கல்வெட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 4,936 
 
 

என்னொட முதல் மாச சம்பளம் வந்தவுன் அம்மாக்கிட்ட கொடுத்தேன் அந்த பணத்த அம்மா வாங்கி அதுல இருந்து 1000ரூவாய் எடுத்து இது உன்னோட முதல் சம்பாதியம் நல்ல வழியில தான் முதல்ல செலவு பண்ணணும் அதனால நீ சாமிக்கு பூஜை பண்ணிவிடலாம் என்றார்கள் அதற்கு நானும் சரி என்று கோவிலுக்கு புறப்பட்டோம்

கோவிலுக்கு அருகில் இருக்கும் கடை வீதியில் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டுயிருந்தோம் அப்போது அங்கு இருந்த குப்பைத்தொட்டி யின் பக்கத்தில் ஒரு குட்டி பையன் எதையோ தேடிக்கிட்டு இருந்தான் நானும் கொஞ்சம் நேரம் அவனையே பார்த்தேன் எதையோ தேடிக்கிட்டு இருந்தான் என்ன அம்மாவிடம் சொன்னேன் அங்க பாரும்மா அந்த பையன் எதையோ குப்பைத்தொட்டிக்கிட்ட எதையோ தேடுறானு அதற்கு அம்மா அந்த பைய யாருனே தெரியலையே புதுமுகமால இருக்கு சரி வா சாமிய பாத்துட்டு அப்புறம் பேசலாம் என்றார்கள்.

நானும் பூஜை பொருட்களை வாங்கிக்கொண்டு கோவிலுக்குள்ளே சென்றுறோம் கோவிலில் சாமிக்கு பூஜை செய்ய அர்ச்சனை டிக்கேட் 50ரூவாய் special தரிசனம் அர்ச்சனை டிக்கேட் 100ரூவாய் என்று எழுதிவைத்திருந்தது அம்மாவை காக்கவைக்கக்கூடாது என்பதற்காக நான் 100ரூவாய் அர்ச்சனை டிக்கேட் வாங்கிக்கொண்டு சாமியை பார்த்தோம் அங்கு பூஜாரின் தாம்பலத்தில் 100ரூவாய் வைக்க சொன்னாள் அம்மா சரி என்று வைத்துவிட்டேன்
பூஜைகள் முடிந்து வெளி வந்தோம்.!

அப்போதும் அந்த பையன் அங்கையே தான் நின்றுக்கொண்டியிருந்தான் அம்மா நீங்க இங்கையே கொஞ்ச நேரம் இருங்க நான் இதோ வரனு சொல்லிட்டு அந்த பையன் கிட்ட போனோன்

ஏய் தம்பி இங்க என்ன தேடிட்டு இருக்க நானும் உன்ன பாத்துனு தான் இருக்கேன் என்றேன் அதற்கு அவன் எதுவுமே சொல்லவில்லை மறுபடியும் அதட்டிக் கேட்டேன் என்னடா தேடுற நீ யாரு…? யாரு வீட்டு பையன் உன் பேர் என்னடானு கேட்டேன்

அதுக்கப்புறமா தான் அந்த பையன் நான் என் நாய் குட்டிய தேடுறேன் நெத்து இங்கதான் விட்டுட்டு போய்டேன் இப்போ வந்து பாத்தா காணோம் அதான் தேடுறேனு சொன்னான்!

அதற்கு நான் சொன்னேன் அடேய் அந்த நாய் குட்டிய யாராச்சும் எடுத்துனு போய்யிட்டு இருப்பாங்க இல்ல அது எங்கையாச்சும் ஒடி போய்யிட்டு இருக்கும் நீ அத தேடுறத நிறுத்திட்டு உங்க வீட்டுக்கு போடானு சொன்னேன்

அதற்கு அந்த பையன் கேட்டான் அந்த நாய்குட்டிய தூக்கிட்டு போனாங்கள அதுக்கு சாப்பாடு போடுவாங்களா இல்ல சாப்பிடாமா சுத்திட்டே இருக்குமான்னா என்றான்
நானும் சிரிச்சிட்டே அதுக்கு சாப்பாடு போடுவாங்கட அது இப்போ நல்ல சாப்பிட்டு தூங்கும் டா நீ உங்க வீட்டுக்கு போ உன்னை உங்க அம்மா தேடுவாங்கள னு கேட்டேன்

அதற்கு அந்த பையன் அம்மா தேடாது அது வலைக்கு போய்ச்சின்னா என்றான் மறுபடியும் நான் கேட்டேன் சரிடா நீ தானே அந்த நாய்குட்டி வேணாணு விட்டு போன அப்புறம் ஏன் அத தேடுறானு கேட்டேன்

அந்த பையன் சொன்னான் நாங்க இந்த ஏரிகரையொறமா இருக்கோம் எங்க வீட்ல சாப்பாடு இல்ல இந்த நாய்குட்டில இருந்தா அதுக்கும் சாப்பாடு கிடைக்காது நாமக்கே சோறு இல்லடா கண்ணு பாவம் இந்த நாய்குட்டியும் நம்மகூட சேந்து சாப்பாடு இல்லாம இருக்கும்

நாம பட்டிணியா இருந்துடுவோம் ஆனா இந்த நாய்குட்டி இருக்காது நாம இந்த நாய்குட்டிய வச்சினு இருக்கக்கூடாது நீ இத தூக்கிட்டு போய் அந்த குப்பைத்தொட்டி கிட்ட விட்று அதுக்கு எல்லோரும் சாப்பாடு போடுவாங்கனு பாத்திறமா பாத்துக்கு வாங்கனு எங்க அம்மா சொல்லுச்சி அதான் இங்க வந்து விட்டேன் ஆனா இப்போ அது இங்க காணும் அதுக்கு சாப்பாடு போடுவாங்கள அதும் சாப்பிடும்லன்னா என்றான்!

நானும் அதுக்கு சாப்பாடு போடுவாங்கடா நீ கவலப்படாத நீ உங்க வீட்டுக்கு போ…..

அந்த நாய்குட்டி நல்லதான் இருக்கும்னு சொல்லிட்டே இருக்கும் போது அந்த குட்டி பையன் மறுபடியும் அண்ணா எனக்கு பசிக்குது சாப்பாடு வாங்கி தரியானு கேட்டான் நானும் சரினு சாப்பாடு வாங்கி கொடுத்தேன்

அப்புறம் அந்தபையன் சொன்னான் நாளைக்கு நானும் என் அம்மாவும் இந்த குப்பைத்தொட்டி கிட்ட வந்துட்டா எங்களுக்கும் எல்லோரும் சாப்பாடு போடுவாங்களன்னா நா அம்மா சரியா சாப்பிடறதே இல்லன்னா இன்னைக்கு நீங்க வாங்கி கொடுத்தா மாதிரி நாளைக்கும் வேறயாராச்சும் சாப்பாடு வாங்கி தருவாங்களன்னா??? அம்மா சொன்னது சரிதான்னா நாய்குட்டிக்கும் இங்க சாப்பாடு கிடைக்குது இப்போ நானும் வந்தேன் எனக்கும் இப்போ சாப்பாடு கிடைக்குது!

நாளைக்கே இந்த குப்பைத்தொட்டிக்கு நா எங்க அம்மாவ கூட்வந்துடுறன்னா பாவம் அம்மா எங்க எங்கையோ போய் வேலை செய்து சாப்பாடு வாங்கினுவருது இதுக்கப்புறம் அம்மா எங்கையும் போகாதுல இங்கையே சாப்பாடு கிடைச்சிடும்ல என்றான்

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை சிறுமனம் அறியாமல் பேசுகிறது எனக்கு மிகுந்த வேதனையை அந்ததுவிட்டு சென்றது.

பின் அப்போதுதான் சிந்தித்தேன் நாம் கோவிலுக்கும் பூசாரிக்கும் செலவு செய்ததைவிட வேறும் 50ரூவாய் இந்த பையனுக்காக செலவு பண்ணியது சந்தோஷப்பட்டாலும் அவன் மனதில் குப்பைத்தொட்டியை நம்பிவருவோர்களுக்கு சாப்பாடு தந்துவிடும் நம்பிக்கையை ஏழை மக்களின் மனதில் கல்வெட்டாக பதிந்துபோய் உள்ளதை நினைத்தேன் அழுதேன்.

இனி என் வாழ்க்கையில் வீண் செலவுகளை தவிர்த்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் குடுப்பதிற்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துவிட்டு சென்றுவிட்டான் அச்சிறுவன்.

உணர்வு இல்லாத மனிதர்கள் மத்தியில் உணர்வுமிக்க உள்ளம் இருக்கிறது. நேர்மையாக வாழ பட்டிணியாக இருந்தாலும் வயிறுப்பசி கையெந்த வைத்துவிடுகிறது

இந்த நெகிழ்ச்சி என் மனதில் கல்வெட்டாக பதிந்துப்போனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *