கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 4,623 
 

அலாரம் அடித்தது தீப்தனா கட்டில் மீது இருந்த போனை எடுத்து அலாரத்தை நிறுத்தி விட்டு,இன்று சனி கிழமை தானே,இன்றும் ஆறு மணிக்கு அலாரம் வைத்திருக்கேன்,நான் ஒரு முட்டாள் என்று தன்னை தானே திட்டிக் கொண்டு,தலையோடு பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு மறுப்படியும் சுருண்டுப் படுத்துக் கொண்டாள் தீப்தனா.சனி,ஞாயிறு என்றாள் பதினொரு மணிக்கு மேல் தான் அவளுக்கு விடியும்,சூரிய வெளிச்சம் ஜன்னல் வழியாக கண்ணுக்குப் பட்டாலும் தீப்தனா தூங்குவாள்,அம்மா கோமதி கதவை தட்டி எழுப்பி விடுவாள் என்ற பயத்தில் அறை சாவியை அடிக்கடி ஒழித்து வைத்து விடுவாள்,கோமதி காலையில் கதவை தட்டினாலும் திறக்க மாட்டாள் தீப்தனா,உலகத்தில் இவள் மட்டும் தான் அதிசியமாக ஐந்து நாட்களும் பாடசாலை போகும் நினைப்பு இவளுக்கு தனி அறை கொடுத்தது தான் குற்றமாகப் போய்விட்டது என்று தனக்குள் திட்டிக் கொண்டு அவள் வேலையை கவனிக்கப் போய் விடுவாள் கோமதி

குலேந்திரன் கோமதியின் ஓரே மகள் தீப்தனா,பத்தாம் வகுப்பு படிக்கின்றாள்,கொஞ்சம் பிடிவாத காரி,எடுத்தெறிந்து பேசும் குணம்,ஒரே மகள் என்று செல்லம் கொடுத்து வளர்த்து விட்டாள் கோமதி,தற்போது கவலைப் படுகின்றாள்,குலேந்திரனின் அம்மா தங்கம்மா வீட்டுக்கு வரும் போது எல்லாம் ஏதாவது புத்திமதி சொல்வார்கள்,யாரு பெரியவர்களின் பேச்சிக்கு மதிப்பு கொடுத்து கேட்டது,அவர்களின் அனுபவம் நமது வாழ்க்கை,அடிபடும் மட்டும் அது யாருக்கும் புரிவதில்லையே,தங்கம்மா என்றாவது ஒரு நாள் மகன் வீட்டில் வந்து தங்கும் போது எல்லாம்,செல்லம் கொடுத்து வளர்க்க கூடாது கோமதி,பிற்காலத்தில் நீ தான் சிரம்மபடுவ என்பார்கள்,கோமதிக்கு அதுவே அப்போது பிடிக்காது,குழந்தை தானே என்பாள் கோமதி

போதாக் குறைக்கு குலேந்திரனிடமும் சண்டைக்குப் போவாள் கோமதி,உங்கம்மாவை பேசாமல் வந்து இருப்பது என்றால் இங்கு வந்து இருக்கச் சொல்லுங்கள்,இல்லையென்றால் அவர்கள் வீட்டில் இருக்கச் சொல்லுங்கள் என்பாள்,அவர்கள் சொன்ன இரண்டு,மூன்று விடயத்தையாவது அப்போது கேட்டிருந்தால் தற்போது தீப்தனா ஓரளவிற்கு சரி உருப்படியாக வளர்ந்து இருப்பாள்,விளையாடியப் பிறகு விளையாட்டுப் பொருட்களையெல்லாம் கூடையில் போட்டு எடுத்து வைக்கனும் தீப்தனா என்று தங்கம்மா சொல்லும் போதே,பரவயில்லை அத்தை அது கிடக்கட்டும் பிறகு நான் எடுத்து வைக்கிறேன் என்பாள் கோமதி,அதே பழக்கம் இது நாள் மட்டும் தீப்தனாவிற்கு,படித்த புத்தகத்தையெல்லாம் மேசை மீது பரப்பி போட்டுவைத்து விட்டு அப்படியே பாடசாலைக்குப் போய் விடுவாள்,ஒவ்வொரு நாளும் மேசையை துடைத்து,புத்தகத்தை அடுக்கி வைத்துக் கொண்டு இருக்கிறாள் கோமதி்

சின்ன சின்ன வேலைகள் செய்ய விடனும் கோமதி,விளையாட்டாக அவர்கள் பழகிவிடுவார்கள்,பிற்காலத்தில் அது இலகுவாகவே இருக்கும்,இல்லை என்றால் எரிச்சல்,கோபம்,சண்டை என்று வாழப் போகும் இடத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் கோமதி என்பார்கள் தங்கம்மா,அதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் இருக்கின்றது அத்தை,அதற்கு ஏன் இப்போதே அவளை வேலை செய்ய சொல்லனும் என்பாள் கோமதி,காலையில் அதிக நேரம் தூங்கவிடாதே,தட்டில் சாதம் போட்டு கையில் கொடுத்து தனியாக சாப்பிட பழக்கு,அவள் கேட்க்கும் பொருட்களையெல்லாம் வாங்கிகொடுத்து பழக்காதே,நம்முடைய கஷ்ட நஷ்டங்கள் பிள்ளைகளும் தெரிந்து இருக்கனும்,இது மாதிரி நிறையவே சொன்னார்கள் தங்கம்மா,காது கொடுத்து கேட்க்கவில்லையே எதையும்

குலேந்திரனிடம் உங்கள் அம்மாவிற்கு தீப்தனாவை பிடிக்க மாட்டேங்குது,ஏதாவது குறை கூறிக்கொண்டே இருக்கின்றார்கள்,அவள் குழந்தை தானே என்பாள் கோமதி,அதே குழந்தை இன்று எதிர்த்துப் பேசும் போதும்,காலையில் அதிக நேரம் தூங்கும் போதும்,எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் போதும் தாங்க முடியவில்லையே,அன்றே கண்டித்து வளர்த்து இருந்தால் இன்று கொஞ்சம் சரி பயம் இருக்கும்,சமையல் அறை பக்கமே வருவது இல்லை தீப்தனா,கோமதி வந்து கூப்பிடுவாள் ஏதாவது வேலை செய்வதற்கு,அவள் அறையை விட்டு வெளியில் வரமாட்டாள்,அப்போது கோமதிக்கு சுள் என்று கோபம் வரும் மகள் என்று பொறுமையாக போய்விடுவாள்,நாளை கட்டி போகும் இடத்தில் இதை எதிர் பார்க்க முடியாதே,பிள்ளை வளர்த்து வைத்திருப்பதை பார் என்று கோமதியை தான் குறை கூறுவார்கள் அந்த பயத்திற்கு கோமதி தற்போது எல்லாம் தீப்தனாவை திருத்துவதாக நினைத்துக் கொண்டு மகளின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு இருந்தாள்,ஐந்து வயதில் விட்டு விட்டாள் தற்போது கத்துவதால் எந்த பயனும் இல்லை

இவள் புகுந்த வீட்டிற்குப் போய் எப்படி சமாளிப்பாள் என்ற சந்தேகம் அடிக்கடி கோமதிக்கு வரும்,எதுவும் தெரியாமல்,எந்த வேலையும் செய்யாமல் தீப்தனா தடுமாறி நின்றாலும்,அப்போதும் நான் தான் கவலை படவேண்டும் மகளை இப்படி வளர்த்து விட்டோமே என்று அது இவளுக்கு புரியமாட்டேங்குது,மற்றவர்கள் குறை சொல்லும் அளவிற்கு வளர்த்து விட்டு,புகுந்த வீட்டில் குறை சொல்கின்றார்கள் என்று அவர்களிடம் சண்டைக்கு போக முடியுமா யார் என்றாலும் கொஞ்ச நாட்களுக்கு பொறுமையாக இருப்பார்கள்,பிறகு அவர்கள் சுயரூபத்தை காட்டுவார்கள் அது கணவன் என்றாலும்,இதனால் வீண் பிரச்சினைகள் குடும்பத்தில் ஏற்படும்,காலப் போக்கில் தீப்தனாவிற்கே அவள் மீது வெறுப்பு வரும்,அவளின் இயலாமையை கணவன் மீது காட்டினால் அதுவும் பிரச்சினையில் போய் முடியும்,தற்போது இதையெல்லாம் யோசிக்கும் கோமதி அன்றே தங்கம்மா பேச்சை கேட்டிருந்தால்,இன்று இவ்வளவு வேதனைப் பட தேவையிருக்காது

இன்னும் கோமதி தீப்தனாவிற்கு ஊட்டிவிட்டுக் கொண்டிருக்காள்,எனக்கு சாப்பாடு வேண்டாம்,நீ ஊட்டி விட்டால் சாப்பிடுவேன்,இல்லை என்றால் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று காலையில் அடம் பிடிக்கும் தீப்தனாவிடம் சண்டை பிடிப்பதில் அர்த்தம் இல்லை என்று நினைக்கும் கோமதி ஊட்டிவிடுவாள் இல்லை என்றால் சாப்பிடாமல் பாடசாலைக்கு போய்விடுவாள் என்ற பயம் தான் காரணம்,ஒரு காப்பி கூட போடதெரியாமல் இருக்காதே வந்து காப்பி சரி போட்டு பழகு,இல்லை என்றால் புகுந்த வீட்டிற்குப் போய் கஷ்டப்படுவ தீப்தனா என்பாள் கோமதி,நான் என்ன உன்னை மாதிரி முட்டாளா?கல்யாணத்தை கட்டி கஷ்டப்படுவதற்கு என்பாள் தீப்தனா.

பார்க்கத் தானே போகிறோம் இப்படி சொன்வர்கள் பலபேர் என்பாள் கோமதி,வேலைக்கு ஆள் வைத்துக்கொள்வேன் என்பாள் தீப்தனா,உனக்கு முதல் வேலை தெரிந்து இருக்கனுமே அவர்களிடம் வேலை வாங்குவதற்கும்,உனக்கே ஒன்னும் தெரியாதப் போது,அவர்கள் எது செய்து போட்டாலும் சாப்பிட்டு போகவேண்டியது தான் என்பாள் கோமதி கிண்டலாக,ஏன் நான் அவர்களை நம்பி இருக்க ஆடர் செய்தால் உடனே வீட்டுக்கு சாப்பாடு வரும் சாப்பிடுவேன் என்பாள் தீப்தனா,இதுவெல்லாம் இப்ப சொல்வதற்கு நன்றாக இருக்கும் வாழ்க்கைக்கு சாத்தியப் படாது என்பாள் கோமதி இது உன் காலம் இல்லை எங்கள் காலம் என்பாள் தீப்தனா நான் சொல்வதற்கு எல்லாம் வாய் போட்டுக் கொண்டே இரு கஷ்டப் படும் போது இந்த அம்மாவை நினைவு வரும் என்பாள் கோமதி,அதற்கு ஏன் சத்தமாக கதைத்து ஊரை கூட்டுற என்பாள் தீப்தனா

நீ எனக்கு வேலை செய்து தர வேண்டும் என்பதாக உன்னிடம் அம்மா கத்தவில்லை,எதுவும் தெரியாமல் நாளை கஷ்டப் படக்கூடாது எனபதற்காக சொல்வது உனக்கு கத்துவதுப் போல் தெரிந்தால்,நாளை நீ வாழப் போகும் இடத்தில் உன்னை வைத்து கொஞ்சிவார்கள் என்ற நினைப்பு உனக்கு

என்னையும் சேர்த்து வந்து திட்டிவிட்டுப் போவார்கள் எனபாள் கோமதி,அது தான் உனக்கு தற்போது பிரச்சினை

நான் உன்னை பெத்துக்க சொல்லவில்லையே,நீ அப்படி வளர்த்து இருக்க,நான் இப்படி வளர்ந்து இருக்கேன்,என்னை மட்டும் குறை சொல்லாதே,உனக்கு சரியாக வளர்க்க தெரியவில்லை என்பாள் தீப்தனா,ஏன் சொல்லமாட்ட அடிக்க கூடாது என்று செல்லம் கொடுத்து வளர்த்ததிற்கு இதுவும் சொல்லுவ இதற்கு மேலும் சொல்லுவ என்று கோமதி ஆத்திரப் படுவாள்

என்னிடம் வாய் போடுவதை நிறுத்தி விட்டு உன் வேலைகளை செய்து பழகு முதலில்,சாப்பிடவே இன்னும் என்னை எதிர் பார்க்கின்ற,உன்னை சொல்லி குற்றம் இல்லை நீ சொன்ன மாதிரி நான் வளர்த்த வளர்ப்பு என்னை அடிக்கனும்,அப்போதே உன் பாட்டி சொன்னார்கள் நான் தான் கேட்க்காமல் முட்டாளாக இருந்து இருக்கேன் என்பாள் கோமதி இதையே எத்தனை தடவை சொல்லி காட்டுவ எனக்கு கேட்டு காதே புண்ணாகிவிட்டது என்பாள் தீப்தனா,நீ எனக்கு வேலை செய்து கொடுக்கனும் என்பதற்காக சொல்லவில்லை,எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது அதனால் சொன்னேன்,எப்போதும் அது என் வேலை இல்லை,இது என் வேலை இல்லை என்று சொல்லும் பழக்கத்தை முதலில் நிறுத்து,குடும்பம் என்றால் எல்லாம் நம் வேலைகள் தான் அதை முதலில் புரிந்துக் கொள் படித்து பட்டமே வாங்கியிருந்தாலும் உன் வேலைகளை நீ செய்து பழகு என்பாள் கோமதி

நான் சமைத்து என் நேரத்தை செலவு செய்ய விரும்பவில்லை,அந்த நேரத்திற்கு நான் நிறையவே படித்து முடித்தே விடுவேன் என்பாள் தீப்தனா,ஆமாம் நீ படிக்கும் அழகு தான் எனக்கு தெரியுமே,வேலை செய்ய பயந்துக் கொண்டு பாதி நேரம் புத்தகத்தை தூக்கி வைத்துகொள்வது என்பாள் கோமதி,அப்படி என்றால் நான் படிக்காமல் தான் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்கின்றேனா உன் கதை அப்படி தானே இருக்கின்றது,நான் எவ்வளவு கஷ்டப் பட்டு படிக்கிறேன் வாய்க்கு வந்த மாதிரியெல்லாம் பேசாதே என்பாள் தீப்தனா,படிக்கும் திமிர் தான் உனக்கு என்று மனதில் நினைக்கும் கோமதி அதை மறைத்து என்னதான் படித்திருந்தாலும்,வீட்டுவேலைகள் கட்டாயமாக தெரிந்து வைத்திருக்கனும் தீப்தனா என்பாள் கோமதி

நீ இன்னும் அந்த காலத்து அம்மாவாகவே இரு,உன்னை திருத்தமுடியாது என்பாள் தீப்தனா,உனக்கு இப்ப நான் சொல்லுவது எல்லாம் கசப்பாக தான் இருக்கும்,ஒரு காலத்தில் நீ கஷ்டப் படும் போது அப்ப தெரியும்,இந்த அம்மாவின் அருமை,உனக்கும் ஒரு மகள் பிறந்து,நான் உன்னை செல்லம் கொடுத்து வளர்த்து வைத்திருக்கும் மாதிரி நீயும் வளர்த்தாள்,அப்ப உனக்கு புரியும் என்பாள் கோமதி,அதை அப்போது பார்ப்போம்,இப்போதே சாபம் கொடுக்காதே என்பாள் தீப்தனா.

நாட்கள் வேகமாக ஓடியது,தீப்தனா நன்றாகவே படித்தாள்,கோமதியும் விடுவதாக இல்லை,ஏதாவது புத்திமதி கூறுகிறேன் என்று,தீப்தனாவுடன் சண்டை பிடிக்காத நாட்களும் இல்லை,குலேந்திரன் நீ சின்னதிலிருந்து ஒழுங்காக வளர்க்காமல்,இப்படி சண்டைப் போடுவதால் எந்த பயனும் இல்லை கோமதி,அம்மா நிறையவே சொன்னார்கள்,நீ அதை அப்போது கணக்கெடுக்கவில்லை,கோபம் வந்தது தற்போது அவர்களும் இல்லாமல் போய்விட்டார்கள்,நீ எந்த நாளும் இப்படி சண்டைப் போட்டாள் தீப்தனாவிற்கு உன் மீது வெறுப்பு தான் வரும்.

நான் ஏதும் சொன்னாலும்,நீங்கள் அம்மா பக்கம் தான்,என்று என்னையும் குறை சொன்னாய்,தற்போது உன் பிழையை சரிசெய்வதற்காக,அவளைப் போய் திட்டாதே,ஒரே நாளில் எதையும் மாற்றமுடியாது,அவசரப் படுவதாலும்,ஆத்திரம் படுவதாலும்,உன் உடம்பும்,மனதும் தான் கெட்டுப் போகும்.தீப்தனாவிடம் அன்பாக எடுத்து சொன்னால் புரிந்துக்கொள்வாள்,அதற்கு பொறுமை வேண்டும்,உடனே அவளை மாற்ற முடியாது,அவள் நம்முடைய மகள் நிச்சியம் மாறிவிடுவாள் அதை முதலில் நம்பு கோமதி என்றான் குலேந்திரன்,என்னைப் போல் ஒரே மகள் என்று செல்லம் கொடுத்து வளர்த்த எத்தனை அம்மாக்கள் கஷ்டப் படுகிறார்களோ தெரியவில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டாள் கோமதி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *