ஞாயிறு என்பதால் லேட்டாக எழுந்து கையில் நியூஸ் பேப்பரும் மனைவி கொடுத்த காபியுமாக வந்து சோபாவில் அமர்ந்த மாதவனுக்கு கொல்லைப்புறம் கமலா துணி துவைப்பது கண்ணில் பட்டது.
தேவி! வாஷிங் மெஷின் வாங்கியதும் கமலாவை நிறுத்திட்டேன்னு சொன்னாயே, என்னாச்சு மெஷின் ஏதும் ரிப்பேராயிடுச்சா..?
அதில்லைங்க…இந்த ஒரு வாரமா அவ வராம எனக்கு பேச்சுத் துணைக்கும் ஆளில்லை, இந்த தெருவுல யார் வீட்ல என்ன நடக்குதுங்கறதும் தெரியல…அதான் கமலாவை மறுபடி வரச் சொல்லிட்டேன்…!
அப்ப வாஷிங் மெஷின்?
அது பாட்டுக்கு இருக்கட்டுமே!
ம்ஹீம்! சரியான அக்கப்போர்! என்று முணு முணுத்தான் மாதவன்.
– என்.பூதேவி (ஏப்ரல் 2013)