பாஸிட்டிவ் – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,427 
 

ஏம்பா சரவணா, குழந்தைக்கு ஜாதகம் பாக்கப் போனியே என்னாச்சு? வீட்டிற்குள் நுழைந்த சரவணனை மறித்து அவனுடைய அம்மா பார்வதி கேட்டாள்

ஹோதிடர் சொன்னதை அவனுக்குள்ளாகவே நினைத்துக் கொண்டான்.

இதோ பாரு தம்பி உனக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் கழிச்சி குழந்தை பிறந்திருக்கு. இது எல்லாருக்கும் சந்தோஷம்தான். ஆனா குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. வெளிப்படையா சொல்லணும்னா, நீ இப்ப பாக்கற வேலை உனக்கு பறிபோயிடும். நீ குடியிருக்கிற வீடும் உன் கைவிட்டுப் போற சூழ்நிலை உருவாகும்”

வெளிறிய முகத்தோடு வெளியேறியவன், வீட்டில் அவன் அம்மா பார்வதியின் கேள்விக்கு பதில் சொல்வதறியாது திகைத்து நின்றான்.

”என்னப்பா ஜோதிடர் என்ன சொன்னார்னு கேட்டேன், கம்முனு இருக்கறே?”

சற்றே சுதாரித்தவனாவான். ‘அது ரொம்ப நல்ல விஷயம்தாம்மா. நான் இப்ப பாக்கற வேலையை விட வேற ஒரு நல்ல வேலை கிடைக்குமாம். நாம இப்ப குடியிருக்கிற வீட்டை விட பெரிய வீடு கட்டுவேனாம்.

“அப்படியா ரொம்ப சந்தோஷம்பா!’ என்றாள்.

– ராம்மூர்த்தி (மே 2013)

Print Friendly, PDF & Email

நெகிழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

சகுனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

கற்பனைக் கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *