இப்படிஇலக்கிலாமல்சைக்கிளில்சுற்றித்திரிவதும்,நினைத்தஇடத்தில்நின்றுநினைத்த கடையில் டீசாப்பிடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது.
காலை 6.00 டூ 7.15 முகூர்த்தம்.குளிர் நேரம் எழுந்து கிளம்புவது கொஞ்சமாய் சிரமப் படுத்தி னாலும் கூட கிளம்பி விடுகிறான்.6.15ற்கெல்லாம் மண்டபம் போய் விட்டான். இவன்வீடு இருக்கிறஏரியாவிலிருந்துமண்டபம்இரண்டுகிலோமீட்டர் தூரங்களாவது இருக்கும். உழவர் சந்தைக்குஎதிர்த்தாற்ப்போல் என பத்திரிக்கையில்போட்டிருந்தார்கள்.
நேற்றுஇரவே டவுனுள்ளிருந்த போது அப்படியே எட்டி போய்விட்டு வந்திருக்கலாம் தான். மண்டபம் இருந்த இடத்தையும் கூடியிருக்கும் சொந்தங்களையும் அப்படி ஒரு எட்டுப் போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்கிற நினைப்பை தவிர வேறொன்றுமில்லை.
நேற்றுஇரவுமுனிசிபல் ஆபீஸ் அருகில் இருக்கிற டீக்கடையில் குடித்த லெமன் டீயின் ருசியும், தோழரின் பேச்சுமாய் விரிந்த தருணங்கள் மிகமுக்கியமாய் பூத்துத் தெரிய பூத்த மரங்களும், விரிந்த மலர்களும்,கனிந்த் கனிகளும் பறந்த பறவைகளும், அவை இசைத்த கானமும், இறகு ரசிப்பறந்த பட்டாம் பூச்சிகளும் ஊர்ந்து திரிந்த புளுக்களும் புத்துணர்ச்சி கொள்ளச் செய் வதாக/
இன்னுமொரு லெமன் டீக்கு சொல்லிவிட்டு தொடர்கிறான் பேச்சை தோழருடன்/ தோழர் கேட்கிறார்,இது என்ன செயின் சுமோக்கர் போல செயின் டீயரா என/ அப்படியில்லை தோழர் அதன் அர்த்தம். டீக்குடிப்பதற்கு முன்பாக ஒரு டீயும்,டீக்குடிக்கும் போது ஒரு டீயும் டீக் குடித்த பின்பாய் ஒரு டீயுமாய் குடிப்பது எனது சமீபத்தைய வழக்கங்களில் ஒன்றாகி வருகிறது,நிறை அல்சரை எனது உடல் சுமந்து கொண்டி ருந்த வேளையிலும் கூட என்கி றான்இவன்.
கடையினுள்ளிருந்தபெஞ்சில்தான்அமர்ந்திருந்தான்தோழருடன்.அவரும்அப்பிராணியாய் அவனுடன்.
வெளிர் வர்ணத்தில் ரோஸ்க்கலர் டைல்ஸ் பதித்த கடையினுள்ளாய் நின்றிருந்த குளிர் குளிர் சாதனப்பெட்டியினுள் ஒன்றின் அருகில் ஒன்றாகவும்,ஒன்றின் மீது ஒன்றாகவுமாய் அடுக்கப் பட்டுத்தெரிந்த கலர் பாட்டில்கள்.
இவன் போகிற சமயங்களில் கடைக்காரர் தவறாமல் இவனைக்கேட்பதுண்டு. என்ன சார் வரும்போதெல்லாம் வெறும் டீமட்டும் தானா?ஒரு நாளைக்காவது கலர் சாப்பிடுங்கஎன/ இவனுக்கானால் கலரும் கலர் பாட்டில் மீது உறைந்து கிடக்கிற சில்லிங்னெ ஸ்சிம் ஆகவே ஆகாது எப்போதும்.இம்மாதிரியான மித ரக பாங்களில் எளனி மட்டும் சாப்பிடுவான் விரும்பி/ஆனால் அதையெல்லாம் இது மாதிரி குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விற்க மாட்டார்கள் எப்போதும்.
குளிர் சாதனப்பெட்டியின் மூடப் படாமல் லேசாய் திறந்திருந்த கண்ணாடிக்கதவின் வழியாக பெட்டியினுள்ளாயிருந்துகுளிர்மெல்லியபுகையாய்வெளியேறித்தெரிந்ததாய்/ கடையின் இடது ஓரம் இருந்த சிலாப்பின் மேல்த்தெரிந்த டீவியில் பழைய பாடல்கள் உயிர்பெற்று ஒலித்துக்கொண்டிருந்ததுநாயகனையும்,நாயகியையும்ஓடவிட்டவாறும் நெருங்கிய ணைக்கச் செய்தவாறுமாய்/
கடையின் ஓனர் சொல்கிறார் என்ன இருந்தாலும் பழைய பாட்டு கேக்குற சொகமே தனிதான் சார். பாருங்க டீவிய/ஒன்னொரு டீ வேணுமுன்னாலும் தர்ரேன்,உக்காந்து குடிச்சிட்டு பாட்டக் கேட்டுட்டுப்போங்க சார் என்றார்.
நீண்டு செவ்வக வடிவில் இருந்த கருப்புக்கலர் டேப்ரிக்கார்டரில் இளையராஜாவின் பாடல்களைவிரும்பிக்கேட்டுகொண்டிருந்தகாலங்களில்பழையபாடல்களைக்கேட்கத் தோணி யதில்லைஇவனுக்கு,அதுகேட்கப்பிடிக்காததனமாஅல்லதுஅதன்சிறப்பை உணரவில்லையா இவன்எனத் தெரியவில்லை.
இவன் குடியிருந்த பாண்டியன் நகரிலிருந்து ஆரம்பித்தால் மதுரை ரோடுவரை இருக்கிற டீக்கடைகளில்மென்மையாயும் ஓங்காரமாயும்ஒலிக்கிறபாடல்கள்இவனை ஈர்த்த துண்டுதான் எப்போதுமே/சைக்கிளின் மிதியோடு சேர்ந்து சுழல்கிற சக்கரங்களாய் மனது பாடல்களைச் சுற்றி/இவன் வழக்கமாய் நின்று டீக்குடிக்கிற கடைகளின் மாஸ்டர்களும், ஓனர்களும் தான் சொல்வார்கள்.”பாட்டுக்கேக்குறதுக்காகவந்துடீக்குடிகிற ஆளு நீங்களாத்தான் இருப்பீங்க போல” என/
அது கேலியா அல்லது வேறெதுவும் அர்த்தம் பொதிந்த சொல்லாக இருக்குமோ எனக் கூடத் தெரியாமலேயே சிரித்து விட்டும்,டீ சாப்ப்பிட்டு விட்டும் வெகு முக்கிய மாய் பாடல்களை கேட்டு விட்டுமாய் வந்திருக்கிறான். சிவப்பும்,பச்சையுமாய் டேப் ரிக்கார்டரைச்சுற்றி எரிகிற பொடிப்பொடி விளக்குகள் இசையின் அதிர்விற்கேற்ப அமந்துஅமந்துஎரிவதாக/அது இசை கேட்பரின் மனத்துள்ளல் போலவும், அவர்க ளின் ரசிப்பிற்கான தலையசைவு போலவுமாய் இருக்கும்.
மசாலாப் பால், ஹார்லிக்ஸ்,போர்ன்விடா என்கிற மற்ற மற்ற வகைகளிலான பானங்கள் விற்றடீக்கடைகளிலிருந்துஅதுஅல்லாதகடைவரைஅப்படிஒருஏற்பாடு இருந்தது. 90 களில் டேப்ரிக்கார்டர் என்கிற விஞ்ஞான சாதனம் கோலாச்சி கொண்டிருந்த நேரங்களில் அதன் விரைவிற்கும் அதிலிருந்து வெளிப்பட்ட இசைக்கும் தாளம் போடாதகைகளும்ஆட்டப்படாத தலைகளும் மிகவும் குறைவாகவே/அப்படி போடப் பட்ட தாளமும்,ஆட்டப்பட்ட தலையசை வும் இவனில் நீண்ட நாள் உறை கொண்டு காணப்பட்டதாகவே/
டீக்கடைக்காரருடன் பேசிக்கொண்டிருக்கையில்பையனொருவன்கடைக்குள் வந்து அனாவ சியப் புயலானான்.அப்பா என ஆரம்பித்துநிறையப்பேசினான்,தொண தொணத்தான்.அவன் பேசிக்கொண்டிருக்கையிலேயே அவன் கொண்டுவந்திருந்த வாளியி ல் டீயை ஊற்றியும், நான்கு வடைகளைக்கட்டியுமாய் எடுத்து மடித்து வைத்துக் காத்திருந்தார்.” டேய் இந்தா கெள ம்புமொதல்ல,கடையிலயேவாரத்தக்கெடுக்காத என்ற வரை ஏறிட்டவனாய் குளிர் சாதனப் பெட்டியிலிருந்து குளிர் பானம் ஒன்றை எடுத்து க் குடித்து விட்டு நகன்றான்.
இவன் ஏங் பையன் சார்,மூத்தது பொண்ணு, ரெண்டாவதா இவன்.பொண்ணு கல்யாண வயசுலநிக்குறா,மாப்புளபாத்துக்கிட்ருக்கோம்அமையமாட்டேங்கிது.ஒண்ணுஅவ படிச்ச படிப் பு குறுக்க நிக்குது.இல்ல மாப்புள வீட்டுக்காரங்க கேக்குற நகை ,பணம் குறுக்க நிக்குது. ஆசைப்பட்டா,,,படிக்க வச்சிட்டோம்.கொஞ்சம் கூடுதலாவே.எம்.காம் வரைக்கும் படிச்சி ட்டா,இப்பவும் எங்கயாவது வேலைக்குப்போகணும்ன்னுதான் விரும்புறாளே ஒழிய கல்யாணத்துல அவளுக்கு இஷ்டம் இல்ல. அதுக்காக பெத்தவுங்க நாங்க அப்பிடியேவும் விட்டுற முடியாதுல்ல சார்.ஏங் புள்ளயப்பத்தி நானே சொல்லக் கூடாது,கெட்டிக்காரப்புள்ள சார்.காலேஜ்ல மொத வருஷம் படிக்கும் போது ஒரு ரேடியோவ முழுசா பிரிச்சிப்போட்டு வேல பாத்து திரும்பவுமா பாட வச்சிருவா,ரெண்டு சாமான வாங்கீட்டு வரச்சொல்லி சின்னதா ஒரு டீவிய செஞ்சிருவா,அவ செஞ்ச டீவிதான்இன்னும் வீட்ல ஓடிக்கிட்டிருக்கு.இப்பிடியாப்பட்ட புள்ள வாழப்போற யெட த்துல எப்பிடிஆகப்போகுதுன்னு தெரியல.சரி எப்பிடியின்னாலும் நாத்தப்புடுங்கி வேறஒருயெடத்துலநட்டுத்தான் ஆகணும்.என்னஇன்னைக்குவரைக்கும் ஏங் மனசுல ஒரு பெரிய கொறயா நிக்கிறது இவ பையனா பொறந்திருந்தா எங்பாரம் கொஞ்சம் கொறஞ்சிருக்கும்.
இப்ப வந்து போனான் பாருங்க,காலேஜில படிக்கிறான்.தலைக்கு எண்ணெய் வைக் காம, தலசீவாம,,,,,சமயத்துலகுளிக்காமக்கூட காலேஜ் போயிருவான்.அப்பிடியே படுக் கையில இருந்து எந்திரிக்கிறவன் காலேஜ்ல போயிதான் கண்ணு முழிக்கிறான். இன்னும் நாலு பேரு கூட பேசத்தெரியல,பழகத்தெரியல,இங்கயிருந்து சைக்கிள எடுத்துட்டு ஓடுறான் சார்,ரெண்டு கிலோ மீட்டர் தள்ளியிருக்குற ப்ரெண்டு வீட்டுக்கு/ஆனா பக்கத்து வீட்டுபையன்கூட ஒரு வார்த்த பேசி பழக மாட்டேங்கு றான்.இவ்வளவு வயசாச்சே ஒழிய இன்னும் ஒரு நிதானம் வரல/இவன் வயசுல எல்லாம் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க,இன்னும் சொல்லப் போனா ஒரு புள்ளைக்கு தகப்பானாயிட்டேன்.இது கழுதஇன்னும்கூறுகெட்டுப்போயிவீடு என்ன, வாசல் என்ன,பொழப்பு என்ன, சம்பாத்தியம் என்னன்னு ஒரு கூறுவாறு இல்லாம அலையுது சார்.
இப்பயே பெரிய வண்டி வேணுங்குறான்.நம்ம பொழப்பெ இங்க டீக்கடைய வச்சி கிட்டு இழுத்துக்கோ,பறிச்சிக்கோன்னு கெடக்கையில,,,,சரி ஆசப்படுறான் புள்ள வாங்கித்தான் குடுப்போமுன்னு வண்டி வெல கேட்டா அது எழுபதாயிரத்துக்கு பக்க த்துல சொல்றா ங்க.அப்பிடியேவாங்கிப்போட்டாலும் அதுக்குலைசென்ஸீ, பெட்ரோல் ச்செலவுன்னு ஆயிரம் இருக்கு.ஆனா இந்த மாதிரிவிஷயத்துல மூத்த பொண்ணு க்ரெக்டா இருக்கும் சார்.கட்டியிரு க்குற சேல பழசாகிப்போனாலும் பரவாயில்ல. விடுப்பா அடுத்த தடவ பாத்துக்கில்லாம் பாண்ணுவா.இப்பதைக்கி அவதான் ஏங்பை யனுக்கு அம்மா மாதிரி எல்லா பணிவிடையும் செய்யிறா,ஆனாலும் நன்றி கெடை யாது அவங்கிட்ட. சமயத்துல அவகூடவே மல்லுக்கு நிப்பான்.நீங்கள்லாம் மாசச் சம்பளம் வாங்குற ஆள்க.ஒங்க வீட்லயும் பொண்டு புள்ளைக இருக்கும் என்றவாறாய் நிறுத்திய டீக்கடைகாரரை ஏறிட்டவன் வீட்டுக்கு வீடு வாசப்படி. என்ன படியோட நீள,அகலம் கொஞ்சம் கூடுதல் குறைச்சலா,,,,,,,,,,,,,,,/என்கிறான்.
கட்டம்போட்டகைலியும்,கோடு போட்ட அரைக்கை சட்டையுமாய் இருந்த டீக்கடை க்காரரின்வலது கால் முழங்காலுக்குக் கீழே வளைந்திருந்தது. பாதத்தில் ஒரு ஜான் உயரத் திற்குக் கீழே செருப்பு அணிந்திருந்தார்.காலில் சுற்றப்பட்ட்டிருந்த பிஸ்கட் க்கலர் பேண்டேஜ் துணியைக் காட்டிச்சொன்னார்,அது ஆச்சுசார்,பத்து வருசம். சைக் கிள்ல போயிக்கிட்டிருக்கும் போது எதுதாப்புலவந்தலாரி ஒண்ணு இடிச்சிருச்சி. அன்னைக்கி இடிச்சது இன்னைக்கி வரைக்கும் கால் வளஞ்சி நிக்கிது சார் என இன்னும் இன்னுமாய் நிறைய பேசியவரைக் கடந்து தோழரிடமும் விடை பெற்று பூத்திருந்த மரங்களையும்,மலர்களையும்,கனிகளையும், பறந்து திரிந்த பட்டாம் பூச்சி களையும் தாண்டிச்சென்ற போது இனியும்மண்டபத்திற்கு ச்செல்வதுஅவசியம்தானா என்கிற கேள்வி மிகைப்பட்டு எழ அங்கு போகாமல் வீட்டிற்கு வந்து விட்டிருந்த நிக ழ்வு இப்பொழுது ஞாபகத்திற்கு வர மண்டபம் போய் இறங்குகிறான்.
.மண்டபத்தின்உள்ளே போய் சைக்கிளை வைக்கலாமாஎன்ன எனத் தெரியவில்லை. இப்படி ஓரமாய் மண்டபத்தின் வாசலில் நிறுத்தி விடலாம். நினைத்த வேளையில் கிளம்ப வேண் டும்என்றாலும்கூட சட்டென வந்து எடுத்துக்கொண்டு போய்விடலாம். மண்டத்தின் முன் வாசலுக்கு வழிவிட்டு இடது ஓரமும்வலது ஓரமுமாயும் ரோட்டில் குழி தோண்டி போட்டி ருந்தார்கள்,பாதாளச்சாக்கடை வேலை நடக்கிறது என போர்ட் வைத்திருந்தார்கள்.
போர்டின்ஓரமாயும்அருகிலேயும் ஒரு வயதான மூதாட்டிதட்டேந்தியவளாய்அமர்ந்திருந்தாள். அவளது அருகில்ஒருசிறுப்பெண்பிள்ளைஒன்றுஅழுக்குபாவாடை சட்டையுடன் மஞ்சள்க்கலர் காட்டி நின்றிருந்தது,
மொய்ப்பணம் வைத்திருந்த பையில் இருந்துதான் காசு எடுக்க வேண்டி இருந்தது. எடுத்த காசை கையில் வைத்து எண்ணிப் பார்க்கிறான், இரண்டு ரூபாய் நாணயம் ஒன்றும்,ஒரு ரூபாய் நாணயம் நான்குமாய் இருந்தது,அது தவிர்த்து பத்து ரூபாய்த் தாள் இன்றும் ஐம்பது ரூபாய்தாள் இரண்டும்.நூறு ரூபாய்த்தாள் ஒன்றும்.101 ரூபாய்தானே மொய்க்கு/
எவ்வளவு போடலாம் முதியவள் நீட்டிய தட்டில் இப்போது என உள்ளோடிய எண்ணம் இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களைப்போட வைத்தது. நகர்கிறான் மண்டபத்தின் வாயிலை நோக்கி. எதிரே சொந்தக்காரர் ஒருவர் வருகிறார்,அவரது கையில் பணத்தைக் கொடுத்து மொய் யெழுதச்சொல்லிவிட்டு கிளம்புகிறான்.
இலக்கில்லாமல் இப்பிடியாய் சைக்கிளில் சுற்றித்திரிவதும், நன்றா கத்தான் இருக்கிறது.