ஆறாம் விரல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 9,819 
 

எப்போதும் போலவே எதிர்பாராத நேரத்தில் பெய்யத் தொடங்கியது மழை.வெள்ளிக்கிழமை பெய்யும் மழை கொஞ்சம் அதிகமாக பிடிக்கும் என்றபோதும்நனையப் பிடிப்பதில்லை. ஆபிசிலிருந்து வெளியே வரும் போதேநிறைகர்ப்பிணியாய் அடர்ந்திருந்தது வானம். துளித்துளியாய் தூற ஆரம்பித்ததுமேஅருகிலிருந்த டீக்கடையின் முன் வண்டியை நிறுத்திவிட்டு, ஒரு டீயும், சிகரெட்டும்சொன்னேன். சிகரெட்டை பற்றவைத்து ஆழமாய் உள்ளிழுத்த போது மழை பிடித்து அறையத்தொடங்கியது. இழுத்த புகையை கொஞ்சம் கொஞ்சமாய் வெளியேற்றிய போதுதான்,அன்றைய நாளின் அலுப்புகளும், அழுத்தங்களும் கொஞ்சம் புகையுடன் சேர்ந்துவெளியேறின.

பதினொன்றாம் வகுப்பில் ‘சிகரெட்’ என்ற ஆங்கில வார்த்தைக்குத் தவறாக ஸ்பெல்லிங்எழுதி, அதற்குத் தண்டனையாக ஐம்பது முறை இம்போசிஷன் எழுதியதுதான் எனக்கும் சிகரெட்டுக்குமான முதல் நெருக்கமான அறிமுகம். சொல்லப் போனால் அந்நிகழ்வு எனக்கு அதன் மேல் வெறுப்பையே ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நிகழ்ந்தது என்னவோ நேர்மாறு. அத்தைப்பாட்டிக்குத் தெரியாமல் காலையில் கிணற்றுக்குக் குளிக்கப் போகும் போது பம்பு செட்டுக்குப் பின்புறம் ஒளிந்து கொண்டு பீடி குடிக்கும் ரவி மாமாவைஅத்தைப்பாட்டியிடம் போட்டுக் கொடுத்திருக்கிறேன், வெண்சீலை முந்தி மடிப்பிலிருந்துஅவள் எடுத்துத்தரும் காலணாவிற்காக. இன்றும் கூட ரவி மாமாவிற்கு துரோகி யாரென்றுதெரியாது.

பள்ளிக்கூடம் முடிந்து கல்லூரி சேர்ந்த நாட்களில் அளிக்கப்பட்ட கட்டற்ற சுதந்திரத்தைமுழுமையாகப் பயன்படுத்த ஆயத்தமாயிருந்தேன். அப்போது முதலாவதாகஆரம்பித்ததுதான் இந்த சிகரெட். என்னைப் போன்ற ஆர்வக் கோளாறுகள் இருவருடன்ஹாஸ்டல் மொட்டை மாடியில், வாய் பொத்திய இருமல்களுடனும், பெரிதாக ஏதோசாதித்த பெருமையுடனும் என்னுள் நுழைந்தது அந்த முதல் சிகரெட்டின் கன்னிப்புகை.அப்போது சிகரெட் பிடிப்பதை பாவமாகவும், அதை பிடித்த எங்களை ரவுடிகளாகவும் பார்த்த இல்லை இல்லை பார்க்காமல் திரும்பிக் கொண்ட ஈஸ்வருக்கு இன்றைக்கு குறைந்தது இருபது சிகரெட்டுகள் தேவை நாள் ஒன்றை போக்குவதற்கு. நிகோடின் துணையின்றிஅவனால் நிம்மதியாக காலைக்கடன் கூட கழிக்க முடியாது இன்று.

இந்த சிகரெட் பிடிப்பவர்களில் தான் எத்தனை ரகம், எத்தனை விதம். எனக்குத் தெரிந்தநண்பன் ஒருவன் தினமும் ஒன்று தான் குடிப்பான். ஒன்றே ஒன்று. அதுவும் இரவுச்சாப்பாட்டிற்குப் பின்பு. அதைத் தவிர வேறு எப்போதும் அவன் பிடிப்பதில்லை. காலையில்எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை தான் செய்யும் எந்த ஒரு செயலுக்கு முன்பும் அதைசெய்து முடித்த பின்பும் சிகரெட்டுடனேயே வாழ்க்கை நடத்தும் நண்பன் ஒருவனையும்எனக்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரை சிகரெட் எனக்கு ஒரு சிறந்த நண்பன். என் மகிழ்ச்சி, துயரம், ஆற்றாமை, கோபம், வெறுப்பு என எந்த ஒரு நிகழ்வையும் முதலில் நான்பகிர்ந்து கொள்ளும் உற்ற நண்பன். உயிர்த் தோழன்.

ஒருமுறை தீபாவளி விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்றிருந்த போது, தலையிருந்து நெற்றிவழியாக கண்களை நோக்கி வழிந்து கொண்டிருந்த இளஞ்ச்சூட்டு எண்ணெயை கண்ணுக்குள்வழிந்துவிடாது துடைத்தபடியே அம்மா சொன்னாள், ” கண்ணா உன் சட்டையெல்லாம் கூடப்படிக்கிறவனுகளுக்குக் குடுக்காத”.

“ஏன்மா ? என்னாச்சு”

“எவனோ சிகரெட் பிடிச்சுருப்பான் போல இருக்கு. சட்டைப் பையெல்லாம் சிகரெட்தூளாயிருந்துச்சு. ”

கடுமையான வார்த்தைகளை விட, வெகுளியான வார்த்தைகளுக்குத்தான் எத்தனை வீரியம்.அந்த வெள்ளந்தியான அம்மாவின் மனசு என்னையும் சிகரெட்டையும் மூன்று வாரங்கள்பிரித்து வைத்தது.

ஆனால் தெர்மோ டைனமிக்சின் மாடல் பேப்பரில் வாங்கிய அரை மார்க் போதுமாக இருந்தது எனக்கும் சிகரெட்டுக்குமான எனது உறவை புதுபிக்க. இப்ப உள்ள பொண்ணுங்களுக்கெல்லாம், சிகரெட் குடிக்கிற பசங்களைத்தாண்டா பிடிக்குது மாப்ளபோன்ற அறிவுரைகள் ததும்பிய விவாதங்களும், சிகரெட் ஏந்திய அன்றைய கதாநாயகர்களின் அட்டகாசமான புகைப்படங்களும் போதுமாயிருந்தன தொட்டதைத் தொடர்வதற்கு.

அதற்குப்பிறகு அம்மாவின் கண்ணீர், அப்பாவின் நக்கல் பேச்சு, கை கடித்த வறுமை,புத்தாண்டுச் சபதம், உயிர்த்தோழியின் அறிவுரை, சிகரெட் அட்டைப் பெட்டியில் இருக்கும்வெந்த நுரையீரல் என எதனாலும் பிரிக்கமுடியவில்லை எனக்கும் சிகரெட்டுக்குமானஉறவை.
எண்ணிக்கையில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். எண்ணத்தில் ஏற்பட்டதில்லைஎப்போதும். அடுத்து பிடிக்கும் ஒரு சிகரெட் கூட உன்னை ஐ.சி.யூவில் நிறுத்த நேரிடும் என்றுஒரு நாள் டாக்டர் வந்து என்னிடம் கூறுவார். அன்று நிறுத்திக் கொள்ளலாம் என உத்தேசம்.சிகரெட்டையா அல்லது டாக்டரிடம் செல்வதையா என்று இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.

சொல்லி வைத்தது போல் அம்ருதாவிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது.

டீ கிளாசை அங்கு வைத்துவிட்டு, கடைசியாக ஒரு ப்ஃபை இழுத்து கீழே போட்டுவிட்டு,கேலக்சியை உயிர்ப்பித்தேன்.

“சொல்லு டா மா. இல்லப்பா நனையல. பக்கதுல டீக்கடையில நின்னுக்கிட்டு இருக்கிறேன்.”

…………………………………

“இல்ல இல்ல மழை விட்டதும்தான் கிளம்புவேன். இப்பவே நல்லா குறைஞ்சிடுச்சுமா. சரி.சரி.

………………………………….

” சரிப்பா.. சரி… கண்டிப்பா ஹெல்மட் போட்டுட்டுத்தான் ஓட்டுவேன். நின்னுடுச்சுகிளம்புறேன்மா. வீட்டுக்கு வந்து பேசிக்கலாம். ம். பை”

மதியம் வாங்கி மீதமிருந்த சென்டர் ஃப்ரெஷை பிரித்து வாயில் போட்டுவிட்டு, வண்டியின்பெட்ரோல் டேங்கை திறந்து வலது கையின் ஆள் காட்டி விரலையும், நடுவிரலையும்டேங்கின் வாயில் தேய்த்துவிட்டு, வண்டியை உயிர்ப்பித்தேன்.

முற்பிறவிகளில் நம்பிக்கையில்லை எனக்கு. இருந்தாலும் அதை அவ்வப்போது அசைத்துப்போவாள் அம்ருதா. அவள் எனக்குக் கிடைத்ததை முற்பிறவி பலன் என்றே எல்லோரும் சொல்லும் போது என்னாலும் மறுப்பதற்கில்லை. மிகத் தாமதமாக எனக்கு அறிமுகமாகி என்வாழ்க்கையில் சிகரெட்டைவிட ஒருபடி மேலே போய் அமர்ந்து கொண்ட ராட்சசி. தன்வாழ்க்கையில் ஒவ்வொரு கணத்தையும் எனக்காகவே அர்பணித்துவிட்ட ஒரு மனுஷி. நான் காதலித்து திருமணம் முடித்திருந்தால் கூட இத்தனை சந்தோஷமாக இருந்திருப்பேனாஎன்று சொல்வதற்கில்லை.

அரக்கு நிற காட்டன் புடவையில் அத்தனை பாந்தமாய், அவ்வளவு அழகாய், ஒரு பொய்கோபத்தை கண்ணிலும் தேங்காய்ப் பூ துண்டை கையிலும் வைத்துக் கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள் என் அம்ரு.

அருகில் வந்து என் தலையைத் துவட்டியபடி, என் சட்டை பட்டன்களை கழற்றியவாறே “ஏங்க.. டீக் கடைல நின்னுக்கிட்டு இருக்கேன்னுதானே சொன்னீங்க அப்புறம் ஏன்தலையெல்லாம் நனைஞ்சுருக்கு..ம்..”

” அது வந்து.. டீக்கடைல தான் நின்னுகிட்டு இருந்தேன்மா. பக்கத்தில் யாரோ சிகரெட் வாங்கிபத்தவச்சங்களா.. கருமம்.. நாத்தம் தாங்க முடியல.. அதான் மழையையும் பார்க்காம கிளம்பிட்டேன்.”

– அக்டோபர் 21, 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *