பக்கத்தில் இருக்கிற ஸ்கூலுக்குப் போய் குழந்தை ஸ்வேதாவுக்கு சாப்பாட்டை ஊட்டி விட்டு வராம சாப்பாட்டை கொடுத்து அனுப்பி விடுகிறாள்.
அப்படி டி.வி. சீரியல் முக்கியமா என்ன? ஹாலில் உட்கார்ந்து டி.வி. சீரியல் பார்த்துக் கொண்டிருந்த மருமகள் அனிதாவை பார்த்து கோபம் வந்தது மாமியார் காமாட்சிக்கு.
அனிதா நீ விட்டில தான் இருக்கிறியா? குழந்தைக்கு லஞ்ச் எடுத்துட்டு போயிருப்பேன்னு நினைச்சேன். ஏம்மா போகல… தற்செயலாக வீட்டுக்குள் நுழைந்த பக்கத்து வீட்டு சுமதி.
அனிதாவிடம் கேட்பது காமாட்சியின் காதுகளிலும் விழுந்தது.
ஏதோ நமக்கு பக்கத்துல ஸ்கூல் இருக்குதுன்னு நான் போய் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிடலாம். ஆனா தூரத்திலயிருந்து வர்ற குழந்தைகளும், பெத்தவங்க ரெண்டு பேருமே வேலைக்கு போறவங்களோட குழந்தைகளும் அவகூடத்தானே சாப்பிடுதுங்க. அந்த குழந்தைக்கு நம்ம ஸ்வேதா குட்டியை பார்த்து ஏங்கிட கூடாதுன்னுதான் இப்போ நான் போறதில்லை..
சுமதியிடம் சொல்லிக்கொண்டிருந்த மருமகள் அனிதாவின் நல்ல மனதை புரிந்து கொண்டவளாய் காமாட்சி நெகிழ்ந்தாள்.
– கீர்த்தி (ஜூன் 2011)