கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 17, 2022
பார்வையிட்டோர்: 11,330 
 
 

‘அறிவு, என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’

‘ஏன் என்ன பிரச்சினை?’

‘அப்ப உனக்கு போன்’ எடுக்கக்கூடாதோ?’

‘தேவையில்லை என்று சொல்லி அடித்து ‘போன்’ றிசீவரை வைக்கவேணும்போல் இருந்தது சாந்தினிக்கு. நெஞ்சுக்குள்ள இனம் தெரியாத கவலை, யோசனை, எல்லாம் தான் சாந்தினிக்கு. என்ன ஒவ்வொருநாளும் போன் செய்து நடக்கிற செய்திகள் எல்லாம் சொல்ல வேண்டும். அதுதான் அவளுக்குக் கோபம் ஏறியிட்டுது போல இருக்கு.

‘யாருக்கு போன்’ எடுத்தனீங்க?’ சாந்தினி கேட்டாள்.

‘அறிவு’ என்ர ஒரு நண்பிக்குத்தான்’ சிவா சிரித்தான்.

‘இந்தப் பாட்டுக் கேட்டனியோ…?’ சிவா பாடியும் காட்டினான்.

‘இல்லை. நான் கேட்கவில்லை எனக்குத் தெரியாது.’

‘அது சரி காலநிலை என்ன? நாளைக்கு மழையோ வெய்யிலோ?’ சிவா கேட்டான்.

‘நான் பார்க்கவில்லை. எனக்கு வேற வேலை இல்லையோ உதுகளைப் பார்த்துக்கொண்டிருக்க’

‘அறிவு, அறிவு வெளிநாட்டில இருக்கிறவர்கள் கட்டாயம் காலநிலை பார்த்துத்தான் வெளியில் போகும்போது உடுப்புக்களைப் போட வேண்டும். பனி என்றால் நல்லாகக் குளிருடை அணிய வேண்டும். தொப்பி, கையணி, காலை மூடிய சப்பாத்து என்று உடல்; பாரத்தைவிட உடைப்பாரத்தைக் கூட்டவேண்டும். மழை என்றால் அதற்குரிய றெயின்கோட் அல்லது குடையோடு போகவேணும். வெய்யில் என்றால் நீந்துவதற்குப் போவது போலவும் போகலாம். உடைப்பாரத்தைக் குறைத்தால் எவரும் சட்டை செய்யமாட்டார்கள். உனக்குத் தெரியாதா? வெளிநாடுகளில் மூன்று டபிள்யூக்களை நம்ப முடியாதென்று. (றுழசமஇ றுநயவாநசஇறுழஅயn) வேலை, காலநிலை, பொம்பிளை.’

‘ஓ..அப்பிடியோ! அதுதான் கேட்னீங்களோ! வெளிநாட்டில இருக்கிற எங்கட நாட்டு ஆக்களைப் பற்றியோ அல்லது வெள்ளையர்களைப் பற்றியோ சொல்லுறீங்க?’

இப்போ கொஞ்சம் கோபம் குறைந்து குளிர்ச்சிபோல இருக்கு சாந்தினிக்கு. கதை தொடர்கிறது.

வெளிநாடுகளுக்கு வந்த எங்கட சனங்கள் அவர்களின்ர கலை, கலாச்சாரத்தைத்தானே பின்பற்றிக்கொண்டிருக்கினம்’

‘எல்லாவற்றிலுமோ?’

‘கிட்டத்தட்ட எல்லாவற்;றிலும்தான். எங்கட சில சனத்திட்டை காசு கூடிப்போய் என்ன செய்கிறதென்று தெரியாமல் திமிர் காட்டுகினம். எமது இனம், உணர்வு, பண்பாடு என்பவற்றை எல்லாம் அழியவிடக்கூடாது. நாங்கள் நாங்களாகவே வாழவேண்டும். நமது முகங்களைத் தொலைக்கக்கூடாது. என்றெல்லாம் ஊடகங்களில் வந்து சொல்லிக்கொண்டிருக்கினம்.’

‘அப்போ இங்கே கனக்க ஊடகங்கள் இருக்கோ சிவா’

‘அறிவு, அறிவு நீ சாந்தினி அப்ப ஒன்றும் பார்க்கிறதில்லையோ? கேட்கிறதில்லையோ?’

‘பார்க்கிறனான். கேட்கிறனான். படிக்கிறனான். ஆனால், பி.பி.சி, செய்திகள்தான் கூடுதலாகப் பார்க்கிறனான். ஈராக்கில் நடைபெறும் பிரச்சனைகளைப் பார்க்க மிகவும் கவலையாக இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கொடூரங்கள்தான். தன்ர ஆயுதப்பலத்தை அந்த அப்பாவிகளில காட்டி ஈராக் நாட்டையே அழிச்சுப்போட்டார். இந்த லண்டன் காரனும் சேர்ந்துதான். இவர்களுக்கு என்ன வேலை ஈராக்கிலை. இன்னும் ஆயுதம் தேடினமோ? ஈராக்கை ஆண்ட சதாம் ஹ_சேனையும் கேவலமான முறையிலே வைத்துப் பிடிச்சுப்போட்டு, அடைச்சு வைச்சுக்கொண்டு, தொடர்ந்தும் சண்டைபிடித்து அழித்துக்கொண்டிருக்கினம். சதாம் ஹ_சேனும் சனத்துக்குக் கொடுமைதான் செய்;ததாம். அது வேற விடயம். இப்போ அரபுச் சனங்களுக்கு ரோசம் வந்திட்டுது. நல்லாகக் குடுக்கிறாங்கள். வேண்டிக் கட்டினம். உங்களுக்குத்தானே உந்தச் செய்திகளெல்லாம் அந்தமாதிரி அத்துபடி. சரித்திரப் புத்தகம் மாதிரி அச்சடிச்சு தலைக்குள் வைத்திருப்பீங்கள் சிவா.

‘ஓம் எனக்குத் தெரியும்தான். ஆங்கில, பிரெஞ்சு போன்ற மற்றைய நாடுகளின் செய்திகளும் பார்த்து நன்கு எல்லாம் அறிந்து கொள்வேன். கூடுதலாக வாசித்துக்கொள்வேன். ஆனால், சாந்தினி நீ எப்படி அரசியல் பற்றி எல்லாம் கதைக்கிறாய்? எப்படி அரசியலில் சரி பிழை கதைக்க முடிகிறது?’

‘நான் சிறுமியாக இருந்தபோது வீட்டில் கேட்ட அரசியல் கேள்விஞானம் தான்’

‘அதெப்படி சாந்தினி?’

‘ஏதோ கட்சிக்கூட்டம் என்று கொழும்பில இருந்து வந்த என்னுடைய தந்தையின் நண்பர்கள் எங்கள் வீட்டில் தான் தங்குவார்கள். இரவிரவாக விடியும் வரை இடதுசாரி, வலதுசாரி, சமசமாஜி, கொம்யூனிஸ்ட், ஒடுக்கப்பட்டவை, அடக்கப்பட்டவை, முதலாளி, தொழிலாளி அது இது என்று சொல்லி வாக்குவாதப்பட்டுக்கொண்டும், உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டும் கதைப்பார்கள். எனக்கு ஒன்றும் விளங்காது. என்னுடைய அம்மா நல்ல சாப்பாடுகள் செய்வார். சிற்றூண்டிகள் பரிமாறுவார், தேநீர் போட்டு அவர்களுக்குக் கொடுப்பார்;. நானும் அவர்களுக்கு பரிமாறுவதில் உதவி செய்வேன். அப்போ கேட்டவைதான். இப்போ எனக்குக் கொஞ்சம் விளங்கிவிட்டது அவர்கள் ஏன் அப்படி உணர்ச்சிவசப்பட்டு கதைத்தார்கள் என்று.

‘அப்ப சாந்தினி உன்ர தந்தை என்ன அரசியல்வாதியோ?’

‘அப்படி நான்சொல்லவரவில்லை சிவா. இடதுசாரி அரசியல் பின்னணியில் மனிசரை உண்மையாக நேசித்து இலக்கியம் படைத்த முற்போக்கான ஒரு படைப்பாளி. எழுத்தால போராடினவை அவை. ஆனால்…

‘அதைப்பற்றி விரிவாகப் பின்னர் கதைப்போம். கதைச்சால் கவலைதான் வரும். இப்போ நடக்கிற பிரச்சினை பற்றிக் கேளுங்களேன். ஸ்பெயின், ஹொண்டூராஸ், டொமினிக்கன் குடியரசு எல்லாம் ஈராக்கில இருந்து வாபஸ்பெற முடிவு எடுத்துள்ளதாம். அதோட போலாந்துப் படைகளும் விலகிக்கொள்ளப்படவேண்டும் என போலந்து அரசுக்குச் சனங்கள் அழுத்தம் கொடுக்கினமாம். பிரிட்டனும் புதிதாக ஈராக்கிற்கு படைகளை அனுப்பும் வாய்ப்புகள் இல்லையென்று சொல்லிக்கொண்டிருக்கினமாம்’

‘அப்ப, அமெரிக்காபாடு பெரிய திண்டாட்டம் என்கிறாயோ சாந்தினி?’

‘உங்களுக்குத் தெரியுமா சிவா? சதாம் ஹ_சேனுக்கு இந்தியச் சோதிடர் என்ன கூறினதெண்டு?’

‘என்னடி அறிவே சாந்தினி. எங்கே பார்த்தனி?’

‘பேப்பரிலதான் பார்த்தனான். 2005 ஆம் ஆண்டு செவ்வாய் திசை ஆரம்பமாகுதாம்.’

‘பிறகு சாந்தினி’

‘பிறகென்ன? அதற்குப் பிறகு ஈராக் நாட்டில் எவரும் எதிர்பாராத விதத்தில் ஒரு மாபெரும் புரட்சி ஏற்படுமாம். தீப்பிழம்புகள் மாதிரி எழுகின்ற புரட்சியால் இவை அண்ணனும், தம்பியும் ஈராக்கில இருந்து விரட்டப்படுவினமாம்.’

‘யாரடி சாந்தினி அமெரிக்காவும், இங்கிலாந்துவுமோ?’

‘ஓம். அந்த ஒட்டுண்ணிகள்தான் சிவா.

‘பேந்து சாந்தினி?’

‘பேந்தென்ன. முன்பைவிட மிக வலுவாக ஈராக் நாட்டு அரியணையில் சதாம் ஹ_சேன் மீண்டும் அமர்வாராம். ஏழு ஆண்டுகள்வரை ஈராக்கை ஆள்வாராம். உற்சாகமும், சுதந்திரமும் உயிர் பெறுமாம்’

‘உண்மையாகவா?’

‘அப்ப என்ன பொய்யே சொல்லுறன் சிவா. பேப்பரில படிச்சனான். அதோட அவருடைய ஆயூள் காலத்தையும் சாத்திரி சொல்லியிருக்கிறார்.’

‘அப்படியோ!’

‘இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டுவரை ஆயுளும் உண்டாம்’

‘அதுதான் சரி. பாவம் அந்த ஆளும் நீடூழி வாழவேண்டும். அப்ப நீ சோதிடத்தை நம்புறனீயோ சாந்தினி?’

‘அங்கதானே பிரச்சனை. இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டுவரை நானும் வாழ்வேனோ தெரியவில்லை. இன்னுமொரு பத்துவருடம்தானே!. கட்டாயம் இருப்பேன் என்றுதான் நம்புகிறேன். அதுக்குப்பின்னர்தான் சோதிடம் உண்மையோ, பொய்யோ என்று தீர்மானிப்பேன். இப்போ என்ன ஊடகங்கள் எல்லாம் சோதிடம் பார்க்கிறதிலைதானே முன்னுக்கு நிக்கினம். இங்கே ஒரு தொலைக்காட்சியைப் போட்டேன். அதை ஏன் கேட்கிறீங்க? மணித்தியாலக்கணக்கில, அதுவும் இந்தியாவிலிருந்து சாத்திரி அதுவும் பெண் சாத்திரி கதைத்துக்கொண்டிருக்கிறார். பெண்கள் என்றால் கொஞ்சம் கவர்ச்சிதானே! வெளிநாடுகளில பரந்து வாழ்கிற எங்கட சனங்கள் சும்மா அடிச்சுவிழுந்து போன் செய்து எதிர்காலத்தைப்பற்றி கேட்டுக்கொண்டிருக்கினம்.’

‘என்னடி சொல்லுறாய சாந்தினி;? இந்த இருபத்தியொராம் நூற்றாண்டிலேயோ! தொழில்நுட்பங்களும் பெருகிவிட்டுது. உலகம் மிகச் சுருங்கிவிட்டுது. நீ இப்ப சாத்திரம் பற்றிய மூட நம்பிக்கையை சொல்லிக்கொண்டிருக்கிறாய்’

‘நான் சொல்லவில்லை. இந்த ஊடகங்கள் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.’

‘முதலாளிகளுக்குத் தமிழை வளர்ப்பதல்ல நோக்கம் சிவா’

‘அப்ப என்னடி சாந்தினி நோக்கம் ?’

‘தமிழைக் கொலை செய்து, வியாபாரம் நடந்தால் போதும். வியாபாரிக்கு லாபம் தானே! ‘புதிய கலாச்சாரம்’ என்றுகொண்டு ஆங்கிலக் கலப்போடு தமிழ் பேசினால்தான் கௌரவம் என்ற தாழ்வு மனப்பான்மையில் சிக்கிக்கொண்டு ஒருபுறம். புதிய புதிய பரிமாணங்களை, தமிழ் இலக்கிய சிந்தனைகளை, தமிழரின் பாரம்பரிய நிலையை, தமிழரின் இன்றைய நிலையை எடுத்துச் சொல்லும் என்றால. தமிழ்ச்சினிமா நட்சத்திரங்களைப் பேட்டி காண்பதும், சாத்திரமும் பாட்டுமாக இருக்கு. நேற்று றேடியோ ஒன்றை முறுக்கினேன். அதிலேயும் சாத்திரம்தான் சொல்லிக்கொண்டிருக்கினம். சில விடயங்களுக்கு சாத்திரியார் நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்று நேயர்களுக்கு தனது வீட்டு தொலைபேசி இலக்கத்தைக் கொடுக்கிறார்.’

‘என்ன சொல்லுறாய் சாந்தினி?’ சனங்கள் வீட்டுக்குப் போகினமோ?’

‘சிவா வீட்டுக்குப் போகினமோ? திருவிழாமாதிரி சரியான சனக்கூட்டம். சாத்திரிக்குத் தெரியும்;, இப்போ வெளிநாடுகளுக்கு வந்தவர்களை வெளிநாடுகளிலுள்ள அரசாங்கங்கள் எப்பிடியாவது திருப்பி சொந்த நாடுகளுக்கு அனுப்புவதில் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. கணவன், மனைவி என்பதுகூட கிடையாது. கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை விட்டு, கணவரை சொந்தநாட்டுக்கு அனுப்பும் மனிதாபிமானமற்ற செயல்கள்கூட லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எத்தனையோபேர் பயந்து, செயலிழந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மன ஆறுதலுக்கு யாரிடமாவது ஆறுதல் வார்த்தைகள் கேட்க வேண்டுமே! சாத்திரிமாருக்கு வாய்ச்சுப்போச்சு. சாத்திரம் கேட்க வாறவர்களிடமே தகவல்களைக் கேட்டுவிட்டு, இங்கே நட்சத்திரம்;, அந்தரேகை, அந்த பகவான் என்று கூறி அவர்களிடம் பவுணிலையும், ஈரோவிலயும் வேண்டி அடுக்கிக் கொண்டிருக்கவேண்டியதுதானே!’

‘என்ன ஏமாத்துவேலை சாந்தினி’

‘ஏமாறுவதற்கு ஆட்கள் இருந்தால், ஏமாற்றவேண்டியதுதானே! சரி சொல்லு அறிவே, சாந்தினி உனக்கு அந்தச் சாத்திரியைத் தெரியுமோ?’

‘ஓம் சிவா. ஒரு நாள் தொலைபேசியில்தான் அழகாகக் கதைத்தார் சாத்திரி. அவருடைய கருத்துக்கு முரண்பட்ட கருத்தைச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். சாதுரியமாகக் கதையை மாற்றிச் சந்தோஷமாகக் கழன்றுவிட்டார்’

‘சாந்தினி உன்னை யோசிக்கச் சிரிப்புத்தான் வருகுது’

‘ஏன் சிரிப்பு வருகுது உங்களுக்கு? நேருக்கு நேர் எல்லாம் சொல்லுவதாலேயோ? சனங்களின்ர வாழ்வோடு, உணர்வுகளோடு ஒன்றிப்போகவேண்டும். இவைகளோடு சம்பந்தப்படாத சித்தாந்தம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி?’

‘அறிவே சாந்தினி என்ன சொல்லுறாய்’?

‘இங்கே நடக்கிறதைத்தான் சொல்லுகிறேன் சிவா. ஒரு சாத்திரி இந்த மாதிரி எங்கட சனத்துக்குச் சாத்திரம் சொல்லி இரண்டு வீடும் வாங்கிப்போட்டாராம். நீங்கள் இரவு பகலாய் உடம்பையும், உள்ளத்தையும் வருத்தி எத்தனை வீடுகள் வாங்கிப்N;பாட்டீங்கள்? உங்கள் குடும்பம் இலங்கையில் கஸ்டப்படுகிறார்கள். நீங்கள் இங்கே அந்தர சீவியம். யாருக்கு விளங்கப்படுத்துகிறது என்று மனதுக்குள்ளே எல்லாம். வில்லங்கப்பட்டு எந்த நேரமும் சும்மா எல்லோரும் சிரிக்க வேண்டியதுதான். என்ன புரியாதா? இப்படி எத்தனை சனங்கள் அந்தரமான சீவியம் சீவித்துக்கொண்டு இங்கு இருக்கிறார்கள். மனம் அந்தரிக்கிற வேளையிலே மனஆறுதலுக்காகப்போய் குறிப்புகளைக் கேட்டுப் பார்க்கிறது சனங்கள். மனம் குளிர நாலு வார்த்தைகள் சொல்லுவார் சாத்திரி. மனது நிறையுது சனங்களுக்கு. சாத்திரிக்கு பணம் நிறையுது சிவா’

‘அறிவு. நீ இப்ப நல்லாக் கதைக்கிறாய். சாந்தினி நீ சொல்றது சரிதான். யோசிக்க வேண்டித்தான் இருக்கு.’

‘எல்லோரும் யோசிக்கத்தான் வேண்டும். ஊடகங்கள் மிகவும் சக்தி வாய்ந்த சாதனங்கள். உண்மையில் தொலைக்காட்சியை மிகவும் சக்தி வாய்ந்த சாதனமாகக் கொள்ளலாம். காட்சிப் பரிமாணங்கள் இக்கலையைச் செம்மையாகப் பயன்படுத்துவதன் மூலம் பெரும் கலாச்சாரப் புரட்சியை உருவாக்கிக் காட்ட முடியும். உன்னதக் கலையையும், உன்னதக் கல்வி அறிவையும், விஞ்ஞான மனோபாவத்தையும், மேலான பழக்கவழக்கங்களையும், ஆரோக்கிய விதிகளையும், மருத்துவ ஞானத்தையும், மனித உறவுகளை மேன்மைப்படுத்தும் படைப்புக்களையும் உருவாக்கிக் காட்ட முடியும். மனிதனை நேசிப்பவனே வாழ்க்கையை நேசிக்கிறான். மனித நேயம் கொண்டவனே கலைச் சாதனங்களையும் செம்மையாகப் பயன்படுத்தமுடியும்.’

‘அறிவே சாந்தினி. என்ன பெரிய மேடைப்பேச்சுமாதிரி அளக்கிறாய். கருத்துக்கள் நிச்சயம் கூறவேண்டும். சொல்லு சொல்லு சாந்தினி. பணம் முக்கிய அடிப்படைத் தேவையாக இருந்தாலும், சமூகத்தை விழிக்க ஊடகங்கள் பயன்படவேண்டும். பல நிகழ்ச்சிகளைச் சுவை படக் கூறவேண்டும்.’

‘எல்லாவற்றையும் நாம் குறை கூறிவிட முடியாது. பல ஊடகங்கள் நல்ல நல்ல விடயங்களைச் செய்து வருகின்றன. பாராட்டப்படவும் வேண்டும். ஆனால் ஒருசில ஊடகங்கள் நாள் முழுதும் சினிமாப்பாட்டுக்கள்தான். ஒரு விஷயம் தெரியுமா சிவா?’

‘என்னடி சாந்தினி?’

‘ஏதாவது நல்ல அறிவு பூர்வமானநிகழ்ச்சிகள் போனால் முதலாளி உடனே நிற்பாட்டிப் போடுவார்.’

‘அதெப்படி சாந்தினி?’

‘உங்களுக்குத் தெரியாதோ! வெளிநாட்டவர்களின் வேலை ஸ்தாபனங்களில் வேலையில் ஏதாவது பிழைகள்; விட்டால் அந்த வேலையில் இருந்து நிற்பாட்ட உரிமை இருக்கு. அதுவும் வேலைத்திறமையைக் கண்டறியும் காலம் என மூன்று மாதங்களை வழங்கி அந்தக் காலத்திற்குள்தான் செய்வார்கள். ஆனால், அவகாசம் கொடுத்து, எச்சரிக்கை செய்து, அதாவது மனிதாபிமான முறையிhல் கடிதங்கள் கொடுத்துத்தான் ஒரு வேலையில் இருந்து நிற்பாட்டுவார்கள். அதுவும் சரியான குறைவு. ஆனால் தமிழர்களின் வேலை நிறுவனங்களில் உடனடியாகவே வேலை நிறுத்தம்’

‘அப்படியோ சாந்தினி?’

‘அப்படித்தான் சிவா வேலை நிறுத்தம். போன் செய்வார்கள்;. நாளைக்கு வரத்தேவையில்லை.’

‘என்ன லண்டனிலயோ நடக்குது சாந்தினி?’

‘வேறெங்க கொழும்புக் கதையே சொல்லுறன் சிவா. லண்டனிலதான்.’

‘அப்படி நடக்கிற முதலாளியோ? என்னடி அறிவே. முதலாளிக்குக் காசு இருக்கிற திமிரோ? அவ்வளவு கனக்கக் காசு இருக்கோ! எப்படி இவ்வளவு பெரிய முதலாளியாக இருக்கிறது?’

‘அதுதான் எனக்கும் விளங்கவில்லை. இவர்கள் நேர்மையாக உழைத்துச் சேர்த்த காசுபோல எனக்குப் படவில்லைச் சிவா.

‘அப்போ எப்படியடி சாந்தினி பெரிய ஊடகங்களை கட்டணங்கள் வசூலிக்காமல் நடத்த முடிகிறது. ஆச்சரியமாகத்தான் இருக்கு.’

வெளிநாட்டில திடீரென பணக்காரர்களாக வருவதற்குப் பல வழிகள் இருக்கு.

‘அறிந்திருப்பீர்கள் தானே சிவா!’

‘அது எப்படி சாந்தினி?’

‘என்ன இந்தப் பெரிய எழுத்தாளருக்குத் தெரியவில்லை.’

‘சரி சரி இப்ப விளங்குது’

‘ஒரு விஷயம் தெரியுமா? ஹொலண்டில இக்கிற எனது மைத்துனருக்கு விஷேட அதிர்ஷ்ட லாபச்சீட்டு விழுந்து விட்டதாம் என்று கேள்வி’

‘எவ்வளவு காசு சாந்தினி?’

‘அதைக் கேட்காதேயுங்கோ! இலங்கைக் காசுக்கு ஏதோ எக்கச்சக்கமான லட்சமாம்.’

‘ஆ! அப்படியோ! எமது நாட்டில கஸ்டப்படுகிற சனங்களுக்கு கொஞ்சம் உதவி செய்யலாம்தானே! எவ்வளவு புண்ணியம் செய்ததாகிவிடும்’

‘உங்கட மனம் அப்பிடி மனித நேசத்தில சிந்திக்குது. ஆனால், அவனோ அதற்குப் பிறகு இலங்கையிலிருந்து அவனது சொந்தத் தாய் தகப்பன் தொலைபேசி மூலம் கதைக்க எடுத்தாலும் மறைந்துவிடுவானாம். அவனது மனைவிதான் கணவர் பற்றிய விளக்கங்கள் கொடுப்பாராம்.’

‘அட பாவி. ஏன் இப்படிச் செய்கிறான்? தாய், தகப்பன்தானே கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சிருப்பினம்’.

‘உங்களுக்கு சிவா எங்கட சனங்களின்ர குணம் தெரியாது. இந்தக் காலத்தில பணத்திலதான், தாய்,தகப்பன்,சகோதரங்கள், உறவினர்கள் தங்கியிருக்கினம்’

‘என்னடி அறிவே சொல்லுறாய்? ‘அர்ப்பனுக்குப் பவுசு வந்தால் அர்த்த இராத்திரியிலும் குடை பிடிப்பான்’ என்ற மாதிரியெல்லோ இருக்கு. இருந்தாப்போல் பணத்தைக் கண்டால் இப்படி மனங்கள் மாறுவதோ! அதுவும் தாய் தகப்பனுக்குத் தெரியுமா? சனங்கள் காசு வந்தவுடன் பெற்றோர்களை வரவழைத்துவிட்டு பாசமா காட்டிக்கொண்டிருக்கினம். தங்கட பிள்ளைப்பேறு – பிள்ளையளப்பார்க்க – வீட்டுக்காவல் – வீடு துப்பரவாக்குதல் – சமையல் அப்படி எத்தனை வேலைகள் தெரியுமா வயது வந்த பெற்றோர்களுக்கு. அவர்களின் மனங்களைக்கூடப் புரிந்து கொள்ளமாட்டார்கள். பெற்ற பிள்ளைகள் சிலர் பெற்றோர்கள் ஆபத்தான வருத்தமாக ஆஸ்பத்திரியில் இருந்தால்கூட எட்டியும் பார்க்கமாட்டார்கள். மறைவுச் செய்திகள் கேட்டாலும் மறைந்துவிடுவார்கள். ஆனால் பெருமைகள் அந்தஸ்த்துகள் எல்லாம் விவரித்து பத்திரிகைகளில் மாத்திரம் ஒரு பக்கத்தை விலைக்கு வாங்குவார்கள்.’

‘இது என்னடி சாந்தினி நாடகம்’

‘என்ன என்று நினைக்கிறீர்கள் சிவா? எல்லாம் வெளிநாட்டில வந்து பணம் காட்டுகிற விளையாட்டுத்தான். நீங்கள் சொல்லுமாப்போல நாடகம்தான். அதில் என்ன சந்தேகம். கணவன் -மனைவி, பெற்றோர் – பிள்ளைகள், நண்பர்கள் – நண்பிகள் எல்லோருமே உலகமேடையில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையான சிலதுகள் வஞ்சகமில்லாமல் நெஞ்சுக்குள் அழுதுகொண்டுதான் இருக்குதுகள்;’
‘அதுசரி, ஏதோ சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பினம் என்ற ஏதோ சொன்னாய் சாந்தினி? என்ன இலங்கைக்கும் திருப்பி அனுப்பினமோ?’

‘இலங்கைக்கு மாத்திரமில்லையாம். ஆசிய நாடுகளில் இருந்து வந்தவர்கள், அல்பானியா, அரபுநாடுகளில் இருந்து வந்தவர்கள், ஏன் அமெரிக்காவில் இருந்து வந்தவர்களைக்கூடத் திருப்பி அனுப்பினமாம்’
‘உனக்கு இந்த விடயங்கள் என்னெண்டு தெரியும சாந்தினி;?’

‘என்னுடைய சிநேகிதி உள்நாட்டு அலுவலகத்தில் (iஅஅபைசயவழைn னுநியசவஅநவெ) இப்படித் திருப்பி அனுப்புகிறவர்களுக்கு பிளேன் வசதிகள் சரியாக அமையும் வரைக்கும், இருப்பிடங்கள் ஒதுக்கிக் கொடுக்கும் செக்ஷனில் வேலை பார்க்கிறாள். அவளுக்கு லண்டனில் இருந்து அனுப்புகிற ஆட்களின் பட்டியல் தெரியும்.’

‘அப்படியே சாந்தினி!’

‘ஒம். அந்தப் பட்டியலில் இலங்கை ஆட்களின் பெயர்களைக் கண்டால் அவளுக்குச் சரியான கவலையாக இருக்கும். என்னிடம் கதைக்கும்போது கூறிக் கவலைப்படுவாள். இவங்களுக்கு என்ன தெரியும் எமது நாட்டில் சனங்கள் படுகிற கஷ்டங்களும், பிரச்சினைகளும்.’

‘கொஞ்சம் பொறு சாந்தினி. வேறு என்ன சொன்னவள்?’ உன்ர சிநேகிதி.

‘அனுப்பும்போது அவர்கள் திட்டமிட்டுத்தான் செயல்படுகிறார்கள் போல் இருக்காம். அனுப்புவதற்குரிய பிளேன் வசதிகள், பாஸ்போட் ஆயத்தங்கள் செய்யுமட்டும், கிட்ட உள்ள பொலிஸில் வந்து கையெழுத்து வைக்கும்படி கூறுகிறார்களாம். இப்படி மாதத்திற்கு ஒருமுறை கையெழுத்துப் போடும்படி கூறிப் பின்னர் கிழமைக்கு ஒரு தடவையாகச் சட்டத்தைச் சுருக்கிக் கொண்டு வந்து விடுவார்களாம்.’

‘அறிவே பேந்து என்ன நடக்குமாம்?’

‘கிழமைக்கு ஒரு தடைவ போய்க் கையெழுத்துப் போடத் தொடங்கும்போது, மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமாம் சிவா.’

‘ஏன் அவதானமாக இருக்க வேணுமாம் அறிவே?’

‘அப்படிப் போகும்போது ஒரு பேச்சும் இல்லாமல் அப்படியே மடக்கிப் பிடித்து பிளேனில் ஏற்றி விடுவார்களாம்?’

‘திடீரென்றோ? ஒருவித ஆயத்தமும் இல்லாமலோ! என்ன மனிதாபிமானமற்ற அரக்கத் தனமான செயல்.’

‘பிரிட்டிஷ்காரன் மனிதநேசம் அற்றவன்தானே. ஈராக் கைதிகளை எப்படிக் கொடுமைப்படுத்தி வதைத்திருக்கிறார்கள் என்று எல்லா ஊடகங்களும் மாறி மாறி உலகத்துக்குப் பரப்பிக் கொண்டிருக்கினம். பார்க்கவில்லையோ?’

‘அதைவிட்டிட்டு விஷயத்தைச் சொல்லு சாந்தினி’

‘உங்களுக்குத் தெரியுமோ? கையெழுத்துப் போடப்போறவர்கள் கைத்தொலைபேசி வைத்திருந்தால் முதலில் அதனை வாங்கி விடுவார்களாம். வெளித்தொடர்புகளை துண்டித்து விடுவார்களாம். சட்டத்தரணியையோ, இருப்பிடங்களில் உள்ளவர்களையோ அணுகமுடியாது செய்துவிடுவார்களாம் சிவா’

‘அப்போ என்னுடைய பைல் நம்பரைத்தாறேன் குடுத்துப்பாரேன் சாந்தினி. அனுப்புற பட்டியலில் என்னுடைய பெயரும் இருக்கோ என்று பார்க்க.’

‘என்ன பகிடியே விடுகிறீங்க சிவா?’

‘பகிடி இல்லை அறிவே. உண்மையாகத்தான் சொல்லுகிறேன். நானும் இப்போ ஒவ்வொரு கிழமையும் போய்த்தான் கையெழுத்துப் போடுகிறேன்.’

‘சாந்தினி அதிர்ந்தே போய்விட்டாள்’

‘உங்களை அனுப்பமாட்டாங்கள். நம்பிக்கையாக இருங்கோ சிவா’

‘அறிவே! ஏன்ன சொல்லுறாய். எனக்கு மட்டும் என்ன வேறு சட்டமா என்ன?’

‘உங்களை அனுப்பமாட்டாங்கள். என்னுடைய நண்பிக்கு நடந்த விடயம் தெரியுமா?’
‘என்ன நடந்தது சாந்தினி?’

‘அவள் கொழும்பிலே வேலை செய்தபோது ஏற்பட்ட சிங்கள நண்பர் ஒருவரின் நட்பு’

‘சிங்கள – தமிழ் உறவு. கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது’

அன்பு என்கிறதை விலை கொடுத்து வாங்குகிறதில்லைத்தானே! லண்டனுக்கு வந்தபின்னரும் அவர்கள் குடும்பத்தோடு அவர்களின் நட்பு ஆறு வருடங்கள்வரை நீடித்திருக்க வேண்டும். மதிய நேரம். நண்பியிடம் சாப்பாட்டுப் பார்சலைக் கொடுத்துவிட்டு கையெழுத்து இடச் சென்றவனை அதிக நேரமாகியும் காணவில்லையாம். கடுங்குளிரில் கால்கள் கடுக்க காத்துக்கொண்டேயிருந்தாளாம். களைத்துப் போய் கவலையோடு திரும்பிவிட்டாளாம். கனத்துக்கொண்டதாம் இதயம். களைப்பில் கட்டிலில் கண்ணயர்ந்துவிட்டாளாம். காலையில் தொலைபேசி அழைப்பு அலறிக்கொண்டிருந்ததாம். கொழும்பில் நின்று கதைக்கிறேன். அவன் தொட்hந்து விபரித்தானாம். அவள் பிரேமை பிடித்தவள்போல் ஆகிவிட்டாளாம். ‘ஓ’வென்று வீடு பிளக்க அழுதாளாம். இனம் -மொழி – கலாச்சாரம் இவைகளைத்தாண்டி அந்த அன்பு வெளிவந்ததை உணர்ந்தேன். அவளால் அழுது தீர்க்கத்தான் முடியும்போல, அழுதுகொண்டே எனக்குக் கூறிக்கொண்டிருந்தாள். அதுவும் ஒரு கொடுமைபோல எனக்குப் பட்டது சிவா’
‘ஏனடி அறிவே ! அவள் திருமணம் செய்யவில்லையோ?’

‘அவள் திருமணம் செய்து இரண்டு பெரிய பெண்கள் இருக்கிறார்கள். திருமணம் செய்து பிள்ளைகள் இருந்தால் வேறு ஒருவரோடும் அன்பாக இருக்கக்கூடாதோ!’

‘நான் அப்படி அன்பாக இருக்கக்கூடாதென்று சொன்னனானே! அதுகூட நாகரிகம், புரிந்துணர்வின் உச்சக்கட்டம்தான். எல்லாவற்றிலும்; சரியாக நடந்துகொள்ள வேண்டும்.’

‘அதுசரி. நீங்;கள் ஏன் என்னை அறிவு …அறிவு.. என்று கூப்பிடுகிறீர்கள் சிவா? நான் என்ன மொக்கு என்றுதானே! சிரித்துக்கொண்டே கேட்டாள்;.

‘இல்லை. யார் சொன்னது உன்னை மொக்கு என்று சாந்தினி. நீ அறிவுள்ள புத்திசாலிப்பெண் என்பதால்தான் கூறினேன். ஏன் அப்படி நினைத்தாய்?’

‘எனக்கு நீ மொக்கு, உனக்கு ஒன்றும் தெரியாது, உன்ர சின்ன மண்டைக்குள் என்ன விளங்கப்போகுது?, விளங்காது’ என்றெல்லாம் கேட்டுத்தான் பழக்கம்.

‘அதுதான் அப்படி நினைத்தாயோ? எவருக்கும் அப்படிக் கூறுவதற்கு உரிமை இல்லை. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏதோ திறமைகள் மறைந்து கிடக்கும். அதனை மற்றவர்கள் தட்டிக் கொடுக்க வேண்டும். அது தெரியாவிட்டால் அமைதியாக இருக்க வேண்டும். மனிதனால் முடியாதது என்ன இருக்கிறது! கவலைப்படாதே!’

‘அவளுக்குச் சரியான சந்தோஷமும், உற்சாமுமாய் இருக்கிறது போல.

‘அறிவே இப்போ உன்னுடைய கோபங்கள் எங்கே? எல்லாம் மறந்திட்டாய் என்ன? றிசீவரை வைக்கட்டா சாந்தினி? நித்திரை வருகுது.’

‘அவள் சிரித்துக்கொண்டே ‘ஓம்’ வையுங்கோ சிவா. அதிக நேரமாகக் கதைச்சிட்டோம் போலிருக்கு.’

‘அறிவு பூர்வமாகத்தானே பல விடயங்கள் பற்றிக் கதைத்தோம். எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? பரவாயில்லை. இப்போ கோபம் எல்லாம் இறங்கி சந்தோஷமாய் இருக்கிறாய் தானே சாந்தினி!’
‘ஒம் சரியான சந்தோஷம்’

‘போய் சந்தோஷமாக நித்திரையைக்கொள் சாந்தினி’

‘குட் நைற்’

(2005 ஆம் ஆண்டு இலங்கை ‘சுடர்ஒளி’ பத்திரிகையில் – நவஜோதி அகஸ்தியர் – என்ற எனது பெயரில் வெளிவந்தது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *