கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 9,960 
 
 

‘ஹேய்’

உள்ளேயிருந்து வானுயரத்துக்கு எழுந்த ஒவ்வொரு கத்தலுக்கும் நாராயணனின் மனது உள்வரை போய்த் திரும்பி வந்தது. நிச்சயம் பிரம்மைதான், வெறும் மனதானாலும் நூறு ரூபாய் டிக்கெட் இல்லாமல் உள்ளே அனுமதிக்கக் கூடாதென்று கட்டாய உத்தரவாகியிருந்தது. சிலிர்த்தெழுந்த ùக்கைகளை யாரோ பலவந்தமாய் பிய்த்துப் பிடுங்கியதுபோல் எல்லா ஆரவாரமும் எழுந்த வேகத்திலேயே அவனுக்குள் அடங்கிப்போனது.

‘ஹோய்ய்ய்’, அதற்குள் இன்னொரு ஆரவாரம். முன்னெப்போதையும்விட இது பெரிதாய் இருக்கிது. உள்ளே என்ன நடந்திருக்கும் என்று அவன் நெஞ்சு அடித்துக்கொண்டது. வேùன்ன, சிக்ஸரோ, பவுண்டரியோ, சச்சின் அடிக்கிானோ, வேவெனோ ! ஒரு வேளை எவனாவது அவுட்டானதற்காக அலறுகிதோ கூட்டம் ? இருக்காது, கிரிக்கெட் போட்டிகளின்போதுதான் இந்த மாபெரும் நாட்டில் தேசபக்தி இன்னமும் மிச்சமிருப்பது மழைக்கால குடைகள்மாதிரி அங்கங்கே வெளிப்படுகிது. ஆகவே எந்த இந்தியன் அவுட்டானாலும் ஆயிரக்கணக்கான ஜனக்கூட்டமும் அதிர்ச்சியில் மெüனம்தான் சாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை, உச்சபட்ச சத்தத்தை வைத்துப்பார்க்கும்போது சிக்ஸராகத்தான் இருக்க வேண்டும். கால்வாய் மதகில் உட்கார்ந்துகொண்டு காசி எப்படி இருக்கும் என்று வெறுமனே சிந்திக்கி பிராமணன்போல, உள்ளே நடந்துகொண்டிருக்கி மேட்ச்சைப்பற்றிய கேள்விகளிலும், யூகங்களிலும் திருப்தியடைந்துவிடப் பழகியிருந்தது அவன் மனது.

அவன் சிலநாள் தாடியைச் சொரிந்துகொண்டு நின் இடத்திலிருந்து சோம்பலாய் தலைஉயர்த்திப் பார்த்தான். வராண்டாவில் ஈ, காக்கா கிடையாது. அவையும் மேட்ச் பார்க்க ஆசைப்பட்டு உள்ளே பந்துகொண்டிருக்கக்கூடும். கேன்ட்டீனில் பையன்கள் வேலையில்லாத குஷியில் முக்கோணம்போல தரைக்குள் சரிந்து இங்கும் மேல்தளத்தின் அடியிலிருந்த சின்ன ஜன்னல்கள்வழியே சொற்பமாய்த் தெரிகி பச்சை மைதானத்தில் ஆட்டத்தை முடிந்த அளவு ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்களின் சுதந்திரம்கூட அவனுக்கு அனுமதிக்கப்படவில்லை. நின் இடத்திலிருந்து அந்தப்பக்கம், இந்தப்பக்கம் நகரக்கூடாதென்று கட்டளை. விளையாட வருகி பிரபலங்களை வெடிகுண்டு கொண்டு தகர்க்கப்போவதாக ஒரு தீவீரவாத அமைப்பு பகிரங்கமாய் மிரட்டியிருந்தது, ‘நாட்டில் பாதிபேருக்குமேல் பசிக்கும், பட்டினிக்கும் வழி தெரியாமல் அன்ாடம் செத்துக்கொண்டிருக்கையில் உங்களுக்கு ஆடம்பர ஆட்டம் ஒரு கேடா ?’ போன் சமூகவிரோத வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் நகரெங்கும் அடையாளமில்லாமல் பரபரப்பப்பட்டிருந்தது. அதனால் போட்டி நடப்பதற்கு நாலுநாள் முன்பிருந்தே போலீசும், இவனைப்போன் கான்ட்ராக்ட் காவலர்களுமாய் மைதானத்தை நிரப்பி யாரும் கிட்டே நெருங்காமல் பண்ணிவிட்டார்கள். கடவுளாகவே இருந்தாலும் கழுத்தில் கார்ட் இல்லாமல் உள்ளே அனுமதி கிடையாது. பெட்டி, தோள்பை, மினரல் வாட்டர் பாட்டில்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், பட்டாசுகள் – மூச் !

எத்தனைதான் பாதுகாப்புப் பண்ணியிருந்தாலும் உள்ளூர எல்லாருக்கும் பயம் இருக்கத்தான் செய்கிது. பத்துநாள் கடின உழைப்பின் நல்லபேரைத் திருடிக்கொண்டுபோவதற்கு ஒரு சின்ன அசம்பாவிதம் போதும்., இதற்காகவே காத்திருக்கி எதிர்க்கட்சிகளும், பத்திரிகைகளும் அரசாங்கத்தை ஒருவழி பண்ணிவிடும். போதாக்குûக்கு மக்களின் எப்போதும் புரிந்துகொள்ளாத கோபம் வேறு. நல்லபடியாய் போட்டி முடிந்து எல்லாரையும் விமானமேற்றி அனுப்புகிவரை இந்த டென்ஷன் தொடரும்.

அவனுக்கு அதெல்லாம் இப்போது மனதில் இல்லை, உள்ளேயிருந்து வருகி சப்தம் எதனால் என்றுகூட தெரிந்துகொள்ள முடியாதபடி அத்துவானத்தில் நிறுத்திவிட்டார்களே என்றுதான் அவனுக்குள் ஆற்ாமை பொங்கிப்பரவியது. பத்தடி தள்ளி உள்ளே மேட்ச் நடக்கிது, தலைக்குமேலே தடதடக்கி ரசிகர்களின் கால்தட்டலும், சந்தோஷக் கூக்குரல்களும் இதயத்தில் உற்சாகம் நிரப்பி போதையாய் உடலெங்கும் துடிதுடிக்கிது. கற்பனைகளில், எதிர்பார்ப்புகளில் கொதித்து ஒவ்வொரு பாகமும் சூடேறிக்கிடக்கிது. உள்ளே என்ன நடக்கிது என்பதைப் பார்த்துத் தெரிந்துகொண்டால்தான் இந்தப் படபடப்பு அடங்கும்போல. ஆனால் அவன் உள்ளே போகமுடியாது, கம்பியில்லாத ஜன்னல்வழியே வெட்டவெளி வானத்தைப் பார்த்துக்கொண்டு காவல்நிற்பதுதான் அவனின் இன்யை கடமை, டியூட்டி !

உண்மையில் அவன் இன்ûக்கு உள்ளே இருந்திருக்க வேண்டியவன்தான், மேட்ச் நடக்கப்போகிது என்று தெரிந்ததும் முருகானந்தம் ஐயாவிடம் மூன்று மாதம் முன்னாலேயே சொல்லிவைத்துவிட்டான், ‘ஐயா, எனக்கு உள்ளார டியூட்டி போட்டுடுங்க, நேர்ல மேட்ச்சு பார்க்கணும்ன்னு ரொம்பநாளா ஆசை’ என்று அசட்டுச்சிரிப்புடன் உரிமைகலந்து அவன் சொல்லிமுடிப்பதற்குள், ‘எனக்குத் தெரியாதா நாராயணா ? உன்னை பெவிலியன் பக்கத்திலயே போட்டுடúன், ஆசைதீர எல்லா கிரிக்கெட்காரவுகளையும் நெருக்கத்தில பாத்துக்கலாம், சரிதானே ?’ என்ார் அந்த நல்ல மனிதர்.

அவன் முகம்முழுக்க சிரிப்போடு கைகூப்பும்போதே அடுத்த கோரிக்கையை வைத்தான், ‘எம்பையனுக்கும் இந்த ஆட்டம்ன்னா கொள்ளைப் ப்ரியம்ங்கய்யா’, அவன் சொன்னதில் தொக்கிநின் வேண்டுகோளை அவர் புரிந்துகொண்டு, ‘பாருய்யா, ஓசியில கெடச்சா ஒனக்கொண்ணு, ஒங்கப்பனுக்கொண்ணா ?’ என்று அதட்டினார். அவன் நடுங்கிப்போய் மன்னிப்புக் கேட்க முற்படுகையில், ‘எலேய், என்ன பயந்துட்டியா ? சும்மா விளையாட்டுலே, மேட்ச் அன்னிக்கு மவனைக் கூட்டிக்கிட்டு சீக்கிரமே வந்துரு, அவனுக்கும் வி. ஐ. பி. சீட் போட்ரலாம்’ என்று அவன் தோளில்தட்டி அவர் சொன்னபோது பரவசமாய் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அவனுடைய தழுதழுப்பைப் பார்த்துவிட்டு, ‘என்னலே இதெல்லாம் ? வருசம் முழுக்க ஆளில்லாத மைதானத்தக் காவல் காக்கிú நீ, எங்களுக்கு எப்பனாச்சும் ஒருநாள் கூத்து கணக்கா, இப்படி பெரிய மேட்ச்செல்லாம் நடக்கும்போது ஒன்னையெல்லாம் மந்துருவோமா என்ன ?’. பெரிய மனிதர்களால்தான் அப்படியெல்லாம் பேசமுடியும் போலிருக்கிது.

அவனிடம் இரக்கம்காட்டிய ராசியோ என்னவோ, அடுத்த வாரத்தில் ஐயாவின் டி. வி. எஸ் ஐம்பதில் ஒரு குடிகார லாரி வந்துமோதி அவரைப் படுக்கையில் தள்ளிவிட்டது. எலும்பு முறிவு, உள்காயம், அது இதென்று குûந்தது ஆறுமாதமாவது கட்டாய ஓய்வு. தினமும் நூற்றுக்கணக்கானவர்களைக் கட்டிமேய்த்துக்கொண்டு ராஜாமாதிரி கம்பீரமாய் வளையவந்த மனிதர், ‘மீனாட்சி, ஒருவாய் காபி கொடுடி’ என்று கெஞ்சிக்கொண்டு, ஒன்றுக்குப் போவதற்குக்கூட பையன்களின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டு சாய்ந்திருக்கிார். போன மாதம் சம்பளம் வந்ததும் ஆரஞ்சு வாங்கிக்கொண்டு அவரைப் பார்த்துவரப் போனபோது நாராயணன் அடக்கமாட்டாமல் அழுதுவிட்டான், ‘ஆண்டவன் நல்லவங்களத்தான்யா சோதிக்காரு’.

நாராயணன் நல்லவனா தெரியவில்லை. ஆனால் ஆண்டவர் அவனையும் சோதிக்கிார். முருகானந்தம் ஐயாவுக்குபதிலாக இன்சார்ஜாய் வந்தவர் ராணுவத்திலிருந்து ரிடையரான முக்கால் கிழம். சரியான முசுடு. வந்ததும் முதல் காரியமாய், கட்டாய யூனிஃபாரம், எப்போது வேண்டுமானாலும்திடீர் சோதனை, அப்போது டியூட்டி இடத்தில் இல்லாவிட்டாலோ, தூங்கிக்கொண்டிருந்தாலோ அன்யை சம்பளம் கட், மூன்றுமுû இப்படி நடந்தால் விசாரணை, சரியாக காரணம் சொல்லாவிட்டால், வேலையே போய்விடலாம் – இப்படி இன்னும் நியை புதிய சட்டங்கள் கொண்டுவந்ததிலெல்லாம் குûச்சலில்லைதான். நாராயணன் வேலையில் கெட்டி – டியூட்டி என்று வந்து உட்கார்ந்துவிட்டால் அவனுடைய கண் இமைகளை மேலே ஒன்றும் கீழே ஒன்றுமாய் யாரோ இழுத்துக் கட்டிவிட்டதுபோல கண்கொட்டாமல் கவனமாய் இருப்பான். வேறு ஆள் வந்து பொறுப்பெடுத்துக்கொண்டு அவனை விடுவிக்கிவரையில் தூக்கம், பசி எல்லாம் மந்தேபோய்விடும். ஒரு பயல் குற்ம், குû என்று பேசமுடியாத வேலை அவனுடையது, ஆகவே அவன் இந்த ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றியெல்லாம் பெரிதாய் கவலைப்படவில்லை.

பட்டாளத்து மேனேஜரிடமிருந்து அவனுக்குத் தொந்தரவு வேறு வடிவத்தில் வந்தது. இன்று மேட்ச் நடக்கி காலையில், பையனுக்கு இருப்பதிலேயே உருப்படியான சட்டையைப் போட்டுவிட்டு அழைத்துவந்தான். ஆனால் கேட்டில் அவனை மட்டும்தான் உள்ளே அனுமதிப்போம் என்று பிடிவாதமாய் சொல்லிவிட்டார்கள்.

‘இவன் என் மவன்தான்யா’

‘அது தெரியும் நாராயணா, டிக்கெட் இருக்கா ?’ என்று கேள்வி வந்தது பட்டென்று.

முதலில் தெரியாமல் பேசுகிார்கள் என்றுதான் நினைத்தான் நாராயணன், ‘எல்லாம் முருகானந்தம் ஐயாகிட்டே சொல்லியிருக்குய்யா, உள் விடு’

கேட்டில் நின்வன் சிக்கனமாய் சிரித்தான், ‘நானும்தான் அப்பவே அவராண்ட பெர்மிசன் கேட்டுவெச்சேன், என் மச்சானைக் கூட்டிட்டு வரேன்னு. சரின்னுதான் சொன்னாரு, ஆனா இன்னிக்கு புது மேனேஜர் கண்டிப்பா சொல்லிட்டாரே, டிக்கெட் இல்லாம யாரும் உள்ளே போக முடியாது’ அவன் திரும்பிக்கொண்டான். நாராயணன் நின்நிலையிலேயே சிலவிநாடிகள் திகைத்திருந்தான்.

பையனுக்கு சட்டென்று முகம் சுருங்கிவிட்டது. பள்ளிக்கூடத்தில் அவன் க்ளாஸ் பையன்கள் எல்லோரிடமும் ‘நான் இன்னிக்கு நேர்ல மேட்ச் பார்ப்பேனாக்கும்’ என்று பெருமையடித்து முடித்திருந்தான். வீட்டுக்குப் பக்கத்து மைதானத்தில் அவனோடு விகுக்கட்டை கிரிக்கெட் விளையாடுகி குஞ்சுகுளுவான்களிடம்கூட இந்த விஷயத்தைச் சொல்லியாயிற்று, மாலை திரும்பிப்போனதும் இங்கே என்னவெல்லாம் பார்த்தான் என்பதை அவர்களுக்கு ஒன்றுவிடாமல் ஒப்பித்தாகவேண்டும், இப்போதுமட்டும் மேட்ச் பார்க்கமுடியவில்லை என்று திரும்பிப்போனால் அவர்களுடைய பொாமைப் பார்வையெல்லாம் கிண்டலாகவும், கேலியாகவும் மாறி அவனை துரத்தியடிக்கும், முதலில் அவன் மேட்ச் போவதாக சொன்னதையே பொய் என்று சந்தேகிப்பார்கள். அவனுக்கு அழுகை வரும்போல் ஆகிவிட்டது.

நாராயணன் மகனை சமாதானப்படுத்தினான், ‘பொறுடா, மேனேஜர் ஐயாவைப் பார்க்கலாம்’, அவர் பேர் சட்டென்று ஞாபகம் வரவில்லை.

மேனேஜர் ஐயா அவர் நித்துக்குப் பொருந்தாத கறுப்புக்கோட்டில் நியை வியர்த்துக்கொண்டிருந்தார். ஆயிரம் வேலைகளுக்கிடையே அவருக்கு நின்றுபேசக்கூட நேரமில்லை, நாராயணன் யார் என்பதே அவருக்கு முதலில் நினைவில்லை, செக்யூரிட்டி என்று சொல்லி கார்டைக் காட்டியதும், ‘உனக்கு எங்கய்யா டியூட்டி ? நீ எப்படி இங்கே வந்தே ?’ என்று விரட்ட ஆரம்பித்தார்.

‘ஐயா, என் மவனை மேட்ச் பார்க்க உள்ளே கூட்டிட்டுப் போகணும், முருகானந்தம் ஐயாகிட்டே சொல்லியிருந்தேன்’ என்ான் அவசரமாய்.

அவன் சொல்லிமுடிப்பதற்குள் அவருடைய பதில் எச்சில்மழையோடு வெடித்துத் தெறித்தது. ‘அதெல்லாம் முடியாதுய்யா, இப்படிக் கண்டவனையும் ஓசியில உள்ளவிட்டுதான் போனதடவை நஷ்டமாகிப்போச்சு, வேணும்ன்னா டிக்கெட்ல உனக்காக பத்துரூபா குûக்கச் சொல்úன், தொன்னூறு ரூபாய் கொடுத்துட்டு பையனைக் கூட்டிட்டுப்போ’ என்ார் கண்டிப்பாக.

அவன் தயங்கிநிற்பதை கவனிக்காமல் வலதுகை கடிகாரத்தில் மணி பார்த்தார், ‘இன்னும் பத்து நிமிஷத்தில நீ டியூட்டியில ரிப்போர்ட் பண்ணனும், இல்லைன்னா தொலைச்சுபுடுவேன்’ என்று கோபமாக சொல்லிவிட்டு சரசரவென்று கால்கள்விûக்க நடந்துபோனார். எட்டாவது கேட்டில் ஒரு ராணுவஜீப் நுழைந்து நிற்பதும், அவர் அதன்முன்னே போய் நின்று பெரியதாய் ஒரு சல்யூட் வைப்பதும் தெரிந்தது.

நாராயணன் நடந்தது எதையும் நம்பமுடியாமல் சட்டைப்பையைத் தொட்டுப்பார்த்தான், முப்பது ரூபாயும் கொஞ்சம் சில்லûயும் இருந்தது. யாராவது தெரிந்தவர்களிடம் கடன் கேட்கலாம் என்ால் யார் எங்கே நிற்கிார்களோ தெரியவில்லை, அப்படியே கிடைத்தாலும், தொன்னூறு ரூபாய் என்பது அவனுக்கு கிட்டத்தட்ட பத்துநாள் சம்பளம், அவ்வளவு காசுகொடுத்து மேட்ச் பார்த்து என்னத்தைக் கிழிக்கிது குûந்துபோகிது ? இன்னும் பத்து நிமிடத்தில் டியூட்டி.

மகனிடம் தயங்கித்தயங்கி ஏதோ பேசமுயன்போது, அவன் கண்களிலும், உதட்டிலும் வெடிக்கத் தயார்நிலையில் அழுகையோடு, ‘உள் போவமுடியாதா நைனா ?’ என்ான்.

‘எல்லாம் இன்னொருதபா பார்த்துக்கலாம்டா, இப்போ நீ வீட்டுக்குப் போ’ என்று மனமில்லாமல் சொன்னான் நாராயணன். அவன் மகன் அதற்காகக் காத்திருந்ததுபோல் மிகஉடனே, அங்கேயே தரையில் மடங்கி உட்கார்ந்து அழஆரம்பித்தான். தலையில் குளிர்பானக் கம்பெனியின் ஓசி பிளாஸ்டிக் தொப்பி அணிந்து தார்சாலைவரைக்கும் திருவிழாபோல நின்றிருந்த க்யூ அவர்களை விநோதமாய் கவனிக்க ஆரம்பித்தது.

நடந்ததெல்லாம் இப்போதும் கண்ணுக்குள் நிற்கிது. எல்லாக் கோபத்தையும், ஆத்திரத்தையும் சேர்த்து உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த குழந்தையின் முதுகில்வைத்து வீட்டுப்பக்கமாய் விரட்டியடித்தான். பையன் அழுதபடி திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டே ஓடினான், பிள்ளை ஒழுங்காய் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்திருக்க வேண்டுமே என்று அவனுக்கு பெரும்கவலையாய் இருந்தது, இருக்கிது. வீடு பக்கத்தில் நடந்து போய்விடுகி தூரம்தான் என்ாலும், மனதில் துக்கமும், ஏமாற்மும், கவலையும் இருக்கிபோது அடுத்த தெருவே கடல்தாண்டிப்போகிதாய் இருக்கிதே.

மகன் ஆசைப்பட்டதுபோல் மேட்ச் பார்க்கமுடியவில்லை என்தும், நாராயணனுக்கும் அதில் ஆர்வம் போய்விட்டது, அவனுக்கு

– செப்டம்பர் 2002

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *