பஞ்சவர்ணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2023
பார்வையிட்டோர்: 2,553 
 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரணயக் கோபத்துடன் ருக்மிணிகாந்தன் அவளைத் திக்கரித்து அந்தப்புரத்தை விட்டுச் சென்று மூன்று நாட்களாகிவிட்டன! 

அறுபட்ட பூங்கொடிபோல ருக்மிணி வாடி, வதங்கிப் போய் மஞ்சத்தின்மீது சுருண்டு படுத்திருந்தாள். இருபுறமு மிருந்த சேடிகளின் கைச் சாமரைகள் மெதுவாக அசைந்த படியே இருந்தன. மையிட்ட கண்களினின்றும் பெருகிய ருக்மிணியின் கண்ணீர்ப் பெருக்கால் வெண்பட்டுத் தலை யணைகள் கரைப்பட்டு அங்கங்கு கருமை படர்ந்திருந்தது. 

முதல் தடவையாக, தன் ப்ரிய நாயகனுடைய இந்தப் பாராமுகத்தால் நளினமான ருக்மிணியின் உடலும் உள்ளமும் வெதும்பிவிட்டன! வாய்திறந்து பேசாமலும், யார் என்ன உபசரித்தும் அதை அபேக்ஷிக்காமலும், மூடியகண்கள் மூடியவாறிருக்க மௌனமாக குமுறிக் குமுறி அழுதுக் கொண் டிருந்தாள். 

ருக்மிணியின் இந்தத் தாபத்தை உற்று கவனித்தபடியே, அவளருகில் உலாவிக் கொண்டிருந்த மாலினிக்குச் சட்டென்று ஒரு யோசனை உதித்தது. அவள் விரைந்து வந்து தன் பிராண ஸகியின் அருகிலமர்ந்து அவள் தோள்களைப் பற்றிக்கொண்டு இன்குரலில், “ருக்மிணி!” என்று மெல்ல அழைத்தாள் ஒரு தரம். 

அப்பொழுதும் அந்த விழிகளை மலர்த்தவில்லை அவள்! “அடி அம்மா, இது என்ன தொல்லை? இன்னுமென்ன புதிய கதையை சிருஷ்டித்துக் கொண்டு வந்தாயடி எனக்கு ஓதுவதற்கு? உனக்கு வேறு வேலை ஒன்றுமில்லையா? ஏனிப் படி என்னை நீயொருபுறம்…” என்று திணறிக் கொண்டு மேலே பேசமுடியாமல் மறுபடியும் மௌனமாகிவிட்டாள். 

“வைதர்ப்பீ! நான் பொய்க் கதை சொல்லி உன்னைத் துன்புறுத்த வரவில்லை! எழுந்திருமுன்பு, பிறகு சொல்லு கிறேன் உனக்கு.” 

“ஆகட்டும், முன்பு நீ இந்த இடத்தைவிட்டு அப்பால் போ ! அது போதும் எனக்கு” என்று சொல்லி மறுபுறம் திரும்பிக் கொண்டாள் ருக்மிணி. 

“போகத்தான் போகிறேன் மகாராணி ! கொஞ்சம் கண்களைத் திறந்து என்னைப் பார்! கோபாலனுடைய நெற்றித் திலகத்தை ஒத்த கஸ்தூரியின் பரிமளத்துடன் சந்தோஷ மாகச் சிறகடித்துக் கொண்டு வந்திருக்கும் உன் தோழியைப் பார்?’ என்று ருக்மிணியைத் தேற்ற முயன்றாள் மாலினி. 

“முரளிதர!” என்று சொல்லிச் சிறகடித்துக் கொண்டு வந்து ருக்மிணியின் தோள்மீது வந்தமர்ந்தது அந்தப் பஞ்ச வர்ணக் கிளி! பரந்தாமனுடைய பெயரைக் காதில் கேட்ட அளவில் சட்டென்று மலர்ந்தன ருக்மிணியின் செவ்விழிகள். அந்த சுந்தரமான கண்களிலிருந்து தடதடவென்று ஓடி வந்தது கண்ணீர். 

உஷ்ணமாகப் பெருமூச்சு விட்டு விம்மிக் கொண்டே, “நீ கூட என்னை ஏமாற்ற வந்து விட்டாயா? என் கிருஷ்ணனை என் ப்ராணதாரகனைக் காணாமல் நாட்கள் மூன்று ஓடி விட்டன. இன்னும் என் உள்ளம் ஏன் தூள் தூளாக சிதறிப் போகவில்லை? வாஸ்தவமான ஸதி மணிகள் தங்கள் நாய கர்களைப் பிரிந்த பின்பு உயிர் வாழ்ந்ததுண்டோ எங்காவது?” என்று சொல்லிக் கிளியை அருமையோடு தடவிக்கொண்டு “பஞ்சவர்ணே, என் உயிர் போன்ற உரவே! எங்கே என் நாதன் சொல்ல மாட்டாயா? அன்று விதர்ப்ப நகரில், இதே போல, இதே ப்ராணபதியின் வரவை எதிர் பார்த்துத் தவித்த எனக்கு நீ சந்தோஷச் செய்தியைச் சொன்னாயல்லவா?” 

“ஆமாம்! இன்று போல நினைவிருக்கிறது எனக்கு; துவாரகைக்கு அனுப்பிய பிராம்மணோத்தமரையும் வரக் காணாமல், விவாகவேளையும் நெருங்கி மங்கள வாத்தியங் களின் முழக்கம் கேட்டு இடியேருண்ட ஸர்ப்பம் போல நான் கதி கலங்கி நின்று தத்தளித்த சமயம், எனது எண்ணற்ற பந்துக்களில் ஒருவராவது என் துயரை அறிந்து என்னை ஆற்ற வில்லை. கேவலம் பட்சி ஜாதியில் பிறந்துவிட்டு, என்னிடம் பழகி விட்ட பாசத்திற்காக, என்மீது உயிரைவைத்திருக்கிறாய்! ஊருக்கு உயர்ந்த கோபுரத்தின் மீது சென்றமர்ந்து துவாரகா நாதன் வரும் தக்ஷண திசையில் உன் தீக்ஷண்யப் பார்வை யைச் செலுத்தி நீ பார்த்த பார்வை! உன் முகத்தில் தேங்கிய கவலை! அடடா! பஞ்சவர்ணீ, என் பிரியமே, உன்னுடைய அந்தப் ப்ரேமை இன்று எங்கேயடி போய் விட்டது? அன்று போல இன்று உன்னை நான் போற்றவில்லையா, போஷிக்க வில்லையா? நான் வேண்டித் தவம் செய்து அடைந்த வேந்தனை அடைந்த கர்வத்தால் உன்னைச் சரி வர நான் பேணவில்லையா?” 

“இல்லையே, அவ்விதம் உன்னை நான் அலட்சியம் செய்யவே யில்லையே பஞ்சவர்ணி? என் கைகளால் பறித்த நெல்லிக் கனிகளை, நானே ஜலம் விட்டு வளர்த்த மாதுள மரத்தின் கனிகளை நானே பறித்து, உரித்து, முத்துக்களை உதிர்த்து உனக்கு ஊட்டவில்லையா தினமும்? ஜம்பூத்வீபத் தின் சிரேஷ்டமான நாவல் மரத்திலிருந்து கனிகளைப் பறித்து வரச் சொல்லி நானே அவற்றிலிருந்து பிழிந்த ரஸத்தை யன்றோ உனக்குப் புகட்டுகிறேன்! அந்த நாவற் பழங்களின் செந்நிறத்தால் என் கை சிவந்து சாயம் பற்றிக்கொண்டு விட்டதைப் பார்த்து என் நாதன் கூட என்னைப் பரிகசிக்க வில்லையாடி? உனக்கு என்ன அபசாரம் செய்து விட்டேன் நான்? ஏன் என் பிரேம வல்லபனை அழைத்து வர மாட்டேன் என்கிறாய்?” 

நினைவிழந்து, தீனமாக இவ்வாறு புலம்பும் ருக்மிணியின் சோபையற்ற முகத்தைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இடத்தை விட்டு அசையாமல் உட்கார்ந்திருந்தது கிளி! 

அவ்வளவு நேரமும் கெஞ்சிக் கெஞ்சி தனது கிலேசத்தை உரைத்த பின்பும், அங்கேயே உட்கார்ந்திருந்த பஞ்சவர்ணி யைக் கண்ட ருக்மிணிக்கு ஆத்திரம் பொங்கி எழுந்தது. தோளின் மீது அமர்ந்திருந்த கிளியைத் தூரத் தள்ளினாள். 

தலையிலடிபட்ட ஸர்பத்தைப் போல சீறிக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். 

மறுபடியும் பறந்து வந்து அவள் தொடை மீது அமர்ந்து விட்டது அது ! 

“ஹூம், இவ்வளவு கொழுப்பா உனக்கு ? என் அவஸ்தையைக் கண்ணாரக் கண்ட பின்புமா? போ எட்ட! தொடை மீது அமர்வென்ன உன் பவிஷுக்கு! போ தூர!” என்று அடித்து விரட்டி விட்டு நினைவு தடுமாற பொத்தென்று படுக்கையில் சாய்ந்து விட்டாள். 

அவ்வளவுதான்; ருக்மிணி எழுந்த சமயம், தலையணை மீது மாலினி விரித்திருந்த வெண்பட்டு விரிப்பை-கண்ணீரால் நனைந்திருந்ததை அப்புறப்படுத்தி இருந்ததைக் கவ்வி யெடுத்துக் கொண்டு சிவ்வென்று பறந்து விட்டது பஞ்சவர்ணி. 

நந்த வனத்தின் லதாக்ருஹத்திலிருந்து சயனத்தின் மீது சிந்தா குலத்துடன் உட்கார்ந்திருந்த பரந்தாமனின் அடிகளில் பறந்து வந்து விழுந்தது ஒரு வெண்பட்டு ! 

அதைக் கையிலெடுத்துக் கொண்டு அது எங்கிருந்து வந்து தன் கால்களில் விழுந்தது என்பதை அறிய சுற்று முற்றும் பார்த்து விட்டு நிமிர்ந்து உயரப் பார்த்தார். 

பூங்கொம்பொன்றின் மீது அழகு போல அமர்ந்திருத்தது பஞ்சவர்ணி! 

அதைக் கண்டதும் வாஸுதேவனுடைய மனம் மலர்ந்தது. ஹிருதயத்திலிருந்த அவ்வளவு தாபமும் தணிந்து விட்டது போன்ற உணர்வால் உள்ளம் புளகிக்கக் கையிலிருந்த அந்தப் பட்டு வஸ்திரத்தைப் பிரித்துப் பார்த் தார் கிருஷ்ணன். 

அதன் நடு நடுவில் ஈரம்! அதில் படிந்திருந்த மைக் கறை! இதைக் கண்ணுற்ற யதுநந்தனனுடைய ஆந்தரீகம் துடித்தது. இரக்கத்தால் அவருடைய கண்களில் நீர் நிறைந்து விட்டது! 

பத்தினியின் மீதிருந்த அத்தனை கோபமும் பஞ்சாகப் பறந்து விட்டது! தக்ஷணமே தன் பிரேம நாயகியின் மலர் வதனமும், சாதளவோடி, செவ்வரி படர்ந்த செந்தாமரை இதழ்கள் போன்ற கண்களும் கெஞ்சும் பார் வையும் நினைவின் முன் தோன்றின! 

“என் தேவி, ப்ரியே, என்ன புத்திஹீனன் நான்? என் ஆயர்குல அவகுணத்தை என் ஆத்ம பாகினியான உன்னிடம்கூட வன்றோ காண்பித்து விட்டேன்? பிராண தார க பஞ்சவர்ணி, வா! கீழே இறங்கிவா, என்னைக் கண்டு பயப்படுகிறாயா, உன் தோழியைப் போல் உன்னையும் ஹிம்ஸிப்பேன் என்று ? இல்லை! உன்னை போற்றுகிறேன். இறங்கி வா சட்டென்று ! போகலாம் ருக்மிணியிடம்” என்று அன்பாக அழைத்தார். 

மெதுவாக சிறகடித்துக் கொண்டு வந்த பஞ்சவர்ணியை ஆதுரத்தோடு ஏந்தி எடுத்து, மார்போடு அணைத்து, தனது கழுத்திலிருந்த ரத்ன ஹாரத்தை கழற்றிக் கையிலெடுத்து இந்தா! இரண்டாம் முறையாக உன் ஸகியும், என் ப்ரியையுமான ருக்மிணியை உயிர்ப்பித்தா யல்லவா? அதற் காக நான் அளிக்கும் பரிசை ஏற்றுக்கொள்” என்று அதன் கழுத்தில் அணிவித்து இடத்தைவிட்டு எழுந்தார். கூடவே பஞ்சவர்ணி எழுந்து வழி காட்டுவதுபோல திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே முன்னே சென்றது. 

மாதவனும், மகிழ்ச்சி பொங்கியவராக அதைப் பார்த்த வாறே விரைவாக ருக்மிணியின் அந்தப் புரத்தை நோக்கி நடந்தார். 

அந்தப்புர வாசலில் நுழையும் போதே சந்தோஷத்தால் துள்ளிப் பாய்ந்து கீச் கீச்சென்று ஆரவாரித்துக் கொண்டு, கோசையுடன் தனக்கு படபட வென்று எழும்பும் சிற முன்னால் விரைந்து செல்லும் பட்சியினுடைய ப்ரேமை பெருக்கைக் கண்டு ஆச்சரியத்தால் கண்கள் மலர, உள்ளே புகுந்தார் துவராகை மன்னன் தன்னை மறந்தவராக. 

சேடிகள் பரபரப்புடன் முன் வந்து வணங்கி வழி காட்டிச் செல்ல, ருக்மிணி தேவி சயனித்திருந்த மஞ்சத்தை நோக்கி விரைந்தார். 

பிரிவாற்றாமையினால் உருக்குலைந்து உயிர் சோர்ந்து கிடக்கும் தன் பிரேம காந்தையையும், தனக்கு முன்பாக அங்கு ஆஜராகி ருக்மிணியின் காதருகில் சென்று ஜய சப்தம் கூறும் பஞ்சவர்ணியையும் ஏக காலத்தில் பார்த்து வியப்பும் வேதனையும் கொண்ட வராக அருகில் சென்றார். 

ஸ்ரமணையற்ற நிலையிலுங் கூட ருக்மிணியின் வாக்கு. ‘கண்ணா, மாதவா, ஹ்ருதய வாஸா’ என்று போற்றிக் கொண்டிருந்ததைக் கண்டதும் நெஞ்சமிழந்து, ‘ப்ரியே ருக்மிணி’ என்று உரக்க அழைத்துக் கொண்டே, சோர்ந்து கிடந்ததனது அருமைப் பத்தினியைத் தூக்கியெடுத்து மடியில் வளர்த்திக் கொண்டு, கண்களைத் துடைத்து, கலைந்திருந்த முன்நெற்றி மயிரைக் கோதி விட்டு, முக வாய்ப் பற்றி அசைத்து ப்ராண ப்ரியே! கண்களை திறந்து பார், உன் கண்ணனை” என்று குனிந்து அவள் முகத்தோடு முகம் வைத்துக் கூறினார். 

பூஜ்யனான தன் பதியினுடைய ஜீவதாரை போன்ற குரல் காதில் விழுந்ததும் எங்கோ சென்றிருந்த ருக்மிணியின் பிரக்ஞை சாவதானமாக அவளிடம் திரும்பிற்று. 

ஆபத் பாந்தவா, என்னை ஆட்கொள்ளவேண்டும் என்ற போழ்தில் ‘அஞ்சேல்’ என்று சொல்லி ஆதரித்த அண்ண லின் மிருது ஸ்பரிசம் அவளைப் பரவசப்படுத்திற்று. 

கண்களைத் திறக்கு முன்பே தனது ப்ரிய காந்தனுடைய திவ்ய முக மண்டலம் அவள் நினை வின் முன்பு ஸான்னித்யமாகி விட்டது! 

புத்துயிர் பெற்ற பீம ராஜனுடைய செல்வம், மெல்ல தன் விழிகளை மலர்த்தி கைகளைக் குவித்து அஞ்சலி செய்து வணங்கியபடியே பேச்சரியா பிரமானந்தத்தோடு மெல்ல எழுந்திருக்க முயல, பத்தினியை அரவணைத்து “தேவி, உபசாரம் இருக்கட்டும்” என்று மௌனமாக சுஷ்கித்துப் போன தன் இஷ்ட நாயகியை வருடிப் பார்த்து, ஸ்பரிசத் தாலேயே தம் பிரேமையை உணர்த்தி, “ப்ரியே! உன் தோழிக்கு முன்பு வழிபாடு செய்து வணங்கு! உனக்கும், எனக்கும் பிராண பிக்ஷை கொடுத்த புண்ணிய ரூபிணி அவள்!” என்றார். 

“புண்ய ரூபிணியா! என் அவஸ்தையைக் கண்டு களித்துக்கொண்டு கல்போல் உட்கார்ந்தவளா புண்ய ரூபிணி ?” 

“அறிவிலி! அப்பொழுது சோகத்தினாலும், இப்போது சந்தோஷத்தினாலும் பீடிக்கப்பட்டு நல்லோருடைய நன்றி யைத் தூஷிக்கிறாய்! பார், உனது ‘தூதி’யாக இதைக் கொண்டு வந்து என் கால்களிலிட்டு, அபராத க்ஷமை பெற்று என்னை இங்கு அழைத்து வந்து எனது தாபத்தையும் வேட் கையையும் தீர்த்த பாக்ய ஜீவியையா நிந்திக்கிறாய்?” என்று தாம் கொண்டுவந்த அஞ்சனக் கறை படிந்த வஸ் திரத்தைப் பிரித்துக் காண்பித்தார்! 

ருக்மிணியின் உள்ளம் அன்பினால் நிறைந்து விட்டது! கை நிறைய கனிகளை ஏந்திக்கொண்டு பஞ்சவர்ணியை வருந்தி அழைத்துங்கூட அது கண்ணனுடைய கரத்தை விட்டு அடிகூட நகர வில்லை ! 

“இனிமேல் உன்னை தெய்வமாக போற்றுகிறேனடி பஞ்ச வர்ணி! உன்னை அடித்து விரட்டிய என் அக்ரமத்தை மன்னித்துவிடு! வா, உனக்கும் பசியெடுத்திருக்குமே இவ் வளவு நாழிக்கு?” என்று நயந்து வேண்டினாள் ருக்மிணி. 

நகை முகத்துடன் ருக்மிணியின் கையிலிருந்து தானே அக்கனிகளை வாங்கி உண்பித்தார் மாதவன். 

உண்மையான கர்வமும், மிதப்பும் அப்போதுதான் வந்தது பஞ்சவர்ணிக்கு! தன்னுடையமேன்மையை உன்னதமாக வெளிக்காட்டும் பஞ்சவர்ணியின் பெருமிதப்பார்வையைக் கண்டு ஸ்தம் பித்துப் போய்ப் பார்த்தார்கள் அந்த மஞ்சத்தின் மீதிருந்த தம்பதிகள்!

– உயிரின் அழைப்பு, முதற்பதிப்பு: 1966, சாரதி பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *