வித்யா மீண்டும் வேலைக்குப் போகிறாள் !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 6,569 
 

ஸ்ரீ கணேஷ் பிளாஷ்டிக் கம்பெனி அலுவலகத்திற்குள் வித்யா நுழையும்போது சுவர்க்கடிகாரம் பத்தடித்து ஓய்ந்திருந்தது. அவள் இருக்கையில் சென்று அமரவும் மேஜையில் இருந்த தொலைபேசி ‘ டிரிங் டிரிங் ‘ என்று ராகம் பாடியது. வித்யா கையில் எடுத்து ஹலோ என்று பேசிவுடன், மறுமுனையில் இருந்து முதலாளி இருக்காரா ? என்ற பெண் குரல் கேட்டது.

“மேடம் நீங்க யாரு? முதலாளிக்கு நீங்க என்ன வேணும்?” என்று கேட்டாள் வித்யா

“ நான் முதலாளியோட ஒய்ப் .. சரி நீங்க யாரு? புதுசா உங்கள் குரல் இருக்கிறதே முதலாளியோட செகரெட்டரி இருக்காரா? “ என்று கேட்டாள் முதலாளியின் மனைவி

“ நான்தான் முதலாளியோட செகரெட்டரி என் பெயர் வித்யா நேத்துதான் வேலையில் சேர்ந்திருக்கேன். முதலாளி வெளியே போயிருக்கிறார். அவர் வருவதற்கு இன்னும் மூன்று மணி நேரமாவது ஆகும்”

“ நான் அவரிடம் ஒரு வாரமாக பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என்று ஒரு வாரமாக சொல்லிக் கொண்டிருக்கேன். தினமும் ஏதாவது ஒரு காரணம் கூறி மறந்திட்டேன்னு சொல்லிடறாரு இன்னிக்கி ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு கடைசி நாளாகும். வந்தால் அவரிடம் ஞாபகப்படுத்தி விடுங்க “ என்று கவலையுடன் கூறி போனை வைத்துத் விட்டாள்.

ஐந்து நிமிஷம் கழித்து தொலைபேசி மீண்டும் அலறியது. தொலைபேசியை எடுத்தால் முதலாளி பாஸ்கரன் விமான நிலையத்திலிருந்து பேசினான். “ வித்யா, நான் அவசரமாக ஜப்பான் போறேன். எதுவும் முக்கியத் தகவல் வந்தால் எனக்கு ஜப்பானுக்கு போன் பண்ணு. வருவதற்கு ஒரு வாரம் ஆகும். வேறே ஏதாவது முக்கிய தகவல் இருக்கா” என்று கேட்டான் பாஸ்கரன்.

“ சார் உங்க பையன் எந்த ஸ்கூல்ல படிக்கிறான். அவனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என்று உங்க ஒய்ப் போன் செய்தாங்க..”

“ ஓ மை காட் வித்யா ஸ்கூல் பீஸ் கட்டச் சொன்னாள் நான்தான் மறந்திட்டேன். பணம் கட்டுவதற்கு நீ ஏற்பாடு செய் “ என்று கூறி போனை உடனே வைத்து விட்டான்.

வித்யா யோசித்தாள்.. இன்று ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு கடைசி நாள். யாரிடமும் கொடுத்தாலும் பொறுப்பாக கட்டுவார்களா? என்ற சந்தேகத்துடன் அவளே ஸ்கூல் பீஸ் கட்டி விட்டு அதற்கான ரசீதை பாஸ்கரன் வீட்டில் கொண்டு போய் கொடுத்தாள்.

பாஸ்கர் ஜப்பான் சென்றதைப் பற்றியும் அவர் வருவதற்கு ஒரு வாரம் ஆகலாம் என்று கூறிவிட்டு வித்யா வந்தாள். வித்யாவின் பொறுப்புணர்ச்சியை உணர்ந்தோ என்னமோ, அன்றையிலிருந்து பாஸ்கரன் மனைவி வித்யாவிடம் அன்பாக பேசினாள். பாஸ்கரனுக்கு இரண்டு குழந்தைகள் மெட்ரிக்குலேஷன் ஸ்கூலில் படித்து வந்தார்கள்.

ஒருநாள் பாஸ்கரன் மனைவி, வித்யாவிடம் “ பெண் கணக்கில் மார்க் கம்மியாக் எடுத்திருக்கிறாள். அவள் டீச்சரை இது சம்பந்தமாக ஒரு நடை பார்த்து விட்டு வாருங்கள் “ என்று மரியாதையுடன் கூறினாள்.

வித்யா , அவள் வீட்டிலிருந்து வரும் வழியில்தான் பாஸ்கரன் குழந்தைகள் படிக்கும் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் இருந்தது. என்வே வித்யா தினமும் ஸ்கூல்க்குச் சென்று, டீச்சரையும் , பாஸ்கரன் குழந்தைகளிடம் அன்பாக் பேசி வருவதையும் வழக்கமாகக் கொண்டாள். போகப்போக நாளடைவில் குழந்தைகள் அவர்களுடைய அம்மாவை விட வித்யாவிடம் அதிகம் சார்ந்திருக்க விரும்பினார்கள். ஒருநாள் பாஸ்கரன் மனைவி வித்யாவிடம் “ வித்யா உனக்கு ரெஸ்ட் இருக்கறப்போ என்னோட குழந்தைகளுக்கு தினமும் ஒருமணி நேரம் டுயூஷன் எடுங்கள். உங்ககிட்டன்னா என்னோட குழந்தைகள் நன்றாகப் படிக்கும் என்று நினைக்கிறேன் நம்புகிறேன். ” என்று அன்புடன் கூறும்போது வித்யாவால் மறுத்துக் கூற முடியவில்லை.

தினமும் பாஸ்கரன் வீட்டிற்க்குச் சென்று வித்யா குழந்தைகளுக்கு இரவு ஒருமணி நேரம் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க, அக்குழந்தைகளும் ஆர்வமுடன் படித்தார்கள். அவர்களுடைய அப்பா பாஸ்கரனுக்கு தன் குழந்தைகள் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கி வருவதைப் பார்த்ததும் மகிழ்ந்து வித்யாவிடம் அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்க ஆரம்பித்தான்.

வித்யா ,அலுவலக வேலைகளையும், பாஸ்கரன் இல்லாத போது அவன் இல்லாத குறையே தெரியாமல் பொறுப்புடன் பார்த்துக் கொண்டாள். பெரிய பெரிய வியாபாரிகளும் பாஸ்கரனை எதிர்பாராமல் வித்யாவிடம் பிசினஸ் சம்பந்தமாகப் பேசி விட்டுப் போய் விடுவார்கள். எத்தனையோ பெரிய பெரிய பிசினஸ் சம்பந்தமாக பாஸ்கரனைக் கலந்து பேசாமலே வித்யாவே முடிவெடுத்து விடுவாள். கடவுள் துணையாலோ அவளுடைய அறிவின் முதிர்ச்சியினாலோ. ஸ்ரீ கணேஷ் பிளாஷ்டிக் கம்பெனி வித்யாவின் நிர்வாகத்தில் அதிக லாபம் ஈட்டியது. மேலும் முடிவுக்கு வராத வீட்டு பிரச்சனைகளையும் சில சமயங்களில் பாஸ்கரன் மனைவியும் அவளிடம் கலந்து பேசியும் ஒரு தீரமானமான முடிவுக்கு வருவாள். பாஸ்கரனும் ஆபீஸ் சம்பந்தப்பட்டவைகளையும் அவளுடன் சில சமயங்களில் கலந்து பேசித்தான் ஒரு முடிவெடுப்பான்.

வித்யா தினமும் அலுவலகம் புறப்படும் முன் கண்ணாடியின் முன் நின்று தன் அழகைத் தானே கண்டு வியப்படைவாள். திகுதிகுவென்றும் மினுமினுக்கும் சிவப்பு நிற உடம்பும், பளபளக்கும் இதழ்களும், அவளுடைய சிரிக்கும் கண்கள் நடிகை மீனாவை நினைவு படுத்தும். ,அலைஅலையாக காணப்படும் கூந்தலும், பிற பெண்களே அவளைப் பார்த்துப் பொறாமைப்படும்போது ஆண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

அன்று இரவு எட்டு மணி இருக்கும். அந்த இரவை வித்யாவால் மறக்க முடியாது. ஒரு முக்கியமான அலுவலகக் கோப்பில் அவசரமாக பாஸ்கரிடம் கையொப்பம் வாங்க வேண்டும். எனவே வித்யாவே அந்தக் கோப்பை எடுத்துக் கொண்டு கிள்ம்பினாள். அவள் கிளம்பும்போது சிறுசிறு தூறல்களாக விழுந்த மழையானது. அவள் பாஸ்கரன் வீட்டினை நெருங்கும்போது பெருமழை பிடித்துக் கொண்டது. வித்யா மழையில் முழுக்க் நனைந்து விட்டாள். பாஸ்கரன் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினாள்.

பாஸ்கரன்தான் கதவைத் திறந்தான். அவன் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. திறந்தவன் “ என்ன வித்யா, இப்படி மழையிலே நனைந்துகொண்டே வந்திருக்கே “ என்று கேட்டுக் கொண்டே அவளை உள்ளே அழைத்தான். வித்யாவும் முகத்தில் வடிந்த மழை நீரை புடவைத் தலைப்பினால் துடைத்துக் கொண்டே “ சார் அவசரமாக ஒரு கோப்பில் உங்கள் ஷைன் தேவையிருந்தது. அதுதான் அவசரமாக நான் இங்கே வந்தேன்” என்று கூறிக்கொண்டே அவன் வீட்டினுள்ளே சென்றவள் திகைத்தாள்.

வீட்டின் முன் ஹாலில் மதுப்பாட்டிலும் , மது நிரம்பியக் கோப்பைகளும் காணப்பட்டன. பாஸ்கரன் வீட்டில் அவன் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லை என்றால் இப்படி வீட்டிலேயே ‘ மது பார் திறந்து விடுவார் போல் இருக்கிறது ‘ என்று வித்யா தனக்குள்ளே நினைத்துக் கொண்டாள்.

வித்யா கேட்காமலேயே “ வித்யா, என்னோட ஒய்ப் , குழந்தைகள் எல்லாம் நேத்துதான் அவசரமாக , அவள் அம்மாவுக்கு ஹெல்த் சரியில்லைன்னு என்று போன் வந்து போய் இருக்கிறார்கள்… என்றவன் மதுக் கோப்பையைக் காலி செய்து விட்டு கீழே வைத்துவிட்டு , வித்யாவை இப்போதுதான் ஏதோ புதிதாக் அன்றுதான் பார்ப்பது போல் அவளை வெறியுடன் பார்த்தான்

வித்யா சிற்பி செதுக்கி வைத்த சிலைபோல் நின்றிருந்தாள். அவள் மழையில் நன்கு நனைந்து இருந்ததால், அவளுடைய மெல்லிய புடவையானது உடம்புடன் ஒட்டிக்கொண்டு அவளுடைய கவர்ச்சிகளை மேலும் நன்கு வெளிப்படுத்தின.

பாஸ்கரன பார்வை சரியில்லை என்பதை உடனே உணர்ந்தகொண்ட வித்யா “ சார் , நான் நாளைக்கு வருகிறேன். இப்போது உங்கள் நெலமை சரியில்லை என்று கூறியவள் வெளியேற முற்பட்டவளை, பாஸ்கரன் விரைந்து சென்று , அவளை ஒரு கையால் பிடித்துக்கொண்டே, மறு கையினால் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.

வித்யா பதட்டத்துடன் “ சார்.. வேண்டாம். இது ரெம்பத் தப்பு.. என்று கூறிக்கொண்டே விலகிக் கொண்டே ஒரு அளவுக்குத்தான் அவளால் போக முடிந்தது. அவள் மேலும் அவனிடம் ஏதோ கூறுவதற்குள், அவளை அவன் மிக இறுக்கமாக அணைத்துக் கொண்டு , அவளது பளபளக்கும் இதழ்களில் தன் இதழ்களைப் பதித்து விட்டு அவளது உணர்ச்சியைத் தூண்டி விட்டு ,வித்யாவை தன் வசம் இழக்கச் செய்தான். வித்யா தன்னையே அவனிடம் இழந்தாள் என்பதை விட இழக்கும்படியான சூழ்நிலை அப்போது அங்கே அமைந்து விட்டது.

பண்பான மனிதனையும் இந்த மது மிருகம் ஆக்கி விடும் என்பதைப் பாஸ்கரன் இரவு தன்னிடம் நடந்த கொண்ட செயல்பாடு மூலம் வித்யாவால் நன்கு உணர முடிந்தது. .ஒரு வாரம் நன்கு யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள். தபாலில் தன் ராஜினாமாக் கடிதத்தைப் பாஸ்கரனுக்கு அனுப்பி வைத்தாள். அவள் உடல் இயங்கினாலும் அவள் மனம் முழுமையாக இயங்கவில்லை. இது அவளுக்கே ஆச்சரியமாக் இருந்தது.

வித்யாவின் ராஜினாமாக் கடிதம் கிடைத்தவுடன் பாஸ்கரன் அதிர்ச்சி அடைந்தான். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள அவனுக்கு ஒரு வாரம் பிடித்தது. தனது வலது கையே ஒடிந்தது போல் உணர்ந்தான். வித்யாவை அவளது வீட்டிலே சென்று பார்த்து, அவளது ராஜினமாக் கடிதத்தினை வாபஸ் வாங்கும்படி வற்புறுத்தினான். வித்யா அந்த இரவுச் சம்பவத்தினை நினைத்தவள், அவனிடம் பேசவே பிடிக்க வில்லை. அவன் அவளைப் பலவிதமாகச் சமாதானம் செய்து பார்த்தான். தோற்றுப் போனான் என்றுதான் கூறவேண்டும்.

பாஸ்கரன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றாலும் , மீண்டும் மீண்டும் தினமும் அவள் வீட்டிற்கு வந்து தன் தவறை மன்னிக்கும்படியும் இனிமேல் அப்படி ஒரு சம்பவம் எந்தச் சூழ்நிலையிலும் தன்னால் நிகழாது என்று உறுதி அளித்தான். வித்யா அவனிடம் “இனிமேல் இதுபோன்று அடிக்கடி என் வீட்டிற்கு வராதீர்கள். நான் யோசித்து என் முடிவைச் சொல்கிறேன் “ என்றாள்.

வித்யா ஒரு நாள் ஸ்ரீ கணேஷ் பிளாஸ்டிக் கம்பெனியையும் அதன் அலுவலகத்தையும் பார்க்கச் சென்றாள். அவளைப் பார்த்தவுடன் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எல்லாம் சொல்லி வைத்த மாதிரி ஒரே மாதிரி “ வித்யாம்மா இப்படி செய்து விட்டீர்களே. நீங்கள் இல்லாமல் கம்பெனி கம்பெனியாக இல்லை. முதலாளியும் முன்பு மாதிரி கம்பேனியின் மீது கவனம் செலுத்தாமல் இருக்கிறார். எங்கள் மீதெல்லாம் காரணம் இல்லாமல் எரிந்து எரிந்து விழுகிறார்.
.
அதற்கு எல்லாம் நீங்கள் இங்கு வராதுதான் காரணம் என்று எங்களுக்குத் தெரிகிறது. போற போக்கைப் பார்க்கும்போது, முதலாளி கம்பெனியை ,இழுத்து மூடி விட்டு எங்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்பி விடுவார்போல் தோன்றுகிறது. நாங்கள் கஞ்சிக்கு அலைவதைத் தவிர வேறு வழியே எங்களுக்குத் தெரியவில்லையம்மா ! . நீங்கள்தான் கம்பெனியை மறுபடியும் பழைய நிலைக் குக் கொண்டு வந்து எங்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் “ என்று வேண்டிக் கொண்டார்கள்.

கம்பெனியின் தொழிலாளர்கள் சொல்லியதுபோல் பாஸ்கரன் அமர்ந்திருக்கும் அறையைச் சென்று வித்யா பார்த்தாள். பாஸ்கரன் அங்கு அப்போது இல்லை. மேஜையில் என்றோ வைத்த உலர்ந்த வாடிய பூக்கள் , கிழிக்கப்பாடாத தூசி படிந்த காலண்டர்கள். தூசி படர்ந்த டீ கப்பன் சாசர்கள் எல்லாமே அவளை மிகவும் பாதித்து விட்டது

கம்பெனி இப்படி அலங்கோலமாக இருக்கிறதே என்று வித்யா மனம் கேட்காமல் , பாஸ்கரன் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டாள். பாஸ்கரன் குழந்தைகள்’தான் போனில் பேசினார்கள். ஒரே புகார்கள். கதறல்கள். “ஆண்ட்டி ஸ்கூல் பாடங்கள் ஒன்றும் எங்களால் புரிந்து படிக்க முடியவில்லை. அதனால் மம்மியை மிஸ் வரச் சொன்னால், ஸ்கூல்க்கு அவங்க வரமாட்டங்கறாங்க டாடியை மிஸ்ஸைப் பார்க்க அழைத்தால், எங்களிடம் டாடி எரிந்து எரிந்து விழுறாங்க அதனால் எங்க மிஸ் எங்களை அடிக்கறாங்க, ஆன்ட்டி. நீங்களும் எங்களை மறந்து விட்டீர்கள். நீங்களாவது ஒரு தடவை வந்து போங்க ஆண்ட்டி, எங்களுக்கு ஒரு ஆறுதலாக் இருக்கும் “ என்று போனில் அழ ஆரம்பித்தார்கள்.

வித்யாவிற்கு மனம் மிகவும் வருந்தியது.. வித்யாவுக்கு அப்போதுதான் தெரிந்தது இந்தக் குழந்தைகள் உள்ளத்தில் தான் எவ்வளவுதூரம் வேரூன்றி விட்டேன். ஏன் அவர்கள் குடும்பத்திலும் கம்பெனியிலும் அவள் ஒரு அங்கமாக இருந்தது நினைத்து நினைத்து,. தான் அவரசப்பட்டு விட்டோமா ? என்று கூட நினைத்துப் பார்த்து வருந்தினாள்.
பாஸ்கரன் வந்ததும் அவனைத் தனியாக ஒருநாள் சந்தித்துப் பேசினாள். ‘ தான் எவ்வளவு தூரம் அவனுடைய வாழ்க்கையை பாதித்து விட்டேன்’, என்பதை அவனுடைய பேச்சிலிருந்து வித்யாவும் உணர்ந்தாள். வித்யாவின் ராஜினாமா தன்னையும் தன் குடும்பத்தினையும், ஏன் ? தன் கம்பெனியையும், எவ்வளவு தூரம் பாதித்து உள்ளது என்பதனை பாஸ்கரன் கண்ணீருடன் கூறினான். வித்யாவும் அவன் சொல்வது சரி என்றே பட்டது. “ சரி என்ன ஆனாலும் பரவாயில்லை அவனுக்காக இல்லை என்றாலும் அவனது படிக்கும் குழந்தைகளுக்கும் தான் உதவியாக் இருப்பது” என்று முடிவுக்கு வந்தாள் வித்யா.

வித்யா நினைத்திருந்தால் கம்பெனி முதலாளியான பாஸ்கரனை அனைவரும் சிரிக்கும்படி அவமானப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவள் அப்படி செய்யவில்லை. காரணம் பாஸ்கரன் தன்னிடம் வெளிப்படையாக தன்னோட செயலுக்காக மிகவும் வருந்தினான். ஸ்ரீ கணேஷ் குரூப் கம்பெனி என்றாலும், அதன் ஓனர் பாஸ்கரன் என்றாலும் மக்களிடத்தில் ஒரு தனிப்பட்ட மரியாதையும் மதிப்பும் இருந்து வந்தது. அவன் தன்னோட புகழுக்காக கோவில்களுக்கெல்லாம் தாராளமாக நன்கொடைகள் கொடுப்பது, ஆன்மீகவாதிகளுக்குப் பாதபூஜை செய்வது போன்றவை அவன் செய்து நாளிதழ்களில் வெளி வந்து அவனை இன்னும் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தது.

வித்யா ஒரு முடிவுக்கு வந்தாள். அதாவது தான் இனிமேல் பாஸ்கரனிடம் ஒப்புக்குக்கூட சிரித்து பேசக்கூடாது. அவன் குடும்ப விஷயத்தில் தலையிடக்கூடாது. அவனது குழந்தைகள் தன்னிடம் படிக்க வேண்டுமெனில் அவர்களைத் தன் வீட்டிற்கு வரும்படி கண்டிப்புடன் கூறி விட வேண்டும் இதனைப் பாஸ்கரனிடம் வெளிப்படையாக தெரிவித்து விட்டாள்.

பாஸ்கரனின் குழந்தைகள் படிப்புக்காகவும், ஸ்ரீ கணேஷ் குரூப் கம்பெனி தொழிலாளர்களின் நலனுக்காவும் ,ஸ்ரீ கணேஷ் பிளாஷ்டிக் கம்பெனி அலுவலகத்திற்கு வித்யா மீண்டும் வேலைக்குப் போகிறாள். வித்யா எடுத்த முடிவு சரிதானே….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *