அந்த மலையின் சரிவில் இறங்கிக்கொண்டிருந்த ஜானுக்கும் ரவிக்கும் குளத்தில் தண்ணீரில் தத்தளித்துக்கொடிருந்த அந்தச் சின்ன நாய்க்குட்டியை பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. சரிவான குளத்தின் விளிம்பில் படிந்திருந்த பாசி வழுக்கியதால் அதனால் ஏறமுடியவில்லை. ஊட்டியின் கடும் குளிர் அதனை மேலும் வாட்டியது.
“ஜான் எப்பவும் நீதான ஐடியா சொல்லுவ இப்போவும் எதாவது சொல்லேன்.”
“ரவி நான் என் பெல்ட்டை கழட்டி ஒரு எண்டை பிடிச்சிக்கிறேன் இன்னொரு எண்டை பிடிச்சிட்டு நீ ஜாக்கிரதையா குளத்தில இறங்கி பப்பியை வெளிய எடுக்குறையா?.” என்று சொல்லிக்கோண்டே ஜான் பெல்ட்டை கழற்ற “ஒ.கே” என்ற ரவி அதன் ஒரு நுனியை பிடித்துக்கோண்டு மெல்லக் குளத்தினுள் இரங்கினான். மெல்ல மெல்ல அந்த செல்ல நாஇகுட்டியை கை கொடுத்து தூக்கியபோது ஐஸ்கட்டியை தொடுவது போலவே உணர்ந்தான்.
இருவர் முகத்திலும் பெருமிதம் ஜொலித்தது.
“ கட் கட் கட்… “ராஜேஷ், அந்த நாய்க்குட்டியை வாங்கி தண்ணில போடுய்யா” – இயக்குனர்
“தாங்காது சார், காலைலேர்ந்து ரெண்டு நாய்க்குட்டி செத்துபோச்சு சார்”. – உ. இயக்குனர்
அதப்பாத்தா முடியுமா? 45 செகன்ட் ஷார்ட் ஃபில்ம் 32 செகண்ட் கூட வரலை. ‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்’னு மெஸேஜ் பப்ளிக்ல ரீச் ஆவணும்ல. – இயக்குனர்.