மணிமுடி மாளிகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2022
பார்வையிட்டோர்: 4,078 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ரங்கா ! சங்கர்! எனக்கு வேண்டும் உடுப்புகளெல்லாம் எடுத்தாச்சேர்? போகும் இடங்களில் திண்டாடக் கூடாது. ஜாக்கிரதையாய் எடுத்துவை’ என்றார் என் அப்பா..

எனக்கு அப்பாவும் அப்பாவுக்கு நானுந்தான் உண்டு. இன ஜன பந்துக்களாக யாரும் இருப்பதாக்த் தெரியாது. நாங்கள் இருப்பது திருவனந்தபுரம், தைக்காடு. என் அப்பா ராமநாதபிள்ளை ஒரு டாக்டர். வைத்தியத் தில் பேர் பெற்றவர். ஏராளமான வரும்படி. திருவனந்தபுரத்திலுள்ள செல்வமுள்ள பெருங்குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.

எனது தாயார் காலகதியாகிச் சுமார் பத்து வருஷங்கள் கழிந்துவிட்டன. இந்த நிகழ்ச்சிக்குப் பின், என் அப்பா மகிழ்வேர்டிருந்ததை நான் பார்த்ததே இல்லை. எப்போதும் ஆழ்ந்த சிந்தனையிலேயே இருப்பார்.

எனக்குப் பதினெட்டு வயதாகிவிட்டது. S.S.L.C தேர்ந்து, இண்டர்மீடியட் பரீக்ஷைக்குப் போயிருக்கிறேன். எனக்கு வீட்டில் துணையாயிருந்தது ஒரு பாட்டி. அவள் தான் வீட்டு வேலையைக் கவனித்துக் கொள்வது.

விடுமுறைக் காலத்தில் டில்லி முதலான இடங்களுக்குப் போய் வரவேண்டு மென்பது எனது ஆசை, இதை ஒரு நாள் அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, தற்செயலாய்க் கூறிவிட்டேன். என் வார்த்தையைக் கேட்டதும், என் அப்பா சிறிது நேரம் ஆலோசனையில் ஆழ்ந்துவிட்டார். அவருக்கு வெறுப்பாயுள்ளதைச் சொல்லி விட்டோமோ என்று எனக்குச் சிறிது பயம் தோன்றியது. அவர் முகத்தையே ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பெருமூச்சு விட்டு, “போவோம்” என்று சம்மதித்தார்.

எதையும் முன் கூட்டி ஆலோசித்து முறைப்பட்ச். செய்வது என் அப்பாவின் வழக்கம். பிரயாணம் போவது என்று தீர்மானித்ததும் பல இடங்களிலுமுள்ள நண்பர்களுக்கு எழுதத் தொடங்கினார். தினம் இரண்டு மூன்று கடிதங்கள் எழுதிக் கொண்டேயிருந்தார். பிரயாணத் திட்டம் ஒன்று அமைத்து என்னிடம் காட்டினார். மதுரை, திருச்சினாப்பள்ளி, பட்டணம், ஆக்ரர், டில்லி, காசி, கல்கத்தா முதலிய நகரங்களிலே சில நாள்களேனும் தங்குவதாக ஏற்பாடு. எல்லா இடங் களிலும் ஹோட்டலில் இருந்துவிட வேண்டும் என்று நினைப்பு. தாம் எழுதிய கடிதங்களுக்கு வந்த மறுபடிகளில் சிலவற்றை என்னிடம் வாசித்துக் காட்டினார். அவற்றி லெல்லாம் அவருடைய நண்பர்கள் அவரிடம் கொண்டுள்ள மதிப்பும் அன்பும் வெளியாயின.

எங்கள் பிரயாண தினம் நெருங்கியது. மன நிம்மதி எனக்கு இல்லை, என் அப்பாவுக்கும் இல்லை. ரெயில் மார்க்கத்தை ‘கயிட்’ மூலமாகத் தெரிவதும், ஒவ்வோரிடத் திலுமுள்ள முக்கியமான பார்வைத் தலங்களைக் குறித்து வர்சிப்பதும், இன்னின்ன நண்பர்கள் இன்னின்ன. இடங்களில் இருக்கிறார்கள் என்று விலாசங்களை அறிவதும் தான் வேலையர்க் முடிந்தது. புறப்படும் தினத்திற்கு முந்தின இரவு தான் கடைசி முறையாக உடுப்பு முதலியவற்றைக் குறித்து என் அப்பா கேட்டது.

ரெயில் பிரயாணம் தொடங்கியது. நான் வெகு தூரம் ரெயிலில் சென்றிராதவள். ஆதலால் மிகவும் உத்ஸாகத் தோடு இருந்தேன். வழியிற் காணும் ஊர்கள், பெரிய கட்டடங்கள் முதலியவை எல்லாம் பற்றிக் கேள்விகள் கேட்ட வண்ணமாயிருந்தேன். மேற்கு மலைத் தொடர் வழியாகச் செல்லும்போது அங்குள்ள காட்சி என்னை. முற்றிலும் வசீகரித்து விட்டது. இருபக்கங்களிலும் பச்சைப் பசேலென்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை பசுமை பூத்துக் கிடந்தது. கண்குளிர உள்ளங்குளிர நோக்கி மகிழ்ந்தேன்.

மாலை ஏழு மணிக்கு மதுரை வந்து சேர்ந்தோம். அப்பாவின் நண்பரொருவர் வந்து ஸ்டேஷனில் எங்களைச் சந்தித்தார். எங்கள் ஜாகைக்கு அழைத்துச் சென்றார். எங்களுக்கு வேண்டிய சௌகரியங்களை எல்லாம் ஏற்கெனவே செய்திருந்தார். இங்கே மூன்று நாள் தங்கியிருந்து பார்க்க வேண்டிய அனைத்தையும் பார்த்து முடித்தோம். சொக்கலிங்கர் மீனாட்சியம்மை தரிசனமும் கிடைத்தது. இப்படியே திருச்சினாப்பள்ளிக்கும் சென்று அங்கும் மூன்று நாள் தங்கி நகர் முழுதும் சுற்றிப் பார்த்தோம். தாயுமானார் கோவிலுக்கும் ரங்கநாதர் கோவிலுக்கும் போய்த் தரிசனம் செய்தோம். அப்பாவின் நண்பரொருவர் இங்கேயும் வேண்டிய வச்தி செய்திருந்தார்.

திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட எட்டாம் நாள் சென்னபட்டணம் வந்து சேர்ந்தோம். இங்கே அப்பாவுக்குத் தெரிந்தவர் யாரும் வரவில்லை. நேரே ‘எவரெஸ்ட் ஹோட்டல்’ போய்ச் சேர்ந்தோம். ஒரு வாரம் தங்க நேர்ந்தது. அப்பாவும் நானும் பல இடங்களுக்கும் சென்றோம். பல காட்சித் தலங்களையும் கண்டோம். சென்னையை நோக்க், திருவனந்தபுரம் ஒரு சிற்றூரர்கவே தோன்றியது.

இங்கிருக்கும் பொழுது ஒருநாள் காலையில் என்னை ஹோட்டலில் விட்டு, அப்பா மட்டும் வெளியே சென்றார். தனியே எங்கே போகிறார் என்று சிறிது ஆத்திரத்தோடு நான் இருந்தேன். பதினோரு மணிக்குத் திரும்பினார். நாங்கள் இருவரும் சாப்பாடு முடிந்து உட்கார்ந்து கொண்டிருந்தோம். அப்பா ஏதோ சொல்ல விரும்புகிறார் என்று தோன்றிற்று. சிறிது நேரம் கழித்து மெல்ல மெல்லச் சொன்னார். இதுவரையும் எனக்குத் தெரியாத குடும்ப விஷ்யமாயிருந்தது.

அப்பாவுக்கு விசாலாட்சி என்று ஒரு தங்கை இருந்தாள். அவள் நல்ல அழகும் கல்வியும் உடையவள். திருவனந்தபுரத்தில் கலாசாலையில் வாசித்து வந்தாள். அவளோடு கிருஷ்ணசுவாமி என்றொருவரும் வாசித்து வந்தார். இவர் எங்கள் இனத்தவராயிருந்தாலும் வைஷ்ணவர்; மிகவும் ஏழை. இவரை முழுமன துடன். இந்த அம்மாள் காதலித்து விட்டாள். இவள் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளாதலினாலும், அழகும் செல்வமும் வாய்ந்தவளாதலினாலும் பல செல்வர்கள் இவளை மணம் பேசி வந்தார்கள். என் அப்பாவுக்கும் அவர் பெற்றோருக்கும் ஒரு செல்வக் குடும்பத்தில் இவளை வாழ்க்கைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இவள் அதற்குச் சிறிதும் இணங்கவில்லை. தன் தாயாரிடத்தில் ‘மணப்பதர்னால் கிருஷ்ண சுவாமியை மணப்பேன். வேறொருவரைக் குறிப்பிடுவதானால் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று உறுதி கூறிவிட்டாள், இது வெளிப்பரவு முன் இவள் அன்பு பூண்டவர்க்கே மணம் செய்து கொடுத்து விடுவதென்று என் அப்பா வாதாடினார். ஆனால், கலியாணம் ஆனதற்கப்புறம், தங்கள் முகத்திலே விழிக்க வேண்டியதில்ல ; எல்லாவிதமான பற்றும் அற்றுப் போய் விட்டதென்று வைத்துக்கொள்ள வேண்டும் என்று விசாலாட்சி அம்மாளிடம் என் அப்பாவும் அவர் பெற்றோரும் சொல்லிவிட்டார்கள். விசாலாட்சியம்மாள். சிறிது தயங்கினாள். முடிவில் ‘அப்படியே’ என்று ஒத்துக் கொண்டாள். கலியாணம் நடந்தது. மணப்பெண்ணுக்கு எராளமாகப் பணங் கொடுக்கப்பட்டது. நாலாம் நாள் தம்பதிகள் சென்னபட்டணத்திற்கு வந்து விட்டார்கள். எனது பாட்டி மட்டும் தன் மகளை நினைத்து அடிக்கடி வருந்துவதுண்டாம்; வேறொருவரும் நினைப்பதேயில்லை.

இரண்டு குடும்பமும் முற்றும் பிரிவுபட்டு 25 வருஷம் ஆகிவிட்டது. நன்மை தின்மை விசாரணை கூடக் கிடையாது. எனது அப்பாவின் கலியாணம், எனது பாட்டனார் பாட்டி மரணம் முதலியவற்றிற்குக் கடிதம் கிடையாது. அப்படியே கிருஷ்ணசுவாமிப் பிள்ளையின் மாணம் முதலியவற்றிற்கும் கடிதம் கிடையாது.

25 ஆண்டுகளுக்குப் பின் இன்று காலையில் தான் விலாசத்தை வெகுசிரமப் பட்டுக் கண்டு பிடித்துத் தம் தங்கையைப் போய்ப் பார்த்து வந்தார். நீண்ட காலமாக மனத்திலேயிருந்த வேதனை இன்று சிறிது நீங்கியவர் போல் என் அப்பா எனக்குப் புலப்பட்டார். ஒருவரை யொருவர் கண்டதும் தங்கை ஓடிவந்து ‘அண்ணா’ என்று அலறிப் பாதங்களில் விழுந்து புலம்பினாளாம். அப்பாவும் மிகவும் வருந்தினார் என்பதை அவர் கண்கலக்கமே எனக்குத் தெரிவித்தது.

தங்கைக்கு ஸ்ரீநிவாசன் என்ற ஒரேயொரு மக்ன உண்டென்றும், அவன் சென்னை ஸர்வ கலாசாலையில் பீ, ஏ-ல் மிக்க சிறப்புடன் தேர்ச்சி பெற்று இங்கிலாந்துக்கு மேற்படிப்பின் பொருட்டுச் சென்று மூன்று ஆண்டுகள் தங்கிக் கற்று, திரும்ப வந்து, ஆசிரியனாக வேண்டும் என்ற நேர்க்கத்தோடு பெனாரஸ் விசுவ வித்யாலயத்திற்குச் சென்றிருக்கின்றானென்றும் சொல்லி முடித்தார். அன்று மாலை 4-மணிக்குத் தம் தங்கை என்னைப் பார்க்க் ஹோட்டலுக்கு வரப்போவதாகவும் சொன்னார்.

எனக்கும் அத்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆராமை உதித்தது.

நாலு மணிக்கு ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. வண்டிக்காரன் வந்து அப்பர் பெயரைச் சொல்லி அவர் இருக்கும் அறையை விசாரித்தது எங்கள் காதிற்பட்டது. உடனே அப்பர் வண்டியருகில் சென்று தம் தங்கையை அழைத்து வந்தார். அறைக்குள் வந்ததும் என்னைப் பார்த்து அருகில் வந்து என்னைப் பிடித்துக்கொண்டு பேசமுடியாமல் பெர்ருமினாள்.

பின் ‘உன் தாயாரைப் பார்க்கக் கூடிய பாக்கியம் எனக்கு இல்லாமற் போய்விட்டது, உன்னையாவது பார்க்கக் கொடுத்து வைத்ததே’ என்று சொல்லி என்னை நெருக்கி அணைத்துக் கொண்டாள். மிக்க அன்போடு என்னைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள். வெகு நேரமாய்ப் பேசிக் கொண்டிருந்தோம். என்னையும் அப்பாவையும் உடனே அழைத்துப் போக வந்திருப்பதாகவும் அவள் வீட்டிலேயே தங்கவேண்டுமென்றும் கூறினாள். நான் அப்பாவைப் பார்த்தேன், அவர் முகத்தில் திருப்தி காணப்பட்டது. அவர் தங்கையைத் தம்மோடு கூட ஹோட்டலில் அன்றிரவு தங்கும்படியர்கச் செய்து மறுநாள் அவள் வீட்டுக்குச் செல்வதாகக் கூறினார்.

மறுநாள், அத்தை வீட்டுக்குச் சென்றோம். ராயப் பேட்டையில் மிகப் பெரிய வீடு. எங்களுக்குச் செய்த உபசாரத்திற்குக் கணக்கில்லை. மாலையில், அப்பா ஒரு நண்பரைப் பார்த்து வருவதாகச் சொல்லி வெளியே போனார். அத்தையும் நானும் தனித்தேர்ம். சிறிது நேரம் மௌனமாயிருந்து பின் ‘உன் மாமா முதலானவர்க் ளின் படங்களையெல்லாம் நீ பார்க்க வேண்டாமா?’ என்று சொல்லி என்னை ஒர் அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே பெரிய படங்களாக் மூன்று படங்கள் இருந்தன். மத்தியில் ஒரு பெரியவருடைய படம். பக்கத்தில் அத்தையினுடைய படம்; மறுபக்கத்தில் ஓர் இளைஞருடைய படம், பெரியவரும் இளைஞரும் இன்னாரென்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. பெரியவரையும் அத்தையையும் ஊன்றிக் கவனித்தேன். இளைஞருடைய படத்தைப் பார்க்க மிகவும் ஆசை இருந்தது; ஆனால் கடைக் கண்ணால் இரண்டு மூன்று முறை மட்டும் பார்க்கத்தான் முடிந்தது. வசீகரமான முகம்; சிரிக்குங் கண்கள்; குறும்பும் புன்னகையும் தாண்டவமாடும் இதழ்கள். இம்முகம் என் மனதில் நன்றாய்ப் பதிந்து விட்டது. அறையை விட்டு இருவரும் திரும்பினோம். ‘இரண்டு பொக்கிஷத்தில் ஒன்றை இழந்து விட்டேன்; இருக்கிற பொக்கிஷத்தை உடைமைக்காரியிடம் ஒப்புவித்து விட்டு இந்தக் கட்டையை விட்டு ஆவி பிரியவேணும். அந்தக் கவலை தான் இப்போது’ என்று பெருமூச்சு விட்டுக் கூறினாள். கேட்டுங் கேளாததுமாகக் கனவு மயக்கத்தில் இருந்தேன்.

நாங்கள் சென்னையை விட்டுப் போகும். தினம் நெருங்கியது. அத்தையின் அன்பிலே ஈடுபட்டு விட்டேன். தாயின் அன்பைப் பூரணமாய் அனுபவித்தறியாத எனக்கு இவ் அன்பு அளவற்ற இன்பத்தைத் தந்தது. அவளை விட்டுப் பிரிந்து செல்வது கஷ்டமாய்த் தான் இருந்தது.

மீண்டும் பிரயாணம் தொடங்கினோம். நேராக் ந்யூ டில்லிக்கு வந்து சேர்ந்தோம். தந்தி கொடுத்திருந்த படியால் அப்பாவின் நண்பர் ஒருவர் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். அவர் ஒரு பெரிய பிரபு. எங்களுக்கு வேண்டும் வச்திக்ளெல்லாம் செய்து, வேறிடங்களுக்குப் போய் ஜர்கை வைத்துக் கொள்ளக் கூடாது என்று தடுத்து விட்டார். அவருடைய மகள் ஜலஜா என்ற பெயருள்ள எட்டு வயதுச் சிறுமி, என்னை ‘அக்கா’, ‘அக்கா’ என்று அன்பு உபசாரம் செய்யத் தொட்ங்கி விட்டாள். வீட்டுப் பெரிய அம்மாவும் மிக்க அன்பாக இருந்தார்கள். எங்களுக்கு என்று விசாலமான ஓர் அறை. வெளியே போகும் நேரம் தவிர மற்றக் காலங்களில் அந்த அறையில் ஒரே கும்மாளந்தான். ஜலஜாவின் பாட்டும் சிரிப்பும்; இடையிடையே இந்துஸ்தானிப் பேச்சு; வீட்டு அம்மாவின் பேச்சு, உபசரணைக் கேள்விகள்; அப்பாவும் நண்பரும் பேசிக் கொண்டிருந்த தமாஷ் பேச்சுக்கள்.

இவ்வாறாக் நான்கு நாட்கள் கழிந்தன. ஐந்தாவது நாள் காலை 9 மணிக்கு ஒரு ‘டோங்கா’ வந்து வீட்டு வாசலில் நின்றது. அதிலிருந்து ஓர் இளைஞர் இறங்கி வந்தார். சுமார் 25 வயது இருக்கும். நான் என் அறையிலிருந்தே அவரைக் கவனித்துவிட்டேன். என்னால் நம்ப முடியவில்லை. நான் அத்தை வீட்டில் படத்தில் பார்த்த அவரே தான். எங்களைக் கண்டதும் அவரும் தயங்கி நின்றார். வேறு வீட்டுக்கு வந்து விட்டதாக அவர் நினைத்திருக்க வேண்டும்.

ஜலஜா அவரிடம் ஓடிப்போய், ‘அத்தான்! அக்கா, பெரியப்பா எல்லாரும் வந்திருக்கிறார்கள். அப்பாவும் பெரியப்பாவும் வெளியே போயிருக்கிறார்கள். வாங்க, உள்ளே’ என்று கூச்சலிட்டு அழைத்தாள். ஜலஜா உள்ளே சென்று தன் தாயாரிடம் சொல்லிக் காப்பி கொண்டுவந்து கொடுத்தாள். அவர் காப்பியை வாங்கிக் குடித்துவிட்டு, சிறிது நேரம் அறையின் வெளியே இடப்பட்டிருந்த நாற்காலியில் இருந்து பின், ‘நான் வந்திருக்கிறேன் என்று அப்பாவிடம் தெரிவி, ஜலஜா, கொஞ்சம் வெளியே போய் வருகிறேன்’, என்று சொல்லி விட்டு வெளியே சென்றார். அவர் போனதற்கப்புறம் அவரை யாரென்று ஜலஜாவிடம் விசாரித்தேன்.

‘அவரைத் தெரியாதா? அவர் சீனு அத்தான்; அவரைத் தான் நான் கலியாணஞ் செய்யப் போகிறேன். பட்டணத்திலிருந்து வந்திருக்கிறார்’ என்ற விளக்கமான பதிலைச் சொன்னாள். நானும் எல்லாம் தெரிந்துவிட்டவள் போலச் சும்மா இருந்து விட்டேன். என் மனம் பறையடித்துக் கொண்டேயிருந்தது.

அப்பாவும் அவர் நண்பரும் வந்து சேர்ந்ததும், ஜலஜா, ‘சீனு அத்தான்’ வந்து சென்றதைத் தெரிவித்தாள். வந்தவர் யாரென்று அப்பா கேட்க ‘எனது நண்பர் ஒருவருடைய பிள்ளை, ஸ்ரீநிவாசன் என்று பெயர். சென்னையிலுள்ளவர், நல்ல குணம், நல்ல அறிவாளி; சீமைக்குப் போய்க் கல்வி பயின்று வந்தவர். பெனாரஸ் விசுவ வித்யா நிலையத்தில் வேலைக்குச் சென்று திரும்பி வந்திருக்கிறார்’ என்று சிலாகித்துக் கூறினார். அப்பா இவ்வளவையும் கேட்டதும் சிறிது ஆலோசனையில் அமர்ந்தார். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. முதலில் நான் நினைத்தது உறுதியாயிற்று.

சீனு திரும்பி வந்தார். அப்பாவிடம் அவர் நண்பர் சீனுவை அறிமுகப்படுத்தினார். அப்பாவைப் பற்றி யாதும் அவர் தெரிந்திருப்பதாகத் தோன்றவேயில்லை. இரண்டெர்ரு முறை வேண்டுமென்றே அவர்களிருக்கு மிடத்திற்குச் சென்றேன். ஒரு முறை சீனு என்னை உற்று நேர்க்கினது போல் புலப்பட்டது. அவர் தமக்கு விசுவ வித்யாலயத்தில் வேலையாய் விட்டதென்றும், ஸர் – எஸ்.ராதா கிருஷ்ணன் தம்மை இங்கிலாந்தில் அறிந்திருந்தபடியால் லகுவில் தமது முயற்சி கைகூடியது என்றும் ஆங்கிலத்தில் கூறி, மறுநாள் தாம் ஆக்ரர் செல்ல உத்தேசிப்பதாகவும் அங்கிருந்து சென்னைக்குத் திரும்புவதாகவும் சொன்னார். எங்கள் பிரயாணத் திட்டத்திற்கு இது ஒத்திருந்தது. அப்பாவும் மறுநாள் ஆக்ரர்வுக்குப் புறப்படுவதர்கக் கூறினார். அன்றிரவு நான் கண்ட கனவுகள் எனது வாழ்க்கைச் சித்திரமாயிருந்தன.

மறுநாள் காலை சீனுவும் அப்பாவும் நானும் ஆக்ரா வுக்குப் பிரயாணமானோம். ஜலஜாவையும் உடன் கூட்டிச் சென்றோம். இரண்டாம் வகுப்பு வண்டியிலும் ஏக்க் கூட்டம். எங்களுக்கு இடம் கிடைப்பது மிகவும் சிரமமாயிருந்தது. வாசலிலே சீனு நின்றுகொண்டு என்னை உள்ளே போகச் செய்தார். பின் அப்பா வந்தார். பின்னால் அவர், ஜல ஜாவைத் தூக்கிக் கொண்டு. நானும் அப்பாவும் ஒருவாறாகச் சமாளித்து உட்கார்ந்து கொண்டோம். ஜலஜாவை மடியில் வைத்துக் கொண்டேன். சீனு நிற்க வேண்டிய தாயிற்று. எனக்கு இது மிக வருத்தமாயிருந்தது. மூன்றாவது ஸ்டேஷனில் என் பக்கத்திலிருந்த ஒருவர் இறங்கினார். அந்த இடத்தில் சீனுவை உட்காரச் சொல்லி அப்பா எவ்வளவேர் வற்புறுத்தியும் அவர் மறுத்துவிட்டார். புதிதாக ஒருவர் வந்து உட்கார முயல்வதைக் கண்ட பின்புதான் அவர் வந்து உட்கார்ந்தார். என் மனத்திலிருந்த குதூகலத்தையும் நாணத்தையும் மறைப்பது மிகக் கஷ்டமாயிருந்தது. ஜலஜா அவர் சட்டையைப் பிடித்துச் சேஷ்டை செய்து கொண்டிருந்தாள். அவாது சட்டையின் நுனி என்மேல் படும்படி நேரிட்ட போதெல்லாம் என் மேனி புளகிதமாயிற்று.

சுமார் 4 மணி நேரம் சென்றதற்கப்புறம் ஆகரா வந்து சேர்ந்தோம். உடனே ஆகாரத்தை ஒருவாறு முடித்துக் கொண்டோம். பின் ஒரு டாக்ஸி அமர்த்திக் கொண்டு டாஜ்மஹால் பார்க்கச் சென்றோம். டாஜின் முன்பாக வண்டி நின்றது. ஜலஜாவும் நானும் ஒன்றாகக் கைகோத்து நடக்கலானோம். எங்களுக்கு முன்பாக – அப்பாவும் சீனுவும் சென்றுகொண்டிருந்தனர். முகப்பு மாளிகையைக் கடந்து அதினின்று டாஜ்வரை அமைந்திருந்த சலவை ஓடைத் தொட்டியருகில் வந்ததும் சீனு எங்கள் பக்கத்தில் நெருங்கிவிட்டார். அப்பா டாஜின் அழகில் ஈடுபட்டு முன் கூட்டி நடந்து சென்றனர். ஜலஜாவை நோக்கி ‘உன் அக்காவின் பெயரை நீ எனக்குச் சொல்லவில்லையே! அவள் பெயர் என்ன? சொல்லு’ என்று சீனு கேட்டார். ‘எத்தனையோ முறை என் பெயரால் என்னை ஜலஜா அழைப்பதைக் கேட்டிருக்கிறார். என் பெயரைத் தெரியாதவரல்ல. என்னோடு பேசுவதற்கு இது ஓர் உபாயம்’ என்று எண்ணிக்கொண்டேன்.

ஜலஜா ‘தெரியாதா? சொல்லுகிறேன். ரங்கநாயகி அம்மாள் அவர்கள். அழகான பெயரல்லவா? உங்களுக்கு இந்தப் பெயர் பிடித்திருக்கிறதல்லவர்? இனி நீங்கள் மறக்க மாட்டீர்களே?’ என்று சொல்லிச் சிரித்தாள். எனக்கு ஒருபுறம் வெட்கம், ஒருபுறம் என்ன சொல்லப் போகிறாரென்று கேட்க ஆசை, ‘அழகான பெயர் தான், ஆளுக்கு ஏற்றாற்போல’ என்று சொல்லி என் முகத்தை நோக்கினார். நான் வேறு புறமாகத் திரும்பிக் கொண்டேன். எங்கள் எதிரே கண்ணையும் மனத்தையும் ஒருங்கே கொள்ளை கொண்டு நின்ற டாஜ்மஹாலைச் சுட்டிக் காட்டி, ‘இதன் சரித்திரம் தெரியுமா? ஜலஜா’ என்று கேட்டார். ஜலஜா தெரியாதென்று தலையை ஆட்டவே, அவர் சொல்லத் தொடங்கினார்:

‘300 வருஷங்களுக்கு முன், ஷாஜஹான் என்று ஒரு முகலாயச் சக்கிரவர்த்தி இருந்தார். அவருக்குப் பிரிய பத்தினியாக் இருந்தவள் மும்டாஜ் மஹால் என்ற ஒரு ஸ்த்ரீரதனம். சக்கிரவர்த்தி அலங்கார ஆடம்பரங்களில் பற்றுள்ளவர். வாழ்க்கையிலே அழ்கும் அன்பும் நிரம்பி யிருத்தலையே விரும்பியவர். அவருடைய பத்தினியின் விருப்பமும் அவ்வாறே. இருவரும் இகவாழ்வின் பின் தங்கள் பூத உடம்பு சமாதி பெறும் மாளிகையொன்றை இயற்ற எண்ணினார்கள்; இருவரது காதலின் அழகிற்கும் தூய தன்மைக்கும் இன்பவுணர்ச்சிக்கும் தகுதியாக இம்மாளிகை அமைய வேண்டுமென்று நெடுநாளாகக் கருதி வந்தார்கள், ஒரு நாளிரவு மும்டாஜ் ஒரு கனவு கண்டாள் – சமாதி மாளிகையின் அமைப்பைப் பற்றி. இதைத் தனது நாயக்ருக்குச் சொல்ல, அவரும் பல தேசத்துச் சிற்பிகளையும் வரவழைத்துக் கனவிற் கண்ட மாளிகையின் அமைப்பைக் கூறினார். அவர்களால் அக்கனவு – மாளிகையை உருப்படுத்த. முடியவில்லை. இம்முயற்சியில் சில காலம் சென்றபின், ஒருநாள் ஒரு கிழவன் சக்கிரவர்த்தியின் முன்பு வந்து. மாளிகையின் அமைப்பை உருப்பெறச் செய்வது.. தன்னால் கூடும் என்று தெரிவித்தான். அவரும் ஒரு சிறந்த சிற்பியிடம் அந்தக் கிழவனை அனுப்பினார். கிழவன் அமிர்தம் போன்ற ஒரு பானத்தை அச்சிற்பி யிடம் கொடுத்துக் குடிக்கச் செய்தான். குடித்ததும் அவன் மனக்கண் முன்னே கனவு-மாளிகை பேரழகுடன் உருப்பெற்று நின்றது. சிற்பி வெகு விரைவாகக் கட்டட வேலையில் முனைந்தான். மாளிகை முற்றுப்பெற்றது ; . பானத்தின் வேகம் தணிந்தது ; சிற்பி கீழே மயங்கி விழுந்துவிட்டான்.

‘இந்த மாளிகை தூய வெண்சலவைக் கல்லினால் அமைந்தது. எட்டு முகப்புக் கொண்டது. 130 அடி நீளமும் 130 அடி அகலமும் உடையது ; உயரம் ஸ்தூபி உள்பட 200 அடி. மேன்மையும் அழகும் உள்ள இரண்டு சிறு சிக்ர மாளிகைகள் இரு பக்கத்திலும் இருக்கின்றன. மாளிகை முழுவதும் அமைதியுற்று விளங்கி யமுனை நதியை நோக்கி நிற்கிறது. மாளிகையைச் சூழப் பூ மரங்கள் நிரம்பிய தோட்டம்.

‘ஸ்தூபியை அடுத்துக் கீழே வெற்றுச் சமாதிகள் இரண்டு இருக்கின்றன. தங்கள் மரணத்தின் பின் * இன்ன முறையில் தங்களை அடக்கஞ் செய்யவேண்டும் என்பதைக் காட்டுவதற்காக இவ் வெற்றுச் சமாதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சலவைக் கல்லினால் இழைத்த மெல்லிய திரைகளினூடே வெயிலொளி நுழைந்து சென்று வெற்றுச் சமாதிகள் மீது உலவி விளையாடு கின்றன. உட்பக்கத் துள்ள சலவைச் சுவர்களில் பல வகையான மணிக்கற்களால் பூ வேலைகள் செய்யப்பட் டுள்ளன. இவற்றிற்குக் கீழர்க நிலவறையொன்று உள்ளது. அதற்குச் செல்லுமிடமும் அழகாக அமைந் துள்ளது. அங்கே தான் உண்மையான சமாதி இருக்கிறது. ஷர்ஜகர் னும் மும்டர்ஜ் மஹாலும் நித்திய நித்திரையில் அமர்ந்திருக்கிறார்கள்.

‘இங்கு வந்து அடையுமுன் ஷாஜகான பெரும்பாடு – பட்டு விட்டார். முதலில் தனது காதற்குரிய இராணியை இழந்தார். இந்தத் துக்கத்தினால் மனமுடைந்திருக்கும் பொழுது தமது மக்களால் பெருந் துன்பம் விளைந்தது. இவரை ஆக்ராவிலுள்ள கோட்டையில் சிறைவைத்து . விட்டார்கள். சிறையிலிருந்து டாஜ்மஹாலைப் பார்ப் பதற்குரிய வசதி இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டு ஏழு வருஷம் உயிர் தாங்கியிருந்தார். முடிவில் இறந்து இங்கே நி தயவாசம் பண்ணுகிறார்.

காதலில் தோன்றி, காதலில் வளர்ந்து, காதல் ஒளியிலே திகழ்வது இந்த டாஜ்மஹால். அழகு குடிகொண்டுள்ளது. உண்மை அன்பு ஒளிவிட்டு விளங்குகிறது. இதைத் தெய்வக் காதலின் திருக் கோயில் என்று சொல்லலாம். டாஜ்மஹால் என்றால் மாளிகைகளின் மணிமுடி என்று பொருள். ஒவ் வொருவன் உள்ளத்திலும் விளங்கும் காதற் கோயிலின் வெளித்தோற்றமே இம் மணிமுடி மாளிகை. இந்தப் புண்ணிய ஸ்தலத்தை மிதித்ததும் என்றுமில்லாத ஓர் இன்ப உணர்ச்சி தோன்றுகிறது!’ என்று முடித்தார்.

கடைசி வாக்கியங்கள் மட்டும் சிறிது நிதானமாக மெல்ல வெளிவந்தன. என் இதயத் துடிப்பு நின்று விடும் போலிருந்தது. ஏறிட்டுப் பார்த்தேன். அவர் கூரிய கண்கள் என்னையே நோக்கிக் கொண்டிருந்தன.

அவர் முகத்தில் ஒரு சோக உணர்ச்சி. ‘அப்பா அதேர போடுறார். நாமும் போக வேண்டாமா?’ என்று ஜலஜா கேட்டதற்கப்புறந்தான் நகரத் தொடங்கினோம்,.. அவள் அப்பாவின் கையைப் பிடிக்க ஓடினாள்.

சீனு மறுபடியும் ‘ரங்கா, உன் மறுமொழியில் தான் என் உயிர் இருக்கிறது. நீ இன்னாரென்று எனக்குத் தெரியும். திருவனந்தபுரத்திற்கு ஒருமுறை உன்னைப் பார்ப்பதற்கென்றே வந்தேன், என் தகப்பனார் அப்போது உயிரோடிருந்தார், உங்கள் வீட்டுக்குப் போகக் கூடாது என்பது அவருடைய கடுமையான உத்தரவு. அவ்வுத்தரவுக்குப் பங்கம் வராமல் உன்னைப் பார்த்துத்.. திரும்பினேன். நான்கு வருஷம் ஆய்விட்டது.

‘நான் பார்த்தது முதல் உன் முகத்தை என் மனத்திலே பிரதிஷ்டை செய்துவிட்டேன், என்னை உனக்குத் தெரியக் காரணமில்லை. உன் அப்பாவோடு உடன் பிறந்த அத்தை யொருத்தி உண்டென்று கேள்விப்பட்டிருப்பாயோ என்னவோ தெரியாது. நான் அவளுடைய ஏகபுத்திரன் தான்’ என்று கூறி என்னை நோக்கிக்கொண்டே நடந்தார். ‘மறுமொழி இல்லையா?’ என்று மீண்டும் தீனமான குரலில் கேள்வி எழுந்தது. எனக்குப் பொறுக்க முடியவில்லை. சிறிது தயங்கி நின்று ‘மணிமுடி மாளிகையின் சரித்திரம் என்னையும் உருக்கி விட்டது. என் மனத்திலும் இன்று வரையில்லாத ஒரு புத்துணர்ச்சி அரும்பிவிட்டது’ என்று மட்டும் சொல்லி அன்புடன் அவரைப் பார்த்தேன்.

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல

என்று அழுத்தமாகக் கூறினார், எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.

மறுநாள் சென்னைக்குப் புறப்படுவதாகவும் தன் தாயாரிடம் எல்லா. விவரங்களையும் தெரிவிக்கப் போவ தாகவும் சொன்னார். நான் தலையை அசைத்துவிட்டு, என் அப்பாவிடம் இரண்டு மூன்று வருஷங்கள் கழிதது தான் கலியாணம் என்று சொல்லப் போகிறேன் என்றேன். சிறிது கலவரப்பட்டு நோக்கினார்.. ‘உங்கள் படிப்பு முடிந்துவிட்டது; என் படிப்பு முடியவேண்டாமா ?’ என்றேன். ‘இஷ்டம்: என்னை ஏற்றுக்கொண்டால் என் வாழ்நாள் முழுதும் காத்திருக்கத் தயார்’ என்றார்.

இருவரும் அப்பாவிடம் வந்து சேர்ந்தோம். அவர் ‘டாஜ்மஹால் உலகத்திலே பேரழகு படைத்த கட்டடங்களுள் ஒன்று. அதன் சரித்திரம் அதியற்புதமானது. கனவு நனவாகப் பரிணமித்து எல்லையற்ற அன்பும் – அழகும் உருவெடுத்ததுபோல் விளங்குகிறது’ என்று – ஆழ்ந்த சோகத்தோடு கூறினார்.

சீனு மறுநாள் புறப்பட்டார். என் மனம் வெறிச் சோடிப் போயிற்று.

நாங்களும் ஜலஜாவோடு டில்லி வந்து, பின், காசி முதலிய இடங்களுக்குச் சென்று சென்னைக்குத் திரும்பினோம். காசியில் இருக்கும்பேர் து அதை என் வர்சஸ்தலமாக எண்ணி உரிமையோடு பார்த்து மகிழ்ந்தேன். சென்னையிலே சேரும் காலத்தை அத்தைக்கு அப்பா தெரிவித்திருந்தார். ஸ்டேஷனில் அத்தையும் சீனுவும் வந்திருந்தார்கள். அப்பா சீனுவைப் பார்த்ததும் ‘நீ இன்னாரென்று எனக்கு டில்லியில் வந்தே தெரியும். என்றாலும் உன் மனத்தில் யாதொரு குழப்பமும் இருக்கக் கூடாதென்று தான் சொல்லவில்லை. பெனாரஸுக்கு எப்பொழுது போகிறாய்?’ என்றார். ‘விடுமுறைக் காலம் கழிந்து போவதாக எண்ணியிருக்கிறேன்’ என்று பதிலுரைத்தார். என் அத்தை என்னை அன்போடு அணைத்து உச்சிமோந்தாள். வந்த சிரமந்தீர இரண்டு நாள் அங்கே தங்கினோம். சீனு என்னைத் தனியாகப் பார்க்கும் சமயங்களில் பிரிந்திருக்க ஒருநாள் கூட முடி யாது போலிருக்கிறது’ என்று சொல்லுவார். இந்தப் பொய் வேஷம் வேண்டாம். இதுவரை இருந்ததுபோல் இன்னும் இரண்டு வருஷமாவது இருக்க வேண்டியது. தான்’ என்று சொல்லி ஓடிப்போய் விடுவேன்.

நாங்கள் திருவனந்தபுரத்திற்குத் திரும்புவதற்கு முந்திய மசலை. அப்பா காஸ்மபாலிட்டன் களப்பிற்கு மருமானொடு போய்விட்டார். மருமானுக்குப் போக் இஷ்டமில்லை; என்றாலும் மறுக்க முடியவில்லை. என் அத்தை வழக்கப் பிரகாரம் எனக்குத் தலைபின்னிப் பூச் சூட்டிக் கொண்டிருந்தாள். திடீரென்று என்னை அருகி லணைத்துக் கொண்டு ‘எங்கள் பேரிலெல்லாம் உனக்குப் பிரியந்தானே?’ என்றாள். நான் ‘அதற்குச் சந்தேகம் என்ன?’ என்றேன். ‘உன் அத்தான் சந்தேகப்படுகிறான். இரண்டு வருஷம் கழிய வேண்டுமென்று . சொன்னாயாமே? எதற்கு?’

எனக்கு அழுகை வந்துவிட்டது. ஒருவாறாக் அடக்கிக் கொண்டேன். ‘ஒரு சந்தேகமும் வேண்டாம். அவருடைய படத்தைப் பார்த்ததிலிருந்து அவரோடு ஜன்ம ஜன்மாந்தரங்களாய்ப் பழகியது போலுள்ள அன்பு எனக்கு உண்டாய்விட்டது. அவர் என்னை நிராகரித்தால், நான் கன்னியர்கவே இருந்து தேச சேவைசெய்ய இறங்கிவிடுவேன். அவரிடம் இரண்டு வருஷங்கள் நான் யாசித்தது, கல்வியை அபிவிருத்தி செய்து அவருக்குத் தக்க வாழ்க்கைத் துணைவியர்க ஆவதற்கே. இதை நீங்கள் என் விண்ணப்பமாக் அவரிடம் தெரியப்படுத்த வேண்டும்’ என்றேன். என் அத்தை இன்னும் நெருக்கமாய் அணைத்துக் கண்ணீர் விடுவது கண்டேன். அவள் உள்ளத்தில் என்னென்ன நினைவு தோன்றின என்று யாரால் சொல்லமுடியும்?

அன்றிரவு தன் மகனோடு மிக் அந்தரங்கமாக நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தாள்.

மறுநாள் இரவு புறப்பட்டோம். வழியனுப்பத் தாயும் மகனும் வந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர்கள் கருத்தை நன்றாய் அடக்கி வைத்துக் கொண்டு நடித்தோம்.

அடிக்கடி அத்தையிடமிருந்து அப்பாவுக்குக் கடிதம் வரும். மேல் விலாஸம் அத்தான் கைப்பட இருக்கும்.

அதைக் கண்டு திருப்தியடைந்து வந்தேன. கடிதங்களெல்லாம் பெனாரஸிலிருந்து தான்.

நான் என் படிப்பிலேயே கண்ணுங் – கருத்துமா யிருந்தேன். என் முயற்சியும் பலி தமாயிற்று. பீ. ஏ. பரீட்சையில் முதல் வகுப்பில் தேறினேன். மூன்று நாள் கழித்து என் வெற்றியைக் குறித்து அத்தானிடமிருந்து ஒரு தந்தி வந்தது. பின் அத்தையிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதை என் அப்பா என் கையில் கொடுத்தார். அக்கடிதத்திற்கு அவர் எழுதிய பதில்

என் அருமைத் தங்கைக்கு,

உனது கடிதம் கிடைத்து மகிழ்ந்தேன். ரங்கா தனது அத்தையைப் போலவே பிடிவாதமுள்ளவளாய் இருக்கிறாள். உன் வீட்டிலிருக்கும் பொழுது யாரேர் ஒருவருடைய படத்தைப் பார்த்தாளாம். அது முதல் அவரையே தனது உயிர்த் துணைவராகக் கருதிவிட்டாளாம். என்னைப் பொருட்படுத்துபவளரகத் தோன்றவில்லை.

எல்லாம் ஈசன் செயல், என் பாடுதான் திண்டாட்டம், நான் தன்னந்தனியாக இங்கே இருக்க வேண்டுமே என்ற கவலை இப்போதே என்னை அரிக்கத் தொடங்கிவிட்டது. எப்பொழுது என் மருமானுக்கு லீவ் கிடைக்குமென்று உடனே எழுது.

உன் அன்புள்ள,
ராமநாதன்.

வருஷத்திற்கொருமுறை நானும் சீனுவும் மணிமுடி மாளிகையைப் போய்ப் பார்க்கத் தவறுவதே இல்லை.

(குறிப்பு: எனக்கு நட்பாளராயுள்ள ஒரு குடும்பத்தினரின் சரித்திரம் இது. குடும்பத் தலைவி தன் கூற்றுக எழுதியதனை அவ்வாறே பதிப்பித்திருக்கிறேன்.)

– சிறுகதை மஞ்சரி, முதற் பதிப்பு: 1944, தினமணி காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *