என் நண்பனுடன் ஒரு வாக்குவாதத்தின் இறுதியில் நான் சொன்ன வார்த்தைகள் தெளிவாக, அழுத்தமானதாக இருந்தன.
“நான் சொல்வதுதான் சரி. கடவுள் இல்லை. கடவுளை நம்பினவன் முட்டாள். வாழ்க்கை அர்த்தமற்றது.”
இதை நிரூபிப்பதற்கு என் துப்பாக்கியை வெளியில் எடுத்தேன். அதன் முனையை என் நெற்றியில் வைத்துக்கொண்டேன். அதன் விசையை அழுத்தினேன். என் மூளை வெடித்துச் சிதறியது. இன்னும் ஒரே விஷயம் மட்டும் என்னைத் தொந்தரவு செய்கிறது. அதை மட்டும் என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. நான் சொன்ன்து சரியென்றால் எப்படி என்னால் இதை எழுத முடிகிறது?.
வெரி nice