கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 12,352 
 
 

சொல்லப்போனால் இந்த வீட்டிற்கு அது வந்து போன பிறகிலிருந்து தான் இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கின்றன. இப்போதெல்லாம் நானும் தைரியமாக வீட்டை வளைய வரத்தான் செய்கிறேன் . எல்லோர் முகத்திலும் ஒரு விதமான திகைப்பும்ää சந்தேகமும் நிழலாகக் கிடக்கின்றன. கிடக்கட்டும்…… இதனைத் தொடர்ந்து சம்பவங்களை நான் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன். எப்போதும்; மூடியே இருக்கும் கதவுக்குப்; பின்னே உள்ள தெருக்களில் கூட சலசலப்பு எழ ஆரம்பித்துவிட்டது. நான் இந்த வீட்டிற்கு முதன்; முதலில் வந்த போது கூடத்தான் விடாமல் பேசினார்கள். அதெல்லாம் வேறு மாதிரி இருந்தது.

யார் என்னிடம் பேசினாலும் அவர்களுக்கு முன்பு நிற்கக் கூட எனக்கு அனுமதியில்லாமல் இருந்தது. வந்தவர்களோ என்னைப் பேச வைக்க வேண்டி ஓயாமல் சலசலத்துக் கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் என்னுடைய அப்பா அம்மா கூட இருந்தார்கள். அவர்களுக்கு ஒரே பெருமையும்ää விழாவினை சிறப்பாக முடித்த அசதியும் இருந்தது. கடைசியாக அவர்கள் விடைபெற்று செல்லும்போது வாசல் வரை செல்லும் வாய்ப்பும் மறுக்கப்பட்டிருந்தது. அம்மாவிற்கு அன்றே அழகாய் புரிந்தவை பின்பு அப்பாவுக்கு அடுக்கடுக்காய் தெரிய ஆரம்பித்தன.

ஊருக்குள் தலைநிமிர்ந்து வாழ அப்பாவும் அம்மாவும் தங்களைத் தயார் செய்து என்னை இங்கு பலவிதமாய் சிங்காரித்து அனுப்பி வைத்தார்கள். அழகான வீடு தான். தோட்டமும் கூட. ஒருநாள் கூட காலாற தோட்டத்தினுள் செல்ல அனுமதித்ததில்லை. அப்பா அம்மாவுடன் இருக்கும்போது தேடித் தேடி சேர்த்த பூந்தொட்டிகள் என்னுடைய வீட்டில் வாடிப் போய்விட்டதாக தகவல் வந்தது. அந்தத் தகவலும் கூட என்னிடம் பகிருவதற்கு அங்கு யாருக்கும் நேரமோ பொழுதோ தேவையோ இருக்கவில்லை. காலம் முழுவதும் பசியில்லாமலும்ää உடுதுணிக்கு பஞ்சமில்லாமலும்ää சாண் ஆனாலும் ஆணைப் பெற்றெடுக்கும் யோகங்கள் ஜாதகத்தின் கட்டங்களில் இருந்ததாலும்ää தயை கூர்ந்து ஏற்றுக் கொள்ளப்பட்டேன். ஒட்டு மொத்த வாழ்வும்ää துக்கமும் அவர்களிடம் ஒப்புவிக்கப்படடன.

சீரூம்; சிறப்புமாக ஊர் கூடி வாழ்த்திய அந்த விசேஷ திருமண நாளுக்கு முன்பு எனக்கான ஒரு வாழ்வும்ää அதில் ஒரு அழகும் இருந்திருக்கும் என்பதை என் புகு வீட்டார் தயவின்றி மறந்தனர். ஆரம்பத்திலேயே தங்கள் வழக்கங்களை சொல்லிக் கொடுத்தால் தான் உண்டு… இல்லையென்றால் அவர்களை மதிக்காமல் போய்விடுவேனாம். இப்படியெல்லாம் ஒரு வெத்து அடைப்புக்குறிக்குள் தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான நிரப்புச் சொல்லாய் நான் வந்து சேர்ந்தேன். விசேஷ நாளில் என்னருகில் அமர்ந்திருந்த கணவனார் இரண்டொரு நாட்களில் தன்னுடைய பணியிடத்திற்கு விமானத்தில் பறந்தார். என்னிடத்தில் கூட ஏதோ ஒரு மொழியில் சொல்லிவிட்டுத் தான் சென்றார். அவர் முகம் கூட ரொம்பவும் மெனக்கிட்டால் தான் முழுதாக நினைவுக்கு வருகிறது. அதற்குள் நடுவில் யார் யார் முகமோ எல்லாம் நிழலாடுகிறது. இதைச் சொன்னால் பத்தினி என்று உலகம் ஒத்துக் கொள்ளாது.

போகட்டும். இயல்பிலேயே அமைதியாகää அப்பாவியாக தயாரிக்கப்படும் இளவரசிகள் சில நேரங்களில் தன் சிறகுகளை இழந்து பொறுத்தமான இடத்தில் இல்லத்தரசிகளாகிவிடுகிறார்கள். இந்த வீட்டிற்கு வந்த சில நாட்களில் என்னைப் பார்க்க வந்த அப்பா அம்மாவிடம் ஐந்து நிமிடத்திற்கு மேல் பேச முடியவில்லை. சாதாரணமாக கேட்பது போல்ää ‘சரியா சாப்படறது இல்லியா? இப்படி மெலிஞ்சிட்டே…’ என்று கேட்டாள் அம்மா.

அவ்வளவு தான். ஆரம்பித்துவிட்டார் கணவனின் தாயார். ‘நல்லாத் தான் சாப்பாடு போடறோம்…இப்படி பேசுனா நாங்க என்னவோ அவள பட்டினில போடற மாதிரில்ல நினைப்பாங்க.. நாங்களும் ரொம்ப கௌரவமாத்தான் வச்சுக்கறோம்…’ அப்பா அம்மாவுக்கு தங்களின் பேச்சு இவ்வளவு எதிர்வினையைக் கொடுக்கும் என்பதில் துளிக்கூட எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது. பேச்சிழந்து நின்றார்கள். அதன் பின் சாதாரண விசாரிப்புகள் கூட என்னைப் பற்றி அவர்களுக்கு இல்லை.

தனியான நேரங்களில் யாருடைய கட்டளைக் குரலும் குறுக்கிடாத நாளின் அந்திம நேரங்களில் இக்கட்டிலிருந்து காப்பாற்ற யாரோ ஒருவர் அவ்வப்போது கனவுகளில் சஞ்சரிப்பார்கள். அது மிகவும் அழகானதாக இருக்கும். கனவுகளில் நடக்கும் உரையாடல்கள் புத்தகவாசிப்பு போல எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அவர்கள் வந்து போன சில நேரங்களில் விடிந்து விடும். சூரியன் வரும்போதெல்லாம் விடியல்; வரும் என்றால் துக்கத்தை சுலபமாய் சுருக்கிக் கொள்ளலாம்.

அந்த நேரத்தில் பரம விடுதலை அளிக்காத யாவும் அது வந்து போன தினத்திலிருந்து தான் தொடங்கியிருக்கின்றன.. அதன் அச்சம் யாருக்கும்; இன்னும் அகலவில்லை. அன்றைய தினம் நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். என் கணவரின் தாயார் தன்னுடைய நீண்ட தூக்கத்திலிருந்து எழுந்து சமையல் அறைக்குள் செல்லப் போனாள். இப்போது போல் அப்போது வெளிச்சம் நன்கு பரவியிருக்கவில்லை. காற்றும் கூட அமைதியாகத் தான் இருந்தது. முதலில் சாதாரணமாகத் தான் பார்த்தாள். அவள் முகம் சற்றே மாறத் தொடங்கியிருந்தது. கண்களை அழுத்தி மூடி திறந்து பார்த்தாள். அது எங்கேயும் நகர்ந்து விடவில்லை. மட்டுமல்லாது அவளையே உற்றுப் பார்த்தபடி இருந்தது. நானும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அது அவளைப் பார்த்து சிரித்ததாக பின்னாளில் அனைவரிடமும் சொல்லத் தொடங்கினாள். உண்மையாக அது சிரித்ததா தெரியவில்லை. நான் கவனம் செய்யவில்லை. அவளையும் அறியாமல் தொண்டையிலிருந்து ஒரு ஒலி கிளம்பியது. சுவற்றோடு ஒட்டிக் கொண்டிருந்தவள் அவள் கணவனை ஈனமாக அழைத்தாள். இருட்டின் நிழலின் நான் பதுங்கிக் கிடந்தேன். அவர்களின் செல்ல நாய் காலை வேளையில் அவள் மனஓட்டத்திற்கு இடையாக ஊளையிடத் தொடங்கியது. அவள் கணவன் உள்ளிருந்து வரத் தொடங்கியிருந்தார்.

அவரும் அதைப் பார்த்தார். அவருக்கு முதல்; பார்வையிலெல்லாம் சந்தேகமே இல்லை. அது அதே தான். ஆந்தை. எந்த சலனமும்ää உணர்ச்சியும்ää அசைவும் இல்லாமல் உறைந்து போய் இருந்தது. நாயும் விடாமல் இப்போது குரைக்கத் தொடங்கியிருந்தது. அப்போது தான் கவனித்தார் உணவறையின் ஜன்னல் திறந்து கிடந்ததை. அந்தக் கதவைத் தான் பூட்டியதாக பிற்பாடு அவர் மனைவி சத்தியம் செய்தாள். சத்தியம் எல்லாம் சர்வ சாதாரணம் இங்கே. நான் இருக்கும் இடத்தில் இருந்து அவர்களை துல்லியமாக பார்க்க முடிந்தது. உணவு மேஜையின் மேல் இருந்த அதைத் திருப்பி அனுப்புவது குறித்து பலவித ஆலோசனைகள் செய்யப்பட்டன. ஆனால் அது சிறிது நேரத்தில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கண்ணிமைப்பது போல் சென்று விட்டது.

இப்படிப்பட்ட சில விநாடிகளுக்குப் பின் அங்கிருந்து பல தொலைபேசி அழைப்புகள் சென்றன. ஏனோத் தெரியவில்லை வீட்டின் எஜமானி படுக்கையில் விழுந்தாள். யாருடைய அழைப்பை விடவும் தூர தேசத்திலுள்ள அவரின் ஒரே பிள்ளையிடமிருந்து வரப்போகும் அந்த அழைப்புக்காகத் தான் நான் காத்திருந்தேன். பலவித குழப்பங்களுக்குப் பின் அவர்களின் ஜோதிடர் வரவழைக்கப்பட்டார். கவலை வேண்டாம் என்பதை பல உண்ர்ச்சிகளில் சொல்லி மகாலட்சுமியின் வாகனம் வந்தது விசேஷம் தான் என அமைதிப்படுத்தினார். யாருக்கும் கிடைக்காத பெரும் பேறு என்றதும் வீட்டு எஜமானி பழையபடி நடமாடத் தொடங்கினாள். ஆனாலும் கனவிலும் அது வநது போன தடயம் அவளுக்குக் கிடைத்தது. இந்த முறை பலரின் சிபாரிசின் பேரில் தெய்வம் போல் வந்திறங்கினார் ஒரு மாந்தீரிகர். பேரிய ஆள் தான் போல. என்னவெல்லாமோ செய்தார். நான் நின்ற திசை நோக்கி உற்று நோக்கினார். எல்லோருடைய பார்வையையும் என்னை நோக்கித் திருப்பினார்.

தன் கண்களை மூடிக் கொண்டு அதற்குள் நாட்டியமாடத் தொடங்கினார். ‘நீங்க ஒண்ணும் மறைக்கக்கூடாது. யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?’ என்றார் தீர்க்கமான குரலில். அவர்கள் சொல்லி வைத்தது போல் நான் இருக்கும் திசையைப் பார்த்தார்கள். அவரும் அதைப் பார்த்துவிட்டார். ‘தைரியமா சொல்லணும். நாங்க பொய்ய வெறுக்கறவங்க’ என்றார். நாங்க என்று அவர் சொன்னதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது.

வீட்டு எஜமானர் பேசத் தொடங்கினார். பயந்தää கம்மிய இது வரை நான் கேட்டு அறியாத ஒரு அபயக் குரல் அது. ‘நாங்க யார் வம்புக்கும் போனதில்ல…ஆனா என்னெல்லாமோ நடந்து போச்சு..அதக் குத்தமா எடுத்துக்கக்கூடாது’

‘யாரு…’

இதை எதிர்பார்க்கவில்லை அவர்.

‘யாருமே எடுத்துக்க கூடாது’

‘மேல சொல்லுங்க’

‘ரொம்ப சாதாரண பொண்ணு…ஆனா பையனுக்கு ஒத்து வரல..

‘ ஒத்து வரலேன்னா…?’

‘ பையனுக்கு நிம்மதி இல்ல…’

மாந்தீரிகர் கையைக் காட்டி அவர்களை நிறுத்திவிட்டு விட்டு என் பக்கம் திரும்பினார். நான் முன்னிலும் அமைதியாய் அசைவற்று இருந்தேன்.

‘தப்பாச்சே…பின்னே கோட்டான் வராம என்ன செய்யும்…அது வாசம் செய்யற இடமே வேற…’

கணவனும்ää மனைவியும் தெரியும் என்பது போல மெதுவாக தலையாட்டினார்கள்.

‘ஏதாவது பரிகாரம் செய்யலாமா?’

எனக்குள் மெலிதாக சிரிப்பு பரவியது.

மாந்தீரிகர் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். வெகுநேரமாக இலை உதிரும் சத்தம் கூட அங்கு இல்லை. கணவனும்ää மனைவியும் பரிகாரத்திற்கான கணக்கை மனதில் போட்டுக்; கொண்டிருப்பார்கள். மாந்தீரிகர் கண்ணுக்குள் அசைவு கூட நின்று போனது. மெண்மையாக கண் திறந்தார். ‘இது… பரிகாரத்துனால தீர்ந்து போறது இல்ல’ அவர் குரல் கம்மலாய் ஒலித்தது.

பரிகாரத்தினால் தீர்க்கக்கூடியதாய் இருந்தால் எதுவுமே இப்படி இருந்திருக்காது. எனக்கான அறை என அவர்கள் ஒதுக்கித் தந்தது இருட்டும் ஈரபுழுக்கமும் நிறைந்தது. வீட்டுப் பெண்கள் ஒதுங்குவதற்காக கழிப்பறையை இடித்து முன்னே பின்னே செங்கல் வைத்துக் கட்டிய அறை. கனவுகள் நுழையமுடியாத அறை. அந்த அறைக்குள் நான் படுத்திருந்த தினத்தில் வந்திருந்த சொந்தங்களுக்குள் நான் தேடியது என் கணவனைத்தான். அவர்; உடல் சற்றுப் பெருத்திருந்தது. நுடையில் தெரிந்தது திமிரா பயமா என அனுமானிக்க முடியவில்லை. . கன்னம் கூட உப்பியிருந்தது. என்னைப் பார்த்ததும் அவருக்கு எனன செய்வதென்று தெரியவில்லை. சிறு குழந்தை போல் மெதுவாக என்னருகில் வந்தார். சில விநாடிகள் தான் திருப்பிப் போய்விட்டார். ஏதாவது பேசியிருந்தால் கூட அவரின் மறந்து போன குரலைக் கேட்டிருக்கலாம். சீக்கிரத்தில் அங்கிருந்து என்னை அழைத்துச் செல்ல மிகுந்த பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. என் அப்பா அம்மாவிடம் எனது உடல்நிலை சரியில்லாமல் வெறித்து வெறித்துப் பார்த்த கதையை மீண்டும் மீண்டும் சொல்லத் தொடங்கினார்கள். ‘ வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிருப்பேனே..’ என்று திரும்பத்; திரும்ப என் அம்மா சொல்லிக் கொண்டிருருந்தாள்.

“இன்னும் பரிகாரம் என்ன பண்ணணும்னு சொல்லலியே” என்று தயங்கித் தயங்கிக் கேட்டார் என் கணவரின் அம்மா. ‘இருங்க உத்தரவு வர வேண்டாமா?” என்றார் மந்திரவாதி கடுமையாக. என்னிடம் எதையோ கேட்க விரும்புகிறார் என்று நினைக்கிறேன்.. நான் இன்னமும் அமைதியாக நின்றேன். வெகுநேரமாக எந்த ஓசையும் இல்லை.

நொடிகள் கரைந்து கொண்டே இருந்தன. ஒரு வகையில் என் முன்னால் நடக்கும் இந்த மௌன நாடகம் சுவாரஸ்யமாக இருந்தது. அங்கிருந்த பதற்றத்தையும்ää பயத்தையும் மிகவும் ரசித்தேன். தொலைபேசி ஒலித்தது. மாமியாரும் மாமனாரும் ஒருசேர சுவ்ர்க்கடிகாரத்தைப் பார்த்தார்கள். அந்த நேரத்தில் வருகிற தொலைபேசி அழைப்பு தன் மகனிடமிருந்து தான் என்று தெரியும். பதற்றத்துடன் மாமியார் தொலைபேசியை அணுகினாள். கொஞ்ச நேரம்; அசையவே இல்லை. எதிர்முனையில் எந்த சலனமும் இல்லை. மீண்டும் மீண்டும் ஹலோ ஹலோ என அழைத்துக் கொண்டே இருந்தாள். எதிர்முனையில் இருந்து பலத்த மூச்சுக் காற்று வந்ததாக சொன்னாள்;. நான் சிரித்துக் கொண்டேன். அதன் பின் அந்த வீட்டிற்கு எந்த வெளிநாட்டு அழைப்பும் வரவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *