கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 14, 2022
பார்வையிட்டோர்: 9,693 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

துரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் விரசமற்ற அழகு பார்த்துக் கொண்டே இருக்கலாம் அந்த அழகை; சுருதி சுத்தமான இசையை கேட்பதைப்போல

இப்போது என்ன நோக்காடு வந்தது அவளுக்கு என்றுதான் தெரியலை, யோசித்து யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டது தான் மிச்சம்.

தியாகுவின் சாவுச் செய்தி திடிரென்று ஒருநாள் வெள்னிடியாக வத்து விழுந்தது. சாவுக்கு நான் போகலை. அந்தக் கிராமம் இங்கே இருந்து பதினோரு கிலோமீட்டர் தூரத்தில்தானிருந்தது.

என் மனைவிக்கு ஆச்சரியம்.

“ஏம்; போகலையா? ” கேட்டாள்.

மவுனமாக அவளைப் பார்த்தேன். இதேபோல முன்வு விழுந்த ஒரு சாவுக்கு நான் சொன்ன பதில் அவள் ஞாபகத்துக்கு வந்திருக்கலாம். மவுனமாகிவிட்டாள் அவளும்

“அவன் எப்பவும் போல எனக்குள்ளேயே உயிரோடு இருக்கணும். இப்பொப் போயி அவன் சாவைப் பாத்துட்டா அது செத்துரும்.”

கொஞ்சநாள் கழிச்சி, சாவின் மணம் எல்லாம் கழிந்தபிறகு ஒரு நாள் போளோம். துக்கம் கேட்க

தியரென்று போய் அவள்முன் தின்றதும் ‘வா’ என்பது போல் தலை யசைத்துவிட்டு அழுதாள். எனக்குப் பின்புறம் என் மனைவி. ஒரு துக்கம் விசாரிப்பது போல் சங்கடம் வேற கிடையாது. எதிர்த்தரப்பி விருந்து வார்த்தை முதலில் வராது. தியாகுவின் மகள் வந்து எங்களைப் பார்த்ததும் நாக்காலிகளைப் போட்டுவிட்டு நின்றான். அவறுடைய தோள்களைக் கொஞ்சம் ஆதரவாகப் பிடித்தேன்.

நாக்காலியில் உட்கார்ந்துகொண்டு ‘என்ன செய்தது’ என்று தியாகு வின் மனைவி ராதையிடம் விசாரித்ததும் இந்த விசாரிப்புக்காகவே காத்திருந்தது போல சட்டென்று அழுகை நின்று நடந்ததைப் பேசத் தொடங்கினாள்.

சிறிது நேரங்கழித்து மனைவியை ராதையின் அருகில் இருக்கச் சொல்லிவிட்டு அவளது பெற்றோரைப் பார்க்க உள்ளே போனேன்.

அந்த வீட்டைவிட்டு தாங்கள் கொஞ்ச தூரம்தான் வத்திருப்போம். எனக்கு மட்டும் கேட்கும்படியாக இவன், “கவனிச்சீங்களா! முன்ன விட இப்பொ ராதெ ரொம்ப அழகா இருக்கா” என்றாள். உண்மை தான்; என்றாலும், எனது கவனம் வேறொன்றில் லயித்து இருந்தது. ராதையின் வீட்டில் தாங்கள் தங்கியிருந்த நேரத்தில் அவள் தனது உடம்பில் தோன்றியுள்ள வலிகளைப்பற்றிச் சொல்லிக்கொண்டி குந்தாள். அது புதுசாக இருந்தது. எப்பவும் அவளிடமிருந்து கேள்விப் படாதது. அவள் சொன்னவிதம் அவளும் சீக்கிரமே தியாகுபோல ‘புறப்பட்டு விடுவாளோ என்று பயமாக இருந்தது.

பால்ய காலத்திலிருந்தே தியாகு எனது நண்பன். நகரத்தில் வந்து அவன் என்னோடு கூடவே படித்தான், ஒன்றாகவே பழகினோம். எங்கள் அபிலாசைகள் கூட ஒன்றாகவே இருந்தது. ஆனால்…படிப்பு முடிந்ததும் நான் எனது அப்பாவின் கமிஷன் கடை வியாபாரத்தில் மூழ்கிவிட்டேன். “கால்க்கட்டும் போட்டுவிட்டார்கள், தியாகுவுக்கு “வமி வேறவகையில் வந்தான். அவன் அந்த கிராமத்தில் ஒரு பெருத்தனக்காரரின் ஒரே மகளைக் கட்டிக்கொண்டு “வீட்டோடு மாப்பிள்ளை” ஆகிவிட்டான்.

அந்த கிராமத்துக்கு சாலை வசதி கிடையாது. தொடி விழுத்த ஒரே வண்டிப்பாதைதான் உண்டு. எப்பவாவது தியாகு வில்வண்டியில் மனைவியோடு வந்து இறங்குவான். எங்கள் வீட்டில் தான் தங்குவார்கள்.

ஒரு மூக்குப்பொடி வேணுமென்றாலும் அந்தக் கிராமத்துக்காரர் கள் இங்கே வந்துதான் ஆகனறும். வீட்டுக்கும் சாமான்கள் வாங்கிக் கொண்டு ஒரு ஓட்டை சினிமாவைப் பார்த்துவிட்டு, ஜல்ஜல் என்று மாட்டுச் சலங்கை ஒலிக்க வண்டியில் ஊர்போய்ச் சேருவார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் வந்து இறங்கிவிட்டால் எங்கள் குடியிருப் பின் வளைவுக்குள் உள்ள பெண்டுகளிடம் கவனிக்கும்படியான ஒரு விழிப்பு வந்திருப்பது தெரியவரும். “நாகரிகம்” இல்லாத படுதாட்டுப் புறமான இந்தக் கிராமத்து அழகியோடு இவர்கள் தெருக்கம் கொள்ள முனைவது தெரியவே செய்யும்! எப்பவாவது தியாகு தனியே இங்கே வர தேர்த்தால், அம்மா வரலையா அம்மா வரலையா என்று கேட்பார்கள். சௌக்யமா இருக்காகனா என்று விசாரிப்பார்கள்.

ஒன்றே ஒன்றுதான் இவர்களுக்குச் சங்கடம் தருவது: தியாகுவும் அவள் மனைவி ராதையும் அவர்களுக்குள் தங்கள் வீட்டுமொழியான தெலுங்கில் பேசிக்கொள்வது இவர்களுக்கு என்னவோ போலிருக்கும்.

வியாபாரத்தில் எனக்கு ஒரு நிலையான உயர்வு கிடைத்ததும் நாங்கள் மேட்டுத்தெருவில் ஒரு வசதியான தனிவீடு பார்த்துக் குடி போனோம். அப்போது தியாகுவும் தனது குழந்தைகளைப் படிக்கப் போட தனது மனைவி குழந்தைகளுடன் அதே தெருவில் ஒரு வீடு பிடித்து, ஒரு தவசுப்பிள்ளை (சமையல்காரன்)யை ஏற்பாடு பண்ணிக் கொண்டு குடிவந்தான். பல அறைகள் கொண்ட பெரிய மாடி வீடு

குழந்தைகள் பள்ளிக்கூடம் போய்விடுவார்கள். தவசுப்பிள்ளை விதவிதமாக சமைத்துப் போடுவான். சாப்பிட வேண்டியது; வாழ்க்கையை அனுபவிக்க வேண்டியது. அந்தத் தனிமை நெருப்பில் நன்றாகக் குளிர்காய்த்தார்கள்.

இங்கே உயர்நிலைப் படிப்பு முடிடத்ததும் கல்லூரிப் படிப்புக்காக பாளையங்கோட்டையில் இதேபோல் ஒரு வீட்டைப் பிடித்து அங்கே குடிபோனார்கள். கிராமத்துப் பிளளைகள் இப்படி படுவேகமாகப் படித்தது ஒரு ஆச்சரியம்தான். குழந்தைகள் சம்மந்தப்பட்டமட்டில் தியாகுவுக்குப் பெரிய பெரிய கனவுகள் உண்டு; அவர்கள் பின்னால் படிக்கப்போகும் பெரிய பட்டங்களிலும் வகிக்கப்போகும் உத்தியோகங்கள் பேரிலும்.

அவர்கள் பாளையங்கோட்டைக்குப் போனபிறகு எனக்கு தியாகு வுடனான தெருக்கமான தொடர்பில் தீண்ட இடைவெளி விழுந்து விட்டது. இப்படி இருக்கும்போதுதான் ஒருநாள் அவனுடைய அந்த மரணச்செய்தி வந்தது தீடிரென்று. நாப்பது வயசு என்பது சாகும் வயசில்லை. ரொம்ப அநியாயம் இது. பாதிச் சாப்பாட்டில் இலையை எடுத்துக்கொண்டு போய்விட்டது போல்.

ராதையை நினைத்து எனது மனைவியும் நானும் ரொம்ப வருத்தப் பட்டோம். அவள் சொல்லும் வலிகனைக் கேட்கும்போது, முதலில் அது என்ன தோயாக இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. பெரிய பெரிய நோயாக இருக்குமோ என்று நினைத்துப் பதரவேண்டியதி குந்தது. வைத்தியத்துக்கு முதலில் அவள் ஒப்புக்கொள்ளவில்லை. அது புரிந்துகொள்ளக்கூடியதுதான் அந்த மனநிலையில்.

நாங்கள் தான் சிறிது விட்டுப்பிடித்து, அவனை சமாதானம் பண்ணி மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போனோம். வைத்தியத்துக்கு செலவானதே தவிர நோயைத் தெரிந்துகொள்ள முடியலை. வைத்தியர்கள், ஒன்றும் இல்லை; இந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடச் சொல்லுங்கள், சரியாகப் போகும் என்றார்கள். என்றாலும் ஒன்றும் சரியாகவில்லை.

பெரிய டாக்டர், அதைவிடப் பெரிய டாக்டர் செலவு, அதைவிடப் பெரிய செலவு இப்படியெல்லாம் ஆனதுதான் மிச்சம்.

அலோபதி, ஆயுர்வேதம், யுனானி, தெகள் எல்லாம் முடித்து நாட்டுமருந்து, பச்சிலை, கைப்பக்குவம் என்றெல்லாம் ஆதி உடம்பும் மனசும் அலுத்து, சலித்தது. இப்போது புதிய புதிய வலிகள் முளைத்தது. அவள் சொல்லும் வலிகளைக் கேட்டபின் என் மனைவி என்னிடம், “எப்பா, அவ சொல்றதைக் கேட்டுக்கிட்டே இருந்தா, நமக்கே அந்த வலிக வந்துருமோன்னு பயமா இருக்கு” என்றாள்.

“அண்ணா, ஏங் கையப் பாருங்க, எப்பிடி வீங்கியிருக்குன்னுட்டு” என்று காண்பித்தாள். கை வீங்கியிருப்பது என் கண்களுக்குத் தெரிய வில்லை. அது எப்பவும் போல இருப்பதாகத்தான் தெரிந்தது.

ராதை வேண்டுமென்று சொல்லுகிறவன் இல்லை. கையிலுள்ள வேதனைதான் அவளுக்கு வீங்கியது போலத் தெரிந்திருக்கும். அந்த வலி எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை, என்றாலும் அது அவள் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. எங்கள் திகைப்பையும் தயக்கத்தையும் கவனித்த அவளுடைய கண்களிலிருந்து மளமள என்று கண்ணீர் பொங்கியது. எப்படி ஆறுதல் சொல்ல என்று தெரியவில்லை. அவன் குடும்பத்தில் இது ஒரு பிரச்சினையாக இருந்தது; அப்பா அம்மா பிள்ளைகள் எல்லாருக்குமெ. செய்வினைக் கோளாறு தான் இது என்று ராதையின் அம்மா என்னிடம் தீர்மானமாகச் சொன்னாள்.

ராதையின் அப்பாவுக்கு இந்த செய்வினை’ ‘ஏவல்’ இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. அதனால் அவர் மறுத்தார்.

பார்த்தவர்களிடமும் பார்க்க வருகிறவர்களிடமும் ராதை வலி களைப்பற்றியே சொல்லிக்கொண்டிருக்க, அவளுடைய அம்மா தனது மகள் படும் பாதரவையே மாறிமாறி சொல்லிக் கொண்டிருந்தான். -தகடு எடுக்கிறவனைக் கூட்டிக்கொண்டு வந்து ஆறுநாள் பூசை செய்து, நடு வீட்டினுள் தரையைத் தோண்டி, ஒரு “தகடு” எடுத்தார்கள். அதுக்குப்பிறகு கொஞ்சநாள் வலியில்லாமல் இருந்தது. சிறிதுநாள் அந்தக் குடும்பத்தில் நிம்மதி நிலவியது. ஆனால் மறுபடியும் வலி தொடங்கிவிட்டது.

முன்பெல்லாம் ராதையைப் பார்க்க பிரியமாக இருக்கும். இப்போது அவளைப் பார்க்கவே விருப்பம் இல்லை. பார்ப்பதைத் தவிர்க்கத் தோன்றியது. அந்தக் குடும்பம் நிம்மதியை இழந்து தவித்தது. ராதையின் அப்பா எதற்குமே கவலைப்படாதவர். மழை இல்லை யென்றால் அவர் முகத்தில் கவலை தோன்றும். பயிர்களில் நோய் விழுந்துவிட்டது என்றால் கொஞ்சம் கவலைப்படுவார். மற்றபடி அவர் கவலைப்பட்டு தான் பார்த்ததில்லை. இப்போது அவர் முகத்தில் நிரந்தரமான கவலை குடிகொண்டது. பிள்ளைகள் முகத்தில் ஒரு திகைப்பு. சரியில்லாத மோசமான நிலைக்கள்ளனாடியில் முகத்தைப் பார்த்தால் கோரமாக பயப்படும்படி தெரியமே அதுபோல தெரிந்தாள் இப்போது ராதை.

தியாகுவும் ராதையும் ஒருநாள் கூட பிரிந்து இருந்ததில்லை. அப்படி ஒரு நெருக்கம் அவர்களுக்குள் இருந்தது. வெளியூர் போனாலும் ஒரே ஒட்டமாக ராத்திரியே வந்து விழுந்துவிடுவான்.

“என்ன அப்படி, பட்டாம் கொள்ளை போகுதா” என்று கேட்டால் தலைகவிழ்த்தபடியே இருப்பான். பதில் சொல்லமாட்டான். இதுக்கு எப்பவோ ஒருநாள் பதில்போலச் சொன்னான் “ான்னால் முடியும்: அவளால் முடியாது.”

நான் ராத்திரி ஒரு சொப்பனம் கண்டேன். சின்ன வயசில் கேள்விப்பட்ட பிசாசுக் கதைபோல இருந்தது.

ஒரு அண்ணன், தங்கை, அரும்பாடுபட்டு உழைத்து தங்கச்சிக்குக் கல்யாணம் முடித்து அனுப்பிவிட்டு தளியாக, கைக்கஞ்சி காய்ச்சிக் குடித்துக்கொண்டு, அத்தக்கொத்து வேலைகள் பார்த்துக்கொண்டு இருக்கிறான். தொலைக்காட்டில் அவனுக்கு அரைக்குறுக்கம் கரிசல் காடு சொந்தமாக இருந்தது. மாடு, கலப்பை இல்லாததால் பணஏர் கொண்டுதான் விதைக்கவேண்டும். ஆனால் அதற்கு வழி இல்லை,

(தகடு – எதிரிகள் அல்லது சொத்துக்கு ஆசைப்பட்ட சொக்காரர்கள் பங்காளிகள்) நம்மைக் கொல்லுவதற்கோ அல்லது பொறாமைப்பட்டு வலிகளை உண்டாக்கி கால் கை வராமல் பண்றுவதற்கோ மந்திரவாதிகளைக் கொண்டு தகடு எழுதி (தீப்பெட்டிப் படம் அளவுக்கு சதுரமான மெல்லிய செப்புத் தகட்டில் சக்கரங்களும் மந்திரங்களும் எழுதப் பட்டிருக்கும் அதை நம் வீட்டினுள் எங்காவது புதைத்து வைத்து விடுவார்கள். அதை மற்றொரு மந்திரவாதியைக் கொண்டு கண்டுபிடித்துத் தோண்டி எடுத்து அப்புறப் படுத்திவிட்டால் நிவாரணமாகிவிடும் என்பது.)

பகல் எல்லாம் யாருக்காவது கூலி வேலை செய்து தவசம் வாங்கிக்கொண்டு வந்து கஞ்சிகாய்ச்சிக் குடித்துவிட்டு, தோண்டியில் தன்னரும் மடியில் வெத்திலையும் தோளில் களைகரண்டியுமாக செங்கல்மங்கல் நேரத்தில் புறப்பட்டுப்போய் புஞ்சையில் ஒரு தூக்கம் போட்டு எழுத்திருந்து தெரிகிற வெள்ளி வெளிச்சத்திலோ, திலா வெளிச்சத்திலோ நிலத்தைக் கொத்த ஆரம்பிப்பான்.

ஒரு திறைதிலவு தாளில் அப்படி வேலை செய்து கொண்டிருந்த போது, பக்கத்துப் புஞ்சையின் கருவ மரத்தடியில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. கொத்துவதை நிறுத்திவிட்டு கவனித்தான். பெண் அழுகிற குரல்போலத் தெரித்ததும் தன்னுடைய தங்கச்சியின் நினைப்பு தான் வந்தது. அவ ஏன் இங்கெ வரப்போறா. வந்தாலும் அன்போ என்று என்னெ கப்பிடுவானே. யாரோ தெரியல. யாருன்னுதான் போய்ப் பார்ப்பமே என்று போனான். அவனுக்கு பயம் தெரியல. நல்ல இளவட்டு, ஓடுற பாம்யை தலையில் மிதிச்சுக் கொல்லுற வயசு.

வத்திருக்கது ஒரு மோகினிப் பிசாசுன்னு இவறுக்குத் தெரியாது. கன்னிகழியாத இவனைத் தின்னு குடிக்க வந்திருக்கு என்கிறது தெரியாமல் அங்கே போனான். போய்ப் பாத்தபிறகுதான் தெரிஞ்சது, இப்படியும் அழகேஸ்வரியான பொண்ணும் இருக்காளான்றுட்டு.

“என்னாத்தா; யாரு நி. எங்க வந்தெ ஏம் அழுவுதே?”ன்னு கேட்டாம்.

“ஏம் விதி நா அழுவுதேம். ஓமக்கென்ன; நீரு ஒம்ம சோலியப் பாத்துப் போரும்.”

“ஏம் ஆத்தா அப்பிடிச் சொல்லுதெ? அத்துவானக் காட்டுல தட்டு நடுச்சாமத்துல இப்படி.வத்து அனாதையா ஒரு பொம்பளை கண்ணீரு வடிச்சா, அதக் கேக்காம இருந்தா தானும் ஒரு ஆம்பளையா ான்று கேட்டாம்.

அவ விருத்தாந்தத்தைச் சொன்னா, சின்ன வயசுலேயே அம்மை செத்துப் போனது, அப்பன் ரெண்டாத்தாரம் செஞ்சது, சித்தாத்தா கொடுமெ தாங்கமுடியாமப் போனது, எல்லாம்.

“பொ, எங்கனையும் போயி கெணத்துல குளத்துல விழுத்து சாகுன்னு சொல்லி சித்தாத்தாவோட பெத்த அப்பனும் சேந்து வெறட்டிவிட்டுட்டாக, இந்தத் தண்ணியில்லாத காட்டுல நா எந்தக் கிணத்துல விழுத்து சாவேம்’ன்னு கேட்டு “கோ”ன்னு அழுதது. –

“சரி சரி; அழுவாதெ என்னைக்கிருந்தாலும் சாகத்தாம் போறம். சாவு வரும் போது செத்துக்கிறலாம். இங்கெ தனியா இருக்காதே அங்கன வந்து இரி”

அவ பதில் பேசாம தின்னுக்கிட்டே இருந்தா.

அவளைத் தனியா விட்டுட்டுப் போனா என்னமும் பண்ணிக்கிடு வாளோன்னு இவனுக்கு யோசனை.

“வீட்டுல தா கைக்கஞ்சி காச்சிக் குடிச்சிட்டுத் தனியாத்தாம் இருக்கேம். ஒனக்கு இஸ்டம் இருந்தா ஏங்கூட வந்து இரி”ன்று கூப்பிட்டாம்.

“சும்மா வந்து எப்பிடி ஒரு பொம்பன ஒரு ஆம்பளயோட வந்து இருப்பா. ஓமக்கு சம்மதன்னா இப்பவே எனக்குத் தாலியக் கட்டும்”ன்னு கேட்டுது. சரின்னு சொல்லி அவம் இடுப்புல இருக்க அரணாக்கயித்தை அத்து அவ கழுத்துல நிலாவ சாக்கியா வச்சி தாலியக் கட்டுனாம்.

அப்பவே அந்தப் பிசாசு அவனை ஆவிசேத்துக் கட்டிக்கிட்டது. முதல்முதல்ல பெண் சொகத்த பாத்த அவனால அதுல இருந்து மீள முடியல. பச்சை ரெத்தத்த ஒரு அட்டை வலியில்லாமல் குடித்தது கொக்க அவனக் கடிச்சி உறுஞ்சிக் குடிக்கா. உறியிறப்பவெல்லாம் அவனுக்கு அம்புட்டு சொகமா இருக்கு இன்னும் இன்றும்”ங்கான், அவன் விலகவிடமாட்டேங்கான். அதும் அவன்மேல் விழுந்து கடிச்சிக் கொதறி உறுஞ்சிக் குடிச்சது.

ரத்தமெல்லாம் உறுஞ்சிக் குடிச்சபிறகு சதைதான் மிஞ்சுனது. உதடுகளோடு அவனோட நாக்கையும் சேத்து பனம்பழத்தக் கடிச்சி இழுக்கிறாப்புல இழுத்து சுவச்சி அவனத் தின்னது, “கடி, இன்னுங் கடி”ங்கான்!

அவம் உடம்புல பொட்டுச் சதை இல்லாம பூராத்தையுமே கடிச்சித் தின்றுட்டது. இன்னும் இன்னும்”ன்று குரல் அவங்கிட்ட இருந்து கேட்டுக்கிட்ட இருக்கு. எலும்புக இசைப்புகள்ள இருக்கிற சாரை கடிச்சி, உருட் உருட்டுன்றும் மனம் உன்னும் உறிபுது அந்தப் பிசாசு, ஆனாலும் அவனோட ாலும்புக்கூட்டு மூக்கரை மூஞ்சி பல்லுக தெரிய சந்தோசமா சிரிச்சிக்கிட்டே இருக்கு.

இப்பதாம் அந்தப் பிசாசோட “வயிறு” நிறைஞ்சி அடங்கியிருக்கும் போலிருக்கு, அனந்தத்துல அவனோட எலும்புக்கூட்டை தாலயில் எடுத்து வச்சிக்கிட்டு திங்குதிங்குன்னு குதிச்சி ஆட்டம் போடுது.

பயத்துல நான் திடுக்கிட்டு விழித்தேன். வேர்த்து விறுவிறுத்துப் போனேன். ஏன் இப்படி ஒரு சொப்பனம் வந்தது என்று தெரியலை. மேலே சொன்னதுபோல் ஒரு கதை ஒழுங்கோடு சொப்பனத்தில் வரவில்லை. பின்பகுதிதான் அப்படியே வந்தது. மனைவியை எழுப்பிச் சொல்லலாமா என்று நினைத்து தேன். “இப்ப வேண்டாம், பயந்துருவா” என்று படுக்கையிலேயே கிடந்தேன் விடிகிறவரை.

– இந்தியா டுடே சனவரி 1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *