கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 3,698 
 
 

மோகனா காலையிலேயே குளித்துவிட்டு பூஜையறையில் நின்றுகொண்டு, “கடவுளே, எனக்கு எப்பத்தான் விடுதலை வாங்கித் தருவே… ரவீஷ் செத்தாத்தான் நான் நிம்மதியா வாழ முடியும். அவனை சீக்கிரம் சாகடித்துவிடு. அது உன்னால முடியலைன்னா என்னையாவது கொன்றுவிடு… தினமும் இந்த நரகவேதனை எனக்குத் தாங்கவில்லை..” என்று வேண்டிக்கொண்டாள்.

ரவீஷ் வேறு யாருமில்லை. அவளைத் தொட்டுத் தாலி கட்டிய கணவன்தான்.

பிறகு ஏன் இந்தக் கொலைவெறி?

ரவீஷிடம் இல்லாத கெட்ட பழக்கங்கள் கிடையாது. நண்பர்களை வீட்டிற்கு கூட்டிவந்து தினமும் குடிப்பான். வார இறுதிகளில் அவர்களுடன் ரம்மி விளையாடுவான்; ரேஸ் நடக்கும் தினங்களில் ரேஸுக்குப் போவான். சிகெரெட் ஏராளமாகப் புகைப்பான். இரவில் தூங்கப் போகும் முன் மோகனா விரும்பாவிட்டாலும் தினமும் அவளைக் கட்டாயப்படுத்தி முயங்கிவிட்டுத்தான் தூங்குவான். கடந்த மூன்று வருடங்களாக இதுதான் நிலைமை.

எப்போதும் மொபைலில் பல பெண்களுடன் கடலை போட்டுக் கொண்டிருப்பான். ‘ஸ்வீட்டி’ ‘டார்லிங்’ என அவர்களை விதவிதமாகக் கொஞ்சுவான். ஹவ் பிக் இஸ் யுவர் டிட்ஸ், பூப்ஸ் என்று அசிங்கமாகப் பேசுவான்.

ரவீஷ் சென்னையின் ஒரு ஐடி கம்பெனியில் மென்பொருள் இஞ்ஜினியர். பெரும்பாலான நாட்களில் ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ போட்டுக்கொண்டு பகலில் தூங்குவான். பல சமயங்களில் தூங்கி எழுந்ததும் பகலிலும் கலவிக்குத் தயாராவான். அவன் தன் பக்கத்தில் வந்தாலே மோகனாவுக்கு குமட்டும்.

சென்னையின் லஸ் கார்னரில் ஒரு பெரிய வீட்டில் இருவரும் தனிக்குடித்தனம். வீட்டிற்கு வாடகை கிடையாது. ஏனென்றால் அது அவன் மாமனாரின் சொந்தவீடு. அவனுடைய சம்பளத்தைத் தவிர, மாதா மாதம் மோகனாவின் அப்பா பெங்களூரில் இருந்து அனுப்பும் ஒரு லட்ச ரூபாய் பணத்தில்தான் ரவீஷ் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தான்.

அதுசரி, மோகனா எப்படி ரவீஷிடம் ஏமாந்தாள்?

காதல் கல்யாணமா? அப்படி இல்லை; பெற்றோர்களின் முழு ஆசீர்வாதத்தோடு நடந்த கல்யாணமா? அதுவும் இல்லை; கட்டாயக் கல்யாணமா? கண்டிப்பாக இல்லை; சூழ்நிலைக் கல்யாணம். அது என்ன அப்பேர்ப்பட்ட சூழ்நிலை?

‘உண்மை கற்பனையைவிட மோசமானது’ (truth is stranger than fiction) என்று ஒரு பழமொழி ஆங்கிலத்தில் உண்டு. அதற்கு சிறந்த உதாரணம்தான் அவளின் திருமணம். .

மூன்றரை வருடங்களுக்கு முன்பு மோகனா பெங்களூரில் மவுண்ட் கார்மல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். தன் தோழிகளுடன் எப்போதும் சிரித்தபடி சந்தோஷமாக ஒரு சுதந்திரப் பறவையாக பறந்து கொண்டிருந்தாள்.

அப்பா அவென்யூ ரோடில் ஒரு பெரிய நகைக்கடை வைத்திருந்தார். மூத்த அண்ணன் ஜேசி ரோடில் நான்கு சர்க்கர வண்டிகளின் ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் கடை வைத்திருந்தான். கல்லூரி வாழ்க்கை மோகனாவுக்கு மிக நன்றாகப் போய்க் கொண்டிருந்தது…

ஒருநாள் மோகனா கல்லூரிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தன் தோழிகளுடன் மெஜஸ்டிக் சந்தோஷ் தியேட்டருக்கு பகல் ஷோ படம் பார்க்கச் சென்றாள். தியேட்டரில் ஏற்கனவே இருக்கைகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. தோழிகள் அனைவரும் அன்று ஹோட்டலில் சாப்பிடலாம் என்றனர். மோகனாவுக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளாது என்பதால், பக்கத்திலேயே இருக்கும் தன் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுக் கொள்வதாகவும், அதன்பிறகு தோழிகளுடன் சேர்ந்து கொள்வதாகச் சொல்லி வீட்டிற்கு திடீரென கிளம்பிச் சென்றாள்.

வீட்டையடைந்து காலிங்பெல்லை அமுக்கினாள். அப்போது மின்சாரம் இல்லை என்பதை உணர்ந்தவளாக, தன்னிடம் உள்ள மாற்றுச் சாவியைப் போட்டு வீட்டினுள் சென்றாள். வீடு மிக அமைதியாக இருந்ததது. அம்மா பெட்ரூமில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருப்பாள். அம்மாவைக் கிளப்பி தனக்கு சமைத்துப் போடச்சொல்லி சாப்பிடலாம் என்று நினைத்து, பெட்ரூம் கதவைத் திறந்தாள்.

உள்ளே பார்த்த மோகனா உறைந்து போனாள்.

அவள் அம்மாவும் தீவட்டித் தடியன் மாதிரி வாட்ட சாட்டமாக ஒரு வாலிபனும் பெட்ரூமில் நிர்வாணமாக சல்லாபித்துக் கொண்டிருந்தனர். மோகனாவைப் பார்த்ததும் அந்த வாலிபன் திகைத்து நிர்வாணமாகவே ஓடிச்சென்று அங்கிருந்த பாத்ரூமிற்குள் நுழைந்துகொண்டான். அம்மாவும் தன் பாவாடையை ஒரு கையினால் அள்ளி எடுத்துக்கொண்டு உடம்பை மறைத்தபடி அதே பாத்ரூமிற்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

மோகனா உடனடியாக ஓடிப்போய் பாத்ரூமின் கதவை நாதாங்கியால் வெளியே இழுத்துச் சாத்திவிட்டு அப்பாவையும் அண்ணனையும் மொபைலில் தொடர்புகொண்டு உடனடியாக வீட்டிற்கு வரச்சொன்னாள். அவள் மொபைலில் பேசுவதைக்கேட்ட அம்மா “மோகனா கதவைத் திறடி ப்ளீஸ்” என்று கெஞ்சினாள். மோகனா அம்மா மீது பயங்கரக் கோபத்தில் இருந்ததால் கதவைத் திறக்கவில்லை.

அப்பாவும், அண்ணனும் வீட்டிற்கு வருவதற்கு எப்படியும் அரைமணிநேரம் ஆகும் என்று கணக்கிட்டு ஹாலில் போய் சோபாவில் படபடப்புடன் அமர்ந்துகொண்டாள்.

ச்சே! இப்படியா ஒரு நாற்பத்தைந்து வயதுப் பெண்மணிக்கு, அதுவும் இரண்டு வளர்ந்த குழந்தைகளுக்கு தாயான ஒருத்திக்கு உடம்பு அலையும்? என்று அம்மாவை நினைத்து வேதனைப்பட்டாள். அவனுக்கு மிஞ்சிப்போனால் இருபத்தைந்து வயதிருக்கலாம்.. அவனுக்கும், தன் அம்மாவிற்கும் இப்படியா ஒரு குறைந்தபட்ச தனிமனித ஒழுக்கம்கூட இல்லாமல் நாய் மாதிரி அலைவார்கள்….’ என்று அசிங்கமாக உணர்ந்தாள்.

அப்பா சற்று தாட்டியாக தொந்தியும் தொப்பையுமாகத்தான் இருப்பார். நகைக்கடை முதலாளி என்கிற ஹோதாவில் வளப்பமாக, அலுங்காமல் குலுங்காமல் இருப்பதினால் ஊட்டமான உடம்பு. அம்மா தளதளவென சிந்திப்பசு மாதிரி இருப்பாள். எப்போதும் கண்ணாடியின் முன் நிற்பாள்; தன்னை அழகாக அலங்கரித்துக் கொள்வாள். பேஸ் புக்; இன்ஸ்டாக்ராம்; வாட்ஸ ஆப் என்று துடிப்புடன் இருப்பாள். ‘செக்ஸ் இஸ் மைட்டியர் தேன் செல்ப் ரெஸ்பெக்ட்’ என்பது உண்மையா… என்று குழம்பினாள். பதற்றமடைந்து அழுதாள்.

அப்பா முதலில் வந்தார்; தொடர்ந்து அண்ணனும் விரைந்து வந்தான். வார்த்தைகள் வெளிவராது அழுதுகொண்டே பாத்ரூம் கதவைக் காட்டினாள். அண்ணன் கதவைத் திறந்தான்.

உள்ளே பாவாடை கட்டிய நிலையில் அம்மாவும், அவன் நிர்வாணமாகவும் ஒடுங்கி நின்றனர்.

அசிங்கத்தைப் புரிந்துகொண்ட அண்ணன் ஆத்திரம்கொண்டு அந்த வாலிபனை வெளியே இழுத்து கண்மூடித்தனமாகத் தாக்கினான். அப்பாவும் தாக்குதலில் சேர்ந்துகொண்டார். அவசரமாகப் புடவையைக் கட்டிக்கொண்டு தலைகுனிந்து நின்றாள் அம்மா. அடி வாங்கிய வாலிபன் முகத்தில் ரத்தக் களரியுடன் வெளியேறினான்.

அடுத்த பதினைந்து நாட்கள் வீட்டில் மயான அமைதி நிலவியது. மெளனத்திலும், பரிபாஷையிலும் மட்டும் தேவையின் பொருட்டு கண்களால் பேசிக்கொண்டார்கள்.

அப்பா நகைக்கடைக்கு ரெகுலராகப் போக ஆரம்பித்தார்; சுகுணா கல்லூரிக்கு சென்றுவர ஆரம்பித்தாள். அவ்வப்போது அண்ணன் மட்டும் அம்மா மீது நம்பிக்கை இல்லாமல் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விஸிட் கொடுப்பான்.

ஒருநாள் அதே வாலிபன் அம்மாவுடன் வீட்டில் தனித்து இருந்தபோது அண்ணனிடம் பிடிபட்டான். இம்முறை அப்பாவும், நானும் வீட்டிற்கு விரைந்தோம்.

ஆனால் இம்முறை அந்த வாலிபன் திமிரோடு பேசினான். அம்மாவிடம் கடந்த இரண்டு வருடங்களாக ரகசியத் தொடர்பில் இருப்பதாகவும், இருவரும் முயங்கும் நிலையில் நிர்வாணமாக பல போஸ்களில் செல்பி எடுத்துக் கொண்டதாகவும்; நம்பாவிடில் அவைகளை உடனே காண்பிப்பதாகவும் அண்ணனையும் அப்பாவையும் எகத்தாளமாக தன் மொபைலைக் காட்டி மிரட்டினான்.

அப்பாவை மறுநாள் கடையில் வந்து பார்ப்பதாக சொல்லிச் சென்றான்.

மறுநாள் மாலை வீட்டிற்கு திரும்பிய அப்பா, மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார்.

மோகனாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு “மோகனா, இனி நம் வீட்டின் மரியாதையும் மானமும் உன் கையில்தான் இருக்கிறது… உன்னோட அம்மா முட்டாள்தனமாக அவனுடன் அசிங்கமான நிலையில் ஏராளமான செல்பிக்களை அனுமதித்திருக்கிறாள். அவைகளை என்னிடம் காட்டி மிரட்டினான். தைரியமிருந்தால் போலீசுக்கு போ என்கிறான். நான் அவனைக் கெஞ்சியபோது இதிலிருந்து நாம் வெளிவர உன்னை நான் அவனுக்கு ஊரறிய தடபுடலாக கல்யாணம் செய்து கொடுத்தால், அவனும் நம் குடும்பத்தில் ஒருவனாகி விடுவானாம். அதன்பிறகு சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு உன்னோடு தனிக்குடித்தனத்தில் ஐக்கியமாகி விடுவானாம்…” என்று கெஞ்சினார்.

இதற்கு மோகனா ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்று கண்கள் கலங்க அவள் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

தன் குடும்பத்தில் அம்மாவால் ஏற்பட்ட அவமானங்களை மறைக்க வேறு வழியின்றி மோகனா அவனைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டிய நிர்பந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாள்.

திருமணம் முடிந்தது. முதலிரவின்போது மோகனாவின் வேதனையான மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், அவளைக் காட்டுத்தனமாக முயங்கிவிட்டு, “இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே அம்மாவையும், மகளையும் ‘பார்த்த’ ஒரே ஆண்மகன் நான்தான்” என்று கை விரல்களை அசிங்கமாக அபிநயித்துக் காட்டி கொக்கரித்தான்.

அவன்தான் ரவீஷ்குமார் என்கிற தற்போதைய அவள் கணவன்; கிராதகன்.

திருமணத்திற்குப் பிறகும் அவன் திருந்திய பாடில்லை. அவன் செத்தால்தான் மோகனாவுக்கு இனி விடுதலை. ஸ்கெட்ச் போட்டு அவனைத் தூக்கலாம் என்றால், போலீஸ் எளிதாக மோப்பம் பிடித்துவிடும். அதன்பிறகு வாழ்நாள் முழுவதும் ஜெயில்களிதான். அதனால் கடவுளாகப் பார்த்து அவளின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தால்தான் உண்டு.

அது சென்ற வருடம் டிசம்பர் கடைசி வாரம்…

ரவீஷ்குமார் கம்பெனி ப்ராஜெக்ட் விஷயமாக சீனாவின் யுகான் நகரத்திற்கு, நியூ இயருக்குள் திரும்பி விடுவதாகச் சொல்லிச் சென்றான். அப்போதுதான் கொரானா வைரஸ் திடீரெனத் தீவிரமாகப் பரவ ஆரம்பித்தது.

புத்தாண்டு தினத்தன்று காலை பதினோரு மணிக்கு மொபைலில் ஒரு புதிய டெல்லி இலக்கம் ஒளிர்ந்தது. எடுத்துப் பேசினாள்.

“இஸிட் மோகனா?”

“எஸ் ப்ளீஸ்…”

“மேடம், நாங்கள் மத்திய அரசின் வெளியுறவுத்துறையின் சார்பாக டெல்லியில் இருந்து பேசுகிறோம்… உங்கள் கணவர் ரவீஷ்குமார் யுகான் ஹாஸ்பிடலில் கொரானா வைரஸ் பாதிப்பினால் அனுமதிக்கப்பட்டு மிகவும் சீரியஸாக இருக்கிறார். அவரை நாங்கள் தற்போதைக்கு இந்தியா திரும்பி வருவதற்கான விமானத்தில் ஏற்ற முடியாது… சாரி மேடம் மேலும் ஏதாவது விவரம் வேண்டுமென்றால் இதே நம்பரில் தொடர்புகொண்டு பேசுங்கள்… உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்.”

“ஸாரி ஸார்… என்னுடைய பெயர் மோகனாதான். ஆனால் எனக்கு இன்னமும் திருமணமாகவில்லை… ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது.” போனை டிஸ்கனெக்ட் செய்தாள்.

மூன்று நாட்கள் சென்றன. மனம் இருப்புக் கொள்ளவில்லை.

டெல்லியின் அதே நம்பருக்கு போன் செய்தாள்.

“ஸார் சைனாவின் யுகான் ஹாஸ்பிடலில் கொரோனா பாதிப்பினால் அட்மிட் செய்யப் பட்டிருந்த ரவீஷ்குமார் இப்போது எப்படி இருக்கிறார்?”

“ஸாரி மேடம், அவர் நேற்றுதான் காலையில் இறந்துபோனார். அவரின் உடலை அங்கேயே எரித்துவிட்டனர்…. நீங்க யாரு மேடம்?”

மோகனா பதிலளிக்காமல் போனை டிஸ்கனெக்ட் செய்துவிட்டு பூஜையறைக்கு ஓடிச்சென்று தாலியைக் கழட்டி எறிந்துவிட்டு, விடுதலை கிடைத்த சந்தோஷத்துடன் உற்சாகம் பொங்க கடவுளுக்கு நன்றி சொன்னாள்.

அவளின் 2020 வருட புத்தாண்டு மிகச் சிறப்பாக மலர்ந்தது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *