அந்த(ரங்க)ப் படம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 13,592 
 
 

லக்ஷ்மி ரொம்ப நாளாக என்னைக் கேட்டுக் கொண்டிருந்ததால் ‘சரி இந்த ஹெல்ப்பை நாம் பண்ணலாமே’ என்று நினைத்து, நான் என் ‘ப்ரெண்ட்ஸ்’ சில பேரை ரகசியமாக விசாரித்து ‘அந்த’ இடத்தைக் ஒரு வழியாக கண்டு பிடித்தேன்.

“எனக்கும் ‘அந்த மாதிரி’ படம் பார்ப்பது என்றால் ரொம்ப பிடிக்கும்.

லக்ஷ்மியிடம் போய் “லக்ஷ்மி,நான் விசாரிச்சு ‘அந்த படம்’ பாக்க ரெண்டு டிக்கட்டும் வாங்கி விட்டேன்.ஆபீஸ் விட்டதும் நீ தயாரா இரு.நான் சாயங்காலம் வந்து உன்னே அழைச்சுக் கிட்டுப் போறேன்”என்று நான் சொல்லி முடிக்கவில்லை,லக்ஷ்மி முகம் குப்பென்று சிவந்து வேர்த்து கொட்டியது.

நல்ல வெளுப்பான லக்ஷ்மியின் முகம் நன்றாக சிவந்து இருந்ததையும் நான் கவனிக்கத் தவற வில்லை.

லஷ்மி ஒத்துகிட்டபுறம் என் கவனம் ‘ஆபிஸ்’ வேலையிலா செல்லும்.

என் மனம் சாயங்கால ‘ப்ரோக்ராமை’ பற்றி எண்ணி குதூகலித்து கொண்டு இருந்தது.

முன்னே எப்போவோ ஒரு தரம் நான் ‘அந்த மாதிரி’ படத்திற்கு போய் இருக்கேன்.ஆனா இப்போ லக்ஷ்மி ‘கம்பெனி’க் கொடுக்கப் போவதால் எனக்கு ரொம்பத் “திரில்லாக” இருந்தது.

நான் அடிக்கடி சாயங்காலம் ‘ப்ரோக்ராமின்’ டிக்கட்கள் இருக்குதான்னு ‘பர்ஸை’த் திறந்து பார் த்துக் கொண்டு இருந்தேன்.

‘ஆபீஸ்’ முடிந்ததும் தயாராய் இருந்த லக்ஷ்மியைக் கூட்டிக் கொண்டு ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு பறந்தேன்.

வழியில் ஒரு நல்ல ஹோட்டலில் நிறுத்தி நானும்,லக்ஷ்மியும் நல்ல ‘ஹெவி ‘டிபன்’ சாப்பிட நினைத்து ஒரு பெரிய ஹோட்டலுக்கு அழைத்து போனேன்.

’டிபன்’ சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது,நடு நடுவே நான் லக்ஷ்மியை கவனித்து கொண்டு தான் இருந்தேன்.

பயத்துடன் கூடிய,ஒரு பதை பதைப்பும் தெரிந்தது லக்ஷ்மியின் முகத்தில்.

முதல் தடவை ‘இந்த மாதிரிப் படம்’ பார்ப்பது என்றால் யாருக்கும் இந்த மாதிரி தான் பயமும், ஒரு வித பதை பதைப்பும் நிச்சியமாக இருக்கும்.அதுவும் என்னோடு, உட்கார்ந்துக் கொண்டு ‘அந்தப் படத்தை’ பார்பது என்றால் யாருக்கு இருந்தாலும் ஒரு பயம்,பதை பதைப்பு இருப்பது நியாயம் தானே.

’டிபன்’ முடித்துக் கொண்டு நாங்கள் இருவரும் ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு அந்த ஒதுக்கு புறமான இடத்திற்கு போய் சேர்ந்தோம்.

ஆட்டோவை விட்டு கிழே இறங்கி இரண்டு பேரும் ‘எங்களை யாராவது பார்க்கிறார்களா’ என்று நாலா பக்கமும் பார்தோம்.நல்ல வேளையாக எங்களுக்கு தொ¢ந்தவர்கள் யாரும் எங்கள் கண்ணில் பட வில்லை.

பயந்த படியே லக்ஷ்மி என் பின்னாலே வர,நான் முன்னே போய் டிக்கட்டை காட்டி அந்த ஏ.ஸி. ஹாலுக்குள் நுழைந்து ஒரு ஒதுக்கு புறமான சீட்டாகப் பார்த்து இருவரும் உட்கார்ந்து கொண்டோம்.

அந்த குளு குளு ஏ.ஸி ஹாலிலும் லக்ஷ்மியின் முகத்தில் முத்து முத்தாக வேர்த்து இருந்ததை நான் கவனிச்சேன்.தன் முகத்தை கைகட்டையால் துடைத்துக் கொண்ட லக்ஷ்மியைப் பார்த்து “பயப் படாதே.படம் ஆரம்பச்சுட்டா அப்புறமா நம்மை யாரும் இந்த இருட்லே பாக்க முடியாது…”என்று நான் சொல்லி முடிப்பதற்குள்,‘லைட்டை’ எல்லாம் ஆப்’ பண்ணிவிட்டு படத்தை போட ஆரம்பித்தார்கள்.

படம் புராவும் ‘ஆண் பெண் காம விளையாட்டு’ தான். அது ‘பாரின்’ படம் வேறு ஆயிற்றே. கேட்க வேண்டுமா.நல்ல ‘லைட்டிங்கில்’ பல வித ‘போஸ்களில்’ மன்மத லீலைகளை நடத்திக் கொண்டு இருந்தார்கள் அந்தப் படத்தில் நடித்து வந்தவர்கள்.

கைக் குட்டையால் தன் முகத்தில் இருந்த வேர்வையை அடிக்கடி துடைத்த வண்ணம் இருந்த லக்ஷ்மியை நான் கவனித்துக் கொண்டுத் தான் இருந்தேன்.

படம் முடிந்தவுடன் ‘நாம இந்த இடத்தை விட்டு சீக்கிரம் போயிடலாம்’ என்று எண்ணி ஒரு ஆட்டோவை கூப்பிட்டேன்.

அந்த ஆட்டோ வர முடியாது என்று கையைக் காட்டி விட்டு போய்விட்டான்.

நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

என் கையை பிடித்து கொண்டு “ரொம்ப ‘தாங்க்ஸ்டா’ ரவி உனக்கு. எனக்கு இந்த கணவன் மணைவி இல்லற வாழ்க்கை ரகசியங்க தெரியாம இருந்திச்சு.காரணம் என் ‘பாமிலி’ ஒரு ‘கன்சர்வேடி வ், ஆர்த்தடாக்ஸ்’குடும்பத்தைச் சேந்தது.என் வீட்லே இந்த ‘செக்ஸ்’ விஷயம் பற்றி பேச என்னுடன் கூட யாரும் கிடையாது. நான் ஒரு ‘சிங்கல் பார்ன் சைல்ட்’ வேறே. என்னால் ’செக்ஸ்’ புஸ்தகங்களும் வீட்டுக்கு கொண்டு போய் பாக்க முடியாம இருந்திச்சு. எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் நிச்சியம் பண்ணி இருக்க்காங்க ரவி.அதுக்கு முன்னாடி இந்த ‘ஆண் பெண் உடல் உறவு’ பற்றி தெரிஞ்சு கொள்ளத் தான் நான் உன்னை இந்த ‘ஹெல்ப்பைப்’ பண்ணச் சொன்னேன். இந்த படம் நான் பாத்த பிறகு எனக்கு எல்லா விவரமும் முழுக்க புரிஞ்சிடுச்சி. உனக்கு ரொம்ப தாங்க்ஸ்டா” என்று சொல்லி என் கையைப் பிடித்து குலுக்கினான்,அடுத்த மாசம் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகும் என் நண்பன் லக்ஷ்மி நரசிம்மன் ஐயங்கார்.

ஒரு ஆப்த நண்பனுக்கு நல்ல சமயத்தில் நாம் இந்த மாதிரி ‘ஹெல்ப்பை’ப் பண்ணினதை நினைத்து நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

பிறகு கிடைத்த ஒரு ஆட்டோவிலே ஏறிக் கொண்டு என் நண்பன் லக்ஷ்மி நரசிம்மனை அவன் வீட்டிலே ‘ட்ராப்’ பண்ணி விட்டு நான் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *