இன்டர்வியூ – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 11,429 
 

“எதுக்குடா இவ்ளோ பயம்..? தைரியமா இரு.. பயந்தாலும் வெளிய காட்டிக்காத”

“இல்லடா முதல் இன்டர்வியூ… நினைச்சாலே கை, காலெல்லாம் நடுங்குது”

“ஏன்டா.. இப்படி பயந்தீனா.. எப்படி இன்டர்வியூல ஆன்சர் பண்ணுவ?”

“அதான்டா தெரியல..”

“எனிவே.. இன்டர்வியூ அட்டன்டு பண்ணு.. கலக்கு.. ஆல் தி வெரி பெஸ்ட்”

“தேங்க்ஸ்டா”

இன்டர்வியூ நாள்..

மொத்தம் முப்பது பேர்.. இவனது பேர் லிஸ்டில் இருபத்தி ஏழாவது இடத்தில் இருந்தது.

“சேது..”

அவனது பெயர் அழைக்கப்பட.. பதட்டப்படாமல் ஸ்டெடியாய் கிளம்பினான்..

“மே ஐ கம் இன் சார்..”

“எஸ்.. கம் இன்”

“குட்ஆப்டர்நூன் சார்”

“குட்ஆப்டர்நூன் சேது.. யூ ஆர் செலக்டட்”

“ச.. சார்”

“எஸ்.. சிசிடிவி வழியா எல்லாரையும் இங்க இருந்து பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோம்.. இதுவரை இன்டர்வியூ பண்ணிட்டு போன எல்லாரையும், மீதமுள்ள எல்லாரும் சூழ்ந்து நின்னு, கேள்வியாலேயே துளைச்சிட்டு இருந்தப்ப, நீ மட்டும் தான் உன் இடத்தவிட்டு நகரல.. ஏன்னா உனக்கு உன் மேல அவ்ளோ கான்பிடன்ட்.. சோ.. எங்களுக்கும் உன் மேல கான்பிடன்ட்.. கங்கிராட்ஸ்.. அப்பாய்ன்மென்ட் ஆர்டர் வீட்டுக்கே வரும்.. யூ மே கோ நவ்”

“தேங்க்யூ சார்”

‘எந்திருச்சா நம்ம நடுக்கம் எல்லாருக்கும் தெரிஞ்சிரும்னு தானே எந்திரிக்காமலேயே இருந்தோம்’, என நினைத்தவாறே தனது நண்பனிடம் சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள விரைந்து சென்றான் சேது.

– ஜூலை 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *