத்த போது அவர்களைச்சேர்த்துக் கொண்டாள்.

அப்படியாய்பெருமாள்ஆச்சிஅவர்களைசேர்த்துக்கொண்டநாளிலிருந்து இன்று வரை பெருமாள் ஆச்சியின் எதிர் வீட்டிலிருக்கிற இவன் சொல் வதை தட்ட மாட்டாள் பெருமாள் ஆச்சியின் மகள் மாமா என்கிற மரியாதை மாறாமல் அப்படிப்பட்டவள் இன்று எவ்வளவு சொல்லியும் கிணற்றிலிருந்து ஏறி வர மறுத்து விட்டாள்,

ஆண்கள் குளிக்க வருகிற நேரமிது.ஏறி வா சீக்கிரம் வீட்டில் போய் மீதம் குளியலை வைத்துக் கொள்.என்ற போதும் கேட்கமாட்டேன் என பிடிவாதமாய் கிணற்றுக்குள்ளேயே குளித்துக்கொண்டு இருந்தாள்.

வேறுவழியில்லாமல்அவள் குளித்துமுடித்துகிணற்றைவிட்டுமேலேறி வரும் வரை ஓரமாய் இருந்து விட்டு இருட்டிப்போக கண்மாயில் போய் குளித்து விட்டு வந்தார்கள்,

அன்று குளித்த சோப் இல்லா குளியலின்நினைவுகள் இன்று வரை இவனை பின் தொடர்வதாய் இருக்கிறதாகவே அதனால் இப்பொழுது எந்த சோப் வேண்டும் எனக்கேட்கும் கடைக்காரரிடம் எதுவும் சொல்லத்தெரியவில்லை.

”என்ன சோப் வேணும் சார் சொல்லுங்க”, கடைக்காரர்,

”கடைக்குள்ள இருக்குற சோப்புக வெலையெல்லாம் சொல்லுங்க,எனக்கு எது பிடிச்சிருக்கோ இல்ல எது நல்லாயிருக்குன்னு தோணுதோ அத எடுத்துக்கிறேன்”, இவன்.

”எல்லாத்தையும் கையக் காண்பிச்சி சொல்றீங்க சரி தான். குளிக்கிற சோப்புன்னா அஞ்சி வகை இருக்கு அதுல எது வேணும் சொல்லுங்க”

பச்சைக்கலரில்மஞ்சள் எழுத்துக்கள் பொரித்திருந்த கவர் சுற்றியிருந்த சோப்,,, சிவப்புக்கலர் கவர் போட்டு அதன் மேல் வெள்ளை எழுத்துக்கள் பொரித்திருந்த சோப்,,,ரோஸ் கலர் கவர் போட்டு அதன் மீது அதை ஒட்டிய கலரில் எழுத்துக் கள் இருந்த சோப், எனவும் இன்னும் இன்னுமான நிறங்களில் அவர் எடுத்துக் காண்பித்த சோப்புகளில் பச்சைக்கலரில் மஞ்சள் எழுத்துக்கள் பொரித்திருந்த கவர் போர்த்தியிருந்த சோப் இவனுக்கு மிகவும் பிடித்துப் போனதாக அதையேதான் வாங்கினான்.

இந்த சோப் என்ன வெலை,,,,?

ஐந்து ரூபாய் ஐம்பது பைசா கடைக்காரர்.

பையிலிருந்துபிதுக்கி எடுத்த காசில் ஒரு ஐந்து ரூபாய் நோட்டையும் ஒரு ஐம்பதுபைசாவையும்கொடுத்துவிட்டுகாசைஎடுத்தபையிலேயே சோப்பைப் போட்டுக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *