கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 26, 2022
பார்வையிட்டோர்: 5,040 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

5-6 | 7-8 | 9-10

7

ஆயாசமான குரலில், தருமன் துரைசாமி முதலியாரிடம் பேசுகிறான்.

தரு: அந்தப் பசங்க ரொம்ப அயோக்கியத்தனத்லே ஆரம்பிச்சுட்டானுவ.

துரை: என்னா என்னாங்க?

தரு: நானு என்னா சொல்றது போங்க.

துரை : அப்டிங்களா ?

தரு : வீரப்பக் கிழவருக்குத் தவிர வேறு யாருக்காவது கற்கண்டைக்கலியாணம்பண்ணிப்புடக் கூடாதா?

துரை: முடியவே முடியாதுங்க, அப்படி நான் தவறி நடந்துப் புட்டு உசுரோட இருக்க மாட்டேன்.

தரு: அதிகக் கஷ்டமிருக்குது, கிழவருக்கு முடிக்ற விஷயத்திலே.

துரை : உசுரே போகட்டுங்க நான் அவருக்கே குடுத்தாகணும்.

தரு: பொண்ணுக்குக் கெழவர் விஷயத்லே இஷ்டம் இல்லாட்டி?

துரை : கற்கண்டுக்கா?

தரு: உம்.

துரை: இந்தச் சத்ரத்துக் கெணத்லே உழுந்து ஒழியறது, அவ்வளவு தானுங்க.

தரு: பாவம் ஒங்க சபதம் நெறவேறணும். பாப்பம், கெழவரு வயித்தாலே போவு திண்ணாரு.

துரை : எப்போ ?

தரு : சாயந்திரம், டாக்டரை அழைச்சி உட்டுட்டுத் தானே நான் அந்தண்டை போனேன். சரி நான் போய்வர்ரேன். ஒங்குளுக்கு வண்டியும் தக்க ஆளும் அனுப்றேன். அல்லாட்டி நான் வர்ரேன். அது குறுக்க நீங்க வெளியிலே வரவா ணாம். கலியாணத்தெ பொண்ணு வூட்லே செட்டித் தெருவுலியே தான் வச்சிக்க வேண்டியதா வரும்போல இருக்குது. இருங்க.

துரை : ஒங்களுக்கு ரொம்ப செரமம்.

தரு : இருக்கட்டுங்க, அதெப்பாத்தா முடியுது. களா? வர்ரேன்.

அவசரமாகப் போகிறான் தருமன்; சிறிது தூரம் போனவுடன் சின்னான் எதிரில் வருகிறான்.

சின்னான் : துரைசாமி மொதிலியாரை இங்கே உட் டுட்டு அங்கே வந்தேன். ஒங்களே காணாம். ஓடியாரேன்.

தரு: சரி என்னா மணி?

சின் : பத்துக்கு மேலாச்சி. தரு: ஒன்ணு பண்ணு. நான் நேரே வீரப்பக் கெழவன் கிட்ட ஒக்காந்து பேசியிருப் பேன். அந்தச் சமயம், அந்தத் தெருவுலே கடாம் படாண்ணு கல்லுவந்து உழணும்.

சின் : எங்கே உழணும்?

தரு : தெருவுலே இருக்ற பல ஊட்டு மேலியும். என்னா சொல்றே?

சின் : சரி அடுத்த தெருவுலே இருந்து, பத்து மலைப் பிஞ்சியே அனுப்றேன். அப்றம் என்னா ?

தரு: அதான்! போ!

சின்னான் ஓடுகிறான்.

8

தருமன் வீரப்பமுதலியார் வீட்டைத் தட்டுகிறான்.

தரு : நாந்தான் கதவைத் திறங்க.

வீர : நாந்தான் இண்ணா ? ஆரு?

தரு: நாந்தான் சிங்கார முதலியார்.

வீர: வாங்க வாங்க.

கதவு திறக்கப் படுகிறது.

வீர : நீங்க சொன்ன திலிருந்து கதவைப்பூட்டியே வச்சுடறது.

தரு : அதுதான் சரி! விஷயம் அதிக மொம் மரமா பூட்டுதுங்க.

வீர : என்னா ?

தரு: ஒங்களே தூக்கிப் போய்டறது, அல்லாட்டி அடிச்சி புடறது. பொண்ணே தூக்கிம் போயி, வேறு ஆளுக்குக் கட்டிப் புடறது.

வீர : அதானுங்க அவுங்க தீர்மானம்.

தரு : அடியாட்களெ ஏற்பாடு பண்ணி புட்டானுவ.

வீர : ஐயையோ என்னா பண்றதுங்க?

தரு : தக்க ஏற்பாடு பண்ணாமலா இருப்பேன்? பயப்டவேண்டிய அவுசியம் இல்லியே?

வீர : ஒங்க தயவுங்க, என்னெ காப்பாத்தி வூட்டுக்கு அனுப்றது ஒங்க பொறுப்புங்க.

தரு : அவனுவ இந்தத் தெருவுக்கு வரப் போறதா கேழ்வி, நானும் தக்க ஏற்பாடு பண்ணி யிருக்கேன். உயிருக்குப் பயந்தா என்னா ஆவும்?

வீர : என்னியா அப்டி துணியணும் இண்றிங்க?

தரு : உம் என்னெ சொல்றேன்.

கதவை யாரோ தட்டுகிறார்கள்! அதைக் கேட்ட வீரப்ப முதலியார் நடுங்குகிறார். தருமனுக்குத் தெரியும் இனனார் என்று, அதனால் தருமன் வெகு தைரியமாக, ” ஆர் அங்கே” என்று அதட்டிவிட்டுக் கதவைத் திறக்க எழுந்திருக்கிறான். வீரப்ப முதலியார்,

“ஐயையோ தெறக்காதிங்க”

என்று தடுக்கிறார். தருமன் திமிறிக்கொண்டு போய்க் கதவைத் திறந்து, “யார் ” என்கிறான்.

“பல்லக்குங்க”

என்று பதில் கிடைக்கிறது.

தரு : பல்லக்கா ? அப்டிதான் வையுங்க! கொஞ்சம் கட்டை முட்டை தர்ரேன். அதெ போட்டு ஊட்டு எதிரெ கொளுத்துங்க. சாவு வீடாட்டம் பாக்றவங்க நெனைக்கணும்; தெரியுமா? ஆராவது கேட்டா. ‘செதம்பரத்துப் பெரியவுரு காலராவீலே செத்துப் புட்டாரு அவுருக்குக் காலையிலே கல்லாணம் ஆக இருந்துது’ இண்ணு சொல்லுங்க.

ஆள் : சரிங்க.

தருமன் கட்டை முட்டைகளை எடுக்கப்போ கிறான். இவைகளைக் கேட்டிருந்த வீரப்ப முதலியார்.

“இது என்னாங்க கோரமா இருக்கு” என்று இரக்கமாகக் கேட்கிறார்.

தரு: நீங்க கண்டு புடிக்க மாட்டேண்றிங்களே நான் போற மாதிரியே.

இதற்குள் தெருவிலிருந்து சத்தம் கேட்கிறது.

‘கல்லு! கல்லு! எவன் அவன். உடாதே.

தரு : வந்துட்டானுவ.

வீர: இங்கே வரக்கூடுமோ?

தரு: வரட்டுமே! வந்தா. கெழவர் செத்து புட்டாருண்ணு பல்லக்கு தூக்ற ஆள் சொல்லப்போறான். ஆத்மாவந்தவனுங்க ” ஐயையோ” இண்ணு மனசி எரங்கி திலும்பிப் பூடப் போறானுவ. அவளவுதானே.

வீர: நல்ல யோசனை தான்.

பிணம் இருந்தால் அந்த வீட்டின் எதிரில் தீ மூட்டுவது என்ற வழக்கப்படி தீ எரிகிறது. பல்லக்கும் தயாராக வைக்கப் பட்டிருக்கிறது.

தரு : நீங்க உள்ளியே இருங்க; கதவெ சாத்திகினு. இதோ வந்துடுறேன்!

வீர: ஏன் போறிங்க?

தரு: அட! போம் போதே மூதேவியாட்டம் ஒண்ணுங் கேக்காதிங்க!

வீர : சரிங்க.

சற்று நேரத்திற் கெல்லாம் தருமன் தன் முகம் மறைய முக்காடிட்டுக்கொண்டு துரைசாமி முதலியார் சகிதம் பல்லக்கு வைத்திருக்கும் தெருவை அடைகிறான்.

அந்த வீதி முனையில் தற்செயலாகப் பல்லக்கையும், தீ எரிவதையும் பார்த்தவன் போல நடித்து.

தரு: நில்லுங்க அங்கே என்னா?

துரை: தெரியிலிங்களே

தரு: அதுதானே வீரப்ப முதலியார் இருக்கிற ஊடு.

துரை : தெரியிலிங்களே. நெருப்பு எரியறது மாத் திரம் தெரியுது எனக்கு.

தரு : என்னாங்க அது! ஐயையோ.

துரை: என்னாங்க?

தரு: நெருப்புத் தெரியுதே! ஐயையோ பல்லக்குத் தெரியுதே.

துரை : ஐயையோ போயி பாப்பமே அடடா.

இருவரும் வீரப்ப முதலியார் வீட்டின் எதிரில் வந்து நிற்கிறார்கள். தருமன் ஒருபுறமாக நின்று கொண்டு துரைசாமி முலியாரைநோக்கி,

“அந்த ஆளை மெதுவாக என்னா
இங்கேண்ணு விசாரியுங்க”

என்கிறான். துரைசாமி முதலியார் போய்க்கேட்கிறார்.

“என்னா இங்கே?”

ஆள் : நாளைக்கு கல்லாணம் செய்துக்க இருந்தாருங்க அந்தச் செதம்பரத்து பெரியவரு. காலராவுலே செத்துப் புட்டாருங்க.

தருமனும் துரைசாமி முதலியாரும் பேசிக் கொண்டே திரும்புகிறார்கள்.

துரை : நாங்க செதம்பரத்லே இருந்து வந்தோம். அவுருக்கு இப்டி ஆச்சி, எனக்கு அவச் சொல்லு ஏற்பட்டுப்போச்சி. அழுகிறார்.

தரு: மனசே தெடப்படுத்துங்க.எனக்குச்சாய்க் திரமே சந்தேகம் ஏற்பட்டுப் போச்சி. அதோட்டுத் தான் கேட்டேன் ஒங்களே; வேறே ஒருத்தருக்குக் கட்டிக் குடுக்க ஏற்பாடு பண்ணலாமா இண்ணு. இப்ப என்னா. கலியாணத்துக்கா ஏகப்பட்ட செலவு ஆயிபோச்சி. குறிச்ச நேரத்லே கலியாணத்தே முடிக்காட்டிப் போனா எனக்கும் கெட்ட பேரு.

துரை : அப்டிதான் செய்யுங்க! மாப்பிள்ளை?

தரு: இருக்கான்! நல்ல பையன்!

துரை : நல்லா இருப்பானா? கண்ணுக்குப் புடிக்குமா பொண்ணுக்கு?

தரு : என்னாட்டமே இருப்பான்! என்னெ பாத்தா அவனெ பாக்கவே வேண்டி தில்லே. அநேகம் பேரு நான் தாண்ணு நெனைச்சி அவங்கிட்ட பேசுவாங்க. முந்தாநேத்து தபால்காரன் அவனைப் பாத்தான். கும்பிடு போட்டுட்டு என் தபாலெ அவங்கிட்டெ குடுத்துட்டான்.

துரை : அப்டி அவனெ சம்மதிக்க வைக்கணுமே.

தரு: இப்ப ஆக வேண்டிய வேலை அதுதான்! நீங்க முத்தால் பேட்டையிலியே சத் ரத்லே இருங்க. ஒங்களெ கூட, அந்தப் போக்கிரிப் பசங்க தேடுவதாகக் கேள்வி. நான் எல்லாம் ஏற்பாடு பண்ணிப்புட்டு ஆளெ அனுப்புறேன் வாங்க. அது குறுக்க வராதிங்க. உம்.

துரை: நல்லதுங்க.

– தொடரும்…

– கற்கண்டு, முதற் பதிப்பு: அக்டோபர் 1944, முத்தமிழ் நிலையம், கோனாப்பட்டு, புதுக்கோட்டைத் தனியரசு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *