கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2017
பார்வையிட்டோர்: 7,194 
 

“Excuse me, berth number 4 is ours” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். முப்பதுகளில் இருந்த ஒரு கணவன் மனைவி ஜோடி.மனைவி கையில் ‘குமுதம்’ பார்த்து “சாரி, யாரும் வரலையேன்னு தான் உட்கார்ந்திருந்தேன். என் நம்பர் 5” என்று சொல்லி நகர்ந்து உட்கார்ந்தேன்.

“தமிழா? ரொம்ப நல்லதா போச்சுடி பூரணி. உனக்கு சென்னை வரைல துணை ஆச்சு. தம்பி படிக்கரீங்களா?” என்று கேட்டவரிடம் “ இல்லை சார் , படிப்பு முடிஞ்சாச்சு. நான் இங்கே ஒரு interview-கு வந்தேன். சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறேன்” என்றேன்.

“ குட். உனக்கு வாட்டர் பாட்டில், மேகசீன்ஸ் வாங்கிட்டு வரேன்” என்று அந்த மனிதர் நகர, நான் ‘பூரணி’யை பார்த்தேன். 30 வயசு இருக்கும். ரொம்ப அழகாக வயதாகி இருந்தாள். அவளைப் பார்த்தால் சுருதி ஹாசன் 30 வயசில் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்து பார்க்க வேண்டிய அவசியமிருக்காது. இப்படி யோசனையில் மூழ்கியிருந்த என்னிடம் “ ஹாய், கிளாட் டு மீட் யு” என்று கையைக் கொடுத்தாள். பின்னர் என் படிப்பைப் பற்றி, என் எதிர்காலம் பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாள். அதற்குள் அவர் கை நிறைய biscuits, magazines, water bottles என்று எடுத்துக் கொண்டு வந்தார். வண்டி கிளம்ப ஒரு அரை மணி நேரம் இருந்தது. எங்கள் bayல் எங்கள் மூவரைத்தவிர வேறு யாரும் இல்லை, மற்ற சீட்கள் ஆக்ரா quota.

மூச்சுக்கு முன்னூறு தடவை ‘பூரணி.. பூரணி..’ என்று மனிதர் பூரணமாக சரணடைந்திருந்தார். ஏதோ நேற்றுதான் கல்யாணம் ஆன ஜோடி போல காரணமற்ற தொடல்களும் சிணுங்கல்களும் சிரிப்பும் … அப்பப்பா …. எனக்கு உடம்பு ஜுரம் வந்த மாதிரி ஜிவ்வுனு ஆகிடுத்து. ஆனால் அவர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப் பட்ட மாதிரி தெரியவில்லை.

Train கிளம்ப ஐந்து நிமிடங்களே பாக்கி இருந்த நிலையில் உச்சக்கட்டம் போல நம்ம ஹீரோ பூரணிக்கு ஒரு முத்தம் குடுத்தார். “ சீய்….. என்று கவர்ச்சியாக சிணுங்கினாள் பூரணி. அப்பறம் அவர் என்னிடம் கை குலுக்கி விட்டு “கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்று காற்றுவாக்கில் ஒரு வார்த்தையை வீசிவிட்டு வண்டியிலிருந்து இறங்கி சென்றார்.

ஒன்றரை நாள் பயணத்தில் நான் அவளுக்கு நல்ல துணையாக இருந்தேன். அவளோடு பேசுவது, திரைப்படங்கள் பற்றி விமர்சிப்பது, playing cards விளையாடுவது என்று நேரம் போனதே தெரியவில்லை.

சென்னையும் வந்தது. பிரியும் வேளையும் வந்தது. கீழே இறங்கி நின்றவளிடம் “ என்ன மேடம் வீடு வரை கொண்டு வந்து விடவா? எனக்கு அவசர வேலை ஒண்ணும் இல்லை” என்றேன் நான்.

“ Thanks for the offerda. But it is not necessary. என் husband வந்து இருக்கார் என்னை கூட்டிகிட்டு போக. So no problem. Meet my husband. என்னங்க இவன் தான் எனக்கு போர் அடிக்காம துணையா இருந்தான்” என்று ஒரு 50 வயது மதிக்கத்தக்க தலை நரைத்த ஒருத்தரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

எனக்கு காலடியில் இருந்த பூமி நழுவியது. தலை சுற்றியது.

உங்களுக்கு?

– பெப்ரவரி 2013

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)