(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கீழ் நாட்டிலே ஒரு மன்னன் இருந்தான். அவனது செல்வத்தைப் பார்த்துக் குபேரனே வயிறெரிந்து வலிப்புக் கண்டுவிட்டான். அத்தனை செல்வம்! அளவிலாச் செல்வம்!
முத்துக்களைத் தூற்றிப் பொறுக்க, மணிக் கனமொன்று அவனுக்கிருந்தது; கண்ட பேரண்ட பட்சிகளின் முட்டைகள்போல் பெரிய முத்துக்களே அவன் பொக்கிஷத்தில் சேரும். டால் அடிக்கும் வைரங்களே அவனது ‘பேப்பர் வெயிட்டு’கள். சேவகரிடம் கோபம் வந்தால், அந்த வைரக் கற்களைத் தான் அவர்கள்மேல் அவன் வீசியடிப்பான். அவனது ஸ்நாக அறைக் கூரை, சந்திரகாந்திக் கற்களால் பாலப்பட்டிருந்தனவாம்; மதியின் குளிர் நிலவை வடித்து, அவனது சிம்மத் தலையிலும் மேனியிலும் அவை பொழிந்தனவாம். இதெல்லாம் ஆதாரமுள்ள தஸ்தவேஜிகள் கூறும் தகவலாகும்.
அம் மன்னனின் மற்றெல்லா அரும் பொருள்களிலும் மகா அருமையான வேறிரண்டு உண்டு, சுண்ணாம்பும் வெண்ணெயும் போல், கள்ளும் பன்னீரும் போல், ஒன்றுக் கொன்று அவை மிக மாறானவை. ஒன்று, பொறுக்கி யெடுத்த ஐந்நூறு கட்டழகிகளடங்கிய அவனது அந்தப்புரம்; மற்றது, ஆய்ந்து தேர்ந்த ஐந்நூறு ஒட்டைகளடங்கிய அவனது ராஜாங்க லாயம்,
தனது அந்தப்புரக் காதலிகளை அவன் ஆண்டு முழுதும் வசந்தந்தின் களிப்பிலே யிருத்தி, சர்வ போக கேளிக்கைகளோடு போஷித்து வந்தான். அவனது விருந்தினரெல்லாம், அக் கட்டழகிகளின் சுந்தரப் பொலிவைப் புகழ்ந்து போற்றினார்கள். அவ்வழகு சுந்தரிகளின் ஹம்ஸாதூளியின் இன்பத்தாலும், அவர்கள மலர்மணப் பெருமூச்சு மேலே விசும் பேரானந்தத்தாலும், விருந்துக்கு வந்த அதிதிகள் பரவச மெய்தினார்கள்.
இப்படி யிருக்கையிலே, திடீரென் றொருநாள் அவ்வந்தப்புரக் காட்டழகிகள் கலகத் தொடங்கி விட்டார்கள். தாங்கள் அளவுக்குமேல் வேலை செய்வதாக முணு முணுத்தார்கள். அந்த ஐந்நூறு ஓட்டைகள் மீதும் அவர்களுக்குப் பொறாமையும் மூண்டது; அவை மட்டில் நாள் முழுதும் வேலேயின்றித் தின்று குடித்து,
தங்கள் திமிலழகையும் வணாந்திர எழிலையும் சிந்தனை செய்து காவல் கழிக்கின்றனவே என்று குமுறினார்கள்.
அவர்களது கூச்சல் அரசனின் காதுகளை எட்டியது. அவர்களின் குரூரமான திடீர் வேலை நிறுத்த யோசனையைக் கேட்டு, அவன் திடுக்கிட்டுக் கவலைகொண்டு நெஞ்சங் கலங்கினான். ஒரு புறம் துயரமும் ஒரு புறம் ஆத்திரமும் சூழ்ந்து, அவனது பல தார மூளையை இருளடையச் செய்தது. எந்த நெருக்கடியிலும் கடவுளைப் பிரார்த்தித் தறியாத அவன் இந்த நெருக்கடியிலே மன்றாடிப் பிரார்த்தனை புரியலானான்: “தெய்வமே! எனக்கு வழி காட்டு, கருணைக் கடலே ! இம் முட்டுக்கட்டையைத் தீர்” என்று இறைஞ்சினான்.
ஆண்டவன் பதிலும் உடனே வந்தது. சமாதான தேவதையின் திருநடனச் சிலம்பொலி, ஆயுதப் பரிகாணப் பசுஞ்சோலை காடுகளிலே பாய்ந்து மறைந்தது. போர் முரசு கொட்டி முழுங்கியது. மரணத் தேவனும் புதிய புதிய நகர்களிலே ஊழிக்கூத் தாடலானான். கீழ்நாட்டு மன்னனும் தனக்குக் கதி பிறந்த களிப்பிலே மூழ்கியவனாய், யுத்த பூமியான ஆசேல் டாமாவுக்குத் தனது வீர தீர ஓட்டைப் படையை விறு விறென்று அனுப்பிவிட்டான்!
ஸோவியத் ருஷ்யாவில் அரசர்களைப் பிடிக்காது. ஆனால், சதுரங்க விளையாட்டில், ‘அரசு’ வேண்டுமே, என்ன செய்வது? காக்கண் பிரதேசத்துக் குடியானான் ஒருவன் ஒரு யுக்தி செய்திருக்கிறான். சதுரங்க ‘அரசன்’ ‘மந்திரி’ காய்களுக்கு, ஸோவியத் ஜனாதிபதியும் அவரது மனைவியும் என்று பெயர் சூட்டிவிட்டான்; யானையைக் குடியானவன் குடிசை என்றும், ஓட்டையை வேட்டையாடி எனவும், குதிரையைக் கலைமான் என்றும் புதிய பெயர்களால் அழைத்து, பொது உடைமை ராஜாங்கத்தின் ‘பெருமையை’ அவன் காப்பாற்றி யிருக்கிறான்!
– சக்தி இதழில் 1941-இல் வெளியானது