கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 5,739 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

7-8 | 9-10

9

கற்கண்டும் தருமனும் மணவறையில் உட்கார்ந் திருக்கிறார்கள். இன்னும் தாலி கட்டவில்லை. ராம சாமியும் சீனிவாசனும் ஆக வேண்டிய காரியத்தைப் பொறுப்புடன் கவனிக்கிறார்கள்.

தாலிகட்டப் போகும் சமயம். துரைசாமி முதலி யார் மண வீட்டில் நுழைகிறார், மாப்பிள்ளையைப் பார்க்கிறார். அவர் முகம் வேறுபடுகிறது. மகாபெரிய மனிதராகிய சிங்காரமுதலியார்தான் மாப்பிள்ளையா? அப்படியானால் அவர் சுய காரியத்திற்காகப் ‘பல சூழ்ச்சி செய்தாரா என்பன போன்ற சந்தேகம் அவருக்குத் தோன்றுகின்றன. அதனால் துரைசாமி முதலியார்,

“எல்லாம் சூழ்ச்சியா இருக்குது என்று கூவுகிறார்.

அதேசமயம் சின்னான் ஓடிவந்து,

“தாத்தா”

என்கிறான். துரைசாமி முதலியார்,

“ஏன்?”

என்கிறார்.

சின் : சிங்கார மொதிலியாரு பொணத்தண்டே இருந்து சகல காரியத்தியும் பாக்கறாராம். உங்களை கலியாணத்தைக் கவனிக்கச் சொன்னாரு!

துரை : அப்ப அவுரில்லியே இவுரு? ….அப்டியா? ஓகோ அவுரு கூடச் சொன்னார் அவு ராட்டமே இருப்பாரு இவுரு இண்ணு. சரிதான்.

தரு: (பார்ப்பானை நோக்கி) ஓய் ஒண்ணும் சாங்கியம் வாணாம் எடும் தாலியெ.

மங்கிலிய தாரணம் தாராளமாக, மங்களமாக, முடிகிறது.

பெண் மாப்பிள்ளை பாலும் பழமும் உண்டபிறகு, தருமன் தனியே துரைசாமி முதலியாரைக் கும்பிடுகிறான் வாய் நிறைய வெற்றிலை குழைய.

துரை : சவுக்கியமாக இருக்கணும்!

தரு: (வெற்றிலை குதப்பிக்கொண்டே) மொதிலியாரு இங்கே இல்லிங்களா?

துரை : இல்லப்பா அவுரு. அங்கே இருக்காரு! அதை யேன் இந்த எடத்லே கேக்றே? இருக்கட்டும்!

மற்றொரு புறம் தனியாக.

ராமசாமி : தருமா மெச்சத் தக்க செயல்.

சீனு : ஏன் ஐயரை வைச்சே?

தரு : கூலிக்காரன்! சொன்னபடி கேப்பான் பாப்பான்!

சீனு : ஓகோ!

ராம : நாளைக்குப் பொணம் எழுந்து வருமே.

தரு : வரட்டும் அது. “எழுந்து வர்ர பொணந்தான்” பாருங்களேன் வேடிக்கையெ!

சீனு : தருமன் தனி ராசியப்பா! அனாமத்து மூளை, ஜமாயி தருமா, வர்ரோம். நாளைக்கிச் சந்திக்கலாம்.

தரு : ஓ! பேஷா !

10

நன்றாய் விடிந்தது. கலியாண உடையை நீக்கிச் சாதாரண உடையுடன் தருமன் வீரப்ப முதலியாரிடம் வருத்தமான முகத்துடன் சென்று பெரு மூச் சோடு உட்காருகிறான்.

வீர : கலியாணம் எப்பங்க? ராத்ரி என்னா நடந்துதுங்க?

தரு: எங்க அண்ணாரிடம் ஆளை அனுப்பி ஏதேதோ புளிகிப் புட்டானுவ.

வீர : அப்றம்?

தரு: நீ வெளியிலே போனா நானு தூக்குபோட்டுக்குவேன் இண்ணு ஒரே ஆட்டமா ஆடறாரு எங்கண்ணேன், என்னா பண்றது காலெ எடுத்து வெளியே வைக்க முடியுமா நானு?

வீர: அப்றம்?

தரு: நான் வெளியே வல்லேண்ணா அப்றம் என்னா?

வீர: முடிவு?

தரு: முடிவு முடிவுதான். என்னாட்டமே ஒருத் தன் இந்த ஊர்லே இருக்கான் ; அந்தப் பாவியெ புடிச்சி எல்லாக் காரியத்தை யும் சொப்பனிட்டு முடிச்சுபுட்டானுவ.

வீர:எப்டிண்ணேன்?

தரு: அந்த எழவே ஏன் கேக்றிங்க? வேறு ஒருத்தனுக்குக் கற்கண்டை கட்டிச் சோபனத்தையும் கையோட முடிச்சி புட்டானுவ. இதுக் கெல்லாம் தைரியம் இருக்கணும். அதுதான் ஒங்ககிட்டே பூஜ்யங்க. வீணா எனக்கு இதிலே அவ மானம் வந்துட்டுது. உயிரெ உட்டுக் கலா மிண்ணு கூட முடிவு கட்டி கவுத்தைக் கூட எடுத்து அறையிலே உத்தரத்துலே கூட மாட்டிபுட்டேன் இண்ணு கூட வச்சிக்கிங்க. அப்றம் பாத்தேன். சீ அதுவா பெரிசி? இருக் கிறவரைக் காப்பாத்தி நல்லபடியா செதம்பரத்துக்கு அனுப்பணுமேண்ணு மனசை தெடம் பண்ணிகிணு ஓடியாந்தேன்.

வீர : அப்டியா. உம். அந்தத் துரைசாமி மொதிலி……ஆஹா ! எப்டிச் சம்மதிச் சான்! அந்தக் குட்டி எப்டிச் சம் மதிச்சா! உம்!

தரு: நான் சொல்றமாதிரியே சொல்லியிருக் கான், என்னாட்டம் இருக்கிற அந்த ஆளு.

வீர : ஆருக்குக் கட்டிவைச்சிட்டான் ?

தரு: கட்டிகினவனும் அந்தப் பையன் தான் இண்ணு கேழ்விங்க. என்னா சொன்னான் அவன் ? நீங்க செத்துபட்டிங்க காலரா விலே இண்ணு நேரே சொல்லி யிருக் கானுங்க. என்னா அக்குறும்பு இண்றது?

வீர : ஓகோ ராத்ரி இங்கே பல்லக்கு வச்சிருந் துதே. விசாரிச்சி இருப்பானுவ. ஆள் சொல்லியிருப்பான் நான் செத்துப் போனதாக.

தரு: அதான் விஷயம். கலியாணத்துக்காக இத்தனை தூரம் செலவு செய்து வீணா போவலாமா இண்ணு சொல்லியிருப் பான். அப்டீண்ணு சொன்னா துரை சாமி முதலி, சிங்கார மொதிலியாரே கட்டிக்றேன் இண்றாரே இண்ணு சம் மதிச்சி புட்டாரு அவுளும் சம்மதிச்சி புட்டா. அதான் சங்கதி. இண்ணொரு சேதிங்க. ஒங்களெ மெரட்றது இண்ணு சுத்திகினு இருக்கானுவ. நீங்க இப் பவே பொறப்டு செதம்பரத்துக்குப்போயி அஞ்சாறு நாள் செண்ணு இங்கே வாங்க. என்னா சொல்றிங்க?

வீர : நான் செத்தாலும் சரிதான். நேரே அந்தத் தொரைசாமி மொதிலியெ கண்டு நாலு கேழ்வி நறுக்காகக் கேக்கணும். அந்தக் குட்டியையும் அப்டி! இப்பவே என் 300 ரூபாயெ அணா பைசாவோடு வைச்சுடவாணாமா அந்த நாயி?

மகா கோபத்தோடு வீரப்ப முதலியார் கற்கண்டு வீட்டுக்குப் போகிறார். தருமனோ வீரப்ப முதலியா ருக்கு முன்னே வேறு வழியாக அதே கற்கண்டு வீட்டுக்குப் போய்க் கலியாண உடையுடன் கற்கண் டின் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளுகிறான்.

தருமன் கற்கண்டை நோக்கி, நாளு டோவுது வீணா! நீ சிறுத்தொண்டப் பத்தன் கதை பாடக் கத்துக்கணும் சீக்கிரம்.

கற் : அதுக்கென்ன இப்பவே தோக்குங்க நல்லா! நானா வாணாமிண்றேன். ரொம்ப ஆசை யாச்சே பாட்டுண்ணா எனக்கு.

தரு: அப்டியா. அடே சின்னான் போடடா தம்பூரு. கொண்டாடா தாளத்தெ! (சித்தமாகிறது.) தருமன் தாளத்தோடு, மொதல்லே புள்ளார் தோத்திரம் பாடணும் எப்டி தெரியுமா?

“ஆதி சிவன் பெத் தெடுத்த
புள்ளையா ரப்பர்
புள்ளையா ரப்பா”

சொன்னாத் தானே வரும்.

கற்: ஆதி சிவன் பெத்தெடுத்த
புள்ளையா ரப்பா
புள்ளையா ரப்பா

தரு: ஆ எஞ் செங்கரும்பே! ரவை பேசுதே தொண்டையிலே! உம்!

சின்னா: கொட்டுது ரவை!

தரு: அம்பிகை பெத்தெடுத்த
புள்ளையா ரப்பா!

கற்: ” ”

தரு : சிவபெருமாம் பெத்தெடுத்த
புள்ளையா ரப்பா

கற்: ” ”

தரு: செவகாமி பெத்தெடுத்த
புள்ளையா ரப்பா
புள்ளையா ரப்பா!

கற்: ” ”

தரு: சிறுத் தொண்டப் பத்தன் கதை
நான் பாடவேணும்
நான் பாடவேணும்
தேவா. துணை, புரிய, நீ வாவா!

கற்: ” ”

தரு : நான் சொல்ற படியே சொல்றியே அப்றம் என்னா ? இண்ணைக்கே தோக்க வேண்டி யது தான் தொழிலை

கற்: ஓ கணக்கா. நானா வாணாம் இண்றேன்?

இதற்குள் அங்குவந்த வீரப்ப முதலியார் வீட் டின் முன்புறத்தில் உட்கார்ந்திருந்த துரைசாமி முதலியாரை நோக்கி வயிற்றெரிச்சலாக,

“தொரசாமி மொதிலியாரே சரிதானா நீர் செஞ்சது. எத்தினி நாளா தொரசாமி மொதிலியாரே காத்திருந்தே என்னே இந்தமாதிரி வயித்தை எரிய வைக்க நல்லா இருக்குது தொ ரசாமி மொதிலி யாரே நல்லா இருக்குது. எல்லாம் முடிஞ்சி போச்சா இன்னும் ஏதாவது சொச்சம் இருக்குதா ?

துரை : என்னை நீங்க ஒண்ணும் சொல்லக் கூடாது. நான் ஒரு குத்தமும் செய்யலே. அல்லாம் சிங்கார மொதிலியார் கட்டளைப் படி நடந்த காரியம்.

வீர : கலியாணம் முடிஞ்சி போச்சில்ல?

துரை : ஆமாங்க.

வீர : சரி உம் பொண்ணுக்கு நீர் முடிச்சீர். அதெப்பத்தி என்னாங்க மொதிலியாரே. சிங்கார மொதிலியாரா இப்டி சொன்னாரு?

துரை : ஆமாங்க, நீங்க செத்துபுட்டிங்க இண்ணு சொன்னாரு. நம்பவேண்டிதா போச்சி.

வீர : சிங்கார மொதிலியாரு அப்படியாப்பட்ட அயோக்யரல்லவே! அல்லாம் இதோ (மாப்பிள்ளையைக் காட்டி) இந்த அயோக் யன் செஞ்ச வேலை. அவராட்டமே இருந் தான் இவன், இருக்கானே! பாரேன்!

பிச்சை எடுக்றவனுக்கா வாக்கைப் பட்டே மோசக்காரி? அனுபவிப்பே. என் கண்ணாலே பாப்பேன் தகரக் குவளையெ கைலே தூக்கித் தெருத் தெருவா பிச்சை எடுக்கறத்தை .

கற்: ரொம்ப சந்தோஷமாச்சே தாத்தா? ஒங்களெ கட்டிகினு அழறதிலியும் பிச்செ எடுக்கறது தேவலியே வயிசு மாப்பிள்ளை கூட

தரு : ஐஸ் பால் சர்பத்தாட்டம் அப்டி சொல்லு!

வீர : அது போவுட்டும் என் பணத்தெ எடும்! 300 ரூபா! இதே நேரத்லே எடும்! என் னாங்காணும் முழிக்கிறீரே. மானம் இல்லே ?

துரை : – (அழுது கொண்டே) என்னா சொல்றே மருமகப் பிள்ளே?

தரு: உம்! பெரியவரே நானா மானங்கெட்ட வன்? என்னே தெரியாது ஒமக்கு. தெரிஞ்சிக்கிவிங்க சீக்கிரம். மானிங் காணும் நானு. ஒருத்தரு ஒண்ணு சொல்லி புட்டா இந்த உசிரே அப்டியே உட்டுடு வேங்காணும். பெரியவரே! ஓமக்குச் சேரவேண்டிய 300 ரூபாயெ அந்த சிங் கார முதலியார் கிட்டே வண்டி கட்டிகினு போயி பைசல் பண்ணிபுட்டு வந்து தான் பெரியவரே தாலியெ கைலே எடுத்தேன்! அதுவும் வட்டியோட! அந்த வட்டியும் தொடர் வட்டி பெரியவரே! அணா பைசாவோட பெரியவரே! அரைக் காசு சொச்சம் வந்துது, ஒரு காசா குடுத்தேன் அதுவும்-இன்னும் கேளும் பெரியவரே! நான் குடுத்த பணத்லே ஒரு ரூபா ராணி ரூபா செல்லாதிண்ணு எடுத்தரங் தாரு. அதையும் ஒத்துக்கினு வேறே ரூபா கொடுத்தனுப்னேன் பெரியவரே. சிங்கார மொதிலியாரு விசிறியே வைச்சுட்டுப் பூட்டாரு இப்பத்தான் பெரிவரே இதோ இருக்கான் சின்னான்-கொண்டு போயி குடுத்துட்டு வந்தான் பெரிவரே! பணத்தை கைலே வச்சிகினு விசிப் பலகையிலே தான் ஒக்காந்து இருக் காராம் பெரிவரே! அப்டி நெனைச்சி புடாதியும் நம்பளே; க்ஷத்ரிய புள்ளை சிங்கக்குட்டி பெரியவரே! என்னே திட்றிங்களா பெரியவரே? நல்லா இருக் குது. இப்பத்தான் ஓங்களைத்தான் தேடி வந்தானுவ அந்தப் போக்றிப் பசங்க. நான் தான் கூரை மழுக்கி அனுப்னேன். பெரியவரே! நேரே செதம்பரம் பொறப் டுங்க பெரியவரே. இது ஒரு மாதிரி ஊரு பெரியவரே! பெரியவரே!!

வீரப்பக் கிழவருக்கு வயிற்றெரிச்சல் ஒரு பக்கம் பயம் ஒரு பக்கம்! அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. சரேரென்று எழுந்தார் ஆத்திரமாக, –

“தொரசாமி மொதிலி சவுக்யமா இரும். கற்கண்டு, அனுபவிப்பே. என் வவுரு எரியற மாதிரி திகி திகிண்ணு எரிஞ்சி புடணும்”

என்று சொல்லி வெளியிற் போகிறார் சிங்கார முதலியார் வீடு நோக்கி. துரை சாமி முதலியாருக்குக் கொஞ்சம் வருத் தம் வீரப்ப முதலியார் துன்பத்தைக் கருதி.

கற்: ஏங்க இவுரு நேரே எங்கே போவாரு?

தரு: அந்தக் கொள்ளையெ நீ நேரே பாத்தா தான் தெரியும். இங்கியே வாயாலே சொன்னா என்ன பிரயோசனம்.

கற்: ரொம்ப வேடிக்கையா இருக்குமா?

தரு: ஆயிரந்தலை படைச்ச ஆதிசேஷன் கூட, சிரிக்க இன்னம் பத்து, பதினைஞ்சி தலை கடன் கேப்பான். வரியா இப்பவே? அங்கே நான் சொல்லிகிணு இருந்த சிறுத்தொண்டப் பத்தன் கதையை இன்னும் முடிக்லே. மூடிப்போமேபோயி கொஞ்சந்தான் பாக்கி இருக்குது.

கற்: சரி.

சின்னான், கற்கண்டு, தருமன் மூவரும் தம்பூரா, தாளம், படம், இவற்றுடன் போகிறார்கள்.

10

வீட்டுக் குறட்டில் காவல் காத்திருக்கும் குப்பனை நோக்கி, வீட்டு எஜமானாகிய சிங்கார முதலியார் கூறுகிறார் :

வந்தானா சிறுத்தொண்டப் பத்தன் கதை பாட? இல்லியே? சிறுத்தொண்டப் பத்தன் கதை பையனெ என்னா கஷ்டப் படுத்திட்டுது. டாக்றே இல்லவோ? ராத்ரி யெல்லாம், கொல்றாங்க வெட்றாங்க, இண்ணு அலறித் துடிச்சான் இல்லியோ? என்னா நிலையிலே கெடத்திவைச்சிருக்கு புள்ளெயெ பாத்தியாடா. தாயி மடியிலே அழுத்திப் புடுச்சிக்கிறாளாம். தகப்பனார் கத்தியாலே அறுத்தாராம். இதெல்லாம் கேட்டுகினு இருந்தா ரவை பசங்க கதி என்னாகும்? ஆயுட்டுதே..

கண்டிப்பாச் சொல்லி புட்டேன். அவன் இங்கே இப்ப வந்தாத் தொறத்திப்புடு. இல்லே என்னே கூப்டு தெரியுமா?

குப்பன் : நல்லதுங்க.

சிங்கார முதலியார் வீட்டுக்குள் நுழைகிறார். அப்போது தான் கற்கண்டும் தருமனும் சின்னானும் அங்கு வருகிறார்கள். அதே சமயத்தில் வேறு பக்க மிருந்து வீரப்ப முதலியார் காவற்காரக் குப்பனை அடைகிறார். வீரப்பக் கிழவருக்கும் காவற்காரக் குப்பனுக்கும் நடக்கப் போவதைத் தருமன் முதலிய மூவரும் சந்து முடக்கில் ஒளிந்து நின்று கவனிக்கிறார்கள். அவர்கள் இன்னும் படத்தை விரிக்க வில்லை.

வீரப்ப முதலியார் குப்பனை நோக்கி,

“என்னாங்க முடிவு இப்படியாப் போச்சிங்க.” என்கிறார்.

குப்பன் : என்னா அது?

தருமன், கற்கண்டு ஒருபுறமிருந்து சிரிக்கிறார்கள்.

வீர : கலியாணந்தாங்க.

குப்: எந்தக் கல்லாணம்?

வீர : இந்தக் கல்யாணந் தானுங்க.

குப்:ஏதையா கல்லாணம்?

வீர: என்னாங்க அப்டிக் கேக்றிங்களே?

குப் :பின்னே எப்டிக் கேக்க ?

வீர : நீங்க கவனிச்ச காரியம் இப்டி முடியலாங்களா?

குப் : நான் என்னாத்தைக் கவனிச்சேன்?

வீர : தொரைசாமி மொதிலியாரு தானுங்க சொல்றாரு அப்டி.

குப் : எந்தத் தொரைசாமி மொதிலியாரு?

வீர : என்னாங்க நூதனமாக் கேக்றிங்க ?

குப் : யாருகிட்டப் பேசிறிங்க.

வீர : ஒங்க கிட்டத்தானுங்க.

குப்: ஒண்ணுமே புரியலிங்களே, என்னெ ஆருண்ணு நெனைச்சிப் பேசிறிங்க?

வீர: சிங்கார மொதிலியாருதானுங்களே நீங்க?

குப் : நானில்லையா. அவுரு உள்ளே இருக்காரு வருவாரு காத்திருங்க.

வீர: நீங்க இல்லிங்களா? அப்டிங்களா ? சரிதானுங்க.

வீரப்ப முதலியார் ஒரு புறமாக நிற்கிறார்.

தரு: “மாயா உலக மல்லோ
இந்த உலகம்
இந்த உலகம்
மாயா உலகத்திலே வந்து விட்டார்”
விரிடா சின்னான் படத்தெ.

சின்னான் படத்தை விரிக்கிறான். கற்கண்டு அதே அடியைத் திருப்பிச் சொல்லிக்கொண்டே உட்காருகிறாள். தருமன் உட்காருகிறான். கடைசியில் சின்னான் தம்பூரா மீட்டிக்கொண்டே இருக்க இரு வரும் நெருங்கி உட்கார்ந்து கொண்டே டாட ஆரம் பிக்கிறார்கள். காவற்காரக் குப்பன் மயங்குகிறான்.

தருமனை நோக்கி, “பாடாதே” என்று கூறவும் குப்பனுக்குப் பயம்,

தரு: “சிவபெருமான் வந்தார்
ரிஷபத்திலே- அந்த
ரிஷபத்திலே
சிவ காமி அம்மனும் கூடவந்தா,”

கற்கண்டு திருப்பிச் சொல்லுகிறாள் அதையே.

தரு : ஒன் மனசைச் சோதிச்சண்டா
சிறுத்தொண்டப் பத்தா
சிறுத்தொண்டப் பத்தா
ஓடிவந்து சேருங்கடா கைலாஷம்

கற்: ” ”
தரு: சிறுத்தொண்டனையும் மத்த
எல்லாரையும் மத்த
எல்லாரையும்
சிவபெருமான் பாதம் சேர்த்துக்கொண்டார்.

கற் : இச்சமயம் டாக்டர் சுந்தரமூர்த்தி சிங்கார முதலியார் வீட்டுக்குள் நுழைகிறார்.

தரு: ஆகையினாலே மனுஷரே நீங்க மனுஷரே நீங்க – அடியாருக் கன்னமிட வேண்டுமல்லோ

கற் : ” ”

கேட் I : மெய்தானே

கேட் II : அன்னதானத்துக்கு ஈடா?

தரு: கதை முடியப் போவுது காசி போட்டாத் தானே?

அவரவர்கள் காசு போடுகிறார்கள்.

தரு : “காசுபணம் எல்லாம் கூட வராதல்லோ கடவுளெ பத்தி செய்வீர் மனுஷர்களே.

கற்: ” ”

கேட் I : செத்துபுட்டா காசு பணமா கூடவரப் போவுது?

கேட் II : உம் அது ஏது?

டாக்டரும் சிங்கார முதலியாரும் வெளியில் வருகிறார்கள். சிங்கார முதலியார் முகம் களையிழந்து இருக்கிறது.

சிங்: ஒண்ணும் பிள்ளைக்கு ஆபத்து இருக்காதுங்களே.

தரு : சாவது நிச்சயமே மனுஷர்களே
ஓ மனுஷர்களே

டாக்டர் : என்னாங்க இந்த மூதேவிப் பையனெ இன்னும் வச்சிருக்கிங்க?

சிங்கார முதலியாருக்கு அடங்காத கோபம். “அடே காமாட்டி’ போமாட்டே? என்று சத்தம் போடுகிறார்.

கற்கண்டு எழுந்து ஓட எத்தனிக்கிறாள். அவளையும் ஒரு கையால் தருமன் அழுத்திப் பிடித்துக்கொண்டு

தரு : “கோபஞ்சண்டாள மல்லோ
மனுஷர்களே
மனுஷர்களே”

இப்பதானுங்க வசூல் ஆவுது. இதோ முடிச்சிப்புடரேனுங்க.

கேட் I : இதோ ஆயிபுட்டுதுங்க சாமி.

தரு: (கேட்கும் ஜனங்களிடம்) நீங்க கேளுங்க மொதிலியாரொ என்று மெதுவாகக் கூறுகிறான்.

“கோபஞ் சண்டாள மல்லோ
மனுஷர்களே
மனுஷர்களே
குஞ்சித பாதத்தே சேருங்க.”

தருமன் அதிக உருக்கத்தோடு இந்த அடியைக் கூறியதோடு தானும் கும்பிடுகிறான். அதைக் கண்டு கேட்பவர்களும் கும்பிடுகிறார்கள்.

தரு : நிறுத்திப் புடட்டுமா?

கேட் I : முடிங்க! சொல்லுங்க.

கேட் II : குறுக்க நிறுத்தலாமா?

சிங்கா : இருக்கட்டுங்க. முடியட்டுங்க.

டாக்டர் : காய்ச்சல் அதிகமா இருக்குது. கொஞ்சம் இறங்கணும். இப்ப ஒண்ணும் சொல்ல முடியாது. நான் வர்ரேன் 15 நிமிஷம் பொறுத்து.

டாக்டர் போகிறார். சிங்கார முதலியார் பர பரத்த உள்ளத்தோடு நிற்கிறார். குறட்டிலே வீரப்ப முதலியார் நெருங்குகிறார்.

குப்ப: இந்தப் பெரிவுரு ஒங்களே தேடறாருங்க.

சிங்கா : என்னா சேதி?.

வீர : ஏதோ தாங்க மன வலியா இருக்றிங்க. கெட்டது கெட்டதுங்க, ஐந்நூறு ரூடா ஒண்ணு. துரைசாமி மொதிலி கொடுத்த முன்னூறு ரூபா ஒண்ணு.ஆக 800 ரூபாயெ குடுங்க.

சிங்: சரிதான் யாரிடத்லே குடுத்தே யாரே கேக்றே?

வீர: என்னாங்க…நேத்து இதே எடத்லே…

சிங்கார முதலியார் தருமனை நோக்கி, ” ஏண்டா இவரெ ஏமாத்திப் பணத்தே வாங்கிக்கினியா? என்கிறார்.

தரு: அவுரையே கேளுங்க.

சிங்: ஏனையா பெரியவரே சிறுத்தொண்டப் பத்தன் கதை பாடுறானே அவனா?

வீர: அந்தப் பிச்சைக்காரப் பையன் கிட்டவா குடுப்பேனுங்க?

சிங்: அப்டின்னாப் போங்களேன்.

தரு : நீங்க இந்த வூட்டு மூத்தவருங்களா?

சிங்: எந்த ஊட்டுக்கு? அட அடையாளமே தெரியிலிங்க ஒங்களுக்கு. சரியாவிசாரிங்க பெரியவரே.

வீர: அப்ப நீங்க வாங்கலே பணம்?

சிங்: இல்லே.

வீர: ஏன் ஐயா (குப்பனை நோக்கி) நீங்களும் வாங்கலே?

குப்: இல்லிங்க.

சிங்: அவன் கிட்டக் கொடுக்கலிங்களே?

வீர: இல்லிங்க

தரு : (இச்சமயத்திலே)
காண்ப தெல்லாம் பொய்யே
இந்த ஒலகத்திலே
கடவுள் மாத்ரம் மெய்யே
மனுஷர்களே.

(கும்பிடுகிறான். மற்றவரும் கும்பிடுகிறார்கள்)

சிங்: அட காமாட்டி நிறுத்திட்டுப் போ மாட்டே? கதெ? சொல்றான். கதெ ! பாவிப் பையா. கதை கேட்டுத் தாண்டா குழந்தே ஆபத்தாக் கெடக்கிறான். தொலைஞ்சி போயேண்டா!

தரு: “இந்தச் சிவகதையைக் குத்தம் சொன்னபேர் எரிகின்ற நரகத்திலே விழுவாங்க-நரகத்திலே விழுவாங்க”

சிங்: அடேய் கிண்டலா பண்றே என்னே? தோலே உரிச்சிடுவேன்.

கேட் I : ஓங்களே இல்லையா நீங்க சும்மா இருங்க.

கேட் II: கதையை ஏஞ்சாமி கெடுக்றீங்க.

கதை கேட்கும் ஜனங்கள் அனை வரும் சிங்கார முதலியாரை வெறுப்பாகப் பார்ப்பதைச் சிங்கார முதலியார் உணருகிறார்.

சிங்: வேறு எடத்துக்கு அவனே அழைச்சிக்கினு போங்க.

தரு : இதோ முடிஞ்சி போச்சிங்க.
பணக்காரர் என்று சொல்லிக்
கிருவங்கொள்ளா திங்க
எங்கப்பன்- பரமசிவன் பாதம்
நெனையுங்க”

சிங்: என்னடா சொன்னே?

கேட் I : ஒரே முட்டாக் கோவிச்சிக் கிறிங்களே

கேட் II: என்னாங்க சாமி பண்ணுவிங்க. கடிச்சித் திண்ணு புடுவிங்களா?

இவைகளைக் கேட்டுக்கொண்டே டாக்டர் வருகிறார்.

சிங்: என்னா போக்கிறித்தனம் பண்றானுங்க இவன்கள்!

டாக்டர்: அவனெ ஆதரிக்க ஜனங்கள் இருக்கும் போது நாம் என்னா செய்றது?

சிரு : “இந்தச் சிவகதையைக் குற்றம் சொல்லு கிறவர்கள் எரியும் நரகத்தில் விழுவாங்க” என்று பாடுகிறான் என்னைக் குறித்து. அதே மாதிரி. அந்த ஜனங்களும் ஏமேலே கோவிச்சிக் கிறாங்க, என்னா முட்டாள்தனம்.

டாக்டர் : “முட்டாள் தனம்” அதற்கு ஜனங்களின் ஆதரவு இருக்குதே. அப்படி இருக்கிற வரைக்கும் அவன் போக்கிரித்தனம், ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பு இவைகள் இருந்து தானே தீரும்.

டாக்டர் உள்ளே போகிறார். சிங்கார முதலியார் மகா கோபத்தோடு தருமனை உறுத்திப் பார்த்தபடி நிற்கிறார். அச்சமயத்தில் வீரப்ப முதலியார்

“அப்ப என்னாங்க ஏம்பணத்துக்கு ஒரு வழியுமில்லிங்களா?

சிங்: அடச் சீ போங்காணும் பைத்தியமா உமக்கு? பூடும் இங்கே நிற்கப் படாது.

வீரப்ப முதலியார் அந்த அதட்டலின் சத்தத் தால் விழுந்தடித்து எழுந்து நடக்கலுற்றார்

தரு: “இந்தச் சிவ கதையைச் சொல்லிய பேர்கள் இன்பத்தை அடைவார்கள் எந்நாளும்”

சிங்: உம் அப்றம்.

தரு: இந்தச் சிவகதையைக் கேட்டபேர்யாரும்
எம் பெருமான் பாதம் சேர்வாங்க
எம் பெருமான் பாதம் சேர்வாங்க
சேர்வாங்க
வாங்

சிங்: இனிமே இந்தப் பக்கம் வருவியோ?

சின்னான் படத்தைச் சுருட்டுகிறான். தருமனும் கற்கண்டும் எழுந்து நிற்கிறார்கள்.

தரு: “இந்தக்கதை அருமை தெரியாத மனிதர் எருமை மாடாப் புறந்து திரிவாங்க”

சிங்: அடே

கேட் I : ஞாயந் தானுங்களே?

கேட் II : பின் னென்னாங்க

சிங்கார முதலியார் வீட்டுக்குள் போய் விடுகிறார். ஜனங்கள் போகிறார்கள்

ஒரு புறமாக.

கற்: அந்தக் கெழவர் போறத்தே பாருங்க பாவம்

தரு: (தாளம் போடுவது போல் வெறுங்கை யால் பாவனை காட்டிக் கொண்டே) பாவம் பொய் புண்ணியம் பொய்
மனுஷர்களே
ஓ மனுஷர்களே
பரமசிவன் மெய்யல்லோ எப்போதும்?

கற்: பெரியவருக்கு அந்த முன்னூறு ரூபா குடுக்கலியா நீங்க. குடுத்துப் புட்டதாச் சொன்னிங்களே சிங்கார மொதிலியார் கிட்ட.

தரு: காசும் பொய் ரூபாயும் பொய் மனுஷர்களே இந்த மனுஷர்களே இந்தக் கற்கண்டும் நானும் மெய் எப்போதும்.

கற்: 500 ரூபா வேறே வாங்கினிங்களோ பெரியவுரு கிட்டே?

தரு: “பெரியவர் பொய் சின்னவர் பொய்
மனுஷர்களே நாம்ப
பிழைப்பது தான் மெய் கற்கண்டே
சீனாக் கற்கண்டே”

– முற்றும் –

– கற்கண்டு, முதற் பதிப்பு: அக்டோபர் 1944, முத்தமிழ் நிலையம், கோனாப்பட்டு, புதுக்கோட்டைத் தனியரசு.

Print Friendly, PDF & Email
பாவலர் வாழ்க்கை பயன்மரம், ஊருணி. யாவரும் கொள்வீர் இனிது. பாவேந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் - மன்னர் மன்னன் 1891- ஏப்ரல் 29, புதன் இரவு 10-15 மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி, உடன் பிறந்தோர் : தமையன் சுப்பராயன், தமக்கை சிவகாமசுந்தரி, தங்கை இராசாம்பாள். 1895- ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் தொடக்கக்கல்வி. இளம் வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *