போலீஸ்காரர் மகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 9,719 
 
 

‘தாணாக்காரர் பொண்ணாச்சே,படையப்பாவெல்லாம் ஓசியிலேயேபார்த்திருப்பியே! ‘ என்று குத்திக்காட்டிப் பேசினாள் கூடப்படிக்கும் வனிதா.

‘எங்கப்பாவே இன்னும் பார்க்கலையாம், கடைசீ நாளண்ணைக்காவது காசு கொடுத்துப் பார்த்திடுவோம். உங்களைப்போல ப்ளாக்குலே டிக்கட் எடுத்துப்பாக்கற வசதி எங்களுக்கு வேண்டாண்டியம்மா! ‘,பதிலடி கொடுத்தாள அமிர்தா,போலீஸ் கான்ஸ்டபிள் மாணிக்கத்தின் மகள்.

அதென்னவோ எல்லோருமே அப்படியேதான் பேசுகிறார்கள், போலீஸால் வேலை செய்தாலே எல்லாமே இலவசமாகக் கிடைத்துவிடுகிறதென்று. அமிர்தாவுக்குத் தொியும்,ஒவ்வொரு மாதமும் அவர்கள் வீட்டில் படும் பாடுபற்றி. மாதக்கடைசிகளில் அனேக வசதிகளை அனுபவிக்கமுடியாமல் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். முக்கிய செலவுகளுக்காக அம்மா ரங்கநாயகி அக்கம்பக்கத்தில் கடன் உடன் வாங்கி சமாளிப்பாள். பொிய செலவாக நோிட்டால் நகைகள்மீது கடன் வாங்கிச் செலவழிக்க வேண்டிவரும். பிறகு சேரும் வட்டிச்செலவை சமாளிப்பதே பெரும் பாடாகிவிடும்.

பலரும் பார்த்துப் பொறாமைப்படும்படியாகவா வாழ்கிறோம் ? ஏதோ வாய்க்கும் வயிறுக்குமாக கண்ணியமாக வாழ்ந்துகொண்டிருக்கும்போது மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு வயிற்றொிச்சல் ? போலீஸ் வேலை என்றாலே மானம் கெட்ட பிழைப்பென்று ஆகிவிடுமா என்ன ?- இப்படியெல்லாம் தன் கூடப்படிக்கும் நண்பர்களைப்பார்த்துக் கேட்டுவிடவேண்டும் என்று சில சமயங்களில் ஆத்திரமாகவரும் அமிர்தாவுக்கு. ஆனால் மலையைப் பார்த்து நாய் குலைக்கட்டுமே என்று சும்மா இருந்துவிடுவாள். அப்பா மாணிக்கம் அவளை அப்படித்தான் இருக்கச்சொல்லியிருக்கிறார்.

அவர் தினமும் டியூட்டி முடிந்து வந்ததும் அமிர்தாவை அழைத்து அவளுடைய அன்றைய பள்ளி நடவடிக்கைகள், படிப்பு மற்றும்விளையாட்டு போன்றவைகளைப் பற்றி விசாாிப்பார். யாராவது அவர்களைப்பற்றி இழிவாகப்பேசியிருந்தால் அதை உடனே மறந்து மன்னித்துவிடும்படி கூறுவார். அப்படியே அன்றையதினம் அவர் சம்பந்தப்பட்ட சில சம்பவங்களைப்பற்றியும் தான் செய்த சிறு உதவிகள் பற்றியும் அவளிடம் கூறித் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வார். மனிதர்கள் அனைவருமே எப்படி அடிப்படையில் நல்லவர்களாகவும் ஒழுக்கத்தில் விருப்பமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் தம் வசதிக்கு மீறிய வாழ்க்கையில் ஆசை வைப்பதால் தான் குற்றச்சூழல்களில் சிக்கிச்சீரழிகிறார்கள் என்பதையும் தான் கண்ட நிகழ்ச்சிகளின் வாயிலாக அவளுக்கு எடுத்துக் கூறுவார். நல்ல வாழ்க்கைபற்றிய தெளிவுகளை அமிர்தாவின் உள்ளத்தில் ஊன்றிவிட இவை உதவியாக இருந்தன.

மாணிக்கத்துக்கு பொிய லட்சியங்கள் என்று எதுவும் வாழ்க்கையில் இருக்கவில்லை.கடமையை ஒழுங்காகச்செய்து நல்ல பெயரெடுக்கவேண்டும், நாலுபேருக்கு உபகாரமாகயிருக்கவேண்டும்,அக்கிரமக்காரர்களைத் தட்டிக்கேட்பதோடு மட்டுமின்றி அவர்களைத்திருத்தவும் வேண்டும், நியாயமாய் சம்பாதிக்கவேண்டும்,அதற்குள் செலவு செய்யவேண்டும், மகளைப் படிக்கவைத்து பொிய அதிகாாி ஆக்கவேண்டும்-இப்படி சாதாரணமான லட்சியங்கள்தான் இருந்தன. சாதாரணமாகத்தோன்றினாலும் இந்தக்காலத்தில்போய் இப்படி யாராவது விரும்புவார்களா ? அதுவும் போலீஸ் உத்தியோகத்தில் இருப்பவர்கள் ? சாதார- ணமாகவே பத்துப்பதினைந்து வருடசர்வீசில் குறைந்தது இரண்டு ப்ளாட்கள், சில லட்சமுதலீடுகள், கடைகள், ஒரு சின்ன வீடாவது என்றல்லவா எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள் ? பின்னால் அவைகளால் தொந்தரவு ஏற்படும் என்று தொிந்தும் கூட அதைத்தேடித்தானே ஓடுகிறார்கள் ?

கான்ஸ்டபிள் மாணிக்கத்துக்கு ஏன் இந்த ஆசைகள் இல்லை என்று வியப்பார் கோயில் வாசலில் பூசை சாமான்கள் விற்கும் பஞ்சாட்சரம் என்ற அவரது பால்ய நண்பர். ‘டேய் மாணிக்கம்,உன் மனசிலே என்ன அாிச்சந்திரன் என்ற நினைப்பா ? உன் கண் முன்னாடியே உன் பொண்ணு வளர்ந்துகிட்டு வறா,அவளைக்கட்டிக் கொடுக்க என்ன ஏற்பாடு செஞ்சுவச்சிருக்கே ? ஊரு உலகத்தைப் பார்த்தாவது பிழைக்கக்கத்துக்கோடா. நான் ஒண்ணும் விசுவாமித்திராிஷா மாதிாி உன்னை மாத்திக்காட்டறேன்னு சபதம் போட்டுப் பேசலேடா, ஆனா போலீசுலே இருந்துகிட்டு பொழைக்கத்தொியாம இருக்கயேடா! அவனவன் போலீஸ் வேலைக்காக ஆயிரக் கணக்கிலே செலவழிக்கத் தயாரா இருக்கான். நீ என்னடான்னா நாமக்கட்டி வாங்கினாக்கூட சில்லறையைக் கடாசிட்டுப்போறே. நீதான் இப்படின்னா உன் பொண்டாட்டி,பொண்ணையும்கூட உன்னை மாதிாிக்ஷே

பழக்கியிருக்கே.ம்…,போ,எத்தனை தரம் சொன்னாலும் நீ திருந்தப்போறதில்லே. கடவுள்தான் காப்பத்தணும் உன்னை! ‘ என்று பஞ்சாட்சரம் புலம்பும்போது மாணிக்கம் ஒரு புன்னகையை உதிர்ப்பார். ‘பஞ்சாட்சரம்,நீ சொல்றமாதிாி எல்லோருமே திருந்திப்போகணுமானா முதல்லே நீ திருந்தணும். இன்னமும் கோயில் வாசல் பெட்டிக்கடையோடவே நிக்கறயே, இதுக்கு மேலே உனக்கு ஆசையே வளரலயா ? இதோ பாருடா, நமக்கெல்லாம் ராத்திாி வீட்டுக்குப்போனா நல்லா தூக்கம் வருதுபாரு அதாண்டா பொிசு! அதுக்குமேலே என்ன சுகம்டா வேண்டியிருக்கு ? இது போதும், பேசாமகிட! ‘ என்று தத்துவம் பேசி நண்பரை மடக்கிவிடுவார் மாணிக்கம்.

உண்மையிலேயே மாணிக்கம் இப்போதுபோலவே எப்போதும் போதுமென்ற மனதுடனேயே இருக்கவேண்டுமென்றுதான் பஞ்சாட்சரம் விரும்பினார்.பஞ்சாட்சரமும் இப்போதுபோலவே நிம்மதியுடன் எப்போதும் இருக்கவேண்டும் என்றுதான் மாணிக்கமும் நினத்தார். இருவரும் விளையாட்டாகத்தான் ஒருவர் காலை ஒருவர் வார விரும்பினார்களேதவிர ஒழுக்கமும் எளிமையும் கலந்த வாழ்க்கையே அவர்களது மூச்சாக விளங்கியது.

ஒரு நாள் மாணிக்கம் வீட்டில் இல்லாதபோது பழவண்டி சுலைமான்பாய் அவர் வீட்டுக்கு வந்திருந்தார். தளர்ந்த வயது. குடும்பத்தைக் காப்பாற்றிவந்த மகன் திடாரென்று காலமாகிவிட்டதில் மருமகள் உள்ளிட்ட மொத்தக்குடும்பத்தையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு அவர் தலையில் விழுந்துவிட்டது.கூலிக்கு வண்டி அமர்த்திக்கொண்டு பழவியாபாரம் செய்துவந்தார். மாணிக்கம் குடும்பத்தினரை அவருக்கு நன்கு பாிச்சயம். வந்தவர் அமிர்தாவைக் கூப்பிட்டு ஒரு பொிய சீப்பு ரஸ்தாளியை அவள் கைகளில் திணித்தார்.

‘என்ன தாத்தா விசேஷம் ? திடார்னு இவ்வளவு பழங்களைத் தர்ாீங்க ? அப்பா ஏதாவது கொடுக்கச்சொன்னாரா ? ‘ என்று கேட்டாள் அமிர்தா.

‘அது ஒண்ணுமில்லேம்மா, இன்னைக்கி சாயந்திரம் மெயின் ரோடு பக்கமா ஊர்வலம் போச்சில்லே, அப்ப வண்டி நிறைய பழம் வச்சிருந்தேன்.

வழியிலே என்னப்பார்த்த உங்க அப்பாருதான் அவசர அவசரமா வண்டிய தள்ளிக்கிட்டு வந்து ஸ்டேசன் காம்பவுண்டுக்குள்ளே நிப்பாட்டி வச்சாரு. ஊர்வலம் கலையற மட்டும் உள்ளாறவே இருக்கச் சொல்லிட்டு டியூட்டி மேலே போய்ட்டாரு. அவரு அப்பிடி செய்யல்லேன்னா என் சரக்கு பூராத்தையும் ஊர்வலக்கும்பல் நாசம் பண்ணியிருப்பாங்க. வாடக வண்டியையும் செதறு தேங்காயாக்கி இருப்பாங்க.அல்லா புண்ணியத்துலே உங்க அப்பாருதான் என்னைப் பொழக்கவச்சாரு. அதான், என்னால முடிஞ்சதா ஒரு சீப்பு பழத்தை கொண்டாந்திருக்கேன், வச்சுக்கோ தங்கம்! ‘ என்று சொல்லிவிட்டு கிளம்பத் தயாரானார் சுலைமான்பாய்.

‘என்ன தாத்தா, இதுக்குப்போய் இவ்வளவு தூரம் வந்திருக்கீங்களே, அப்பா செய்யவேண்டியதைத்தானே செஞ்சிருக்காரு ? அதுக்காக அவ்ருக்கு உங்க ஒரு நாள் லாபத்தையே இனாமாகத்தரணுமா ? இப்படிக் கடமையைச் செய்யறதுக்கே ஒவ்வொருத்தரும் எதையாவது எதிர் பார்த்தாங்கன்னா வாங்கற சம்பளம் எதுக்கு தாத்தா ?நாந்தப்பா சொல்றதா நினைக்காதீங்க! இந்தப் பழத்தை இப்ப நான் வாங்கிவச்சேன்னா அப்பாவுக்கு நான் இன்னொரு வேலை வெக்கிற மாதிாிதான். ராத்திாி வந்தவுடனேயே சாப்பிடாமகூட பழத்தை த்திருப்பிக்கொடுக்க உங்க வீட்டுக்கு வந்து விடுவாரு. நமக்குள்ளே இதெல்லாம் வேண்டுமா தாத்தா ? ‘ என்று கேட்டு விட்டு பழத்தை அவாிடமே திருப்பித் தந்துவிட்டாள் அமிர்தா.

சுலைமான்பாய்க்கு ஏமாற்றமாக இருந்தாலும் அமிர்தாவை நினத்துப் பெருமையாக இருந்தது. ‘அல்லா உன்னை நல்லா வைப்பாம்மா, அதுக்கான துஆ ஓதறதுக்காவது என்னை அனுமதிம்மா! ‘ என்று வாழ்த்திவிட்டு விடை பெற்றார் சுலைமான்பாய்.

அன்றிரவு மாணிக்கம் வீடு திரும்ப நெடுநேரமாகிவிட்டது.மறுநாள் காலை சுலைமான்பாய் வந்திருந்ததைப்பற்றி அமிர்தா சொல்லக்கேட்ட மாணிக்கம் முன் தின கலவரங்களின்போது நிகழ்ந்த கல்லெறிகளிலிருந்து தான் தப்பியதற்கு சுலைமான்பாயின் வாழ்த்தே காரணம் என்று மகளிடம் கூறி மகிழ்ச்சியுற்றார்.

மாணிக்கத்தின் வேலையில் இம்மாதிாி நிகழ்ச்சிகள் அனேகம். பொருட்காட்சி, திருவிழா போன்ற கூட்டங்களில் காணமற்போகும் சிறார்களைத் தேடிப்பிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைப்பது,வீட்டைவிட்டு ஓடிவந்து தவறானவர்களின் பிடிகளில் சிக்கும் முன்னர் அத்தகையவர்களை மீட்டுத் திருப்பி அனுப்புவது போன்றவை அடிக்கடி நிகழ்கின்ற செயல்கள். அதற்காக அவர் பெற்ற பாராட்டுகளும் ஏராளம். இருந்தும் இவற்றையெல்லாம் தன் கடமையாகவே பாவித்து வந்தார் மாணிக்கம்.

காவலர்களிடம் பொதுமக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். பொதுமக்களை மக்களாக நடத்தும் மனப்பக்குவம் காவலர்களுக்கு வேண்டும். பொதுமக்களில் சிலர் உணர்ச்சி வயப்பட்டு காராசாரமாகப் பேசினாலும் காவலர்கள் உணர்ச்சி வயப்படக்கூடாது.அனைத்து மக்களையும் சாிநிகர்சமமாக நடத்தவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பதைப் பூர்த்திசெய்துவைக்கவேண்டும். காக்கிச் சட்டை அணிந்திருந்தாலும் கல்லுக்குள் ஈரம் போல் காவலர்கள் கடமையாற்றவேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதன் பொருள் உணர்ந்து காவலர்கள் செயல்படவேண்டும்.ா -இவற்றையே தன் குறிக்கோள்களாக வைத்துப் பணி ஆற்றிவந்தார் மாணிக்கம்.

போலீசாாின் கஷ்டங்களைக் களைவதில் முதல்வர் முனைப்பாக இருப்பதுகூட போலீசாாின் கடமையாற்றும் திறன் அவரைக் கவர்ந்ததால்தான் என்று அவர் கூறுவார்.மேலும் தக்க சமயங்களில் முதல்வர் அறிவிக்கும் போலீசாருக்கான நலதிட்டங்களைக்கண்டு அவர் வியந்து முதல்வரைப் பாராட்டுவார்.

ஆனால் விலைவாசிச் சைத்தான் சும்மாஇருக்குமா ? மாணிக்கத்தின் குடும்ப்பத்தை மெதுவாக வாட்டத் துவங்கியது அது.பஞ்சாட்சரத்தின் கிண்டல் பேச்சுக்கள் மாணிக்கத்துக்கு அடிக்கடி நினைவுக்கு வர ஆரம்பித்தன.நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேபோகும் செலவுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது அல்லது அதை சமாளிக்க வருவாயை எப்படி அதிகாித்துக் கொள்வது என்று குடும்பத்தினாிடம் ஆலோசிக்கத் தொடங்கினார். கூடவே அரசாங்க உத்தியோகஸ்தர்கள் வேறு வேலைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு சம்பாதிக்கக் கூடாது என்பதால் வேறு வழிகளைச் சிந்திக்குமாறும் அவர் கட்டளையிட்டார். கடைசியாக அவருடைய மனைவி ரங்கநாயகி கூறியபடி நகைகளை அடகு வைத்து கறவைப்பசு ஒன்று வாங்கி பால் வியாபாரம் செய்யலாம் என்ற யோசனையை அனைவரும் ஏற்க அவ்வாறே செயல் படுத்தியதில் சில நாட்களில் குடும்ப பாரம் சிறிது சிறிதாகக் குறையலாயிற்று.

மாணிக்கம் ரங்கநாயகியின் வேலைப்பளு அதிகமாகிவிட்டதே என்று கவலைப்பட்டாலும் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள நேர்மையான வழி ஒன்று அமைந்ததே என்று மகிழ்ச்சியுற்றார். அந்த உற்சாகத்தில் அவரது வேலையில் தீவிரமும்,பொறுப்பும்,கண்ணியமும் மேலும் கூடின.அவரது சேவைகளைப் பாராட்டி அரசாங்கம் அவருக்கு செளர்யவீர் விருது வழங்கச் சிபாாிசு செய்தது.

அமிர்தா தன் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்திருந்தாள். குடியரசுத் தலைவர் மாணிக்கத்துக்கு பதக்கம் அணிவித்துப் பாராட்டும் நிகழ்ச்சி ாசெய்திகாளில் ஒளிபரப்பாகிகொண்டிருந்தது. கலர் டி.வி.யாக இருந்தால் இந்தக் காட்சி இன்னும் எடுப்பாக இருக்கும் என்று அவள் நினைத்தாள் அதற்கும் மேலாக இந்நிகழ்ச்சியைக் காண்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் அவள் எண்ணிப் பார்த்தாள். நம் காவலர்களைப்பற்றிப் பலரும் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்; அவர்களுடைய சேவைக்கு நன்றி கூறுவார்கள்;அவர்களை நெஞ்சம் நெகிழ வாழ்த்துவார்கள் என்பதெல்லாம் அவளுக்குத் தொியும். என்றாலும் அக்கம் பக்கத்துத் தெருவைச் சார்ந்த வீடுகளில் தொலைக்காட்சியில் மாணிக்கத்தைச் சுட்டிக்காட்டி ாஇவரோட பொண்ணு எங்களோடதான் படிக்கிறாா என்று சுற்றியிருக்கும் எல்லோாிடமும் பல மாணவ மாணவிகள் கூறுகின்ற காட்சி அவளுடைய நெஞ்சில் எதிரொலித்து அவளைக் கூடுதலாய் மகிழ்வித்தது.

அப்பா டில்லியிலிருந்து திரும்பிவரும்போது அவருக்கு ஏதாவது பாிசு தரவேண்டுமென்று அவள் விரும்பினாள். அடுத்த வீட்டிலிருந்து கொஞ்சம் சர்க்கரை கடன் வாங்கி அம்மா அன்று காலையில் முன் தினம் விற்காத பாலில் கிண்டி வைத்திருந்த பால்கோவாவின் ஞாபகம் வர அதைத் தனியாக ஒரு டப்பாவில் எடுத்துவைத்துப் பத்திரப்படுத்தினாள்.

ஒரு போலீஸ்காராின் மகளாகப் பிறந்ததை நினைக்கையில் பெருமையாக இருந்தது அமிர்தாவுக்கு.

ரங்கநாயகி பால் வினியோகத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பியபோது தொலைக்காட்சியில் செய்திகள் முடிந்துவிட்டிருந்தன.

– ஜனவரி 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *