ஃபிராக் செக்க்ஷன்! – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,422 
 
 

சுதா.. நீ சுடிதார் செக்ஷனுக்கு போ… மாலதி நீ மிடி….சாந்தி…. நீ பிரா செக்க்ஷன்… மைலா….நீ ஃபிராக் செக்க்ஷன் வாரியாக பிரித்து அனுப்பியபோது வழக்கம் போல் ஏமாற்றம் இருந்தது சுதாவுக்கு.

அந்த கடையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை வெவ்வேறு செக்க்ஷனுக்கு அனுப்புவார்கள். எல்லோருக்கும் எல்லா செக்க்ஷன் வேலையும் தெரிய வேணடும் என்பதற்காக.

ஆனால் சுதாவை மட்டும் மானேஜர் தவறியும் ஃபிராக் செக்ஷனுக்கு அனுப்புவதில்லை. அவளுக்கு ஃபிராக் செக்க்ஷனில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை. தினமும் எதிர் பார்ப்பாள். ஆனால் ஏன் மானேஜர் அனுப்ப மாட்டேன் என்கிறார்?.. மதியம் சாப்பாட்டு நேரத்தில் மனதில் இருந்ததை மேனேஜரிடமே கொட்டிவிட்டாள்.

ஆமா…. சுதா… உன்னை ஃபிராக் செக்க்ஷனுக்கு அனுப்பறது இல்லை…. காரணமிருக்கு. ஃபிராக் செக்க்ஷன் குழந்தைகளுக்கான டிரெஸ்… டிரெஸ் எடுக்க எல்லாம் குழந்தைகளோட வருவாங்க…நீ கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆகியும் குழந்தை இல்லாதவ….அப்போ கண்டிப்பா உன் மனசுல எல்லோரையும் போல நமக்கு குழந்தை பாக்கியம் இல்லையேனு ஒரு ஏக்கம், வருத்தம் தோணும்… அப்படி உன்னோட மனசை கஷ்டப்பட வைக்க விரும்பலை நான்… அதான் உன்னை ஃபிராக் செக்க்ஷனுக்கு மட்டும் போடறதில்லை… தப்பா சொல்லு.. என்று தன்னிடம்
சொன்ன மானேஜரை நெகிழ்ச்சியாய் பார்த்தாள் சுதா.

– கே. ஆனந்தன் (ஜனவரி 2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *